Thursday, August 18, 2016

Niyaayaathibathiga'l 19 | நியாயாதிபதிகள் 19 | Judges 19

இஸ்ரவேலில்  ராஜா  இல்லாத  அந்நாட்களிலே,  எப்பிராயீம்  மலைகள்  அருகே  பரதேசியாய்த்  தங்கின  ஒரு  லேவியன்  இருந்தான்;  அவன்  யூதாவிலுள்ள  பெத்லெகேம்  ஊராளாகிய  ஒரு  ஸ்திரீயைத்  தனக்கு  மறுமனையாட்டியாகக்  கொண்டிருந்தான்.  (நியாயாதிபதிகள்  19:1)

isravealil  raajaa  illaatha  annaadka'lilea,  eppiraayeem  malaiga'l  arugea  paratheasiyaayth  thanggina  oru  leaviyan  irunthaan;  avan  yoothaavilu'l'la  bethleheam  ooraa'laagiya  oru  sthireeyaith  thanakku  ma’rumanaiyaattiyaagak  ko'ndirunthaan.  (niyaayaathibathiga’l  19:1)

அவள்  அவனுக்குத்  துரோகமாய்  விபசாரம்பண்ணி,  அவனை  விட்டு,  யூதா  தேசத்துப்  பெத்லெகேம்  ஊரிலிருக்கிற  தன்  தகப்பன்  வீட்டுக்குப்  போய்,  அங்கே  நாலுமாதம்வரைக்கும்  இருந்தாள்.  (நியாயாதிபதிகள்  19:2)

ava'l  avanukkuth  thuroagamaay  vibasaarampa'n'ni,  avanai  vittu,  yoothaa  theasaththup  bethleheam  oorilirukki’ra  than  thagappan  veettukkup  poay,  anggea  naalumaathamvaraikkum  irunthaa'l.  (niyaayaathibathiga’l  19:2)

அவள்  புருஷன்  அவளோடே  நலவு  சொல்லவும்,  அவளைத்  திரும்ப  அழைத்துவரவும்,  இரண்டு  கழுதைகளை  ஆயத்தப்படுத்தி,  தன்  வேலைக்காரனைக்  கூட்டிக்கொண்டு,  அவளிடத்துக்குப்  போனான்;  அப்பொழுது  அவள்  அவனைத்  தன்  தகப்பன்  வீட்டுக்கு  அழைத்துக்கொண்டு  போனாள்;  ஸ்திரீயின்  தகப்பன்  அவனைக்  கண்டபோது  சந்தோஷமாய்  ஏற்றுக்கொண்டு,  (நியாயாதிபதிகள்  19:3)

ava'l  purushan  ava'loadea  nalavu  sollavum,  ava'laith  thirumba  azhaiththuvaravum,  ira'ndu  kazhuthaiga'lai  aayaththappaduththi,  than  vealaikkaaranaik  koottikko'ndu,  ava'lidaththukkup  poanaan;  appozhuthu  ava'l  avanaith  than  thagappan  veettukku  azhaiththukko'ndu  poanaa'l;  sthireeyin  thagappan  avanaik  ka'ndapoathu  santhoashamaay  eat’rukko'ndu,  (niyaayaathibathiga’l  19:3)

ஸ்திரீயின்  தகப்பனாகிய  அவனுடைய  மாமன்  அவனை  இருத்திக்கொண்டதினால்,  மூன்றுநாள்  அவனோடிருந்தான்;  அவர்கள்  அங்கே  புசித்துக்  குடித்து  இராத்தங்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  19:4)

sthireeyin  thagappanaagiya  avanudaiya  maaman  avanai  iruththikko'ndathinaal,  moon’runaa'l  avanoadirunthaan;  avarga'l  anggea  pusiththuk  kudiththu  iraaththangginaarga'l.  (niyaayaathibathiga’l  19:4)

நாலாம்நாள்  காலமே  அவர்கள்  எழுந்திருந்தபோது,  அவன்  பிரயாணப்படுகையில்,  ஸ்திரீயின்  தகப்பன்  தன்  மருமகனை  நோக்கி:  கொஞ்சம்  அப்பம்  புசித்து,  உன்  மனதைத்  தேற்றிக்கொள்;  பிற்பாடு  நீங்கள்  போகலாம்  என்றான்.  (நியாயாதிபதிகள்  19:5)

naalaamnaa'l  kaalamea  avarga'l  ezhunthirunthapoathu,  avan  pirayaa'nappadugaiyil,  sthireeyin  thagappan  than  marumaganai  noakki:  kogncham  appam  pusiththu,  un  manathaith  theat’rikko'l;  pi’rpaadu  neengga'l  poagalaam  en’raan.  (niyaayaathibathiga’l  19:5)

அவர்கள்  உட்கார்ந்து,  இருவரும்கூடப்  புசித்துக்  குடித்தார்கள்;  ஸ்திரீயின்  தகப்பன்  அந்த  மனுஷனைப்  பார்த்து:  நீ  தயவுசெய்து,  உன்  இருதயம்  மகிழ்ச்சியடைய  இராத்திரிக்கும்  இரு  என்றான்.  (நியாயாதிபதிகள்  19:6)

avarga'l  udkaarnthu,  iruvarumkoodap  pusiththuk  kudiththaarga'l;  sthireeyin  thagappan  antha  manushanaip  paarththu:  nee  thayavuseythu,  un  iruthayam  magizhchchiyadaiya  iraaththirikkum  iru  en’raan.  (niyaayaathibathiga’l  19:6)

அப்படியே  போகிறதற்கு  அந்த  மனுஷன்  எழுந்தபோது,  அவனுடைய  மாமன்  அவனை  வருந்திக்கொண்டதினால்,  அவன்  அன்று  இராத்திரியும்  அங்கே  இருந்தான்.  (நியாயாதிபதிகள்  19:7)

appadiyea  poagi’ratha’rku  antha  manushan  ezhunthapoathu,  avanudaiya  maaman  avanai  varunthikko'ndathinaal,  avan  an’ru  iraaththiriyum  anggea  irunthaan.  (niyaayaathibathiga’l  19:7)

ஐந்தாம்  நாளிலே  அவன்  போகிறதற்கு  அதிகாலமே  எழுந்திருந்தபோது,  ஸ்திரீயின்  தகப்பன்:  இருந்து  உன்  இருதயத்தைத்  தேற்றிக்கொள்  என்றான்;  அப்படியே  அந்திநேரமட்டும்  தாமதித்திருந்து,  இருவரும்  போஜனம்பண்ணினார்கள்.  (நியாயாதிபதிகள்  19:8)

ainthaam  naa'lilea  avan  poagi’ratha’rku  athikaalamea  ezhunthirunthapoathu,  sthireeyin  thagappan:  irunthu  un  iruthayaththaith  theat’rikko'l  en’raan;  appadiyea  anthinearamattum  thaamathiththirunthu,  iruvarum  poajanampa'n'ninaarga'l.  (niyaayaathibathiga’l  19:8)

பின்பு  அவனும்,  அவன்  மறுமனையாட்டியும்,  அவன்  வேலைக்காரனும்  போகிறதற்கு  எழுந்திருந்தபோது,  ஸ்திரீயின்  தகப்பனாகிய  அவனுடைய  மாமன்:  இதோ,  பொழுது  அஸ்தமிக்கப்போகிறது,  சாயங்காலமுமாயிற்று;  இங்கே  இராத்திரிக்கு  இருங்கள்;  பார்,  மாலைமயங்குகிற  வேளையாயிற்று:  உன்  இருதயம்  சந்தோஷமாயிருக்கும்படி,  இங்கே  இராத்தங்கி  நாளை  இருட்டோடே  எழுந்திருந்து,  உன்  வீட்டுக்குப்  போகலாம்  என்றான்.  (நியாயாதிபதிகள்  19:9)

pinbu  avanum,  avan  ma’rumanaiyaattiyum,  avan  vealaikkaaranum  poagi’ratha’rku  ezhunthirunthapoathu,  sthireeyin  thagappanaagiya  avanudaiya  maaman:  ithoa,  pozhuthu  asthamikkappoagi’rathu,  saayanggaalamumaayit’ru;  inggea  iraaththirikku  irungga'l;  paar,  maalaimayanggugi’ra  vea'laiyaayit’ru:  un  iruthayam  santhoashamaayirukkumpadi,  inggea  iraaththanggi  naa'lai  iruttoadea  ezhunthirunthu,  un  veettukkup  poagalaam  en’raan.  (niyaayaathibathiga’l  19:9)

அந்த  மனுஷனோ,  இராத்திரிக்கு  இருக்க  மனதில்லாமல்,  இரண்டு  கழுதைகள்மேலும்  சேணம்வைத்து,  தன்  மறுமனையாட்டியைக்  கூட்டிக்கொண்டு,  எழுந்து  புறப்பட்டு,  எருசலேமாகிய  எபூசுக்கு  நேராக  வந்தான்.  (நியாயாதிபதிகள்  19:10)

antha  manushanoa,  iraaththirikku  irukka  manathillaamal,  ira'ndu  kazhuthaiga'lmealum  sea'namvaiththu,  than  ma’rumanaiyaattiyaik  koottikko'ndu,  ezhunthu  pu’rappattu,  erusaleamaagiya  eboosukku  nearaaga  vanthaan.  (niyaayaathibathiga’l  19:10)

அவர்கள்  எபூசுக்குச்  சமீபமாய்  வருகையில்,  பொழுதுபோகிறதாயிருந்தது;  அப்பொழுது  வேலைக்காரன்  தன்  எஜமானை  நோக்கி:  எபூசியர்  இருக்கிற  இந்தப்  பட்டணத்திற்குப்  போய்,  அங்கே  இராத்தங்கலாம்  என்றான்.  (நியாயாதிபதிகள்  19:11)

avarga'l  eboosukkuch  sameebamaay  varugaiyil,  pozhuthupoagi’rathaayirunthathu;  appozhuthu  vealaikkaaran  than  ejamaanai  noakki:  eboosiyar  irukki’ra  inthap  patta'naththi’rkup  poay,  anggea  iraaththanggalaam  en’raan.  (niyaayaathibathiga’l  19:11)

அதற்கு  அவன்  எஜமான்  நாம்  வழியைவிட்டு,  இஸ்ரவேல்  புத்திரரில்லாத  மறுஜாதியார்  இருக்கிற  பட்டணத்துக்குப்  போகப்படாது;  அப்பாலே  கிபியாமட்டும்  போவோம்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  19:12)

atha’rku  avan  ejamaan  naam  vazhiyaivittu,  israveal  puththirarillaatha  ma’rujaathiyaar  irukki’ra  patta'naththukkup  poagappadaathu;  appaalea  kibiyaamattum  poavoam  en’ru  solli,  (niyaayaathibathiga’l  19:12)

தன்  வேலைக்காரனைப்  பார்த்து:  நாம்  கிபியாவிலாகிலும்  ராமாவிலாகிலும்  இராத்தங்கும்படிக்கு,  அவைகளில்  ஒரு  இடத்திற்குப்  போய்ச்  சேரும்படி  நடந்துபோவோம்  வா  என்றான்.  (நியாயாதிபதிகள்  19:13)

than  vealaikkaaranaip  paarththu:  naam  kibiyaavilaagilum  raamaavilaagilum  iraaththanggumpadikku,  avaiga'lil  oru  idaththi’rkup  poaych  searumpadi  nadanthupoavoam  vaa  en’raan.  (niyaayaathibathiga’l  19:13)

அப்படியே  அப்பாலே  நடந்துபோனார்கள்;  பென்யமீன்  நாட்டைச்  சேர்ந்த  கிபியாவின்  கிட்ட  வருகையில்,  சூரியன்  அஸ்தமனமாயிற்று.  (நியாயாதிபதிகள்  19:14)

appadiyea  appaalea  nadanthupoanaarga'l;  benyameen  naattaich  searntha  kibiyaavin  kitta  varugaiyil,  sooriyan  asthamanamaayit’ru.  (niyaayaathibathiga’l  19:14)

ஆகையால்  கிபியாவிலே  வந்து  இராத்தங்கும்படிக்கு,  வழியைவிட்டு  அவ்விடத்திற்குப்  போனார்கள்;  அவன்  பட்டணத்துக்குள்  போனபோது,  இராத்தங்குகிறதற்கு  அவர்களை  வீட்டிலே  சேர்த்துக்கொள்வார்  இல்லாததினால்,  வீதியில்  உட்கார்ந்தான்.  (நியாயாதிபதிகள்  19:15)

aagaiyaal  kibiyaavilea  vanthu  iraaththanggumpadikku,  vazhiyaivittu  avvidaththi’rkup  poanaarga'l;  avan  patta'naththukku'l  poanapoathu,  iraaththanggugi’ratha’rku  avarga'lai  veettilea  searththukko'lvaar  illaathathinaal,  veethiyil  udkaarnthaan.  (niyaayaathibathiga’l  19:15)

வயலிலே  வேலைசெய்து,  மாலையிலே  திரும்புகிற  ஒரு  கிழவன்  வந்தான்;  அந்த  மனுஷனும்  எப்பிராயீம்  மலைத்தேசத்தான்,  அவன்  கிபியாவிலே  சஞ்சரிக்கவந்தான்;  அவ்விடத்து  மனுஷரோ  பென்யமீனர்.  (நியாயாதிபதிகள்  19:16)

vayalilea  vealaiseythu,  maalaiyilea  thirumbugi’ra  oru  kizhavan  vanthaan;  antha  manushanum  eppiraayeem  malaiththeasaththaan,  avan  kibiyaavilea  sagncharikkavanthaan;  avvidaththu  manusharoa  benyameenar.  (niyaayaathibathiga’l  19:16)

அந்தக்  கிழவன்  தன்  கண்களை  ஏறெடுத்துப்  பட்டணத்து  வீதியில்  அந்தப்  பிரயாணக்காரன்  இருக்கக்  கண்டு:  எங்கே  போகிறாய்,  எங்கேயிருந்து  வந்தாய்  என்று  கேட்டான்.  (நியாயாதிபதிகள்  19:17)

anthak  kizhavan  than  ka'nga'lai  ea’reduththup  patta'naththu  veethiyil  anthap  pirayaa'nakkaaran  irukkak  ka'ndu:  enggea  poagi’raay,  enggeayirunthu  vanthaay  en’ru  keattaan.  (niyaayaathibathiga’l  19:17)

அதற்கு  அவன்:  நாங்கள்  யூதாவிலுள்ள  ஊராகிய  பெத்லெகேமிலிருந்து  வந்து,  எப்பிராயீம்  மலைத்தேசத்தின்  புறங்கள்மட்டும்  போகிறோம்;  நான்  அவ்விடத்தான்;  யூதாவிலுள்ள  பெத்லெகேம்மட்டும்  போய்வந்தேன்,  நான்  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போகிறேன்;  இங்கே  என்னை  வீட்டிலே  ஏற்றுக்கொள்வார்  ஒருவரும்  இல்லை.  (நியாயாதிபதிகள்  19:18)

atha’rku  avan:  naangga'l  yoothaavilu'l'la  ooraagiya  bethleheamilirunthu  vanthu,  eppiraayeem  malaiththeasaththin  pu’rangga'lmattum  poagi’roam;  naan  avvidaththaan;  yoothaavilu'l'la  bethleheammattum  poayvanthean,  naan  karththarudaiya  aalayaththukkup  poagi’rean;  inggea  ennai  veettilea  eat’rukko'lvaar  oruvarum  illai.  (niyaayaathibathiga’l  19:18)

எங்கள்  கழுதைகளுக்கு  வைக்கோலும்  தீபனமும்  உண்டு;  எனக்கும்  உமது  அடியாளுக்கும்  உமது  அடியானோடிருக்கிற  வேலைக்காரனுக்கும்  அப்பமும்  திராட்சரசமும்  உண்டு;  ஒன்றிலும்  குறைவில்லை  என்றான்.  (நியாயாதிபதிகள்  19:19)

engga'l  kazhuthaiga'lukku  vaikkoalum  theebanamum  u'ndu;  enakkum  umathu  adiyaa'lukkum  umathu  adiyaanoadirukki’ra  vealaikkaaranukkum  appamum  thiraadcharasamum  u'ndu;  on’rilum  ku’raivillai  en’raan.  (niyaayaathibathiga’l  19:19)

அப்பொழுது  அந்தக்  கிழவன்:  உனக்குச்  சமாதானம்;  உன்  குறைவுகளெல்லாம்  என்மேல்  இருக்கட்டும்;  வீதியிலேமாத்திரம்  இராத்தங்கவேண்டாம்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  19:20)

appozhuthu  anthak  kizhavan:  unakkuch  samaathaanam;  un  ku’raivuga'lellaam  enmeal  irukkattum;  veethiyileamaaththiram  iraaththanggavea'ndaam  en’ru  solli,  (niyaayaathibathiga’l  19:20)

அவனைத்  தன்  வீட்டுக்குள்  அழைத்துக்கொண்டுபோய்,  கழுதைகளுக்குத்  தீபனம்போட்டான்;  அவர்கள்  தங்கள்  கால்களைக்  கழுவிக்கொண்டு,  புசித்துக்  குடித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  19:21)

avanaith  than  veettukku'l  azhaiththukko'ndupoay,  kazhuthaiga'lukkuth  theebanampoattaan;  avarga'l  thangga'l  kaalga'laik  kazhuvikko'ndu,  pusiththuk  kudiththaarga'l.  (niyaayaathibathiga’l  19:21)

அவர்கள்  மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது,  இதோ,  பேலியாளின்  மக்களாகிய  அந்த  ஊர்  மனுஷரில்  சிலர்  அந்த  வீட்டைச்  சூழ்ந்துகொண்டு,  கதவைத்  தட்டி:  உன்  வீட்டிலே  வந்த  அந்த  மனுஷனை  நாங்கள்  அறியும்படிக்கு,  வெளியே  கொண்டுவா  என்று  வீட்டுக்காரனாகிய  அந்தக்  கிழவனோடே  சொன்னார்கள்.  (நியாயாதிபதிகள்  19:22)

avarga'l  manamagizhchchiyaayirukki’rapoathu,  ithoa,  bealiyaa'lin  makka'laagiya  antha  oor  manusharil  silar  antha  veettaich  soozhnthuko'ndu,  kathavaith  thatti:  un  veettilea  vantha  antha  manushanai  naangga'l  a’riyumpadikku,  ve'liyea  ko'nduvaa  en’ru  veettukkaaranaagiya  anthak  kizhavanoadea  sonnaarga'l.  (niyaayaathibathiga’l  19:22)

அப்பொழுது  வீட்டுக்காரனாகிய  அந்த  மனுஷன்  வெளியே  அவர்களிடத்தில்  போய்:  இப்படிச்  செய்யவேண்டாம்;  என்  சகோதரரே,  இப்படிப்பட்ட  பொல்லாப்பைச்  செய்யவேண்டாம்;  அந்த  மனுஷன்  என்  வீட்டிற்குள்  வந்திருக்கையில்,  இப்படிக்கொத்த  மதிகேட்டைச்  செய்யீர்களாக.  (நியாயாதிபதிகள்  19:23)

appozhuthu  veettukkaaranaagiya  antha  manushan  ve'liyea  avarga'lidaththil  poay:  ippadich  seyyavea'ndaam;  en  sagoathararea,  ippadippatta  pollaappaich  seyyavea'ndaam;  antha  manushan  en  veetti’rku'l  vanthirukkaiyil,  ippadikkoththa  mathikeattaich  seyyeerga'laaga.  (niyaayaathibathiga’l  19:23)

இதோ,  கன்னியாஸ்திரீயாகிய  என்  மகளும்,  அந்த  மனிதனுடைய  மறுமனையாட்டியும்  இருக்கிறார்கள்;  அவர்களை  உங்களிடத்தில்  வெளியே  கொண்டுவருகிறேன்;  அவர்களை  அவமானப்படுத்தி,  உங்கள்  பார்வைக்குச்  சரிபோனபிரகாரம்  அவர்களுக்குச்  செய்யுங்கள்;  ஆனாலும்  இந்த  மனுஷனுக்கு  அப்படிப்பட்ட  மதிகேடான  காரியத்தைச்  செய்யவேண்டாம்  என்றான்.  (நியாயாதிபதிகள்  19:24)

ithoa,  kanniyaasthireeyaagiya  en  maga'lum,  antha  manithanudaiya  ma’rumanaiyaattiyum  irukki’raarga'l;  avarga'lai  ungga'lidaththil  ve'liyea  ko'nduvarugi’rean;  avarga'lai  avamaanappaduththi,  ungga'l  paarvaikkuch  saripoanapiragaaram  avarga'lukkuch  seyyungga'l;  aanaalum  intha  manushanukku  appadippatta  mathikeadaana  kaariyaththaich  seyyavea'ndaam  en’raan.  (niyaayaathibathiga’l  19:24)

அந்த  மனுஷர்  அவன்  சொல்லைக்  கேட்கவில்லை;  அப்பொழுது  அந்த  மனுஷன்  தன்  மறுமனையாட்டியைப்  பிடித்து,  அவர்களிடத்தில்  வெளியே  கொண்டுவந்து  விட்டான்;  அவர்கள்  அவளை  அறிந்துகொண்டு,  இராமுழுதும்  விடியுங்காலமட்டும்  அவளை  இலச்சையாய்  நடத்தி,  கிழக்கு  வெளுக்கும்போது  அவளைப்  போகவிட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  19:25)

antha  manushar  avan  sollaik  keadkavillai;  appozhuthu  antha  manushan  than  ma’rumanaiyaattiyaip  pidiththu,  avarga'lidaththil  ve'liyea  ko'nduvanthu  vittaan;  avarga'l  ava'lai  a’rinthuko'ndu,  iraamuzhuthum  vidiyungkaalamattum  ava'lai  ilachchaiyaay  nadaththi,  kizhakku  ve'lukkumpoathu  ava'laip  poagavittaarga'l.  (niyaayaathibathiga’l  19:25)

விடியுங்காலத்திற்கு  முன்னே  அந்த  ஸ்திரீ  வந்து,  வெளிச்சமாகுமட்டும்  அங்கே  தன்  எஜமான்  இருந்த  வீட்டு  வாசற்படியிலே  விழுந்துகிடந்தாள்.  (நியாயாதிபதிகள்  19:26)

vidiyungkaalaththi’rku  munnea  antha  sthiree  vanthu,  ve'lichchamaagumattum  anggea  than  ejamaan  iruntha  veettu  vaasa’rpadiyilea  vizhunthukidanthaa'l.  (niyaayaathibathiga’l  19:26)

அவள்  எஜமான்  காலமே  எழுந்திருந்து  வீட்டின்  கதவைத்  திறந்து,  தன்  வழியே  போகப்  புறப்படுகிறபோது,  இதோ,  அவன்  மறுமனையாட்டியாகிய  ஸ்திரீ  வீட்டுவாசலுக்கு  முன்பாகத்  தன்  கைகளை  வாசற்படியின்மேல்  வைத்தவளாய்க்  கிடந்தாள்.  (நியாயாதிபதிகள்  19:27)

ava'l  ejamaan  kaalamea  ezhunthirunthu  veettin  kathavaith  thi’ranthu,  than  vazhiyea  poagap  pu’rappadugi’rapoathu,  ithoa,  avan  ma’rumanaiyaattiyaagiya  sthiree  veettuvaasalukku  munbaagath  than  kaiga'lai  vaasa’rpadiyinmeal  vaiththava'laayk  kidanthaa'l.  (niyaayaathibathiga’l  19:27)

எழுந்திரு  போவோம்  என்று  அவன்  அவளோடே  சொன்னதற்குப்  பிரதியுத்தரம்  பிறக்கவில்லை.  அப்பொழுது  அந்த  மனுஷன்  அவளைக்  கழுதையின்மேல்  போட்டுக்கொண்டு,  பிரயாணப்பட்டு,  தன்  இடத்திற்குப்  போனான்.  (நியாயாதிபதிகள்  19:28)

ezhunthiru  poavoam  en’ru  avan  ava'loadea  sonnatha’rkup  pirathiyuththaram  pi’rakkavillai.  appozhuthu  antha  manushan  ava'laik  kazhuthaiyinmeal  poattukko'ndu,  pirayaa'nappattu,  than  idaththi’rkup  poanaan.  (niyaayaathibathiga’l  19:28)

அவன்  தன்  வீட்டுக்கு  வந்தபோது,  ஒரு  கத்தியை  எடுத்து,  தன்  மறுமனையாட்டியைப்  பிடித்து,  அவளை  அவளுடைய  எலும்புகளோடுங்கூடப்  பன்னிரண்டு  துண்டமாக்கி,  இஸ்ரவேலின்  எல்லைகளுக்கெல்லாம்  அனுப்பினான்.  (நியாயாதிபதிகள்  19:29)

avan  than  veettukku  vanthapoathu,  oru  kaththiyai  eduththu,  than  ma’rumanaiyaattiyaip  pidiththu,  ava'lai  ava'ludaiya  elumbuga'loadungkoodap  pannira'ndu  thu'ndamaakki,  isravealin  ellaiga'lukkellaam  anuppinaan.  (niyaayaathibathiga’l  19:29)

அப்பொழுது  அதைக்  கண்டவர்களெல்லாரும்,  இஸ்ரவேல்  புத்திரர்  எகிப்திலிருந்து  புறப்பட்ட  நாள்  முதற்கொண்டு  இந்நாள்வரைக்கும்  இதைப்போலொத்த  காரியம்  செய்யப்படவும்  இல்லை,  காணப்படவும்  இல்லை;  இந்தக்  காரியத்தை  யோசித்து  ஆலோசனைபண்ணிச்  செய்யவேண்டியது  இன்னதென்று  சொல்லுங்கள்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  19:30)

appozhuthu  athaik  ka'ndavarga'lellaarum,  israveal  puththirar  egipthilirunthu  pu’rappatta  naa'l  mutha’rko'ndu  innaa'lvaraikkum  ithaippoaloththa  kaariyam  seyyappadavum  illai,  kaa'nappadavum  illai;  inthak  kaariyaththai  yoasiththu  aaloasanaipa'n'nich  seyyavea'ndiyathu  innathen’ru  sollungga'l  en’raarga'l.  (niyaayaathibathiga’l  19:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!