Thursday, August 18, 2016

Niyaayaathibathiga'l 17 | நியாயாதிபதிகள் 17 | Judges 17

எப்பிராயீம்  மலைத்தேசத்தானாகிய  மீகா  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷன்  இருந்தான்.  (நியாயாதிபதிகள்  17:1)

eppiraayeem  malaiththeasaththaanaagiya  meegaa  ennum  pearu'l'la  oru  manushan  irunthaan.  (niyaayaathibathiga’l  17:1)

அவன்  தன்  தாயை  நோக்கி:  உன்னிடத்திலிருந்த  ஆயிரத்து  நூறு  வெள்ளிக்காசு  களவுபோயிற்றே,  அதைக்குறித்து  என்  காதுகள்  கேட்க  நீ  சாபமிட்டாயே,  அந்தப்  பணம்,  இதோ,  என்னிடத்தில்  இருக்கிறது;  அதை  எடுத்தவன்  நான்தான்  என்றான்.  அதற்கு  அவன்  தாய்:  என்  மகனே,  நீ  கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்படுவாய்  என்றாள்.  (நியாயாதிபதிகள்  17:2)

avan  than  thaayai  noakki:  unnidaththiliruntha  aayiraththu  noo’ru  ve'l'likkaasu  ka'lavupoayit’rea,  athaikku’riththu  en  kaathuga'l  keadka  nee  saabamittaayea,  anthap  pa'nam,  ithoa,  ennidaththil  irukki’rathu;  athai  eduththavan  naanthaan  en’raan.  atha’rku  avan  thaay:  en  maganea,  nee  karththaraal  aaseervathikkappaduvaay  en’raa'l.  (niyaayaathibathiga’l  17:2)

அவன்  அந்த  ஆயிரத்து  நூறு  வெள்ளிக்காசைத்  தன்  தாயினிடத்தில்  திரும்பக்  கொடுத்தான்;  அவள்:  வெட்டப்பட்ட  ஒரு  சுரூபத்தையும்  வார்ப்பிக்கப்பட்ட  ஒரு  விக்கிரகத்தையும்  உண்டுபண்ண,  நான்  என்  கையிலிருந்த  இந்த  வெள்ளியை  என்  மகனுக்காக  முற்றிலும்  கர்த்தருக்கென்று  நியமித்தேன்;  இப்போதும்  இதை  உனக்குத்  திரும்பக்  கொடுக்கிறேன்  என்றாள்.  (நியாயாதிபதிகள்  17:3)

avan  antha  aayiraththu  noo’ru  ve'l'likkaasaith  than  thaayinidaththil  thirumbak  koduththaan;  ava'l:  vettappatta  oru  suroobaththaiyum  vaarppikkappatta  oru  vikkiragaththaiyum  u'ndupa'n'na,  naan  en  kaiyiliruntha  intha  ve'l'liyai  en  maganukkaaga  mut’rilum  karththarukken’ru  niyamiththean;  ippoathum  ithai  unakkuth  thirumbak  kodukki’rean  en’raa'l.  (niyaayaathibathiga’l  17:3)

அவன்  அந்த  வெள்ளியைத்  தன்  தாய்க்குத்  திரும்பக்  கொடுத்தான்;  அப்பொழுது  அவன்  தாய்  இருநூறு  வெள்ளிக்காசை  எடுத்து,  தட்டான்  கையிலே  கொடுத்தாள்;  அவன்  அதினாலே,  வெட்டப்பட்ட  ஒரு  சுரூபத்தையும்  வார்ப்பிக்கப்பட்ட  ஒரு  விக்கிரகத்தையும்  பண்ணினான்;  அவைகள்  மீகாவின்  வீட்டில்  இருந்தது.  (நியாயாதிபதிகள்  17:4)

avan  antha  ve'l'liyaith  than  thaaykkuth  thirumbak  koduththaan;  appozhuthu  avan  thaay  irunoo’ru  ve'l'likkaasai  eduththu,  thattaan  kaiyilea  koduththaa'l;  avan  athinaalea,  vettappatta  oru  suroobaththaiyum  vaarppikkappatta  oru  vikkiragaththaiyum  pa'n'ninaan;  avaiga'l  meegaavin  veettil  irunthathu.  (niyaayaathibathiga’l  17:4)

மீகா,  சுவாமிக்கு  ஒரு  அறைவீட்டை  நியமித்து  வைத்திருந்தான்;  அவன்  ஒரு  ஏபோத்தையும்  சுரூபங்களையும்  உண்டுபண்ணி,  தன்  குமாரரில்  ஒருவனைப்  பிரதிஷ்டைபண்ணினான்;  இவன்  அவனுக்கு  ஆசாரியனானான்.  (நியாயாதிபதிகள்  17:5)

meegaa,  suvaamikku  oru  a’raiveettai  niyamiththu  vaiththirunthaan;  avan  oru  eaboaththaiyum  suroobangga'laiyum  u'ndupa'n'ni,  than  kumaararil  oruvanaip  pirathishdaipa'n'ninaan;  ivan  avanukku  aasaariyanaanaan.  (niyaayaathibathiga’l  17:5)

அந்நாட்களில்  இஸ்ரவேலிலே  ராஜா  இல்லை,  அவனவன்  தன்தன்  பார்வைக்குச்  சரிப்போனபடி  செய்துவந்தான்.  (நியாயாதிபதிகள்  17:6)

annaadka'lil  isravealilea  raajaa  illai,  avanavan  thanthan  paarvaikkuch  sarippoanapadi  seythuvanthaan.  (niyaayaathibathiga’l  17:6)

யூதாவிலுள்ள  பெத்லெகேம்  ஊரானும்  லேவியனுமான  ஒரு  வாலிபன்  அங்கே  தங்கியிருந்தான்.  (நியாயாதிபதிகள்  17:7)

yoothaavilu'l'la  bethleheam  ooraanum  leaviyanumaana  oru  vaaliban  anggea  thanggiyirunthaan.  (niyaayaathibathiga’l  17:7)

அந்த  மனுஷன்  எங்கேயாகிலும்  பரதேசியாய்ப்  போய்த்  தங்கும்படிக்கு,  யூதாவிலுள்ள  பெத்லெகேம்  ஊரைவிட்டுப்  புறப்பட்டுப்  பிரயாணம்  போகையில்,  எப்பிராயீம்  மலைத்தேசத்தில்  இருக்கிற  மீகாவின்  வீட்டில்  வந்து  சேர்ந்தான்.  (நியாயாதிபதிகள்  17:8)

antha  manushan  enggeayaagilum  paratheasiyaayp  poayth  thanggumpadikku,  yoothaavilu'l'la  bethleheam  ooraivittup  pu’rappattup  pirayaa'nam  poagaiyil,  eppiraayeem  malaiththeasaththil  irukki’ra  meegaavin  veettil  vanthu  searnthaan.  (niyaayaathibathiga’l  17:8)

எங்கே  இருந்து  வந்தாய்  என்று  மீகா  அவனைக்  கேட்டதற்கு,  அவன்:  நான்  யூதாவிலுள்ள  பெத்லெகேம்  ஊரானாகிய  லேவியன்,  எங்கேயாகிலும்  போய்த்  தங்கப்போகிறேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  17:9)

enggea  irunthu  vanthaay  en’ru  meegaa  avanaik  keattatha’rku,  avan:  naan  yoothaavilu'l'la  bethleheam  ooraanaagiya  leaviyan,  enggeayaagilum  poayth  thanggappoagi’rean  en’raan.  (niyaayaathibathiga’l  17:9)

அப்பொழுது  மீகா:  நீ  என்னிடத்தில்  இரு,  நீ  எனக்குத்  தகப்பனும்  ஆசாரியனுமாயிருப்பாய்;  நான்  உனக்கு  வருஷத்திலே  பத்து  வெள்ளிக்காசையும்,  மாற்று  வஸ்திரத்தையும்,  உனக்கு  வேண்டிய  ஆகாரத்தையும்  கொடுப்பேன்  என்று  அவனிடத்தில்  சொன்னான்;  அப்படியே  லேவியன்  உள்ளே  போனான்.  (நியாயாதிபதிகள்  17:10)

appozhuthu  meegaa:  nee  ennidaththil  iru,  nee  enakkuth  thagappanum  aasaariyanumaayiruppaay;  naan  unakku  varushaththilea  paththu  ve'l'likkaasaiyum,  maat’ru  vasthiraththaiyum,  unakku  vea'ndiya  aagaaraththaiyum  koduppean  en’ru  avanidaththil  sonnaan;  appadiyea  leaviyan  u'l'lea  poanaan.  (niyaayaathibathiga’l  17:10)

அந்த  லேவியன்  அந்த  மனிதனிடத்தில்  இருக்கச்  சம்மதித்தான்;  அந்த  வாலிபன்  அவனுக்கு  அவன்  குமாரரில்  ஒருவனைப்போல்  இருந்தான்.  (நியாயாதிபதிகள்  17:11)

antha  leaviyan  antha  manithanidaththil  irukkach  sammathiththaan;  antha  vaaliban  avanukku  avan  kumaararil  oruvanaippoal  irunthaan.  (niyaayaathibathiga’l  17:11)

மீகா  அந்த  லேவியனைப்  பிரதிஷ்டைபண்ணினான்;  அந்த  வாலிபன்  அவனுக்கு  ஆசாரியனாகி,  மீகாவின்  வீட்டில்  இருந்தான்.  (நியாயாதிபதிகள்  17:12)

meegaa  antha  leaviyanaip  pirathishdaipa'n'ninaan;  antha  vaaliban  avanukku  aasaariyanaagi,  meegaavin  veettil  irunthaan.  (niyaayaathibathiga’l  17:12)

அப்பொழுது  மீகா:  எனக்கு  ஆசாரியனாக  ஒரு  லேவியன்  அகப்பட்டபடியினால்,  கர்த்தர்  எனக்கு  நன்மைசெய்வார்  என்று  இப்பொழுது  அறிந்திருக்கிறேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  17:13)

appozhuthu  meegaa:  enakku  aasaariyanaaga  oru  leaviyan  agappattapadiyinaal,  karththar  enakku  nanmaiseyvaar  en’ru  ippozhuthu  a’rinthirukki’rean  en’raan.  (niyaayaathibathiga’l  17:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!