Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 13 | நியாயாதிபதிகள் 13 | Judges 13

இஸ்ரவேல்  புத்திரர்  மறுபடியும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தபடியால்,  கர்த்தர்  அவர்களை  நாற்பது  வருஷமளவும்  பெலிஸ்தர்  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  (நியாயாதிபதிகள்  13:1)

israveal  puththirar  ma’rupadiyum  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythapadiyaal,  karththar  avarga'lai  naa’rpathu  varushama'lavum  pelisthar  kaiyil  oppukkoduththaar.  (niyaayaathibathiga’l  13:1)

அப்பொழுது  தாண்  வம்சத்தானாகிய  சோரா  ஊரானான  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவன்  பேர்  மனோவா;  அவன்  மனைவி  பிள்ளைபெறாத  மலடியாயிருந்தாள்.  (நியாயாதிபதிகள்  13:2)

appozhuthu  thaa'n  vamsaththaanaagiya  soaraa  ooraanaana  oru  manushan  irunthaan;  avan  pear  manoavaa;  avan  manaivi  pi'l'laipe’raatha  maladiyaayirunthaa'l.  (niyaayaathibathiga’l  13:2)

கர்த்தருடைய  தூதனானவர்  அந்த  ஸ்திரீக்குத்  தரிசனமாகி,  அவளை  நோக்கி:  இதோ,  பிள்ளைபெறாத  மலடியான  நீ  கர்ப்பந்தரித்து,  ஒரு  குமாரனைப்  பெறுவாய்.  (நியாயாதிபதிகள்  13:3)

karththarudaiya  thoothanaanavar  antha  sthireekkuth  tharisanamaagi,  ava'lai  noakki:  ithoa,  pi'l'laipe’raatha  maladiyaana  nee  karppanthariththu,  oru  kumaaranaip  pe’ruvaay.  (niyaayaathibathiga’l  13:3)

ஆதலால்  நீ  திராட்சரசமும்  மதுபானமும்  குடியாதபடிக்கும்,  தீட்டானது  ஒன்றும்  புசியாதபடிக்கும்  எச்சரிக்கையாயிரு.  (நியாயாதிபதிகள்  13:4)

aathalaal  nee  thiraadcharasamum  mathubaanamum  kudiyaathapadikkum,  theettaanathu  on’rum  pusiyaathapadikkum  echcharikkaiyaayiru.  (niyaayaathibathiga’l  13:4)

நீ  கர்ப்பந்தரித்து,  ஒரு  குமாரனைப்  பெறுவாய்;  அவன்  தலையின்மேல்  சவரகன்  கத்தி  படலாகாது;  அந்தப்  பிள்ளை  பிறந்ததுமுதல்  தேவனுக்கென்று  நசரேயனாயிருப்பான்;  அவன்  இஸ்ரவேலைப்  பெலிஸ்தரின்  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கத்  தொடங்குவான்  என்றார்.  (நியாயாதிபதிகள்  13:5)

nee  karppanthariththu,  oru  kumaaranaip  pe’ruvaay;  avan  thalaiyinmeal  savaragan  kaththi  padalaagaathu;  anthap  pi'l'lai  pi’ranthathumuthal  theavanukken’ru  nasareayanaayiruppaan;  avan  isravealaip  pelistharin  kaikku  neenggalaakki  radchikkath  thodangguvaan  en’raar.  (niyaayaathibathiga’l  13:5)

அப்பொழுது  அந்த  ஸ்திரீ  தன்  புருஷனிடத்தில்  வந்து:  தேவனுடைய  மனுஷன்  ஒருவர்  என்னிடத்தில்  வந்தார்;  அவருடைய  சாயல்  தேவனுடைய  தூதரின்  சாயலைப்போல  மகா  பயங்கரமாயிருந்தது;  எங்கேயிருந்து  வந்தீர்  என்று  நான்  அவரிடத்தில்  கேட்கவில்லை;  அவர்  தம்முடைய  நாமத்தை  எனக்குச்  சொல்லவுமில்லை.  (நியாயாதிபதிகள்  13:6)

appozhuthu  antha  sthiree  than  purushanidaththil  vanthu:  theavanudaiya  manushan  oruvar  ennidaththil  vanthaar;  avarudaiya  saayal  theavanudaiya  thootharin  saayalaippoala  mahaa  bayanggaramaayirunthathu;  enggeayirunthu  vantheer  en’ru  naan  avaridaththil  keadkavillai;  avar  thammudaiya  naamaththai  enakkuch  sollavumillai.  (niyaayaathibathiga’l  13:6)

அவர்  என்னை  நோக்கி:  இதோ,  நீ  கர்ப்பந்தரித்து,  ஒரு  குமாரனைப்  பெறுவாய்;  ஆதலால்  நீ  திராட்சரசமும்  மதுபானமும்  குடியாமலும்,  தீட்டானது  ஒன்றும்  புசியாமலும்  இரு;  அந்தப்  பிள்ளை  பிறந்தது  முதல்  தன்  மரணநாள்மட்டும்  தேவனுக்கென்று  நசரேயனாயிருப்பான்  என்று  சொன்னார்  என்றாள்.  (நியாயாதிபதிகள்  13:7)

avar  ennai  noakki:  ithoa,  nee  karppanthariththu,  oru  kumaaranaip  pe’ruvaay;  aathalaal  nee  thiraadcharasamum  mathubaanamum  kudiyaamalum,  theettaanathu  on’rum  pusiyaamalum  iru;  anthap  pi'l'lai  pi’ranthathu  muthal  than  mara'nanaa'lmattum  theavanukken’ru  nasareayanaayiruppaan  en’ru  sonnaar  en’raa'l.  (niyaayaathibathiga’l  13:7)

அப்பொழுது  மனோவா  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:  ஆ,  என்  ஆண்டவரே,  நீர்  அனுப்பின  தேவனுடைய  மனுஷன்  மறுபடியும்  ஒருவிசை  எங்களிடத்தில்  வந்து,  பிறக்கப்போகிற  பிள்ளைக்காக  நாங்கள்  செய்யவேண்டியதை  எங்களுக்குக்  கற்பிப்பாராக  என்று  வேண்டிக்கொண்டான்.  (நியாயாதிபதிகள்  13:8)

appozhuthu  manoavaa  karththarai  noakki  vi'n'nappampa'n'ni:  aa,  en  aa'ndavarea,  neer  anuppina  theavanudaiya  manushan  ma’rupadiyum  oruvisai  engga'lidaththil  vanthu,  pi’rakkappoagi’ra  pi'l'laikkaaga  naangga'l  seyyavea'ndiyathai  engga'lukkuk  ka’rpippaaraaga  en’ru  vea'ndikko'ndaan.  (niyaayaathibathiga’l  13:8)

தேவன்  மனோவாவின்  சத்தத்துக்குச்  செவிகொடுத்தார்;  அந்த  ஸ்திரீ  வயல்வெளியில்  இருக்கும்போது  தேவனுடைய  தூதனானவர்  திரும்பவும்  அவளிடத்தில்  வந்தார்;  அப்பொழுது  அவள்  புருஷனாகிய  மனோவா  அவளோடே  இருக்கவில்லை.  (நியாயாதிபதிகள்  13:9)

theavan  manoavaavin  saththaththukkuch  sevikoduththaar;  antha  sthiree  vayalve'liyil  irukkumpoathu  theavanudaiya  thoothanaanavar  thirumbavum  ava'lidaththil  vanthaar;  appozhuthu  ava'l  purushanaagiya  manoavaa  ava'loadea  irukkavillai.  (niyaayaathibathiga’l  13:9)

ஆகையால்  அந்த  ஸ்திரீ  சீக்கிரமாய்  ஓடி,  இதோ,  அன்று  என்னிடத்தில்  வந்தவர்  எனக்குத்  தரிசனமானார்  என்று  தன்  புருஷனுக்கு  அறிவித்தாள்.  (நியாயாதிபதிகள்  13:10)

aagaiyaal  antha  sthiree  seekkiramaay  oadi,  ithoa,  an’ru  ennidaththil  vanthavar  enakkuth  tharisanamaanaar  en’ru  than  purushanukku  a’riviththaa'l.  (niyaayaathibathiga’l  13:10)

அப்பொழுது  மனோவா  எழுந்திருந்து,  தன்  மனைவியின்  பின்னாலே  போய்,  அவரிடத்துக்கு  வந்து:  இந்த  ஸ்திரீயோடே  பேசினவர்  நீர்தானா  என்று  அவரிடத்தில்  கேட்டான்;  அவர்  நான்தான்  என்றார்.  (நியாயாதிபதிகள்  13:11)

appozhuthu  manoavaa  ezhunthirunthu,  than  manaiviyin  pinnaalea  poay,  avaridaththukku  vanthu:  intha  sthireeyoadea  peasinavar  neerthaanaa  en’ru  avaridaththil  keattaan;  avar  naanthaan  en’raar.  (niyaayaathibathiga’l  13:11)

அப்பொழுது  மனோவா:  நீர்  சொன்ன  காரியம்  நிறைவேறும்போது,  அந்தப்  பிள்ளையை  எப்படி  வளர்க்கவேண்டும்,  அதை  எப்படி  நடத்தவேண்டும்  என்று  கேட்டான்.  (நியாயாதிபதிகள்  13:12)

appozhuthu  manoavaa:  neer  sonna  kaariyam  ni’raivea’rumpoathu,  anthap  pi'l'laiyai  eppadi  va'larkkavea'ndum,  athai  eppadi  nadaththavea'ndum  en’ru  keattaan.  (niyaayaathibathiga’l  13:12)

கர்த்தருடைய  தூதனானவர்  மனோவாவை  நோக்கி:  நான்  ஸ்திரீயோடே  சொன்ன  யாவற்றிற்கும்,  அவள்  எச்சரிக்கையாயிருந்து,  (நியாயாதிபதிகள்  13:13)

karththarudaiya  thoothanaanavar  manoavaavai  noakki:  naan  sthireeyoadea  sonna  yaavat’ri’rkum,  ava'l  echcharikkaiyaayirunthu,  (niyaayaathibathiga’l  13:13)

திராட்சச்செடியிலே  உண்டாகிறதொன்றும்  சாப்பிடாமலும்,  திராட்சரசமும்  மதுபானமும்  குடியாமலும்,  தீட்டானதொன்றும்  புசியாமலும்,  நான்  அவளுக்குக்  கட்டளையிட்டதையெல்லாம்  கைக்கொள்ளக்கடவள்  என்றார்.  (நியாயாதிபதிகள்  13:14)

thiraadchachsediyilea  u'ndaagi’rathon’rum  saappidaamalum,  thiraadcharasamum  mathubaanamum  kudiyaamalum,  theettaanathon’rum  pusiyaamalum,  naan  ava'lukkuk  katta'laiyittathaiyellaam  kaikko'l'lakkadava'l  en’raar.  (niyaayaathibathiga’l  13:14)

அப்பொழுது  மனோவா  கர்த்தருடைய  தூதனை  நோக்கி:  நாங்கள்  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியை  உமக்காகச்  சமைத்துக்கொண்டுவருமட்டும்  தரித்திரும்  என்றான்.  (நியாயாதிபதிகள்  13:15)

appozhuthu  manoavaa  karththarudaiya  thoothanai  noakki:  naangga'l  oru  ve'l'laattukkuttiyai  umakkaagach  samaiththukko'nduvarumattum  thariththirum  en’raan.  (niyaayaathibathiga’l  13:15)

கர்த்தருடைய  தூதனானவர்  மனோவாவை  நோக்கி:  நீ  என்னை  இருக்கச்  சொன்னாலும்  நான்  உன்  உணவைப்  புசியேன்;  நீ  சர்வாங்க  தகனபலி  இடவேண்டுமானால்,  அதை  நீ  கர்த்தருக்குச்  செலுத்துவாயாக  என்றார்.  அவர்  கர்த்தருடைய  தூதன்  என்று  மனோவா  அறியாதிருந்தான்.  (நியாயாதிபதிகள்  13:16)

karththarudaiya  thoothanaanavar  manoavaavai  noakki:  nee  ennai  irukkach  sonnaalum  naan  un  u'navaip  pusiyean;  nee  sarvaangga  thaganabali  idavea'ndumaanaal,  athai  nee  karththarukkuch  seluththuvaayaaga  en’raar.  avar  karththarudaiya  thoothan  en’ru  manoavaa  a’riyaathirunthaan.  (niyaayaathibathiga’l  13:16)

அப்பொழுது  மனோவா  கர்த்தருடைய  தூதனை  நோக்கி:  நீர்  சொன்ன  காரியம்  நிறைவேறும்போது,  நாங்கள்  உம்மைக்  கனம்பண்ணும்படி,  உம்முடைய  நாமம்  என்ன  என்று  கேட்டான்.  (நியாயாதிபதிகள்  13:17)

appozhuthu  manoavaa  karththarudaiya  thoothanai  noakki:  neer  sonna  kaariyam  ni’raivea’rumpoathu,  naangga'l  ummaik  kanampa'n'numpadi,  ummudaiya  naamam  enna  en’ru  keattaan.  (niyaayaathibathiga’l  13:17)

அதற்குக்  கர்த்தருடைய  தூதனானவர்:  என்  நாமம்  என்ன  என்று  நீ  கேட்கவேண்டியது  என்ன?  அது  அதிசயம்  என்றார்.  (நியாயாதிபதிகள்  13:18)

atha’rkuk  karththarudaiya  thoothanaanavar:  en  naamam  enna  en’ru  nee  keadkavea'ndiyathu  enna?  athu  athisayam  en’raar.  (niyaayaathibathiga’l  13:18)

மனோவா  போய்,  வெள்ளாட்டுக்குட்டியையும்,  போஜனபலியையும்  கொண்டுவந்து,  அதைக்  கன்மலையின்மேல்  கர்த்தருக்குச்  செலுத்தினான்;  அப்பொழுது  மனோவாவும்  அவன்  மனைவியும்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  அதிசயம்  விளங்கினது.  (நியாயாதிபதிகள்  13:19)

manoavaa  poay,  ve'l'laattukkuttiyaiyum,  poajanabaliyaiyum  ko'nduvanthu,  athaik  kanmalaiyinmeal  karththarukkuch  seluththinaan;  appozhuthu  manoavaavum  avan  manaiviyum  paarththukko'ndirukkaiyil,  athisayam  vi'langginathu.  (niyaayaathibathiga’l  13:19)

அக்கினிஜுவாலை  பலிபீடத்திலிருந்து  வானத்திற்கு  நேராக  எழும்புகையில்,  கர்த்தருடைய  தூதனானவர்  பலிபீடத்தின்  ஜுவாலையிலே  ஏறிப்போனார்;  அதை  மனோவாவும்  அவன்  மனைவியும்  கண்டு,  தரையிலே  முகங்குப்புற  விழுந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  13:20)

akkinijuvaalai  balipeedaththilirunthu  vaanaththi’rku  nearaaga  ezhumbugaiyil,  karththarudaiya  thoothanaanavar  balipeedaththin  juvaalaiyilea  ea’rippoanaar;  athai  manoavaavum  avan  manaiviyum  ka'ndu,  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthaarga'l.  (niyaayaathibathiga’l  13:20)

பின்பு  கர்த்தருடைய  தூதனானவர்  மனோவாவுக்கும்  அவன்  மனைவிக்கும்  காணப்படவில்லை;  அப்பொழுது  அவர்  கர்த்தருடைய  தூதன்  என்று  மனோவா  அறிந்து,  (நியாயாதிபதிகள்  13:21)

pinbu  karththarudaiya  thoothanaanavar  manoavaavukkum  avan  manaivikkum  kaa'nappadavillai;  appozhuthu  avar  karththarudaiya  thoothan  en’ru  manoavaa  a’rinthu,  (niyaayaathibathiga’l  13:21)

தன்  மனைவியைப்  பார்த்து:  நாம்  தேவனைக்  கண்டோம்,  சாகவே  சாவோம்  என்றான்.  (நியாயாதிபதிகள்  13:22)

than  manaiviyaip  paarththu:  naam  theavanaik  ka'ndoam,  saagavea  saavoam  en’raan.  (niyaayaathibathiga’l  13:22)

அதற்கு  அவன்  மனைவி:  கர்த்தர்  நம்மைக்  கொன்றுபோடச்  சித்தமாயிருந்தால்,  அவர்  நம்முடைய  கையிலே  சர்வாங்க  தகனபலியையும்  போஜனபலியையும்  ஒப்புக்கொள்ளமாட்டார்,  இவைகளையெல்லாம்  நமக்குக்  காண்பிக்கவுமாட்டார்,  இவைகளை  நமக்கு  அறிவிக்கவுமாட்டார்  என்றாள்.  (நியாயாதிபதிகள்  13:23)

atha’rku  avan  manaivi:  karththar  nammaik  kon’rupoadach  siththamaayirunthaal,  avar  nammudaiya  kaiyilea  sarvaangga  thaganabaliyaiyum  poajanabaliyaiyum  oppukko'l'lamaattaar,  ivaiga'laiyellaam  namakkuk  kaa'nbikkavumaattaar,  ivaiga'lai  namakku  a’rivikkavumaattaar  en’raa'l.  (niyaayaathibathiga’l  13:23)

பின்பு  அந்த  ஸ்திரீ  ஒரு  குமாரனைப்  பெற்று,  அவனுக்குச்  சிம்சோன்  என்று  பேரிட்டாள்;  அந்தப்  பிள்ளை  வளர்ந்தது;  கர்த்தர்  அவனை  ஆசீர்வதித்தார்.  (நியாயாதிபதிகள்  13:24)

pinbu  antha  sthiree  oru  kumaaranaip  pet’ru,  avanukkuch  simsoan  en’ru  pearittaa'l;  anthap  pi'l'lai  va'larnthathu;  karththar  avanai  aaseervathiththaar.  (niyaayaathibathiga’l  13:24)

அவன்  சோராவுக்கும்  எஸ்தாவோலுக்கும்  நடுவிலுள்ள  தாணின்  பாளயத்தில்  இருக்கையில்  கர்த்தருடைய  ஆவியானவர்  அவனை  ஏவத்துவக்கினார்.  (நியாயாதிபதிகள்  13:25)

avan  soaraavukkum  esthaavoalukkum  naduvilu'l'la  thaa'nin  paa'layaththil  irukkaiyil  karththarudaiya  aaviyaanavar  avanai  eavaththuvakkinaar.  (niyaayaathibathiga’l  13:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!