Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 8 | நியாயாதிபதிகள் 8 | Judges 8

அப்பொழுது  எப்பிராயீம்  மனுஷர்  அவனை  நோக்கி:  நீ  மீதியானியர்மேல்  யுத்தம்பண்ணப்போகிறபோது,  எங்களை  அழைப்பிக்கவில்லையே,  இப்படி  நீ  எங்களுக்குச்  செய்தது  என்ன  என்று,  அவனோடே  பலத்த  வாக்குவாதம்பண்ணினார்கள்.  (நியாயாதிபதிகள்  8:1)

appozhuthu  eppiraayeem  manushar  avanai  noakki:  nee  meethiyaaniyarmeal  yuththampa'n'nappoagi’rapoathu,  engga'lai  azhaippikkavillaiyea,  ippadi  nee  engga'lukkuch  seythathu  enna  en’ru,  avanoadea  balaththa  vaakkuvaathampa'n'ninaarga'l.  (niyaayaathibathiga’l  8:1)

அதற்கு  அவன்:  நீங்கள்  செய்ததற்கு  நான்  செய்தது  எம்மாத்திரம்?  அபியேஸ்ரியரின்  திராட்சப்பழத்தின்  முழு  அறுப்பைப்பார்க்கிலும்,  எப்பிராயீமரின்  மீதியான  அறுப்பு  அதிகம்  அல்லவா?  (நியாயாதிபதிகள்  8:2)

atha’rku  avan:  neengga'l  seythatha’rku  naan  seythathu  emmaaththiram?  abiyeasriyarin  thiraadchappazhaththin  muzhu  a’ruppaippaarkkilum,  eppiraayeemarin  meethiyaana  a’ruppu  athigam  allavaa?  (niyaayaathibathiga’l  8:2)

தேவன்  உங்கள்  கையிலே  மீதியானியரின்  அதிபதிகளாகிய  ஓரேபையும்  சேபையும்  ஒப்புக்கொடுத்தாரே;  நீங்கள்  செய்ததிலும்  நான்  செய்யக்கூடியது  எம்மாத்திரம்  என்றான்;  இந்த  வார்த்தையை  அவன்  சொன்னபோது,  அவன்மேலிருந்த  அவர்களுடைய  கோபம்  ஆறிற்று.  (நியாயாதிபதிகள்  8:3)

theavan  ungga'l  kaiyilea  meethiyaaniyarin  athibathiga'laagiya  oareabaiyum  seabaiyum  oppukkoduththaarea;  neengga'l  seythathilum  naan  seyyakkoodiyathu  emmaaththiram  en’raan;  intha  vaarththaiyai  avan  sonnapoathu,  avanmealiruntha  avarga'ludaiya  koabam  aa’rit’ru.  (niyaayaathibathiga’l  8:3)

கிதியோன்  யோர்தானுக்கு  வந்தபோது,  அவனும்  அவனோடிருந்த  முந்நூறுபேரும்  அதைக்  கடந்துபோய்,  விடாய்த்திருந்தும்  (சத்துருவை)  பின்தொடர்ந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  8:4)

kithiyoan  yoarthaanukku  vanthapoathu,  avanum  avanoadiruntha  munnoo’rupearum  athaik  kadanthupoay,  vidaayththirunthum  (saththuruvai)  pinthodarnthaarga'l.  (niyaayaathibathiga’l  8:4)

அவன்  சுக்கோத்தின்  மனுஷரை  நோக்கி:  என்னோடிருக்கிற  ஜனத்திற்குச்  சில  அப்பங்களைக்  கொடுங்கள்;  அவர்கள்  விடாய்த்திருக்கிறார்கள்,  நான்  மீதியானியரின்  ராஜாக்களாகிய  சேபாவையும்  சல்முனாவையும்  பின்தொடருகிறேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  8:5)

avan  sukkoaththin  manusharai  noakki:  ennoadirukki’ra  janaththi’rkuch  sila  appangga'laik  kodungga'l;  avarga'l  vidaayththirukki’raarga'l,  naan  meethiyaaniyarin  raajaakka'laagiya  seabaavaiyum  salmunaavaiyum  pinthodarugi’rean  en’raan.  (niyaayaathibathiga’l  8:5)

அதற்குச்  சுக்கோத்தின்  பிரபுக்கள்:  உன்  சேனைக்கு  நாங்கள்  அப்பம்  கொடுக்கிறதற்குச்  சேபா  சல்முனா  என்பவர்களின்  கை  உன்  கைவசமாயிற்றோ  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  8:6)

atha’rkuch  sukkoaththin  pirabukka'l:  un  seanaikku  naangga'l  appam  kodukki’ratha’rkuch  seabaa  salmunaa  enbavarga'lin  kai  un  kaivasamaayit’roa  en’raarga'l.  (niyaayaathibathiga’l  8:6)

அப்பொழுது  கிதியோன்  அவர்களை  நோக்கி:  கர்த்தர்  சேபாவையும்  சல்முனாவையும்  என்  கையில்  ஒப்புக்கொடுக்கும்போது,  உங்கள்  மாம்சத்தை  வனாந்தரத்தின்  முள்ளுகளாலும்  நெரிஞ்சில்களாலும்  கிழித்துவிடுவேன்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  8:7)

appozhuthu  kithiyoan  avarga'lai  noakki:  karththar  seabaavaiyum  salmunaavaiyum  en  kaiyil  oppukkodukkumpoathu,  ungga'l  maamsaththai  vanaantharaththin  mu'l'luga'laalum  nerignchilga'laalum  kizhiththuviduvean  en’ru  solli,  (niyaayaathibathiga’l  8:7)

அவ்விடம்  விட்டு,  பெனூவேலுக்குப்  போய்,  அவ்வூராரிடத்தில்  அந்தப்படியே  கேட்டான்;  சுக்கோத்தின்  மனுஷர்  பிரதியுத்தரமாகச்  சொன்னபடியே  பெனூவேலின்  மனுஷரும்  அவனுக்குச்  சொன்னார்கள்.  (நியாயாதிபதிகள்  8:8)

avvidam  vittu,  penoovealukkup  poay,  avvooraaridaththil  anthappadiyea  keattaan;  sukkoaththin  manushar  pirathiyuththaramaagach  sonnapadiyea  penoovealin  manusharum  avanukkuch  sonnaarga'l.  (niyaayaathibathiga’l  8:8)

அப்பொழுது  அவன்,  பெனூவேலின்  மனுஷரைப்  பார்த்து:  நான்  சமாதானத்தோடே  திரும்பிவரும்போது,  இந்தக்  கோபுரத்தை  இடித்துப்போடுவேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  8:9)

appozhuthu  avan,  penoovealin  manusharaip  paarththu:  naan  samaathaanaththoadea  thirumbivarumpoathu,  inthak  koapuraththai  idiththuppoaduvean  en’raan.  (niyaayaathibathiga’l  8:9)

சேபாவும்  சல்முனாவும்  அவர்களோடேகூட  அவர்களுடைய  சேனைகளும்  ஏறக்குறைய  பதினையாயிரம்பேர்  கர்கோரில்  இருந்தார்கள்;  பட்டயம்  உருவத்தக்க  லட்சத்து  இருபதினாயிரம்பேர்  விழுந்தபடியால்,  கிழக்கத்தியாரின்  சகல  சேனையிலும்  இவர்கள்மாத்திரம்  மீந்திருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  8:10)

seabaavum  salmunaavum  avarga'loadeakooda  avarga'ludaiya  seanaiga'lum  ea’rakku’raiya  pathinaiyaayirampear  karkoaril  irunthaarga'l;  pattayam  uruvaththakka  ladchaththu  irubathinaayirampear  vizhunthapadiyaal,  kizhakkaththiyaarin  sagala  seanaiyilum  ivarga'lmaaththiram  meenthirunthaarga'l.  (niyaayaathibathiga’l  8:10)

கிதியோன்  கூடாரங்களிலே  குடியிருக்கிறவர்கள்  வழியாய்  நோபாகுக்கும்,  யொகிபெயாவுக்கும்  கிழக்கே  போய்,  அந்தச்  சேனை  பயமில்லை  என்றிருந்தபோது,  அதை  முறிய  அடித்தான்.  (நியாயாதிபதிகள்  8:11)

kithiyoan  koodaarangga'lilea  kudiyirukki’ravarga'l  vazhiyaay  noabaagukkum,  yogibeyaavukkum  kizhakkea  poay,  anthach  seanai  bayamillai  en’rirunthapoathu,  athai  mu’riya  adiththaan.  (niyaayaathibathiga’l  8:11)

சேபாவும்  சல்முனாவும்  ஓடிப்போனார்கள்;  அவனோ  அவர்களைத்  தொடர்ந்து,  சேபா  சல்முனா  என்னும்  மீதியானியரின்  இரண்டு  ராஜாக்களையும்  பிடித்து,  சேனை  முழுவதையும்  கலங்கடித்தான்.  (நியாயாதிபதிகள்  8:12)

seabaavum  salmunaavum  oadippoanaarga'l;  avanoa  avarga'laith  thodarnthu,  seabaa  salmunaa  ennum  meethiyaaniyarin  ira'ndu  raajaakka'laiyum  pidiththu,  seanai  muzhuvathaiyum  kalanggadiththaan.  (niyaayaathibathiga’l  8:12)

யோவாசின்  குமாரனாகிய  கிதியோன்  யுத்தம்பண்ணி,  சூரியன்  உதிக்கும்  முன்னே  திரும்பிவந்தபோது,  (நியாயாதிபதிகள்  8:13)

yoavaasin  kumaaranaagiya  kithiyoan  yuththampa'n'ni,  sooriyan  uthikkum  munnea  thirumbivanthapoathu,  (niyaayaathibathiga’l  8:13)

சுக்கோத்தின்  மனுஷரில்  ஒரு  வாலிபனைப்  பிடித்து,  அவனிடத்தில்  விசாரித்தான்;  அவன்  சுக்கோத்தின்  பிரபுக்களும்  அதின்  மூப்பருமாகிய  எழுபத்தேழு  மனுஷரின்  பேரை  அவனுக்கு  எழுதிக்கொடுத்தான்.  (நியாயாதிபதிகள்  8:14)

sukkoaththin  manusharil  oru  vaalibanaip  pidiththu,  avanidaththil  visaariththaan;  avan  sukkoaththin  pirabukka'lum  athin  moopparumaagiya  ezhubaththeazhu  manusharin  pearai  avanukku  ezhuthikkoduththaan.  (niyaayaathibathiga’l  8:14)

அவன்  சுக்கோத்து  ஊராரிடத்தில்  வந்து:  இதோ,  விடாய்த்திருக்கிற  உன்  மனுஷருக்கு  நாங்கள்  அப்பம்  கொடுக்கிறதற்குச்  சேபா  சல்முனா  என்பவர்களின்  கை  உன்  கைவசமாயிற்றோ  என்று  நீங்கள்  என்னை  நிந்தித்துச்  சொன்ன  சேபாவும்  சல்முனாவும்  இங்கே  இருக்கிறார்கள்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  8:15)

avan  sukkoaththu  ooraaridaththil  vanthu:  ithoa,  vidaayththirukki’ra  un  manusharukku  naangga'l  appam  kodukki’ratha’rkuch  seabaa  salmunaa  enbavarga'lin  kai  un  kaivasamaayit’roa  en’ru  neengga'l  ennai  ninthiththuch  sonna  seabaavum  salmunaavum  inggea  irukki’raarga'l  en’ru  solli,  (niyaayaathibathiga’l  8:15)

பட்டணத்தின்  மூப்பரைப்  பிடித்து,  வனாந்தரத்தின்  முள்ளுகளையும்  நெரிஞ்சில்களையும்  கொண்டுவந்து,  அவைகளால்  சுக்கோத்தின்  மனுஷருக்குப்  புத்திவரப்பண்ணி,  (நியாயாதிபதிகள்  8:16)

patta'naththin  moopparaip  pidiththu,  vanaantharaththin  mu'l'luga'laiyum  nerignchilga'laiyum  ko'nduvanthu,  avaiga'laal  sukkoaththin  manusharukkup  buththivarappa'n'ni,  (niyaayaathibathiga’l  8:16)

பெனூவேலின்  கோபுரத்தை  இடித்து,  அவ்வூர்  மனுஷரையும்  கொன்றுபோட்டான்.  (நியாயாதிபதிகள்  8:17)

penoovealin  koapuraththai  idiththu,  avvoor  manusharaiyum  kon’rupoattaan.  (niyaayaathibathiga’l  8:17)

பின்பு  அவன்  சேபாவையும்  சல்முனாவையும்  நோக்கி:  நீங்கள்  தாபோரிலே  கொன்றுபோட்ட  அந்த  மனுஷர்  எப்படிப்பட்டவர்கள்  என்று  கேட்டான்;  அதற்கு  அவர்கள்:  நீர்  எப்படிப்பட்டவரோ  அவர்களும்  அப்படிப்பட்டவர்களே;  ஒவ்வொருவனும்  பார்வைக்கு  ராஜகுமாரனைப்போலிருந்தான்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  8:18)

pinbu  avan  seabaavaiyum  salmunaavaiyum  noakki:  neengga'l  thaaboarilea  kon’rupoatta  antha  manushar  eppadippattavarga'l  en’ru  keattaan;  atha’rku  avarga'l:  neer  eppadippattavaroa  avarga'lum  appadippattavarga'lea;  ovvoruvanum  paarvaikku  raajakumaaranaippoalirunthaan  en’raarga'l.  (niyaayaathibathiga’l  8:18)

அப்பொழுது  அவன்:  அவர்கள்  என்  சகோதரரும்  என்  தாயின்  பிள்ளைகளுமாயிருந்தார்கள்;  அவர்களை  உயிரோடே  வைத்திருந்தீர்களானால்,  உங்களைக்  கொல்லாதிருப்பேன்  என்று  கர்த்தரின்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  8:19)

appozhuthu  avan:  avarga'l  en  sagoathararum  en  thaayin  pi'l'laiga'lumaayirunthaarga'l;  avarga'lai  uyiroadea  vaiththiruntheerga'laanaal,  ungga'laik  kollaathiruppean  en’ru  karththarin  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  solli,  (niyaayaathibathiga’l  8:19)

தன்  மூத்தகுமாரனாகிய  யெத்தேரை  நோக்கி:  நீ  எழுந்து,  இவர்களை  வெட்டிப்போடு  என்றான்;  அந்த  வாலிபன்  இளைஞனானபடியால்  பயந்து  தன்  பட்டயத்தை  உருவாதிருந்தான்.  (நியாயாதிபதிகள்  8:20)

than  mooththakumaaranaagiya  yeththearai  noakki:  nee  ezhunthu,  ivarga'lai  vettippoadu  en’raan;  antha  vaaliban  i'laignanaanapadiyaal  bayanthu  than  pattayaththai  uruvaathirunthaan.  (niyaayaathibathiga’l  8:20)

அப்பொழுது  சேபாவும்  சல்முனாவும்:  நீரே  எழுந்து  எங்கள்மேல்  விழும்;  மனுஷன்  எப்படியோ  அப்படியே  அவன்  பெலனும்  இருக்கும்  என்றார்கள்;  கிதியோன்  எழுந்து,  சேபாவையும்  சல்முனாவையும்  கொன்றுபோட்டு,  அவர்கள்  ஒட்டகங்களின்  கழுத்துகளில்  இருந்த  சாந்துக்காறைகளை  எடுத்துக்கொண்டான்.  (நியாயாதிபதிகள்  8:21)

appozhuthu  seabaavum  salmunaavum:  neerea  ezhunthu  engga'lmeal  vizhum;  manushan  eppadiyoa  appadiyea  avan  belanum  irukkum  en’raarga'l;  kithiyoan  ezhunthu,  seabaavaiyum  salmunaavaiyum  kon’rupoattu,  avarga'l  ottagangga'lin  kazhuththuga'lil  iruntha  saanthukkaa’raiga'lai  eduththukko'ndaan.  (niyaayaathibathiga’l  8:21)

அப்பொழுது  இஸ்ரவேல்  மனுஷர்  கிதியோனை  நோக்கி:  நீர்  எங்களை  மீதியானியர்  கைக்கு  நீங்கலாக்கிவிட்டபடியினால்  நீரும்  உம்முடைய  குமாரனும்,  உம்முடைய  குமாரனின்  குமாரனும்,  எங்களை  ஆளக்கடவீர்கள்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  8:22)

appozhuthu  israveal  manushar  kithiyoanai  noakki:  neer  engga'lai  meethiyaaniyar  kaikku  neenggalaakkivittapadiyinaal  neerum  ummudaiya  kumaaranum,  ummudaiya  kumaaranin  kumaaranum,  engga'lai  aa'lakkadaveerga'l  en’raarga'l.  (niyaayaathibathiga’l  8:22)

அதற்குக்  கிதியோன்:  நான்  உங்களை  ஆளமாட்டேன்;  என்  குமாரனும்  உங்களை  ஆளமாட்டான்;  கர்த்தரே  உங்களை  ஆளுவாராக  என்றான்.  (நியாயாதிபதிகள்  8:23)

atha’rkuk  kithiyoan:  naan  ungga'lai  aa'lamaattean;  en  kumaaranum  ungga'lai  aa'lamaattaan;  karththarea  ungga'lai  aa'luvaaraaga  en’raan.  (niyaayaathibathiga’l  8:23)

பின்பு  கிதியோன்  அவர்களை  நோக்கி:  உங்களிடத்தில்  ஒரு  காரியத்தைக்  கேட்கிறேன்;  நீங்கள்  அவரவர்  கொள்ளையிட்ட  கடுக்கன்களை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்.  அவர்கள்  இஸ்மவேலராயிருந்தபடியினால்  அவர்களிடத்தில்  பொன்கடுக்கன்கள்  இருந்தது.  (நியாயாதிபதிகள்  8:24)

pinbu  kithiyoan  avarga'lai  noakki:  ungga'lidaththil  oru  kaariyaththaik  keadki’rean;  neengga'l  avaravar  ko'l'laiyitta  kadukkanga'lai  ennidaththil  ko'nduvaarungga'l  en’raan.  avarga'l  ismavealaraayirunthapadiyinaal  avarga'lidaththil  ponkadukkanga'l  irunthathu.  (niyaayaathibathiga’l  8:24)

இஸ்ரவேலர்:  சந்தோஷமாய்க்  கொடுப்போம்  என்று  சொல்லி,  ஒரு  வஸ்திரத்தை  விரித்து,  அவரவர்  கொள்ளையிட்ட  கடுக்கன்களை  அதிலே  போட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  8:25)

isravealar:  santhoashamaayk  koduppoam  en’ru  solli,  oru  vasthiraththai  viriththu,  avaravar  ko'l'laiyitta  kadukkanga'lai  athilea  poattaarga'l.  (niyaayaathibathiga’l  8:25)

பிறைச்  சிந்தாக்குகளும்,  ஆரங்களும்,  மீதியானியரின்  ராஜாக்கள்  போர்த்துக்கொண்டிருந்த  இரத்தாம்பரங்களும்,  அவர்களுடைய  ஒட்டகங்களின்  கழுத்துகளிலிருந்த  சரப்பணிகளும்  அல்லாமல்,  அவன்  கேட்டு  வாங்கின  பொன்கடுக்கன்களின்  நிறை  ஆயிரத்து  எழுநூறு  பொன்  சேக்கலின்  நிறையாயிருந்தது.  (நியாயாதிபதிகள்  8:26)

pi’raich  sinthaakkuga'lum,  aarangga'lum,  meethiyaaniyarin  raajaakka'l  poarththukko'ndiruntha  iraththaambarangga'lum,  avarga'ludaiya  ottagangga'lin  kazhuththuga'liliruntha  sarappa'niga'lum  allaamal,  avan  keattu  vaanggina  ponkadukkanga'lin  ni’rai  aayiraththu  ezhunoo’ru  pon  seakkalin  ni’raiyaayirunthathu.  (niyaayaathibathiga’l  8:26)

அதினால்  கிதியோன்  ஒரு  ஏபோத்தை  உண்டாக்கி,  அதைத்  தன்  ஊரான  ஒப்ராவிலே  வைத்தான்;  இஸ்ரவேலரெல்லாரும்  அதைப்  பின்பற்றிச்  சோரம்போனார்கள்;  அது  கிதியோனுக்கும்  அவன்  வீட்டாருக்கும்  கண்ணியாயிற்று.  (நியாயாதிபதிகள்  8:27)

athinaal  kithiyoan  oru  eaboaththai  u'ndaakki,  athaith  than  ooraana  opraavilea  vaiththaan;  isravealarellaarum  athaip  pinpat’rich  soarampoanaarga'l;  athu  kithiyoanukkum  avan  veettaarukkum  ka'n'niyaayit’ru.  (niyaayaathibathiga’l  8:27)

இந்தப்பிரகாரம்  மீதியானியர்  திரும்ப  தலையெடுக்கக்கூடாதபடிக்கு,  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாகத்  தாழ்த்தப்பட்டார்கள்;  தேசமானது  கிதியோனின்  நாட்களில்  நாற்பதுவருஷம்  அமைதலாயிருந்தது.  (நியாயாதிபதிகள்  8:28)

inthappiragaaram  meethiyaaniyar  thirumba  thalaiyedukkakkoodaathapadikku,  israveal  puththirarukku  munbaagath  thaazhththappattaarga'l;  theasamaanathu  kithiyoanin  naadka'lil  naa’rpathuvarusham  amaithalaayirunthathu.  (niyaayaathibathiga’l  8:28)

யோவாசின்  குமாரனாகிய  யெருபாகால்  போய்,  தன்  வீட்டிலே  வாசமாயிருந்தான்.  (நியாயாதிபதிகள்  8:29)

yoavaasin  kumaaranaagiya  yerubaagaal  poay,  than  veettilea  vaasamaayirunthaan.  (niyaayaathibathiga’l  8:29)

கிதியோனுக்கு  அநேகம்  ஸ்திரீகள்  இருந்தார்கள்;  அவனுடைய  கர்ப்பப்பிறப்பான  குமாரர்  எழுபதுபேர்.  (நியாயாதிபதிகள்  8:30)

kithiyoanukku  aneagam  sthireega'l  irunthaarga'l;  avanudaiya  karppappi’rappaana  kumaarar  ezhubathupear.  (niyaayaathibathiga’l  8:30)

சீகேமிலிருந்த  அவனுடைய  மறுமனையாட்டியும்  அவனுக்கு  ஒரு  குமாரனைப்  பெற்றாள்;  அவனுக்கு  அபிமெலேக்கு  என்று  பேரிட்டான்.  (நியாயாதிபதிகள்  8:31)

seekeamiliruntha  avanudaiya  ma’rumanaiyaattiyum  avanukku  oru  kumaaranaip  pet’raa'l;  avanukku  abimeleakku  en’ru  pearittaan.  (niyaayaathibathiga’l  8:31)

பின்பு  யோவாசின்  குமாரனாகிய  கிதியோன்  நல்ல  விருத்தாப்பியத்திலே  மரித்து,  ஒப்ராவிலே  தன்  தகப்பனாகிய  யோவாஸ்  என்னும்  அபியேஸ்ரியனுடைய  கல்லறையில்  அடக்கம்பண்ணப்பட்டான்.  (நியாயாதிபதிகள்  8:32)

pinbu  yoavaasin  kumaaranaagiya  kithiyoan  nalla  viruththaappiyaththilea  mariththu,  opraavilea  than  thagappanaagiya  yoavaas  ennum  abiyeasriyanudaiya  kalla’raiyil  adakkampa'n'nappattaan.  (niyaayaathibathiga’l  8:32)

கிதியோன்  மரித்தபின்  இஸ்ரவேல்  புத்திரர்  திரும்பவும்  பாகால்களைப்  பின்பற்றிச்  சோரம்போய்,  பாகால்பேரீத்தைத்  தங்களுக்குத்  தேவனாக  வைத்துக்கொண்டார்கள்.  (நியாயாதிபதிகள்  8:33)

kithiyoan  mariththapin  israveal  puththirar  thirumbavum  baagaalga'laip  pinpat’rich  soarampoay,  baagaalbeareeththaith  thangga'lukkuth  theavanaaga  vaiththukko'ndaarga'l.  (niyaayaathibathiga’l  8:33)

இஸ்ரவேல்  புத்திரர்  தங்களைச்  சுற்றிலுமிருந்த  தங்கள்  எல்லாச்  சத்துருக்களின்  கையினின்றும்  தங்களை  இரட்சித்த  தங்கள்  தேவனாகிய  கர்த்தரை  நினையாமலும்,  (நியாயாதிபதிகள்  8:34)

israveal  puththirar  thangga'laich  sut’rilumiruntha  thangga'l  ellaach  saththurukka'lin  kaiyinin’rum  thangga'lai  iradchiththa  thangga'l  theavanaagiya  karththarai  ninaiyaamalum,  (niyaayaathibathiga’l  8:34)

கிதியோன்  என்னும்  யெருபாகால்  இஸ்ரவேலுக்குச்  செய்த  சகல  நன்மைக்குந்தக்க  தயவை  அவன்  வீட்டாருக்குப்  பாராட்டாமலும்  போனார்கள்.  (நியாயாதிபதிகள்  8:35)

kithiyoan  ennum  yerubaagaal  isravealukkuch  seytha  sagala  nanmaikkunthakka  thayavai  avan  veettaarukkup  paaraattaamalum  poanaarga'l.  (niyaayaathibathiga’l  8:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!