Wednesday, August 10, 2016

Ubaagamam 29 | உபாகமம் 29 | Deuteronomy 29

ஓரேபிலே  இஸ்ரவேல்  புத்திரரோடே  பண்ணிக்கொண்ட  உடன்படிக்கையை  அல்லாமல்,  மோவாபின்  தேசத்திலே  அவர்களோடே  உடன்படிக்கைபண்ணக்  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்ட  வார்த்தைகள்  இவைகளே.  (உபாகமம்  29:1)

oareabilea  israveal  puththiraroadea  pa'n'nikko'nda  udanpadikkaiyai  allaamal,  moavaabin  theasaththilea  avarga'loadea  udanpadikkaipa'n'nak  karththar  moaseakkuk  katta'laiyitta  vaarththaiga'l  ivaiga'lea.  (ubaagamam  29:1)

மோசே  இஸ்ரவேலர்  எல்லாரையும்  வரவழைத்து,  அவர்களை  நோக்கி:  எகிப்துதேசத்தில்  உங்கள்  கண்களுக்கு  முன்பாகப்  பார்வோனுக்கும்  அவனுடைய  எல்லா  ஊழியக்காரருக்கும்  அவனுடைய  தேசமுழுவதற்கும்,  (உபாகமம்  29:2)

moasea  isravealar  ellaaraiyum  varavazhaiththu,  avarga'lai  noakki:  egipthutheasaththil  ungga'l  ka'nga'lukku  munbaagap  paarvoanukkum  avanudaiya  ellaa  oozhiyakkaararukkum  avanudaiya  theasamuzhuvatha’rkum,  (ubaagamam  29:2)

கர்த்தர்  செய்த  பெரிய  சோதனைகளையும்,  பெரிய  அடையாளங்களையும்,  அற்புதங்களையும்  கண்ணாரக்  கண்டீர்களே.  (உபாகமம்  29:3)

karththar  seytha  periya  soathanaiga'laiyum,  periya  adaiyaa'langga'laiyum,  a’rputhangga'laiyum  ka'n'naarak  ka'ndeerga'lea.  (ubaagamam  29:3)

ஆகிலும்  கர்த்தர்  உங்களுக்கு  உணரத்தக்க  இருதயத்தையும்,  காணத்தக்க  கண்களையும்,  கேட்கத்தக்க  காதுகளையும்  இந்நாள்வரைக்கும்  கொடுக்கவில்லை.  (உபாகமம்  29:4)

aagilum  karththar  ungga'lukku  u'naraththakka  iruthayaththaiyum,  kaa'naththakka  ka'nga'laiyum,  keadkaththakka  kaathuga'laiyum  innaa'lvaraikkum  kodukkavillai.  (ubaagamam  29:4)

கர்த்தராகிய  நான்  உங்கள்  தேவன்  என்று  நீங்கள்  அறிந்துகொள்ளும்படிக்கு,  நான்  நாற்பது  வருஷம்  உங்களை  வனாந்தரத்தில்  நடத்தினேன்;  உங்கள்மேலிருந்த  வஸ்திரம்  பழையதாய்ப்  போகவும்  இல்லை,  உங்கள்  காலிலிருந்த  பாதரட்சைகள்  பழையதாய்ப்  போகவும்  இல்லை.  (உபாகமம்  29:5)

karththaraagiya  naan  ungga'l  theavan  en’ru  neengga'l  a’rinthuko'l'lumpadikku,  naan  naa’rpathu  varusham  ungga'lai  vanaantharaththil  nadaththinean;  ungga'lmealiruntha  vasthiram  pazhaiyathaayp  poagavum  illai,  ungga'l  kaaliliruntha  paatharadchaiga'l  pazhaiyathaayp  poagavum  illai.  (ubaagamam  29:5)

நீங்கள்  அப்பம்  சாப்பிடவும்  இல்லை,  திராட்சரசமும்  மதுவும்  குடிக்கவும்  இல்லை  என்றார்.  (உபாகமம்  29:6)

neengga'l  appam  saappidavum  illai,  thiraadcharasamum  mathuvum  kudikkavum  illai  en’raar.  (ubaagamam  29:6)

நீங்கள்  இவ்விடத்துக்கு  வந்தபோது,  எஸ்போனின்  ராஜாவாகிய  சீகோனும்,  பாசானின்  ராஜாவாகிய  ஓகும்  நம்மோடே  யுத்தஞ்செய்யப்  புறப்பட்டார்கள்;  நாம்  அவர்களை  முறிய  அடித்து,  (உபாகமம்  29:7)

neengga'l  ivvidaththukku  vanthapoathu,  esboanin  raajaavaagiya  seegoanum,  baasaanin  raajaavaagiya  oakum  nammoadea  yuththagnseyyap  pu’rappattaarga'l;  naam  avarga'lai  mu’riya  adiththu,  (ubaagamam  29:7)

அவர்களுடைய  தேசத்தைப்  பிடித்து,  அதை  ரூபனியருக்கும்  காத்தியருக்கும்  மனாசேயின்  பாதிக்  கோத்திரத்திற்கும்  சுதந்தரமாகக்  கொடுத்தோம்.  (உபாகமம்  29:8)

avarga'ludaiya  theasaththaip  pidiththu,  athai  roobaniyarukkum  kaaththiyarukkum  manaaseayin  paathik  koaththiraththi’rkum  suthantharamaagak  koduththoam.  (ubaagamam  29:8)

இப்பொழுதும்  நீங்கள்  செய்வதெல்லாம்  உங்களுக்கு  வாய்க்கும்படிக்கு,  இந்த  உடன்படிக்கையின்  வார்த்தைகளைக்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்வீர்களாக.  (உபாகமம்  29:9)

ippozhuthum  neengga'l  seyvathellaam  ungga'lukku  vaaykkumpadikku,  intha  udanpadikkaiyin  vaarththaiga'laik  kaikko'ndu,  avaiga'linpadi  seyveerga'laaga.  (ubaagamam  29:9)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சொன்னபடியேயும்,  உன்  பிதாக்களாகிய  ஆபிரகாமுக்கும்  ஈசாக்குக்கும்  யாக்கோபுக்கும்  ஆணையிட்டுக்  கொடுத்தபடியேயும்,  இன்று  உன்னைத்  தமக்கு  ஜனமாக  ஏற்படுத்திக்கொள்ளவும்,  தாம்  உனக்கு  தேவனாயிருக்கவும்,  (உபாகமம்  29:10)

un  theavanaagiya  karththar  unakkuch  sonnapadiyeayum,  un  pithaakka'laagiya  aabirahaamukkum  eesaakkukkum  yaakkoabukkum  aa'naiyittuk  koduththapadiyeayum,  in’ru  unnaith  thamakku  janamaaga  ea’rpaduththikko'l'lavum,  thaam  unakku  theavanaayirukkavum,  (ubaagamam  29:10)

நீ  உன்  தேவனாகிய  கர்த்தருடைய  உடன்படிக்கைக்கும்  இன்று  அவர்  உன்னோடே  பண்ணுகிற  அவருடைய  ஆணையுறுதிக்கும்  உட்படும்படிக்கு,  (உபாகமம்  29:11)

nee  un  theavanaagiya  karththarudaiya  udanpadikkaikkum  in’ru  avar  unnoadea  pa'n'nugi’ra  avarudaiya  aa'naiyu’ruthikkum  udpadumpadikku,  (ubaagamam  29:11)

உங்கள்  கோத்திரங்களின்  தலைவரும்  உங்கள்  மூப்பரும்  உங்கள்  அதிபதிகளும்  இஸ்ரவேலின்  சகல  புருஷரும்,  (உபாகமம்  29:12)

ungga'l  koaththirangga'lin  thalaivarum  ungga'l  moopparum  ungga'l  athibathiga'lum  isravealin  sagala  purusharum,  (ubaagamam  29:12)

உங்கள்  பிள்ளைகளும்,  உங்கள்  மனைவிகளும்,  உங்கள்  பாளயத்துக்குள்ளிருக்கிற  உங்கள்  விறகுக்காரனும்,  உங்கள்  தண்ணீர்க்காரனுமான  அந்நியர்  எல்லாரும்  இன்று  உங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சமுகத்தில்  நிற்கிறீர்களே.  (உபாகமம்  29:13)

ungga'l  pi'l'laiga'lum,  ungga'l  manaiviga'lum,  ungga'l  paa'layaththukku'l'lirukki’ra  ungga'l  vi’ragukkaaranum,  ungga'l  tha'n'neerkkaaranumaana  anniyar  ellaarum  in’ru  ungga'l  theavanaagiya  karththarudaiya  samugaththil  ni’rki’reerga'lea.  (ubaagamam  29:13)

நான்  உங்களோடேமாத்திரம்  இந்த  உடன்படிக்கையையும்  இந்த  ஆணையையும்  உறுதியையும்  பண்ணாமல்,  (உபாகமம்  29:14)

naan  ungga'loadeamaaththiram  intha  udanpadikkaiyaiyum  intha  aa'naiyaiyum  u’ruthiyaiyum  pa'n'naamal,  (ubaagamam  29:14)

இன்று  இங்கே  நம்மோடேகூட  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  சமுகத்தில்  நிற்கிறவர்களோடேயும்,  இன்று  இங்கே  நம்மோடே  இராதவர்களோடேயும்கூட  அதைப்  பண்ணுகிறேன்.  (உபாகமம்  29:15)

in’ru  inggea  nammoadeakooda  nammudaiya  theavanaagiya  karththarudaiya  samugaththil  ni’rki’ravarga'loadeayum,  in’ru  inggea  nammoadea  iraathavarga'loadeayumkooda  athaip  pa'n'nugi’rean.  (ubaagamam  29:15)

நாம்  எகிப்து  தேசத்தில்  குடியிருந்ததையும்,  நாம்  கடந்துவந்த  இடங்களிலிருந்த  ஜாதிகளின்  நடுவில்  நடந்துவந்ததையும்  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  (உபாகமம்  29:16)

naam  egipthu  theasaththil  kudiyirunthathaiyum,  naam  kadanthuvantha  idangga'liliruntha  jaathiga'lin  naduvil  nadanthuvanthathaiyum  neengga'l  a’rinthirukki’reerga'l.  (ubaagamam  29:16)

அவர்களுடைய  அருவருப்புகளையும்,  அவர்களிடத்திலிருக்கிற  மரமும்  கல்லும்  வெள்ளியும்  பொன்னுமான  அவர்களுடைய  நரகலான  தேவர்களையும்  கண்டிருக்கிறீர்கள்.  (உபாகமம்  29:17)

avarga'ludaiya  aruvaruppuga'laiyum,  avarga'lidaththilirukki’ra  maramum  kallum  ve'l'liyum  ponnumaana  avarga'ludaiya  naragalaana  theavarga'laiyum  ka'ndirukki’reerga'l.  (ubaagamam  29:17)

ஆகையால்,  அந்த  ஜாதிகளின்  தேவர்களைச்  சேவிக்கப்  போகும்படி,  இன்று  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரைவிட்டு  அகலுகிற  இருதயமுள்ள  ஒரு  புருஷனாகிலும்  ஸ்திரீயாகிலும்  குடும்பமாகிலும்  கோத்திரமாகிலும்  உங்களில்  இராதபடிக்கும்,  நஞ்சையும்  எட்டியையும்  முளைப்பிக்கிற  யாதொரு  வேர்  உங்களில்  இராதபடிக்கும்  பாருங்கள்.  (உபாகமம்  29:18)

aagaiyaal,  antha  jaathiga'lin  theavarga'laich  seavikkap  poagumpadi,  in’ru  nammudaiya  theavanaagiya  karththaraivittu  agalugi’ra  iruthayamu'l'la  oru  purushanaagilum  sthireeyaagilum  kudumbamaagilum  koaththiramaagilum  ungga'lil  iraathapadikkum,  nagnchaiyum  ettiyaiyum  mu'laippikki’ra  yaathoru  vear  ungga'lil  iraathapadikkum  paarungga'l.  (ubaagamam  29:18)

அப்படிப்பட்டவன்  இந்த  ஆணையுறுதியின்  வார்த்தைகளைக்  கேட்டும்,  தாகத்தினிமித்தம்  வெறிக்கக்  குடித்து,  மன  இஷ்டப்படி  நடந்தாலும்  எனக்குச்  சுகமுண்டாயிருக்கும்  என்று  தன்  உள்ளத்தைத்  தேற்றிக்கொண்டால்,  கர்த்தர்  அவனை  மன்னிக்கச்  சித்தமாயிரார்.  (உபாகமம்  29:19)

appadippattavan  intha  aa'naiyu’ruthiyin  vaarththaiga'laik  keattum,  thaagaththinimiththam  ve’rikkak  kudiththu,  mana  ishdappadi  nadanthaalum  enakkuch  sugamu'ndaayirukkum  en’ru  than  u'l'laththaith  theat’rikko'ndaal,  karththar  avanai  mannikkach  siththamaayiraar.  (ubaagamam  29:19)

அப்பொழுது  கர்த்தரின்  கோபமும்  எரிச்சலும்  அந்த  மனிதன்மேல்  புகையும்;  இந்தப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  சாபங்களெல்லாம்  அவன்மேல்  தங்கும்;  கர்த்தர்  அவன்  பேரை  வானத்தின்கீழ்  இராதபடிக்குக்  குலைத்துப்போடுவார்.  (உபாகமம்  29:20)

appozhuthu  karththarin  koabamum  erichchalum  antha  manithanmeal  pugaiyum;  inthap  pusthagaththil  ezhuthiyirukki’ra  saabangga'lellaam  avanmeal  thanggum;  karththar  avan  pearai  vaanaththinkeezh  iraathapadikkuk  kulaiththuppoaduvaar.  (ubaagamam  29:20)

இந்த  நியாயப்பிரமாண  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  உடன்படிக்கையினுடைய  சகல  சாபங்களின்படியும்  அவனுக்குத்  தீங்காக  கர்த்தர்  இஸ்ரவேல்  கோத்திரங்கள்  எல்லாவற்றிற்கும்  அவனைப்  புறம்பாக்கிப்போடுவார்.  (உபாகமம்  29:21)

intha  niyaayappiramaa'na  pusthagaththil  ezhuthiyirukki’ra  udanpadikkaiyinudaiya  sagala  saabangga'linpadiyum  avanukkuth  theenggaaga  karththar  israveal  koaththirangga'l  ellaavat’ri’rkum  avanaip  pu’rambaakkippoaduvaar.  (ubaagamam  29:21)

அப்பொழுது  உங்களுக்குப்பின்  எழும்பும்  தலைமுறையான  உங்கள்  பிள்ளைகளும்,  தூரதேசத்திலிருந்து  வரும்  அந்நியரும்,  கர்த்தர்  இந்த  தேசத்துக்கு  வருவித்த  வாதைகளையும்  நோய்களையும்  காணும்போதும்,  (உபாகமம்  29:22)

appozhuthu  ungga'lukkuppin  ezhumbum  thalaimu’raiyaana  ungga'l  pi'l'laiga'lum,  thooratheasaththilirunthu  varum  anniyarum,  karththar  intha  theasaththukku  varuviththa  vaathaiga'laiyum  noayga'laiyum  kaa'numpoathum,  (ubaagamam  29:22)

கர்த்தர்  தமது  கோபத்திலும்  தமது  உக்கிரத்திலும்  சோதோமையும்  கொமோராவையும்  அத்மாவையும்  செபோயீமையும்  கவிழ்த்துப்போட்டதுபோல,  இந்த  தேசத்தின்  நிலங்களெல்லாம்  விதைப்பும்  விளைவும்  யாதொரு  பூண்டின்  முளைப்பும்  இல்லாதபடிக்கு,  கந்தகத்தாலும்  உப்பாலும்  எரிக்கப்பட்டதைக்  காணும்போதும்,  (உபாகமம்  29:23)

karththar  thamathu  koabaththilum  thamathu  ukkiraththilum  soathoamaiyum  komoaraavaiyum  athmaavaiyum  seboayeemaiyum  kavizhththuppoattathupoala,  intha  theasaththin  nilangga'lellaam  vithaippum  vi'laivum  yaathoru  poo'ndin  mu'laippum  illaathapadikku,  kanthagaththaalum  uppaalum  erikkappattathaik  kaa'numpoathum,  (ubaagamam  29:23)

அந்த  ஜாதிகளெல்லாம்  கர்த்தர்  இந்த  தேசத்திற்கு  ஏன்  இப்படிச்  செய்தார்;  இந்த  மகா  கோபம்  பற்றியெரிந்ததற்குக்  காரணம்  என்ன  என்று  சொல்லுவார்கள்.  (உபாகமம்  29:24)

antha  jaathiga'lellaam  karththar  intha  theasaththi’rku  ean  ippadich  seythaar;  intha  mahaa  koabam  pat’riyerinthatha’rkuk  kaara'nam  enna  en’ru  solluvaarga'l.  (ubaagamam  29:24)

அதற்கு:  அவர்களுடைய  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தர்  அவர்களை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினபோது,  அவர்களோடே  பண்ணின  உடன்படிக்கையை  அவர்கள்  விட்டுப்போய்,  (உபாகமம்  29:25)

atha’rku:  avarga'ludaiya  pithaakka'lin  theavanaagiya  karththar  avarga'lai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'ninapoathu,  avarga'loadea  pa'n'nina  udanpadikkaiyai  avarga'l  vittuppoay,  (ubaagamam  29:25)

தாங்கள்  அறியாமலும்  தங்களுக்கு  ஒரு  பலனும்  அளிக்காமலும்  இருக்கிற  தேவர்களாகிய  வேறே  தேவர்களைச்  சேவித்து,  அவைகளைப்  பணிந்துகொண்டபடியினாலே,  (உபாகமம்  29:26)

thaangga'l  a’riyaamalum  thangga'lukku  oru  palanum  a'likkaamalum  irukki’ra  theavarga'laagiya  vea’rea  theavarga'laich  seaviththu,  avaiga'laip  pa'ninthuko'ndapadiyinaalea,  (ubaagamam  29:26)

கர்த்தர்  இந்தப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  சாபங்கள்  எல்லாவற்றையும்  இந்தத்  தேசத்தின்மேல்  வரப்பண்ண,  அதின்மேல்  கோபம்  மூண்டவராகி,  (உபாகமம்  29:27)

karththar  inthap  pusthagaththil  ezhuthiyirukki’ra  saabangga'l  ellaavat’raiyum  inthath  theasaththinmeal  varappa'n'na,  athinmeal  koabam  moo'ndavaraagi,  (ubaagamam  29:27)

அவர்களைக்  கோபத்தினாலும்  உக்கிரத்தினாலும்  மகா  எரிச்சலினாலும்  அவர்களுடைய  தேசத்திலிருந்து  வேரோடே  பிடுங்கி,  இந்நாளில்  இருக்கிறதுபோல,  அவர்களை  வேறே  தேசத்தில்  எறிந்துவிட்டார்  என்று  சொல்லப்படும்.  (உபாகமம்  29:28)

avarga'laik  koabaththinaalum  ukkiraththinaalum  mahaa  erichchalinaalum  avarga'ludaiya  theasaththilirunthu  vearoadea  pidunggi,  innaa'lil  irukki’rathupoala,  avarga'lai  vea’rea  theasaththil  e’rinthuvittaar  en’ru  sollappadum.  (ubaagamam  29:28)

மறைவானவைகள்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்கே  உரியவைகள்;  வெளிப்படுத்தப்பட்டவைகளோ,  இந்த  நியாயப்பிரமாணத்தின்  வார்த்தைகளின்படியெல்லாம்  செய்யும்படிக்கு,  நமக்கும்  நம்முடைய  பிள்ளைகளுக்கும்  என்றென்றைக்கும்  உரியவைகள்.  (உபாகமம்  29:29)

ma’raivaanavaiga'l  nammudaiya  theavanaagiya  karththarukkea  uriyavaiga'l;  ve'lippaduththappattavaiga'loa,  intha  niyaayappiramaa'naththin  vaarththaiga'linpadiyellaam  seyyumpadikku,  namakkum  nammudaiya  pi'l'laiga'lukkum  en’ren’raikkum  uriyavaiga'l.  (ubaagamam  29:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!