Friday, August 12, 2016

Yoasuvaa 1 | யோசுவா 1 | Joshua 1

கர்த்தருடைய  தாசனாகிய  மோசே  மரித்தபின்பு,  கர்த்தர்  மோசேயின்  ஊழியக்காரனான  நூனின்  குமாரன்  யோசுவாவை  நோக்கி:  (யோசுவா  1:1)

karththarudaiya  thaasanaagiya  moasea  mariththapinbu,  karththar  moaseayin  oozhiyakkaaranaana  noonin  kumaaran  yoasuvaavai  noakki:  (yoasuvaa  1:1)

என்  தாசனாகிய  மோசே  மரித்துப்போனான்;  இப்பொழுது  நீயும்  இந்த  ஜனங்கள்  எல்லாரும்  எழுந்து,  இந்த  யோர்தானைக்  கடந்து,  இஸ்ரவேல்  புத்திரருக்கு  நான்  கொடுக்கும்  தேசத்துக்குப்  போங்கள்.  (யோசுவா  1:2)

en  thaasanaagiya  moasea  mariththuppoanaan;  ippozhuthu  neeyum  intha  janangga'l  ellaarum  ezhunthu,  intha  yoarthaanaik  kadanthu,  israveal  puththirarukku  naan  kodukkum  theasaththukkup  poangga'l.  (yoasuvaa  1:2)

நான்  மோசேக்குச்  சொன்னபடி  உங்கள்  காலடி  மிதிக்கும்  எவ்விடத்தையும்  உங்களுக்குக்  கொடுத்தேன்.  (யோசுவா  1:3)

naan  moaseakkuch  sonnapadi  ungga'l  kaaladi  mithikkum  evvidaththaiyum  ungga'lukkuk  koduththean.  (yoasuvaa  1:3)

வனாந்தரமும்  இந்த  லீபனோனும்  தொடங்கி  ஐபிராத்து  நதியான  பெரிய  நதிமட்டுமுள்ள  ஏத்தியரின்  தேசம்  அனைத்தும்,  சூரியன்  அஸ்தமிக்கிற  திசையான  பெரிய  சமுத்திரம்வரைக்கும்  உங்கள்  எல்லையாயிருக்கும்.  (யோசுவா  1:4)

vanaantharamum  intha  leebanoanum  thodanggi  aipiraaththu  nathiyaana  periya  nathimattumu'l'la  eaththiyarin  theasam  anaiththum,  sooriyan  asthamikki’ra  thisaiyaana  periya  samuththiramvaraikkum  ungga'l  ellaiyaayirukkum.  (yoasuvaa  1:4)

நீ  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  ஒருவனும்  உனக்கு  முன்பாக  எதிர்த்து  நிற்பதில்லை;  நான்  மோசேயோடே  இருந்ததுபோல,  உன்னோடும்  இருப்பேன்;  நான்  உன்னைவிட்டு  விலகுவதுமில்லை,  உன்னைக்  கைவிடுவதுமில்லை.  (யோசுவா  1:5)

nee  uyiroadirukkum  naa'lellaam  oruvanum  unakku  munbaaga  ethirththu  ni’rpathillai;  naan  moaseayoadea  irunthathupoala,  unnoadum  iruppean;  naan  unnaivittu  vilaguvathumillai,  unnaik  kaividuvathumillai.  (yoasuvaa  1:5)

பலங்கொண்டு  திடமனதாயிரு;  இந்த  ஜனத்தின்  பிதாக்களுக்கு  நான்  கொடுப்பேன்  என்று  ஆணையிட்ட  தேசத்தை  நீ  இவர்களுக்குப்  பங்கிடுவாய்.  (யோசுவா  1:6)

balangko'ndu  thidamanathaayiru;  intha  janaththin  pithaakka'lukku  naan  koduppean  en’ru  aa'naiyitta  theasaththai  nee  ivarga'lukkup  panggiduvaay.  (yoasuvaa  1:6)

என்  தாசனாகிய  மோசே  உனக்குக்  கற்பித்த  நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம்  செய்யக்  கவனமாயிருக்கமாத்திரம்  மிகவும்  பலங்கொண்டு  திடமனதாயிரு;  நீ  போகும்  இடமெல்லாம்  புத்திமானாய்  நடந்துகொள்ளும்படிக்கு,  அதை  விட்டு  வலது  இடதுபுறம்  விலகாதிருப்பாயாக.  (யோசுவா  1:7)

en  thaasanaagiya  moasea  unakkuk  ka’rpiththa  niyaayappiramaa'naththinpadiyellaam  seyyak  kavanamaayirukkamaaththiram  migavum  balangko'ndu  thidamanathaayiru;  nee  poagum  idamellaam  buththimaanaay  nadanthuko'l'lumpadikku,  athai  vittu  valathu  idathupu’ram  vilagaathiruppaayaaga.  (yoasuvaa  1:7)

இந்த  நியாயப்பிரமாண  புஸ்தகம்  உன்  வாயைவிட்டுப்  பிரியாதிருப்பதாக;  இதில்  எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம்  நீ  செய்யக்  கவனமாயிருக்கும்படி,  இரவும்  பகலும்  அதைத்  தியானித்துக்  கொண்டிருப்பாயாக;  அப்பொழுது  நீ  உன்  வழியை  வாய்க்கப்பண்ணுவாய்,  அப்பொழுது  புத்திமானாயும்  நடந்துகொள்ளுவாய்.  (யோசுவா  1:8)

intha  niyaayappiramaa'na  pusthagam  un  vaayaivittup  piriyaathiruppathaaga;  ithil  ezhuthiyirukki’ravaiga'linpadiyellaam  nee  seyyak  kavanamaayirukkumpadi,  iravum  pagalum  athaith  thiyaaniththuk  ko'ndiruppaayaaga;  appozhuthu  nee  un  vazhiyai  vaaykkappa'n'nuvaay,  appozhuthu  buththimaanaayum  nadanthuko'l'luvaay.  (yoasuvaa  1:8)

நான்  உனக்குக்  கட்டளையிடவில்லையா?  பலங்கொண்டு  திடமனதாயிரு;  திகையாதே,  கலங்காதே,  நீ  போகும்  இடமெல்லாம்  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னோடே  இருக்கிறார்  என்றார்.  (யோசுவா  1:9)

naan  unakkuk  katta'laiyidavillaiyaa?  balangko'ndu  thidamanathaayiru;  thigaiyaathea,  kalanggaathea,  nee  poagum  idamellaam  un  theavanaagiya  karththar  unnoadea  irukki’raar  en’raar.  (yoasuvaa  1:9)

அப்பொழுது  யோசுவா  ஜனங்களின்  அதிபதிகளை  நோக்கி:  (யோசுவா  1:10)

appozhuthu  yoasuvaa  janangga'lin  athibathiga'lai  noakki:  (yoasuvaa  1:10)

நீங்கள்  பாளயத்தை  உருவ  நடந்துபோய்,  ஜனங்களைப்  பார்த்து:  உங்களுக்கு  போஜனபதார்த்தங்களை  ஆயத்தம்பண்ணுங்கள்;  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  உங்களுக்குச்  சுதந்தரிக்கக்  கொடுக்கும்  தேசத்தை  நீங்கள்  சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு,  இன்னும்  மூன்றுநாளைக்குள்ளே  இந்த  யோர்தானைக்  கடந்துபோவீர்கள்  என்று  சொல்லச்சொன்னான்.  (யோசுவா  1:11)

neengga'l  paa'layaththai  uruva  nadanthupoay,  janangga'laip  paarththu:  ungga'lukku  poajanapathaarththangga'lai  aayaththampa'n'nungga'l;  ungga'l  theavanaagiya  karththar  ungga'lukkuch  suthantharikkak  kodukkum  theasaththai  neengga'l  suthanthariththukko'l'lumpadikku,  innum  moon’runaa'laikku'l'lea  intha  yoarthaanaik  kadanthupoaveerga'l  en’ru  sollachsonnaan.  (yoasuvaa  1:11)

பின்பு  யோசுவா:  ரூபனியரையும்  காத்தியரையும்  மனாசேயின்  பாதிக்  கோத்திரத்தாரையும்  நோக்கி:  (யோசுவா  1:12)

pinbu  yoasuvaa:  roobaniyaraiyum  kaaththiyaraiyum  manaaseayin  paathik  koaththiraththaaraiyum  noakki:  (yoasuvaa  1:12)

கர்த்தருடைய  தாசனாகிய  மோசே  உங்களுக்குக்  கற்பித்த  வார்த்தையை  நினைத்துக்கொள்ளுங்கள்;  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  உங்களை  இளைப்பாறப்பண்ணி,  இந்த  தேசத்தை  உங்களுக்குக்  கொடுத்தாரே.  (யோசுவா  1:13)

karththarudaiya  thaasanaagiya  moasea  ungga'lukkuk  ka’rpiththa  vaarththaiyai  ninaiththukko'l'lungga'l;  ungga'l  theavanaagiya  karththar  ungga'lai  i'laippaa’rappa'n'ni,  intha  theasaththai  ungga'lukkuk  koduththaarea.  (yoasuvaa  1:13)

உங்கள்  பெண்சாதிகளும்  பிள்ளைகளும்  மிருகஜீவன்களும்,  மோசே  உங்களுக்கு  யோர்தானுக்கு  இப்புறத்திலே  கொடுத்த  தேசத்தில்  இருக்கட்டும்;  உங்களிலுள்ள  யுத்தவீரர்  யாவரும்  உங்கள்  சகோதரருக்கு  முன்பாக  அணியணியாய்க்  கடந்துபோய்,  (யோசுவா  1:14)

ungga'l  pe'nsaathiga'lum  pi'l'laiga'lum  mirugajeevanga'lum,  moasea  ungga'lukku  yoarthaanukku  ippu’raththilea  koduththa  theasaththil  irukkattum;  ungga'lilu'l'la  yuththaveerar  yaavarum  ungga'l  sagoathararukku  munbaaga  a'niya'niyaayk  kadanthupoay,  (yoasuvaa  1:14)

கர்த்தர்  உங்களைப்போல  உங்கள்  சகோதரரையும்  இளைப்பாறப்பண்ணி,  அவர்களும்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  தங்களுக்குக்  கொடுக்கும்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளுமட்டும்,  அவர்களுக்கு  உதவிசெய்யக்கடவீர்கள்;  பின்பு  நீங்கள்  கர்த்தருடைய  தாசனாகிய  மோசே  உங்களுக்கு  யோர்தானுக்கு  இப்புறத்தில்  சூரியன்  உதிக்கும்  திசைக்கு  நேராகக்  கொடுத்த  உங்கள்  சுதந்தரமான  தேசத்துக்குத்  திரும்பி,  அதைச்  சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக  என்றான்.  (யோசுவா  1:15)

karththar  ungga'laippoala  ungga'l  sagoathararaiyum  i'laippaa’rappa'n'ni,  avarga'lum  ungga'l  theavanaagiya  karththar  thangga'lukkuk  kodukkum  theasaththaich  suthanthariththukko'l'lumattum,  avarga'lukku  uthaviseyyakkadaveerga'l;  pinbu  neengga'l  karththarudaiya  thaasanaagiya  moasea  ungga'lukku  yoarthaanukku  ippu’raththil  sooriyan  uthikkum  thisaikku  nearaagak  koduththa  ungga'l  suthantharamaana  theasaththukkuth  thirumbi,  athaich  suthanthariththukko'ndiruppeerga'laaga  en’raan.  (yoasuvaa  1:15)

அப்பொழுது  அவர்கள்  யோசுவாவுக்குப்  பிரதியுத்தரமாக:  நீர்  எங்களுக்குக்  கட்டளையிடுகிறதையெல்லாம்  செய்வோம்;  நீர்  எங்களை  அனுப்பும்  இடமெங்கும்  போவோம்.  (யோசுவா  1:16)

appozhuthu  avarga'l  yoasuvaavukkup  pirathiyuththaramaaga:  neer  engga'lukkuk  katta'laiyidugi’rathaiyellaam  seyvoam;  neer  engga'lai  anuppum  idamenggum  poavoam.  (yoasuvaa  1:16)

நாங்கள்  மோசேக்குச்  செவிகொடுத்ததுபோல  உமக்கும்  செவிகொடுப்போம்;  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்மாத்திரம்  மோசேயோடே  இருந்ததுபோல,  உம்மோடும்  இருப்பாராக.  (யோசுவா  1:17)

naangga'l  moaseakkuch  sevikoduththathupoala  umakkum  sevikoduppoam;  ummudaiya  theavanaagiya  karththarmaaththiram  moaseayoadea  irunthathupoala,  ummoadum  iruppaaraaga.  (yoasuvaa  1:17)

நீர்  எங்களுக்குக்  கட்டளையிடும்  சகல  காரியத்திலும்  உம்முடைய  சொல்லைக்  கேளாமல்,  உம்முடைய  வாக்குக்கு  முரட்டாட்டம்பண்ணுகிற  எவனும்  கொலைசெய்யப்படக்கடவன்;  பலங்கொண்டு  திடமனதாய்மாத்திரம்  இரும்  என்றார்கள்.  (யோசுவா  1:18)

neer  engga'lukkuk  katta'laiyidum  sagala  kaariyaththilum  ummudaiya  sollaik  kea'laamal,  ummudaiya  vaakkukku  murattaattampa'n'nugi’ra  evanum  kolaiseyyappadakkadavan;  balangko'ndu  thidamanathaaymaaththiram  irum  en’raarga'l.  (yoasuvaa  1:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!