Monday, August 08, 2016

Ubaagamam 15 | உபாகமம் 15 | Deuteronomy 15

ஏழாம்  வருஷத்தின்  முடிவிலே  விடுதலைபண்ணுவாயாக.  (உபாகமம்  15:1)

eazhaam  varushaththin  mudivilea  viduthalaipa'n'nuvaayaaga.  (ubaagamam  15:1)

விடுதலையின்  விபரமாவது:  பிறனுக்குக்  கடன்கொடுத்தவன்  எவனும்,  கர்த்தர்  நியமித்த  விடுதலை  கூறப்பட்டபடியால்,  அந்தக்  கடனைப்  பிறன்  கையிலாகிலும்  தன்  சகோதரன்  கையிலாகிலும்  தண்டாமல்  விட்டுவிடக்கடவன்.  (உபாகமம்  15:2)

viduthalaiyin  vibaramaavathu:  pi’ranukkuk  kadankoduththavan  evanum,  karththar  niyamiththa  viduthalai  koo’rappattapadiyaal,  anthak  kadanaip  pi’ran  kaiyilaagilum  than  sagoatharan  kaiyilaagilum  tha'ndaamal  vittuvidakkadavan.  (ubaagamam  15:2)

அந்நிய  ஜாதியான்  கையிலே  நீ  கடனைத்  தண்டலாம்;  உன்  சகோதரனிடத்திலோ  உனக்கு  வரவேண்டியதை  உன்  கை  விட்டுவிடக்கடவது.  (உபாகமம்  15:3)

anniya  jaathiyaan  kaiyilea  nee  kadanaith  tha'ndalaam;  un  sagoatharanidaththiloa  unakku  varavea'ndiyathai  un  kai  vittuvidakkadavathu.  (ubaagamam  15:3)

எளியவன்  உனக்குள்  இல்லாதிருக்கும்படியாக  இப்படிச்  செய்யவேண்டும்;  இன்று  நான்  உனக்குக்  கற்பிக்கிற  எல்லாக்  கற்பனைகளின்படியும்  நீ  செய்யும்படி,  உன்  தேவனாகிய  கர்த்தரின்  சத்தத்தைக்  கவனமாய்க்  கேட்பாயானால்,  (உபாகமம்  15:4)

e'liyavan  unakku'l  illaathirukkumpadiyaaga  ippadich  seyyavea'ndum;  in’ru  naan  unakkuk  ka’rpikki’ra  ellaak  ka’rpanaiga'linpadiyum  nee  seyyumpadi,  un  theavanaagiya  karththarin  saththaththaik  kavanamaayk  keadpaayaanaal,  (ubaagamam  15:4)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரிக்கும்படி  கொடுக்கும்  தேசத்தில்,  உன்னை  மேன்மேலும்  ஆசீர்வதிப்பார்.  (உபாகமம்  15:5)

un  theavanaagiya  karththar  unakkuch  suthantharikkumpadi  kodukkum  theasaththil,  unnai  meanmealum  aaseervathippaar.  (ubaagamam  15:5)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சொன்னபடி  உன்னை  ஆசீர்வதிப்பதினால்,  நீ  அநேகம்  ஜாதிகளுக்குக்  கடன்  கொடுப்பாய்,  நீயோ  கடன்  வாங்குவதில்லை;  நீ  அநேகம்  ஜாதிகளை  ஆளுவாய்,  உன்னையோ  அவர்கள்  ஆளுவதில்லை.  (உபாகமம்  15:6)

un  theavanaagiya  karththar  unakkuch  sonnapadi  unnai  aaseervathippathinaal,  nee  aneagam  jaathiga'lukkuk  kadan  koduppaay,  neeyoa  kadan  vaangguvathillai;  nee  aneagam  jaathiga'lai  aa'luvaay,  unnaiyoa  avarga'l  aa'luvathillai.  (ubaagamam  15:6)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கொடுக்கும்  தேசத்தின்  எந்த  வாசலிலும்  உன்  சகோதரரில்  எளியவனான  ஒருவன்  இருந்தால்,  எளியவனாகிய  உன்  சகோதரனுக்கு  உன்  இருதயத்தை  நீ  கடினமாக்காமலும்,  உன்  கையை  மூடாமலும்,  (உபாகமம்  15:7)

un  theavanaagiya  karththar  unakkuk  kodukkum  theasaththin  entha  vaasalilum  un  sagoathararil  e'liyavanaana  oruvan  irunthaal,  e'liyavanaagiya  un  sagoatharanukku  un  iruthayaththai  nee  kadinamaakkaamalum,  un  kaiyai  moodaamalum,  (ubaagamam  15:7)

அவனுக்கு  உன்  கையைத்  தாராளமாய்த்  திறந்து,  அவனுடைய  அவசரத்தினிமித்தம்  அவனுக்குத்  தேவையானதைக்  கடன்கொடுப்பாயாக.  (உபாகமம்  15:8)

avanukku  un  kaiyaith  thaaraa'lamaayth  thi’ranthu,  avanudaiya  avasaraththinimiththam  avanukkuth  theavaiyaanathaik  kadankoduppaayaaga.  (ubaagamam  15:8)

விடுதலை  வருஷமாகிய  ஏழாம்  வருஷம்  கிட்டியிருக்கிறதென்று  சொல்லி,  உன்  இருதயத்திலே  பொல்லாத  நினைவு  கொண்டு,  உன்  ஏழைச்  சகோதரனுக்குக்  கொடாமல்  மறுத்து,  அவன்மேல்  வன்கண்  வைக்காதபடிக்கும்,  அவன்  உன்னைக்  குறித்துக்  கர்த்தரை  நோக்கி  அபயமிடாதபடிக்கும்  எச்சரிக்கையாயிரு;  அப்படிச்  செய்வாயானால்  அது  உனக்குப்  பாவமாயிருக்கும்.  (உபாகமம்  15:9)

viduthalai  varushamaagiya  eazhaam  varusham  kittiyirukki’rathen’ru  solli,  un  iruthayaththilea  pollaatha  ninaivu  ko'ndu,  un  eazhaich  sagoatharanukkuk  kodaamal  ma’ruththu,  avanmeal  vanka'n  vaikkaathapadikkum,  avan  unnaik  ku’riththuk  karththarai  noakki  abayamidaathapadikkum  echcharikkaiyaayiru;  appadich  seyvaayaanaal  athu  unakkup  paavamaayirukkum.  (ubaagamam  15:9)

அவனுக்குத்  தாராளமாய்க்  கொடுப்பாயாக;  அவனுக்குக்  கொடுக்கும்போது  உன்  இருதயம்  விசனப்படாதிருப்பதாக;  அதினிமித்தமாக  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னுடைய  எல்லாக்  கிரியைகளிலும்,  நீ  கையிட்டுச்  செய்யும்  எல்லாக்  காரியங்களிலும்  உன்னை  ஆசீர்வதிப்பார்.  (உபாகமம்  15:10)

avanukkuth  thaaraa'lamaayk  koduppaayaaga;  avanukkuk  kodukkumpoathu  un  iruthayam  visanappadaathiruppathaaga;  athinimiththamaaga  un  theavanaagiya  karththar  unnudaiya  ellaak  kiriyaiga'lilum,  nee  kaiyittuch  seyyum  ellaak  kaariyangga'lilum  unnai  aaseervathippaar.  (ubaagamam  15:10)

தேசத்திலே  எளியவர்கள்  இல்லாதிருப்பதில்லை;  ஆகையால்  உன்  தேசத்திலே  சிறுமைப்பட்டவனும்  எளியவனுமாகிய  உன்  சகோதரனுக்கு  உன்  கையைத்  தாராளமாய்த்  திறக்கவேண்டும்  என்று  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறேன்.  (உபாகமம்  15:11)

theasaththilea  e'liyavarga'l  illaathiruppathillai;  aagaiyaal  un  theasaththilea  si’rumaippattavanum  e'liyavanumaagiya  un  sagoatharanukku  un  kaiyaith  thaaraa'lamaayth  thi’rakkavea'ndum  en’ru  naan  unakkuk  katta'laiyidugi’rean.  (ubaagamam  15:11)

உன்  சகோதரனாகிய  எபிரெய  புருஷனாகிலும்  எபிரெய  ஸ்திரீயாகிலும்  உனக்கு  விலைப்பட்டால்,  ஆறுவருஷம்  உன்னிடத்தில்  சேவிக்கவேண்டும்;  ஏழாம்  வருஷத்தில்  அவனை  விடுதலைபண்ணி  அனுப்பிவிடுவாயாக.  (உபாகமம்  15:12)

un  sagoatharanaagiya  ebireya  purushanaagilum  ebireya  sthireeyaagilum  unakku  vilaippattaal,  aa’ruvarusham  unnidaththil  seavikkavea'ndum;  eazhaam  varushaththil  avanai  viduthalaipa'n'ni  anuppividuvaayaaga.  (ubaagamam  15:12)

அவனை  விடுதலைபண்ணி  அனுப்பிவிடும்போது  அவனை  வெறுமையாய்  அனுப்பிவிடாமல்,  (உபாகமம்  15:13)

avanai  viduthalaipa'n'ni  anuppividumpoathu  avanai  ve’rumaiyaay  anuppividaamal,  (ubaagamam  15:13)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னை  ஆசீர்வதித்ததின்படி,  உன்  ஆட்டுமந்தையிலும்  உன்  களத்திலும்  உன்  ஆலையிலும்  எடுத்து  அவனுக்குத்  தாராளமாய்க்  கொடுத்து  அனுப்பிவிடுவாயாக.  (உபாகமம்  15:14)

un  theavanaagiya  karththar  unnai  aaseervathiththathinpadi,  un  aattumanthaiyilum  un  ka'laththilum  un  aalaiyilum  eduththu  avanukkuth  thaaraa'lamaayk  koduththu  anuppividuvaayaaga.  (ubaagamam  15:14)

நீ  எகிப்துதேசத்தில்  அடிமையாயிருந்ததையும்,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னை  மீட்டுக்கொண்டதையும்  நினைவுகூரக்கடவாய்;  ஆகையால்  நான்  இன்று  இந்தக்  காரியத்தை  உனக்குக்  கட்டளையிடுகிறேன்.  (உபாகமம்  15:15)

nee  egipthutheasaththil  adimaiyaayirunthathaiyum,  un  theavanaagiya  karththar  unnai  meettukko'ndathaiyum  ninaivukoorakkadavaay;  aagaiyaal  naan  in’ru  inthak  kaariyaththai  unakkuk  katta'laiyidugi’rean.  (ubaagamam  15:15)

ஆனாலும்,  அவன்  உன்னிடத்தில்  நன்மைபெற்று,  உன்னையும்  உன்  குடும்பத்தையும்  நேசிப்பதினால்:  நான்  உன்னைவிட்டுப்  போகமாட்டேன்  என்று  உன்னுடனே  சொல்வானேயாகில்,  (உபாகமம்  15:16)

aanaalum,  avan  unnidaththil  nanmaipet’ru,  unnaiyum  un  kudumbaththaiyum  neasippathinaal:  naan  unnaivittup  poagamaattean  en’ru  unnudanea  solvaaneayaagil,  (ubaagamam  15:16)

நீ  ஒரு  கம்பியை  எடுத்து,  அவன்  காதைக்  கதவோடே  சேர்த்துக்  குத்துவாயாக;  பின்பு  அவன்  என்றைக்கும்  உனக்கு  அடிமையாயிருக்கக்கடவன்;  உன்  அடிமைப்பெண்ணுக்கும்  அப்படியே  செய்யக்கடவாய்.  (உபாகமம்  15:17)

nee  oru  kambiyai  eduththu,  avan  kaathaik  kathavoadea  searththuk  kuththuvaayaaga;  pinbu  avan  en’raikkum  unakku  adimaiyaayirukkakkadavan;  un  adimaippe'n'nukkum  appadiyea  seyyakkadavaay.  (ubaagamam  15:17)

அவனை  விடுதலையாக்கி  அனுப்பிவிடுவது  உனக்கு  விசனமாய்க்  காணப்படவேண்டாம்;  இரட்டிப்பான  கூலிக்கு  ஈடாக  ஆறு  வருஷம்  உன்னிடத்தில்  சேவித்தானே;  இப்படி  உன்  தேவனாகிய  கர்த்தர்  நீ  செய்யும்  எல்லாவற்றிலும்  உன்னை  ஆசீர்வதிப்பார்.  (உபாகமம்  15:18)

avanai  viduthalaiyaakki  anuppividuvathu  unakku  visanamaayk  kaa'nappadavea'ndaam;  irattippaana  koolikku  eedaaga  aa’ru  varusham  unnidaththil  seaviththaanea;  ippadi  un  theavanaagiya  karththar  nee  seyyum  ellaavat’rilum  unnai  aaseervathippaar.  (ubaagamam  15:18)

உன்  ஆடுமாடுகளில்  தலையீற்றாகிய  ஆணையெல்லாம்  உன்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பரிசுத்தமாக்கக்கடவாய்;  உன்  மாட்டின்  தலையீற்றை  வேலைகொள்ளாமலும்,  உன்  ஆட்டின்  தலையீற்றை  மயிர்  கத்தரியாமலும்  இருப்பாயாக.  (உபாகமம்  15:19)

un  aadumaaduga'lil  thalaiyeet’raagiya  aa'naiyellaam  un  theavanaagiya  karththarukkup  parisuththamaakkakkadavaay;  un  maattin  thalaiyeet’rai  vealaiko'l'laamalum,  un  aattin  thalaiyeet’rai  mayir  kaththariyaamalum  iruppaayaaga.  (ubaagamam  15:19)

கர்த்தர்  தெரிந்துகொள்ளும்  ஸ்தலத்திலே  வருஷந்தோறும்  நீயும்  உன்  வீட்டாருமாய்  உன்  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  அப்படிப்பட்டவைகளைப்  புசிக்கக்கடவீர்கள்.  (உபாகமம்  15:20)

karththar  therinthuko'l'lum  sthalaththilea  varushanthoa’rum  neeyum  un  veettaarumaay  un  theavanaagiya  karththarudaiya  sannithiyil  appadippattavaiga'laip  pusikkakkadaveerga'l.  (ubaagamam  15:20)

அதற்கு  முடம்  குருடு  முதலான  யாதொரு  பழுது  இருந்தால்,  அதை  உன்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பலியிடவேண்டாம்.  (உபாகமம்  15:21)

atha’rku  mudam  kurudu  muthalaana  yaathoru  pazhuthu  irunthaal,  athai  un  theavanaagiya  karththarukkup  baliyidavea'ndaam.  (ubaagamam  15:21)

அப்படிப்பட்டதை  நீ  உன்  வாசல்களிலே,  கலைமானையும்  வெளிமானையும்  புசிப்பதுபோலப்  புசிக்கலாம்;  தீட்டுப்பட்டவனும்  தீட்டுப்படாதவனும்  அதைப்  புசிக்கலாம்.  (உபாகமம்  15:22)

appadippattathai  nee  un  vaasalga'lilea,  kalaimaanaiyum  ve'limaanaiyum  pusippathupoalap  pusikkalaam;  theettuppattavanum  theettuppadaathavanum  athaip  pusikkalaam.  (ubaagamam  15:22)

அதின்  இரத்தத்தைமாத்திரம்  சாப்பிடாமல்,  அதைத்  தண்ணீரைப்போலத்  தரையிலே  ஊற்றிவிடக்கடவாய்.  (உபாகமம்  15:23)

athin  iraththaththaimaaththiram  saappidaamal,  athaith  tha'n'neeraippoalath  tharaiyilea  oot’rividakkadavaay.  (ubaagamam  15:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!