Wednesday, August 10, 2016

Ubaagamam 34 | உபாகமம் 34 | Deuteronomy 34

பின்பு  மோசே  மோவாபின்  சமனான  வெளிகளிலிருந்து  எரிகோவுக்கு  எதிரான  நேபோ  மலையிலிருக்கும்  பிஸ்காவின்  கொடுமுடியில்  ஏறினான்;  அப்பொழுது  கர்த்தர்  அவனுக்கு,  தாண்மட்டுமுள்ள  கீலேயாத்  தேசம்  அனைத்தையும்,  (உபாகமம்  34:1)

pinbu  moasea  moavaabin  samanaana  ve'liga'lilirunthu  erigoavukku  ethiraana  neaboa  malaiyilirukkum  piskaavin  kodumudiyil  ea’rinaan;  appozhuthu  karththar  avanukku,  thaa'nmattumu'l'la  keeleayaath  theasam  anaiththaiyum,  (ubaagamam  34:1)

நப்தலி  தேசம்  அனைத்தையும்,  எப்பிராயீம்  மனாசே  என்பவர்களின்  தேசத்தையும்,  கடைசிச்  சமுத்திரம்வரைக்குமுள்ள  யூதா  தேசம்  அனைத்தையும்,  (உபாகமம்  34:2)

napthali  theasam  anaiththaiyum,  eppiraayeem  manaasea  enbavarga'lin  theasaththaiyum,  kadaisich  samuththiramvaraikkumu'l'la  yoothaa  theasam  anaiththaiyum,  (ubaagamam  34:2)

தென்புறத்தையும்,  சோவார்  வரைக்குமுள்ள  பேரீச்சமரங்களின்  பட்டணம்  என்னும்  ஊர்முதற்கொண்டு  எரிகோவின்  பள்ளத்தாக்காகிய  சமனான  பூமியையும்  காண்பித்தார்.  (உபாகமம்  34:3)

thenpu’raththaiyum,  soavaar  varaikkumu'l'la  peareechchamarangga'lin  patta'nam  ennum  oormutha’rko'ndu  erigoavin  pa'l'laththaakkaagiya  samanaana  boomiyaiyum  kaa'nbiththaar.  (ubaagamam  34:3)

அப்பொழுது  கர்த்தர்  அவனை  நோக்கி:  நான்  உங்கள்  சந்ததிக்குக்  கொடுப்பேன்  என்று  ஆபிரகாமுக்கும்  ஈசாக்குக்கும்  யாக்கோபுக்கும்  ஆணையிட்ட  தேசம்  இதுதான்,  இதை  உன்  கண்  காணும்படி  செய்தேன்;  ஆனாலும்  நீ  அவ்விடத்திற்குக்  கடந்துபோவதில்லை  என்றார்.  (உபாகமம்  34:4)

appozhuthu  karththar  avanai  noakki:  naan  ungga'l  santhathikkuk  koduppean  en’ru  aabirahaamukkum  eesaakkukkum  yaakkoabukkum  aa'naiyitta  theasam  ithuthaan,  ithai  un  ka'n  kaa'numpadi  seythean;  aanaalum  nee  avvidaththi’rkuk  kadanthupoavathillai  en’raar.  (ubaagamam  34:4)

அப்படியே  கர்த்தரின்  தாசனாகிய  மோசே  மோவாப்  தேசமான  அவ்விடத்திலே  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  மரித்தான்.  (உபாகமம்  34:5)

appadiyea  karththarin  thaasanaagiya  moasea  moavaab  theasamaana  avvidaththilea  karththarudaiya  vaarththaiyinpadiyea  mariththaan.  (ubaagamam  34:5)

அவர்  அவனை  மோவாப்  தேசத்திலுள்ள  பெத்பேயோருக்கு  எதிரான  பள்ளத்தாக்கிலே  அடக்கம்பண்ணினார்.  இந்நாள்வரைக்கும்  ஒருவனும்  அவன்  பிரேதக்குழியை  அறியான்.  (உபாகமம்  34:6)

avar  avanai  moavaab  theasaththilu'l'la  bethpeayoarukku  ethiraana  pa'l'laththaakkilea  adakkampa'n'ninaar.  innaa'lvaraikkum  oruvanum  avan  pireathakkuzhiyai  a’riyaan.  (ubaagamam  34:6)

மோசே  மரிக்கிறபோது  நூற்றிருபது  வயதாயிருந்தான்;  அவன்  கண்  இருளடையவுமில்லை,  அவன்  பெலன்  குறையவுமில்லை.  (உபாகமம்  34:7)

moasea  marikki’rapoathu  noot’rirubathu  vayathaayirunthaan;  avan  ka'n  iru'ladaiyavumillai,  avan  belan  ku’raiyavumillai.  (ubaagamam  34:7)

இஸ்ரவேல்  புத்திரர்  மோவாபின்  சமனான  வெளிகளில்  மோசேக்காக  முப்பது  நாள்  அழுதுகொண்டிருந்தார்கள்;  மோசேக்காக  அழுது  துக்கங்கொண்டாடின  நாட்கள்  முடிந்தது.  (உபாகமம்  34:8)

israveal  puththirar  moavaabin  samanaana  ve'liga'lil  moaseakkaaga  muppathu  naa'l  azhuthuko'ndirunthaarga'l;  moaseakkaaga  azhuthu  thukkangko'ndaadina  naadka'l  mudinthathu.  (ubaagamam  34:8)

மோசே  நூனின்  குமாரனாகிய  யோசுவாவின்மேல்  தன்  கைகளை  வைத்தபடியினால்  அவன்  ஞானத்தின்  ஆவியினால்  நிறையப்பட்டான்;  இஸ்ரவேல்  புத்திரர்  அவனுக்குக்  கீழ்ப்படிந்து,  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  செய்தார்கள்.  (உபாகமம்  34:9)

moasea  noonin  kumaaranaagiya  yoasuvaavinmeal  than  kaiga'lai  vaiththapadiyinaal  avan  gnaanaththin  aaviyinaal  ni’raiyappattaan;  israveal  puththirar  avanukkuk  keezhppadinthu,  karththar  moaseakkuk  katta'laiyittapadiyea  seythaarga'l.  (ubaagamam  34:9)

மோசே  எகிப்துதேசத்திலே  பார்வோனுக்கும்,  அவனுடைய  எல்லா  ஊழியக்காரருக்கும்,  அவனுடைய  தேசம்  அனைத்திற்கும்  செய்யும்படி  கர்த்தர்  அவனை  அனுப்பிச்  செய்வித்த  சகல  அடையாளங்களையும்  அற்புதங்களையும்,  (உபாகமம்  34:10)

moasea  egipthutheasaththilea  paarvoanukkum,  avanudaiya  ellaa  oozhiyakkaararukkum,  avanudaiya  theasam  anaiththi’rkum  seyyumpadi  karththar  avanai  anuppich  seyviththa  sagala  adaiyaa'langga'laiyum  a’rputhangga'laiyum,  (ubaagamam  34:10)

அவன்  இஸ்ரவேலர்  எல்லாருக்கும்  பிரத்தியட்சமாய்ச்  செய்த  சகல  வல்லமையான  கிரியைகளையும்,  மகா  பயங்கரமான  செய்கைகளையும்  பார்த்தால்,  (உபாகமம்  34:11)

avan  isravealar  ellaarukkum  piraththiyadchamaaych  seytha  sagala  vallamaiyaana  kiriyaiga'laiyum,  mahaa  bayanggaramaana  seygaiga'laiyum  paarththaal,  (ubaagamam  34:11)

கர்த்தரை  முகமுகமாய்  அறிந்த  மோசேயைப்போல,  ஒரு  தீர்க்கதரிசியும்  இஸ்ரவேலில்  அப்புறம்  எழும்பினதில்லை  என்று  விளங்கும்.  (உபாகமம்  34:12)

karththarai  mugamugamaay  a’rintha  moaseayaippoala,  oru  theerkkatharisiyum  isravealil  appu’ram  ezhumbinathillai  en’ru  vi'langgum.  (ubaagamam  34:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!