Sunday, August 07, 2016

Ubaagamam 9 | உபாகமம் 9 | Deuteronomy 9

இஸ்ரவேலே,  கேள்:  நீ  இப்பொழுது  யோர்தானைக்  கடந்து,  உன்னிலும்  ஜனம்  பெருத்ததும்  பலத்ததுமான  ஜாதிகளைத்  துரத்தி,  வானத்தையளாவிய  மதில்  சூழ்ந்த  பெரிய  பட்டணங்களைப்  பிடித்து,  (உபாகமம்  9:1)

isravealea,  kea'l:  nee  ippozhuthu  yoarthaanaik  kadanthu,  unnilum  janam  peruththathum  balaththathumaana  jaathiga'laith  thuraththi,  vaanaththaiya'laaviya  mathil  soozhntha  periya  patta'nangga'laip  pidiththu,  (ubaagamam  9:1)

ஏனாக்கின்  புத்திரராகிய  பெரியவர்களும்  நெடியவர்களுமான  ஜனங்களைத்  துரத்திவிடப்போகிறாய்;  இவர்கள்  செய்தியை  நீ  அறிந்து,  ஏனாக்  புத்திரருக்கு  முன்பாக  நிற்பவன்  யார்  என்று  சொல்லப்படுவதை  நீ  கேட்டிருக்கிறாய்.  (உபாகமம்  9:2)

eanaakkin  puththiraraagiya  periyavarga'lum  nediyavarga'lumaana  janangga'laith  thuraththividappoagi’raay;  ivarga'l  seythiyai  nee  a’rinthu,  eanaak  puththirarukku  munbaaga  ni’rpavan  yaar  en’ru  sollappaduvathai  nee  keattirukki’raay.  (ubaagamam  9:2)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்கு  முன்பாகக்  கடந்துபோகிறவர்  என்பதை  இன்று  அறியக்கடவாய்;  அவர்  பட்சிக்கிற  அக்கினியைப்போல  அவர்களை  அழிப்பார்;  அவர்களை  உனக்கு  முன்பாக  விழப்பண்ணுவார்;  இவ்விதமாய்க்  கர்த்தர்  உனக்குச்  சொன்னபடியே,  நீ  அவர்களைச்  சீக்கிரமாய்த்  துரத்தி,  அவர்களை  அழிப்பாய்.  (உபாகமம்  9:3)

un  theavanaagiya  karththar  unakku  munbaagak  kadanthupoagi’ravar  enbathai  in’ru  a’riyakkadavaay;  avar  padchikki’ra  akkiniyaippoala  avarga'lai  azhippaar;  avarga'lai  unakku  munbaaga  vizhappa'n'nuvaar;  ivvithamaayk  karththar  unakkuch  sonnapadiyea,  nee  avarga'laich  seekkiramaayth  thuraththi,  avarga'lai  azhippaay.  (ubaagamam  9:3)

உன்  தேவனாகிய  கர்த்தர்  அவர்களை  உனக்கு  முன்பாகத்  துரத்துகையில்,  நீ  உன்  இருதயத்திலே:  என்  நீதியினிமித்தம்  இந்த  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  கர்த்தர்  என்னை  அழைத்துவந்தார்  என்று  சொல்லாயாக;  அந்த  ஜாதிகளுடைய  ஆகாமியத்தினிமித்தமே  கர்த்தர்  அவர்களை  உனக்கு  முன்பாகத்  துரத்திவிடுகிறார்.  (உபாகமம்  9:4)

un  theavanaagiya  karththar  avarga'lai  unakku  munbaagath  thuraththugaiyil,  nee  un  iruthayaththilea:  en  neethiyinimiththam  intha  theasaththaich  suthanthariththukko'l'lumpadi  karththar  ennai  azhaiththuvanthaar  en’ru  sollaayaaga;  antha  jaathiga'ludaiya  aagaamiyaththinimiththamea  karththar  avarga'lai  unakku  munbaagath  thuraththividugi’raar.  (ubaagamam  9:4)

உன்  நீதியினிமித்தமும்  உன்  இருதயத்தினுடைய  உத்தமத்தினிமித்தமும்  நீ  அவர்கள்  தேசத்தைச்  சுதந்தரிக்கும்படி  பிரவேசிப்பதில்லை;  அந்த  ஜாதிகளுடைய  ஆகாமியத்தினிமித்தமாகவும்,  ஆபிரகாம்  ஈசாக்கு  யாக்கோபு  என்னும்  உன்  பிதாக்களுக்குக்  கர்த்தர்  ஆணையிட்டுச்  சொன்ன  வார்த்தையை  நிறைவேற்றும்படியாகவும்,  உன்  தேவனாகிய  கர்த்தர்  அவர்களை  உனக்கு  முன்பாகத்  துரத்திவிடுகிறார்.  (உபாகமம்  9:5)

un  neethiyinimiththamum  un  iruthayaththinudaiya  uththamaththinimiththamum  nee  avarga'l  theasaththaich  suthantharikkumpadi  piraveasippathillai;  antha  jaathiga'ludaiya  aagaamiyaththinimiththamaagavum,  aabirahaam  eesaakku  yaakkoabu  ennum  un  pithaakka'lukkuk  karththar  aa'naiyittuch  sonna  vaarththaiyai  ni’raiveat’rumpadiyaagavum,  un  theavanaagiya  karththar  avarga'lai  unakku  munbaagath  thuraththividugi’raar.  (ubaagamam  9:5)

ஆகையால்,  உன்  நீதியினிமித்தம்  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்கு  அந்த  நல்ல  தேசத்தைச்  சுதந்தரிக்கக்  கொடார்  என்பதை  அறியக்கடவாய்;  நீ  வணங்காக்  கழுத்துள்ள  ஜனம்.  (உபாகமம்  9:6)

aagaiyaal,  un  neethiyinimiththam  un  theavanaagiya  karththar  unakku  antha  nalla  theasaththaich  suthantharikkak  kodaar  enbathai  a’riyakkadavaay;  nee  va'nanggaak  kazhuththu'l'la  janam.  (ubaagamam  9:6)

நீ  வனாந்தரத்தில்  உன்  தேவனாகிய  கர்த்தருக்குக்  கடுங்கோபம்  உண்டாக்கினதை  நினை,  அதை  மறவாயாக;  நீங்கள்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்ட  நாள்முதல்,  இவ்விடத்தில்  வந்து  சேருமட்டும்,  கர்த்தருக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினீர்கள்.  (உபாகமம்  9:7)

nee  vanaantharaththil  un  theavanaagiya  karththarukkuk  kadungkoabam  u'ndaakkinathai  ninai,  athai  ma’ravaayaaga;  neengga'l  egipthutheasaththilirunthu  pu’rappatta  naa'lmuthal,  ivvidaththil  vanthu  searumattum,  karththarukku  viroathamaayk  kalagampa'n'nineerga'l.  (ubaagamam  9:7)

ஓரேபிலும்  நீங்கள்  கர்த்தருக்குக்  கடுங்கோபம்  உண்டாக்கினதினால்,  கர்த்தர்  உங்களை  அழிக்கத்தக்கதான  உக்கிரங்கொண்டார்.  (உபாகமம்  9:8)

oareabilum  neengga'l  karththarukkuk  kadungkoabam  u'ndaakkinathinaal,  karththar  ungga'lai  azhikkaththakkathaana  ukkirangko'ndaar.  (ubaagamam  9:8)

கர்த்தர்  உங்களோடே  பண்ணின  உடன்படிக்கைப்  பலகைகளாகிய  கற்பலகைகளைப்  பெற்றுக்கொள்ளும்படி  நான்  மலையில்  ஏறினபோது,  நாற்பதுநாள்  இரவும்பகலும்  மலையில்  தங்கி  அப்பம்  புசியாமலும்  தண்ணீர்  குடியாமலும்  இருந்தேன்.  (உபாகமம்  9:9)

karththar  ungga'loadea  pa'n'nina  udanpadikkaip  palagaiga'laagiya  ka’rpalagaiga'laip  pet’rukko'l'lumpadi  naan  malaiyil  ea’rinapoathu,  naa’rpathunaa'l  iravumpagalum  malaiyil  thanggi  appam  pusiyaamalum  tha'n'neer  kudiyaamalum  irunthean.  (ubaagamam  9:9)

அப்பொழுது  தேவனுடைய  விரலினால்  எழுதியிருந்த  இரண்டு  கற்பலகைகளைக்  கர்த்தர்  என்னிடத்தில்  ஒப்புக்கொடுத்தார்;  சபை  கூடியிருந்த  நாளில்  கர்த்தர்  மலையிலே  அக்கினியின்  நடுவிலிருந்து  உங்களுடனே  பேசின  வார்த்தைகளின்படியே  அவைகளில்  எழுதியிருந்தது.  (உபாகமம்  9:10)

appozhuthu  theavanudaiya  viralinaal  ezhuthiyiruntha  ira'ndu  ka’rpalagaiga'laik  karththar  ennidaththil  oppukkoduththaar;  sabai  koodiyiruntha  naa'lil  karththar  malaiyilea  akkiniyin  naduvilirunthu  ungga'ludanea  peasina  vaarththaiga'linpadiyea  avaiga'lil  ezhuthiyirunthathu.  (ubaagamam  9:10)

இரவும்  பகலும்  நாற்பதுநாள்  முடிந்து,  கர்த்தர்  எனக்கு  அந்த  உடன்படிக்கையின்  இரண்டு  கற்பலகைகளைக்  கொடுக்கிறபோது,  (உபாகமம்  9:11)

iravum  pagalum  naa’rpathunaa'l  mudinthu,  karththar  enakku  antha  udanpadikkaiyin  ira'ndu  ka’rpalagaiga'laik  kodukki’rapoathu,  (ubaagamam  9:11)

கர்த்தர்  என்னை  நோக்கி:  நீ  எழுந்து,  சீக்கிரமாய்  இவ்விடம்  விட்டு,  இறங்கிப்போ;  நீ  எகிப்திலிருந்து  அழைத்துக்கொண்டுவந்த  உன்  ஜனங்கள்  தங்களைக்  கெடுத்துக்கொண்டார்கள்;  நான்  அவர்களுக்கு  விதித்த  வழியை  அவர்கள்  சீக்கிரமாக  விட்டு  விலகி,  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகத்தைத்  தங்களுக்காக  உண்டாக்கினார்கள்  என்றார்.  (உபாகமம்  9:12)

karththar  ennai  noakki:  nee  ezhunthu,  seekkiramaay  ivvidam  vittu,  i’ranggippoa;  nee  egipthilirunthu  azhaiththukko'nduvantha  un  janangga'l  thangga'laik  keduththukko'ndaarga'l;  naan  avarga'lukku  vithiththa  vazhiyai  avarga'l  seekkiramaaga  vittu  vilagi,  vaarppikkappatta  vikkiragaththaith  thangga'lukkaaga  u'ndaakkinaarga'l  en’raar.  (ubaagamam  9:12)

பின்னும்  கர்த்தர்  என்னை  நோக்கி:  இந்த  ஜனங்களைப்  பார்த்தேன்;  அது  வணங்காக்  கழுத்துள்ள  ஜனம்.  (உபாகமம்  9:13)

pinnum  karththar  ennai  noakki:  intha  janangga'laip  paarththean;  athu  va'nanggaak  kazhuththu'l'la  janam.  (ubaagamam  9:13)

ஆகையால்,  நான்  அவர்களை  அழித்து,  அவர்கள்  பேரை  வானத்தின்கீழ்  அற்றுப்போகப்பண்ணும்படி,  நீ  என்னை  விட்டுவிடு;  அவர்களைப்பார்க்கிலும்  உன்னைப்  பலத்ததும்  ஜனம்  பெருத்ததுமான  ஜாதியாக்குவேன்  என்றார்.  (உபாகமம்  9:14)

aagaiyaal,  naan  avarga'lai  azhiththu,  avarga'l  pearai  vaanaththinkeezh  at’ruppoagappa'n'numpadi,  nee  ennai  vittuvidu;  avarga'laippaarkkilum  unnaip  balaththathum  janam  peruththathumaana  jaathiyaakkuvean  en’raar.  (ubaagamam  9:14)

அப்பொழுது  நான்  திரும்பி  மலையிலிருந்து  இறங்கினேன்,  மலையானது  அக்கினி  பற்றி  எரிந்துகொண்டிருந்தது;  உடன்படிக்கையின்  இரண்டு  பலகைகளும்  என்  இரண்டு  கைகளில்  இருந்தது.  (உபாகமம்  9:15)

appozhuthu  naan  thirumbi  malaiyilirunthu  i’rangginean,  malaiyaanathu  akkini  pat’ri  erinthuko'ndirunthathu;  udanpadikkaiyin  ira'ndu  palagaiga'lum  en  ira'ndu  kaiga'lil  irunthathu.  (ubaagamam  9:15)

நான்  பார்த்தபோது,  நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்து,  வார்ப்பிக்கப்பட்ட  கன்றுக்குட்டியை  உங்களுக்கு  உண்டாக்கி,  கர்த்தர்  உங்களுக்கு  விதித்த  வழியைச்  சீக்கிரமாய்  விட்டு  விலகினதைக்  கண்டேன்.  (உபாகமம்  9:16)

naan  paarththapoathu,  neengga'l  ungga'l  theavanaagiya  karththarukku  viroathamaagap  paavagnseythu,  vaarppikkappatta  kan’rukkuttiyai  ungga'lukku  u'ndaakki,  karththar  ungga'lukku  vithiththa  vazhiyaich  seekkiramaay  vittu  vilaginathaik  ka'ndean.  (ubaagamam  9:16)

அப்பொழுது  நான்  என்  இரண்டு  கைகளிலும்  இருந்த  அந்த  இரண்டு  பலகைகளையும்  ஓங்கி  எறிந்து,  அவைகளை  உங்கள்  கண்களுக்கு  முன்பாக  உடைத்துப்போட்டேன்.  (உபாகமம்  9:17)

appozhuthu  naan  en  ira'ndu  kaiga'lilum  iruntha  antha  ira'ndu  palagaiga'laiyum  oanggi  e’rinthu,  avaiga'lai  ungga'l  ka'nga'lukku  munbaaga  udaiththuppoattean.  (ubaagamam  9:17)

கர்த்தரைக்  கோபப்படுத்துவதற்கு  நீங்கள்  அவருடைய  சமுகத்தில்  பொல்லாப்புச்  செய்து  நடப்பித்த  உங்களுடைய  சகல  பாவங்கள்  நிமித்தமும்,  நான்  கர்த்தருக்கு  முன்பாக  முன்போல  இரவும்பகலும்  நாற்பதுநாள்  விழுந்துகிடந்தேன்;  நான்  அப்பம்  புசிக்கவுமில்லை,  தண்ணீர்  குடிக்கவுமில்லை.  (உபாகமம்  9:18)

karththaraik  koabappaduththuvatha’rku  neengga'l  avarudaiya  samugaththil  pollaappuch  seythu  nadappiththa  ungga'ludaiya  sagala  paavangga'l  nimiththamum,  naan  karththarukku  munbaaga  munpoala  iravumpagalum  naa’rpathunaa'l  vizhunthukidanthean;  naan  appam  pusikkavumillai,  tha'n'neer  kudikkavumillai.  (ubaagamam  9:18)

கர்த்தர்  உங்களை  அழிக்கும்படி  உங்கள்மேல்  கொண்டிருந்த  கோபத்திற்கும்  உக்கிரத்திற்கும்  பயந்திருந்தேன்;  கர்த்தர்  அந்த  முறையும்  என்  மன்றாட்டைக்  கேட்டார்.  (உபாகமம்  9:19)

karththar  ungga'lai  azhikkumpadi  ungga'lmeal  ko'ndiruntha  koabaththi’rkum  ukkiraththi’rkum  bayanthirunthean;  karththar  antha  mu’raiyum  en  man’raattaik  keattaar.  (ubaagamam  9:19)

ஆரோன்மேலும்  கர்த்தர்  மிகவும்  கோபங்கொண்டு,  அவனை  அழிக்கவேண்டும்  என்றிருந்தார்;  அப்பொழுது  ஆரோனுக்காகவும்  விண்ணப்பம்பண்ணினேன்.  (உபாகமம்  9:20)

aaroanmealum  karththar  migavum  koabangko'ndu,  avanai  azhikkavea'ndum  en’rirunthaar;  appozhuthu  aaroanukkaagavum  vi'n'nappampa'n'ninean.  (ubaagamam  9:20)

உங்கள்  பாவக்கிரியையாகிய  அந்தக்  கன்றுக்குட்டியை  நான்  எடுத்து  அக்கினியில்  எரித்து,  அதை  நொறுக்கி,  தூளாய்ப்போகுமட்டும்  அரைத்து,  அந்தத்  தூளை  மலையிலிருந்து  ஓடுகிற  ஆற்றிலே  போட்டுவிட்டேன்.  (உபாகமம்  9:21)

ungga'l  paavakkiriyaiyaagiya  anthak  kan’rukkuttiyai  naan  eduththu  akkiniyil  eriththu,  athai  no’rukki,  thoo'laayppoagumattum  araiththu,  anthath  thoo'lai  malaiyilirunthu  oadugi’ra  aat’rilea  poattuvittean.  (ubaagamam  9:21)

தபேராவிலும்,  மாசாவிலும்,  கிப்ரோத்  அத்தாவாவிலும்  கர்த்தருக்குக்  கடுங்கோபம்  உண்டாக்கினீர்கள்.  (உபாகமம்  9:22)

thabearaavilum,  maasaavilum,  kibroath  aththaavaavilum  karththarukkuk  kadungkoabam  u'ndaakkineerga'l.  (ubaagamam  9:22)

நீங்கள்  போய்,  நான்  உங்களுக்குக்  கொடுத்த  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளுங்கள்  என்று  கர்த்தர்  காதேஸ்பர்னேயாவிலிருந்து  உங்களை  அனுப்புகையிலும்,  நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரை  விசுவாசியாமலும்,  அவருடைய  சத்தத்துக்குச்  செவிகொடாமலும்,  அவருடைய  வாக்குக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினீர்கள்.  (உபாகமம்  9:23)

neengga'l  poay,  naan  ungga'lukkuk  koduththa  theasaththaich  suthanthariththukko'l'lungga'l  en’ru  karththar  kaatheasbarneayaavilirunthu  ungga'lai  anuppugaiyilum,  neengga'l  ungga'l  theavanaagiya  karththarai  visuvaasiyaamalum,  avarudaiya  saththaththukkuch  sevikodaamalum,  avarudaiya  vaakkukku  viroathamaayk  kalagampa'n'nineerga'l.  (ubaagamam  9:23)

நான்  உங்களை  அறிந்த  நாள்முதற்கொண்டு,  நீங்கள்  கர்த்தருக்கு  விரோதமாகக்  கலகம்பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.  (உபாகமம்  9:24)

naan  ungga'lai  a’rintha  naa'lmutha’rko'ndu,  neengga'l  karththarukku  viroathamaagak  kalagampa'n'nugi’ravarga'laayiruntheerga'l.  (ubaagamam  9:24)

கர்த்தர்  உங்களை  அழிப்பேன்  என்று  சொன்னபடியினால்,  நான்  முன்போல்  கர்த்தரின்  சமுகத்தில்  இரவும்  பகலும்  நாற்பதுநாள்  விழுந்துகிடந்தேன்;  அப்பொழுது  நான்  கர்த்தரை  நோக்கிப்  பண்ணின  விண்ணப்பமாவது:  (உபாகமம்  9:25)

karththar  ungga'lai  azhippean  en’ru  sonnapadiyinaal,  naan  munpoal  karththarin  samugaththil  iravum  pagalum  naa’rpathunaa'l  vizhunthukidanthean;  appozhuthu  naan  karththarai  noakkip  pa'n'nina  vi'n'nappamaavathu:  (ubaagamam  9:25)

கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  உம்முடைய  மகத்துவத்தினாலே  மீட்டு,  பலத்த  கையினால்  எகிப்திலிருந்து  கொண்டுவந்த  உமது  ஜனத்தையும்,  உமது  சுதந்தரத்தையும்  அழிக்காதிருப்பீராக.  (உபாகமம்  9:26)

karththaraagiya  aa'ndavarea,  theavareer  ummudaiya  magaththuvaththinaalea  meettu,  balaththa  kaiyinaal  egipthilirunthu  ko'nduvantha  umathu  janaththaiyum,  umathu  suthantharaththaiyum  azhikkaathiruppeeraaga.  (ubaagamam  9:26)

கர்த்தர்  அவர்களுக்கு  வாக்குத்தத்தம்  பண்ணியிருந்த  தேசத்தில்  அவர்களைப்  பிரவேசிக்கப்பண்ணக்கூடாமற்  போனபடியினாலும்,  அவர்களை  வெறுத்தபடியினாலும்,  அவர்களை  வனாந்தரத்தில்  கொன்றுபோடும்படிக்கே  கொண்டுவந்தார்  என்று  நாங்கள்  விட்டுப்  புறப்படும்படி  நீர்  செய்த  தேசத்தின்  குடிகள்  சொல்லாதபடிக்கு,  (உபாகமம்  9:27)

karththar  avarga'lukku  vaakkuththaththam  pa'n'niyiruntha  theasaththil  avarga'laip  piraveasikkappa'n'nakkoodaama’r  poanapadiyinaalum,  avarga'lai  ve’ruththapadiyinaalum,  avarga'lai  vanaantharaththil  kon’rupoadumpadikkea  ko'nduvanthaar  en’ru  naangga'l  vittup  pu’rappadumpadi  neer  seytha  theasaththin  kudiga'l  sollaathapadikku,  (ubaagamam  9:27)

தேவரீர்  இந்த  ஜனங்களின்  முரட்டாட்டத்தையும்,  இவர்கள்  ஆகாமியத்தையும்,  இவர்கள்  பாவத்தையும்  பாராமல்,  உமது  தாசராகிய  ஆபிரகாம்  ஈசாக்கு  யாக்கோபு  என்பவர்களை  நினைத்தருளும்.  (உபாகமம்  9:28)

theavareer  intha  janangga'lin  murattaattaththaiyum,  ivarga'l  aagaamiyaththaiyum,  ivarga'l  paavaththaiyum  paaraamal,  umathu  thaasaraagiya  aabirahaam  eesaakku  yaakkoabu  enbavarga'lai  ninaiththaru'lum.  (ubaagamam  9:28)

நீர்  உமது  மகா  பலத்தினாலும்,  ஓங்கிய  புயத்தினாலும்  புறப்படப்பண்ணின  இவர்கள்  உமது  ஜனமும்  உமது  சுதந்தரமுமாயிருக்கிறார்களே  என்று  விண்ணப்பம்பண்ணினேன்.  (உபாகமம்  9:29)

neer  umathu  mahaa  balaththinaalum,  oanggiya  puyaththinaalum  pu’rappadappa'n'nina  ivarga'l  umathu  janamum  umathu  suthantharamumaayirukki’raarga'lea  en’ru  vi'n'nappampa'n'ninean.  (ubaagamam  9:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!