Tuesday, August 09, 2016

Ubaagamam 25 | உபாகமம் 25 | Deuteronomy 25

மனிதருக்குள்ளே  வழக்குண்டாய்,  அவர்கள்  நியாயம்  விசாரிக்கப்பட  நியாயஸ்தலத்திலே  வந்தால்,  நியாயாதிபதிகள்  நீதிமானை  நீதிமான்  என்றும்  குற்றவாளியைக்  குற்றவாளி  என்றும்  தீர்க்கக்கடவர்கள்.  (உபாகமம்  25:1)

manitharukku'l'lea  vazhakku'ndaay,  avarga'l  niyaayam  visaarikkappada  niyaayasthalaththilea  vanthaal,  niyaayaathibathiga'l  neethimaanai  neethimaan  en’rum  kut’ravaa'liyaik  kut’ravaa'li  en’rum  theerkkakkadavarga'l.  (ubaagamam  25:1)

குற்றவாளி  அடிகளுக்குப்  பாத்திரவானானால்,  நியாயாதிபதி  அவனைக்  கீழே  கிடக்கப்பண்ணி,  அவன்  குற்றத்திற்குத்  தக்கதாய்த்  தனக்கு  முன்பாகக்  கணக்கின்படி  அவனை  அடிப்பிக்கக்கடவன்.  (உபாகமம்  25:2)

kut’ravaa'li  adiga'lukkup  paaththiravaanaanaal,  niyaayaathibathi  avanaik  keezhea  kidakkappa'n'ni,  avan  kut’raththi’rkuth  thakkathaayth  thanakku  munbaagak  ka'nakkinpadi  avanai  adippikkakkadavan.  (ubaagamam  25:2)

அவனை  நாற்பது  அடிவரைக்கும்  அடிக்கலாம்;  அவனை  அதிலும்  அதிகமாய்  அடிக்கிறதினால்  உன்  சகோதரன்  உன்  கண்களுக்கு  முன்பாக  நீசனாய்த்  தோன்றுவான்;  ஆதலால்  அவனை  அதிகமாய்  அடிக்கவேண்டாம்.  (உபாகமம்  25:3)

avanai  naa’rpathu  adivaraikkum  adikkalaam;  avanai  athilum  athigamaay  adikki’rathinaal  un  sagoatharan  un  ka'nga'lukku  munbaaga  neesanaayth  thoan’ruvaan;  aathalaal  avanai  athigamaay  adikkavea'ndaam.  (ubaagamam  25:3)

போரடிக்கிற  மாட்டை  வாய்கட்டாயாக.  (உபாகமம்  25:4)

poaradikki’ra  maattai  vaaykattaayaaga.  (ubaagamam  25:4)

சகோதரர்  ஒன்றாய்க்  குடியிருக்கும்போது,  அவர்களில்  ஒருவன்  புத்திரசந்தானமில்லாமல்  மரித்தால்,  மரித்தவனுடைய  மனைவி  புறத்திலிருக்கிற  அந்நியனுக்கு  மனைவியாகக்கூடாது;  அவளுடைய  புருஷனின்  சகோதரன்  அவளைத்  தனக்கு  மனைவியாகக்  கொண்டு,  அவளிடத்தில்  சேர்ந்து,  புருஷனுடைய  சகோதரன்  செய்யவேண்டிய  கடமையைச்  செய்யக்கடவன்.  (உபாகமம்  25:5)

sagoatharar  on’raayk  kudiyirukkumpoathu,  avarga'lil  oruvan  puththirasanthaanamillaamal  mariththaal,  mariththavanudaiya  manaivi  pu’raththilirukki’ra  anniyanukku  manaiviyaagakkoodaathu;  ava'ludaiya  purushanin  sagoatharan  ava'laith  thanakku  manaiviyaagak  ko'ndu,  ava'lidaththil  searnthu,  purushanudaiya  sagoatharan  seyyavea'ndiya  kadamaiyaich  seyyakkadavan.  (ubaagamam  25:5)

மரித்த  சகோதரனுடைய  பேர்  இஸ்ரவேலில்  அற்றுப்போகாதபடிக்கு,  அவன்  பேரை  அவள்  பெறும்  தலைப்பிள்ளைக்குத்  தரிக்கவேண்டும்.  (உபாகமம்  25:6)

mariththa  sagoatharanudaiya  pear  isravealil  at’ruppoagaathapadikku,  avan  pearai  ava'l  pe’rum  thalaippi'l'laikkuth  tharikkavea'ndum.  (ubaagamam  25:6)

அவன்  தன்  சகோதரனுடைய  மனைவியை  விவாகம்பண்ண  மனதில்லாதிருந்தால்,  அவன்  சகோதரனுடைய  மனைவி  வாசலில்  கூடிய  மூப்பரிடத்துக்குப்போய்:  என்  புருஷனுடைய  சகோதரன்  தன்  சகோதரனுடைய  பேரை  இஸ்ரவேலில்  நிலைக்கப்பண்ணமாட்டேன்  என்கிறான்;  புருஷனுடைய  சகோதரன்  செய்யவேண்டிய  கடமையைச்  செய்ய  அவன்  மனதில்லாதிருக்கிறான்  என்று  சொல்வாளாக.  (உபாகமம்  25:7)

avan  than  sagoatharanudaiya  manaiviyai  vivaagampa'n'na  manathillaathirunthaal,  avan  sagoatharanudaiya  manaivi  vaasalil  koodiya  moopparidaththukkuppoay:  en  purushanudaiya  sagoatharan  than  sagoatharanudaiya  pearai  isravealil  nilaikkappa'n'namaattean  engi’raan;  purushanudaiya  sagoatharan  seyyavea'ndiya  kadamaiyaich  seyya  avan  manathillaathirukki’raan  en’ru  solvaa'laaga.  (ubaagamam  25:7)

அப்பொழுது  அந்தப்  பட்டணத்து  மூப்பர்  அவனை  அழைப்பித்து  அவனோடே  பேசியும்,  அவன்  அவளை  விவாகம்பண்ணிக்கொள்ள  எனக்குச்  சம்மதமில்லை  என்று  பிடிவாதமாய்ச்  சொன்னால்,  (உபாகமம்  25:8)

appozhuthu  anthap  patta'naththu  mooppar  avanai  azhaippiththu  avanoadea  peasiyum,  avan  ava'lai  vivaagampa'n'nikko'l'la  enakkuch  sammathamillai  en’ru  pidivaathamaaych  sonnaal,  (ubaagamam  25:8)

அவன்  சகோதரனுடைய  மனைவி  மூப்பரின்  கண்களுக்கு  முன்பாக  அவனிடத்தில்  வந்து,  அவன்  காலிலிருக்கிற  பாதரட்சையைக்  கழற்றி,  அவன்  முகத்திலே  துப்பி,  தன்  சகோதரன்  வீட்டைக்  கட்டாதவனுக்கு  இப்படியே  செய்யப்படவேண்டும்  என்று  சொல்லக்கடவள்.  (உபாகமம்  25:9)

avan  sagoatharanudaiya  manaivi  moopparin  ka'nga'lukku  munbaaga  avanidaththil  vanthu,  avan  kaalilirukki’ra  paatharadchaiyaik  kazhat’ri,  avan  mugaththilea  thuppi,  than  sagoatharan  veettaik  kattaathavanukku  ippadiyea  seyyappadavea'ndum  en’ru  sollakkadava'l.  (ubaagamam  25:9)

இஸ்ரவேலில்  அப்படிப்பட்டவன்  வீடு,  பாதரட்சை  கழற்றிப்போடப்பட்டவன்  வீடு  என்னப்படும்.  (உபாகமம்  25:10)

isravealil  appadippattavan  veedu,  paatharadchai  kazhat’rippoadappattavan  veedu  ennappadum.  (ubaagamam  25:10)

புருஷர்  ஒருவரோடொருவர்  சண்டைபண்ணிக்கொண்டிருக்கையில்,  ஒருவனுடைய  மனைவி  தன்  புருஷனை  அடிக்கிறவன்  கைக்கு  அவனைத்  தப்புவிக்கும்படி  வந்து,  தன்  கையை  நீட்டி,  அடிக்கிறவன்  மானத்தைப்  பிடித்ததுண்டானால்,  (உபாகமம்  25:11)

purushar  oruvaroadoruvar  sa'ndaipa'n'nikko'ndirukkaiyil,  oruvanudaiya  manaivi  than  purushanai  adikki’ravan  kaikku  avanaith  thappuvikkumpadi  vanthu,  than  kaiyai  neetti,  adikki’ravan  maanaththaip  pidiththathu'ndaanaal,  (ubaagamam  25:11)

அவளுடைய  கையைத்  தறிக்கக்கடவாய்;  உன்  கண்  அவளுக்கு  இரங்கவேண்டாம்.  (உபாகமம்  25:12)

ava'ludaiya  kaiyaith  tha’rikkakkadavaay;  un  ka'n  ava'lukku  iranggavea'ndaam.  (ubaagamam  25:12)

உன்  பையிலே  பெரிதும்  சிறிதுமான  பலவித  நிறைகற்களை  வைத்திருக்கவேண்டாம்.  (உபாகமம்  25:13)

un  paiyilea  perithum  si’rithumaana  palavitha  ni’raika’rka'lai  vaiththirukkavea'ndaam.  (ubaagamam  25:13)

உன்  வீட்டில்  பெரிதும்  சிறிதுமான  பலவித  படிகளையும்  வைத்திருக்கவேண்டாம்.  (உபாகமம்  25:14)

un  veettil  perithum  si’rithumaana  palavitha  padiga'laiyum  vaiththirukkavea'ndaam.  (ubaagamam  25:14)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கொடுக்கும்  தேசத்தில்  உன்  நாட்கள்  நீடித்திருக்கும்படி,  குறையற்ற  சுமுத்திரையான  நிறைகல்லும்,  குறையற்ற  சுமுத்திரையான  படியும்  உன்னிடத்தில்  இருக்கவேண்டும்.  (உபாகமம்  25:15)

un  theavanaagiya  karththar  unakkuk  kodukkum  theasaththil  un  naadka'l  neediththirukkumpadi,  ku’raiyat’ra  sumuththiraiyaana  ni’raikallum,  ku’raiyat’ra  sumuththiraiyaana  padiyum  unnidaththil  irukkavea'ndum.  (ubaagamam  25:15)

இவைமுதலான  அநியாயத்தைச்  செய்கிறவன்  எவனும்  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  அருவருப்பானவன்.  (உபாகமம்  25:16)

ivaimuthalaana  aniyaayaththaich  seygi’ravan  evanum  un  theavanaagiya  karththarukku  aruvaruppaanavan.  (ubaagamam  25:16)

எகிப்திலிருந்து  புறப்பட்டு  வருகிற  வழியிலே,  அமலேக்கு  தேவனுக்குப்  பயப்படாமல்  உனக்கு  எதிராக  வந்து,  (உபாகமம்  25:17)

egipthilirunthu  pu’rappattu  varugi’ra  vazhiyilea,  amaleakku  theavanukkup  bayappadaamal  unakku  ethiraaga  vanthu,  (ubaagamam  25:17)

நீ  இளைத்து  விடாய்த்திருக்கையில்,  பின்வருகிற  உன்  பாளயத்திலுள்ள  பலவீனரையெல்லாம்  வெட்டினான்  என்பதை  நினைத்திரு.  (உபாகமம்  25:18)

nee  i'laiththu  vidaayththirukkaiyil,  pinvarugi’ra  un  paa'layaththilu'l'la  balaveenaraiyellaam  vettinaan  enbathai  ninaiththiru.  (ubaagamam  25:18)

உன்  தேவனாகிய  கர்த்தர்  நீ  சுதந்தரித்துக்கொள்ள  உனக்குக்  கொடுக்கும்  தேசத்தின்  சுற்றுப்புறத்தாராகிய  உன்னுடைய  சத்துருக்களையெல்லாம்  உன்  தேவனாகிய  கர்த்தர்  விலக்கி,  உன்னை  இளைப்பாறப்பண்ணும்போது,  நீ  அமலேக்கின்  பேரை  வானத்தின்கீழ்  இராதபடிக்கு  அழியப்பண்ணக்கடவாய்;  இதை  மறக்கவேண்டாம்.  (உபாகமம்  25:19)

un  theavanaagiya  karththar  nee  suthanthariththukko'l'la  unakkuk  kodukkum  theasaththin  sut’ruppu’raththaaraagiya  unnudaiya  saththurukka'laiyellaam  un  theavanaagiya  karththar  vilakki,  unnai  i'laippaa’rappa'n'numpoathu,  nee  amaleakkin  pearai  vaanaththinkeezh  iraathapadikku  azhiyappa'n'nakkadavaay;  ithai  ma’rakkavea'ndaam.  (ubaagamam  25:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!