Saturday, August 06, 2016

Ubaagamam 4 | உபாகமம் 4 | Deuteronomy 4

இஸ்ரவேலரே,  நீங்கள்  பிழைத்திருக்கும்படிக்கும்,  உங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தர்  உங்களுக்குக்  கொடுக்கிற  தேசத்தில்  நீங்கள்  பிரவேசித்து  அதைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும்,  நீங்கள்  கைக்கொள்வதற்கு  நான்  உங்களுக்குப்  போதிக்கிற  கட்டளைகளையும்  நியாயங்களையும்  கேளுங்கள்.  (உபாகமம்  4:1)

isravealarea,  neengga'l  pizhaiththirukkumpadikkum,  ungga'l  pithaakka'lin  theavanaagiya  karththar  ungga'lukkuk  kodukki’ra  theasaththil  neengga'l  piraveasiththu  athaich  suthanthariththukko'l'lumpadikkum,  neengga'l  kaikko'lvatha’rku  naan  ungga'lukkup  poathikki’ra  katta'laiga'laiyum  niyaayangga'laiyum  kea'lungga'l.  (ubaagamam  4:1)

நான்  உங்களுக்குக்  கற்பிக்கும்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  கட்டளைகளை  நீங்கள்  கைக்கொள்ளும்படி,  நான்  உங்களுக்குக்  கற்பிக்கிற  வசனத்தோடே  நீங்கள்  ஒன்றும்  கூட்டவும்  வேண்டாம்,  அதில்  ஒன்றும்  குறைக்கவும்  வேண்டாம்.  (உபாகமம்  4:2)

naan  ungga'lukkuk  ka’rpikkum  ungga'l  theavanaagiya  karththarin  katta'laiga'lai  neengga'l  kaikko'l'lumpadi,  naan  ungga'lukkuk  ka’rpikki’ra  vasanaththoadea  neengga'l  on’rum  koottavum  vea'ndaam,  athil  on’rum  ku’raikkavum  vea'ndaam.  (ubaagamam  4:2)

பாகால்பேயோரின்  நிமித்தம்  கர்த்தர்  செய்ததை  உங்கள்  கண்கள்  கண்டிருக்கிறது;  பாகால்பேயோரைப்  பின்பற்றின  மனிதரையெல்லாம்  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்  நடுவில்  இராதபடிக்கு  அழித்துப்போட்டார்.  (உபாகமம்  4:3)

baagaalpeayoarin  nimiththam  karththar  seythathai  ungga'l  ka'nga'l  ka'ndirukki’rathu;  baagaalpeayoaraip  pinpat’rina  manitharaiyellaam  un  theavanaagiya  karththar  un  naduvil  iraathapadikku  azhiththuppoattaar.  (ubaagamam  4:3)

ஆனாலும்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரைப்  பற்றிக்கொண்ட  நீங்களெல்லாரும்  இந்நாள்வரைக்கும்  உயிரோடிருக்கிறீர்கள்.  (உபாகமம்  4:4)

aanaalum  ungga'l  theavanaagiya  karththaraip  pat’rikko'nda  neengga'lellaarum  innaa'lvaraikkum  uyiroadirukki’reerga'l.  (ubaagamam  4:4)

நீங்கள்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  பிரவேசிக்கும்  தேசத்தில்  நீங்கள்  கைக்கொள்ளும்பொருட்டு,  என்  தேவனாகிய  கர்த்தர்  எனக்குக்  கற்பித்தபடியே,  நான்  உங்களுக்குக்  கட்டளைகளையும்  நியாயங்களையும்  போதித்தேன்.  (உபாகமம்  4:5)

neengga'l  suthanthariththukko'l'lumpadi  piraveasikkum  theasaththil  neengga'l  kaikko'l'lumporuttu,  en  theavanaagiya  karththar  enakkuk  ka’rpiththapadiyea,  naan  ungga'lukkuk  katta'laiga'laiyum  niyaayangga'laiyum  poathiththean.  (ubaagamam  4:5)

ஆகையால்  அவைகளைக்  கைக்கொண்டு  நடவுங்கள்;  ஜனங்களின்  கண்களுக்குமுன்பாகவும்  இதுவே  உங்களுக்கு  ஞானமும்  விவேகமுமாய்  இருக்கும்;  அவர்கள்  இந்தக்  கட்டளைகளையெல்லாம்  கேட்டு,  இந்தப்  பெரிய  ஜாதியே  ஞானமும்  விவேகமுமுள்ள  ஜனங்கள்  என்பார்கள்.  (உபாகமம்  4:6)

aagaiyaal  avaiga'laik  kaikko'ndu  nadavungga'l;  janangga'lin  ka'nga'lukkumunbaagavum  ithuvea  ungga'lukku  gnaanamum  viveagamumaay  irukkum;  avarga'l  inthak  katta'laiga'laiyellaam  keattu,  inthap  periya  jaathiyea  gnaanamum  viveagamumu'l'la  janangga'l  enbaarga'l.  (ubaagamam  4:6)

நம்முடைய  தேவனாகிய  கர்த்தரை  நாம்  தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம்,  அவர்  நமக்குச்  சமீபமாயிருக்கிறதுபோல,  தேவனை  இவ்வளவு  சமீபமாய்ப்  பெற்றிருக்கிற  வேறே  பெரிய  ஜாதி  எது?  (உபாகமம்  4:7)

nammudaiya  theavanaagiya  karththarai  naam  thozhuthuko'l'lugi’rapoathellaam,  avar  namakkuch  sameebamaayirukki’rathupoala,  theavanai  ivva'lavu  sameebamaayp  pet’rirukki’ra  vea’rea  periya  jaathi  ethu?  (ubaagamam  4:7)

இந்நாளில்  நான்  உங்களுக்கு  விதிக்கிற  இந்த  நியாயப்பிரமாணம்  முழுமைக்கும்  ஒத்த  இவ்வளவு  நீதியுள்ள  கட்டளைகளையும்  நியாயங்களையும்  பெற்றிருக்கிற  வேறே  பெரிய  ஜாதியும்  எது?  (உபாகமம்  4:8)

innaa'lil  naan  ungga'lukku  vithikki’ra  intha  niyaayappiramaa'nam  muzhumaikkum  oththa  ivva'lavu  neethiyu'l'la  katta'laiga'laiyum  niyaayangga'laiyum  pet’rirukki’ra  vea’rea  periya  jaathiyum  ethu?  (ubaagamam  4:8)

ஓரேபிலே  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  நீ  நிற்கும்போது,  கர்த்தர்  என்னை  நோக்கி:  ஜனங்களை  என்னிடத்தில்  கூடிவரச்செய்து,  என்  வார்த்தைகளை  அவர்கள்  கேட்கும்படி  பண்ணுவேன்;  அவர்கள்  பூமியில்  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  எனக்குப்  பயந்திருக்கும்படி  அவைகளைக்  கற்றுக்கொண்டு,  தங்கள்  பிள்ளைகளுக்கும்  போதிக்கக்கடவர்கள்  என்று  சொல்லிய  நாளில்,  (உபாகமம்  4:9)

oareabilea  un  theavanaagiya  karththarukku  munbaaga  nee  ni’rkumpoathu,  karththar  ennai  noakki:  janangga'lai  ennidaththil  koodivarachseythu,  en  vaarththaiga'lai  avarga'l  keadkumpadi  pa'n'nuvean;  avarga'l  boomiyil  uyiroadirukkum  naa'lellaam  enakkup  bayanthirukkumpadi  avaiga'laik  kat’rukko'ndu,  thangga'l  pi'l'laiga'lukkum  poathikkakkadavarga'l  en’ru  solliya  naa'lil,  (ubaagamam  4:9)

உன்  கண்கள்  கண்ட  காரியங்களை  நீ  மறவாதபடிக்கும்,  உன்  ஜீவனுள்ள  நாளெல்லாம்  அவைகள்  உன்  இருதயத்தை  விட்டு  நீங்காதபடிக்கும்  நீ  எச்சரிக்கையாயிருந்து,  உன்  ஆத்துமாவைச்  சாக்கிரதையாய்க்  காத்துக்கொள்;  அவைகளை  உன்  பிள்ளைகளுக்கும்  உன்  பிள்ளைகளின்  பிள்ளைகளுக்கும்  அறிவிக்கக்கடவாய்.  (உபாகமம்  4:10)

un  ka'nga'l  ka'nda  kaariyangga'lai  nee  ma’ravaathapadikkum,  un  jeevanu'l'la  naa'lellaam  avaiga'l  un  iruthayaththai  vittu  neenggaathapadikkum  nee  echcharikkaiyaayirunthu,  un  aaththumaavaich  saakkirathaiyaayk  kaaththukko'l;  avaiga'lai  un  pi'l'laiga'lukkum  un  pi'l'laiga'lin  pi'l'laiga'lukkum  a’rivikkakkadavaay.  (ubaagamam  4:10)

நீங்கள்  சேர்ந்துவந்து,  மலையின்  அடிவாரத்தில்  நின்றீர்கள்;  அந்த  மலையில்  வானத்தை  அளாவிய  அக்கினி  எரிய,  இருளும்  மேகமும்  அந்தகாரமும்  சூழ்ந்தது.  (உபாகமம்  4:11)

neengga'l  searnthuvanthu,  malaiyin  adivaaraththil  nin’reerga'l;  antha  malaiyil  vaanaththai  a'laaviya  akkini  eriya,  iru'lum  meagamum  anthagaaramum  soozhnthathu.  (ubaagamam  4:11)

அந்த  அக்கினியின்  நடுவிலிருந்து  கர்த்தர்  உங்களோடே  பேசினார்;  வார்த்தைகளின்  சத்தத்தை  நீங்கள்  கேட்டீர்கள்;  அந்தச்  சத்தத்தை  நீங்கள்  கேட்டதேயன்றி,  ஒரு  ரூபத்தையும்  காணவில்லை.  (உபாகமம்  4:12)

antha  akkiniyin  naduvilirunthu  karththar  ungga'loadea  peasinaar;  vaarththaiga'lin  saththaththai  neengga'l  keatteerga'l;  anthach  saththaththai  neengga'l  keattatheayan’ri,  oru  roobaththaiyum  kaa'navillai.  (ubaagamam  4:12)

நீங்கள்  கைக்கொள்ளவேண்டும்  என்று  அவர்  உங்களுக்குக்  கட்டளையிட்ட  பத்துக்  கற்பனைகளாகிய  தம்முடைய  உடன்படிக்கையை  அவர்  உங்களுக்கு  அறிவித்து,  அவைகளை  இரண்டு  கற்பலகைகளில்  எழுதினார்.  (உபாகமம்  4:13)

neengga'l  kaikko'l'lavea'ndum  en’ru  avar  ungga'lukkuk  katta'laiyitta  paththuk  ka’rpanaiga'laagiya  thammudaiya  udanpadikkaiyai  avar  ungga'lukku  a’riviththu,  avaiga'lai  ira'ndu  ka’rpalagaiga'lil  ezhuthinaar.  (ubaagamam  4:13)

நீங்கள்  சுதந்தரித்துக்கொள்ளப்போகிற  தேசத்தில்  நீங்கள்  கைக்கொள்ளவேண்டிய  கட்டளைகளையும்  நியாயங்களையும்  உங்களுக்குப்  போதிக்கவேண்டுமென்று  அக்காலத்திலே  கர்த்தர்  எனக்குக்  கட்டளையிட்டார்.  (உபாகமம்  4:14)

neengga'l  suthanthariththukko'l'lappoagi’ra  theasaththil  neengga'l  kaikko'l'lavea'ndiya  katta'laiga'laiyum  niyaayangga'laiyum  ungga'lukkup  poathikkavea'ndumen’ru  akkaalaththilea  karththar  enakkuk  katta'laiyittaar.  (ubaagamam  4:14)

கர்த்தர்  ஓரேபிலே  அக்கினியின்  நடுவிலிருந்து  உங்களோடே  பேசின  நாளில்,  நீங்கள்  ஒரு  ரூபத்தையும்  காணவில்லை.  (உபாகமம்  4:15)

karththar  oareabilea  akkiniyin  naduvilirunthu  ungga'loadea  peasina  naa'lil,  neengga'l  oru  roobaththaiyum  kaa'navillai.  (ubaagamam  4:15)

ஆகையால்  நீங்கள்  உங்களைக்  கெடுத்துக்கொண்டு,  ஆண்  உருவும்,  பெண்  உருவும்,  (உபாகமம்  4:16)

aagaiyaal  neengga'l  ungga'laik  keduththukko'ndu,  aa'n  uruvum,  pe'n  uruvum,  (ubaagamam  4:16)

பூமியிலிருக்கிற  யாதொரு  மிருகத்தின்  உருவும்,  ஆகாயத்தில்  பறக்கிற  செட்டையுள்ள  யாதொரு  பட்சியின்  உருவும்,  (உபாகமம்  4:17)

boomiyilirukki’ra  yaathoru  mirugaththin  uruvum,  aagaayaththil  pa’rakki’ra  settaiyu'l'la  yaathoru  padchiyin  uruvum,  (ubaagamam  4:17)

பூமியிலுள்ள  யாதொரு  ஊரும்  பிராணியின்  உருவும்,  பூமியின்கீழ்த்  தண்ணீரிலுள்ள  யாதொரு  மச்சத்தின்  உருவுமாயிருக்கிற  இவைகளில்  யாதொரு  உருவுக்கு  ஒப்பான  விக்கிரகத்தை  உங்களுக்கு  உண்டாக்காதபடிக்கும்,  (உபாகமம்  4:18)

boomiyilu'l'la  yaathoru  oorum  piraa'niyin  uruvum,  boomiyinkeezhth  tha'n'neerilu'l'la  yaathoru  machchaththin  uruvumaayirukki’ra  ivaiga'lil  yaathoru  uruvukku  oppaana  vikkiragaththai  ungga'lukku  u'ndaakkaathapadikkum,  (ubaagamam  4:18)

உங்கள்  கண்களை  வானத்திற்கு  ஏறெடுத்து,  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  வானத்தின்  கீழெங்கும்  இருக்கிற  எல்லா  ஜனங்களுக்கும்  ஏற்படுத்தின  வானத்தின்  சர்வ  சேனைகளாகிய  சந்திர  சூரிய  நட்சத்திரங்களை  நோக்கி,  அவைகளைத்  தொழுது  சேவிக்க  இணங்காதபடிக்கும்,  உங்கள்  ஆத்துமாக்களைக்குறித்து  மிகவும்  எச்சரிக்கையாயிருங்கள்.  (உபாகமம்  4:19)

ungga'l  ka'nga'lai  vaanaththi’rku  ea’reduththu,  ungga'l  theavanaagiya  karththar  vaanaththin  keezhenggum  irukki’ra  ellaa  janangga'lukkum  ea’rpaduththina  vaanaththin  sarva  seanaiga'laagiya  santhira  sooriya  nadchaththirangga'lai  noakki,  avaiga'laith  thozhuthu  seavikka  i'nanggaathapadikkum,  ungga'l  aaththumaakka'laikku’riththu  migavum  echcharikkaiyaayirungga'l.  (ubaagamam  4:19)

இந்நாளில்  நீங்கள்  இருக்கிறதுபோல,  தமக்குச்  சுதந்தரமான  ஜனமாயிருக்கும்படி,  கர்த்தர்  உங்களைச்  சேர்த்துக்கொண்டு,  உங்களை  எகிப்து  என்னும்  இருப்புக்காளவாயிலிருந்து  புறப்படப்பண்ணினார்.  (உபாகமம்  4:20)

innaa'lil  neengga'l  irukki’rathupoala,  thamakkuch  suthantharamaana  janamaayirukkumpadi,  karththar  ungga'laich  searththukko'ndu,  ungga'lai  egipthu  ennum  iruppukkaa'lavaayilirunthu  pu’rappadappa'n'ninaar.  (ubaagamam  4:20)

கர்த்தர்  உங்கள்  நிமித்தம்  என்மேல்  கோபங்கொண்டு,  நான்  யோர்தானைக்  கடந்துபோவதில்லை  என்றும்,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கிற  அந்த  நல்ல  தேசத்தில்  நான்  பிரவேசிப்பதில்லை  என்றும்  ஆணையிட்டார்.  (உபாகமம்  4:21)

karththar  ungga'l  nimiththam  enmeal  koabangko'ndu,  naan  yoarthaanaik  kadanthupoavathillai  en’rum,  un  theavanaagiya  karththar  unakkuch  suthantharamaagak  kodukki’ra  antha  nalla  theasaththil  naan  piraveasippathillai  en’rum  aa'naiyittaar.  (ubaagamam  4:21)

அதினால்  இந்த  தேசத்தில்  நான்  மரணமடையவேண்டும்;  நான்  யோர்தானைக்  கடந்துபோவதில்லை;  நீங்களோ  கடந்துபோய்,  அந்த  நல்ல  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்வீர்கள்.  (உபாகமம்  4:22)

athinaal  intha  theasaththil  naan  mara'namadaiyavea'ndum;  naan  yoarthaanaik  kadanthupoavathillai;  neengga'loa  kadanthupoay,  antha  nalla  theasaththaich  suthanthariththukko'lveerga'l.  (ubaagamam  4:22)

நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  உங்களோடே  பண்ணின  உடன்படிக்கையை  மறந்து,  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  வேண்டாம்  என்று  விலக்கின  எவ்வித  சாயலான  விக்கிரகத்தையும்  உங்களுக்கு  உண்டாக்காதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்.  (உபாகமம்  4:23)

neengga'l  ungga'l  theavanaagiya  karththar  ungga'loadea  pa'n'nina  udanpadikkaiyai  ma’ranthu,  ungga'l  theavanaagiya  karththar  vea'ndaam  en’ru  vilakkina  evvitha  saayalaana  vikkiragaththaiyum  ungga'lukku  u'ndaakkaathapadikku  echcharikkaiyaayirungga'l.  (ubaagamam  4:23)

உன்  தேவனாகிய  கர்த்தர்  பட்சிக்கிற  அக்கினி,  அவர்  எரிச்சலுள்ள  தேவன்.  (உபாகமம்  4:24)

un  theavanaagiya  karththar  padchikki’ra  akkini,  avar  erichchalu'l'la  theavan.  (ubaagamam  4:24)

நீங்கள்  பிள்ளைகளும்  பிள்ளைகளின்  பிள்ளைகளும்  பெற்று,  தேசத்தில்  வெகுநாள்  இருந்தபின்பு,  நீங்கள்  உங்களைக்  கெடுத்து,  யாதொரு  விக்கிரகத்தையாவது  யாதொரு  சாயலான  சுரூபத்தையாவது  பண்ணி,  உன்  தேவனாகிய  கர்த்தருக்குக்  கோபம்  உண்டாக்க  அவர்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தால்,  (உபாகமம்  4:25)

neengga'l  pi'l'laiga'lum  pi'l'laiga'lin  pi'l'laiga'lum  pet’ru,  theasaththil  vegunaa'l  irunthapinbu,  neengga'l  ungga'laik  keduththu,  yaathoru  vikkiragaththaiyaavathu  yaathoru  saayalaana  suroobaththaiyaavathu  pa'n'ni,  un  theavanaagiya  karththarukkuk  koabam  u'ndaakka  avar  paarvaikkup  pollaappaanathaich  seythaal,  (ubaagamam  4:25)

நீங்கள்  யோர்தானைக்  கடந்து  சுதந்தரிக்கப்போகிற  தேசத்தில்  இராமல்,  சீக்கிரமாய்  முற்றிலும்  அழிந்துபோவீர்கள்  என்று,  இந்நாளில்  உங்களுக்கு  விரோதமாய்  வானத்தையும்  பூமியையும்  சாட்சி  வைக்கிறேன்;  நீங்கள்  அதிலே  நெடுநாள்  இராமல்  நிர்மூலமாக்கப்படுவீர்கள்.  (உபாகமம்  4:26)

neengga'l  yoarthaanaik  kadanthu  suthantharikkappoagi’ra  theasaththil  iraamal,  seekkiramaay  mut’rilum  azhinthupoaveerga'l  en’ru,  innaa'lil  ungga'lukku  viroathamaay  vaanaththaiyum  boomiyaiyum  saadchi  vaikki’rean;  neengga'l  athilea  nedunaa'l  iraamal  nirmoolamaakkappaduveerga'l.  (ubaagamam  4:26)

கர்த்தர்  உங்களைப்  புறஜாதிகளுக்குள்ளே  சிதற  அடிப்பார்;  கர்த்தர்  உங்களைக்  கொண்டுபோய்  விடப்போகிற  ஜாதிகளிடத்திலே  கொஞ்ச  ஜனங்களாய்  மீந்திருப்பீர்கள்.  (உபாகமம்  4:27)

karththar  ungga'laip  pu’rajaathiga'lukku'l'lea  sitha’ra  adippaar;  karththar  ungga'laik  ko'ndupoay  vidappoagi’ra  jaathiga'lidaththilea  kogncha  janangga'laay  meenthiruppeerga'l.  (ubaagamam  4:27)

அங்கே  காணாமலும்  கேளாமலும்  சாப்பிடாமலும்  முகராமலும்  இருக்கிற  மரமும்  கல்லுமான,  மனுஷர்  கைவேலையாகிய  தேவர்களைச்  சேவிப்பீர்கள்.  (உபாகமம்  4:28)

anggea  kaa'naamalum  kea'laamalum  saappidaamalum  mugaraamalum  irukki’ra  maramum  kallumaana,  manushar  kaivealaiyaagiya  theavarga'laich  seavippeerga'l.  (ubaagamam  4:28)

அப்பொழுது  அங்கேயிருந்து  உன்  தேவனாகிய  கர்த்தரைத்  தேடுவாய்;  உன்  முழு  இருதயத்தோடும்  உன்  முழு  ஆத்துமாவோடும்  அவரைத்  தேடும்போது,  அவரைக்  கண்டடைவாய்.  (உபாகமம்  4:29)

appozhuthu  anggeayirunthu  un  theavanaagiya  karththaraith  theaduvaay;  un  muzhu  iruthayaththoadum  un  muzhu  aaththumaavoadum  avaraith  theadumpoathu,  avaraik  ka'ndadaivaay.  (ubaagamam  4:29)

நீ  வியாகுலப்பட  இவைகளெல்லாம்  உன்னைத்  தொடர்ந்து  பிடிக்கும்போது,  கடைசி  நாட்களில்  உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  திரும்பி  அவர்  சத்தத்திற்குக்  கீழ்ப்படிவாயானால்,  (உபாகமம்  4:30)

nee  viyaagulappada  ivaiga'lellaam  unnaith  thodarnthu  pidikkumpoathu,  kadaisi  naadka'lil  un  theavanaagiya  karththaridaththil  thirumbi  avar  saththaththi’rkuk  keezhppadivaayaanaal,  (ubaagamam  4:30)

உன்  தேவனாகிய  கர்த்தர்  இரக்கமுள்ள  தேவனாயிருக்கிறபடியால்,  அவர்  உன்னைக்  கைவிடவுமாட்டார்,  உன்னை  அழிக்கவுமாட்டார்,  உன்  பிதாக்களுக்குத்  தாம்  ஆணையிட்டுக்  கொடுத்த  உடன்படிக்கையை  மறக்கவுமாட்டார்.  (உபாகமம்  4:31)

un  theavanaagiya  karththar  irakkamu'l'la  theavanaayirukki’rapadiyaal,  avar  unnaik  kaividavumaattaar,  unnai  azhikkavumaattaar,  un  pithaakka'lukkuth  thaam  aa'naiyittuk  koduththa  udanpadikkaiyai  ma’rakkavumaattaar.  (ubaagamam  4:31)

தேவன்  மனுஷனைப்  பூமியிலே  சிருஷ்டித்த  நாள்முதல்,  உனக்கு  முன்  இருந்த  பூர்வநாட்களில்,  வானத்தின்  ஒருமுனை  தொடங்கி  அதின்  மறுமுனைமட்டுமுள்ள  எவ்விடத்திலாகிலும்  இப்படிப்பட்ட  பெரிய  காரியம்  நடந்ததுண்டோ,  இப்படிப்பட்ட  காரியம்  கேள்விப்பட்டதுண்டோ;  (உபாகமம்  4:32)

theavan  manushanaip  boomiyilea  sirushdiththa  naa'lmuthal,  unakku  mun  iruntha  poorvanaadka'lil,  vaanaththin  orumunai  thodanggi  athin  ma’rumunaimattumu'l'la  evvidaththilaagilum  ippadippatta  periya  kaariyam  nadanthathu'ndoa,  ippadippatta  kaariyam  kea'lvippattathu'ndoa;  (ubaagamam  4:32)

அக்கினியின்  நடுவிலிருந்து  பேசுகிற  தேவனுடைய  சத்தத்தை  நீ  கேட்டதுபோல,  யாதொரு  ஜனமாவது  கேட்டதும்  உயிரோடிருந்ததும்  உண்டோ,  (உபாகமம்  4:33)

akkiniyin  naduvilirunthu  peasugi’ra  theavanudaiya  saththaththai  nee  keattathupoala,  yaathoru  janamaavathu  keattathum  uyiroadirunthathum  u'ndoa,  (ubaagamam  4:33)

அல்லது  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  எகிப்திலே  உங்கள்  கண்களுக்கு  முன்பாக  உங்களுக்குச்  செய்தபடியெல்லாம்  தேவன்  அந்நிய  ஜாதிகளின்  நடுவிலிருந்து  ஒரு  ஜனத்தைச்  சோதனைகளினாலும்,  அடையாளங்களினாலும்,  அற்புதங்களினாலும்,  யுத்தத்தினாலும்,  வல்லமையுள்ள  கரத்தினாலும்,  ஓங்கிய  புயத்தினாலும்,  மகா  பயங்கரமான  செயல்களினாலும்,  தமக்கென்று  தெரிந்துகொள்ள  வகைபண்ணினதுண்டோ  என்று  நீ  விசாரித்துப்பார்.  (உபாகமம்  4:34)

allathu  ungga'l  theavanaagiya  karththar  egipthilea  ungga'l  ka'nga'lukku  munbaaga  ungga'lukkuch  seythapadiyellaam  theavan  anniya  jaathiga'lin  naduvilirunthu  oru  janaththaich  soathanaiga'linaalum,  adaiyaa'langga'linaalum,  a’rputhangga'linaalum,  yuththaththinaalum,  vallamaiyu'l'la  karaththinaalum,  oanggiya  puyaththinaalum,  mahaa  bayanggaramaana  seyalga'linaalum,  thamakken’ru  therinthuko'l'la  vagaipa'n'ninathu'ndoa  en’ru  nee  visaariththuppaar.  (ubaagamam  4:34)

கர்த்தரே  தேவன்,  அவரையல்லாமல்  வேறொருவரும்  இல்லை  என்பதை  நீ  அறியும்படிக்கு,  இது  உனக்குக்  காட்டப்பட்டது.  (உபாகமம்  4:35)

karththarea  theavan,  avaraiyallaamal  vea’roruvarum  illai  enbathai  nee  a’riyumpadikku,  ithu  unakkuk  kaattappattathu.  (ubaagamam  4:35)

உன்னை  உபதேசிக்கும்படிக்கு,  அவர்  வானத்திலிருந்து  தமது  சத்தத்தை  உனக்குக்  கேட்கப்பண்ணி,  பூமியிலே  தமது  பெரிய  அக்கினியை  உனக்குக்  காண்பித்தார்;  அக்கினியின்  நடுவிலிருந்து  உண்டான  அவருடைய  வார்த்தைகளைக்  கேட்டாய்.  (உபாகமம்  4:36)

unnai  ubatheasikkumpadikku,  avar  vaanaththilirunthu  thamathu  saththaththai  unakkuk  keadkappa'n'ni,  boomiyilea  thamathu  periya  akkiniyai  unakkuk  kaa'nbiththaar;  akkiniyin  naduvilirunthu  u'ndaana  avarudaiya  vaarththaiga'laik  keattaay.  (ubaagamam  4:36)

அவர்  உன்  பிதாக்களில்  அன்புகூர்ந்தபடியால்,  அவர்களுடைய  பின்சந்ததியைத்  தெரிந்துகொண்டு,  (உபாகமம்  4:37)

avar  un  pithaakka'lil  anbukoornthapadiyaal,  avarga'ludaiya  pinsanthathiyaith  therinthuko'ndu,  (ubaagamam  4:37)

உன்னிலும்  பலத்த  பெரிய  ஜாதிகளை  உனக்கு  முன்னின்று  துரத்தவும்,  உன்னை  அழைத்துக்கொண்டுபோய்,  இந்நாளில்  இருக்கிறதுபோல,  அவர்கள்  தேசத்தை  உனக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கவும்,  உன்னைத்  தமது  முகத்துக்குமுன்  தமது  மிகுந்த  வல்லமையினால்  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணினார்.  (உபாகமம்  4:38)

unnilum  balaththa  periya  jaathiga'lai  unakku  munnin’ru  thuraththavum,  unnai  azhaiththukko'ndupoay,  innaa'lil  irukki’rathupoala,  avarga'l  theasaththai  unakkuch  suthantharamaagak  kodukkavum,  unnaith  thamathu  mugaththukkumun  thamathu  miguntha  vallamaiyinaal  egipthilirunthu  pu’rappadappa'n'ninaar.  (ubaagamam  4:38)

ஆகையால்,  உயர  வானத்திலும்  தாழ  பூமியிலும்  கர்த்தரே  தேவன்,  அவரைத்  தவிர  ஒருவரும்  இல்லை  என்பதை  நீ  இந்நாளில்  அறிந்து,  உன்  மனதிலே  சிந்தித்து,  (உபாகமம்  4:39)

aagaiyaal,  uyara  vaanaththilum  thaazha  boomiyilum  karththarea  theavan,  avaraith  thavira  oruvarum  illai  enbathai  nee  innaa'lil  a’rinthu,  un  manathilea  sinthiththu,  (ubaagamam  4:39)

நீயும்  உனக்குப்  பின்வரும்  உன்  பிள்ளைகளும்  நன்றாயிருக்கும்படிக்கும்,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்கு  என்றைக்கும்  கொடுக்கிற  தேசத்திலே  நீ  நீடித்த  நாளாயிருக்கும்படிக்கும்,  நான்  இன்று  உனக்குக்  கற்பிக்கிற  அவருடைய  கட்டளைகளையும்  அவருடைய  கற்பனைகளையும்  கைக்கொள்ளக்கடவாய்  என்றான்.  (உபாகமம்  4:40)

neeyum  unakkup  pinvarum  un  pi'l'laiga'lum  nan’raayirukkumpadikkum,  un  theavanaagiya  karththar  unakku  en’raikkum  kodukki’ra  theasaththilea  nee  neediththa  naa'laayirukkumpadikkum,  naan  in’ru  unakkuk  ka’rpikki’ra  avarudaiya  katta'laiga'laiyum  avarudaiya  ka’rpanaiga'laiyum  kaikko'l'lakkadavaay  en’raan.  (ubaagamam  4:40)

முற்பகையின்றிக்  கைப்பிசகாய்  பிறனைக்  கொன்றவன்  அடைக்கலப்பட்டணங்களில்  ஒரு  பட்டணத்தில்  தப்பியோடிப்போய்ப்  பிழைத்திருக்கும்படியாக,  (உபாகமம்  4:41)

mu’rpagaiyin’rik  kaippisagaay  pi’ranaik  kon’ravan  adaikkalappatta'nangga'lil  oru  patta'naththil  thappiyoadippoayp  pizhaiththirukkumpadiyaaga,  (ubaagamam  4:41)

ரூபனியரைச்  சேர்ந்த  சமபூமியாகிய  வனாந்தரத்திலுள்ள  பேசேரும்,  காத்தியரைச்  சேர்ந்த  கீலேயாத்திலுள்ள  ராமோத்தும்,  மனாசேயரைச்  சேர்ந்த  பாசானிலுள்ள  கோலானுமாகிய,  (உபாகமம்  4:42)

roobaniyaraich  searntha  samaboomiyaagiya  vanaantharaththilu'l'la  beasearum,  kaaththiyaraich  searntha  keeleayaaththilu'l'la  raamoaththum,  manaaseayaraich  searntha  baasaanilu'l'la  koalaanumaagiya,  (ubaagamam  4:42)

மூன்று  பட்டணங்களை  மோசே  யோர்தானுக்கு  இப்புறத்தில்  சூரியோதய  திசையிலே  ஏற்படுத்தினான்.  (உபாகமம்  4:43)

moon’ru  patta'nangga'lai  moasea  yoarthaanukku  ippu’raththil  sooriyoathaya  thisaiyilea  ea’rpaduththinaan.  (ubaagamam  4:43)

இதுவே  மோசே  இஸ்ரவேல்  புத்திரருக்கு  விதித்த  பிரமாணம்.  (உபாகமம்  4:44)

ithuvea  moasea  israveal  puththirarukku  vithiththa  piramaa'nam.  (ubaagamam  4:44)

இஸ்ரவேல்  புத்திரர்  எகிப்திலிருந்து  புறப்பட்டபின்பு,  யோர்தானுக்கு  இப்புறத்தில்  எஸ்போனில்  குடியிருந்த  எமோரியரின்  ராஜாவாகிய  சீகோனுடைய  தேசத்திலுள்ள  பெத்பேயோருக்கு  எதிரான  பள்ளத்தாக்கிலே,  அவர்களுக்கு  மோசே  சொன்ன  சாட்சிகளும்  கட்டளைகளும்  நியாயங்களும்  இவைகளே.  (உபாகமம்  4:45)

israveal  puththirar  egipthilirunthu  pu’rappattapinbu,  yoarthaanukku  ippu’raththil  esboanil  kudiyiruntha  emoariyarin  raajaavaagiya  seegoanudaiya  theasaththilu'l'la  bethpeayoarukku  ethiraana  pa'l'laththaakkilea,  avarga'lukku  moasea  sonna  saadchiga'lum  katta'laiga'lum  niyaayangga'lum  ivaiga'lea.  (ubaagamam  4:45)

மோசேயும்  இஸ்ரவேல்  புத்திரரும்  எகிப்திலிருந்து  புறப்பட்டபின்பு  அந்த  ராஜாவை  முறிய  அடித்து,  (உபாகமம்  4:46)

moaseayum  israveal  puththirarum  egipthilirunthu  pu’rappattapinbu  antha  raajaavai  mu’riya  adiththu,  (ubaagamam  4:46)

யோர்தானுக்கு  இப்புறத்தில்  சூரியோதய  திசையில்  அர்னோன்  ஆற்றங்கரையிலுள்ள  ஆரோவேர்  தொடங்கி  எர்மோன்  என்னும்  சீயோன்  மலைவரைக்குமுள்ள  தேசமும்,  (உபாகமம்  4:47)

yoarthaanukku  ippu’raththil  sooriyoathaya  thisaiyil  arnoan  aat’rangkaraiyilu'l'la  aaroavear  thodanggi  ermoan  ennum  seeyoan  malaivaraikkumu'l'la  theasamum,  (ubaagamam  4:47)

யோர்தானுக்கு  இப்புறத்தில்  சூரியோதய  திசையில்  அஸ்தோத்  பிஸ்காவுக்கும்  தாழ்ந்த  சமனான  வெளியைச்சேர்ந்த  கடல்மட்டுமுள்ள  சமனான  வெளியனைத்துமாகிய,  (உபாகமம்  4:48)

yoarthaanukku  ippu’raththil  sooriyoathaya  thisaiyil  asthoath  piskaavukkum  thaazhntha  samanaana  ve'liyaichsearntha  kadalmattumu'l'la  samanaana  ve'liyanaiththumaagiya,  (ubaagamam  4:48)

எமோரியருடைய  இரண்டு  ராஜாக்களின்  தேசங்களான  சீகோனுடைய  தேசத்தையும்,  பாசானின்  ராஜாவாகிய  ஓகின்  தேசத்தையும்  கட்டிக்கொண்டார்கள்.  (உபாகமம்  4:49)

emoariyarudaiya  ira'ndu  raajaakka'lin  theasangga'laana  seegoanudaiya  theasaththaiyum,  baasaanin  raajaavaagiya  oakin  theasaththaiyum  kattikko'ndaarga'l.  (ubaagamam  4:49)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!