Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 15 | நியாயாதிபதிகள் 15 | Judges 15

சிலநாள்  சென்றபின்பு,  சிம்சோன்  கோதுமை  அறுக்கிற  நாட்களில்  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியை  எடுத்துக்கொண்டு,  தன்  பெண்சாதியைக்  காணப்போய்:  நான்  என்  பெண்சாதியினிடத்தில்  அறைவீட்டிற்குள்  போகட்டும்  என்றான்;  அவள்  தகப்பனோ,  அவனை  உள்ளே  போக  ஒட்டாமல்:  (நியாயாதிபதிகள்  15:1)

silanaa'l  sen’rapinbu,  simsoan  koathumai  a’rukki’ra  naadka'lil  oru  ve'l'laattukkuttiyai  eduththukko'ndu,  than  pe'nsaathiyaik  kaa'nappoay:  naan  en  pe'nsaathiyinidaththil  a’raiveetti’rku'l  poagattum  en’raan;  ava'l  thagappanoa,  avanai  u'l'lea  poaga  ottaamal:  (niyaayaathibathiga’l  15:1)

நீ  அவளை  முற்றிலும்  பகைத்துவிட்டாய்  என்று  நான்  எண்ணி,  அவளை  உன்  சிநேகிதனுக்குக்  கொடுத்துவிட்டேன்;  அவள்  தங்கை  அவளைப்பார்க்கிலும்  அழகானவள்  அல்லவா,  அவளுக்குப்  பதிலாக  இவள்  உனக்கு  இருக்கட்டும்  என்று  சொன்னான்.  (நியாயாதிபதிகள்  15:2)

nee  ava'lai  mut’rilum  pagaiththuvittaay  en’ru  naan  e'n'ni,  ava'lai  un  sineagithanukkuk  koduththuvittean;  ava'l  thanggai  ava'laippaarkkilum  azhagaanava'l  allavaa,  ava'lukkup  bathilaaga  iva'l  unakku  irukkattum  en’ru  sonnaan.  (niyaayaathibathiga’l  15:2)

அப்பொழுது  சிம்சோன்:  நான்  பெலிஸ்தருக்குப்  பொல்லாப்புச்  செய்தாலும்,  என்மேல்  குற்றமில்லை  என்று  அவர்களுக்குச்  சொல்லி,  (நியாயாதிபதிகள்  15:3)

appozhuthu  simsoan:  naan  pelistharukkup  pollaappuch  seythaalum,  enmeal  kut’ramillai  en’ru  avarga'lukkuch  solli,  (niyaayaathibathiga’l  15:3)

புறப்பட்டுப்போய்,  முந்நூறு  நரிகளைப்  பிடித்து,  பந்தங்களை  எடுத்து,  வாலோடே  வால்  சேர்த்து,  இரண்டு  வால்களுக்கும்  நடுவே  ஒவ்வொரு  பந்தத்தை  வைத்துக்  கட்டி,  (நியாயாதிபதிகள்  15:4)

pu’rappattuppoay,  munnoo’ru  nariga'laip  pidiththu,  panthangga'lai  eduththu,  vaaloadea  vaal  searththu,  ira'ndu  vaalga'lukkum  naduvea  ovvoru  panthaththai  vaiththuk  katti,  (niyaayaathibathiga’l  15:4)

பந்தங்களைக்  கொளுத்தி,  பெலிஸ்தரின்  வெள்ளாண்மையிலே  அவைகளை  ஓடவிட்டு,  கதிர்க்கட்டுகளையும்  வெள்ளாண்மையையும்  திராட்சத்தோட்டங்களையும்  ஒலிவத்தோப்புகளையும்  சுட்டெரித்துப்  போட்டான்.  (நியாயாதிபதிகள்  15:5)

panthangga'laik  ko'luththi,  pelistharin  ve'l'laa'nmaiyilea  avaiga'lai  oadavittu,  kathirkkattuga'laiyum  ve'l'laa'nmaiyaiyum  thiraadchaththoattangga'laiyum  olivaththoappuga'laiyum  sutteriththup  poattaan.  (niyaayaathibathiga’l  15:5)

இப்படிச்  செய்தவன்  யார்  என்று  பெலிஸ்தர்  கேட்கிறபோது,  திம்னாத்தானுடைய  மருமகனாகிய  சிம்சோன்தான்;  அவனுடைய  பெண்சாதியை  அவனுடைய  சிநேகிதனுக்குக்  கொடுத்துவிட்டபடியால்  அப்படிச்  செய்தான்  என்றார்கள்;  அப்பொழுது  பெலிஸ்தர்  போய்,  அவளையும்  அவள்  தகப்பனையும்  அக்கினியால்  சுட்டெரித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  15:6)

ippadich  seythavan  yaar  en’ru  pelisthar  keadki’rapoathu,  thimnaaththaanudaiya  marumaganaagiya  simsoanthaan;  avanudaiya  pe'nsaathiyai  avanudaiya  sineagithanukkuk  koduththuvittapadiyaal  appadich  seythaan  en’raarga'l;  appozhuthu  pelisthar  poay,  ava'laiyum  ava'l  thagappanaiyum  akkiniyaal  sutteriththaarga'l.  (niyaayaathibathiga’l  15:6)

அப்பொழுது  சிம்சோன்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்படிச்  செய்தபடியால்  நான்  உங்கள்  கையிலே  பழிவாங்கினாலொழிய  இளைப்பாறேன்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  15:7)

appozhuthu  simsoan  avarga'lai  noakki:  neengga'l  ippadich  seythapadiyaal  naan  ungga'l  kaiyilea  pazhivaangginaalozhiya  i'laippaa’rean  en’ru  solli,  (niyaayaathibathiga’l  15:7)

அவர்களைச்  சின்னபின்னமாகச்  சங்காரம்பண்ணி,  பின்பு  போய்,  ஏத்தாம்  ஊர்க்  கன்மலைச்  சந்திலே  குடியிருந்தான்.  (நியாயாதிபதிகள்  15:8)

avarga'laich  sinnapinnamaagach  sanggaarampa'n'ni,  pinbu  poay,  eaththaam  oork  kanmalaich  santhilea  kudiyirunthaan.  (niyaayaathibathiga’l  15:8)

அப்பொழுது  பெலிஸ்தர்  போய்,  யூதாவிலே  பாளயமிறங்கி,  லேகி  என்கிற  வெளியிலே  பரவியிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  15:9)

appozhuthu  pelisthar  poay,  yoothaavilea  paa'layami’ranggi,  leagi  engi’ra  ve'liyilea  paraviyirunthaarga'l.  (niyaayaathibathiga’l  15:9)

நீங்கள்  எங்களுக்கு  விரோதமாக  வந்தது  என்ன  என்று  யூதா  மனுஷர்  கேட்டதற்கு,  அவர்கள்:  சிம்சோன்  எங்களுக்குச்  செய்ததுபோல,  நாங்களும்  அவனுக்குச்  செய்யும்படி  அவனைக்  கட்டுகிறதற்காக  வந்தோம்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  15:10)

neengga'l  engga'lukku  viroathamaaga  vanthathu  enna  en’ru  yoothaa  manushar  keattatha’rku,  avarga'l:  simsoan  engga'lukkuch  seythathupoala,  naangga'lum  avanukkuch  seyyumpadi  avanaik  kattugi’ratha’rkaaga  vanthoam  en’raarga'l.  (niyaayaathibathiga’l  15:10)

அப்பொழுது  யூதாவிலே  மூவாயிரம்பேர்  ஏத்தாம்  ஊர்க்  கன்மலைச்  சந்திற்குப்  போய்:  பெலிஸ்தர்  நம்மை  ஆளுகிறார்கள்  என்று  தெரியாதா?  பின்னை  ஏன்  எங்களுக்கு  இப்படிச்  செய்தாய்  என்று  சிம்சோனிடத்தில்  சொன்னார்கள்.  அதற்கு  அவன்:  அவர்கள்  எனக்குச்  செய்தபடியே  நானும்  அவர்களுக்குச்  செய்தேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  15:11)

appozhuthu  yoothaavilea  moovaayirampear  eaththaam  oork  kanmalaich  santhi’rkup  poay:  pelisthar  nammai  aa'lugi’raarga'l  en’ru  theriyaathaa?  pinnai  ean  engga'lukku  ippadich  seythaay  en’ru  simsoanidaththil  sonnaarga'l.  atha’rku  avan:  avarga'l  enakkuch  seythapadiyea  naanum  avarga'lukkuch  seythean  en’raan.  (niyaayaathibathiga’l  15:11)

அப்பொழுது  அவர்கள்:  உன்னைக்  கட்டி,  பெலிஸ்தர்  கையில்  ஒப்புக்கொடுக்க  வந்திருக்கிறோம்  என்றார்கள்.  அதற்குச்  சிம்சோன்:  நீங்களே  என்மேல்  விழுகிறதில்லை  என்று  எனக்கு  ஆணையிடுங்கள்  என்றான்.  (நியாயாதிபதிகள்  15:12)

appozhuthu  avarga'l:  unnaik  katti,  pelisthar  kaiyil  oppukkodukka  vanthirukki’roam  en’raarga'l.  atha’rkuch  simsoan:  neengga'lea  enmeal  vizhugi’rathillai  en’ru  enakku  aa'naiyidungga'l  en’raan.  (niyaayaathibathiga’l  15:12)

அதற்கு  அவர்கள்:  நாங்கள்  உன்னை  இறுகக்கட்டி,  அவர்கள்  கையில்  ஒப்புக்கொடுப்போமே  அல்லாமல்,  உன்னைக்  கொன்றுபோடமாட்டோம்  என்று  சொல்லி,  இரண்டு  புதுக்  கயிறுகளாலே  அவனைக்  கட்டி,  கன்மலையிலிருந்து  கொண்டுபோனார்கள்.  (நியாயாதிபதிகள்  15:13)

atha’rku  avarga'l:  naangga'l  unnai  i’rugakkatti,  avarga'l  kaiyil  oppukkoduppoamea  allaamal,  unnaik  kon’rupoadamaattoam  en’ru  solli,  ira'ndu  puthuk  kayi’ruga'laalea  avanaik  katti,  kanmalaiyilirunthu  ko'ndupoanaarga'l.  (niyaayaathibathiga’l  15:13)

அவன்  லேகிவரைக்கும்  வந்து  சேர்ந்தபோது,  பெலிஸ்தர்  அவனுக்கு  விரோதமாய்  ஆரவாரம்  பண்ணினார்கள்;  அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  அவன்மேல்  பலமாய்  இறங்கினதினால்,  அவன்  புயங்களில்  கட்டியிருந்த  கயிறுகள்  நெருப்புப்பட்ட  நூல்போலாகி,  அவன்  கட்டுகள்  அவன்  கைகளை  விட்டு  அறுந்துபோயிற்று.  (நியாயாதிபதிகள்  15:14)

avan  leagivaraikkum  vanthu  searnthapoathu,  pelisthar  avanukku  viroathamaay  aaravaaram  pa'n'ninaarga'l;  appozhuthu  karththarudaiya  aavi  avanmeal  balamaay  i’rangginathinaal,  avan  puyangga'lil  kattiyiruntha  kayi’ruga'l  neruppuppatta  noolpoalaagi,  avan  kattuga'l  avan  kaiga'lai  vittu  a’runthupoayit’ru.  (niyaayaathibathiga’l  15:14)

உடனே  அவன்  ஒரு  கழுதையின்  பச்சைத்  தாடையெலும்பைக்  கண்டு,  தன்  கையை  நீட்டி  அதை  எடுத்து,  அதினாலே  ஆயிரம்  பேரைக்  கொன்றுபோட்டான்.  (நியாயாதிபதிகள்  15:15)

udanea  avan  oru  kazhuthaiyin  pachchaith  thaadaiyelumbaik  ka'ndu,  than  kaiyai  neetti  athai  eduththu,  athinaalea  aayiram  pearaik  kon’rupoattaan.  (niyaayaathibathiga’l  15:15)

அப்பொழுது  சிம்சோன்:  கழுதையின்  தாடையெலும்பினால்  குவியல்  குவியலாகப்  பட்டுக்கிடக்கிறார்கள்,  கழுதையின்  தாடையெலும்பினால்  ஆயிரம்பேரைக்  கொன்றேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  15:16)

appozhuthu  simsoan:  kazhuthaiyin  thaadaiyelumbinaal  kuviyal  kuviyalaagap  pattukkidakki’raarga'l,  kazhuthaiyin  thaadaiyelumbinaal  aayirampearaik  kon’rean  en’raan.  (niyaayaathibathiga’l  15:16)

அப்படிச்  சொல்லித்  தீர்ந்தபின்பு,  தன்  கையில்  இருந்த  தாடையெலும்பை  எறிந்துவிட்டு,  அவ்விடத்திற்கு  ராமாத்லேகி  என்று  பேரிட்டான்.  (நியாயாதிபதிகள்  15:17)

appadich  sollith  theernthapinbu,  than  kaiyil  iruntha  thaadaiyelumbai  e’rinthuvittu,  avvidaththi’rku  raamaathleagi  en’ru  pearittaan.  (niyaayaathibathiga’l  15:17)

அவன்  மிகவும்  தாகமடைந்து,  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு:  தேவரீர்  உமது  அடியேன்  கையினால்  இந்தப்  பெரிய  இரட்சிப்பைக்  கட்டளையிட்டிருக்க,  இப்பொழுது  நான்  தாகத்தினால்  செத்து,  விருத்தசேதனம்  இல்லாதவர்கள்  கையிலே  விழவேண்டுமோ  என்றான்.  (நியாயாதிபதிகள்  15:18)

avan  migavum  thaagamadainthu,  karththarai  noakkik  kooppittu:  theavareer  umathu  adiyean  kaiyinaal  inthap  periya  iradchippaik  katta'laiyittirukka,  ippozhuthu  naan  thaagaththinaal  seththu,  viruththaseathanam  illaathavarga'l  kaiyilea  vizhavea'ndumoa  en’raan.  (niyaayaathibathiga’l  15:18)

அப்பொழுது  தேவன்  லேகியிலுள்ள  பள்ளத்தைப்  பிளக்கப்பண்ணினார்;  அதிலிருந்து  தண்ணீர்  ஓடிவந்தது;  அவன்  குடித்தபோது  அவன்  உயிர்  திரும்ப  வந்தது,  அவன்  பிழைத்தான்;  ஆனபடியால்  அதற்கு  எந்நக்கோரி  என்று  பேரிட்டான்;  அது  இந்நாள்வரையும்  லேகியில்  இருக்கிறது.  (நியாயாதிபதிகள்  15:19)

appozhuthu  theavan  leagiyilu'l'la  pa'l'laththaip  pi'lakkappa'n'ninaar;  athilirunthu  tha'n'neer  oadivanthathu;  avan  kudiththapoathu  avan  uyir  thirumba  vanthathu,  avan  pizhaiththaan;  aanapadiyaal  atha’rku  ennakkoari  en’ru  pearittaan;  athu  innaa'lvaraiyum  leagiyil  irukki’rathu.  (niyaayaathibathiga’l  15:19)

அவன்  பெலிஸ்தரின்  நாட்களில்  இஸ்ரவேலை  இருபது  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  (நியாயாதிபதிகள்  15:20)

avan  pelistharin  naadka'lil  isravealai  irubathu  varusham  niyaayam  visaariththaan.  (niyaayaathibathiga’l  15:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!