Thursday, August 18, 2016

Niyaayaathibathiga'l 16 | நியாயாதிபதிகள் 16 | Judges 16


பின்பு  சிம்சோன்  காசாவுக்குப்  போய்,  அங்கே  ஒரு  வேசியைக்  கண்டு,  அவளிடத்தில்  போனான்.  (நியாயாதிபதிகள்  16:1)

pinbu  simsoan  kaasaavukkup  poay,  anggea  oru  veasiyaik  ka'ndu,  ava'lidaththil  poanaan.  (niyaayaathibathiga’l  16:1)

அப்பொழுது:  சிம்சோன்  இங்கே  வந்திருக்கிறான்  என்று  காசா  ஊராருக்குச்  சொல்லப்பட்டது.  அவர்கள்:  காலையில்  வெளிச்சமாகிறபோது  அவனைக்  கொன்றுபோடுவோம்  என்று  சொல்லி,  அவனை  வளைந்துகொண்டு  இராமுழுதும்  அவனுக்காகப்  பட்டணவாசலில்  பதிவிருந்து  இராமுழுதும்  பேசாதிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  16:2)

appozhuthu:  simsoan  inggea  vanthirukki’raan  en’ru  kaasaa  ooraarukkuch  sollappattathu.  avarga'l:  kaalaiyil  ve'lichchamaagi’rapoathu  avanaik  kon’rupoaduvoam  en’ru  solli,  avanai  va'lainthuko'ndu  iraamuzhuthum  avanukkaagap  patta'navaasalil  pathivirunthu  iraamuzhuthum  peasaathirunthaarga'l.  (niyaayaathibathiga’l  16:2)

சிம்சோன்  நடுராத்திரிமட்டும்  படுத்திருந்து,  நடுராத்திரியில்  எழுந்து,  பட்டணத்து  வாசல்  கதவுகளையும்  அதின்  இரண்டு  நிலைகளையும்  பிடித்து,  தாழ்ப்பாளோடேகூடப்  பேர்த்து,  தன்  தோளின்மேல்  வைத்து,  எபிரோனுக்கு  எதிரேயிருக்கிற  மலையின்  உச்சிக்குச்  சுமந்துகொண்டுபோனான்.  (நியாயாதிபதிகள்  16:3)

simsoan  naduraaththirimattum  paduththirunthu,  naduraaththiriyil  ezhunthu,  patta'naththu  vaasal  kathavuga'laiyum  athin  ira'ndu  nilaiga'laiyum  pidiththu,  thaazhppaa'loadeakoodap  pearththu,  than  thoa'linmeal  vaiththu,  ebiroanukku  ethireayirukki’ra  malaiyin  uchchikkuch  sumanthuko'ndupoanaan.  (niyaayaathibathiga’l  16:3)

அதற்குப்பின்பு  அவன்  சோரேக்  ஆற்றங்கரையில்  இருக்கிற  தெலீலாள்  என்னும்  பேருள்ள  ஒரு  ஸ்திரீயோடே  சிநேகமாயிருந்தான்.  (நியாயாதிபதிகள்  16:4)

atha’rkuppinbu  avan  soareak  aat’rangkaraiyil  irukki’ra  theleelaa'l  ennum  pearu'l'la  oru  sthireeyoadea  sineagamaayirunthaan.  (niyaayaathibathiga’l  16:4)

அவளிடத்திற்குப்  பெலிஸ்தரின்  அதிபதிகள்  போய்:  நீ  அவனை  நயம்பண்ணி,  அவனுடைய  மகா  பலம்  எதினாலே  உண்டாயிருக்கிறது  என்றும்,  நாங்கள்  அவனைக்  கட்டிச்  சிறுமைப்படுத்துகிறதற்கு  எதினாலே  அவனை  மேற்கொள்ளலாம்  என்றும்  அறிந்துகொள்;  அப்பொழுது  நாங்கள்  ஒவ்வொருவரும்  ஆயிரத்துநூறு  வெள்ளிக்காசு  உனக்குக்  கொடுப்போம்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  16:5)

ava'lidaththi’rkup  pelistharin  athibathiga'l  poay:  nee  avanai  nayampa'n'ni,  avanudaiya  mahaa  balam  ethinaalea  u'ndaayirukki’rathu  en’rum,  naangga'l  avanaik  kattich  si’rumaippaduththugi’ratha’rku  ethinaalea  avanai  mea’rko'l'lalaam  en’rum  a’rinthuko'l;  appozhuthu  naangga'l  ovvoruvarum  aayiraththunoo’ru  ve'l'likkaasu  unakkuk  koduppoam  en’raarga'l.  (niyaayaathibathiga’l  16:5)

அப்படியே  தெலீலாள்  சிம்சோனைப்  பார்த்து:  உன்  மகா  பலம்  எதினாலே  உண்டாயிருக்கிறது,  உன்னைச்  சிறுமைப்படுத்த  உன்னை  எதினாலே  கட்டலாம்  என்று  நீ  எனக்குச்  சொல்லவேண்டும்  என்றாள்.  (நியாயாதிபதிகள்  16:6)

appadiyea  theleelaa'l  simsoanaip  paarththu:  un  mahaa  balam  ethinaalea  u'ndaayirukki’rathu,  unnaich  si’rumaippaduththa  unnai  ethinaalea  kattalaam  en’ru  nee  enakkuch  sollavea'ndum  en’raa'l.  (niyaayaathibathiga’l  16:6)

அதற்குச்  சிம்சோன்:  உலராத  பச்சையான  ஏழு  அகணிநார்க்  கயிறுகளாலே  என்னைக்  கட்டினால்,  நான்  பலட்சயமாகி,  மற்ற  மனுஷனைப்போல்  ஆவேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  16:7)

atha’rkuch  simsoan:  ularaatha  pachchaiyaana  eazhu  aga'ninaark  kayi’ruga'laalea  ennaik  kattinaal,  naan  paladchayamaagi,  mat’ra  manushanaippoal  aavean  en’raan.  (niyaayaathibathiga’l  16:7)

அப்பொழுது  பெலிஸ்தரின்  அதிபதிகள்  உலராத  பச்சையான  ஏழு  அகணி  நார்க்  கயிறுகளை  அவளிடத்திற்குக்  கொண்டுவந்தார்கள்;  அவைகளால்  அவள்  அவனைக்  கட்டினாள்.  (நியாயாதிபதிகள்  16:8)

appozhuthu  pelistharin  athibathiga'l  ularaatha  pachchaiyaana  eazhu  aga'ni  naark  kayi’ruga'lai  ava'lidaththi’rkuk  ko'nduvanthaarga'l;  avaiga'laal  ava'l  avanaik  kattinaa'l.  (niyaayaathibathiga’l  16:8)

பதிவிருக்கிறவர்கள்  அறைவீட்டிலே  காத்திருக்கும்போது,  அவள்:  சிம்சோனே,  பெலிஸ்தர்  உன்மேல்  வந்துவிட்டார்கள்  என்றாள்;  அப்பொழுது,  சணல்நூலானது  நெருப்புப்பட்டவுடனே  இற்றுப்போகிறதுபோல,  அவன்  அந்தக்  கயிறுகளை  அறுத்துப்போட்டான்;  அவன்  பலம்  இன்னதினாலே  உண்டாயிருக்கிறது  என்று  அறியப்படவில்லை.  (நியாயாதிபதிகள்  16:9)

pathivirukki’ravarga'l  a’raiveettilea  kaaththirukkumpoathu,  ava'l:  simsoanea,  pelisthar  unmeal  vanthuvittaarga'l  en’raa'l;  appozhuthu,  sa'nalnoolaanathu  neruppuppattavudanea  it’ruppoagi’rathupoala,  avan  anthak  kayi’ruga'lai  a’ruththuppoattaan;  avan  balam  innathinaalea  u'ndaayirukki’rathu  en’ru  a’riyappadavillai.  (niyaayaathibathiga’l  16:9)

அப்பொழுது  தெலீலாள்  சிம்சோனைப்  பார்த்து:  இதோ,  என்னைப்  பரியாசம்பண்ணி,  எனக்குப்  பொய்சொன்னாய்;  இப்போதும்  உன்னை  எதினாலே  கட்டலாம்  என்று  எனக்குச்  சொல்லவேண்டும்  என்றாள்.  (நியாயாதிபதிகள்  16:10)

appozhuthu  theleelaa'l  simsoanaip  paarththu:  ithoa,  ennaip  pariyaasampa'n'ni,  enakkup  poysonnaay;  ippoathum  unnai  ethinaalea  kattalaam  en’ru  enakkuch  sollavea'ndum  en’raa'l.  (niyaayaathibathiga’l  16:10)

அதற்கு  அவன்:  இதுவரைக்கும்  ஒரு  வேலைக்கும்  வழங்காதிருக்கிற  புதுக்கயிறுகளால்  என்னை  இறுகக்  கட்டினால்,  நான்  பலட்சயமாகி,  மற்ற  மனுஷனைப்போல்  ஆவேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  16:11)

atha’rku  avan:  ithuvaraikkum  oru  vealaikkum  vazhanggaathirukki’ra  puthukkayi’ruga'laal  ennai  i’rugak  kattinaal,  naan  paladchayamaagi,  mat’ra  manushanaippoal  aavean  en’raan.  (niyaayaathibathiga’l  16:11)

அப்பொழுது  தெலீலாள்,  புதுக்கயிறுகளை  வாங்கி,  அவைகளால்  அவனைக்  கட்டி:  சிம்சோனே,  பெலிஸ்தர்  உன்மேல்  வந்துவிட்டார்கள்  என்றாள்;  பதிவிருக்கிறவர்கள்  அறைவீட்டில்  இருந்தார்கள்;  ஆனாலும்  அவன்  தன்  புயங்களில்  இருந்த  கயிறுகளை  ஒரு  நூலைப்போல  அறுத்துப்போட்டான்.  (நியாயாதிபதிகள்  16:12)

appozhuthu  theleelaa'l,  puthukkayi’ruga'lai  vaanggi,  avaiga'laal  avanaik  katti:  simsoanea,  pelisthar  unmeal  vanthuvittaarga'l  en’raa'l;  pathivirukki’ravarga'l  a’raiveettil  irunthaarga'l;  aanaalum  avan  than  puyangga'lil  iruntha  kayi’ruga'lai  oru  noolaippoala  a’ruththuppoattaan.  (niyaayaathibathiga’l  16:12)

பின்பு  தெலீலாள்  சிம்சோனைப்  பார்த்து:  இதுவரைக்கும்  என்னைப்  பரியாசம்பண்ணி,  எனக்குப்  பொய்சொன்னாய்;  உன்னை  எதினாலே  கட்டலாம்  என்று  எனக்குச்  சொல்லவேண்டும்  என்றாள்;  அதற்கு  அவன்:  நீ  என்  தலைமயிரின்  ஏழு  ஜடைகளை  நெசவுநூல்  பாவோடே  பின்னிவிட்டால்  ஆகும்  என்றான்.  (நியாயாதிபதிகள்  16:13)

pinbu  theleelaa'l  simsoanaip  paarththu:  ithuvaraikkum  ennaip  pariyaasampa'n'ni,  enakkup  poysonnaay;  unnai  ethinaalea  kattalaam  en’ru  enakkuch  sollavea'ndum  en’raa'l;  atha’rku  avan:  nee  en  thalaimayirin  eazhu  jadaiga'lai  nesavunool  paavoadea  pinnivittaal  aagum  en’raan.  (niyaayaathibathiga’l  16:13)

அப்படியே  அவள்  செய்து,  அவைகளை  ஆணியடித்து  மாட்டி:  சிம்சோனே,  பெலிஸ்தர்  உன்மேல்  வந்துவிட்டார்கள்  என்றாள்;  அவன்  நித்திரைவிட்டெழும்பி,  நெசவு  ஆணியையும்  நூல்பாவையும்கூடப்  பிடுங்கிக்கொண்டுபோனான்.  (நியாயாதிபதிகள்  16:14)

appadiyea  ava'l  seythu,  avaiga'lai  aa'niyadiththu  maatti:  simsoanea,  pelisthar  unmeal  vanthuvittaarga'l  en’raa'l;  avan  niththiraivittezhumbi,  nesavu  aa'niyaiyum  noolpaavaiyumkoodap  pidunggikko'ndupoanaan.  (niyaayaathibathiga’l  16:14)

அப்பொழுது  அவள்  அவனைப்  பார்த்து:  உன்  இருதயம்  என்னோடு  இராதிருக்க,  உன்னைச்  சிநேகிக்கிறேன்  என்று  நீ  எப்படிச்  சொல்லுகிறாய்?  நீ  இந்த  மூன்றுவிசையும்  என்னைப்  பரியாசம்பண்ணினாய்  அல்லவா,  உன்னுடைய  மகாபலம்  எதினாலே  உண்டாயிருக்கிறது  என்று  எனக்குச்  சொல்லாமற்போனாயே  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  16:15)

appozhuthu  ava'l  avanaip  paarththu:  un  iruthayam  ennoadu  iraathirukka,  unnaich  sineagikki’rean  en’ru  nee  eppadich  sollugi’raay?  nee  intha  moon’ruvisaiyum  ennaip  pariyaasampa'n'ninaay  allavaa,  unnudaiya  mahaabalam  ethinaalea  u'ndaayirukki’rathu  en’ru  enakkuch  sollaama’rpoanaayea  en’ru  solli,  (niyaayaathibathiga’l  16:15)

இப்படி  அவனைத்  தினம்தினம்  தன்  வார்த்தைகளினாலே  நெருக்கி  அலட்டிக்  கொண்டிருக்கிறதினால்,  சாகத்தக்கதாய்  அவன்  ஆத்துமா  விசனப்பட்டு,  (நியாயாதிபதிகள்  16:16)

ippadi  avanaith  thinamthinam  than  vaarththaiga'linaalea  nerukki  alattik  ko'ndirukki’rathinaal,  saagaththakkathaay  avan  aaththumaa  visanappattu,  (niyaayaathibathiga’l  16:16)

தன்  இருதயத்தையெல்லாம்  அவளுக்கு  வெளிப்படுத்தி:  சவரகன்  கத்தி  என்  தலையின்மேல்  படவில்லை;  நான்  என்  தாயின்  கர்ப்பத்தில்  பிறந்ததுமுதல்  தேவனுக்கென்று  நசரேயனானவன்;  என்  தலை  சிரைக்கப்பட்டால்,  என்  பலம்  என்னை  விட்டுப்போம்;  அதினாலே  நான்  பலட்சயமாகி,  மற்ற  எல்லா  மனுஷரைப்போலும்  ஆவேன்  என்று  அவளிடத்தில்  சொன்னான்.  (நியாயாதிபதிகள்  16:17)

than  iruthayaththaiyellaam  ava'lukku  ve'lippaduththi:  savaragan  kaththi  en  thalaiyinmeal  padavillai;  naan  en  thaayin  karppaththil  pi’ranthathumuthal  theavanukken’ru  nasareayanaanavan;  en  thalai  siraikkappattaal,  en  balam  ennai  vittuppoam;  athinaalea  naan  paladchayamaagi,  mat’ra  ellaa  manusharaippoalum  aavean  en’ru  ava'lidaththil  sonnaan.  (niyaayaathibathiga’l  16:17)

அவன்  தன்  இருதயத்தையெல்லாம்  தனக்கு  வெளிப்படுத்தினதைத்  தெலீலாள்  கண்டபோது,  அவள்  பெலிஸ்தரின்  அதிபதிகளுக்கு  ஆள்  அனுப்பி:  இந்த  ஒருவிசை  வாருங்கள்,  அவன்  தன்  இருதயத்தையெல்லாம்  எனக்கு  வெளிப்படுத்தினான்  என்று  சொல்லச்சொன்னாள்;  அப்பொழுது  பெலிஸ்தரின்  அதிபதிகள்  வெள்ளிக்காசுகளைத்  தங்கள்  கையில்  எடுத்துக்கொண்டு  அவளிடத்துக்கு  வந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  16:18)

avan  than  iruthayaththaiyellaam  thanakku  ve'lippaduththinathaith  theleelaa'l  ka'ndapoathu,  ava'l  pelistharin  athibathiga'lukku  aa'l  anuppi:  intha  oruvisai  vaarungga'l,  avan  than  iruthayaththaiyellaam  enakku  ve'lippaduththinaan  en’ru  sollachsonnaa'l;  appozhuthu  pelistharin  athibathiga'l  ve'l'likkaasuga'laith  thangga'l  kaiyil  eduththukko'ndu  ava'lidaththukku  vanthaarga'l.  (niyaayaathibathiga’l  16:18)

அவள்  அவனைத்  தன்  மடியிலே  நித்திரைசெய்யப்பண்ணி,  ஒருவனை  அழைத்து,  அவன்  தலைமயிரின்  ஏழு  ஜடைகளையும்  சிரைப்பித்து,  அவனைச்  சிறுமைப்படுத்தத்  தொடங்கினாள்;  அவன்  பலம்  அவனைவிட்டு  நீங்கிற்று.  (நியாயாதிபதிகள்  16:19)

ava'l  avanaith  than  madiyilea  niththiraiseyyappa'n'ni,  oruvanai  azhaiththu,  avan  thalaimayirin  eazhu  jadaiga'laiyum  siraippiththu,  avanaich  si’rumaippaduththath  thodangginaa'l;  avan  balam  avanaivittu  neenggit’ru.  (niyaayaathibathiga’l  16:19)

அப்பொழுது  அவள்:  சிம்சோனே,  பெலிஸ்தர்  உன்மேல்  வந்துவிட்டார்கள்  என்றாள்;  அவன்  நித்திரைவிட்டு  விழித்து,  கர்த்தர்  தன்னைவிட்டு  விலகினதை  அறியாமல்,  எப்போதும்போல  உதறிப்போட்டு  வெளியே  போவேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  16:20)

appozhuthu  ava'l:  simsoanea,  pelisthar  unmeal  vanthuvittaarga'l  en’raa'l;  avan  niththiraivittu  vizhiththu,  karththar  thannaivittu  vilaginathai  a’riyaamal,  eppoathumpoala  utha’rippoattu  ve'liyea  poavean  en’raan.  (niyaayaathibathiga’l  16:20)

பெலிஸ்தர்  அவனைப்  பிடித்து,  அவன்  கண்களைப்  பிடுங்கி,  அவனைக்  காசாவுக்குக்  கொண்டுபோய்,  அவனுக்கு  இரண்டு  வெண்கல  விலங்குபோட்டுச்  சிறைச்சாலையிலே  மாவரைத்துக்கொண்டிருக்க  வைத்தார்கள்.  (நியாயாதிபதிகள்  16:21)

pelisthar  avanaip  pidiththu,  avan  ka'nga'laip  pidunggi,  avanaik  kaasaavukkuk  ko'ndupoay,  avanukku  ira'ndu  ve'ngala  vilanggupoattuch  si’raichsaalaiyilea  maavaraiththukko'ndirukka  vaiththaarga'l.  (niyaayaathibathiga’l  16:21)

அவன்  தலைமயிர்  சிரைக்கப்பட்ட  பின்பு,  திரும்பவும்  முளைக்கத்  தொடங்கிற்று.  (நியாயாதிபதிகள்  16:22)

avan  thalaimayir  siraikkappatta  pinbu,  thirumbavum  mu'laikkath  thodanggit’ru.  (niyaayaathibathiga’l  16:22)

பெலிஸ்தரின்  பிரபுக்கள்:  நம்முடைய  பகைஞனாகிய  சிம்சோனை  நம்முடைய  தேவன்  நம்முடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்  என்று  சொல்லி,  தங்கள்  தேவனாகிய  தாகோனுக்கு  ஒரு  பெரிய  பலிசெலுத்தவும்,  சந்தோஷம்  கொண்டாடவும்  கூடிவந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  16:23)

pelistharin  pirabukka'l:  nammudaiya  pagaignanaagiya  simsoanai  nammudaiya  theavan  nammudaiya  kaiyil  oppukkoduththaar  en’ru  solli,  thangga'l  theavanaagiya  thaagoanukku  oru  periya  baliseluththavum,  santhoasham  ko'ndaadavum  koodivanthaarga'l.  (niyaayaathibathiga’l  16:23)

ஜனங்கள்  அவனைக்  கண்டவுடனே:  நம்முடைய  தேசத்தைப்  பாழாக்கி,  நம்மில்  அநேகரைக்  கொன்றுபோட்ட  நம்முடைய  பகைஞனை  நம்முடைய  தேவன்  நமது  கையில்  ஒப்புக்கொடுத்தார்  என்றுசொல்லி,  தங்கள்  தேவனைப்  புகழ்ந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  16:24)

janangga'l  avanaik  ka'ndavudanea:  nammudaiya  theasaththaip  paazhaakki,  nammil  aneagaraik  kon’rupoatta  nammudaiya  pagaignanai  nammudaiya  theavan  namathu  kaiyil  oppukkoduththaar  en’rusolli,  thangga'l  theavanaip  pugazhnthaarga'l.  (niyaayaathibathiga’l  16:24)

இப்படி  அவர்கள்  மனமகிழ்ச்சியாயிருக்கும்போது:  நமக்கு  முன்பாக  வேடிக்கைகாட்டும்படிக்கு,  சிம்சோனைக்  கூட்டிக்கொண்டு  வாருங்கள்  என்றார்கள்;  அப்பொழுது  சிம்சோனைச்  சிறைச்சாலையிலிருந்து  கூட்டிக்கொண்டு  வந்தார்கள்,  அவர்களுக்கு  முன்பாக  வேடிக்கை  காட்டினான்;  அவனைத்  தூண்களுக்கு  நடுவே  நிறுத்தினார்கள்.  (நியாயாதிபதிகள்  16:25)

ippadi  avarga'l  manamagizhchchiyaayirukkumpoathu:  namakku  munbaaga  veadikkaikaattumpadikku,  simsoanaik  koottikko'ndu  vaarungga'l  en’raarga'l;  appozhuthu  simsoanaich  si’raichsaalaiyilirunthu  koottikko'ndu  vanthaarga'l,  avarga'lukku  munbaaga  veadikkai  kaattinaan;  avanaith  thoo'nga'lukku  naduvea  ni’ruththinaarga'l.  (niyaayaathibathiga’l  16:25)

சிம்சோன்  தனக்குக்  கைலாகு  கொடுத்து  நடத்துகிற  பிள்ளையாண்டானோடே,  வீட்டைத்  தாங்குகிற  தூண்களிலே  நான்  சாய்ந்துகொண்டிருக்கும்படி  அவைகளை  நான்  தடவிப்பார்க்கட்டும்  என்றான்.  (நியாயாதிபதிகள்  16:26)

simsoan  thanakkuk  kailaagu  koduththu  nadaththugi’ra  pi'l'laiyaa'ndaanoadea,  veettaith  thaanggugi’ra  thoo'nga'lilea  naan  saaynthuko'ndirukkumpadi  avaiga'lai  naan  thadavippaarkkattum  en’raan.  (niyaayaathibathiga’l  16:26)

அந்த  வீடு  புருஷராலும்  ஸ்திரீகளாலும்  நிறைந்திருந்தது;  அங்கே  பெலிஸ்தரின்  சகல  பிரபுக்களும்,  வீட்டின்மேல்  புருஷரும்  ஸ்திரீகளுமாக  ஏறக்குறைய  மூவாயிரம்பேர்,  சிம்சோன்  வேடிக்கை  காட்டுகிறதைப்  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  16:27)

antha  veedu  purusharaalum  sthireega'laalum  ni’rainthirunthathu;  anggea  pelistharin  sagala  pirabukka'lum,  veettinmeal  purusharum  sthireega'lumaaga  ea’rakku’raiya  moovaayirampear,  simsoan  veadikkai  kaattugi’rathaip  paarththukko'ndirunthaarga'l.  (niyaayaathibathiga’l  16:27)

அப்பொழுது  சிம்சோன்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு:  கர்த்தராகிய  ஆண்டவரே,  நான்  என்  இரண்டு  கண்களுக்காக  ஒரே  தீர்வையாய்ப்  பெலிஸ்தர்  கையிலே  பழிவாங்கும்படிக்கு,  இந்த  ஒருவிசைமாத்திரம்  என்னை  நினைத்தருளும்,  தேவனே,  பலப்படுத்தும்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  16:28)

appozhuthu  simsoan  karththarai  noakkik  kooppittu:  karththaraagiya  aa'ndavarea,  naan  en  ira'ndu  ka'nga'lukkaaga  orea  theervaiyaayp  pelisthar  kaiyilea  pazhivaanggumpadikku,  intha  oruvisaimaaththiram  ennai  ninaiththaru'lum,  theavanea,  balappaduththum  en’ru  solli,  (niyaayaathibathiga’l  16:28)

சிம்சோன்  அந்த  வீட்டைத்  தாங்கி  நிற்கிற  இரண்டு  நடுத்தூண்களில்,  ஒன்றைத்  தன்  வலதுகையினாலும்,  மற்றொன்றைத்  தன்  இடதுகையினாலும்  பிடித்துக்கொண்டு,  (நியாயாதிபதிகள்  16:29)

simsoan  antha  veettaith  thaanggi  ni’rki’ra  ira'ndu  naduththoo'nga'lil,  on’raith  than  valathukaiyinaalum,  mat’ron’raith  than  idathukaiyinaalum  pidiththukko'ndu,  (niyaayaathibathiga’l  16:29)

என்  ஜீவன்  பெலிஸ்தரோடே  கூட  மடியக்கடவது  என்று  சொல்லி,  பலமாய்ச்  சாய்க்க,  அந்த  வீடு  அதில்  இருந்த  பிரபுக்கள்மேலும்  எல்லா  ஜனங்கள்மேலும்  விழுந்தது;  இவ்விதமாய்  அவன்  உயிரோடிருக்கையில்  அவனால்  கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும்,  அவன்  சாகும்போது  அவனால்  கொல்லப்பட்டவர்கள்  அதிகமாயிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  16:30)

en  jeevan  pelistharoadea  kooda  madiyakkadavathu  en’ru  solli,  balamaaych  saaykka,  antha  veedu  athil  iruntha  pirabukka'lmealum  ellaa  janangga'lmealum  vizhunthathu;  ivvithamaay  avan  uyiroadirukkaiyil  avanaal  kollappattavarga'laippaarkkilum,  avan  saagumpoathu  avanaal  kollappattavarga'l  athigamaayirunthaarga'l.  (niyaayaathibathiga’l  16:30)

பின்பு  அவன்  சகோதரரும்,  அவன்  தகப்பன்  வீட்டாரனைவரும்  போய்,  அவனை  எடுத்துக்கொண்டுவந்து,  சோராவுக்கும்  எஸ்தாவோலுக்கும்  நடுவே  அவன்  தகப்பனாகிய  மனோவாவின்  கல்லறையில்  அடக்கம்பண்ணினார்கள்.  அவன்  இஸ்ரவேலை  இருபதுவருஷம்  நியாயம்  விசாரித்தான்.  (நியாயாதிபதிகள்  16:31)

pinbu  avan  sagoathararum,  avan  thagappan  veettaaranaivarum  poay,  avanai  eduththukko'nduvanthu,  soaraavukkum  esthaavoalukkum  naduvea  avan  thagappanaagiya  manoavaavin  kalla’raiyil  adakkampa'n'ninaarga'l.  avan  isravealai  irubathuvarusham  niyaayam  visaariththaan.  (niyaayaathibathiga’l  16:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!