Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 2 | நியாயாதிபதிகள் 2 | Judges 2

கர்த்தருடைய  தூதனானவர்  கில்காலிலிருந்து  போகீமுக்கு  வந்து:  நான்  உங்களை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணி,  உங்கள்  பிதாக்களுக்கு  ஆணையிட்ட  தேசத்தில்  நான்  உங்களைக்  கொண்டுவந்து  விட்டு,  உங்களோடே  பண்ணின  என்  உடன்படிக்கையை  நான்  ஒருக்காலும்  முறித்துப்போடுவதில்லை  என்றும்,  (நியாயாதிபதிகள்  2:1)

karththarudaiya  thoothanaanavar  kilgaalilirunthu  boakeemukku  vanthu:  naan  ungga'lai  egipthilirunthu  pu’rappadappa'n'ni,  ungga'l  pithaakka'lukku  aa'naiyitta  theasaththil  naan  ungga'laik  ko'nduvanthu  vittu,  ungga'loadea  pa'n'nina  en  udanpadikkaiyai  naan  orukkaalum  mu’riththuppoaduvathillai  en’rum,  (niyaayaathibathiga’l  2:1)

நீங்கள்  இந்த  தேசத்தின்  குடிகளோடே  உடன்படிக்கைபண்ணாமல்,  அவர்கள்  பலிபீடங்களை  இடித்துவிடக்கடவீர்கள்  என்றும்  சொன்னேன்;  ஆனாலும்  என்  சொல்லைக்  கேளாதேபோனீர்கள்;  ஏன்  இப்படிச்  செய்தீர்கள்?  (நியாயாதிபதிகள்  2:2)

neengga'l  intha  theasaththin  kudiga'loadea  udanpadikkaipa'n'naamal,  avarga'l  balipeedangga'lai  idiththuvidakkadaveerga'l  en’rum  sonnean;  aanaalum  en  sollaik  kea'laatheapoaneerga'l;  ean  ippadich  seytheerga'l?  (niyaayaathibathiga’l  2:2)

ஆகையால்  நான்  அவர்களை  உங்கள்  முகத்திற்கு  முன்பாகத்  துரத்துவதில்லை  என்றேன்;  அவர்கள்  உங்களை  நெருக்குவார்கள்;  அவர்களுடைய  தேவர்கள்  உங்களுக்குக்  கண்ணியாவார்கள்  என்றார்.  (நியாயாதிபதிகள்  2:3)

aagaiyaal  naan  avarga'lai  ungga'l  mugaththi’rku  munbaagath  thuraththuvathillai  en’rean;  avarga'l  ungga'lai  nerukkuvaarga'l;  avarga'ludaiya  theavarga'l  ungga'lukkuk  ka'n'niyaavaarga'l  en’raar.  (niyaayaathibathiga’l  2:3)

கர்த்தருடைய  தூதனானவர்  இந்த  வார்த்தைகளை  இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாரோடும்  சொல்லுகையில்,  ஜனங்கள்  உரத்த  சத்தமிட்டு  அழுதார்கள்.  (நியாயாதிபதிகள்  2:4)

karththarudaiya  thoothanaanavar  intha  vaarththaiga'lai  israveal  puththirar  ellaaroadum  sollugaiyil,  janangga'l  uraththa  saththamittu  azhuthaarga'l.  (niyaayaathibathiga’l  2:4)

அவ்விடத்திற்குப்  போகீம்  என்று  பேரிட்டு,  அங்கே  கர்த்தருக்குப்  பலியிட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  2:5)

avvidaththi’rkup  boakeem  en’ru  pearittu,  anggea  karththarukkup  baliyittaarga'l.  (niyaayaathibathiga’l  2:5)

யோசுவா  இஸ்ரவேல்  புத்திரராகிய  ஜனங்களை  அனுப்பிவிட்டபோது,  அவர்கள்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ள  அவரவர்  தங்கள்தங்கள்  சுதந்தர  வீதத்திற்குப்  போனார்கள்.  (நியாயாதிபதிகள்  2:6)

yoasuvaa  israveal  puththiraraagiya  janangga'lai  anuppivittapoathu,  avarga'l  theasaththaich  suthanthariththukko'l'la  avaravar  thangga'lthangga'l  suthanthara  veethaththi’rkup  poanaarga'l.  (niyaayaathibathiga’l  2:6)

யோசுவாவின்  சகல  நாட்களிலும்  கர்த்தர்  இஸ்ரவேலுக்காகச்  செய்த  அவருடைய  பெரிய  கிரியைகளையெல்லாம்  கண்டவர்களும்,  யோசுவாவுக்குப்  பின்பு  உயிரோடிருந்தவர்களுமாகிய  மூப்பரின்  சகல  நாட்களிலும்  ஜனங்கள்  கர்த்தரைச்  சேவித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  2:7)

yoasuvaavin  sagala  naadka'lilum  karththar  isravealukkaagach  seytha  avarudaiya  periya  kiriyaiga'laiyellaam  ka'ndavarga'lum,  yoasuvaavukkup  pinbu  uyiroadirunthavarga'lumaagiya  moopparin  sagala  naadka'lilum  janangga'l  karththaraich  seaviththaarga'l.  (niyaayaathibathiga’l  2:7)

நூனின்  குமாரனாகிய  யோசுவா  என்னும்  கர்த்தரின்  ஊழியக்காரன்  நூற்றுப்பத்து  வயதுள்ளவனாய்  மரணமடைந்தான்.  (நியாயாதிபதிகள்  2:8)

noonin  kumaaranaagiya  yoasuvaa  ennum  karththarin  oozhiyakkaaran  noot’ruppaththu  vayathu'l'lavanaay  mara'namadainthaan.  (niyaayaathibathiga’l  2:8)

அவனை  எப்பிராயீமின்  மலைத்தேசத்திலுள்ள  காயாஸ்  மலைக்கு  வடக்கேயிருக்கிற  அவனுடைய  சுதந்தரத்தின்  எல்லையாகிய  திம்னாத்ஏரேசிலே  அடக்கம்பண்ணினார்கள்.  (நியாயாதிபதிகள்  2:9)

avanai  eppiraayeemin  malaiththeasaththilu'l'la  kaayaas  malaikku  vadakkeayirukki’ra  avanudaiya  suthantharaththin  ellaiyaagiya  thimnaatheareasilea  adakkampa'n'ninaarga'l.  (niyaayaathibathiga’l  2:9)

அக்காலத்தில்  இருந்த  அந்தச்  சந்ததியார்  எல்லாரும்  தங்கள்  பிதாக்களுடன்  சேர்க்கப்பட்டபின்பு,  கர்த்தரையும்,  அவர்  இஸ்ரவேலுக்காகச்  செய்த  கிரியையையும்  அறியாத  வேறொரு  சந்ததி  அவர்களுக்குப்பின்  எழும்பிற்று.  (நியாயாதிபதிகள்  2:10)

akkaalaththil  iruntha  anthach  santhathiyaar  ellaarum  thangga'l  pithaakka'ludan  searkkappattapinbu,  karththaraiyum,  avar  isravealukkaagach  seytha  kiriyaiyaiyum  a’riyaatha  vea’roru  santhathi  avarga'lukkuppin  ezhumbit’ru.  (niyaayaathibathiga’l  2:10)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  பாகால்களைச்  சேவித்து,  (நியாயாதிபதிகள்  2:11)

appozhuthu  israveal  puththirar  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  baagaalga'laich  seaviththu,  (niyaayaathibathiga’l  2:11)

தங்கள்  பிதாக்களை  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தரை  விட்டு,  தங்களைச்  சுற்றிலும்  இருக்கிற  ஜனங்களுடைய  தேவர்களாகிய  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றிப்போய்,  அவர்களைப்  பணிந்துகொண்டு,  கர்த்தருக்குக்  கோபமூட்டினார்கள்.  (நியாயாதிபதிகள்  2:12)

thangga'l  pithaakka'lai  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'nina  avarga'ludaiya  theavanaagiya  karththarai  vittu,  thangga'laich  sut’rilum  irukki’ra  janangga'ludaiya  theavarga'laagiya  anniya  theavarga'laip  pinpat’rippoay,  avarga'laip  pa'ninthuko'ndu,  karththarukkuk  koabamoottinaarga'l.  (niyaayaathibathiga’l  2:12)

அவர்கள்  கர்த்தரை  விட்டு,  பாகாலையும்  அஸ்தரோத்தையும்  சேவித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  2:13)

avarga'l  karththarai  vittu,  baagaalaiyum  astharoaththaiyum  seaviththaarga'l.  (niyaayaathibathiga’l  2:13)

அப்பொழுது  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்  கோபமூண்டவராகி,  அவர்கள்  அப்புறம்  தங்கள்  சத்துருக்களுக்கு  முன்பாக  நிற்கக்கூடாதபடி  கொள்ளையிடுகிற  கொள்ளைக்காரர்  கையில்  அவர்களை  ஒப்புக்கொடுத்து,  அவர்களைச்  சுற்றிலும்  இருக்கிற  அவர்கள்  பகைஞரின்  கையிலே  விற்றுப்போட்டார்.  (நியாயாதிபதிகள்  2:14)

appozhuthu  karththar  isravealinmeal  koabamoo'ndavaraagi,  avarga'l  appu’ram  thangga'l  saththurukka'lukku  munbaaga  ni’rkakkoodaathapadi  ko'l'laiyidugi’ra  ko'l'laikkaarar  kaiyil  avarga'lai  oppukkoduththu,  avarga'laich  sut’rilum  irukki’ra  avarga'l  pagaignarin  kaiyilea  vit’ruppoattaar.  (niyaayaathibathiga’l  2:14)

கர்த்தர்  சொல்லியபடியும்,  கர்த்தர்  அவர்களுக்கு  ஆணையிட்டிருந்தபடியும்,  அவர்கள்  புறப்பட்டுப்போகிற  இடமெல்லாம்  கர்த்தருடைய  கை  தீமைக்கென்றே  அவர்களுக்கு  விரோதமாயிருந்தது;  மிகவும்  நெருக்கப்பட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  2:15)

karththar  solliyapadiyum,  karththar  avarga'lukku  aa'naiyittirunthapadiyum,  avarga'l  pu’rappattuppoagi’ra  idamellaam  karththarudaiya  kai  theemaikken’rea  avarga'lukku  viroathamaayirunthathu;  migavum  nerukkappattaarga'l.  (niyaayaathibathiga’l  2:15)

கர்த்தர்  நியாயாதிபதிகளை  எழும்பப்பண்ணினார்;  அவர்கள்  கொள்ளையிடுகிறவர்களின்  கைக்கு  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  2:16)

karththar  niyaayaathibathiga'lai  ezhumbappa'n'ninaar;  avarga'l  ko'l'laiyidugi’ravarga'lin  kaikku  avarga'lai  neenggalaakki  iradchiththaarga'l.  (niyaayaathibathiga’l  2:16)

அவர்கள்  தங்கள்  நியாயாதிபதிகளின்  சொல்லைக்  கேளாமல்,  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றிச்  சோரம்போய்,  அவைகளைப்  பணிந்துகொண்டார்கள்;  தங்கள்  பிதாக்கள்  கர்த்தரின்  கற்பனைகளுக்குக்  கீழ்ப்படிந்து  நடந்த  வழியை  அவர்கள்  சீக்கிரமாய்  விட்டு  விலகி,  அவர்கள்  செய்தபடி  செய்யாமற்போனார்கள்.  (நியாயாதிபதிகள்  2:17)

avarga'l  thangga'l  niyaayaathibathiga'lin  sollaik  kea'laamal,  anniya  theavarga'laip  pinpat’rich  soarampoay,  avaiga'laip  pa'ninthuko'ndaarga'l;  thangga'l  pithaakka'l  karththarin  ka’rpanaiga'lukkuk  keezhppadinthu  nadantha  vazhiyai  avarga'l  seekkiramaay  vittu  vilagi,  avarga'l  seythapadi  seyyaama’rpoanaarga'l.  (niyaayaathibathiga’l  2:17)

கர்த்தர்  அவர்களுக்கு  நியாயாதிபதிகளை  எழும்பப்பண்ணுகிறபோது,  கர்த்தர்  நியாயாதிபதியோடேகூட  இருந்து,  அந்த  நியாயாதிபதியின்  நாட்களிலெல்லாம்  அவர்கள்  சத்துருக்களின்  கைக்கு  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்துவருவார்;  அவர்கள்  தங்களை  இறுகப்பிடித்து  ஒடுக்குகிறவர்களினிமித்தம்  தவிக்கிறதினாலே,  கர்த்தர்  மனஸ்தாபப்படுவார்.  (நியாயாதிபதிகள்  2:18)

karththar  avarga'lukku  niyaayaathibathiga'lai  ezhumbappa'n'nugi’rapoathu,  karththar  niyaayaathibathiyoadeakooda  irunthu,  antha  niyaayaathibathiyin  naadka'lilellaam  avarga'l  saththurukka'lin  kaikku  avarga'lai  neenggalaakki  iradchiththuvaruvaar;  avarga'l  thangga'lai  i’rugappidiththu  odukkugi’ravarga'linimiththam  thavikki’rathinaalea,  karththar  manasthaabappaduvaar.  (niyaayaathibathiga’l  2:18)

நியாயாதிபதி  மரணமடைந்த  உடனே,  அவர்கள்  திரும்பி,  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றவும்  சேவிக்கவும்  பணிந்துகொள்ளவும்,  தங்கள்  பிதாக்களைப்பார்க்கிலும்  கேடாய்  நடந்து,  தங்கள்  கிர்த்தியங்களையும்  தங்கள்  முரட்டாட்டமான  வழியையும்  விடாதிருப்பார்கள்.  (நியாயாதிபதிகள்  2:19)

niyaayaathibathi  mara'namadaintha  udanea,  avarga'l  thirumbi,  anniya  theavarga'laip  pinpat’ravum  seavikkavum  pa'ninthuko'l'lavum,  thangga'l  pithaakka'laippaarkkilum  keadaay  nadanthu,  thangga'l  kirththiyangga'laiyum  thangga'l  murattaattamaana  vazhiyaiyum  vidaathiruppaarga'l.  (niyaayaathibathiga’l  2:19)

ஆகையால்  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்  கோபமூண்டவராகி:  இந்த  ஜனங்கள்  தங்கள்  பிதாக்களுக்கு  நான்  கற்பித்த  என்  உடன்படிக்கையை  மீறி  என்  சொல்லைக்  கேளாதேபோனபடியால்,  (நியாயாதிபதிகள்  2:20)

aagaiyaal  karththar  isravealinmeal  koabamoo'ndavaraagi:  intha  janangga'l  thangga'l  pithaakka'lukku  naan  ka’rpiththa  en  udanpadikkaiyai  mee’ri  en  sollaik  kea'laatheapoanapadiyaal,  (niyaayaathibathiga’l  2:20)

யோசுவா  மரித்துப்  பின்வைத்துப்போன  ஜாதிகளில்  ஒருவரையும்,  நான்  இனி  அவர்களுக்கு  முன்பாகத்  துரத்திவிடாதிருப்பேன்.  (நியாயாதிபதிகள்  2:21)

yoasuvaa  mariththup  pinvaiththuppoana  jaathiga'lil  oruvaraiyum,  naan  ini  avarga'lukku  munbaagath  thuraththividaathiruppean.  (niyaayaathibathiga’l  2:21)

அவர்கள்  பிதாக்கள்  கர்த்தரின்  வழியைக்  கவனித்ததுபோல,  அவர்கள்  அதிலே  நடக்கும்படிக்கு,  அதைக்  கவனிப்பார்களோ  இல்லையோ  என்று,  அவர்களைக்கொண்டு  இஸ்ரவேலைச்  சோதிப்பதற்காக  அப்படிச்  செய்வேன்  என்றார்.  (நியாயாதிபதிகள்  2:22)

avarga'l  pithaakka'l  karththarin  vazhiyaik  kavaniththathupoala,  avarga'l  athilea  nadakkumpadikku,  athaik  kavanippaarga'loa  illaiyoa  en’ru,  avarga'laikko'ndu  isravealaich  soathippatha’rkaaga  appadich  seyvean  en’raar.  (niyaayaathibathiga’l  2:22)

அதற்காகக்  கர்த்தர்  அந்த  ஜாதிகளை  யோசுவாவின்  கையில்  ஒப்புக்கொடாமலும்,  அவைகளைச்  சீக்கிரமாய்த்  துரத்திவிடாமலும்  விட்டுவைத்தார்.  (நியாயாதிபதிகள்  2:23)

atha’rkaagak  karththar  antha  jaathiga'lai  yoasuvaavin  kaiyil  oppukkodaamalum,  avaiga'laich  seekkiramaayth  thuraththividaamalum  vittuvaiththaar.  (niyaayaathibathiga’l  2:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!