Tuesday, August 09, 2016

Ubaagamam 21 | உபாகமம் 21 | Deuteronomy 21

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரிக்கக்  கொடுக்கும்  தேசத்தில்,  கொலைசெய்யப்பட்டுக்  கிடக்கிற  ஒருவனை  வெளியிலே  கண்டு,  அவனைக்  கொன்றவன்  இன்னான்  என்று  தெரியாதிருந்தால்,  (உபாகமம்  21:1)

un  theavanaagiya  karththar  unakkuch  suthantharikkak  kodukkum  theasaththil,  kolaiseyyappattuk  kidakki’ra  oruvanai  ve'liyilea  ka'ndu,  avanaik  kon’ravan  innaan  en’ru  theriyaathirunthaal,  (ubaagamam  21:1)

உன்  மூப்பரும்  உன்  நியாயாதிபதிகளும்  புறப்பட்டுப்போய்,  கொலைசெய்யப்பட்டவனைச்  சுற்றிலும்  இருக்கும்  பட்டணங்கள்மட்டும்  அளப்பார்களாக.  (உபாகமம்  21:2)

un  moopparum  un  niyaayaathibathiga'lum  pu’rappattuppoay,  kolaiseyyappattavanaich  sut’rilum  irukkum  patta'nangga'lmattum  a'lappaarga'laaga.  (ubaagamam  21:2)

கொலைசெய்யப்பட்டவனுக்குச்  சமீபமான  பட்டணத்து  மூப்பர்,  வேலையில்  பண்படாததும்  நுகத்தடியில்  பிணைக்கப்படாததுமான  ஒரு  கிடாரியைப்  பிடித்து,  (உபாகமம்  21:3)

kolaiseyyappattavanukkuch  sameebamaana  patta'naththu  mooppar,  vealaiyil  pa'npadaathathum  nugaththadiyil  pi'naikkappadaathathumaana  oru  kidaariyaip  pidiththu,  (ubaagamam  21:3)

உழுது  விதையாத  தரிசான  பள்ளத்தாக்கிலே  அதைக்  கொண்டுபோய்,  அந்தப்  பள்ளத்தாக்கிலே  அதின்  தலையை  வெட்டிப்போடக்கடவர்கள்.  (உபாகமம்  21:4)

uzhuthu  vithaiyaatha  tharisaana  pa'l'laththaakkilea  athaik  ko'ndupoay,  anthap  pa'l'laththaakkilea  athin  thalaiyai  vettippoadakkadavarga'l.  (ubaagamam  21:4)

உன்  தேவனாகிய  கர்த்தர்  தமக்கு  ஆராதனை  செய்யவும்  கர்த்தருடைய  நாமத்திலே  ஆசீர்வதிக்கவும்  லேவியின்  குமாரராகிய  ஆசாரியரைத்  தெரிந்துகொண்டபடியால்,  அவர்களும்  அத்தருணத்தில்  வந்திருக்கவேண்டும்;  அவர்கள்  வாக்கின்படியே  சகல  வழக்கும்  சகல  காயச்சேதமும்  தீர்க்கப்படவேண்டும்.  (உபாகமம்  21:5)

un  theavanaagiya  karththar  thamakku  aaraathanai  seyyavum  karththarudaiya  naamaththilea  aaseervathikkavum  leaviyin  kumaararaagiya  aasaariyaraith  therinthuko'ndapadiyaal,  avarga'lum  aththaru'naththil  vanthirukkavea'ndum;  avarga'l  vaakkinpadiyea  sagala  vazhakkum  sagala  kaayachseathamum  theerkkappadavea'ndum.  (ubaagamam  21:5)

கொலைசெய்யப்பட்டவனுக்குச்  சமீபமான  பட்டணத்தின்  மூப்பர்  எல்லாரும்  பள்ளத்தாக்கிலே  தலை  வெட்டப்பட்ட  கிடாரியின்மேல்  தங்கள்  கைகளைக்  கழுவி:  (உபாகமம்  21:6)

kolaiseyyappattavanukkuch  sameebamaana  patta'naththin  mooppar  ellaarum  pa'l'laththaakkilea  thalai  vettappatta  kidaariyinmeal  thangga'l  kaiga'laik  kazhuvi:  (ubaagamam  21:6)

எங்கள்  கைகள்  அந்த  இரத்தத்தைச்  சிந்தினதும்  இல்லை,  எங்கள்  கண்கள்  அதைக்  கண்டதும்  இல்லை;  (உபாகமம்  21:7)

engga'l  kaiga'l  antha  iraththaththaich  sinthinathum  illai,  engga'l  ka'nga'l  athaik  ka'ndathum  illai;  (ubaagamam  21:7)

கர்த்தாவே,  நீர்  மீட்டுக்கொண்ட  உமது  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்  குற்றமில்லாத  இரத்தப்பழியைச்  சுமத்தாமல்,  உமது  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்  கிருபையுள்ளவராயிரும்  என்று  சொல்வார்களாக;  அப்பொழுது  இரத்தப்பழி  அவர்களுக்கு  நிவிர்த்தியாகும்.  (உபாகமம்  21:8)

karththaavea,  neer  meettukko'nda  umathu  janamaagiya  isravealinmeal  kut’ramillaatha  iraththappazhiyaich  sumaththaamal,  umathu  janamaagiya  isravealinmeal  kirubaiyu'l'lavaraayirum  en’ru  solvaarga'laaga;  appozhuthu  iraththappazhi  avarga'lukku  nivirththiyaagum.  (ubaagamam  21:8)

இப்படிக்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதை  நீ  செய்வாயாகில்,  குற்றமில்லாத  இரத்தப்பழியை  உன்  நடுவிலிருந்து  விலக்கிப்போடுவாய்.  (உபாகமம்  21:9)

ippadik  karththarin  paarvaikkuch  semmaiyaanathai  nee  seyvaayaagil,  kut’ramillaatha  iraththappazhiyai  un  naduvilirunthu  vilakkippoaduvaay.  (ubaagamam  21:9)

நீ  உன்  சத்துருக்களுக்கு  எதிராக  யுத்தத்திற்குப்  புறப்பட்டு,  உன்  தேவனாகிய  கர்த்தர்  அவர்களை  உன்  கையில்  ஒப்புக்கொடுக்கிறதினால்,  அவர்களைச்  சிறைபிடித்துவந்து,  (உபாகமம்  21:10)

nee  un  saththurukka'lukku  ethiraaga  yuththaththi’rkup  pu’rappattu,  un  theavanaagiya  karththar  avarga'lai  un  kaiyil  oppukkodukki’rathinaal,  avarga'laich  si’raipidiththuvanthu,  (ubaagamam  21:10)

சிறைகளில்  ரூபவதியான  ஒரு  ஸ்திரீயைக்கண்டு,  அவளை  விவாகம்பண்ண  விரும்பி,  (உபாகமம்  21:11)

si’raiga'lil  roobavathiyaana  oru  sthireeyaikka'ndu,  ava'lai  vivaagampa'n'na  virumbi,  (ubaagamam  21:11)

அவளை  உன்  வீட்டிற்குள்  அழைத்துக்கொண்டுபோவாயானால்,  அவள்  தன்  தலையைச்  சிரைத்து,  தன்  நகங்களைக்  களைந்து,  (உபாகமம்  21:12)

ava'lai  un  veetti’rku'l  azhaiththukko'ndupoavaayaanaal,  ava'l  than  thalaiyaich  siraiththu,  than  nagangga'laik  ka'lainthu,  (ubaagamam  21:12)

தன்  சிறையிருப்பின்  வஸ்திரத்தையும்  நீக்கி,  உன்  வீட்டிலிருந்து,  ஒரு  மாதமட்டும்  தன்  தகப்பனையும்  தாயையும்  நினைத்துத்  துக்கங்கொண்டாடக்கடவள்;  அதன்பின்பு  நீ  அவளோடே  சேர்ந்து,  அவளுக்குப்  புருஷனாயிரு,  அவள்  உனக்கு  மனைவியாயிருப்பாள்.  (உபாகமம்  21:13)

than  si’raiyiruppin  vasthiraththaiyum  neekki,  un  veettilirunthu,  oru  maathamattum  than  thagappanaiyum  thaayaiyum  ninaiththuth  thukkangko'ndaadakkadava'l;  athanpinbu  nee  ava'loadea  searnthu,  ava'lukkup  purushanaayiru,  ava'l  unakku  manaiviyaayiruppaa'l.  (ubaagamam  21:13)

அவள்மேல்  உனக்குப்  பிரியமில்லாமற்போனால்,  நீ  அவளைப்  பணத்திற்கு  விற்காமல்,  அவளைத்  தன்  இஷ்டப்படி  போகவிடலாம்;  நீ  அவளைத்  தாழ்மைப்படுத்தினபடியினால்  அவளாலே  ஆதாயம்  பெறும்படி  தேடவேண்டாம்.  (உபாகமம்  21:14)

ava'lmeal  unakkup  piriyamillaama’rpoanaal,  nee  ava'laip  pa'naththi’rku  vi’rkaamal,  ava'laith  than  ishdappadi  poagavidalaam;  nee  ava'laith  thaazhmaippaduththinapadiyinaal  ava'laalea  aathaayam  pe’rumpadi  theadavea'ndaam.  (ubaagamam  21:14)

இரண்டு  மனைவிகளையுடைய  ஒருவன்,  ஒருத்தியின்மேல்  விருப்பாயும்  மற்றவள்மேல்  வெறுப்பாயும்  இருக்க,  இருவரும்  அவனுக்குப்  பிள்ளைகளைப்  பெற்றார்களேயாகில்,  முதற்பிறந்தவன்  வெறுக்கப்பட்டவளின்  புத்திரனானாலும்,  (உபாகமம்  21:15)

ira'ndu  manaiviga'laiyudaiya  oruvan,  oruththiyinmeal  viruppaayum  mat’rava'lmeal  ve’ruppaayum  irukka,  iruvarum  avanukkup  pi'l'laiga'laip  pet’raarga'leayaagil,  mutha’rpi’ranthavan  ve’rukkappattava'lin  puththiranaanaalum,  (ubaagamam  21:15)

தகப்பன்  தனக்கு  உண்டான  ஆஸ்தியைத்  தன்  பிள்ளைகளுக்குப்  பங்கிடும்  நாளில்,  வெறுக்கப்பட்டவளிடத்தில்  பிறந்த  முதற்பேறானவனுக்கு  சேஷ்டபுத்திர  சுதந்தரத்தைக்  கொடுக்கவேண்டுமேயல்லாமல்,  விரும்பப்பட்டவளிடத்தில்  பிறந்தவனுக்குக்  கொடுக்கலாகாது.  (உபாகமம்  21:16)

thagappan  thanakku  u'ndaana  aasthiyaith  than  pi'l'laiga'lukkup  panggidum  naa'lil,  ve’rukkappattava'lidaththil  pi’rantha  mutha’rpea’raanavanukku  seashdapuththira  suthantharaththaik  kodukkavea'ndumeayallaamal,  virumbappattava'lidaththil  pi’ranthavanukkuk  kodukkalaagaathu.  (ubaagamam  21:16)

வெறுக்கப்பட்டவளிடத்தில்  பிறந்தவனை  சேஷ்டபுத்திரனாக  அங்கிகரித்து,  தனக்கு  உண்டான  ஆஸ்திகளிலெல்லாம்  இரண்டு  பங்கை  அவனுக்குக்  கொடுக்கவேண்டும்;  அவன்  தன்  தகப்பனுடைய  முதற்பலன்,  சேஷ்டபுத்திர  சுதந்தரம்  அவனுக்கே  உரியது.  (உபாகமம்  21:17)

ve’rukkappattava'lidaththil  pi’ranthavanai  seashdapuththiranaaga  anggigariththu,  thanakku  u'ndaana  aasthiga'lilellaam  ira'ndu  panggai  avanukkuk  kodukkavea'ndum;  avan  than  thagappanudaiya  mutha’rpalan,  seashdapuththira  suthantharam  avanukkea  uriyathu.  (ubaagamam  21:17)

தன்  தகப்பன்  சொல்லையும்  தன்  தாயின்  சொல்லையும்  கேளாமலும்,  அவர்களால்  தண்டிக்கப்பட்டும்,  அவர்களுக்குக்  கீழ்ப்படியாமலும்  போகிற  அடங்காத  துஷ்டப்பிள்ளை  ஒருவனுக்கு  இருந்தால்,  (உபாகமம்  21:18)

than  thagappan  sollaiyum  than  thaayin  sollaiyum  kea'laamalum,  avarga'laal  tha'ndikkappattum,  avarga'lukkuk  keezhppadiyaamalum  poagi’ra  adanggaatha  thushdappi'l'lai  oruvanukku  irunthaal,  (ubaagamam  21:18)

அவன்  தகப்பனும்  அவன்  தாயும்  அவனைப்  பிடித்து,  அவன்  இருக்கும்  பட்டணத்தின்  மூப்பரிடத்துக்கும்  அவ்விடத்து  வாசலுக்கும்  அவனைக்  கொண்டுபோய்:  (உபாகமம்  21:19)

avan  thagappanum  avan  thaayum  avanaip  pidiththu,  avan  irukkum  patta'naththin  moopparidaththukkum  avvidaththu  vaasalukkum  avanaik  ko'ndupoay:  (ubaagamam  21:19)

எங்கள்  மகனாகிய  இவன்  அடங்காத  துஷ்டனாயிருக்கிறான்;  எங்கள்  சொல்லைக்  கேளான்;  பெருந்தீனிக்காரனும்  குடியனுமாயிருக்கிறான்  என்று  பட்டணத்தின்  மூப்பரோடே  சொல்லுவார்களாக.  (உபாகமம்  21:20)

engga'l  maganaagiya  ivan  adanggaatha  thushdanaayirukki’raan;  engga'l  sollaik  kea'laan;  peruntheenikkaaranum  kudiyanumaayirukki’raan  en’ru  patta'naththin  moopparoadea  solluvaarga'laaga.  (ubaagamam  21:20)

அப்பொழுது  அவன்  சாகும்படி  அந்தப்  பட்டணத்து  மனிதரெல்லாரும்  அவன்மேல்  கல்லெறியக்கடவர்கள்;  இப்படியே  தீமையை  உன்  நடுவிலிருந்து  விலக்கிப்போடவேண்டும்;  இஸ்ரவேலர்  எல்லாரும்  அதைக்  கேட்டுப்  பயப்படுவார்கள்.  (உபாகமம்  21:21)

appozhuthu  avan  saagumpadi  anthap  patta'naththu  manitharellaarum  avanmeal  kalle’riyakkadavarga'l;  ippadiyea  theemaiyai  un  naduvilirunthu  vilakkippoadavea'ndum;  isravealar  ellaarum  athaik  keattup  bayappaduvaarga'l.  (ubaagamam  21:21)

கொலைசெய்யப்பட  ஒருவன்மேல்  சாவுக்குப்  பாத்திரமான  பாவம்  உண்டாயிருக்க,  அவனைக்  கொலைசெய்யும்படி  மரத்திலே  தூக்கிப்போடுவாயானால்,  (உபாகமம்  21:22)

kolaiseyyappada  oruvanmeal  saavukkup  paaththiramaana  paavam  u'ndaayirukka,  avanaik  kolaiseyyumpadi  maraththilea  thookkippoaduvaayaanaal,  (ubaagamam  21:22)

இரவிலே  அவன்  பிரேதம்  மரத்திலே  தொங்கலாகாது;  அந்நாளிலேதானே  அதை  அடக்கம்பண்ணவேண்டும்;  தூக்கிப்போடப்பட்டவன்  தேவனால்  சபிக்கப்பட்டவன்;  ஆகையால்  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கும்  உன்  தேசத்தைத்  தீட்டுப்படுத்தாயாக.  (உபாகமம்  21:23)

iravilea  avan  pireatham  maraththilea  thonggalaagaathu;  annaa'lileathaanea  athai  adakkampa'n'navea'ndum;  thookkippoadappattavan  theavanaal  sabikkappattavan;  aagaiyaal  un  theavanaagiya  karththar  unakkuch  suthantharamaagak  kodukkum  un  theasaththaith  theettuppaduththaayaaga.  (ubaagamam  21:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!