Tuesday, August 09, 2016

Ubaagamam 20 | உபாகமம் 20 | Deuteronomy 20

நீ  உன்  சத்துருக்களுக்கு  எதிராக  யுத்தஞ்செய்யப்  புறப்பட்டுப்  போகையில்,  குதிரைகளையும்  இரதங்களையும்,  உன்னிலும்  பெரிய  கூட்டமாகிய  ஜனங்களையும்  கண்டால்,  அவர்களுக்குப்  பயப்படாயாக;  உன்னை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னோடே  இருக்கிறார்.  (உபாகமம்  20:1)

nee  un  saththurukka'lukku  ethiraaga  yuththagnseyyap  pu’rappattup  poagaiyil,  kuthiraiga'laiyum  irathangga'laiyum,  unnilum  periya  koottamaagiya  janangga'laiyum  ka'ndaal,  avarga'lukkup  bayappadaayaaga;  unnai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'nina  un  theavanaagiya  karththar  unnoadea  irukki’raar.  (ubaagamam  20:1)

நீங்கள்  யுத்தஞ்செய்யத்  தொடங்கும்போது,  ஆசாரியன்  சேர்ந்துவந்து,  ஜனங்களிடத்தில்  பேசி:  (உபாகமம்  20:2)

neengga'l  yuththagnseyyath  thodanggumpoathu,  aasaariyan  searnthuvanthu,  janangga'lidaththil  peasi:  (ubaagamam  20:2)

இஸ்ரவேலரே,  கேளுங்கள்;  இன்று  உங்கள்  சத்துருக்களுடன்  யுத்தஞ்செய்யப்  போகிறீர்கள்;  உங்கள்  இருதயம்  துவளவேண்டாம்;  நீங்கள்  அவர்களைப்  பார்த்துப்  பயப்படவும்  கலங்கவும்  தத்தளிக்கவும்  வேண்டாம்.  (உபாகமம்  20:3)

isravealarea,  kea'lungga'l;  in’ru  ungga'l  saththurukka'ludan  yuththagnseyyap  poagi’reerga'l;  ungga'l  iruthayam  thuva'lavea'ndaam;  neengga'l  avarga'laip  paarththup  bayappadavum  kalanggavum  thaththa'likkavum  vea'ndaam.  (ubaagamam  20:3)

உங்களுக்காக  உங்கள்  சத்துருக்களோடே  யுத்தம்பண்ணவும்  உங்களை  இரட்சிக்கவும்  உங்களோடேகூடப்  போகிறவர்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  சொல்லவேண்டும்.  (உபாகமம்  20:4)

ungga'lukkaaga  ungga'l  saththurukka'loadea  yuththampa'n'navum  ungga'lai  iradchikkavum  ungga'loadeakoodap  poagi’ravar  ungga'l  theavanaagiya  karththar  en’ru  sollavea'ndum.  (ubaagamam  20:4)

அன்றியும்  அதிபதிகள்  ஜனங்களை  நோக்கி:  புதுவீட்டைக்  கட்டி,  அதைப்  பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன்  எவனோ,  அவன்  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போகக்கடவன்;  அவன்  யுத்தத்திலே  செத்தால்  வேறொருவன்  அதைப்  பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.  (உபாகமம்  20:5)

an’riyum  athibathiga'l  janangga'lai  noakki:  puthuveettaik  katti,  athaip  pirathishdaipa'n'naathirukki’ravan  evanoa,  avan  than  veettukkuth  thirumbippoagakkadavan;  avan  yuththaththilea  seththaal  vea’roruvan  athaip  pirathishdaipa'n'navea'ndiyathaagum.  (ubaagamam  20:5)

திராட்சத்தோட்டத்தை  நாட்டி,  அதை  அநுபவியாதிருக்கிறவன்  எவனோ,  அவன்  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போகக்கடவன்;  அவன்  யுத்தத்திலே  செத்தால்  வேறொருவன்  அதை  அநுபவிக்கவேண்டியதாகும்.  (உபாகமம்  20:6)

thiraadchaththoattaththai  naatti,  athai  anubaviyaathirukki’ravan  evanoa,  avan  than  veettukkuth  thirumbippoagakkadavan;  avan  yuththaththilea  seththaal  vea’roruvan  athai  anubavikkavea'ndiyathaagum.  (ubaagamam  20:6)

ஒரு  பெண்ணைத்  தனக்கு  நியமித்துக்கொண்டு,  அவளை  விவாகம்பண்ணாதிருக்கிறவன்  எவனோ,  அவன்  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போகக்கடவன்;  அவன்  யுத்தத்திலே  செத்தால்  வேறொருவன்  அவளை  விவாகம்பண்ணவேண்டியதாகும்  என்று  சொல்லவேண்டும்.  (உபாகமம்  20:7)

oru  pe'n'naith  thanakku  niyamiththukko'ndu,  ava'lai  vivaagampa'n'naathirukki’ravan  evanoa,  avan  than  veettukkuth  thirumbippoagakkadavan;  avan  yuththaththilea  seththaal  vea’roruvan  ava'lai  vivaagampa'n'navea'ndiyathaagum  en’ru  sollavea'ndum.  (ubaagamam  20:7)

பின்னும்  அதிபதிகள்  ஜனங்களுடனே  பேசி:  பயங்காளியும்  திடனற்றவனுமாயிருக்கிறவன்  எவனோ,  அவன்  தன்  சகோதரரின்  இருதயத்தைத்  தன்  இருதயத்தைப்போலக்  கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு,  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போகக்கடவன்  என்று  சொல்லவேண்டும்.  (உபாகமம்  20:8)

pinnum  athibathiga'l  janangga'ludanea  peasi:  bayanggaa'liyum  thidanat’ravanumaayirukki’ravan  evanoa,  avan  than  sagoathararin  iruthayaththaith  than  iruthayaththaippoalak  karainthupoagappa'n'naathapadikku,  than  veettukkuth  thirumbippoagakkadavan  en’ru  sollavea'ndum.  (ubaagamam  20:8)

அதிபதிகள்  ஜனங்களோடே  பேசி  முடிந்தபின்பு,  ஜனங்களை  நடத்தும்படி,  சேனைத்தலைவரை  நியமிக்கக்கடவர்கள்.  (உபாகமம்  20:9)

athibathiga'l  janangga'loadea  peasi  mudinthapinbu,  janangga'lai  nadaththumpadi,  seanaiththalaivarai  niyamikkakkadavarga'l.  (ubaagamam  20:9)

நீ  ஒரு  பட்டணத்தின்மேல்  யுத்தம்பண்ண  நெருங்கும்போது,  அந்தப்  பட்டணத்தாருக்குச்  சமாதானம்  கூறக்கடவாய்.  (உபாகமம்  20:10)

nee  oru  patta'naththinmeal  yuththampa'n'na  nerunggumpoathu,  anthap  patta'naththaarukkuch  samaathaanam  koo’rakkadavaay.  (ubaagamam  20:10)

அவர்கள்  உனக்குச்  சமாதானமான  உத்தரவுகொடுத்து,  வாசலைத்  திறந்தால்,  அதிலுள்ள  ஜனங்கள்  எல்லாரும்  உனக்குப்  பகுதிகட்டுகிறவர்களாகி,  உனக்கு  ஊழியஞ்செய்யக்கடவர்கள்.  (உபாகமம்  20:11)

avarga'l  unakkuch  samaathaanamaana  uththaravukoduththu,  vaasalaith  thi’ranthaal,  athilu'l'la  janangga'l  ellaarum  unakkup  paguthikattugi’ravarga'laagi,  unakku  oozhiyagnseyyakkadavarga'l.  (ubaagamam  20:11)

அவர்கள்  உன்னோடே  சமாதானப்படாமல்,  உன்னோடே  யுத்தம்பண்ணுவார்களானால்,  நீ  அதை  முற்றிக்கைபோட்டு,  (உபாகமம்  20:12)

avarga'l  unnoadea  samaathaanappadaamal,  unnoadea  yuththampa'n'nuvaarga'laanaal,  nee  athai  mut’rikkaipoattu,  (ubaagamam  20:12)

உன்  தேவனாகிய  கர்த்தர்  அதை  உன்  கையில்  ஒப்புக்கொடுக்கும்போது,  அதிலுள்ள  புருஷர்கள்  எல்லாரையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  (உபாகமம்  20:13)

un  theavanaagiya  karththar  athai  un  kaiyil  oppukkodukkumpoathu,  athilu'l'la  purusharga'l  ellaaraiyum  pattayakkarukkinaal  vetti,  (ubaagamam  20:13)

ஸ்திரீகளையும்  குழந்தைகளையும்  மிருகஜீவன்களையும்  மாத்திரம்  உயிரோடே  வைத்து,  பட்டணத்திலுள்ள  எல்லாவற்றையும்  கொள்ளையிட்டு,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்கு  ஒப்புக்கொடுத்த  உன்  சத்துருக்களின்  கொள்ளைப்பொருளை  அநுபவிப்பாயாக.  (உபாகமம்  20:14)

sthireega'laiyum  kuzhanthaiga'laiyum  mirugajeevanga'laiyum  maaththiram  uyiroadea  vaiththu,  patta'naththilu'l'la  ellaavat’raiyum  ko'l'laiyittu,  un  theavanaagiya  karththar  unakku  oppukkoduththa  un  saththurukka'lin  ko'l'laipporu'lai  anubavippaayaaga.  (ubaagamam  20:14)

இந்த  ஜாதிகளைச்சேர்ந்த  பட்டணங்களாயிராமல்,  உனக்கு  வெகுதூரத்திலிருக்கிற  சகல  பட்டணங்களுக்கும்  இப்படியே  செய்வாயாக.  (உபாகமம்  20:15)

intha  jaathiga'laichsearntha  patta'nangga'laayiraamal,  unakku  veguthooraththilirukki’ra  sagala  patta'nangga'lukkum  ippadiyea  seyvaayaaga.  (ubaagamam  20:15)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கிற  ஏத்தியர்,  எமோரியர்,  கானானியர்,  பெரிசியர்,  ஏவியர்,  எபூசியர்  என்னும்  ஜனங்களின்  பட்டணங்களிலேமாத்திரம்  சுவாசமுள்ளதொன்றையும்  உயிரோடே  வைக்காமல்,  (உபாகமம்  20:16)

un  theavanaagiya  karththar  unakkuch  suthantharamaagak  kodukki’ra  eaththiyar,  emoariyar,  kaanaaniyar,  perisiyar,  eaviyar,  eboosiyar  ennum  janangga'lin  patta'nangga'lileamaaththiram  suvaasamu'l'lathon’raiyum  uyiroadea  vaikkaamal,  (ubaagamam  20:16)

அவர்களை  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கட்டளையிட்டபடியே  சங்காரம்பண்ணக்கடவாய்.  (உபாகமம்  20:17)

avarga'lai  un  theavanaagiya  karththar  unakkuk  katta'laiyittapadiyea  sanggaarampa'n'nakkadavaay.  (ubaagamam  20:17)

அவர்கள்  தங்கள்  தேவர்களுக்குச்  செய்கிற  தங்களுடைய  சகல  அருவருப்புகளின்படியே  நீங்களும்  செய்ய  உங்களுக்குக்  கற்றுக்கொடாமலும்,  நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்யாமலும்  இருக்கும்படி  இப்படிச்  செய்யவேண்டும்.  (உபாகமம்  20:18)

avarga'l  thangga'l  theavarga'lukkuch  seygi’ra  thangga'ludaiya  sagala  aruvaruppuga'linpadiyea  neengga'lum  seyya  ungga'lukkuk  kat’rukkodaamalum,  neengga'l  ungga'l  theavanaagiya  karththarukku  viroathamaayp  paavagnseyyaamalum  irukkumpadi  ippadich  seyyavea'ndum.  (ubaagamam  20:18)

நீ  ஒரு  பட்டணத்தின்மேல்  யுத்தம்பண்ணி  அதைப்  பிடிக்க  அநேக  நாள்  அதை  முற்றிக்கைபோட்டிருக்கும்போது,  நீ  கோடரியை  ஓங்கி,  அதின்  மரங்களை  வெட்டிச்  சேதம்பண்ணாயாக;  அவைகளின்  கனியை  நீ  புசிக்கலாமே;  ஆகையால்  உனக்குக்  கொத்தளத்திற்கு  உதவும்  என்று  அவைகளை  வெட்டாயாக;  வெளியின்  விருட்சங்கள்  மனுஷனுடைய  ஜீவனத்துக்கானவைகள்.  (உபாகமம்  20:19)

nee  oru  patta'naththinmeal  yuththampa'n'ni  athaip  pidikka  aneaga  naa'l  athai  mut’rikkaipoattirukkumpoathu,  nee  koadariyai  oanggi,  athin  marangga'lai  vettich  seathampa'n'naayaaga;  avaiga'lin  kaniyai  nee  pusikkalaamea;  aagaiyaal  unakkuk  koththa'laththi’rku  uthavum  en’ru  avaiga'lai  vettaayaaga;  ve'liyin  virudchangga'l  manushanudaiya  jeevanaththukkaanavaiga'l.  (ubaagamam  20:19)

புசிக்கிறதற்கேற்ற  கனிகொடாத  மரம்  என்று  நீ  அறிந்திருக்கிற  மரங்களைமாத்திரம்  வெட்டியழித்து,  உன்னோடு  யுத்தம்பண்ணுகிற  பட்டணம்  பிடிபடுமட்டும்  அதற்கு  எதிராகக்  கொத்தளம்  போடலாம்.  (உபாகமம்  20:20)

pusikki’ratha’rkeat’ra  kanikodaatha  maram  en’ru  nee  a’rinthirukki’ra  marangga'laimaaththiram  vettiyazhiththu,  unnoadu  yuththampa'n'nugi’ra  patta'nam  pidipadumattum  atha’rku  ethiraagak  koththa'lam  poadalaam.  (ubaagamam  20:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!