Wednesday, August 10, 2016

Ubaagamam 33 | உபாகமம் 33 | Deuteronomy 33

தேவனுடைய  மனுஷனாகிய  மோசே  தான்  மரணமடையுமுன்னே  இஸ்ரவேல்  புத்திரரை  ஆசீர்வதித்த  ஆசீர்வாதமாவது:  (உபாகமம்  33:1)

theavanudaiya  manushanaagiya  moasea  thaan  mara'namadaiyumunnea  israveal  puththirarai  aaseervathiththa  aaseervaathamaavathu:  (ubaagamam  33:1)

கர்த்தர்  சீனாயிலிருந்து  எழுந்தருளி,  சேயீரிலிருந்து  அவர்களுக்கு  உதயமானார்;  பாரான்  மலையிலிருந்து  பிரகாசித்து,  பதினாயிரங்களான  பரிசுத்தவான்களோடே  பிரசன்னமானார்;  அவர்களுக்காக  அக்கினிமயமான  பிரமாணம்  அவருடைய  வலதுகரத்திலிருந்து  புறப்பட்டது.  (உபாகமம்  33:2)

karththar  seenaayilirunthu  ezhuntharu'li,  seayeerilirunthu  avarga'lukku  uthayamaanaar;  paaraan  malaiyilirunthu  piragaasiththu,  pathinaayirangga'laana  parisuththavaanga'loadea  pirasannamaanaar;  avarga'lukkaaga  akkinimayamaana  piramaa'nam  avarudaiya  valathukaraththilirunthu  pu’rappattathu.  (ubaagamam  33:2)

மெய்யாகவே  அவர்  ஜனங்களைச்  சிநேகிக்கிறார்;  அவருடைய  பரிசுத்தவான்கள்  எல்லாரும்  உம்முடைய  கையில்  இருக்கிறார்கள்;  அவர்கள்  உம்முடைய  பாதத்தில்  விழுந்து,  உம்முடைய  வார்த்தைகளினால்  போதனையடைவார்கள்.  (உபாகமம்  33:3)

meyyaagavea  avar  janangga'laich  sineagikki’raar;  avarudaiya  parisuththavaanga'l  ellaarum  ummudaiya  kaiyil  irukki’raarga'l;  avarga'l  ummudaiya  paathaththil  vizhunthu,  ummudaiya  vaarththaiga'linaal  poathanaiyadaivaarga'l.  (ubaagamam  33:3)

மோசே  நமக்கு  ஒரு  நியாயப்பிரமாணத்தைக்  கற்பித்தான்;  அது  யாக்கோபின்  சபைக்குச்  சுதந்தரமாயிற்று.  (உபாகமம்  33:4)

moasea  namakku  oru  niyaayappiramaa'naththaik  ka’rpiththaan;  athu  yaakkoabin  sabaikkuch  suthantharamaayit’ru.  (ubaagamam  33:4)

ஜனங்களின்  தலைவரும்  இஸ்ரவேலின்  கோத்திரங்களும்  கூட்டங்கூடினபோது  அவர்  யெஷூரனுக்கு  ராஜாவாயிருந்தார்.  (உபாகமம்  33:5)

janangga'lin  thalaivarum  isravealin  koaththirangga'lum  koottangkoodinapoathu  avar  yeshooranukku  raajaavaayirunthaar.  (ubaagamam  33:5)

ரூபன்  சாவாமல்  பிழைப்பானாக;  அவன்  ஜனம்  கொஞ்சமாயிராது  என்றான்.  (உபாகமம்  33:6)

rooban  saavaamal  pizhaippaanaaga;  avan  janam  kognchamaayiraathu  en’raan.  (ubaagamam  33:6)

அவன்  யூதாவைக்குறித்து:  கர்த்தாவே,  யூதாவின்  சத்தத்தைக்  கேட்டு,  அவன்  தன்  ஜனத்தோடே  திரும்பச்  சேரப்பண்ணும்;  அவன்  கை  பலக்கக்கடவது;  அவனுடைய  சத்துருக்களுக்கு  அவனை  நீங்கலாக்கி  விடுவிக்கிற  சகாயராயிருப்பீராக  என்றான்.  (உபாகமம்  33:7)

avan  yoothaavaikku’riththu:  karththaavea,  yoothaavin  saththaththaik  keattu,  avan  than  janaththoadea  thirumbach  searappa'n'num;  avan  kai  balakkakkadavathu;  avanudaiya  saththurukka'lukku  avanai  neenggalaakki  viduvikki’ra  sagaayaraayiruppeeraaga  en’raan.  (ubaagamam  33:7)

லேவியைக்குறித்து:  நீ  மாசாவிலே  பரீட்சைபார்த்து,  மேரிபாவின்  தண்ணீரிடத்தில்  வாக்குவாதம்பண்ணின  உன்  பரிசுத்த  புருஷன்  வசமாய்  உன்னுடைய  தும்மீம்  ஊரீம்  என்பவைகள்  இருப்பதாக.  (உபாகமம்  33:8)

leaviyaikku’riththu:  nee  maasaavilea  pareedchaipaarththu,  mearibaavin  tha'n'neeridaththil  vaakkuvaathampa'n'nina  un  parisuththa  purushan  vasamaay  unnudaiya  thummeem  ooreem  enbavaiga'l  iruppathaaga.  (ubaagamam  33:8)

தன்  தகப்பனுக்கும்  தன்  தாய்க்கும்:  நான்  உங்களைப்  பாரேன்  என்று  சொல்லி,  தன்  சகோதரரை  அங்கிகரியாமல்,  தன்  பிள்ளைகளையும்  அறியாமலிருக்கிறவன்  வசமாய்  அவைகள்  இருப்பதாக;  அவர்கள்  உம்முடைய  வார்த்தைகளைக்  கைக்கொண்டு,  உம்முடைய  உடன்படிக்கையைக்  காக்கிறவர்கள்.  (உபாகமம்  33:9)

than  thagappanukkum  than  thaaykkum:  naan  ungga'laip  paarean  en’ru  solli,  than  sagoathararai  anggigariyaamal,  than  pi'l'laiga'laiyum  a’riyaamalirukki’ravan  vasamaay  avaiga'l  iruppathaaga;  avarga'l  ummudaiya  vaarththaiga'laik  kaikko'ndu,  ummudaiya  udanpadikkaiyaik  kaakki’ravarga'l.  (ubaagamam  33:9)

அவர்கள்  யாக்கோபுக்கு  உம்முடைய  நியாயங்களையும்,  இஸ்ரவேலுக்கு  உம்முடைய  பிரமாணத்தையும்  போதித்து,  உமது  சந்நிதானத்திலே  தூபவர்க்கத்தையும்,  உமது  பலிபீடத்தின்மேல்  சர்வாங்க  தகனபலிகளையும்  இடுவார்கள்.  (உபாகமம்  33:10)

avarga'l  yaakkoabukku  ummudaiya  niyaayangga'laiyum,  isravealukku  ummudaiya  piramaa'naththaiyum  poathiththu,  umathu  sannithaanaththilea  thoobavarkkaththaiyum,  umathu  balipeedaththinmeal  sarvaangga  thaganabaliga'laiyum  iduvaarga'l.  (ubaagamam  33:10)

கர்த்தாவே,  அவன்  சம்பத்தை  ஆசீர்வதித்து,  அவன்  கைக்கிரியையின்மேல்  பிரியமாயிரும்;  அவனைப்  பகைத்து  அவனுக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்கள்  திரும்ப  எழுந்திராதபடி  அவர்களுடைய  இடுப்புகளை  நொறுக்கிவிடும்  என்றான்.  (உபாகமம்  33:11)

karththaavea,  avan  sambaththai  aaseervathiththu,  avan  kaikkiriyaiyinmeal  piriyamaayirum;  avanaip  pagaiththu  avanukku  viroathamaay  ezhumbugi’ravarga'l  thirumba  ezhunthiraathapadi  avarga'ludaiya  iduppuga'lai  no’rukkividum  en’raan.  (ubaagamam  33:11)

பென்யமீனைக்குறித்து:  கர்த்தருக்குப்  பிரியமானவன்,  அவரோடே  சுகமாய்த்  தங்கியிருப்பான்;  அவனை  எந்நாளும்  அவர்  காப்பாற்றி,  அவன்  எல்லைக்குள்ளே  வாசமாயிருப்பார்  என்றான்.  (உபாகமம்  33:12)

benyameenaikku’riththu:  karththarukkup  piriyamaanavan,  avaroadea  sugamaayth  thanggiyiruppaan;  avanai  ennaa'lum  avar  kaappaat’ri,  avan  ellaikku'l'lea  vaasamaayiruppaar  en’raan.  (ubaagamam  33:12)

யோசேப்பைக்குறித்து:  கர்த்தரால்  அவனுடைய  தேசம்  ஆசீர்வதிக்கப்படுவதாக;  அது  வானத்தின்  செல்வத்தினாலும்,  பனியினாலும்,  ஆழத்திலுள்ள  நீரூற்றுகளினாலும்,  (உபாகமம்  33:13)

yoaseappaikku’riththu:  karththaraal  avanudaiya  theasam  aaseervathikkappaduvathaaga;  athu  vaanaththin  selvaththinaalum,  paniyinaalum,  aazhaththilu'l'la  neeroot’ruga'linaalum,  (ubaagamam  33:13)

சூரியன்  பக்குவப்படுத்தும்  அருமையான  கனிகளினாலும்,  சந்திரன்  பக்குவப்படுத்தும்  அருமையான  பலன்களினாலும்,  (உபாகமம்  33:14)

sooriyan  pakkuvappaduththum  arumaiyaana  kaniga'linaalum,  santhiran  pakkuvappaduththum  arumaiyaana  palanga'linaalum,  (ubaagamam  33:14)

ஆதிபர்வதங்களில்  உண்டாகும்  திரவியங்களினாலும்,  நித்திய  மலைகளில்  பிறக்கும்  அரும்பொருள்களினாலும்,  (உபாகமம்  33:15)

aathiparvathangga'lil  u'ndaagum  thiraviyangga'linaalum,  niththiya  malaiga'lil  pi’rakkum  arumporu'lga'linaalum,  (ubaagamam  33:15)

நாடும்  அதின்  நிறைவும்  கொடுக்கும்  அருமையான  தானியங்களினாலும்  ஆசீர்வதிக்கப்படுவதாக.  முட்செடியில்  எழுந்தருளினவரின்  தயை  யோசேப்புடைய  சிரசின்மேலும்,  தன்  சகோதரரில்  விசேஷித்தவனுடைய  உச்சந்தலையின்மேலும்  வருவதாக.  (உபாகமம்  33:16)

naadum  athin  ni’raivum  kodukkum  arumaiyaana  thaaniyangga'linaalum  aaseervathikkappaduvathaaga.  mudchediyil  ezhuntharu'linavarin  thayai  yoaseappudaiya  sirasinmealum,  than  sagoathararil  viseashiththavanudaiya  uchchanthalaiyinmealum  varuvathaaga.  (ubaagamam  33:16)

அவன்  அலங்காரம்  அவன்  தலையீற்றுக்  காளையினுடைய  அலங்காரத்தைப்போலவும்,  அவன்  கொம்புகள்  காண்டாமிருகத்தின்  கொம்புகளைப்போலவும்  இருக்கும்;  அவைகளாலே  ஜனங்களை  ஏகமாய்  தேசத்தின்  கடையாந்தரங்கள்மட்டும்  முட்டித்  துரத்துவான்;  அவைகள்  எப்பிராயீமின்  பதினாயிரங்களும்  மனாசேயின்  ஆயிரங்களுமானவைகள்  என்றான்.  (உபாகமம்  33:17)

avan  alanggaaram  avan  thalaiyeet’ruk  kaa'laiyinudaiya  alanggaaraththaippoalavum,  avan  kombuga'l  kaa'ndaamirugaththin  kombuga'laippoalavum  irukkum;  avaiga'laalea  janangga'lai  eagamaay  theasaththin  kadaiyaantharangga'lmattum  muttith  thuraththuvaan;  avaiga'l  eppiraayeemin  pathinaayirangga'lum  manaaseayin  aayirangga'lumaanavaiga'l  en’raan.  (ubaagamam  33:17)

செபுலோனைக்குறித்து:  செபுலோனே,  நீ  வெளியே  புறப்பட்டுப்போகையிலும்,  இசக்காரே,  நீ  உன்  கூடாரங்களில்  தங்குகையிலும்  சந்தோஷமாயிரு.  (உபாகமம்  33:18)

sebuloanaikku’riththu:  sebuloanea,  nee  ve'liyea  pu’rappattuppoagaiyilum,  isakkaarea,  nee  un  koodaarangga'lil  thanggugaiyilum  santhoashamaayiru.  (ubaagamam  33:18)

ஜனங்களை  அவர்கள்  மலையின்மேல்  வரவழைத்து,  அங்கே  நீதியின்  பலிகளை  இடுவார்கள்;  கடல்களிலுள்ள  சம்பூரணத்தையும்  மணலுக்குள்ளே  மறைந்திருக்கும்  பொருள்களையும்  அநுபவிப்பார்கள்  என்றான்.  (உபாகமம்  33:19)

janangga'lai  avarga'l  malaiyinmeal  varavazhaiththu,  anggea  neethiyin  baliga'lai  iduvaarga'l;  kadalga'lilu'l'la  sampoora'naththaiyum  ma'nalukku'l'lea  ma’rainthirukkum  poru'lga'laiyum  anubavippaarga'l  en’raan.  (ubaagamam  33:19)

காத்தைக்குறித்து:  காத்துக்கு  விஸ்தாரமான  இடத்தைக்  கொடுக்கிறவர்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;  அவன்  சிங்கத்தைப்போல்  தங்கியிருந்து,  புயத்தையும்  உச்சந்தலையையும்  பீறிப்போடுவான்.  (உபாகமம்  33:20)

kaaththaikku’riththu:  kaaththukku  visthaaramaana  idaththaik  kodukki’ravar  sthoaththirikkappattavar;  avan  singgaththaippoal  thanggiyirunthu,  puyaththaiyum  uchchanthalaiyaiyum  pee’rippoaduvaan.  (ubaagamam  33:20)

அவன்  தனக்காக  முதல்  இடத்தைப்  பார்த்துக்கொண்டான்;  அங்கே  தனக்கு  நியாயப்பிரமாணிகன்  கொடுத்த  பங்கு  பத்திரமாயிருக்கிறது;  ஆனாலும்  அவன்  ஜனத்தின்  முன்னணியாய்  வந்து,  மற்ற  இஸ்ரவேலுடனே  கர்த்தரின்  நீதியையும்  அவருடைய  நியாயங்களையும்  நடப்பிப்பான்  என்றான்.  (உபாகமம்  33:21)

avan  thanakkaaga  muthal  idaththaip  paarththukko'ndaan;  anggea  thanakku  niyaayappiramaa'nigan  koduththa  panggu  paththiramaayirukki’rathu;  aanaalum  avan  janaththin  munna'niyaay  vanthu,  mat’ra  isravealudanea  karththarin  neethiyaiyum  avarudaiya  niyaayangga'laiyum  nadappippaan  en’raan.  (ubaagamam  33:21)

தாணைக்குறித்து:  தாண்  ஒரு  பாலசிங்கம்,  அவன்  பாசானிலிருந்து  பாய்வான்  என்றான்.  (உபாகமம்  33:22)

thaa'naikku’riththu:  thaa'n  oru  baalasinggam,  avan  baasaanilirunthu  paayvaan  en’raan.  (ubaagamam  33:22)

நப்தலியைக்குறித்து:  நப்தலி  கர்த்தருடைய  தயவினாலே  திர்ப்தியடைந்து,  அவருடைய  ஆசீர்வாதத்தினாலே  நிறைந்திருப்பான்.  நீ  மேற்றிசையையும்  தென்திசையையும்  சுதந்தரித்துக்கொள்  என்றான்.  (உபாகமம்  33:23)

napthaliyaikku’riththu:  napthali  karththarudaiya  thayavinaalea  thirpthiyadainthu,  avarudaiya  aaseervaathaththinaalea  ni’rainthiruppaan.  nee  meat’risaiyaiyum  thenthisaiyaiyum  suthanthariththukko'l  en’raan.  (ubaagamam  33:23)

ஆசேரைக்குறித்து:  ஆசேர்  புத்திரபாக்கியமுடையவனாய்,  தன்  சகோதரருக்குப்  பிரியமாயிருந்து,  தன்  காலை  எண்ணெயிலே  தோய்ப்பான்.  (உபாகமம்  33:24)

aasearaikku’riththu:  aasear  puththirabaakkiyamudaiyavanaay,  than  sagoathararukkup  piriyamaayirunthu,  than  kaalai  e'n'neyilea  thoayppaan.  (ubaagamam  33:24)

இரும்பும்  வெண்கலமும்  உன்  பாதரட்சையின்  கீழிருக்கும்;  உன்  நாட்களுக்குத்தக்கதாய்  உன்  பெலனும்  இருக்கும்  என்றான்.  (உபாகமம்  33:25)

irumbum  ve'ngalamum  un  paatharadchaiyin  keezhirukkum;  un  naadka'lukkuththakkathaay  un  belanum  irukkum  en’raan.  (ubaagamam  33:25)

யெஷூரனுடைய  தேவனைப்போல்  ஒருவரும்  இல்லை;  அவர்  உனக்குச்  சகாயமாய்  வானங்களின்மேலும்  தமது  மாட்சிமையோடு  ஆகாயமண்டலங்களின்  மேலும்  ஏறிவருகிறார்.  (உபாகமம்  33:26)

yeshooranudaiya  theavanaippoal  oruvarum  illai;  avar  unakkuch  sagaayamaay  vaanangga'linmealum  thamathu  maadchimaiyoadu  aagaayama'ndalangga'lin  mealum  ea’rivarugi’raar.  (ubaagamam  33:26)

அநாதி  தேவனே  உனக்கு  அடைக்கலம்;  அவருடைய  நித்திய  புயங்கள்  உனக்கு  ஆதாரம்;  அவர்  உனக்கு  முன்னின்று  சத்துருக்களைத்  துரத்தி,  அவர்களை  அழித்துப்போடு  என்று  கட்டளையிடுவார்.  (உபாகமம்  33:27)

anaathi  theavanea  unakku  adaikkalam;  avarudaiya  niththiya  puyangga'l  unakku  aathaaram;  avar  unakku  munnin’ru  saththurukka'laith  thuraththi,  avarga'lai  azhiththuppoadu  en’ru  katta'laiyiduvaar.  (ubaagamam  33:27)

இஸ்ரவேல்  சுகமாய்த்  தனித்து  வாசம்பண்ணுவான்;  யாக்கோபின்  ஊற்றானது  தானியமும்  திராட்சரசமுமுள்ள  தேசத்திலே  இருக்கும்;  அவருடைய  வானமும்  பனியைப்  பெய்யும்.  (உபாகமம்  33:28)

israveal  sugamaayth  thaniththu  vaasampa'n'nuvaan;  yaakkoabin  oot’raanathu  thaaniyamum  thiraadcharasamumu'l'la  theasaththilea  irukkum;  avarudaiya  vaanamum  paniyaip  peyyum.  (ubaagamam  33:28)

இஸ்ரவேலே,  நீ  பாக்கியவான்;  கர்த்தரால்  ரட்சிக்கப்பட்ட  ஜனமே,  உனக்கு  ஒப்பானவன்  யார்?  உனக்குச்  சகாயஞ்செய்யும்  கேடகமும்  உனக்கு  மகிமைபொருந்திய  பட்டயமும்  அவரே;  உன்  சத்துருக்கள்  உனக்கு  இச்சகம்  பேசி  அடங்குவார்கள்;  அவர்கள்  மேடுகளை  மிதிப்பாய்,  என்று  சொன்னான்.  (உபாகமம்  33:29)

isravealea,  nee  baakkiyavaan;  karththaraal  radchikkappatta  janamea,  unakku  oppaanavan  yaar?  unakkuch  sagaayagnseyyum  keadagamum  unakku  magimaiporunthiya  pattayamum  avarea;  un  saththurukka'l  unakku  ichchagam  peasi  adangguvaarga'l;  avarga'l  meaduga'lai  mithippaay,  en’ru  sonnaan.  (ubaagamam  33:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!