Tuesday, August 09, 2016

Ubaagamam 22 | உபாகமம் 22 | Deuteronomy 22

உன்  சகோதரனுடைய  மாடாவது  ஆடாவது  வழிதப்பிப்போகிறதைக்  கண்டாயானால்,  அதைக்  காணாதவன்போல்  இராமல்,  அதை  உன்  சகோதரனிடத்துக்குத்  திருப்பிக்கொண்டு  போகக்கடவாய்.  (உபாகமம்  22:1)

un  sagoatharanudaiya  maadaavathu  aadaavathu  vazhithappippoagi’rathaik  ka'ndaayaanaal,  athaik  kaa'naathavanpoal  iraamal,  athai  un  sagoatharanidaththukkuth  thiruppikko'ndu  poagakkadavaay.  (ubaagamam  22:1)

உன்  சகோதரன்  உனக்குச்  சமீபமாயிராமலும்  உனக்கு  அறிமுகமாயிராமலும்  இருந்தால்,  நீ  அதை  உன்  வீட்டிற்குக்  கொண்டுபோய்,  அதை  உன்  சகோதரன்  தேடிவருமட்டும்  உன்னிடத்திலே  வைத்து,  அவனுக்குத்  திரும்பக்  கொடுக்கக்கடவாய்.  (உபாகமம்  22:2)

un  sagoatharan  unakkuch  sameebamaayiraamalum  unakku  a’rimugamaayiraamalum  irunthaal,  nee  athai  un  veetti’rkuk  ko'ndupoay,  athai  un  sagoatharan  theadivarumattum  unnidaththilea  vaiththu,  avanukkuth  thirumbak  kodukkakkadavaay.  (ubaagamam  22:2)

அப்படியே  அவன்  கழுதையைக்  குறித்தும்  செய்யக்கடவாய்;  அவன்  வஸ்திரத்தைக்குறித்தும்  அப்படியே  செய்யக்கடவாய்;  உன்  சகோதரனிடத்திலிருந்து  காணாமற்போனவைகளில்  எதையாகிலும்  கண்டுபிடித்தாயானால்  அப்படியே  செய்யக்கடவாய்;  அவைகளை  நீ  காணாதவன்போல்  விட்டுப்போகலாகாது.  (உபாகமம்  22:3)

appadiyea  avan  kazhuthaiyaik  ku’riththum  seyyakkadavaay;  avan  vasthiraththaikku’riththum  appadiyea  seyyakkadavaay;  un  sagoatharanidaththilirunthu  kaa'naama’rpoanavaiga'lil  ethaiyaagilum  ka'ndupidiththaayaanaal  appadiyea  seyyakkadavaay;  avaiga'lai  nee  kaa'naathavanpoal  vittuppoagalaagaathu.  (ubaagamam  22:3)

உன்  சகோதரனுடைய  கழுதையாவது  அவனுடைய  மாடாவது  வழியிலே  விழுந்துகிடக்கிறதைக்  கண்டாயானால்,  அதைக்  காணாதவன்போல  விட்டுப்போகாமல்,  அவனோடேகூட  அதைத்  தூக்கியெடுத்துவிடுவாயாக.  (உபாகமம்  22:4)

un  sagoatharanudaiya  kazhuthaiyaavathu  avanudaiya  maadaavathu  vazhiyilea  vizhunthukidakki’rathaik  ka'ndaayaanaal,  athaik  kaa'naathavanpoala  vittuppoagaamal,  avanoadeakooda  athaith  thookkiyeduththuviduvaayaaga.  (ubaagamam  22:4)

புருஷரின்  உடைகளை  ஸ்திரீகள்  தரிக்கலாகாது,  ஸ்திரீகளின்  உடைகளைப்  புருஷர்  தரிக்கலாகாது;  அப்படிச்  செய்கிறவர்கள்  எல்லாரும்  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  அருவருப்பானவர்கள்.  (உபாகமம்  22:5)

purusharin  udaiga'lai  sthireega'l  tharikkalaagaathu,  sthireega'lin  udaiga'laip  purushar  tharikkalaagaathu;  appadich  seygi’ravarga'l  ellaarum  un  theavanaagiya  karththarukku  aruvaruppaanavarga'l.  (ubaagamam  22:5)

வழியருகே  ஒரு  மரத்திலாவது  தரையிலாவது  குஞ்சுகளாயினும்  முட்டைகளாயினுமுள்ள  ஒரு  குருவிக்கூடு  உனக்குத்  தென்படும்போது,  தாயானது  குஞ்சுகளின்மேலாவது  முட்டைகளின்மேலாவது  அடைகாத்துக்கொண்டிருந்தால்,  நீ  குஞ்சுகளோடே  தாயையும்  பிடிக்கலாகாது.  (உபாகமம்  22:6)

vazhiyarugea  oru  maraththilaavathu  tharaiyilaavathu  kugnchuga'laayinum  muttaiga'laayinumu'l'la  oru  kuruvikkoodu  unakkuth  thenpadumpoathu,  thaayaanathu  kugnchuga'linmealaavathu  muttaiga'linmealaavathu  adaikaaththukko'ndirunthaal,  nee  kugnchuga'loadea  thaayaiyum  pidikkalaagaathu.  (ubaagamam  22:6)

தாயைப்  போகவிட்டு,  குஞ்சுகளை  மாத்திரம்  எடுத்துக்கொள்ளலாம்;  அப்பொழுது  நீ  நன்றாயிருப்பாய்;  உன்  நாட்களும்  நீடித்திருக்கும்.  (உபாகமம்  22:7)

thaayaip  poagavittu,  kugnchuga'lai  maaththiram  eduththukko'l'lalaam;  appozhuthu  nee  nan’raayiruppaay;  un  naadka'lum  neediththirukkum.  (ubaagamam  22:7)

நீ  புதுவீட்டைக்  கட்டினால்,  ஒருவன்  உன்  மெத்தையிலிருந்து  விழுகிறதினாலே,  நீ  இரத்தப்பழியை  உன்  வீட்டின்மேல்  சுமத்திக்கொள்ளாதபடிக்கு,  அதற்குக்  கைப்பிடிசுவரைக்  கட்டவேண்டும்.  (உபாகமம்  22:8)

nee  puthuveettaik  kattinaal,  oruvan  un  meththaiyilirunthu  vizhugi’rathinaalea,  nee  iraththappazhiyai  un  veettinmeal  sumaththikko'l'laathapadikku,  atha’rkuk  kaippidisuvaraik  kattavea'ndum.  (ubaagamam  22:8)

உன்  திராட்சத்தோட்டத்திலே  பற்பலவிதமான  விதையை  விதைக்காயாக;  இப்படிச்  செய்தால்  நீ  விதைத்தவைகளின்  பயிரையும்,  திராட்சத்தோட்டத்தின்  பலனையும்  தீட்டுப்படுத்துவாய்.  (உபாகமம்  22:9)

un  thiraadchaththoattaththilea  pa’rpalavithamaana  vithaiyai  vithaikkaayaaga;  ippadich  seythaal  nee  vithaiththavaiga'lin  payiraiyum,  thiraadchaththoattaththin  palanaiyum  theettuppaduththuvaay.  (ubaagamam  22:9)

மாட்டையும்  கழுதையையும்  பிணைத்து  உழாதிருப்பாயாக.  (உபாகமம்  22:10)

maattaiyum  kazhuthaiyaiyum  pi'naiththu  uzhaathiruppaayaaga.  (ubaagamam  22:10)

ஆட்டுமயிரும்  பஞ்சுநூலும்  கலந்த  வஸ்திரத்தை  உடுத்திக்கொள்ளாயாக.  (உபாகமம்  22:11)

aattumayirum  pagnchunoolum  kalantha  vasthiraththai  uduththikko'l'laayaaga.  (ubaagamam  22:11)

நீ  தரித்துக்கொள்ளுகிற  உன்  மேல்சட்டையின்  நான்கு  ஓரங்களிலும்  தொங்கல்களை  உண்டுபண்ணுவாயாக.  (உபாகமம்  22:12)

nee  thariththukko'l'lugi’ra  un  mealsattaiyin  naangu  oarangga'lilum  thonggalga'lai  u'ndupa'n'nuvaayaaga.  (ubaagamam  22:12)

ஒரு  ஸ்திரீயை  விவாகம்பண்ணின  ஒருவன்  அவளிடத்தில்  பிரவேசித்தபின்பு  அவளை  வெறுத்து:  (உபாகமம்  22:13)

oru  sthireeyai  vivaagampa'n'nina  oruvan  ava'lidaththil  piraveasiththapinbu  ava'lai  ve’ruththu:  (ubaagamam  22:13)

நான்  இந்த  ஸ்திரீயை  விவாகம்பண்ணி,  அவளிடத்தில்  சேர்ந்தபோது  கன்னிமையைக்  காணவில்லை  என்று  அவள்மேல்  ஆவலாதியான  விசேஷங்களைச்  சாற்றி,  அவளுக்கு  அவதூறு  உண்டாக்கினால்;  (உபாகமம்  22:14)

naan  intha  sthireeyai  vivaagampa'n'ni,  ava'lidaththil  searnthapoathu  kannimaiyaik  kaa'navillai  en’ru  ava'lmeal  aavalaathiyaana  viseashangga'laich  saat’ri,  ava'lukku  avathoo’ru  u'ndaakkinaal;  (ubaagamam  22:14)

அந்த  ஸ்திரீயின்  தகப்பனும்  அவள்  தாயும்  அவளுடைய  கன்னிமையின்  அடையாளத்தைப்  பட்டணத்து  வாசலிலுள்ள  மூப்பரிடத்தில்  கொண்டுவரக்கடவர்கள்.  (உபாகமம்  22:15)

antha  sthireeyin  thagappanum  ava'l  thaayum  ava'ludaiya  kannimaiyin  adaiyaa'laththaip  patta'naththu  vaasalilu'l'la  moopparidaththil  ko'nduvarakkadavarga'l.  (ubaagamam  22:15)

அங்கே  அந்தப்  பெண்ணின்  தகப்பன்:  என்  மகளை  இந்த  மனிதனுக்கு  மனைவியாகக்  கொடுத்தேன்,  இவன்  அவளை  வெறுத்து,  (உபாகமம்  22:16)

anggea  anthap  pe'n'nin  thagappan:  en  maga'lai  intha  manithanukku  manaiviyaagak  koduththean,  ivan  ava'lai  ve’ruththu,  (ubaagamam  22:16)

நான்  உன்  மகளிடத்தில்  கன்னிமையைக்  காணவில்லையென்று  ஆவலாதியான  விசேஷங்களை  அவள்மேல்  சாற்றுகிறான்;  என்  மகளுடைய  கன்னிமையின்  அடையாளம்  இங்கே  இருக்கிறது  என்று  மூப்பரிடத்தில்  சொல்வானாக;  பின்பு  பட்டணத்து  மூப்பருக்கு  முன்பாக  அந்த  வஸ்திரத்தை  விரிக்கக்கடவர்கள்.  (உபாகமம்  22:17)

naan  un  maga'lidaththil  kannimaiyaik  kaa'navillaiyen’ru  aavalaathiyaana  viseashangga'lai  ava'lmeal  saat’rugi’raan;  en  maga'ludaiya  kannimaiyin  adaiyaa'lam  inggea  irukki’rathu  en’ru  moopparidaththil  solvaanaaga;  pinbu  patta'naththu  moopparukku  munbaaga  antha  vasthiraththai  virikkakkadavarga'l.  (ubaagamam  22:17)

அப்பொழுது  அந்தப்  பட்டணத்து  மூப்பர்  அந்த  மனிதனைப்  பிடித்து,  அவனைத்  தண்டித்து,  (உபாகமம்  22:18)

appozhuthu  anthap  patta'naththu  mooppar  antha  manithanaip  pidiththu,  avanaith  tha'ndiththu,  (ubaagamam  22:18)

அவன்  இஸ்ரவேலில்  ஒரு  கன்னியை  அவதூறுபண்ணினதினாலே,  அவன்  கையில்  நூறு  வெள்ளிக்காசை  அபராதமாக  வாங்கி,  பெண்ணின்  தகப்பனுக்குக்  கொடுக்கக்கடவர்கள்;  அவளோ  அவனுக்கு  மனைவியாயிருக்கவேண்டும்;  அவன்  தன்  ஜீவனுள்ளளவும்  அவளைத்  தள்ளிவிடக்கூடாது.  (உபாகமம்  22:19)

avan  isravealil  oru  kanniyai  avathoo’rupa'n'ninathinaalea,  avan  kaiyil  noo’ru  ve'l'likkaasai  abaraathamaaga  vaanggi,  pe'n'nin  thagappanukkuk  kodukkakkadavarga'l;  ava'loa  avanukku  manaiviyaayirukkavea'ndum;  avan  than  jeevanu'l'la'lavum  ava'laith  tha'l'lividakkoodaathu.  (ubaagamam  22:19)

அந்தப்  பெண்ணிடத்தில்  கன்னிமை  காணப்படவில்லையென்னும்  சங்கதி  மெய்ப்பட்டதேயானால்,  (உபாகமம்  22:20)

anthap  pe'n'nidaththil  kannimai  kaa'nappadavillaiyennum  sanggathi  meyppattatheayaanaal,  (ubaagamam  22:20)

அந்தப்  பெண்ணை  அவள்  தகப்பனுடைய  வீட்டுவாசலுக்கு  முன்பாகக்  கொண்டுவந்து,  அவள்  இஸ்ரவேலில்  மதிகெட்ட  காரியத்தைச்  செய்து,  தன்  தகப்பன்  வீட்டிலே  வேசித்தனம்பண்ணினபடியினாலே,  அவளுடைய  பட்டணத்து  மனிதர்  அவளைக்  கல்லெறிந்து  கொல்லக்கடவர்கள்;  இப்படியே  தீமையை  உன்  நடுவிலிருந்து  விலக்கக்கடவாய்.  (உபாகமம்  22:21)

anthap  pe'n'nai  ava'l  thagappanudaiya  veettuvaasalukku  munbaagak  ko'nduvanthu,  ava'l  isravealil  mathiketta  kaariyaththaich  seythu,  than  thagappan  veettilea  veasiththanampa'n'ninapadiyinaalea,  ava'ludaiya  patta'naththu  manithar  ava'laik  kalle’rinthu  kollakkadavarga'l;  ippadiyea  theemaiyai  un  naduvilirunthu  vilakkakkadavaay.  (ubaagamam  22:21)

புருஷனுக்கு  விவாகம்பண்ணப்பட்ட  ஸ்திரீயோடே  ஒருவன்  சயனிக்கக்  கண்டுபிடிக்கப்பட்டால்,  அந்த  ஸ்திரீயோடே  சயனித்த  மனிதனும்  அந்த  ஸ்திரீயும்  இருவரும்  சாகவேண்டும்;  இப்படியே  தீமையை  இஸ்ரவேலிலிருந்து  விலக்கக்கடவாய்.  (உபாகமம்  22:22)

purushanukku  vivaagampa'n'nappatta  sthireeyoadea  oruvan  sayanikkak  ka'ndupidikkappattaal,  antha  sthireeyoadea  sayaniththa  manithanum  antha  sthireeyum  iruvarum  saagavea'ndum;  ippadiyea  theemaiyai  isravealilirunthu  vilakkakkadavaay.  (ubaagamam  22:22)

கன்னிகையான  ஒரு  பெண்  ஒருவனுக்கு  நியமிக்கப்பட்டிருக்கையில்,  மற்றொருவன்  அவளை  ஊருக்குள்ளே  கண்டு,  அவளோடே  சயனித்தால்,  (உபாகமம்  22:23)

kannigaiyaana  oru  pe'n  oruvanukku  niyamikkappattirukkaiyil,  mat’roruvan  ava'lai  oorukku'l'lea  ka'ndu,  ava'loadea  sayaniththaal,  (ubaagamam  22:23)

அப்பொழுது  அந்தப்  பெண்  ஊருக்குள்ளிருந்தும்  கூக்குரலிடாததினாலும்,  அந்த  மனிதன்  பிறனுடைய  மனைவியைக்  கற்பழித்தபடியினாலும்,  இருவரையும்  அந்தப்  பட்டணத்து  வாசலுக்குமுன்  கொண்டுபோய்,  அவர்கள்மேல்  கல்லெறிந்து  கொல்லக்கடவீர்கள்;  இப்படியே  தீமையை  உன்  நடுவிலிருந்து  விலக்கக்கடவாய்.  (உபாகமம்  22:24)

appozhuthu  anthap  pe'n  oorukku'l'lirunthum  kookkuralidaathathinaalum,  antha  manithan  pi’ranudaiya  manaiviyaik  ka’rpazhiththapadiyinaalum,  iruvaraiyum  anthap  patta'naththu  vaasalukkumun  ko'ndupoay,  avarga'lmeal  kalle’rinthu  kollakkadaveerga'l;  ippadiyea  theemaiyai  un  naduvilirunthu  vilakkakkadavaay.  (ubaagamam  22:24)

ஒருவனுக்கு  நியமிக்கப்பட்ட  பெண்ணை  வெளியிலே  ஒருவன்  கண்டு,  அவளைப்  பலவந்தமாய்ப்  பிடித்து,  அவளோடே  சயனித்தானேயாகில்,  அவளோடே  சயனித்த  மனிதன்  மாத்திரம்  சாகக்கடவன்.  (உபாகமம்  22:25)

oruvanukku  niyamikkappatta  pe'n'nai  ve'liyilea  oruvan  ka'ndu,  ava'laip  balavanthamaayp  pidiththu,  ava'loadea  sayaniththaaneayaagil,  ava'loadea  sayaniththa  manithan  maaththiram  saagakkadavan.  (ubaagamam  22:25)

பெண்ணுக்கு  ஒன்றும்  செய்யலாகாது;  பெண்ணின்மேல்  சாவுக்கு  ஏதுவான  குற்றம்  இல்லை;  இக்காரியம்  ஒருவன்  மற்றொருவன்மேல்  எழும்பி  அவனுடைய  ஜீவனை  வாங்கினதுபோல  இருக்கிறது.  (உபாகமம்  22:26)

pe'n'nukku  on’rum  seyyalaagaathu;  pe'n'ninmeal  saavukku  eathuvaana  kut’ram  illai;  ikkaariyam  oruvan  mat’roruvanmeal  ezhumbi  avanudaiya  jeevanai  vaangginathupoala  irukki’rathu.  (ubaagamam  22:26)

வெளியிலே  அவன்  அவளைக்  கண்டுபிடித்தான்;  நியமிக்கப்பட்ட  பெண்  அப்பொழுது  கூக்குரலிட்டும்  அவளைக்  காப்பாற்றுவார்  இல்லாமற்போயிற்று.  (உபாகமம்  22:27)

ve'liyilea  avan  ava'laik  ka'ndupidiththaan;  niyamikkappatta  pe'n  appozhuthu  kookkuralittum  ava'laik  kaappaat’ruvaar  illaama’rpoayit’ru.  (ubaagamam  22:27)

நியமிக்கப்படாத  கன்னியாஸ்திரீயாகிய  ஒரு  பெண்ணை  ஒருவன்  கண்டு,  கையைப்  பிடித்து  அவளோடே  சயனிக்கையில்,  அவர்கள்  கண்டுபிடிக்கப்பட்டால்,  (உபாகமம்  22:28)

niyamikkappadaatha  kanniyaasthireeyaagiya  oru  pe'n'nai  oruvan  ka'ndu,  kaiyaip  pidiththu  ava'loadea  sayanikkaiyil,  avarga'l  ka'ndupidikkappattaal,  (ubaagamam  22:28)

அவளோடே  சயனித்த  மனிதன்  பெண்ணின்  தகப்பனுக்கு  ஐம்பது  வெள்ளிக்காசைக்  கொடுக்கக்கடவன்;  அவன்  அவளைக்  கற்பழித்தபடியினால்,  அவள்  அவனுக்கு  மனைவியாயிருக்கவேண்டும்;  அவன்  உயிரோடிருக்குமளவும்  அவளைத்  தள்ளிவிடக்கூடாது.  (உபாகமம்  22:29)

ava'loadea  sayaniththa  manithan  pe'n'nin  thagappanukku  aimbathu  ve'l'likkaasaik  kodukkakkadavan;  avan  ava'laik  ka’rpazhiththapadiyinaal,  ava'l  avanukku  manaiviyaayirukkavea'ndum;  avan  uyiroadirukkuma'lavum  ava'laith  tha'l'lividakkoodaathu.  (ubaagamam  22:29)

ஒருவனும்  தன்  தகப்பனுடைய  மனைவியைச்  சேரலாகாது;  தன்  தகப்பன்  மானத்தை  அவன்  வெளிப்படுத்தலாகாது.  (உபாகமம்  22:30)

oruvanum  than  thagappanudaiya  manaiviyaich  searalaagaathu;  than  thagappan  maanaththai  avan  ve'lippaduththalaagaathu.  (ubaagamam  22:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!