Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 7 | நியாயாதிபதிகள் 7 | Judges 7

அப்பொழுது  கிதியோனாகிய  யெருபாகாலும்  அவனோடிருந்த  ஜனங்கள்  யாவரும்  காலமே  எழுந்து  புறப்பட்டு,  ஆரோத்  என்னும்  நீரூற்றின்  கிட்டப்  பாளயமிறங்கினார்கள்;  மீதியானியரின்  பாளயம்  அவனுக்கு  வடக்கே  மோரே  மேட்டிற்குப்  பின்னான  பள்ளத்தாக்கிலே  இருந்தது.  (நியாயாதிபதிகள்  7:1)

appozhuthu  kithiyoanaagiya  yerubaagaalum  avanoadiruntha  janangga'l  yaavarum  kaalamea  ezhunthu  pu’rappattu,  aaroath  ennum  neeroot’rin  kittap  paa'layami’rangginaarga'l;  meethiyaaniyarin  paa'layam  avanukku  vadakkea  moarea  meatti’rkup  pinnaana  pa'l'laththaakkilea  irunthathu.  (niyaayaathibathiga’l  7:1)

அப்பொழுது  கர்த்தர்  கிதியோனை  நோக்கி:  நான்  மீதியானியரை  உன்னோடிருக்கிற  ஜனத்தின்  கையில்  ஒப்புக்கொடுக்கிறதற்கு  அவர்கள்  மிகுதியாயிருக்கிறார்கள்;  என்  கை  என்னை  ரட்சித்தது  என்று  இஸ்ரவேல்  எனக்கு  விரோதமாக  வீம்பு  பேசுகிறதற்கு  இடமாகும்.  (நியாயாதிபதிகள்  7:2)

appozhuthu  karththar  kithiyoanai  noakki:  naan  meethiyaaniyarai  unnoadirukki’ra  janaththin  kaiyil  oppukkodukki’ratha’rku  avarga'l  miguthiyaayirukki’raarga'l;  en  kai  ennai  radchiththathu  en’ru  israveal  enakku  viroathamaaga  veembu  peasugi’ratha’rku  idamaagum.  (niyaayaathibathiga’l  7:2)

ஆகையால்  பயமும்  திகிலும்  உள்ளவன்  எவனோ  அவன்  திரும்பி,  கீலேயாத்  மலைகளிலிருந்து  விரைவாய்  ஓடிப்போகக்கடவன்  என்று,  நீ  ஜனங்களின்  செவிகள்  கேட்கப்  பிரசித்தப்படுத்து  என்றார்;  அப்பொழுது  ஜனத்தில்  இருபத்தீராயிரம்  பேர்  திரும்பிப்  போய்விட்டார்கள்;  பதினாயிரம்பேர்  மீதியாயிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  7:3)

aagaiyaal  bayamum  thigilum  u'l'lavan  evanoa  avan  thirumbi,  keeleayaath  malaiga'lilirunthu  viraivaay  oadippoagakkadavan  en’ru,  nee  janangga'lin  seviga'l  keadkap  pirasiththappaduththu  en’raar;  appozhuthu  janaththil  irubaththeeraayiram  pear  thirumbip  poayvittaarga'l;  pathinaayirampear  meethiyaayirunthaarga'l.  (niyaayaathibathiga’l  7:3)

கர்த்தர்  கிதியோனை  நோக்கி:  ஜனங்கள்  இன்னும்  அதிகம்,  அவர்களைத்  தண்ணீரண்டைக்கு  இறங்கிப்போகப்பண்ணு;  அங்கே  அவர்களைப்  பரிட்சித்துக்காட்டுவேன்;  உன்னோடேகூட  வரலாம்  என்று  நான்  யாரைக்  குறிக்கிறேனோ,  அவன்  உன்னோடேகூட  வரக்கடவன்;  உன்னோடேகூட  வரலாகாது  என்று  நான்  யாரைக்  குறிக்கிறேனோ,  அவன்  உன்னோடேகூட  வராதிருக்கக்கடவன்  என்றார்.  (நியாயாதிபதிகள்  7:4)

karththar  kithiyoanai  noakki:  janangga'l  innum  athigam,  avarga'laith  tha'n'neera'ndaikku  i’ranggippoagappa'n'nu;  anggea  avarga'laip  paridchiththukkaattuvean;  unnoadeakooda  varalaam  en’ru  naan  yaaraik  ku’rikki’reanoa,  avan  unnoadeakooda  varakkadavan;  unnoadeakooda  varalaagaathu  en’ru  naan  yaaraik  ku’rikki’reanoa,  avan  unnoadeakooda  varaathirukkakkadavan  en’raar.  (niyaayaathibathiga’l  7:4)

அப்படியே  அவன்  ஜனங்களைத்  தண்ணீரண்டைக்கு  இறங்கிப்போகப்  பண்ணினான்;  அப்பொழுது  கர்த்தர்  கிதியோனை  நோக்கி:  தண்ணீரை  ஒரு  நாய்  நக்கும்  பிரகாரமாக  அதைத்  தன்  நாவினாலே  நக்குகிறவன்  எவனோ  அவனைத்  தனியேயும்,  குடிக்கிறதற்கு  முழங்கால்  ஊன்றிக்  குனிகிறவன்  எவனோ,  அவனைத்  தனியேயும்  நிறுத்து  என்றார்.  (நியாயாதிபதிகள்  7:5)

appadiyea  avan  janangga'laith  tha'n'neera'ndaikku  i’ranggippoagap  pa'n'ninaan;  appozhuthu  karththar  kithiyoanai  noakki:  tha'n'neerai  oru  naay  nakkum  piragaaramaaga  athaith  than  naavinaalea  nakkugi’ravan  evanoa  avanaith  thaniyeayum,  kudikki’ratha’rku  muzhangkaal  oon’rik  kunigi’ravan  evanoa,  avanaith  thaniyeayum  ni’ruththu  en’raar.  (niyaayaathibathiga’l  7:5)

தங்கள்  கையால்  அள்ளி,  தங்கள்  வாய்க்கெடுத்து,  நக்கிக்கொண்டவர்களின்  லக்கம்  முந்நூறுபேர்;  மற்ற  ஜனங்களெல்லாம்  தண்ணீர்  குடிக்கிறதற்கு  முழங்கால்  ஊன்றிக்  குனிந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  7:6)

thangga'l  kaiyaal  a'l'li,  thangga'l  vaaykkeduththu,  nakkikko'ndavarga'lin  lakkam  munnoo’rupear;  mat’ra  janangga'lellaam  tha'n'neer  kudikki’ratha’rku  muzhangkaal  oon’rik  kuninthaarga'l.  (niyaayaathibathiga’l  7:6)

அப்பொழுது  கர்த்தர்  கிதியோனை  நோக்கி:  நக்கிக்குடித்த  அந்த  முந்நூறுபேராலே  நான்  உங்களை  இரட்சித்து,  மீதியானியரை  உன்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்,  மற்ற  ஜனங்களெல்லாரும்  தங்கள்  தங்கள்  இடத்திற்குப்  போகக்கடவர்கள்  என்றார்.  (நியாயாதிபதிகள்  7:7)

appozhuthu  karththar  kithiyoanai  noakki:  nakkikkudiththa  antha  munnoo’rupearaalea  naan  ungga'lai  iradchiththu,  meethiyaaniyarai  un  kaiyil  oppukkoduppean,  mat’ra  janangga'lellaarum  thangga'l  thangga'l  idaththi’rkup  poagakkadavarga'l  en’raar.  (niyaayaathibathiga’l  7:7)

அப்பொழுது  ஜனங்கள்  தங்கள்  கையில்  தின்பண்டங்களையும்  எக்காளங்களையும்  எடுத்துக்கொண்டார்கள்;  மற்ற  இஸ்ரவேலரெல்லாரையும்  தங்கள்  தங்கள்  கூடாரங்களுக்கு  அனுப்பிவிட்டு,  அந்த  முந்நூறு  பேரைமாத்திரம்  வைத்துக்கொண்டான்;  மீதியானியரின்  சேனை  அவனுக்குத்  தாழ்விடமான  பள்ளத்தாக்கில்  இருந்தது.  (நியாயாதிபதிகள்  7:8)

appozhuthu  janangga'l  thangga'l  kaiyil  thinpa'ndangga'laiyum  ekkaa'langga'laiyum  eduththukko'ndaarga'l;  mat’ra  isravealarellaaraiyum  thangga'l  thangga'l  koodaarangga'lukku  anuppivittu,  antha  munnoo’ru  pearaimaaththiram  vaiththukko'ndaan;  meethiyaaniyarin  seanai  avanukkuth  thaazhvidamaana  pa'l'laththaakkil  irunthathu.  (niyaayaathibathiga’l  7:8)

அன்று  ராத்திரி  கர்த்தர்  அவனை  நோக்கி:  நீ  எழுந்து,  அந்தச்  சேனையினிடத்திற்குப்  போ;  அதை  உன்  கையில்  ஒப்புக்கொடுத்தேன்.  (நியாயாதிபதிகள்  7:9)

an’ru  raaththiri  karththar  avanai  noakki:  nee  ezhunthu,  anthach  seanaiyinidaththi’rkup  poa;  athai  un  kaiyil  oppukkoduththean.  (niyaayaathibathiga’l  7:9)

போகப்  பயப்பட்டாயானால்,  முதல்  நீயும்  உன்  வேலைக்காரனாகிய  பூராவும்  சேனையினிடத்திற்குப்  போய்,  (நியாயாதிபதிகள்  7:10)

poagap  bayappattaayaanaal,  muthal  neeyum  un  vealaikkaaranaagiya  pooraavum  seanaiyinidaththi’rkup  poay,  (niyaayaathibathiga’l  7:10)

அங்கே  என்ன  பேசுகிறார்கள்  என்று  கேள்;  பின்பு  சேனையிடத்திற்குப்  போக,  உன்  கைகள்  திடப்படும்  என்றார்;  அப்படியே  அவனும்  அவன்  வேலைக்காரனாகிய  பூராவும்  சேனையின்  முன்னணியிலே  ஜாமம்  காக்கிறவர்களின்  இடமட்டும்  போனார்கள்.  (நியாயாதிபதிகள்  7:11)

anggea  enna  peasugi’raarga'l  en’ru  kea'l;  pinbu  seanaiyidaththi’rkup  poaga,  un  kaiga'l  thidappadum  en’raar;  appadiyea  avanum  avan  vealaikkaaranaagiya  pooraavum  seanaiyin  munna'niyilea  jaamam  kaakki’ravarga'lin  idamattum  poanaarga'l.  (niyaayaathibathiga’l  7:11)

மீதியானியரும்,  அமலேக்கியரும்,  சகல  கிழக்கத்திப்  புத்திரரும்,  வெட்டுக்கிளிகளைப்  போலத்  திரளாய்ப்  பள்ளத்தாக்கிலே  படுத்துக்கிடந்தார்கள்;  அவர்களுடைய  ஒட்டகங்களுக்கும்  கணக்கில்லை,  கடற்கரை  மணலைப்போலத்  திரளாயிருந்தது.  (நியாயாதிபதிகள்  7:12)

meethiyaaniyarum,  amaleakkiyarum,  sagala  kizhakkaththip  puththirarum,  vettukki'liga'laip  poalath  thira'laayp  pa'l'laththaakkilea  paduththukkidanthaarga'l;  avarga'ludaiya  ottagangga'lukkum  ka'nakkillai,  kada’rkarai  ma'nalaippoalath  thira'laayirunthathu.  (niyaayaathibathiga’l  7:12)

கிதியோன்  வந்தபோது,  ஒருவன்  மற்றொருவனுக்கு  ஒரு  சொப்பனத்தைச்  சொன்னான்.  அதாவது:  இதோ  ஒரு  சொப்பனத்தைக்  கண்டேன்;  சுட்டிருந்த  ஒரு  வாற்கோதுமை  அப்பம்  மீதியானியரின்  பாளயத்திற்கு  உருண்டுவந்தது,  அது  கூடாரமட்டும்  வந்தபோது,  அதை  விழத்தள்ளிக்  கவிழ்த்துப்போட்டது,  கூடாரம்  விழுந்துகிடந்தது  என்றான்.  (நியாயாதிபதிகள்  7:13)

kithiyoan  vanthapoathu,  oruvan  mat’roruvanukku  oru  soppanaththaich  sonnaan.  athaavathu:  ithoa  oru  soppanaththaik  ka'ndean;  suttiruntha  oru  vaa’rkoathumai  appam  meethiyaaniyarin  paa'layaththi’rku  uru'nduvanthathu,  athu  koodaaramattum  vanthapoathu,  athai  vizhaththa'l'lik  kavizhththuppoattathu,  koodaaram  vizhunthukidanthathu  en’raan.  (niyaayaathibathiga’l  7:13)

அப்பொழுது  மற்றவன்:  இது  யோவாசின்  குமாரனாகிய  கிதியோன்  என்னும்  இஸ்ரவேலனுடைய  பட்டயமே  அல்லாமல்  வேறல்ல;  தேவன்  மீதியானியரையும்,  இந்தச்  சேனை  அனைத்தையும்  அவன்  கையிலே  ஒப்புக்கொடுத்தார்  என்றான்.  (நியாயாதிபதிகள்  7:14)

appozhuthu  mat’ravan:  ithu  yoavaasin  kumaaranaagiya  kithiyoan  ennum  isravealanudaiya  pattayamea  allaamal  vea’ralla;  theavan  meethiyaaniyaraiyum,  inthach  seanai  anaiththaiyum  avan  kaiyilea  oppukkoduththaar  en’raan.  (niyaayaathibathiga’l  7:14)

கிதியோன்  அந்தச்  சொப்பனத்தையும்  அதின்  வியார்த்தியையும்  கேட்டபோது,  அவன்  பணிந்துகொண்டு,  இஸ்ரவேலின்  பாளயத்திற்குத்  திரும்பிவந்து:  எழுந்திருங்கள்,  கர்த்தர்  மீதியானியரின்  பாளயத்தை  உங்கள்  கைகளில்  ஒப்புக்கொடுத்தார்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  7:15)

kithiyoan  anthach  soppanaththaiyum  athin  viyaarththiyaiyum  keattapoathu,  avan  pa'ninthuko'ndu,  isravealin  paa'layaththi’rkuth  thirumbivanthu:  ezhunthirungga'l,  karththar  meethiyaaniyarin  paa'layaththai  ungga'l  kaiga'lil  oppukkoduththaar  en’ru  solli,  (niyaayaathibathiga’l  7:15)

அந்த  முந்நூறுபேரை  மூன்று  படையாக  வகுத்து,  அவர்கள்  ஒவ்வொருவன்  கையிலும்  ஒரு  எக்காளத்தையும்,  வெறும்  பானையையும்,  அந்தப்  பானைக்குள்  வைக்கும்  தீவட்டியையும்  கொடுத்து,  (நியாயாதிபதிகள்  7:16)

antha  munnoo’rupearai  moon’ru  padaiyaaga  vaguththu,  avarga'l  ovvoruvan  kaiyilum  oru  ekkaa'laththaiyum,  ve’rum  paanaiyaiyum,  anthap  paanaikku'l  vaikkum  theevattiyaiyum  koduththu,  (niyaayaathibathiga’l  7:16)

அவர்களை  நோக்கி:  நான்  செய்வதைப்  பார்த்து,  அப்படியே  நீங்களும்  செய்யுங்கள்.  இதோ,  நான்  பாளயத்தின்  முன்னணியில்  வந்திருக்கும்போது,  நான்  எப்படிச்  செய்கிறேனோ  அப்படியே  நீங்களும்  செய்யவேண்டும்.  (நியாயாதிபதிகள்  7:17)

avarga'lai  noakki:  naan  seyvathaip  paarththu,  appadiyea  neengga'lum  seyyungga'l.  ithoa,  naan  paa'layaththin  munna'niyil  vanthirukkumpoathu,  naan  eppadich  seygi’reanoa  appadiyea  neengga'lum  seyyavea'ndum.  (niyaayaathibathiga’l  7:17)

நானும்  என்னோடே  இருக்கும்  சகலமானபேரும்  எக்காளம்  ஊதும்போது,  நீங்களும்  பாளயத்தைச்  சுற்றி  எங்கும்  எக்காளங்களை  ஊதி,  கர்த்தருடைய  பட்டயம்  கிதியோனுடைய  பட்டயம்  என்பீர்களாக  என்று  சொன்னான்.  (நியாயாதிபதிகள்  7:18)

naanum  ennoadea  irukkum  sagalamaanapearum  ekkaa'lam  oothumpoathu,  neengga'lum  paa'layaththaich  sut’ri  enggum  ekkaa'langga'lai  oothi,  karththarudaiya  pattayam  kithiyoanudaiya  pattayam  enbeerga'laaga  en’ru  sonnaan.  (niyaayaathibathiga’l  7:18)

நடுஜாமத்தின்  துவக்கத்தில்,  ஜாமக்காரரை  மாற்றிவைத்தபின்பு,  கிதியோனும்  அவனோடிருந்த  நூறுபேரும்  அந்த  ஜாமத்தின்  துவக்கத்திலே  பாளயத்தின்  முன்னணியில்  வந்து,  எக்காளங்களை  ஊதி,  தங்கள்  கையிலிருந்த  பானைகளை  உடைத்தார்கள்.  (நியாயாதிபதிகள்  7:19)

nadujaamaththin  thuvakkaththil,  jaamakkaararai  maat’rivaiththapinbu,  kithiyoanum  avanoadiruntha  noo’rupearum  antha  jaamaththin  thuvakkaththilea  paa'layaththin  munna'niyil  vanthu,  ekkaa'langga'lai  oothi,  thangga'l  kaiyiliruntha  paanaiga'lai  udaiththaarga'l.  (niyaayaathibathiga’l  7:19)

மூன்று  படைகளின்  மனுஷரும்  எக்காளங்களை  ஊதி,  பானைகளை  உடைத்து,  தீவட்டிகளைத்  தங்கள்  இடதுகைகளிலும்,  ஊதும்  எக்காளங்களைத்  தங்கள்  வலதுகைகளிலும்  பிடித்துக்கொண்டு,  கர்த்தருடைய  பட்டயம்  கிதியோனுடைய  பட்டயம்  என்று  சத்தமிட்டு,  (நியாயாதிபதிகள்  7:20)

moon’ru  padaiga'lin  manusharum  ekkaa'langga'lai  oothi,  paanaiga'lai  udaiththu,  theevattiga'laith  thangga'l  idathukaiga'lilum,  oothum  ekkaa'langga'laith  thangga'l  valathukaiga'lilum  pidiththukko'ndu,  karththarudaiya  pattayam  kithiyoanudaiya  pattayam  en’ru  saththamittu,  (niyaayaathibathiga’l  7:20)

பாளயத்தைச்  சுற்றிலும்  அவரவர்  தங்கள்  நிலையிலே  நின்றார்கள்;  அப்பொழுது  பாளயத்தில்  இருந்தவர்கள்  எல்லாரும்  சிதறிக்  கூக்குரலிட்டு,  ஓடிப்போனார்கள்.  (நியாயாதிபதிகள்  7:21)

paa'layaththaich  sut’rilum  avaravar  thangga'l  nilaiyilea  nin’raarga'l;  appozhuthu  paa'layaththil  irunthavarga'l  ellaarum  sitha’rik  kookkuralittu,  oadippoanaarga'l.  (niyaayaathibathiga’l  7:21)

முந்நூறுபேரும்  எக்காளங்களை  ஊதுகையில்,  கர்த்தர்  பாளயமெங்கும்  ஒருவர்  பட்டயத்தை  ஒருவருக்கு  விரோதமாய்  ஓங்கப்பண்ணினார்;  சேனையானது  சேரோத்திலுள்ள  பெத்சித்தாமட்டும்,  தாபாத்திற்குச்  சமீபமான  ஆபேல்மேகொலாவின்  எல்லைமட்டும்  ஓடிப்போயிற்று.  (நியாயாதிபதிகள்  7:22)

munnoo’rupearum  ekkaa'langga'lai  oothugaiyil,  karththar  paa'layamenggum  oruvar  pattayaththai  oruvarukku  viroathamaay  oanggappa'n'ninaar;  seanaiyaanathu  searoaththilu'l'la  bethsiththaamattum,  thaabaaththi’rkuch  sameebamaana  aabealmeagolaavin  ellaimattum  oadippoayit’ru.  (niyaayaathibathiga’l  7:22)

அப்பொழுது  நப்தலி  மனுஷரும்,  ஆசேர்  மனுஷரும்,  மனாசேயின்  சகல  மனுஷருமாகிய  இஸ்ரவேலர்  கூடிவந்து,  மீதியானியரைப்  பின்தொடர்ந்துபோனார்கள்.  (நியாயாதிபதிகள்  7:23)

appozhuthu  napthali  manusharum,  aasear  manusharum,  manaaseayin  sagala  manusharumaagiya  isravealar  koodivanthu,  meethiyaaniyaraip  pinthodarnthupoanaarga'l.  (niyaayaathibathiga’l  7:23)

கிதியோன்  எப்பிராயீம்  மலைகளெங்கும்  ஆட்களை  அனுப்பி:  மீதியானியருக்கு  விரோதமாயிறங்கி,  பெத்தாபரா  இருக்கும்  யோர்தான்மட்டும்  வந்து,  அவர்களுக்கு  முந்தித்  துறைகளைக்  கட்டிக்கொள்ளுங்கள்  என்று  சொல்லச்சொன்னான்;  அப்படியே  எப்பிராயீமின்  மனுஷர்  எல்லாரும்  கூடி,  பெத்தாபரா  இருக்கும்  யோர்தான்மட்டும்  வந்து,  துறைகளைக்  கட்டிக்கொண்டு,  (நியாயாதிபதிகள்  7:24)

kithiyoan  eppiraayeem  malaiga'lenggum  aadka'lai  anuppi:  meethiyaaniyarukku  viroathamaayi’ranggi,  beththaabaraa  irukkum  yoarthaanmattum  vanthu,  avarga'lukku  munthith  thu’raiga'laik  kattikko'l'lungga'l  en’ru  sollachsonnaan;  appadiyea  eppiraayeemin  manushar  ellaarum  koodi,  beththaabaraa  irukkum  yoarthaanmattum  vanthu,  thu’raiga'laik  kattikko'ndu,  (niyaayaathibathiga’l  7:24)

மீதியானியரின்  இரண்டு  அதிபதிகளாகிய  ஓரேபையும்  சேபையும்  பிடித்து,  ஓரேபை  ஓரேப்  என்னப்பட்ட  கன்மலையிலும்,  சேபை  சேப்  என்னப்பட்ட  ஆலையிலும்  கொன்றுபோட்டு,  மீதியானியரைத்  துரத்தி,  ஓரேப்  சேப்  என்பவர்களின்  தலைகளை  யோர்தானுக்கு  இக்கரையிலிருந்த  கிதியோனிடத்துக்குக்  கொண்டுவந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  7:25)

meethiyaaniyarin  ira'ndu  athibathiga'laagiya  oareabaiyum  seabaiyum  pidiththu,  oareabai  oareab  ennappatta  kanmalaiyilum,  seabai  seab  ennappatta  aalaiyilum  kon’rupoattu,  meethiyaaniyaraith  thuraththi,  oareab  seab  enbavarga'lin  thalaiga'lai  yoarthaanukku  ikkaraiyiliruntha  kithiyoanidaththukkuk  ko'nduvanthaarga'l.  (niyaayaathibathiga’l  7:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!