Thursday, August 18, 2016

Niyaayaathibathiga'l 18 | நியாயாதிபதிகள் 18 | Judges 18

அந்நாட்களில்  இஸ்ரவேலிலே  ராஜா  இல்லை;  தாண்  கோத்திரத்தார்  குடியிருக்கிறதற்கு,  தங்களுக்குச்  சுதந்தரம்  தேடினார்கள்;  அந்நாள்வரைக்கும்  அவர்களுக்கு  இஸ்ரவேல்  கோத்திரங்கள்  நடுவே  போந்த  சுதந்தரம்  கிடைக்கவில்லை.  (நியாயாதிபதிகள்  18:1)

annaadka'lil  isravealilea  raajaa  illai;  thaa'n  koaththiraththaar  kudiyirukki’ratha’rku,  thangga'lukkuch  suthantharam  theadinaarga'l;  annaa'lvaraikkum  avarga'lukku  israveal  koaththirangga'l  naduvea  poantha  suthantharam  kidaikkavillai.  (niyaayaathibathiga’l  18:1)

ஆகையால்  தேசத்தை  உளவுபார்த்து  வரும்படி,  தாண்  புத்திரர்  தங்கள்  கோத்திரத்திலே  பலத்த  மனுஷராகிய  ஐந்துபேரைத்  தங்கள்  எல்லைகளில்  இருக்கிற  சோராவிலும்  எஸ்தாவோலிலுமிருந்து  அனுப்பி:  நீங்கள்  போய்,  தேசத்தை  ஆராய்ந்துபார்த்து  வாருங்கள்  என்று  அவர்களோடே  சொன்னார்கள்;  அவர்கள்  எப்பிராயீம்  மலைத்தேசத்தில்  இருக்கிற  மீகாவின்  வீடுமட்டும்  போய்,  அங்கே  இராத்தங்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  18:2)

aagaiyaal  theasaththai  u'lavupaarththu  varumpadi,  thaa'n  puththirar  thangga'l  koaththiraththilea  balaththa  manusharaagiya  ainthupearaith  thangga'l  ellaiga'lil  irukki’ra  soaraavilum  esthaavoalilumirunthu  anuppi:  neengga'l  poay,  theasaththai  aaraaynthupaarththu  vaarungga'l  en’ru  avarga'loadea  sonnaarga'l;  avarga'l  eppiraayeem  malaiththeasaththil  irukki’ra  meegaavin  veedumattum  poay,  anggea  iraaththangginaarga'l.  (niyaayaathibathiga’l  18:2)

அவர்கள்  மீகாவின்  வீட்டண்டை  இருக்கையில்,  லேவியனான  வாலிபனுடைய  சத்தத்தை  அறிந்து,  அங்கே  அவனிடத்தில்  போய்:  உன்னை  இங்கே  அழைத்துவந்தது  யார்?  இவ்விடத்தில்  என்ன  செய்கிறாய்?  உனக்கு  இங்கே  இருக்கிறது  என்ன  என்று  அவனிடத்தில்  கேட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  18:3)

avarga'l  meegaavin  veetta'ndai  irukkaiyil,  leaviyanaana  vaalibanudaiya  saththaththai  a’rinthu,  anggea  avanidaththil  poay:  unnai  inggea  azhaiththuvanthathu  yaar?  ivvidaththil  enna  seygi’raay?  unakku  inggea  irukki’rathu  enna  en’ru  avanidaththil  keattaarga'l.  (niyaayaathibathiga’l  18:3)

அதற்கு  அவன்:  இன்ன  இன்னபடி  மீகா  எனக்குச்  செய்தான்;  எனக்குச்  சம்பளம்  பொருந்தினான்;  அவனுக்கு  ஆசாரியனானேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  18:4)

atha’rku  avan:  inna  innapadi  meegaa  enakkuch  seythaan;  enakkuch  samba'lam  porunthinaan;  avanukku  aasaariyanaanean  en’raan.  (niyaayaathibathiga’l  18:4)

அப்பொழுது  அவர்கள்  அவனை  நோக்கி:  எங்கள்  பிரயாணம்  அநுகூலமாய்  முடியுமா  என்று  நாங்கள்  அறியும்படி  தேவனிடத்தில்  கேள்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  18:5)

appozhuthu  avarga'l  avanai  noakki:  engga'l  pirayaa'nam  anugoolamaay  mudiyumaa  en’ru  naangga'l  a’riyumpadi  theavanidaththil  kea'l  en’raarga'l.  (niyaayaathibathiga’l  18:5)

அவர்களுக்கு  அந்த  ஆசாரியன்:  சமாதானத்தோடே  போங்கள்;  உங்கள்  பிரயாணம்  கர்த்தருக்கு  ஏற்றது  என்றான்.  (நியாயாதிபதிகள்  18:6)

avarga'lukku  antha  aasaariyan:  samaathaanaththoadea  poangga'l;  ungga'l  pirayaa'nam  karththarukku  eat’rathu  en’raan.  (niyaayaathibathiga’l  18:6)

அப்பொழுது  அந்த  ஐந்து  மனுஷரும்  புறப்பட்டு,  லாயீசுக்குப்  போய்,  அதில்  குடியிருக்கிற  ஜனங்கள்  சீதோனியருடைய  வழக்கத்தின்படியே,  பயமில்லாமல்  அமரிக்கையும்  சுகமுமாய்  இருக்கிறதையும்,  தேசத்திலே  அவர்களை  அடக்கி  ஆள  யாதொரு  அதிகாரியும்  இல்லை  என்பதையும்,  அவர்கள்  சீதோனியருக்குத்  தூரமானவர்கள்  என்பதையும்,  அவர்களுக்கு  ஒருவரோடும்  கவை  காரியம்  இல்லை  என்பதையும்  கண்டு,  (நியாயாதிபதிகள்  18:7)

appozhuthu  antha  ainthu  manusharum  pu’rappattu,  laayeesukkup  poay,  athil  kudiyirukki’ra  janangga'l  seethoaniyarudaiya  vazhakkaththinpadiyea,  bayamillaamal  amarikkaiyum  sugamumaay  irukki’rathaiyum,  theasaththilea  avarga'lai  adakki  aa'la  yaathoru  athigaariyum  illai  enbathaiyum,  avarga'l  seethoaniyarukkuth  thooramaanavarga'l  enbathaiyum,  avarga'lukku  oruvaroadum  kavai  kaariyam  illai  enbathaiyum  ka'ndu,  (niyaayaathibathiga’l  18:7)

சோராவிலும்  எஸ்தாவோலிலும்  இருக்கிற  தங்கள்  சகோதரரிடத்திற்குத்  திரும்பிவந்தார்கள்.  அவர்கள்  சகோதரர்:  நீங்கள்  கொண்டுவருகிற  செய்தி  என்ன  என்று  அவர்களைக்  கேட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  18:8)

soaraavilum  esthaavoalilum  irukki’ra  thangga'l  sagoathararidaththi’rkuth  thirumbivanthaarga'l.  avarga'l  sagoatharar:  neengga'l  ko'nduvarugi’ra  seythi  enna  en’ru  avarga'laik  keattaarga'l.  (niyaayaathibathiga’l  18:8)

அதற்கு  அவர்கள்:  எழும்புங்கள்,  அவர்களுக்கு  விரோதமாய்ப்  போவோம்  வாருங்கள்;  அந்த  தேசத்தைப்  பார்த்தோம்,  அது  மிகவும்  நன்றாயிருக்கிறது,  நீங்கள்  சும்மாயிருப்பீர்களா?  அந்த  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  புறப்பட்டுப்போக  அசதியாயிராதேயுங்கள்.  (நியாயாதிபதிகள்  18:9)

atha’rku  avarga'l:  ezhumbungga'l,  avarga'lukku  viroathamaayp  poavoam  vaarungga'l;  antha  theasaththaip  paarththoam,  athu  migavum  nan’raayirukki’rathu,  neengga'l  summaayiruppeerga'laa?  antha  theasaththaich  suthanthariththukko'l'lumpadi  pu’rappattuppoaga  asathiyaayiraatheayungga'l.  (niyaayaathibathiga’l  18:9)

நீங்கள்  அங்கே  சேரும்போது,  சுகமாய்க்  குடியிருக்கிற  ஜனங்களிடத்தில்  சேருவீர்கள்;  அந்த  தேசம்  விஸ்தாரமாயிருக்கிறது;  தேவன்  அதை  உங்கள்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அது  பூமியிலுள்ள  சகல  வஸ்துவும்  குறைவில்லாமலிருக்கிற  இடம்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  18:10)

neengga'l  anggea  searumpoathu,  sugamaayk  kudiyirukki’ra  janangga'lidaththil  searuveerga'l;  antha  theasam  visthaaramaayirukki’rathu;  theavan  athai  ungga'l  kaiyil  oppukkoduththaar;  athu  boomiyilu'l'la  sagala  vasthuvum  ku’raivillaamalirukki’ra  idam  en’raarga'l.  (niyaayaathibathiga’l  18:10)

அப்பொழுது  சோராவிலும்  எஸ்தாவோலிலும்  இருக்கிற  தாண்  கோத்திரத்தாரில்  அறுநூறுபேர்  ஆயுதபாணிகளாய்  அங்கேயிருந்து  புறப்பட்டுப்போய்,  (நியாயாதிபதிகள்  18:11)

appozhuthu  soaraavilum  esthaavoalilum  irukki’ra  thaa'n  koaththiraththaaril  a’runoo’rupear  aayuthabaa'niga'laay  anggeayirunthu  pu’rappattuppoay,  (niyaayaathibathiga’l  18:11)

யூதாவிலுள்ள  கீரியாத்யாரீமிலே  பாளயமிறங்கினார்கள்;  ஆதலால்  அது  இந்நாள்வரைக்கும்  மக்னிதான்  என்னப்படும்;  அது  கீரியாத்யாரீமின்  பின்னாலே  இருக்கிறது.  (நியாயாதிபதிகள்  18:12)

yoothaavilu'l'la  keeriyaathyaareemilea  paa'layami’rangginaarga'l;  aathalaal  athu  innaa'lvaraikkum  maknithaan  ennappadum;  athu  keeriyaathyaareemin  pinnaalea  irukki’rathu.  (niyaayaathibathiga’l  18:12)

பின்பு  அவர்கள்  அங்கேயிருந்து  எப்பிராயீம்  மலைக்குப்  போய்,  மீகாவின்  வீடுமட்டும்  வந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  18:13)

pinbu  avarga'l  anggeayirunthu  eppiraayeem  malaikkup  poay,  meegaavin  veedumattum  vanthaarga'l.  (niyaayaathibathiga’l  18:13)

அப்பொழுது  லாயீசின்  நாட்டை  உளவுபார்க்கப்  போய்வந்த  ஐந்து  மனுஷர்  தங்கள்  சகோதரரைப்  பார்த்து:  இந்த  வீடுகளில்  ஏபோத்தும்  சுரூபங்களும்  வெட்டப்பட்ட  விக்கிரகமும்  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகமும்  இருக்கிறது  என்று  உங்களுக்குத்  தெரியுமா;  இப்போதும்  நீங்கள்  செய்யவேண்டியதை  யோசித்துக்கொள்ளுங்கள்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  18:14)

appozhuthu  laayeesin  naattai  u'lavupaarkkap  poayvantha  ainthu  manushar  thangga'l  sagoathararaip  paarththu:  intha  veeduga'lil  eaboaththum  suroobangga'lum  vettappatta  vikkiragamum  vaarppikkappatta  vikkiragamum  irukki’rathu  en’ru  ungga'lukkuth  theriyumaa;  ippoathum  neengga'l  seyyavea'ndiyathai  yoasiththukko'l'lungga'l  en’raarga'l.  (niyaayaathibathiga’l  18:14)

அப்பொழுது  அவ்விடத்திற்குத்  திரும்பி,  மீகாவின்  வீட்டில்  இருக்கிற  லேவியனான  வாலிபனின்  வீட்டிலே  வந்து,  அவனிடத்தில்  சுகசெய்தி  விசாரித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  18:15)

appozhuthu  avvidaththi’rkuth  thirumbi,  meegaavin  veettil  irukki’ra  leaviyanaana  vaalibanin  veettilea  vanthu,  avanidaththil  sugaseythi  visaariththaarga'l.  (niyaayaathibathiga’l  18:15)

ஆயுதபாணிகளாகிய  தாண்  புத்திரர்  அறுநூறுபேரும்  வாசற்படியிலே  நின்றார்கள்.  (நியாயாதிபதிகள்  18:16)

aayuthabaa'niga'laagiya  thaa'n  puththirar  a’runoo’rupearum  vaasa’rpadiyilea  nin’raarga'l.  (niyaayaathibathiga’l  18:16)

ஆசாரியனும்  ஆயுதபாணிகளாகிய  அறுநூறுபேரும்  வாசற்படியிலே  நிற்கையில்,  தேசத்தை  உளவுபார்க்கப்  போய்வந்த  அந்த  ஐந்து  மனுஷர்  உள்ளே  புகுந்து,  வெட்டப்பட்ட  விக்கிரகத்தையும்  ஏபோத்தையும்  சுரூபங்களையும்  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகத்தையும்  எடுத்துக்கொண்டு  வந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  18:17)

aasaariyanum  aayuthabaa'niga'laagiya  a’runoo’rupearum  vaasa’rpadiyilea  ni’rkaiyil,  theasaththai  u'lavupaarkkap  poayvantha  antha  ainthu  manushar  u'l'lea  pugunthu,  vettappatta  vikkiragaththaiyum  eaboaththaiyum  suroobangga'laiyum  vaarppikkappatta  vikkiragaththaiyum  eduththukko'ndu  vanthaarga'l.  (niyaayaathibathiga’l  18:17)

அவர்கள்  மீகாவின்  வீட்டிற்குள்  புகுந்து,  வெட்டப்பட்ட  விக்கிரகத்தையும்  ஏபோத்தையும்  சுரூபங்களையும்  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகத்தையும்  எடுத்துக்கொண்டு  வருகிறபோது,  ஆசாரியன்  அவர்களைப்  பார்த்து:  நீங்கள்  செய்கிறது  என்ன  என்று  கேட்டான்.  (நியாயாதிபதிகள்  18:18)

avarga'l  meegaavin  veetti’rku'l  pugunthu,  vettappatta  vikkiragaththaiyum  eaboaththaiyum  suroobangga'laiyum  vaarppikkappatta  vikkiragaththaiyum  eduththukko'ndu  varugi’rapoathu,  aasaariyan  avarga'laip  paarththu:  neengga'l  seygi’rathu  enna  en’ru  keattaan.  (niyaayaathibathiga’l  18:18)

அதற்கு  அவர்கள்:  நீ  பேசாதே,  உன்  வாயை  மூடிக்கொண்டு,  எங்களோடேகூட  வந்து  எங்களுக்குத்  தகப்பனும்  ஆசாரியனுமாயிரு;  நீ  ஒரே  ஒருவன்  வீட்டுக்கு  ஆசாரியனாயிருக்கிறது  நல்லதோ?  இஸ்ரவேலில்  ஒரு  கோத்திரத்திற்கும்  வம்சத்திற்கும்  ஆசாரியனாயிருக்கிறது  நல்லதோ?  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  18:19)

atha’rku  avarga'l:  nee  peasaathea,  un  vaayai  moodikko'ndu,  engga'loadeakooda  vanthu  engga'lukkuth  thagappanum  aasaariyanumaayiru;  nee  orea  oruvan  veettukku  aasaariyanaayirukki’rathu  nallathoa?  isravealil  oru  koaththiraththi’rkum  vamsaththi’rkum  aasaariyanaayirukki’rathu  nallathoa?  en’raarga'l.  (niyaayaathibathiga’l  18:19)

அப்பொழுது  ஆசாரியனுடைய  மனது  இதமியப்பட்டு,  அவன்  ஏபோத்தையும்  சுரூபங்களையும்  வெட்டப்பட்ட  விக்கிரகத்தையும்  எடுத்துக்கொண்டு,  ஜனங்களுக்குள்ளே  புகுந்தான்.  (நியாயாதிபதிகள்  18:20)

appozhuthu  aasaariyanudaiya  manathu  ithamiyappattu,  avan  eaboaththaiyum  suroobangga'laiyum  vettappatta  vikkiragaththaiyum  eduththukko'ndu,  janangga'lukku'l'lea  pugunthaan.  (niyaayaathibathiga’l  18:20)

அவர்கள்  திரும்பும்படி  புறப்பட்டு,  பிள்ளைகளையும்,  ஆடுமாடுகளையும்,  பண்டம்  பாடிகளையும்,  தங்களுக்குமுன்னே  போகும்படி  செய்தார்கள்.  (நியாயாதிபதிகள்  18:21)

avarga'l  thirumbumpadi  pu’rappattu,  pi'l'laiga'laiyum,  aadumaaduga'laiyum,  pa'ndam  paadiga'laiyum,  thangga'lukkumunnea  poagumpadi  seythaarga'l.  (niyaayaathibathiga’l  18:21)

அவர்கள்  புறப்பட்டு,  மீகாவின்  வீட்டை  விட்டுக்  கொஞ்சந்தூரம்  போனபோது,  மீகாவின்  வீட்டிற்கு  அயல்வீட்டார்  கூட்டங்கூடி,  தாண்  புத்திரரைத்  தொடர்ந்துவந்து,  (நியாயாதிபதிகள்  18:22)

avarga'l  pu’rappattu,  meegaavin  veettai  vittuk  kognchanthooram  poanapoathu,  meegaavin  veetti’rku  ayalveettaar  koottangkoodi,  thaa'n  puththiraraith  thodarnthuvanthu,  (niyaayaathibathiga’l  18:22)

அவர்களைப்  பார்த்துக்  கூப்பிட்டார்கள்;  அவர்கள்  திரும்பிப்பார்த்து,  மீகாவை  நோக்கி:  நீ  இப்படிக்  கூட்டத்துடன்  வருகிற  காரியம்  என்ன  என்று  கேட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  18:23)

avarga'laip  paarththuk  kooppittaarga'l;  avarga'l  thirumbippaarththu,  meegaavai  noakki:  nee  ippadik  koottaththudan  varugi’ra  kaariyam  enna  en’ru  keattaarga'l.  (niyaayaathibathiga’l  18:23)

அதற்கு  அவன்:  நான்  உண்டுபண்ணின  என்னுடைய  தெய்வங்களையும்  அந்த  ஆசாரியனையுங்கூட  நீங்கள்  கொண்டுபோகிறீர்களே;  இனி  எனக்கு  என்ன  இருக்கிறது;  நீ  கூப்பிடுகிற  காரியம்  என்ன  என்று  நீங்கள்  என்னிடத்தில்  எப்படிக்  கேட்கலாம்  என்றான்.  (நியாயாதிபதிகள்  18:24)

atha’rku  avan:  naan  u'ndupa'n'nina  ennudaiya  theyvangga'laiyum  antha  aasaariyanaiyungkooda  neengga'l  ko'ndupoagi’reerga'lea;  ini  enakku  enna  irukki’rathu;  nee  kooppidugi’ra  kaariyam  enna  en’ru  neengga'l  ennidaththil  eppadik  keadkalaam  en’raan.  (niyaayaathibathiga’l  18:24)

தாண்  புத்திரர்  அவனைப்  பார்த்து:  எங்கள்  காதுகள்  கேட்கக்  கூக்குரல்  இடாதே,  இட்டால்  கோபிகள்  உங்கள்மேல்  விழுவார்கள்;  அப்பொழுது  உன்  ஜீவனுக்கும்  உன்  வீட்டாரின்  ஜீவனுக்கும்  மோசம்  வருவித்துக்கொள்வாய்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  18:25)

thaa'n  puththirar  avanaip  paarththu:  engga'l  kaathuga'l  keadkak  kookkural  idaathea,  ittaal  koabiga'l  ungga'lmeal  vizhuvaarga'l;  appozhuthu  un  jeevanukkum  un  veettaarin  jeevanukkum  moasam  varuviththukko'lvaay  en’ru  solli,  (niyaayaathibathiga’l  18:25)

தங்கள்  வழியே  நடந்துபோனார்கள்;  அவர்கள்  தன்னைப்பார்க்கிலும்  பலத்தவர்கள்  என்று  மீகா  கண்டு,  அவன்  தன்  வீட்டுக்குத்  திரும்பினான்.  (நியாயாதிபதிகள்  18:26)

thangga'l  vazhiyea  nadanthupoanaarga'l;  avarga'l  thannaippaarkkilum  balaththavarga'l  en’ru  meegaa  ka'ndu,  avan  than  veettukkuth  thirumbinaan.  (niyaayaathibathiga’l  18:26)

அவர்களோ  மீகா  உண்டுபண்ணினவைகளையும்,  அவனுடைய  ஆசாரியனையும்  கொண்டுபோய்,  பயமில்லாமல்  சுகமாயிருக்கிற  லாயீஸ்  ஊர்  ஜனங்களிடத்தில்  சேர்த்து,  அவர்களைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  பட்டணத்தை  அக்கினியால்  சுட்டெரித்துப்போட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  18:27)

avarga'loa  meegaa  u'ndupa'n'ninavaiga'laiyum,  avanudaiya  aasaariyanaiyum  ko'ndupoay,  bayamillaamal  sugamaayirukki’ra  laayees  oor  janangga'lidaththil  searththu,  avarga'laip  pattayakkarukkinaal  vetti,  patta'naththai  akkiniyaal  sutteriththuppoattaarga'l.  (niyaayaathibathiga’l  18:27)

அது  சீதோனுக்குத்  தூரமாயிருந்தது;  வேறே  மனுஷரோடே  அவர்களுக்குச்  சம்பந்தமில்லாமலும்  இருந்தபடியால்,  அவர்களைத்  தப்புவிப்பார்  ஒருவரும்  இல்லை;  அந்தப்  பட்டணம்  பெத்ரேகோபுக்குச்  சமீபமான  பள்ளத்தாக்கில்  இருந்தது;  அவர்கள்  அதைத்  திரும்பக்  கட்டி,  அதிலே  குடியிருந்து,  (நியாயாதிபதிகள்  18:28)

athu  seethoanukkuth  thooramaayirunthathu;  vea’rea  manusharoadea  avarga'lukkuch  sambanthamillaamalum  irunthapadiyaal,  avarga'laith  thappuvippaar  oruvarum  illai;  anthap  patta'nam  bethreakoabukkuch  sameebamaana  pa'l'laththaakkil  irunthathu;  avarga'l  athaith  thirumbak  katti,  athilea  kudiyirunthu,  (niyaayaathibathiga’l  18:28)

பூர்வத்திலே  லாயீஸ்  என்னும்  பேர்  கொண்டிருந்த  அந்தப்  பட்டணத்திற்கு  இஸ்ரவேலுக்குப்  பிறந்த  தங்கள்  தகப்பனாகிய  தாணுடைய  நாமத்தின்படியே  தாண்  என்று  பேரிட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  18:29)

poorvaththilea  laayees  ennum  pear  ko'ndiruntha  anthap  patta'naththi’rku  isravealukkup  pi’rantha  thangga'l  thagappanaagiya  thaa'nudaiya  naamaththinpadiyea  thaa'n  en’ru  pearittaarga'l.  (niyaayaathibathiga’l  18:29)

அப்பொழுது  தாண்  புத்திரர்  அந்தச்  சுரூபத்தைத்  தங்களுக்கு  ஸ்தாபித்துக்கொண்டார்கள்;  மனாசேயின்  குமாரனாகிய  கெர்சோனின்  மகன்  யோனத்தானும்,  அவன்  குமாரரும்  அந்தத்  தேசத்தார்  சிறைப்பட்டுப்போன  நாள்மட்டும்,  தாண்  கோத்திரத்தாருக்கு  ஆசாரியராயிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  18:30)

appozhuthu  thaa'n  puththirar  anthach  suroobaththaith  thangga'lukku  sthaabiththukko'ndaarga'l;  manaaseayin  kumaaranaagiya  kersoanin  magan  yoanaththaanum,  avan  kumaararum  anthath  theasaththaar  si’raippattuppoana  naa'lmattum,  thaa'n  koaththiraththaarukku  aasaariyaraayirunthaarga'l.  (niyaayaathibathiga’l  18:30)

தேவனுடைய  ஆலயம்  சீலோவிலிருந்த  காலமுழுதும்  அவர்கள்  மீகா  உண்டுபண்ணின  சுரூபத்தை  வைத்துக்  கொண்டிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  18:31)

theavanudaiya  aalayam  seeloaviliruntha  kaalamuzhuthum  avarga'l  meegaa  u'ndupa'n'nina  suroobaththai  vaiththuk  ko'ndirunthaarga'l.  (niyaayaathibathiga’l  18:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!