Tuesday, August 09, 2016

Ubaagamam 24 | உபாகமம் 24 | Deuteronomy 24

ஒருவன்  ஒரு  ஸ்திரீயை  விவாகம்பண்ணிக்கொண்டபின்பு,  அவளிடத்தில்  இலச்சையான  காரியத்தைக்  கண்டு,  அவள்மேல்  பிரியமற்றவனானால்,  அவன்  தள்ளுதலின்  சீட்டை  எழுதி,  அவள்  கையிலே  கொடுத்து,  அவளைத்  தன்  வீட்டிலிருந்து  அனுப்பிவிடலாம்.  (உபாகமம்  24:1)

oruvan  oru  sthireeyai  vivaagampa'n'nikko'ndapinbu,  ava'lidaththil  ilachchaiyaana  kaariyaththaik  ka'ndu,  ava'lmeal  piriyamat’ravanaanaal,  avan  tha'l'luthalin  seettai  ezhuthi,  ava'l  kaiyilea  koduththu,  ava'laith  than  veettilirunthu  anuppividalaam.  (ubaagamam  24:1)

அவள்  அவனுடைய  வீட்டைவிட்டுப்  போனபின்பு,  வேறொருவனுக்கு  மனைவியாகலாம்.  (உபாகமம்  24:2)

ava'l  avanudaiya  veettaivittup  poanapinbu,  vea’roruvanukku  manaiviyaagalaam.  (ubaagamam  24:2)

அந்த  இரண்டாம்  புருஷனும்  அவளை  வெறுத்து,  தள்ளுதலின்  சீட்டை  எழுதி,  அவள்  கையிலே  கொடுத்து,  அவளைத்  தன்  வீட்டிலிருந்து  அனுப்பிவிட்டாலும்,  அவளை  விவாகம்பண்ணின  அந்த  இரண்டாம்  புருஷன்  இறந்துபோனாலும்,  (உபாகமம்  24:3)

antha  ira'ndaam  purushanum  ava'lai  ve’ruththu,  tha'l'luthalin  seettai  ezhuthi,  ava'l  kaiyilea  koduththu,  ava'laith  than  veettilirunthu  anuppivittaalum,  ava'lai  vivaagampa'n'nina  antha  ira'ndaam  purushan  i’ranthupoanaalum,  (ubaagamam  24:3)

அவள்  தீட்டுப்பட்டபடியினால்,  அவளைத்  தள்ளிவிட்ட  அவளுடைய  முந்தின  புருஷன்  திரும்பவும்  அவளை  மனைவியாகச்  சேர்த்துக்கொள்ளக்கூடாது;  அது  கர்த்தருக்கு  முன்பாக  அருவருப்பானது;  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கும்  தேசத்தின்மேல்  பாவம்  வரப்பண்ணாயாக.  (உபாகமம்  24:4)

ava'l  theettuppattapadiyinaal,  ava'laith  tha'l'livitta  ava'ludaiya  munthina  purushan  thirumbavum  ava'lai  manaiviyaagach  searththukko'l'lakkoodaathu;  athu  karththarukku  munbaaga  aruvaruppaanathu;  un  theavanaagiya  karththar  unakkuch  suthantharamaagak  kodukkum  theasaththinmeal  paavam  varappa'n'naayaaga.  (ubaagamam  24:4)

ஒருவன்  ஒரு  பெண்ணைப்  புதிதாய்  விவாகம்பண்ணியிருந்தால்,  அவன்  யுத்தத்திற்குப்  புறப்படவேண்டாம்;  அவன்மேல்  யாதொரு  வேலையும்  சுமத்தவேண்டாம்;  அவன்  ஒரு  வருஷபரியந்தம்  தன்  வீட்டில்  தன்  இஷ்டப்படியிருந்து,  தான்  விவாகம்பண்ணின  ஸ்திரீயைச்  சந்தோஷப்படுத்துவானாக.  (உபாகமம்  24:5)

oruvan  oru  pe'n'naip  puthithaay  vivaagampa'n'niyirunthaal,  avan  yuththaththi’rkup  pu’rappadavea'ndaam;  avanmeal  yaathoru  vealaiyum  sumaththavea'ndaam;  avan  oru  varushapariyantham  than  veettil  than  ishdappadiyirunthu,  thaan  vivaagampa'n'nina  sthireeyaich  santhoashappaduththuvaanaaga.  (ubaagamam  24:5)

திரிகையின்  அடிக்கல்லையாவது  அதின்  மேற்கல்லையாவது  ஒருவரும்  அடகாக  வாங்கக்கூடாது;  அது  ஜீவனை  அடகு  வாங்குவதுபோலாகும்.  (உபாகமம்  24:6)

thirigaiyin  adikkallaiyaavathu  athin  mea’rkallaiyaavathu  oruvarum  adagaaga  vaanggakkoodaathu;  athu  jeevanai  adagu  vaangguvathupoalaagum.  (ubaagamam  24:6)

தன்  சகோதரராகிய  இஸ்ரவேல்  புத்திரரில்  ஒருவனைத்  திருடி,  அதினால்  ஆதாயந்தேடி,  அவனை  விற்றுப்போட்ட  ஒருவன்  அகப்பட்டால்,  அந்தத்  திருடன்  கொலைசெய்யப்படவேண்டும்;  இப்படியே  தீமையை  உன்  நடுவிலிருந்து  விலக்கக்கடவாய்.  (உபாகமம்  24:7)

than  sagoathararaagiya  israveal  puththiraril  oruvanaith  thirudi,  athinaal  aathaayantheadi,  avanai  vit’ruppoatta  oruvan  agappattaal,  anthath  thirudan  kolaiseyyappadavea'ndum;  ippadiyea  theemaiyai  un  naduvilirunthu  vilakkakkadavaay.  (ubaagamam  24:7)

குஷ்டரோகத்தைக்குறித்து  லேவியராகிய  ஆசாரியர்  உங்களுக்குப்  போதிக்கும்  யாவையும்  கவனித்துச்  செய்யும்படி  மிகவும்  எச்சரிக்கையாயிருங்கள்;  நான்  அவர்களுக்குக்  கட்டளையிட்டபடியே  செய்யக்  கவனமாயிருப்பீர்களாக.  (உபாகமம்  24:8)

kushdaroagaththaikku’riththu  leaviyaraagiya  aasaariyar  ungga'lukkup  poathikkum  yaavaiyum  kavaniththuch  seyyumpadi  migavum  echcharikkaiyaayirungga'l;  naan  avarga'lukkuk  katta'laiyittapadiyea  seyyak  kavanamaayiruppeerga'laaga.  (ubaagamam  24:8)

நீங்கள்  எகிப்திலிருந்து  புறப்பட்டு  வருகிற  வழியிலே  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  மிரியாமுக்குச்  செய்ததை  நினைத்துக்கொள்ளுங்கள்.  (உபாகமம்  24:9)

neengga'l  egipthilirunthu  pu’rappattu  varugi’ra  vazhiyilea  ungga'l  theavanaagiya  karththar  miriyaamukkuch  seythathai  ninaiththukko'l'lungga'l.  (ubaagamam  24:9)

பிறனுக்கு  நீ  ஏதாகிலும்  கடனாகக்  கொடுத்தால்,  அவன்  கொடுக்கும்  அடகை  வாங்க  நீ  அவன்  வீட்டிற்குள்  பிரவேசிக்கவேண்டாம்.  (உபாகமம்  24:10)

pi’ranukku  nee  eathaagilum  kadanaagak  koduththaal,  avan  kodukkum  adagai  vaangga  nee  avan  veetti’rku'l  piraveasikkavea'ndaam.  (ubaagamam  24:10)

வெளியே  நிற்பாயாக;  கடன்  வாங்கினவன்  அந்த  அடகை  வெளியே  உன்னிடத்தில்  கொண்டுவருவானாக.  (உபாகமம்  24:11)

ve'liyea  ni’rpaayaaga;  kadan  vaangginavan  antha  adagai  ve'liyea  unnidaththil  ko'nduvaruvaanaaga.  (ubaagamam  24:11)

அவன்  தரித்திரனானால்,  நீ  அவன்  அடகை  வைத்துக்கொண்டு  நித்திரை  செய்யாமல்,  (உபாகமம்  24:12)

avan  thariththiranaanaal,  nee  avan  adagai  vaiththukko'ndu  niththirai  seyyaamal,  (ubaagamam  24:12)

அவன்  தன்  வஸ்திரத்தைப்  போட்டுப்  படுத்துக்கொண்டு  உன்னை  ஆசீர்வதிக்கும்படி,  பொழுதுபோகும்போது,  திரும்ப  அந்த  அடகை  அவனுக்குக்  கொடுத்துவிடவேண்டும்;  அது  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  உனக்கு  நீதியாயிருக்கும்.  (உபாகமம்  24:13)

avan  than  vasthiraththaip  poattup  paduththukko'ndu  unnai  aaseervathikkumpadi,  pozhuthupoagumpoathu,  thirumba  antha  adagai  avanukkuk  koduththuvidavea'ndum;  athu  un  theavanaagiya  karththarukku  munbaaga  unakku  neethiyaayirukkum.  (ubaagamam  24:13)

உன்  சகோதரரிலும்,  உன்  தேசத்தின்  வாசல்களிலுள்ள  அந்நியரிலும்  ஏழையும்  எளிமையுமான  கூலிக்காரனை  ஒடுக்காயாக.  (உபாகமம்  24:14)

un  sagoathararilum,  un  theasaththin  vaasalga'lilu'l'la  anniyarilum  eazhaiyum  e'limaiyumaana  koolikkaaranai  odukkaayaaga.  (ubaagamam  24:14)

அவன்  வேலைசெய்த  நாளில்தானே,  பொழுதுபோகுமுன்னே,  அவன்  கூலியை  அவனுக்குக்  கொடுத்துவிடவேண்டும்;  அவன்  ஏழையும்  அதின்மேல்  ஆவலுமாயிருக்கிறான்;  அதைக்  கொடாவிட்டால்  அவன்  உன்னைக்குறித்துக்  கர்த்தரை  நோக்கி  முறையிடுவான்;  அது  உனக்குப்  பாவமாயிருக்கும்.  (உபாகமம்  24:15)

avan  vealaiseytha  naa'lilthaanea,  pozhuthupoagumunnea,  avan  kooliyai  avanukkuk  koduththuvidavea'ndum;  avan  eazhaiyum  athinmeal  aavalumaayirukki’raan;  athaik  kodaavittaal  avan  unnaikku’riththuk  karththarai  noakki  mu’raiyiduvaan;  athu  unakkup  paavamaayirukkum.  (ubaagamam  24:15)

பிள்ளைகளுக்காகப்  பிதாக்களும்,  பிதாக்களுக்காகப்  பிள்ளைகளும்  கொலைசெய்யப்படவேண்டாம்;  அவனவன்  செய்த  பாவத்தினிமித்தம்  அவனவன்  கொலைசெய்யப்படவேண்டும்.  (உபாகமம்  24:16)

pi'l'laiga'lukkaagap  pithaakka'lum,  pithaakka'lukkaagap  pi'l'laiga'lum  kolaiseyyappadavea'ndaam;  avanavan  seytha  paavaththinimiththam  avanavan  kolaiseyyappadavea'ndum.  (ubaagamam  24:16)

நீ  அந்நியனுடைய  நியாயத்தையும்  திக்கற்ற  பிள்ளையின்  நியாயத்தையும்  புரட்டாமலும்,  விதவையின்  வஸ்திரத்தை  அடகாக  வாங்காமலும்  இருந்து,  (உபாகமம்  24:17)

nee  anniyanudaiya  niyaayaththaiyum  thikkat’ra  pi'l'laiyin  niyaayaththaiyum  purattaamalum,  vithavaiyin  vasthiraththai  adagaaga  vaanggaamalum  irunthu,  (ubaagamam  24:17)

நீ  எகிப்திலே  அடிமையாயிருந்ததையும்,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னை  அங்கேயிருந்து  மீட்டுக்கொண்டுவந்ததையும்  நினைப்பாயாக;  ஆகையால்,  இப்படிச்  செய்யும்படி  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறேன்.  (உபாகமம்  24:18)

nee  egipthilea  adimaiyaayirunthathaiyum,  un  theavanaagiya  karththar  unnai  anggeayirunthu  meettukko'nduvanthathaiyum  ninaippaayaaga;  aagaiyaal,  ippadich  seyyumpadi  naan  unakkuk  katta'laiyidugi’rean.  (ubaagamam  24:18)

நீ  உன்  பயிரை  அறுக்கையில்  உன்  வயலிலே  ஒரு  அரிக்கட்டை  மறதியாய்  வைத்துவந்தாயானால்,  அதை  எடுத்து  வரும்படி  திரும்பிப்  போகவேண்டாம்;  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்  கைப்பிரயாசத்திலெல்லாம்  உன்னை  ஆசீர்வதிக்கும்படி,  அதைப்  பரதேசிக்கும்  திக்கற்ற  பிள்ளைக்கும்  விதவைக்கும்  விட்டுவிடுவாயாக.  (உபாகமம்  24:19)

nee  un  payirai  a’rukkaiyil  un  vayalilea  oru  arikkattai  ma’rathiyaay  vaiththuvanthaayaanaal,  athai  eduththu  varumpadi  thirumbip  poagavea'ndaam;  un  theavanaagiya  karththar  un  kaippirayaasaththilellaam  unnai  aaseervathikkumpadi,  athaip  paratheasikkum  thikkat’ra  pi'l'laikkum  vithavaikkum  vittuviduvaayaaga.  (ubaagamam  24:19)

நீ  உன்  ஒலிவமரத்தை  உதிர்த்துவிட்டபின்பு,  கொம்பிலே  தப்பியிருக்கிறதைப்  பறிக்கும்படி  திரும்பிப்  போகவேண்டாம்;  அதைப்  பரதேசிக்கும்  திக்கற்ற  பிள்ளைக்கும்  விதவைக்கும்  விட்டுவிடுவாயாக;  (உபாகமம்  24:20)

nee  un  olivamaraththai  uthirththuvittapinbu,  kombilea  thappiyirukki’rathaip  pa’rikkumpadi  thirumbip  poagavea'ndaam;  athaip  paratheasikkum  thikkat’ra  pi'l'laikkum  vithavaikkum  vittuviduvaayaaga;  (ubaagamam  24:20)

நீ  உன்  திராட்சப்பழங்களை  அறுத்தபின்பு,  மறுபடியும்  அதை  அறுக்கத்  திரும்பிப்போகவேண்டாம்;  அதைப்  பரதேசிக்கும்  திக்கற்ற  பிள்ளைக்கும்  விதவைக்கும்  விட்டுவிடுவாயாக.  (உபாகமம்  24:21)

nee  un  thiraadchappazhangga'lai  a’ruththapinbu,  ma’rupadiyum  athai  a’rukkath  thirumbippoagavea'ndaam;  athaip  paratheasikkum  thikkat’ra  pi'l'laikkum  vithavaikkum  vittuviduvaayaaga.  (ubaagamam  24:21)

நீ  எகிப்திலே  அடிமையாயிருந்ததை  நினைப்பாயாக;  ஆகையால்,  இப்படிச்  செய்யும்படி  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறேன்.  (உபாகமம்  24:22)

nee  egipthilea  adimaiyaayirunthathai  ninaippaayaaga;  aagaiyaal,  ippadich  seyyumpadi  naan  unakkuk  katta'laiyidugi’rean.  (ubaagamam  24:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!