Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 12 | நியாயாதிபதிகள் 12 | Judges 12

எப்பிராயீம்  மனுஷர்  ஏகமாய்க்  கூடி  வடக்கே  புறப்பட்டுப்போய்,  யெப்தாவை  நோக்கி:  நீ  எங்களை  உன்னோடேகூட  வரும்படி  அழைப்பியாமல்  அம்மோன்  புத்திரர்மேல்  யுத்தம்பண்ணப்போனதென்ன?  உன்  வீட்டையும்  உன்னையும்கூட  அக்கினியால்  சுட்டுப்போடுவோம்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  12:1)

eppiraayeem  manushar  eagamaayk  koodi  vadakkea  pu’rappattuppoay,  yepthaavai  noakki:  nee  engga'lai  unnoadeakooda  varumpadi  azhaippiyaamal  ammoan  puththirarmeal  yuththampa'n'nappoanathenna?  un  veettaiyum  unnaiyumkooda  akkiniyaal  suttuppoaduvoam  en’raarga'l.  (niyaayaathibathiga’l  12:1)

அதற்கு  யெப்தா:  எனக்கும்  என்  ஜனத்திற்கும்  அம்மோன்  புத்திரரோடே  பெரிய  வழக்கு  இருக்கும்போது,  நான்  உங்களைக்  கூப்பிட்டேன்;  நீங்கள்  என்னை  அவர்கள்  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கவில்லை.  (நியாயாதிபதிகள்  12:2)

atha’rku  yepthaa:  enakkum  en  janaththi’rkum  ammoan  puththiraroadea  periya  vazhakku  irukkumpoathu,  naan  ungga'laik  kooppittean;  neengga'l  ennai  avarga'l  kaikku  neenggalaakki  radchikkavillai.  (niyaayaathibathiga’l  12:2)

நீங்கள்  என்னை  ரட்சிக்கவில்லை  என்று  நான்  கண்டபோது,  நான்  என்  ஜீவனை  என்  கையிலே  பிடித்துக்கொண்டு,  அம்மோன்  புத்திரருக்கு  விரோதமாய்ப்  போனேன்;  கர்த்தர்  அவர்களை  என்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  இப்படியிருக்க,  நீங்கள்  என்மேல்  யுத்தம்பண்ண,  இன்று  என்னிடத்திற்கு  வரவேண்டியது  என்ன  என்று  சொன்னான்.  (நியாயாதிபதிகள்  12:3)

neengga'l  ennai  radchikkavillai  en’ru  naan  ka'ndapoathu,  naan  en  jeevanai  en  kaiyilea  pidiththukko'ndu,  ammoan  puththirarukku  viroathamaayp  poanean;  karththar  avarga'lai  en  kaiyil  oppukkoduththaar;  ippadiyirukka,  neengga'l  enmeal  yuththampa'n'na,  in’ru  ennidaththi’rku  varavea'ndiyathu  enna  en’ru  sonnaan.  (niyaayaathibathiga’l  12:3)

பின்பு  யெப்தா  கீலேயாத்  மனுஷரையெல்லாம்  கூட்டி,  எப்பிராயீமரோடு  யுத்தம்பண்ணினான்;  எப்பிராயீமுக்கும்  மனாசேக்கும்  நடுவே  குடியிருக்கிற  கீலேயாத்தியரான  நீங்கள்  எப்பிராயீமைவிட்டு  ஓடிப்போனவர்கள்  என்று  எப்பிராயீமர்  சொன்னபடியினால்,  கீலேயாத்  மனுஷர்  அவர்களை  முறிய  அடித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  12:4)

pinbu  yepthaa  keeleayaath  manusharaiyellaam  kootti,  eppiraayeemaroadu  yuththampa'n'ninaan;  eppiraayeemukkum  manaaseakkum  naduvea  kudiyirukki’ra  keeleayaaththiyaraana  neengga'l  eppiraayeemaivittu  oadippoanavarga'l  en’ru  eppiraayeemar  sonnapadiyinaal,  keeleayaath  manushar  avarga'lai  mu’riya  adiththaarga'l.  (niyaayaathibathiga’l  12:4)

கீலேயாத்தியர்  எப்பிராயீமருக்கு  முந்தி  யோர்தானின்  துறைகளைப்  பிடித்தார்கள்;  அப்பொழுது  எப்பிராயீமரிலே  தப்பினவர்களில்  யாராவது  வந்து:  நான்  அக்கரைக்குப்  போகட்டும்  என்று  சொல்லும்போது,  கீலேயாத்  மனுஷர்:  நீ  எப்பிராயீமனா  என்று  அவனைக்  கேட்பார்கள்;  அவன்  அல்ல  என்றால்,  (நியாயாதிபதிகள்  12:5)

keeleayaaththiyar  eppiraayeemarukku  munthi  yoarthaanin  thu’raiga'laip  pidiththaarga'l;  appozhuthu  eppiraayeemarilea  thappinavarga'lil  yaaraavathu  vanthu:  naan  akkaraikkup  poagattum  en’ru  sollumpoathu,  keeleayaath  manushar:  nee  eppiraayeemanaa  en’ru  avanaik  keadpaarga'l;  avan  alla  en’raal,  (niyaayaathibathiga’l  12:5)

நீ  ஷிபோலேத்  என்று  சொல்  என்பார்கள்;  அப்பொழுது  அவன்  அப்படி  உச்சரிக்கக்கூடாமல்,  சிபோலேத்  என்பான்;  அப்பொழுது  அவனைப்  பிடித்து,  யோர்தான்  துறையிலே  வெட்டிப்போடுவார்கள்;  அக்காலத்திலே  எப்பிராயீமில்  நாற்பத்தீராயிரம்பேர்  விழுந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  12:6)

nee  shiboaleath  en’ru  sol  enbaarga'l;  appozhuthu  avan  appadi  uchcharikkakkoodaamal,  siboaleath  enbaan;  appozhuthu  avanaip  pidiththu,  yoarthaan  thu’raiyilea  vettippoaduvaarga'l;  akkaalaththilea  eppiraayeemil  naa’rpaththeeraayirampear  vizhunthaarga'l.  (niyaayaathibathiga’l  12:6)

யெப்தா  இஸ்ரவேலை  ஆறு  வருஷம்  நியாயம்  விசாரித்தான்;  பின்பு  கீலேயாத்தியனான  யெப்தா  மரித்து,  கீலேயாத்திலுள்ள  ஒரு  பட்டணத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்.  (நியாயாதிபதிகள்  12:7)

yepthaa  isravealai  aa’ru  varusham  niyaayam  visaariththaan;  pinbu  keeleayaaththiyanaana  yepthaa  mariththu,  keeleayaaththilu'l'la  oru  patta'naththil  adakkampa'n'nappattaan.  (niyaayaathibathiga’l  12:7)

அவனுக்குப்பின்பு  பெத்லெகேம்  ஊரானாகிய  இப்சான்  இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்தான்.  (நியாயாதிபதிகள்  12:8)

avanukkuppinbu  bethleheam  ooraanaagiya  ibsaan  isravealai  niyaayam  visaariththaan.  (niyaayaathibathiga’l  12:8)

அவனுக்கு  முப்பது  குமாரரும்  முப்பது  குமாரத்திகளும்  இருந்தார்கள்;  முப்பது  குமாரத்திகளையும்  புறத்திலே  விவாகம்பண்ணிக்கொடுத்து,  தன்  குமாரருக்கு  முப்பது  பெண்களைப்  புறத்திலே  கொண்டான்;  அவன்  இஸ்ரவேலை  ஏழு  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  (நியாயாதிபதிகள்  12:9)

avanukku  muppathu  kumaararum  muppathu  kumaaraththiga'lum  irunthaarga'l;  muppathu  kumaaraththiga'laiyum  pu’raththilea  vivaagampa'n'nikkoduththu,  than  kumaararukku  muppathu  pe'nga'laip  pu’raththilea  ko'ndaan;  avan  isravealai  eazhu  varusham  niyaayam  visaariththaan.  (niyaayaathibathiga’l  12:9)

பின்பு  இப்சான்  மரித்து,  பெத்லெகேமிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  (நியாயாதிபதிகள்  12:10)

pinbu  ibsaan  mariththu,  bethleheamilea  adakkampa'n'nappattaan.  (niyaayaathibathiga’l  12:10)

அவனுக்குப்பின்பு  செபுலோனியனாகிய  ஏலோன்  இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்தான்;  அவன்  பத்து  வருஷம்  இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்தான்.  (நியாயாதிபதிகள்  12:11)

avanukkuppinbu  sebuloaniyanaagiya  ealoan  isravealai  niyaayam  visaariththaan;  avan  paththu  varusham  isravealai  niyaayam  visaariththaan.  (niyaayaathibathiga’l  12:11)

பின்பு  செபுலோனியனாகிய  ஏலோன்  மரித்து,  செபுலோன்  தேசமான  ஆயலோன்  ஊரில்  அடக்கம்பண்ணப்பட்டான்.  (நியாயாதிபதிகள்  12:12)

pinbu  sebuloaniyanaagiya  ealoan  mariththu,  sebuloan  theasamaana  aayaloan  ooril  adakkampa'n'nappattaan.  (niyaayaathibathiga’l  12:12)

அவனுக்குப்பின்பு  இல்லேலின்  குமாரனாகிய  பிரத்தோனியனான  அப்தோன்  இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்தான்.  (நியாயாதிபதிகள்  12:13)

avanukkuppinbu  illealin  kumaaranaagiya  piraththoaniyanaana  abthoan  isravealai  niyaayam  visaariththaan.  (niyaayaathibathiga’l  12:13)

அவனுக்கு  நாற்பது  குமாரரும்  முப்பது  பேரப்பிள்ளைகளும்  இருந்தார்கள்;  அவர்கள்  எழுபது  கழுதைகளின்மேல்  ஏறுவார்கள்;  அவன்  இஸ்ரவேலை  எட்டு  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  (நியாயாதிபதிகள்  12:14)

avanukku  naa’rpathu  kumaararum  muppathu  pearappi'l'laiga'lum  irunthaarga'l;  avarga'l  ezhubathu  kazhuthaiga'linmeal  ea’ruvaarga'l;  avan  isravealai  ettu  varusham  niyaayam  visaariththaan.  (niyaayaathibathiga’l  12:14)

பின்பு  பிரத்தோனியனான  இல்லேலின்  குமாரனாகிய  அப்தோன்  மரித்து,  எப்பிராயீம்  தேசத்தில்  அமலேக்கியர்  மலையிலிருக்கிற  பிரத்தோனிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  (நியாயாதிபதிகள்  12:15)

pinbu  piraththoaniyanaana  illealin  kumaaranaagiya  abthoan  mariththu,  eppiraayeem  theasaththil  amaleakkiyar  malaiyilirukki’ra  piraththoanilea  adakkampa'n'nappattaan.  (niyaayaathibathiga’l  12:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!