Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 3 | நியாயாதிபதிகள் 3 | Judges 3

கானான்  தேசத்தில்  நடந்த  சகல  யுத்தங்களையும்  அறியாதிருந்த  இஸ்ரவேலராகிய  அனைவரையும்  சோதிப்பதற்காகவும்,  (நியாயாதிபதிகள்  3:1)

kaanaan  theasaththil  nadantha  sagala  yuththangga'laiyum  a’riyaathiruntha  isravealaraagiya  anaivaraiyum  soathippatha’rkaagavum,  (niyaayaathibathiga’l  3:1)

இஸ்ரவேல்  புத்திரரின்  சந்ததியாரும்  அதற்குமுன்  யுத்தஞ்செய்ய  அறியாதிருந்தவர்களும்  அவைகளை  அறியும்படி  பழக்குவிப்பதற்காகவும்,  கர்த்தர்  விட்டுவைத்த  ஜாதிகள்  யாரென்றால்:  (நியாயாதிபதிகள்  3:2)

israveal  puththirarin  santhathiyaarum  atha’rkumun  yuththagnseyya  a’riyaathirunthavarga'lum  avaiga'lai  a’riyumpadi  pazhakkuvippatha’rkaagavum,  karththar  vittuvaiththa  jaathiga'l  yaaren’raal:  (niyaayaathibathiga’l  3:2)

பெலிஸ்தரின்  ஐந்து  அதிபதிகளும்,  சகல  கானானியரும்,  சீதோனியரும்,  பாகால்எர்மோன்  துவக்கி  ஆமாத்திற்குள்  பிரவேசிக்கும்வரைக்கும்  லீபனோனின்  மலைகளிலே  குடியிருக்கிற  ஏவியருமே.  (நியாயாதிபதிகள்  3:3)

pelistharin  ainthu  athibathiga'lum,  sagala  kaanaaniyarum,  seethoaniyarum,  baagaalermoan  thuvakki  aamaaththi’rku'l  piraveasikkumvaraikkum  leebanoanin  malaiga'lilea  kudiyirukki’ra  eaviyarumea.  (niyaayaathibathiga’l  3:3)

கர்த்தர்  மோசேயைக்கொண்டு  தங்கள்  பிதாக்களுக்கு  விதித்த  கற்பனைகளுக்கு  இஸ்ரவேலர்  கீழ்ப்படிவார்களோ  என்று  அறியும்படி,  இஸ்ரவேலரை  அவர்களாலே  சோதிப்பதற்காக  அவர்கள்  விடப்பட்டிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  3:4)

karththar  moaseayaikko'ndu  thangga'l  pithaakka'lukku  vithiththa  ka’rpanaiga'lukku  isravealar  keezhppadivaarga'loa  en’ru  a’riyumpadi,  isravealarai  avarga'laalea  soathippatha’rkaaga  avarga'l  vidappattirunthaarga'l.  (niyaayaathibathiga’l  3:4)

இப்படி  இஸ்ரவேல்  புத்திரர்,  கானானியர்,  ஏத்தியர்,  எமோரியர்,  பெரிசியர்,  ஏவியர்,  எபூசியராகிய  இவர்கள்  நடுவே  குடியிருந்து,  (நியாயாதிபதிகள்  3:5)

ippadi  israveal  puththirar,  kaanaaniyar,  eaththiyar,  emoariyar,  perisiyar,  eaviyar,  eboosiyaraagiya  ivarga'l  naduvea  kudiyirunthu,  (niyaayaathibathiga’l  3:5)

அவர்களுடைய  குமாரத்திகளை  விவாகம்பண்ணி,  தங்களுடைய  குமாரத்திகளை  அவர்கள்  குமாரருக்குக்  கொடுத்து,  அவர்கள்  தேவர்களைச்  சேவித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  3:6)

avarga'ludaiya  kumaaraththiga'lai  vivaagampa'n'ni,  thangga'ludaiya  kumaaraththiga'lai  avarga'l  kumaararukkuk  koduththu,  avarga'l  theavarga'laich  seaviththaarga'l.  (niyaayaathibathiga’l  3:6)

இப்படி  இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  தங்கள்  தேவனாகிய  கர்த்தரை  மறந்து,  பாகால்களையும்  தோப்பு  விக்கிரகங்களையும்  சேவிக்கிறபோது,  (நியாயாதிபதிகள்  3:7)

ippadi  israveal  puththirar  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  thangga'l  theavanaagiya  karththarai  ma’ranthu,  baagaalga'laiyum  thoappu  vikkiragangga'laiyum  seavikki’rapoathu,  (niyaayaathibathiga’l  3:7)

கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்  கோபமூண்டவராகி,  அவர்களை  மெசொப்பொத்தாமியாவின்  ராஜாவாகிய  கூசான்ரிஷதாயீமின்  கையிலே  விற்றுப்போட்டார்;  இப்படியே  இஸ்ரவேல்  புத்திரர்  கூசான்ரிஷதாயீமை  எட்டு  வருஷம்  சேவித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  3:8)

karththar  isravealinmeal  koabamoo'ndavaraagi,  avarga'lai  mesoppoththaamiyaavin  raajaavaagiya  koosaantishathaayeemin  kaiyilea  vit’ruppoattaar;  ippadiyea  israveal  puththirar  koosaantishathaayeemai  ettu  varusham  seaviththaarga'l.  (niyaayaathibathiga’l  3:8)

இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டபோது,  கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரரை  இரட்சிக்கும்படி  காலேபின்  தம்பியான  கேனாசுடைய  குமாரனாகிய  ஒத்னியேல்  என்னும்  ஒரு  ரட்சகனை  அவர்களுக்கு  எழும்பப்பண்ணினார்.  (நியாயாதிபதிகள்  3:9)

israveal  puththirar  karththarai  noakkik  kooppittapoathu,  karththar  israveal  puththirarai  iradchikkumpadi  kaaleabin  thambiyaana  keanaasudaiya  kumaaranaagiya  othniyeal  ennum  oru  radchaganai  avarga'lukku  ezhumbappa'n'ninaar.  (niyaayaathibathiga’l  3:9)

அவன்மேல்  கர்த்தருடைய  ஆவி  வந்திருந்ததினால்,  அவன்  இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்து,  யுத்தம்பண்ணப்  புறப்பட்டான்;  கர்த்தர்  மெசொப்பொத்தாமியாவின்  ராஜாவாகிய  கூசான்ரிஷதாயீமை  அவன்  கையிலே  ஒப்புக்கொடுத்தார்;  ஆகையால்  அவன்  கை  கூசான்ரிஷதாயீமின்மேல்  பலங்கொண்டது.  (நியாயாதிபதிகள்  3:10)

avanmeal  karththarudaiya  aavi  vanthirunthathinaal,  avan  isravealai  niyaayam  visaariththu,  yuththampa'n'nap  pu’rappattaan;  karththar  mesoppoththaamiyaavin  raajaavaagiya  koosaantishathaayeemai  avan  kaiyilea  oppukkoduththaar;  aagaiyaal  avan  kai  koosaantishathaayeeminmeal  balangko'ndathu.  (niyaayaathibathiga’l  3:10)

தேசம்  நாற்பது  வருஷம்  அமைதலாயிருந்தது.  கேனாசின்  குமாரனாகிய  ஒத்னியேல்  மரணமடைந்தான்.  (நியாயாதிபதிகள்  3:11)

theasam  naa’rpathu  varusham  amaithalaayirunthathu.  keanaasin  kumaaranaagiya  othniyeal  mara'namadainthaan.  (niyaayaathibathiga’l  3:11)

இஸ்ரவேல்  புத்திரர்  மறுபடியும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தார்கள்;  அவர்கள்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தபடியால்,  கர்த்தர்  எக்லோன்  என்னும்  மோவாபின்  ராஜாவை  இஸ்ரவேலுக்கு  விரோதமாய்ப்  பலக்கப்பண்ணினார்.  (நியாயாதிபதிகள்  3:12)

israveal  puththirar  ma’rupadiyum  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaarga'l;  avarga'l  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythapadiyaal,  karththar  ekloan  ennum  moavaabin  raajaavai  isravealukku  viroathamaayp  balakkappa'n'ninaar.  (niyaayaathibathiga’l  3:12)

அவன்  அம்மோன்  புத்திரரையும்  அமலேக்கியரையும்  கூட்டிக்கொண்டுவந்து,  இஸ்ரவேலை  முறிய  அடித்தான்;  பேரீச்சமரங்களின்  பட்டணத்தையும்  பிடித்தான்.  (நியாயாதிபதிகள்  3:13)

avan  ammoan  puththiraraiyum  amaleakkiyaraiyum  koottikko'nduvanthu,  isravealai  mu’riya  adiththaan;  peareechchamarangga'lin  patta'naththaiyum  pidiththaan.  (niyaayaathibathiga’l  3:13)

இப்படியே  இஸ்ரவேல்  புத்திரர்  எக்லோன்  என்னும்  மோவாபின்  ராஜாவைப்  பதினெட்டு  வருஷம்  சேவித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  3:14)

ippadiyea  israveal  puththirar  ekloan  ennum  moavaabin  raajaavaip  pathinettu  varusham  seaviththaarga'l.  (niyaayaathibathiga’l  3:14)

இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டபோது,  கர்த்தர்  அவர்களுக்குப்  பென்யமீன்  கோத்திரத்தானாகிய  கேராவின்  மகன்  ஏகூத்  என்னும்  இரட்சகனை  எழும்பப்பண்ணினார்;  அவன்  இடதுகைப்  பழக்கமுள்ளவனாயிருந்தான்;  அவன்  கையிலே  இஸ்ரவேல்  புத்திரர்  மோவாபின்  ராஜாவாகிய  எக்லோனுக்குக்  காணிக்கை  அனுப்பினார்கள்.  (நியாயாதிபதிகள்  3:15)

israveal  puththirar  karththarai  noakkik  kooppittapoathu,  karththar  avarga'lukkup  benyameen  koaththiraththaanaagiya  kearaavin  magan  eagooth  ennum  iradchaganai  ezhumbappa'n'ninaar;  avan  idathukaip  pazhakkamu'l'lavanaayirunthaan;  avan  kaiyilea  israveal  puththirar  moavaabin  raajaavaagiya  ekloanukkuk  kaa'nikkai  anuppinaarga'l.  (niyaayaathibathiga’l  3:15)

ஏகூத்,  இருபுறமும்  கருக்கும்  ஒரு  முழ  நீளமுமான  ஒரு  கத்தியை  உண்டுபண்ணி,  அதைத்  தன்  வஸ்திரத்துக்குள்ளே  தன்  வலதுபுறத்து  இடுப்பிலே  கட்டிக்கொண்டு,  (நியாயாதிபதிகள்  3:16)

eagooth,  irupu’ramum  karukkum  oru  muzha  nee'lamumaana  oru  kaththiyai  u'ndupa'n'ni,  athaith  than  vasthiraththukku'l'lea  than  valathupu’raththu  iduppilea  kattikko'ndu,  (niyaayaathibathiga’l  3:16)

காணிக்கையை  மோவாபின்  ராஜாவாகிய  எக்லோனுக்குச்  செலுத்தினான்;  எக்லோன்  மிகவும்  ஸ்தூலித்த  மனுஷனாயிருந்தான்.  (நியாயாதிபதிகள்  3:17)

kaa'nikkaiyai  moavaabin  raajaavaagiya  ekloanukkuch  seluththinaan;  ekloan  migavum  sthooliththa  manushanaayirunthaan.  (niyaayaathibathiga’l  3:17)

அவன்  காணிக்கையைச்  செலுத்தித்  தீர்ந்தபின்பு,  காணிக்கையைச்  சுமந்துவந்த  ஜனங்களை  அனுப்பிவிட்டான்.  (நியாயாதிபதிகள்  3:18)

avan  kaa'nikkaiyaich  seluththith  theernthapinbu,  kaa'nikkaiyaich  sumanthuvantha  janangga'lai  anuppivittaan.  (niyaayaathibathiga’l  3:18)

அவனோ  கில்காலிலுள்ள  சிலைகள்  இருக்கும்  இடத்திலிருந்து  திரும்பிவந்து:  ராஜாவே,  உம்மிடத்தில்  சொல்லவேண்டிய  இரகசியமான  ஒரு  வார்த்தை  உண்டு  என்றான்.  அதற்கு  அவன்:  பொறு  என்றான்;  அப்பொழுது  அவனிடத்தில்  நின்ற  யாவரும்  அவனை  விட்டு  வெளியே  போய்விட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  3:19)

avanoa  kilgaalilu'l'la  silaiga'l  irukkum  idaththilirunthu  thirumbivanthu:  raajaavea,  ummidaththil  sollavea'ndiya  iragasiyamaana  oru  vaarththai  u'ndu  en’raan.  atha’rku  avan:  po’ru  en’raan;  appozhuthu  avanidaththil  nin’ra  yaavarum  avanai  vittu  ve'liyea  poayvittaarga'l.  (niyaayaathibathiga’l  3:19)

ஏகூத்  அவன்  கிட்டே  போனான்;  அவனோ  தனக்குத்  தனிப்புற  இருந்த  குளிர்ச்சியான  அறைவீட்டில்  உட்கார்ந்திருந்தான்;  அப்பொழுது  ஏகூத்:  உம்மிடத்தில்  சொல்லவேண்டிய  தேவவாக்கு  எனக்கு  உண்டு  என்றான்;  அவன்  தன்  ஆசனத்திலிருந்து  எழுந்திருந்தான்.  (நியாயாதிபதிகள்  3:20)

eagooth  avan  kittea  poanaan;  avanoa  thanakkuth  thanippu’ra  iruntha  ku'lirchchiyaana  a’raiveettil  udkaarnthirunthaan;  appozhuthu  eagooth:  ummidaththil  sollavea'ndiya  theavavaakku  enakku  u'ndu  en’raan;  avan  than  aasanaththilirunthu  ezhunthirunthaan.  (niyaayaathibathiga’l  3:20)

உடனே  ஏகூத்  தன்  இடதுகையை  நீட்டி,  தன்  வலதுபுறத்து  இடுப்பிலே  கட்டியிருந்த  கத்தியை  உருவி,  அதை  அவன்  வயிற்றிற்குள்  பாய்ச்சினான்.  (நியாயாதிபதிகள்  3:21)

udanea  eagooth  than  idathukaiyai  neetti,  than  valathupu’raththu  iduppilea  kattiyiruntha  kaththiyai  uruvi,  athai  avan  vayit’ri’rku'l  paaychchinaan.  (niyaayaathibathiga’l  3:21)

அலகோடேகூடக்  கைப்பிடியும்  உள்ளே  புகுந்தது;  அவனுடைய  வயிற்றிற்குள்  போன  கத்தியை  இவன்  இழுக்கக்கூடாதபடிக்கு,  நிணம்  அலகைச்  சுற்றிக்கொண்டு  அடைத்தது;  அது  பின்புறத்திலே  புறப்பட்டது.  (நியாயாதிபதிகள்  3:22)

alagoadeakoodak  kaippidiyum  u'l'lea  pugunthathu;  avanudaiya  vayit’ri’rku'l  poana  kaththiyai  ivan  izhukkakkoodaathapadikku,  ni'nam  alagaich  sut’rikko'ndu  adaiththathu;  athu  pinpu’raththilea  pu’rappattathu.  (niyaayaathibathiga’l  3:22)

ஏகூத்  புறப்பட்டு,  அறைவீட்டின்  கதவைச்  சாத்திப்  பூட்டிப்போட்டு,  கொலுக்கூடத்தின்  வழியாய்ப்  போய்விட்டான்.  (நியாயாதிபதிகள்  3:23)

eagooth  pu’rappattu,  a’raiveettin  kathavaich  saaththip  poottippoattu,  kolukkoodaththin  vazhiyaayp  poayvittaan.  (niyaayaathibathiga’l  3:23)

அவன்  போனபின்பு  ஊழியக்காரர்  வந்து  பார்த்தார்கள்;  இதோ,  அறைவீட்டின்  கதவு  பூட்டியிருந்தது;  ஆகையால்  அவர்  அந்தக்  குளிர்ச்சியான  அறையிலே  மலஜலாதிக்கிருக்கிறாராக்கும்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  3:24)

avan  poanapinbu  oozhiyakkaarar  vanthu  paarththaarga'l;  ithoa,  a’raiveettin  kathavu  poottiyirunthathu;  aagaiyaal  avar  anthak  ku'lirchchiyaana  a’raiyilea  malajalaathikkirukki’raaraakkum  en’raarga'l.  (niyaayaathibathiga’l  3:24)

அவர்கள்  சலித்துப்போகுமட்டும்  காத்திருந்தார்கள்;  அவன்  அறைவீட்டின்  கதவைத்  திறக்கவில்லை;  ஆகையால்  ஒரு  திறவுகோலை  எடுத்துத்  திறந்தார்கள்;  இதோ,  அவர்கள்  ஆண்டவன்  தரையிலே  செத்துக்கிடந்தான்.  (நியாயாதிபதிகள்  3:25)

avarga'l  saliththuppoagumattum  kaaththirunthaarga'l;  avan  a’raiveettin  kathavaith  thi’rakkavillai;  aagaiyaal  oru  thi’ravukoalai  eduththuth  thi’ranthaarga'l;  ithoa,  avarga'l  aa'ndavan  tharaiyilea  seththukkidanthaan.  (niyaayaathibathiga’l  3:25)

அவர்கள்  தாமதித்துக்கொண்டிருந்தபோது,  ஏகூத்  ஓடிப்போய்,  சிலைகளுள்ள  இடத்தைக்  கடந்து,  சேயிராத்தைச்  சேர்ந்து  தப்பினான்.  (நியாயாதிபதிகள்  3:26)

avarga'l  thaamathiththukko'ndirunthapoathu,  eagooth  oadippoay,  silaiga'lu'l'la  idaththaik  kadanthu,  seayiraaththaich  searnthu  thappinaan.  (niyaayaathibathiga’l  3:26)

அங்கே  வந்தபோது  எப்பிராயீம்  மலையில்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரர்  அவனோடேகூட  மலையிலிருந்து  இறங்கினார்கள்;  அவன்  அவர்களுக்கு  முன்பாக  நடந்து:  (நியாயாதிபதிகள்  3:27)

anggea  vanthapoathu  eppiraayeem  malaiyil  ekkaa'lam  oothinaan;  appozhuthu  israveal  puththirar  avanoadeakooda  malaiyilirunthu  i’rangginaarga'l;  avan  avarga'lukku  munbaaga  nadanthu:  (niyaayaathibathiga’l  3:27)

என்னைப்  பின்தொடர்ந்து  வாருங்கள்;  கர்த்தர்  உங்கள்  பகைஞராகிய  மோவாபியரை  உங்கள்  கைகளில்  ஒப்புக்கொடுத்தார்  என்றான்.  அவர்கள்  அவனைப்  பின்தொடர்ந்துபோய்,  மோவாபுக்கு  எதிரான  யோர்தான்  துறைகளைப்  பிடித்து,  ஒருவனையும்  கடந்துபோகவொட்டாமல்,  (நியாயாதிபதிகள்  3:28)

ennaip  pinthodarnthu  vaarungga'l;  karththar  ungga'l  pagaignaraagiya  moavaabiyarai  ungga'l  kaiga'lil  oppukkoduththaar  en’raan.  avarga'l  avanaip  pinthodarnthupoay,  moavaabukku  ethiraana  yoarthaan  thu’raiga'laip  pidiththu,  oruvanaiyum  kadanthupoagavottaamal,  (niyaayaathibathiga’l  3:28)

அக்காலத்திலே  மோவாபியரில்  ஏறக்குறையப்  பதினாயிரம்பேரை  வெட்டினார்கள்;  அவர்களெல்லாரும்  புஷ்டியுள்ளவர்களும்  பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்;  அவர்களில்  ஒருவனும்  தப்பவில்லை.  (நியாயாதிபதிகள்  3:29)

akkaalaththilea  moavaabiyaril  ea’rakku’raiyap  pathinaayirampearai  vettinaarga'l;  avarga'lellaarum  pushdiyu'l'lavarga'lum  baraakkiramasaaliga'lumaayirunthaarga'l;  avarga'lil  oruvanum  thappavillai.  (niyaayaathibathiga’l  3:29)

இப்படியே  அந்நாளிலே  மோவாப்  இஸ்ரவேலுடைய  கையின்கீழ்த்  தாழ்த்தப்பட்டது;  அதனாலே  தேசம்  எண்பது  வருஷம்  அமைதலாயிருந்தது.  (நியாயாதிபதிகள்  3:30)

ippadiyea  annaa'lilea  moavaab  isravealudaiya  kaiyinkeezhth  thaazhththappattathu;  athanaalea  theasam  e'nbathu  varusham  amaithalaayirunthathu.  (niyaayaathibathiga’l  3:30)

அவனுக்குப்பிற்பாடு  ஆனாத்தின்  குமாரன்  சம்கார்  எழும்பினான்;  அவன்  பெலிஸ்தரில்  அறுநூறுபேரை  ஒரு  தாற்றுக்கோலால்  முறிய  அடித்தான்;  அவனும்  இஸ்ரவேலை  இரட்சித்தான்.  (நியாயாதிபதிகள்  3:31)

avanukkuppi’rpaadu  aanaaththin  kumaaran  samgaar  ezhumbinaan;  avan  pelistharil  a’runoo’rupearai  oru  thaat’rukkoalaal  mu’riya  adiththaan;  avanum  isravealai  iradchiththaan.  (niyaayaathibathiga’l  3:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!