Tuesday, August 09, 2016

Ubaagamam 16 | உபாகமம் 16 | Deuteronomy 16

ஆபிப்  மாதத்தைக்  கவனித்திருந்து,  அதில்  உன்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரிக்கக்கடவாய்;  ஆபிப்மாதத்திலே  இராக்காலத்தில்  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணினாரே.  (உபாகமம்  16:1)

aabib  maathaththaik  kavaniththirunthu,  athil  un  theavanaagiya  karththarukkup  paskaavai  aasarikkakkadavaay;  aabibmaathaththilea  iraakkaalaththil  un  theavanaagiya  karththar  unnai  egipthilirunthu  pu’rappadappa'n'ninaarea.  (ubaagamam  16:1)

கர்த்தர்  தமது  நாமம்  விளங்கும்படி  தெரிந்துகொள்ளும்  ஸ்தானத்தில்,  உன்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பஸ்காவின்  பலியாகிய  ஆடுமாடுகளைப்  பலியிடுவாயாக.  (உபாகமம்  16:2)

karththar  thamathu  naamam  vi'langgumpadi  therinthuko'l'lum  sthaanaththil,  un  theavanaagiya  karththarukkup  paskaavin  baliyaagiya  aadumaaduga'laip  baliyiduvaayaaga.  (ubaagamam  16:2)

நீ  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்ட  நாளை  நீ  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  நினைக்கும்படி,  பஸ்காப்பலியுடனே  புளிப்புள்ள  அப்பம்  புசியாமல்,  சிறுமையின்  அப்பமாகிய  புளிப்பில்லாத  அப்பங்களை  ஏழுநாள்வரைக்கும்  புசிக்கக்கடவாய்;  நீ  தீவிரமாய்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்டபடியினால்  இப்படிச்  செய்யவேண்டும்.  (உபாகமம்  16:3)

nee  egipthutheasaththilirunthu  pu’rappatta  naa'lai  nee  uyiroadirukkum  naa'lellaam  ninaikkumpadi,  paskaapbaliyudanea  pu'lippu'l'la  appam  pusiyaamal,  si’rumaiyin  appamaagiya  pu'lippillaatha  appangga'lai  eazhunaa'lvaraikkum  pusikkakkadavaay;  nee  theeviramaay  egipthutheasaththilirunthu  pu’rappattapadiyinaal  ippadich  seyyavea'ndum.  (ubaagamam  16:3)

ஏழுநாளளவும்  உன்  எல்லைகளிலெங்கும்  புளிப்புள்ள  அப்பம்  உன்னிடத்தில்  காணப்படலாகாது;  நீ  முதல்நாள்  சாயங்காலத்தில்  இட்ட  பலியின்  மாம்சத்தில்  ஏதாகிலும்  இராமுழுதும்  விடியற்காலம்வரைக்கும்  வைக்கவேண்டாம்.  (உபாகமம்  16:4)

eazhunaa'la'lavum  un  ellaiga'lilenggum  pu'lippu'l'la  appam  unnidaththil  kaa'nappadalaagaathu;  nee  muthalnaa'l  saayanggaalaththil  itta  baliyin  maamsaththil  eathaagilum  iraamuzhuthum  vidiya’rkaalamvaraikkum  vaikkavea'ndaam.  (ubaagamam  16:4)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கொடுக்கும்  உன்னுடைய  வாசல்களில்  எதிலும்  நீ  பஸ்காவை  அடிக்கவேண்டாம்.  (உபாகமம்  16:5)

un  theavanaagiya  karththar  unakkuk  kodukkum  unnudaiya  vaasalga'lil  ethilum  nee  paskaavai  adikkavea'ndaam.  (ubaagamam  16:5)

உன்  தேவனாகிய  கர்த்தர்  தமது  நாமம்  விளங்கும்படி  தெரிந்துகொள்ளும்  ஸ்தானத்திலே,  நீ  எகிப்திலிருந்து  புறப்பட்ட  நேரமாகிய  சாயங்காலத்திலே  சூரியன்  அஸ்தமிக்கிறபோது  பஸ்காவை  அடித்து,  (உபாகமம்  16:6)

un  theavanaagiya  karththar  thamathu  naamam  vi'langgumpadi  therinthuko'l'lum  sthaanaththilea,  nee  egipthilirunthu  pu’rappatta  nearamaagiya  saayanggaalaththilea  sooriyan  asthamikki’rapoathu  paskaavai  adiththu,  (ubaagamam  16:6)

உன்  தேவனாகிய  கர்த்தர்  தெரிந்துகொண்ட  ஸ்தானத்திலே,  அதைப்  பொரித்துப்  புசித்து,  விடியற்காலத்திலே  உன்  கூடாரங்களுக்குத்  திரும்பிப்போவாயாக.  (உபாகமம்  16:7)

un  theavanaagiya  karththar  therinthuko'nda  sthaanaththilea,  athaip  poriththup  pusiththu,  vidiya’rkaalaththilea  un  koodaarangga'lukkuth  thirumbippoavaayaaga.  (ubaagamam  16:7)

நீ  ஆறுநாளும்  புளிப்பில்லாத  அப்பம்  புசிக்கவேண்டும்,  ஏழாம்  நாள்  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஆசரிக்கப்படும்  நாளாயிருக்கும்;  அதிலே  யாதொரு  வேலையும்  செய்யவேண்டாம்.  (உபாகமம்  16:8)

nee  aa’runaa'lum  pu'lippillaatha  appam  pusikkavea'ndum,  eazhaam  naa'l  un  theavanaagiya  karththarukku  aasarikkappadum  naa'laayirukkum;  athilea  yaathoru  vealaiyum  seyyavea'ndaam.  (ubaagamam  16:8)

ஏழு  வாரங்களை  எண்ணுவாயாக;  அறுப்பு  அறுக்கத்  தொடங்கும்  காலமுதல்  நீ  அந்த  ஏழு  வாரங்களையும்  எண்ணவேண்டும்.  (உபாகமம்  16:9)

eazhu  vaarangga'lai  e'n'nuvaayaaga;  a’ruppu  a’rukkath  thodanggum  kaalamuthal  nee  antha  eazhu  vaarangga'laiyum  e'n'navea'ndum.  (ubaagamam  16:9)

அவைகள்  முடிந்தபோது  வாரங்களின்  பண்டிகையை  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  என்று  ஆசரித்து,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னை  ஆசீர்வதித்ததற்குத்  தக்கதாய்  உன்  கைக்கு  நேர்ந்த  மனப்பூர்வமான  காணிக்கையாகிய  பகுதியைச்  செலுத்தி,  (உபாகமம்  16:10)

avaiga'l  mudinthapoathu  vaarangga'lin  pa'ndigaiyai  un  theavanaagiya  karththarukku  en’ru  aasariththu,  un  theavanaagiya  karththar  unnai  aaseervathiththatha’rkuth  thakkathaay  un  kaikku  nearntha  manappoorvamaana  kaa'nikkaiyaagiya  paguthiyaich  seluththi,  (ubaagamam  16:10)

உன்  தேவனாகிய  கர்த்தர்  தமது  நாமம்  விளங்கும்படி  தெரிந்துகொள்ளும்  ஸ்தானத்திலே,  நீயும்,  உன்  குமாரனும்,  உன்  குமாரத்தியும்,  உன்  வேலைக்காரனும்,  உன்  வேலைக்காரியும்,  உன்  வாசல்களில்  இருக்கிற  லேவியனும்,  உன்னிடத்தில்  இருக்கிற  பரதேசியும்,  திக்கற்ற  பிள்ளையும்,  விதவையும்,  உன்  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  சந்தோஷப்பட்டு,  (உபாகமம்  16:11)

un  theavanaagiya  karththar  thamathu  naamam  vi'langgumpadi  therinthuko'l'lum  sthaanaththilea,  neeyum,  un  kumaaranum,  un  kumaaraththiyum,  un  vealaikkaaranum,  un  vealaikkaariyum,  un  vaasalga'lil  irukki’ra  leaviyanum,  unnidaththil  irukki’ra  paratheasiyum,  thikkat’ra  pi'l'laiyum,  vithavaiyum,  un  theavanaagiya  karththarudaiya  sannithiyil  santhoashappattu,  (ubaagamam  16:11)

நீ  எகிப்தில்  அடிமையாயிருந்ததை  நினைத்து,  இந்தக்  கட்டளைகளைக்  கைக்கொண்டு  இவைகளின்படி  செய்யக்கடவாய்.  (உபாகமம்  16:12)

nee  egipthil  adimaiyaayirunthathai  ninaiththu,  inthak  katta'laiga'laik  kaikko'ndu  ivaiga'linpadi  seyyakkadavaay.  (ubaagamam  16:12)

நீ  உன்  களத்தின்  பலனையும்  உன்  ஆலையின்  பலனையும்  சேர்த்தபின்பு,  கூடாரப்பண்டிகையை  ஏழுநாள்  ஆசரித்து,  (உபாகமம்  16:13)

nee  un  ka'laththin  palanaiyum  un  aalaiyin  palanaiyum  searththapinbu,  koodaarappa'ndigaiyai  eazhunaa'l  aasariththu,  (ubaagamam  16:13)

உன்  பண்டிகையில்  நீயும்,  உன்  குமாரனும்,  உன்  குமாரத்தியும்,  உன்  வேலைக்காரனும்,  உன்  வேலைக்காரியும்,  உன்  வாசல்களில்  இருக்கிற  லேவியனும்,  பரதேசியும்,  திக்கற்ற  பிள்ளையும்,  விதவையும்  சந்தோஷப்படக்கடவீர்கள்;  (உபாகமம்  16:14)

un  pa'ndigaiyil  neeyum,  un  kumaaranum,  un  kumaaraththiyum,  un  vealaikkaaranum,  un  vealaikkaariyum,  un  vaasalga'lil  irukki’ra  leaviyanum,  paratheasiyum,  thikkat’ra  pi'l'laiyum,  vithavaiyum  santhoashappadakkadaveerga'l;  (ubaagamam  16:14)

உனக்கு  உண்டான  எல்லா  வரத்திலும்  உன்  கைகளுடைய  எல்லாக்  கிரியையிலும்  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னை  ஆசீர்வதித்தபடியினால்,  கர்த்தர்  தெரிந்துகொள்ளும்  ஸ்தானத்தில்  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஏழுநாளளவும்  பண்டிகையை  ஆசரித்துச்  சந்தோஷமாயிருப்பாயாக.  (உபாகமம்  16:15)

unakku  u'ndaana  ellaa  varaththilum  un  kaiga'ludaiya  ellaak  kiriyaiyilum  un  theavanaagiya  karththar  unnai  aaseervathiththapadiyinaal,  karththar  therinthuko'l'lum  sthaanaththil  un  theavanaagiya  karththarukku  eazhunaa'la'lavum  pa'ndigaiyai  aasariththuch  santhoashamaayiruppaayaaga.  (ubaagamam  16:15)

வருஷத்தில்  மூன்றுதரம்  புளிப்பில்லாத  அப்பப்பண்டிகையிலும்,  வாரங்களின்  பண்டிகையிலும்,  கூடாரப்பண்டிகையிலும்,  உன்  ஆண்மக்கள்  எல்லாரும்  உன்  தேவனாகிய  கர்த்தர்  தெரிந்துகொள்ளும்  ஸ்தானத்திலே,  அவர்  சந்நிதிக்கு  முன்பாக  வந்து  காணப்படக்கடவர்கள்.  (உபாகமம்  16:16)

varushaththil  moon’rutharam  pu'lippillaatha  appappa'ndigaiyilum,  vaarangga'lin  pa'ndigaiyilum,  koodaarappa'ndigaiyilum,  un  aa'nmakka'l  ellaarum  un  theavanaagiya  karththar  therinthuko'l'lum  sthaanaththilea,  avar  sannithikku  munbaaga  vanthu  kaa'nappadakkadavarga'l.  (ubaagamam  16:16)

ஆனாலும்  அவர்கள்  கர்த்தருடைய  சந்நிதியில்  வெறுங்கையோடே  வராமல்,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்கு  அருளிய  ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக,  அவனவன்  தன்  தன்  தகுதிக்கு  ஏற்றபடி  காணிக்கையைக்  கொண்டுவரக்கடவன்.  (உபாகமம்  16:17)

aanaalum  avarga'l  karththarudaiya  sannithiyil  ve’rungkaiyoadea  varaamal,  un  theavanaagiya  karththar  unakku  aru'liya  aaseervaathaththi’rkuththakkathaaga,  avanavan  than  than  thaguthikku  eat’rapadi  kaa'nikkaiyaik  ko'nduvarakkadavan.  (ubaagamam  16:17)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்  கோத்திரங்கள்தோறும்  உனக்குக்  கொடுக்கும்  வாசல்களிலெல்லாம்,  நியாயாதிபதிகளையும்  தலைவரையும்  ஏற்படுத்துவாயாக;  அவர்கள்  நீதியுடன்  ஜனங்களுக்கு  நியாயத்தீர்ப்புச்  செய்யக்கடவர்கள்.  (உபாகமம்  16:18)

un  theavanaagiya  karththar  un  koaththirangga'lthoa’rum  unakkuk  kodukkum  vaasalga'lilellaam,  niyaayaathibathiga'laiyum  thalaivaraiyum  ea’rpaduththuvaayaaga;  avarga'l  neethiyudan  janangga'lukku  niyaayaththeerppuch  seyyakkadavarga'l.  (ubaagamam  16:18)

நியாயத்தைப்  புரட்டாதிருப்பாயாக;  முகதாட்சிணியம்  பண்ணாமலும்,  பரிதானம்  வாங்காமலும்  இருப்பாயாக;  பரிதானம்  ஞானிகளின்  கண்களைக்  குருடாக்கி,  நீதிமான்களின்  நியாயங்களைத்  தாறுமாறாக்கும்.  (உபாகமம்  16:19)

niyaayaththaip  purattaathiruppaayaaga;  mugathaadchi'niyam  pa'n'naamalum,  parithaanam  vaanggaamalum  iruppaayaaga;  parithaanam  gnaaniga'lin  ka'nga'laik  kurudaakki,  neethimaanga'lin  niyaayangga'laith  thaa’rumaa’raakkum.  (ubaagamam  16:19)

நீ  பிழைத்து,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கொடுக்கும்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு  நீதியையே  பின்பற்றுவாயாக.  (உபாகமம்  16:20)

nee  pizhaiththu,  un  theavanaagiya  karththar  unakkuk  kodukkum  theasaththaich  suthanthariththukko'l'lumpadikku  neethiyaiyea  pinpat’ruvaayaaga.  (ubaagamam  16:20)

நீ  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  உண்டாக்கும்  பலிபீடத்தண்டையில்  யாதொரு  தோப்பையும்  உண்டாக்கவேண்டாம்;  (உபாகமம்  16:21)

nee  un  theavanaagiya  karththarukku  u'ndaakkum  balipeedaththa'ndaiyil  yaathoru  thoappaiyum  u'ndaakkavea'ndaam;  (ubaagamam  16:21)

யாதொரு  சிலையையும்  நிறுத்தவேண்டாம்;  உன்  தேவனாகிய  கர்த்தர்  அதை  வெறுக்கிறார்.  (உபாகமம்  16:22)

yaathoru  silaiyaiyum  ni’ruththavea'ndaam;  un  theavanaagiya  karththar  athai  ve’rukki’raar.  (ubaagamam  16:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!