Friday, August 19, 2016

Rooth 4 | ரூத் 4 | Ruth 4

போவாஸ்  பட்டணவாசலில்  போய்,  உட்கார்ந்துகொண்டிருந்தான்;  அப்பொழுது  போவாஸ்  சொல்லியிருந்த  அந்தச்  சுதந்தரவாளி  அந்த  வழியே  வந்தான்;  அவனை  நோக்கி:  ஓய்,  என்று  பேர்  சொல்லிக்  கூப்பிட்டு,  இங்கே  வந்து  சற்று  உட்காரும்  என்றான்;  அவன்  வந்து  உட்கார்ந்தான்.  (ரூத்  4:1)

boavaas  patta'navaasalil  poay,  udkaarnthuko'ndirunthaan;  appozhuthu  boavaas  solliyiruntha  anthach  suthantharavaa'li  antha  vazhiyea  vanthaan;  avanai  noakki:  oay,  en’ru  pear  sollik  kooppittu,  inggea  vanthu  sat’ru  udkaarum  en’raan;  avan  vanthu  udkaarnthaan.  (rooth  4:1)

அப்பொழுது  அவன்  பட்டணத்து  மூப்பரானவர்களில்  பத்துப்பேரை  அழைத்து,  இங்கே  உட்காருங்கள்  என்றான்;  அவர்களும்  உட்கார்ந்தார்கள்.  (ரூத்  4:2)

appozhuthu  avan  patta'naththu  moopparaanavarga'lil  paththuppearai  azhaiththu,  inggea  udkaarungga'l  en’raan;  avarga'lum  udkaarnthaarga'l.  (rooth  4:2)

அப்பொழுது  அவன்  அந்தச்  சுதந்தரவாளியை  நோக்கி:  எலிமெலேக்  என்னும்  நம்முடைய  சகோதரனுக்கு  இருந்த  வயல்நிலத்தின்  பங்கை,  மோவாப்  தேசத்திலிருந்து  திரும்பிவந்த  நகோமி  விற்கப்போகிறாள்.  (ரூத்  4:3)

appozhuthu  avan  anthach  suthantharavaa'liyai  noakki:  elimeleak  ennum  nammudaiya  sagoatharanukku  iruntha  vayalnilaththin  panggai,  moavaab  theasaththilirunthu  thirumbivantha  nagoami  vi’rkappoagi’raa'l.  (rooth  4:3)

ஆகையால்  நீர்  அதை  ஊராருக்கு  முன்பாகவும்,  என்  ஜனத்தின்  மூப்பருக்கு  முன்பாகவும்  வாங்கிக்கொள்ளும்படி  உமக்கு  அறியப்பண்ணவேண்டும்  என்றிருந்தேன்;  நீர்  அதைச்  சுதந்தரமுறையாக  மீட்டுக்கொள்ள  மனதிருந்தால்,  மீட்டுக்கொள்ளும்;  அதை  மீட்டுக்கொள்ள  மனதில்லாதிருந்தால்,  நான்  அதை  அறியும்படிக்கு  எனக்குச்  சொல்லும்;  உம்மையும்  உமக்குப்பின்பு  என்னையும்  தவிர,  அதை  மீட்கத்தக்கவன்  வேறொருவனும்  இல்லை  என்றான்;  அதற்கு  அவன்:  நான்  அதை  மீட்டுக்கொள்ளுகிறேன்  என்றான்.  (ரூத்  4:4)

aagaiyaal  neer  athai  ooraarukku  munbaagavum,  en  janaththin  moopparukku  munbaagavum  vaanggikko'l'lumpadi  umakku  a’riyappa'n'navea'ndum  en’rirunthean;  neer  athaich  suthantharamu’raiyaaga  meettukko'l'la  manathirunthaal,  meettukko'l'lum;  athai  meettukko'l'la  manathillaathirunthaal,  naan  athai  a’riyumpadikku  enakkuch  sollum;  ummaiyum  umakkuppinbu  ennaiyum  thavira,  athai  meedkaththakkavan  vea’roruvanum  illai  en’raan;  atha’rku  avan:  naan  athai  meettukko'l'lugi’rean  en’raan.  (rooth  4:4)

அப்பொழுது  போவாஸ்:  நீர்  நகோமியின்  கையிலே  அந்த  வயல்நிலத்தை  வாங்குகிற  நாளிலே  மரித்தவனுடைய  சுதந்தரத்தில்  அவன்  பேரை  நிலைநிற்கப்பண்ணும்படிக்கு,  அதை  மரித்தவன்  மனைவியாகிய  மோவாபிய  ஸ்திரீயான  ரூத்  கையிலும்  வாங்கவேண்டியது  என்றான்.  (ரூத்  4:5)

appozhuthu  boavaas:  neer  nagoamiyin  kaiyilea  antha  vayalnilaththai  vaanggugi’ra  naa'lilea  mariththavanudaiya  suthantharaththil  avan  pearai  nilaini’rkappa'n'numpadikku,  athai  mariththavan  manaiviyaagiya  moavaabiya  sthireeyaana  rooth  kaiyilum  vaanggavea'ndiyathu  en’raan.  (rooth  4:5)

அப்பொழுது  அந்தச்  சுதந்தரவாளி:  நான்  என்  சுதந்தரத்தைக்  கெடுக்காதபடிக்கு,  நான்  அதை  மீட்டுக்கொள்ளமாட்டேன்;  நான்  மீட்கத்தக்கதை  நீர்  மீட்டுக்கொள்ளும்;  நான்  அதை  மீட்டுக்கொள்ளமாட்டேன்  என்றான்.  (ரூத்  4:6)

appozhuthu  anthach  suthantharavaa'li:  naan  en  suthantharaththaik  kedukkaathapadikku,  naan  athai  meettukko'l'lamaattean;  naan  meedkaththakkathai  neer  meettukko'l'lum;  naan  athai  meettukko'l'lamaattean  en’raan.  (rooth  4:6)

மீட்கிறதிலும்  மாற்றுகிறதிலும்  சகல  காரியத்தையும்  உறுதிப்படுத்தும்படிக்கு,  இஸ்ரவேலிலே  பூர்வகால  வழக்கம்  என்னவென்றால்,  ஒருவன்  தன்  பாதரட்சையைக்  கழற்றி,  மற்றவனுக்குக்  கொடுப்பான்,  இது  இஸ்ரவேலிலே  வழங்கின  உறுதிப்பாடு.  (ரூத்  4:7)

meedki’rathilum  maat’rugi’rathilum  sagala  kaariyaththaiyum  u’ruthippaduththumpadikku,  isravealilea  poorvakaala  vazhakkam  ennaven’raal,  oruvan  than  paatharadchaiyaik  kazhat’ri,  mat’ravanukkuk  koduppaan,  ithu  isravealilea  vazhanggina  u’ruthippaadu.  (rooth  4:7)

அப்படியே  அந்தச்  சுதந்தரவாளி  போவாசை  நோக்கி:  நீர்  அதை  வாங்கிக்கொள்ளும்  என்று  சொல்லி,  தன்  பாதரட்சையைக்  கழற்றிப்  போட்டான்.  (ரூத்  4:8)

appadiyea  anthach  suthantharavaa'li  boavaasai  noakki:  neer  athai  vaanggikko'l'lum  en’ru  solli,  than  paatharadchaiyaik  kazhat’rip  poattaan.  (rooth  4:8)

அப்பொழுது  போவாஸ்  மூப்பரையும்  சகல  ஜனங்களையும்  நோக்கி:  எலிமெலேக்குக்கு  இருந்த  எல்லாவற்றையும்  கிலியோனுக்கும்  மக்லோனுக்கும்  இருந்த  எல்லாவற்றையும்  நகோமியின்  கையிலே  வாங்கிக்கொண்டேன்  என்பதற்கு  இன்றையதினம்  நீங்கள்  சாட்சி.  (ரூத்  4:9)

appozhuthu  boavaas  moopparaiyum  sagala  janangga'laiyum  noakki:  elimeleakkukku  iruntha  ellaavat’raiyum  kiliyoanukkum  makloanukkum  iruntha  ellaavat’raiyum  nagoamiyin  kaiyilea  vaanggikko'ndean  enbatha’rku  in’raiyathinam  neengga'l  saadchi.  (rooth  4:9)

இதுவுமல்லாமல்,  மரித்தவனுடைய  சகோதரருக்குள்ளும்,  ஊராருக்குள்ளும்,  அவனுடைய  பேர்  அற்றுப்போகாமல்,  மரித்தவனுடைய  சுதந்தரத்திலே  அவன்  பேரை  நிலைநிறுத்த,  நான்  மக்லோனின்  மனைவியாயிருந்த  மோவாபிய  ஸ்திரீயான  ரூத்தை  எனக்கு  மனைவியாகக்  கொண்டேன்;  அதற்கும்  இன்றையதினம்  நீங்கள்  சாட்சி  என்றான்.  (ரூத்  4:10)

ithuvumallaamal,  mariththavanudaiya  sagoathararukku'l'lum,  ooraarukku'l'lum,  avanudaiya  pear  at’ruppoagaamal,  mariththavanudaiya  suthantharaththilea  avan  pearai  nilaini’ruththa,  naan  makloanin  manaiviyaayiruntha  moavaabiya  sthireeyaana  rooththai  enakku  manaiviyaagak  ko'ndean;  atha’rkum  in’raiyathinam  neengga'l  saadchi  en’raan.  (rooth  4:10)

அப்பொழுது  ஒலிமுகவாசலில்  இருக்கிற  சகல  ஜனங்களும்  மூப்பரானவர்களும்  அவனை  நோக்கி:  நாங்கள்  சாட்சிதான்;  உன்  வீட்டிலே  வருகிற  மனைவியைக்  கர்த்தர்  இஸ்ரவேல்  வீட்டைக்  கட்டுவித்த  இரண்டுபேராகிய  ராகேலைப்போலவும்  லேயாளைப்போலவும்  வாழ்ந்திருக்கச்  செய்வாராக;  நீ  எப்பிராத்தாவிலே  பாக்கியவானாயிருந்து,  பெத்லெகேமிலே  புகழ்பெற்றிருக்கக்கடவாய்.  (ரூத்  4:11)

appozhuthu  olimugavaasalil  irukki’ra  sagala  janangga'lum  moopparaanavarga'lum  avanai  noakki:  naangga'l  saadchithaan;  un  veettilea  varugi’ra  manaiviyaik  karththar  israveal  veettaik  kattuviththa  ira'ndupearaagiya  raakealaippoalavum  leayaa'laippoalavum  vaazhnthirukkach  seyvaaraaga;  nee  eppiraaththaavilea  baakkiyavaanaayirunthu,  bethleheamilea  pugazhpet’rirukkakkadavaay.  (rooth  4:11)

இந்தப்  பெண்ணிடத்திலே  கர்த்தர்  உனக்கு  அருளிச்செய்யப்போகிற  சந்தானத்தினாலே,  உன்  வீடு  தாமார்  யூதாவுக்குப்  பெற்ற  பேரேசின்  வீட்டைப்போல  ஆகக்கடவது  என்றார்கள்.  (ரூத்  4:12)

inthap  pe'n'nidaththilea  karththar  unakku  aru'lichseyyappoagi’ra  santhaanaththinaalea,  un  veedu  thaamaar  yoothaavukkup  pet’ra  peareasin  veettaippoala  aagakkadavathu  en’raarga'l.  (rooth  4:12)

போவாஸ்  ரூத்தை  விவாகம்பண்ணினான்;  அவள்  அவனுக்கு  மனைவியானாள்;  அவன்  அவளிடத்தில்  பிரவேசித்தபோது,  அவள்  கர்ப்பந்தரித்து,  ஒரு  ஆண்பிள்ளையைப்  பெறக்  கர்த்தர்  அநுக்கிரகம்பண்ணினார்.  (ரூத்  4:13)

boavaas  rooththai  vivaagampa'n'ninaan;  ava'l  avanukku  manaiviyaanaa'l;  avan  ava'lidaththil  piraveasiththapoathu,  ava'l  karppanthariththu,  oru  aa'npi'l'laiyaip  pe’rak  karththar  anukkiragampa'n'ninaar.  (rooth  4:13)

அப்பொழுது  ஸ்திரீகள்  நகோமியைப்  பார்த்து:  சுதந்தரவாளி  அற்றுப்போகாதபடிக்கு  இன்று  உனக்குத்  தயைசெய்த  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  அவன்  பேர்  இஸ்ரவேலிலே  பிரபலமாகக்கடவது.  (ரூத்  4:14)

appozhuthu  sthireega'l  nagoamiyaip  paarththu:  suthantharavaa'li  at’ruppoagaathapadikku  in’ru  unakkuth  thayaiseytha  karththarukku  sthoaththiram;  avan  pear  isravealilea  pirabalamaagakkadavathu.  (rooth  4:14)

அவன்  உன்  ஆத்துமாவுக்கு  ஆறுதல்  செய்கிறவனும்,  உன்  முதிர்வயதிலே  உன்னை  ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்;  உன்னைச்  சிநேகித்து,  ஏழு  குமாரரைப்பார்க்கிலும்  உனக்கு  அருமையாயிருக்கிற  உன்  மருமகள்  அவனைப்  பெற்றாளே  என்றார்கள்.  (ரூத்  4:15)

avan  un  aaththumaavukku  aa’ruthal  seygi’ravanum,  un  muthirvayathilea  unnai  aatharikki’ravanumaayirukkakkadavan;  unnaich  sineagiththu,  eazhu  kumaararaippaarkkilum  unakku  arumaiyaayirukki’ra  un  marumaga'l  avanaip  pet’raa'lea  en’raarga'l.  (rooth  4:15)

நகோமி  அந்தப்  பிள்ளையை  எடுத்து,  தன்  மடியிலே  வைத்து,  அதை  வளர்க்கிற  தாயானாள்.  (ரூத்  4:16)

nagoami  anthap  pi'l'laiyai  eduththu,  than  madiyilea  vaiththu,  athai  va'larkki’ra  thaayaanaa'l.  (rooth  4:16)

அயல்வீட்டுக்காரிகள்  நகோமிக்கு  ஒரு  ஆண்பிள்ளை  பிறந்தது  என்று  வாழ்த்தி,  அதற்கு  ஓபேத்  என்று  பேரிட்டார்கள்;  அவன்  தாவீதின்  தகப்பனாகிய  ஈசாயின்  தகப்பன்.  (ரூத்  4:17)

ayalveettukkaariga'l  nagoamikku  oru  aa'npi'l'lai  pi’ranthathu  en’ru  vaazhththi,  atha’rku  oabeath  en’ru  pearittaarga'l;  avan  thaaveethin  thagappanaagiya  eesaayin  thagappan.  (rooth  4:17)

பேரேசுடைய  சந்ததியின்  வரலாறு:  பேரேஸ்  எஸ்ரோனைப்  பெற்றான்.  (ரூத்  4:18)

peareasudaiya  santhathiyin  varalaa’ru:  peareas  esroanaip  pet’raan.  (rooth  4:18)

எஸ்ரோன்  ராமைப்  பெற்றான்;  ராம்  அம்மினதாபைப்  பெற்றான்.  (ரூத்  4:19)

esroan  raamaip  pet’raan;  raam  amminathaabaip  pet’raan.  (rooth  4:19)

அம்மினதாப்  நகசோனைப்  பெற்றான்;  நகசோன்  சல்மோனைப்  பெற்றான்.  (ரூத்  4:20)

amminathaab  nagasoanaip  pet’raan;  nagasoan  salmoanaip  pet’raan.  (rooth  4:20)

சல்மோன்  போவாசைப்  பெற்றான்;  போவாஸ்  ஓபேதைப்  பெற்றான்.  (ரூத்  4:21)

salmoan  boavaasaip  pet’raan;  boavaas  oabeathaip  pet’raan.  (rooth  4:21)

ஓபேத்  ஈசாயைப்  பெற்றான்;  ஈசாய்  தாவீதைப்  பெற்றான்.  (ரூத்  4:22)

oabeath  eesaayaip  pet’raan;  eesaay  thaaveethaip  pet’raan.  (rooth  4:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!