Tuesday, August 09, 2016

Ubaagamam 27 | உபாகமம் 27 | Deuteronomy 27

பின்பு  மோசே,  இஸ்ரவேலின்  மூப்பர்  கூட  இருக்கையில்,  ஜனங்களை  நோக்கி:  நான்  இன்று  உங்களுக்கு  விதிக்கிற  கட்டளைகளையெல்லாம்  கைக்கொள்ளுங்கள்.  (உபாகமம்  27:1)

pinbu  moasea,  isravealin  mooppar  kooda  irukkaiyil,  janangga'lai  noakki:  naan  in’ru  ungga'lukku  vithikki’ra  katta'laiga'laiyellaam  kaikko'l'lungga'l.  (ubaagamam  27:1)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உங்களுக்குக்  கொடுக்கும்  தேசத்திற்கு  நீ  போக  யோர்தானைக்  கடக்கும்  நாளில்,  நீ  பெரிய  கல்லுகளை  நாட்டி,  அவைகளுக்குச்  சாந்து  பூசி,  (உபாகமம்  27:2)

un  theavanaagiya  karththar  ungga'lukkuk  kodukkum  theasaththi’rku  nee  poaga  yoarthaanaik  kadakkum  naa'lil,  nee  periya  kalluga'lai  naatti,  avaiga'lukkuch  saanthu  poosi,  (ubaagamam  27:2)

உன்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சொன்னபடி  உனக்குக்  கொடுக்கும்  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசத்திற்குள்  பிரவேசிக்கும்படி  நீ  கடந்துபோனபின்பு,  இந்த  நியாயப்பிரமாண  வார்த்தைகள்  யாவையும்  அவைகளில்  எழுதக்கடவாய்.  (உபாகமம்  27:3)

un  pithaakka'lin  theavanaagiya  karththar  unakkuch  sonnapadi  unakkuk  kodukkum  paalum  theanum  oadugi’ra  theasaththi’rku'l  piraveasikkumpadi  nee  kadanthupoanapinbu,  intha  niyaayappiramaa'na  vaarththaiga'l  yaavaiyum  avaiga'lil  ezhuthakkadavaay.  (ubaagamam  27:3)

மேலும்  நீங்கள்  யோர்தானைக்  கடந்தபோது,  இன்று  நான்  உங்களுக்குக்  கட்டளையிட்டபடி  அந்தக்  கல்லுகளை  ஏபால்  மலையிலே  நாட்டி,  அவைகளுக்குச்  சாந்து  பூசி,  (உபாகமம்  27:4)

mealum  neengga'l  yoarthaanaik  kadanthapoathu,  in’ru  naan  ungga'lukkuk  katta'laiyittapadi  anthak  kalluga'lai  eabaal  malaiyilea  naatti,  avaiga'lukkuch  saanthu  poosi,  (ubaagamam  27:4)

அங்கே  இருப்பாயுதம்படாத  கற்களாலே  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டக்கடவாய்.  (உபாகமம்  27:5)

anggea  iruppaayuthampadaatha  ka’rka'laalea  ungga'l  theavanaagiya  karththarukku  oru  balipeedaththaik  kattakkadavaay.  (ubaagamam  27:5)

நீ  உன்  தேவனாகிய  கர்த்தரின்  பலிபீடத்தை  முழுக்கற்களாலே  கட்டி,  அதின்மேல்  உன்  தேவனாகிய  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலிகளையும்,  (உபாகமம்  27:6)

nee  un  theavanaagiya  karththarin  balipeedaththai  muzhukka’rka'laalea  katti,  athinmeal  un  theavanaagiya  karththarukkuch  sarvaangga  thaganabaliga'laiyum,  (ubaagamam  27:6)

சமாதானபலிகளையும்  இட்டு,  உன்  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  புசித்துச்  சந்தோஷமாயிருந்து,  (உபாகமம்  27:7)

samaathaanabaliga'laiyum  ittu,  un  theavanaagiya  karththarudaiya  sannithiyil  pusiththuch  santhoashamaayirunthu,  (ubaagamam  27:7)

அந்தக்  கல்லுகளில்  இந்த  நியாயப்பிரமாணத்தின்  வார்த்தைகளையெல்லாம்  துலக்கமாய்  எழுதக்கடவாய்  என்று  கட்டளையிட்டான்.  (உபாகமம்  27:8)

anthak  kalluga'lil  intha  niyaayappiramaa'naththin  vaarththaiga'laiyellaam  thulakkamaay  ezhuthakkadavaay  en’ru  katta'laiyittaan.  (ubaagamam  27:8)

பின்னும்  மோசே,  லேவியராகிய  ஆசாரியர்களும்  கூட  இருக்கையில்,  இஸ்ரவேலர்  எல்லாரையும்  நோக்கி:  இஸ்ரவேலே,  கவனித்துக்  கேள்;  இந்நாளிலே  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஜனமானாய்.  (உபாகமம்  27:9)

pinnum  moasea,  leaviyaraagiya  aasaariyarga'lum  kooda  irukkaiyil,  isravealar  ellaaraiyum  noakki:  isravealea,  kavaniththuk  kea'l;  innaa'lilea  un  theavanaagiya  karththarukku  janamaanaay.  (ubaagamam  27:9)

ஆகையால்  நீ  உன்  தேவனாகிய  கர்த்தருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படிந்து,  இன்று  நான்  உனக்கு  விதிக்கிற  அவருடைய  கற்பனைகளின்படியும்  அவருடைய  கட்டளைகளின்படியும்  செய்வாயாக  என்று  சொன்னான்.  (உபாகமம்  27:10)

aagaiyaal  nee  un  theavanaagiya  karththarudaiya  saththaththi’rkuk  keezhppadinthu,  in’ru  naan  unakku  vithikki’ra  avarudaiya  ka’rpanaiga'linpadiyum  avarudaiya  katta'laiga'linpadiyum  seyvaayaaga  en’ru  sonnaan.  (ubaagamam  27:10)

மேலும்  அந்நாளிலே  மோசே  ஜனங்களை  நோக்கி:  (உபாகமம்  27:11)

mealum  annaa'lilea  moasea  janangga'lai  noakki:  (ubaagamam  27:11)

நீங்கள்  யோர்தானைக்  கடந்தபின்பு,  ஜனங்கள்  ஆசீர்வதிக்கப்படும்படி  கெரிசீம்  மலையில்  சிமியோன்,  லேவி,  யூதா,  இசக்கார்,  யோசேப்பு,  பென்யமீன்  என்னும்  கோத்திரங்கள்  நிற்கவேண்டும்.  (உபாகமம்  27:12)

neengga'l  yoarthaanaik  kadanthapinbu,  janangga'l  aaseervathikkappadumpadi  keriseem  malaiyil  simiyoan,  leavi,  yoothaa,  isakkaar,  yoaseappu,  benyameen  ennum  koaththirangga'l  ni’rkavea'ndum.  (ubaagamam  27:12)

சாபங்கூறப்படும்பொருட்டு  ஏபால்  மலையில்  ரூபன்,  காத்,  ஆசேர்,  செபுலோன்,  தாண்,  நப்தலி  என்னும்  கோத்திரங்கள்  நிற்கவேண்டும்.  (உபாகமம்  27:13)

saabangkoo’rappadumporuttu  eabaal  malaiyil  rooban,  kaath,  aasear,  sebuloan,  thaa'n,  napthali  ennum  koaththirangga'l  ni’rkavea'ndum.  (ubaagamam  27:13)

அப்பொழுது  லேவியர்  உரத்த  சத்தமிட்டு  இஸ்ரவேல்  மனிதர்  எல்லாரையும்  பார்த்து:  (உபாகமம்  27:14)

appozhuthu  leaviyar  uraththa  saththamittu  israveal  manithar  ellaaraiyum  paarththu:  (ubaagamam  27:14)

கர்த்தருக்கு  அருவருப்பான  காரியமாகிய  தொழிலாளிகளுடைய  கைவேலையால்  செய்யப்பட்டதும்  வார்ப்பிக்கப்பட்டதுமான  யாதொரு  விக்கிரகத்தை  உண்டுபண்ணி  ஒளிப்பிடத்திலே  வைக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  அதற்கு  ஜனங்களெல்லாரும்  பிரதியுத்தரமாக  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:15)

karththarukku  aruvaruppaana  kaariyamaagiya  thozhilaa'liga'ludaiya  kaivealaiyaal  seyyappattathum  vaarppikkappattathumaana  yaathoru  vikkiragaththai  u'ndupa'n'ni  o'lippidaththilea  vaikki’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  atha’rku  janangga'lellaarum  pirathiyuththaramaaga  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:15)

தன்  தகப்பனையும்  தன்  தாயையும்  தூஷிக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:16)

than  thagappanaiyum  than  thaayaiyum  thooshikki’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:16)

பிறனுடைய  எல்லைக்குறியை  ஒற்றிப்போடுகிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:17)

pi’ranudaiya  ellaikku’riyai  ot’rippoadugi’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:17)

குருடனை  வழிதப்பச்செய்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:18)

kurudanai  vazhithappachseygi’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:18)

பரதேசி  திக்கற்றவன்  விதவை  ஆகிய  இவர்களுடைய  நியாயத்தைப்  புரட்டுகிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:19)

paratheasi  thikkat’ravan  vithavai  aagiya  ivarga'ludaiya  niyaayaththaip  purattugi’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:19)

தன்  தகப்பன்  மனைவியோடே  சயனிக்கிறவன்,  தன்  தகப்பனுடைய  மானத்தைத்  திறந்தபடியினாலே,  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:20)

than  thagappan  manaiviyoadea  sayanikki’ravan,  than  thagappanudaiya  maanaththaith  thi’ranthapadiyinaalea,  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:20)

யாதொரு  மிருகத்தோடே  புணர்ச்சி  செய்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:21)

yaathoru  mirugaththoadea  pu'narchchi  seygi’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:21)

தன்  தகப்பனுக்காவது  தாய்க்காவது  குமாரத்தியாகிய  தன்  சகோதரியோடே  சயனிக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:22)

than  thagappanukkaavathu  thaaykkaavathu  kumaaraththiyaagiya  than  sagoathariyoadea  sayanikki’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:22)

தன்  மாமியோடே  சயனிக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:23)

than  maamiyoadea  sayanikki’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:23)

ஒளிப்பிடத்திலே  பிறனைக்  கொலைசெய்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:24)

o'lippidaththilea  pi’ranaik  kolaiseygi’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:24)

குற்றமில்லாதவனைக்  கொலைசெய்யும்படி  பரிதானம்  வாங்குகிறவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:25)

kut’ramillaathavanaik  kolaiseyyumpadi  parithaanam  vaanggugi’ravan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:25)

இந்த  நியாயப்பிரமாண  வார்த்தைகளையெல்லாம்  கைக்கொண்டு  நடவாதவன்  சபிக்கப்பட்டவன்  என்பார்களாக;  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லக்கடவர்கள்.  (உபாகமம்  27:26)

intha  niyaayappiramaa'na  vaarththaiga'laiyellaam  kaikko'ndu  nadavaathavan  sabikkappattavan  enbaarga'laaga;  janangga'lellaarum  aamen  en’ru  sollakkadavarga'l.  (ubaagamam  27:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!