Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 5 | நியாயாதிபதிகள் 5 | Judges 5

அந்நாளிலே  தெபொராளும்  அபினோகாமின்  குமாரன்  பாராக்கும்  பாடினதாவது:  (நியாயாதிபதிகள்  5:1)

annaa'lilea  theboraa'lum  abinoagaamin  kumaaran  baaraakkum  paadinathaavathu:  (niyaayaathibathiga’l  5:1)

கர்த்தர்  இஸ்ரவேலுக்காக  நீதியைச்  சரிக்கட்டினதினிமித்தமும்,  ஜனங்கள்  மனப்பூர்வமாய்த்  தங்களை  ஒப்புக்கொடுத்ததினிமித்தமும்  அவரை  ஸ்தோத்திரியுங்கள்.  (நியாயாதிபதிகள்  5:2)

karththar  isravealukkaaga  neethiyaich  sarikkattinathinimiththamum,  janangga'l  manappoorvamaayth  thangga'lai  oppukkoduththathinimiththamum  avarai  sthoaththiriyungga'l.  (niyaayaathibathiga’l  5:2)

ராஜாக்களே,  கேளுங்கள்;  அதிபதிகளே,  செவிகொடுங்கள்;  நான்  கர்த்தரைப்  பாடி,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (நியாயாதிபதிகள்  5:3)

raajaakka'lea,  kea'lungga'l;  athibathiga'lea,  sevikodungga'l;  naan  karththaraip  paadi,  isravealin  theavanaagiya  karththaraik  keerththanampa'n'nuvean.  (niyaayaathibathiga’l  5:3)

கர்த்தாவே,  நீர்  சேயீரிலிருந்து  புறப்பட்டு,  ஏதோமின்  வெளியிலிருந்து  நடந்துவருகையில்,  பூமி  அதிர்ந்தது,  வானம்  சொரிந்தது,  மேகங்களும்  தண்ணீராய்ப்  பொழிந்தது.  (நியாயாதிபதிகள்  5:4)

karththaavea,  neer  seayeerilirunthu  pu’rappattu,  eathoamin  ve'liyilirunthu  nadanthuvarugaiyil,  boomi  athirnthathu,  vaanam  sorinthathu,  meagangga'lum  tha'n'neeraayp  pozhinthathu.  (niyaayaathibathiga’l  5:4)

கர்த்தருக்கு  முன்பாகப்  பர்வதங்கள்  கரைந்தது;  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  சீனாயும்  கரைந்தது.  (நியாயாதிபதிகள்  5:5)

karththarukku  munbaagap  parvathangga'l  karainthathu;  isravealin  theavanaagiya  karththarukku  munbaaga  seenaayum  karainthathu.  (niyaayaathibathiga’l  5:5)

ஆனாத்தின்  குமாரனாகிய  சம்காரின்  நாட்களிலும்,  யாகேலின்  நாட்களிலும்,  பெரும்பாதைகள்  பாழாய்க்  கிடந்தது;  வழி  நடக்கிறவர்கள்  பக்கவழியாய்  நடந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  5:6)

aanaaththin  kumaaranaagiya  samgaarin  naadka'lilum,  yaakealin  naadka'lilum,  perumpaathaiga'l  paazhaayk  kidanthathu;  vazhi  nadakki’ravarga'l  pakkavazhiyaay  nadanthaarga'l.  (niyaayaathibathiga’l  5:6)

தெபொராளாகிய  நான்  எழும்புமளவும்,  இஸ்ரவேலிலே  நான்  தாயாக  எழும்புமளவும்,  கிராமங்கள்  பாழாய்ப்போயின,  இஸ்ரவேலின்  கிராமங்கள்  பாழாய்ப்போயின.  (நியாயாதிபதிகள்  5:7)

theboraa'laagiya  naan  ezhumbuma'lavum,  isravealilea  naan  thaayaaga  ezhumbuma'lavum,  kiraamangga'l  paazhaayppoayina,  isravealin  kiraamangga'l  paazhaayppoayina.  (niyaayaathibathiga’l  5:7)

நூதன  தேவர்களைத்  தெரிந்துகொண்டார்கள்;  அப்பொழுது  யுத்தம்  வாசல்வரையும்  வந்தது;  இஸ்ரவேலிலே  நாற்பதினாயிரம்பேருக்குள்ளே  கேடகமும்  ஈட்டியும்  காணப்பட்டதுண்டோ?  (நியாயாதிபதிகள்  5:8)

noothana  theavarga'laith  therinthuko'ndaarga'l;  appozhuthu  yuththam  vaasalvaraiyum  vanthathu;  isravealilea  naa’rpathinaayirampearukku'l'lea  keadagamum  eettiyum  kaa'nappattathu'ndoa?  (niyaayaathibathiga’l  5:8)

ஜனங்களுக்குள்ளே  தங்களை  மனப்பூர்வமாய்  ஒப்புக்கொடுத்த  இஸ்ரவேலின்  அதிபதிகளை  என்  இருதயம்  நாடுகிறது;  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்.  (நியாயாதிபதிகள்  5:9)

janangga'lukku'l'lea  thangga'lai  manappoorvamaay  oppukkoduththa  isravealin  athibathiga'lai  en  iruthayam  naadugi’rathu;  karththarai  sthoaththiriyungga'l.  (niyaayaathibathiga’l  5:9)

வெள்ளைக்  கழுதைகளின்மேல்  ஏறுகிறவர்களே,  நியாயஸ்தலத்தில்  வீற்றிருக்கிறவர்களே,  வழியில்  நடக்கிறவர்களே,  இதைப்  பிரஸ்தாபியுங்கள்.  (நியாயாதிபதிகள்  5:10)

ve'l'laik  kazhuthaiga'linmeal  ea’rugi’ravarga'lea,  niyaayasthalaththil  veet’rirukki’ravarga'lea,  vazhiyil  nadakki’ravarga'lea,  ithaip  pirasthaabiyungga'l.  (niyaayaathibathiga’l  5:10)

தண்ணீர்  மொண்டுகொள்ளும்  இடங்களில்  வில்வீரரின்  இரைச்சலுக்கு  நீங்கினவர்கள்  அங்கே  கர்த்தரின்  நீதிநியாயங்களையும்,  அவர்  இஸ்ரவேலிலுள்ள  தமது  கிராமங்களுக்குச்  செய்த  நீதிநியாயங்களையுமே  பிரஸ்தாபப்படுத்துவார்கள்;  அதுமுதல்  கர்த்தரின்  ஜனங்கள்  ஒலிமுகவாசல்களிலே  போய்  இறங்குவார்கள்.  (நியாயாதிபதிகள்  5:11)

tha'n'neer  mo'nduko'l'lum  idangga'lil  vilveerarin  iraichchalukku  neengginavarga'l  anggea  karththarin  neethiniyaayangga'laiyum,  avar  isravealilu'l'la  thamathu  kiraamangga'lukkuch  seytha  neethiniyaayangga'laiyumea  pirasthaabappaduththuvaarga'l;  athumuthal  karththarin  janangga'l  olimugavaasalga'lilea  poay  i’rangguvaarga'l.  (niyaayaathibathiga’l  5:11)

விழி,  விழி,  தெபொராளே,  விழி,  விழி,  பாட்டுப்பாடு;  பாராக்கே,  எழும்பு;  அபினோகாமின்  குமாரனே,  உன்னைச்  சிறையாக்கினவர்களைச்  சிறையாக்கிக்  கொண்டுபோ.  (நியாயாதிபதிகள்  5:12)

vizhi,  vizhi,  theboraa'lea,  vizhi,  vizhi,  paattuppaadu;  baaraakkea,  ezhumbu;  abinoagaamin  kumaaranea,  unnaich  si’raiyaakkinavarga'laich  si’raiyaakkik  ko'ndupoa.  (niyaayaathibathiga’l  5:12)

மீதியாயிருந்தவர்கள்  ஜனத்தின்  பிரபுக்களை  ஆளும்படி  செய்தார்;  கர்த்தர்  எனக்குப்  பராக்கிரமசாலிகளின்மேல்  ஆளுகை  தந்தார்.  (நியாயாதிபதிகள்  5:13)

meethiyaayirunthavarga'l  janaththin  pirabukka'lai  aa'lumpadi  seythaar;  karththar  enakkup  baraakkiramasaaliga'linmeal  aa'lugai  thanthaar.  (niyaayaathibathiga’l  5:13)

அமலேக்குக்கு  விரோதமாக  இவர்களுடைய  வேர்  எப்பிராயீமிலிருந்து  துளிர்த்தது;  உன்  ஜனங்களுக்குள்ளே  பென்யமீன்  மனுஷர்  உனக்குப்  பின்சென்றார்கள்;  மாகீரிலிருந்து  அதிபதிகளும்,  செபுலோனிலிருந்து  எழுதுகோலைப்  பிடிக்கிறவர்களும்  இறங்கிவந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  5:14)

amaleakkukku  viroathamaaga  ivarga'ludaiya  vear  eppiraayeemilirunthu  thu'lirththathu;  un  janangga'lukku'l'lea  benyameen  manushar  unakkup  pinsen’raarga'l;  maakeerilirunthu  athibathiga'lum,  sebuloanilirunthu  ezhuthukoalaip  pidikki’ravarga'lum  i’ranggivanthaarga'l.  (niyaayaathibathiga’l  5:14)

இசக்காரின்  பிரபுக்களும்  தெபொராளோடே  இருந்தார்கள்;  பாராக்கைப்போல  இசக்கார்  மனுஷரும்  பள்ளத்தாக்கில்  கால்நடையாய்  அனுப்பப்பட்டுப்  போனார்கள்;  ரூபனின்  பிரிவினைகளால்  உண்டான  இருதயத்தின்  நினைவுகள்  மிகுதி.  (நியாயாதிபதிகள்  5:15)

isakkaarin  pirabukka'lum  theboraa'loadea  irunthaarga'l;  baaraakkaippoala  isakkaar  manusharum  pa'l'laththaakkil  kaalnadaiyaay  anuppappattup  poanaarga'l;  roobanin  pirivinaiga'laal  u'ndaana  iruthayaththin  ninaivuga'l  miguthi.  (niyaayaathibathiga’l  5:15)

மந்தைகளின்  சத்தத்தைக்  கேட்க,  நீ  தொழுவங்களின்  நடுவே  இருந்துவிட்டதென்ன?  ரூபனின்  பிரிவினைகளால்  மனோவிசாரங்கள்  மிகுதி.  (நியாயாதிபதிகள்  5:16)

manthaiga'lin  saththaththaik  keadka,  nee  thozhuvangga'lin  naduvea  irunthuvittathenna?  roobanin  pirivinaiga'laal  manoavisaarangga'l  miguthi.  (niyaayaathibathiga’l  5:16)

கீலேயாத்  மனுஷர்  யோர்தானுக்கு  அக்கரையிலே  இருந்துவிட்டார்கள்;  தாண்  மனுஷர்  கப்பல்களில்  தங்கியிருந்ததென்ன?  ஆசேர்  மனுஷர்  கடற்கரையிலே  தங்கி,  தங்கள்  குடாக்களில்  தாபரித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  5:17)

keeleayaath  manushar  yoarthaanukku  akkaraiyilea  irunthuvittaarga'l;  thaa'n  manushar  kappalga'lil  thanggiyirunthathenna?  aasear  manushar  kada’rkaraiyilea  thanggi,  thangga'l  kudaakka'lil  thaabariththaarga'l.  (niyaayaathibathiga’l  5:17)

செபுலோனும்  நப்தலியும்  போர்க்களத்து  முனையிலே  தங்கள்  உயிரை  எண்ணாமல்  மரணத்துக்குத்  துணிந்து  நின்றார்கள்.  (நியாயாதிபதிகள்  5:18)

sebuloanum  napthaliyum  poarkka'laththu  munaiyilea  thangga'l  uyirai  e'n'naamal  mara'naththukkuth  thu'ninthu  nin’raarga'l.  (niyaayaathibathiga’l  5:18)

ராஜாக்கள்  வந்து  யுத்தம்பண்ணினார்கள்;  அப்பொழுது  கானானியரின்  ராஜாக்கள்  மெகிதோவின்  தண்ணீர்  அருகான  தானாக்கிலே  யுத்தம்பண்ணினார்கள்;  அவர்களுக்குத்  திரவியக்கொள்ளை  கிடைக்கவில்லை.  (நியாயாதிபதிகள்  5:19)

raajaakka'l  vanthu  yuththampa'n'ninaarga'l;  appozhuthu  kaanaaniyarin  raajaakka'l  megithoavin  tha'n'neer  arugaana  thaanaakkilea  yuththampa'n'ninaarga'l;  avarga'lukkuth  thiraviyakko'l'lai  kidaikkavillai.  (niyaayaathibathiga’l  5:19)

வானத்திலிருந்து  யுத்தம்  உண்டாயிற்று;  நட்சத்திரங்கள்  தங்கள்  அயனங்களிலிருந்து  சிசெராவோடே  யுத்தம்பண்ணின.  (நியாயாதிபதிகள்  5:20)

vaanaththilirunthu  yuththam  u'ndaayit’ru;  nadchaththirangga'l  thangga'l  ayanangga'lilirunthu  siseraavoadea  yuththampa'n'nina.  (niyaayaathibathiga’l  5:20)

கீசோன்  நதி,  பூர்வ  நதியாகிய  கீசோன்  நதியே,  அவர்களை  அடித்துக்கொண்டுபோயிற்று;  என்  ஆத்துமாவே,  நீ  பலவான்களை  மிதித்தாய்.  (நியாயாதிபதிகள்  5:21)

keesoan  nathi,  poorva  nathiyaagiya  keesoan  nathiyea,  avarga'lai  adiththukko'ndupoayit’ru;  en  aaththumaavea,  nee  balavaanga'lai  mithiththaay.  (niyaayaathibathiga’l  5:21)

அப்பொழுது  குதிரைகளின்  குளம்புகள்,  பாய்ச்சலினாலே,  பலவான்களின்  பாய்ச்சலினாலேயே,  பிளந்துபோயின.  (நியாயாதிபதிகள்  5:22)

appozhuthu  kuthiraiga'lin  ku'lambuga'l,  paaychchalinaalea,  balavaanga'lin  paaychchalinaaleayea,  pi'lanthupoayina.  (niyaayaathibathiga’l  5:22)

மேரோசைச்  சபியுங்கள்;  அதின்  குடிகளைச்  சபிக்கவே  சபியுங்கள்  என்று  கர்த்தருடைய  தூதனானவர்  சொல்லுகிறார்;  அவர்கள்  கர்த்தர்  பட்சத்தில்  துணைநிற்க  வரவில்லை;  பராக்கிரமசாலிகளுக்கு  விரோதமாய்  அவர்கள்  கர்த்தர்  பட்சத்தில்  துணைநிற்க  வரவில்லையே.  (நியாயாதிபதிகள்  5:23)

mearoasaich  sabiyungga'l;  athin  kudiga'laich  sabikkavea  sabiyungga'l  en’ru  karththarudaiya  thoothanaanavar  sollugi’raar;  avarga'l  karththar  padchaththil  thu'naini’rka  varavillai;  baraakkiramasaaliga'lukku  viroathamaay  avarga'l  karththar  padchaththil  thu'naini’rka  varavillaiyea.  (niyaayaathibathiga’l  5:23)

ஸ்திரீகளுக்குள்ளே  கேனியனான  ஏபேரின்  மனைவியாகிய  யாகேல்  ஆசீர்வதிக்கப்பட்டவள்;  கூடாரத்தில்  வாசமாயிருக்கிற  ஸ்திரீகளுக்குள்ளே  அவள்  ஆசீர்வதிக்கப்பட்டவளே.  (நியாயாதிபதிகள்  5:24)

sthireega'lukku'l'lea  keaniyanaana  eabearin  manaiviyaagiya  yaakeal  aaseervathikkappattava'l;  koodaaraththil  vaasamaayirukki’ra  sthireega'lukku'l'lea  ava'l  aaseervathikkappattava'lea.  (niyaayaathibathiga’l  5:24)

தண்ணீரைக்  கேட்டான்,  பாலைக்  கொடுத்தாள்;  ராஜாக்களின்  கிண்ணியிலே  வெண்ணெயைக்  கொண்டுவந்து  கொடுத்தாள்.  (நியாயாதிபதிகள்  5:25)

tha'n'neeraik  keattaan,  paalaik  koduththaa'l;  raajaakka'lin  ki'n'niyilea  ve'n'neyaik  ko'nduvanthu  koduththaa'l.  (niyaayaathibathiga’l  5:25)

தன்  கையால்  ஆணியையும்,  தன்  வலதுகையால்  தொழிலாளரின்  சுத்தியையும்  பிடித்து,  சிசெராவை  அடித்தாள்;  அவன்  நெற்றியில்  உருவக்கடாவி,  அவன்  தலையை  உடைத்துப்போட்டாள்.  (நியாயாதிபதிகள்  5:26)

than  kaiyaal  aa'niyaiyum,  than  valathukaiyaal  thozhilaa'larin  suththiyaiyum  pidiththu,  siseraavai  adiththaa'l;  avan  net’riyil  uruvakkadaavi,  avan  thalaiyai  udaiththuppoattaa'l.  (niyaayaathibathiga’l  5:26)

அவள்  கால்  அருகே  அவன்  மடங்கி  விழுந்துகிடந்தான்,  அவள்  கால்  அருகே  மடங்கி  விழுந்தான்;  அவன்  எங்கே  மடங்கி  விழுந்தானோ  அங்கே  மடிந்து  கிடந்தான்.  (நியாயாதிபதிகள்  5:27)

ava'l  kaal  arugea  avan  madanggi  vizhunthukidanthaan,  ava'l  kaal  arugea  madanggi  vizhunthaan;  avan  enggea  madanggi  vizhunthaanoa  anggea  madinthu  kidanthaan.  (niyaayaathibathiga’l  5:27)

சிசெராவின்  தாய்  ஜன்னலில்  நின்று  பலகணிவழியாய்ப்  பார்த்துக்கொண்டிருந்து:  அவனுடைய  ரதம்  வராமல்  பிந்திப்போனதென்ன?  அவனுடைய  ரதங்களின்  ஓட்டம்  தாமதிக்கிறதென்ன  என்று  புலம்பினாள்.  (நியாயாதிபதிகள்  5:28)

siseraavin  thaay  jannalil  nin’ru  palaga'nivazhiyaayp  paarththukko'ndirunthu:  avanudaiya  ratham  varaamal  pinthippoanathenna?  avanudaiya  rathangga'lin  oattam  thaamathikki’rathenna  en’ru  pulambinaa'l.  (niyaayaathibathiga’l  5:28)

அவளுடைய  நாயகிகளில்  புத்திசாலிகள்  அவளுக்கு  உத்தரவுசொன்னதுமன்றி,  அவள்  தானும்  தனக்கு  மறுமொழியாக:  (நியாயாதிபதிகள்  5:29)

ava'ludaiya  naayagiga'lil  buththisaaliga'l  ava'lukku  uththaravusonnathuman’ri,  ava'l  thaanum  thanakku  ma’rumozhiyaaga:  (niyaayaathibathiga’l  5:29)

அவர்கள்  கொள்ளையைக்  கண்டு  பிடிக்கவில்லையோ,  அதைப்  பங்கிடவேண்டாமோ,  ஆளுக்கு  இரண்டொரு  பெண்களையும்,  சிசெராவுக்குக்  கொள்ளையிட்ட  பலவருணமான  ஆடைகளையும்,  கொள்ளையிட்ட  பலவருணமான  சித்திரத்  தையலாடைகளையும்,  கொள்ளையிட்டவர்களின்  கழுத்துக்கு  இருபுறமும்  பொருந்தும்  சித்திரத்தையலுள்ள  பலவருணமான  ஆடையையும்  கொடுக்கவேண்டாமோ  என்றாள்.  (நியாயாதிபதிகள்  5:30)

avarga'l  ko'l'laiyaik  ka'ndu  pidikkavillaiyoa,  athaip  panggidavea'ndaamoa,  aa'lukku  ira'ndoru  pe'nga'laiyum,  siseraavukkuk  ko'l'laiyitta  palavaru'namaana  aadaiga'laiyum,  ko'l'laiyitta  palavaru'namaana  siththirath  thaiyalaadaiga'laiyum,  ko'l'laiyittavarga'lin  kazhuththukku  irupu’ramum  porunthum  siththiraththaiyalu'l'la  palavaru'namaana  aadaiyaiyum  kodukkavea'ndaamoa  en’raa'l.  (niyaayaathibathiga’l  5:30)

கர்த்தாவே,  உம்மைப்  பகைக்கிற  யாவரும்  இப்படியே  அழியக்கடவர்கள்;  அவரில்  அன்புகூருகிறவர்களோ,  வல்லமையோடே  உதிக்கிற  சூரியனைப்போல  இருக்கக்கடவர்கள்  என்று  பாடினார்கள்.  பின்பு  தேசம்  நாற்பது  வருஷம்  அமைதலாயிருந்தது.  (நியாயாதிபதிகள்  5:31)

karththaavea,  ummaip  pagaikki’ra  yaavarum  ippadiyea  azhiyakkadavarga'l;  avaril  anbukoorugi’ravarga'loa,  vallamaiyoadea  uthikki’ra  sooriyanaippoala  irukkakkadavarga'l  en’ru  paadinaarga'l.  pinbu  theasam  naa’rpathu  varusham  amaithalaayirunthathu.  (niyaayaathibathiga’l  5:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!