Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 11 | நியாயாதிபதிகள் 11 | Judges 11

கீலேயாத்தியனான  யெப்தா  பலத்த  பராக்கிரமசாலியாயிருந்தான்;  அவன்  பரஸ்திரீயின்  குமாரன்;  கிலெயாத்  அவனைப்  பெற்றான்.  (நியாயாதிபதிகள்  11:1)

keeleayaaththiyanaana  yepthaa  balaththa  baraakkiramasaaliyaayirunthaan;  avan  parasthireeyin  kumaaran;  kileyaath  avanaip  pet’raan.  (niyaayaathibathiga’l  11:1)

கிலெயாத்தின்  மனைவியும்  அவனுக்குக்  குமாரர்களைப்  பெற்றாள்;  அவன்  மனைவி  பெற்ற  குமாரர்  பெரியவர்களான  பின்பு,  அவர்கள்  யெப்தாவை  நோக்கி:  உனக்கு  எங்கள்  தகப்பன்  வீட்டிலே  சுதந்தரம்  இல்லை;  நீ  அந்நிய  ஸ்திரீயின்  மகன்  என்று  சொல்லி  அவனைத்  துரத்தினார்கள்.  (நியாயாதிபதிகள்  11:2)

kileyaaththin  manaiviyum  avanukkuk  kumaararga'laip  pet’raa'l;  avan  manaivi  pet’ra  kumaarar  periyavarga'laana  pinbu,  avarga'l  yepthaavai  noakki:  unakku  engga'l  thagappan  veettilea  suthantharam  illai;  nee  anniya  sthireeyin  magan  en’ru  solli  avanaith  thuraththinaarga'l.  (niyaayaathibathiga’l  11:2)

அப்பொழுது  யெப்தா:  தன்  சகோதரரை  விட்டு  ஓடிப்போய்,  தோப்தேசத்திலே  குடியிருந்தான்;  வீணரான  மனுஷர்  யெப்தாவோடே  கூடிக்கொண்டு,  அவனோடேகூட  யுத்தத்திற்குப்  போவார்கள்.  (நியாயாதிபதிகள்  11:3)

appozhuthu  yepthaa:  than  sagoathararai  vittu  oadippoay,  thoabtheasaththilea  kudiyirunthaan;  vee'naraana  manushar  yepthaavoadea  koodikko'ndu,  avanoadeakooda  yuththaththi’rkup  poavaarga'l.  (niyaayaathibathiga’l  11:3)

சிலநாளைக்குப்பின்பு,  அம்மோன்  புத்திரர்  இஸ்ரவேலின்மேல்  யுத்தம்பண்ணினார்கள்.  (நியாயாதிபதிகள்  11:4)

silanaa'laikkuppinbu,  ammoan  puththirar  isravealinmeal  yuththampa'n'ninaarga'l.  (niyaayaathibathiga’l  11:4)

அவர்கள்  இஸ்ரவேலின்மேல்  யுத்தம்பண்ணும்போது  கீலேயாத்தின்  மூப்பர்  யெப்தாவைத்  தோப்தேசத்திலிருந்து  அழைத்துவரப்போய்,  (நியாயாதிபதிகள்  11:5)

avarga'l  isravealinmeal  yuththampa'n'numpoathu  keeleayaaththin  mooppar  yepthaavaith  thoabtheasaththilirunthu  azhaiththuvarappoay,  (niyaayaathibathiga’l  11:5)

யெப்தாவை  நோக்கி:  நீ  வந்து,  நாங்கள்  அம்மோன்  புத்திரரோடு  யுத்தம்பண்ண  எங்கள்  சேனாபதியாயிருக்க  வேண்டும்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  11:6)

yepthaavai  noakki:  nee  vanthu,  naangga'l  ammoan  puththiraroadu  yuththampa'n'na  engga'l  seanaabathiyaayirukka  vea'ndum  en’raarga'l.  (niyaayaathibathiga’l  11:6)

அதற்கு  யெப்தா  கீலேயாத்தின்  மூப்பரைப்  பார்த்து:  நீங்கள்  அல்லவா  என்னைப்  பகைத்து,  என்  தகப்பன்  வீட்டிலிருந்து  என்னைத்  துரத்தினவர்கள்?  இப்பொழுது  உங்களுக்கு  ஆபத்து  நேரிட்டிருக்கிற  சமயத்தில்  நீங்கள்  என்னிடத்தில்  ஏன்  வருகிறீர்கள்  என்றான்.  (நியாயாதிபதிகள்  11:7)

atha’rku  yepthaa  keeleayaaththin  moopparaip  paarththu:  neengga'l  allavaa  ennaip  pagaiththu,  en  thagappan  veettilirunthu  ennaith  thuraththinavarga'l?  ippozhuthu  ungga'lukku  aabaththu  nearittirukki’ra  samayaththil  neengga'l  ennidaththil  ean  varugi’reerga'l  en’raan.  (niyaayaathibathiga’l  11:7)

அதற்குக்  கீலேயாத்தின்  மூப்பர்  யெப்தாவை  நோக்கி:  நீ  எங்களுடனேகூட  வந்து,  அம்மோன்  புத்திரரோடு  யுத்தம்பண்ணி,  கீலேயாத்தின்  குடிகளாகிய  எங்கள்  அனைவர்மேலும்  தலைவனாயிருக்கவேண்டும்;  இதற்காக  இப்பொழுது  உன்னிடத்தில்  வந்தோம்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  11:8)

atha’rkuk  keeleayaaththin  mooppar  yepthaavai  noakki:  nee  engga'ludaneakooda  vanthu,  ammoan  puththiraroadu  yuththampa'n'ni,  keeleayaaththin  kudiga'laagiya  engga'l  anaivarmealum  thalaivanaayirukkavea'ndum;  itha’rkaaga  ippozhuthu  unnidaththil  vanthoam  en’raarga'l.  (niyaayaathibathiga’l  11:8)

அதற்கு  யெப்தா:  அம்மோன்  புத்திரரோடே  யுத்தம்பண்ண,  நீங்கள்  என்னைத்  திரும்ப  அழைத்துப்போனபின்பு,  கர்த்தர்  அவர்களை  என்  முன்னிலையாய்  ஒப்புக்கொடுத்தால்,  என்னை  உங்களுக்குத்  தலைவனாய்  வைப்பீர்களா  என்று  கீலேயாத்தின்  மூப்பரைக்  கேட்டான்.  (நியாயாதிபதிகள்  11:9)

atha’rku  yepthaa:  ammoan  puththiraroadea  yuththampa'n'na,  neengga'l  ennaith  thirumba  azhaiththuppoanapinbu,  karththar  avarga'lai  en  munnilaiyaay  oppukkoduththaal,  ennai  ungga'lukkuth  thalaivanaay  vaippeerga'laa  en’ru  keeleayaaththin  moopparaik  keattaan.  (niyaayaathibathiga’l  11:9)

கீலேயாத்தின்  மூப்பர்  யெப்தாவைப்  பார்த்து:  நாங்கள்  உன்  வார்த்தையின்படியே  செய்யாவிட்டால்,  கர்த்தர்  நமக்கு  நடுநின்று  கேட்பாராக  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  11:10)

keeleayaaththin  mooppar  yepthaavaip  paarththu:  naangga'l  un  vaarththaiyinpadiyea  seyyaavittaal,  karththar  namakku  nadunin’ru  keadpaaraaga  en’raarga'l.  (niyaayaathibathiga’l  11:10)

அப்பொழுது  யெப்தா  கீலேயாத்தின்  மூப்பரோடே  கூடப்போனான்;  ஜனங்கள்  அவனைத்  தங்கள்மேல்  தலைவனும்  சேனாபதியுமாக  வைத்தார்கள்.  யெப்தா  தன்  காரியங்களையெல்லாம்  மிஸ்பாவிலே  கர்த்தருடைய  சந்நிதியிலே  சொன்னான்.  (நியாயாதிபதிகள்  11:11)

appozhuthu  yepthaa  keeleayaaththin  moopparoadea  koodappoanaan;  janangga'l  avanaith  thangga'lmeal  thalaivanum  seanaabathiyumaaga  vaiththaarga'l.  yepthaa  than  kaariyangga'laiyellaam  mispaavilea  karththarudaiya  sannithiyilea  sonnaan.  (niyaayaathibathiga’l  11:11)

பின்பு  யெப்தா  அம்மோன்  புத்திரரின்  ராஜாவினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நீ  என்  தேசத்தில்  எனக்கு  விரோதமாக  யுத்தம்பண்ண  வருகிறதற்கு,  எனக்கும்  உனக்கும்  என்ன  வழக்கு  இருக்கிறது  என்று  கேட்கச்சொன்னான்.  (நியாயாதிபதிகள்  11:12)

pinbu  yepthaa  ammoan  puththirarin  raajaavinidaththi’rku  sthaanaabathiga'lai  anuppi:  nee  en  theasaththil  enakku  viroathamaaga  yuththampa'n'na  varugi’ratha’rku,  enakkum  unakkum  enna  vazhakku  irukki’rathu  en’ru  keadkachsonnaan.  (niyaayaathibathiga’l  11:12)

அம்மோன்  புத்திரரின்  ராஜா  யெப்தாவின்  ஸ்தானாபதிகளை  நோக்கி:  இஸ்ரவேலர்  எகிப்திலிருந்து  வருகிறபோது,  அர்னோன்  துவக்கி  யாபோக்மட்டும்,  யோர்தான்மட்டும்  இருக்கிற  என்  தேசத்தைக்  கட்டிக்கொண்டார்களே;  இப்பொழுது  அதை  எனக்குச்  சமாதானமாய்த்  திரும்பக்  கொடுத்துவிடவேண்டும்  என்று  சொல்லுங்கள்  என்றான்.  (நியாயாதிபதிகள்  11:13)

ammoan  puththirarin  raajaa  yepthaavin  sthaanaabathiga'lai  noakki:  isravealar  egipthilirunthu  varugi’rapoathu,  arnoan  thuvakki  yaaboakmattum,  yoarthaanmattum  irukki’ra  en  theasaththaik  kattikko'ndaarga'lea;  ippozhuthu  athai  enakkuch  samaathaanamaayth  thirumbak  koduththuvidavea'ndum  en’ru  sollungga'l  en’raan.  (niyaayaathibathiga’l  11:13)

யெப்தா  மறுபடியும்  அம்மோன்  புத்திரரின்  ராஜாவினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  அவனுக்குச்  சொல்லச்சொன்னதாவது:  (நியாயாதிபதிகள்  11:14)

yepthaa  ma’rupadiyum  ammoan  puththirarin  raajaavinidaththi’rku  sthaanaabathiga'lai  anuppi,  avanukkuch  sollachsonnathaavathu:  (niyaayaathibathiga’l  11:14)

யெப்தா  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேலர்  மோவாபியரின்  தேசத்தையாகிலும்,  அம்மோன்  புத்திரரின்  தேசத்தையாகிலும்  கட்டிக்கொண்டதில்லையே.  (நியாயாதிபதிகள்  11:15)

yepthaa  sollugi’rathu  ennaven’raal:  isravealar  moavaabiyarin  theasaththaiyaagilum,  ammoan  puththirarin  theasaththaiyaagilum  kattikko'ndathillaiyea.  (niyaayaathibathiga’l  11:15)

இஸ்ரவேலர்  எகிப்திலிருந்து  வருகிறபோது,  வனாந்தரத்தில்  சிவந்த  சமுத்திரமட்டும்  நடந்து,  பின்பு  காதேசுக்கு  வந்து,  (நியாயாதிபதிகள்  11:16)

isravealar  egipthilirunthu  varugi’rapoathu,  vanaantharaththil  sivantha  samuththiramattum  nadanthu,  pinbu  kaatheasukku  vanthu,  (niyaayaathibathiga’l  11:16)

இஸ்ரவேலர்  ஏதோமின்  ராஜாவினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நாங்கள்  உன்  தேசத்துவழியாய்க்  கடந்துபோகட்டும்  என்று  சொல்லச்சொன்னார்கள்;  அதற்கு  ஏதோமின்  ராஜா  செவிகொடுக்கவில்லை;  அப்படியே  மோவாபின்  ராஜாவினிடத்திற்கும்  அனுப்பினார்கள்;  அவனும்  சம்மதிக்கவில்லை.  ஆதலால்  இஸ்ரவேலர்  காதேசிலே  தரித்திருந்து,  (நியாயாதிபதிகள்  11:17)

isravealar  eathoamin  raajaavinidaththi’rku  sthaanaabathiga'lai  anuppi:  naangga'l  un  theasaththuvazhiyaayk  kadanthupoagattum  en’ru  sollachsonnaarga'l;  atha’rku  eathoamin  raajaa  sevikodukkavillai;  appadiyea  moavaabin  raajaavinidaththi’rkum  anuppinaarga'l;  avanum  sammathikkavillai.  aathalaal  isravealar  kaatheasilea  thariththirunthu,  (niyaayaathibathiga’l  11:17)

பின்பு  வனாந்தரவழியாய்  நடந்து  ஏதோம்  தேசத்தையும்  மோவாப்  தேசத்தையும்  சுற்றிப்போய்,  மோவாபின்  தேசத்திற்குக்  கிழக்கேவந்து,  மோவாபின்  எல்லைக்குள்  பிரவேசியாமல்,  மோவாபின்  எல்லையான  அர்னோன்  நதிக்கு  அப்பாலே  பாளயமிறங்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  11:18)

pinbu  vanaantharavazhiyaay  nadanthu  eathoam  theasaththaiyum  moavaab  theasaththaiyum  sut’rippoay,  moavaabin  theasaththi’rkuk  kizhakkeavanthu,  moavaabin  ellaikku'l  piraveasiyaamal,  moavaabin  ellaiyaana  arnoan  nathikku  appaalea  paa'layami’rangginaarga'l.  (niyaayaathibathiga’l  11:18)

அப்பொழுது  இஸ்ரவேலர்  எஸ்போனில்  ஆளுகிற  சீகோன்  என்னும்  எமோரியரின்  ராஜாவினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நாங்கள்  உன்  தேசத்து  வழியாய்  எங்கள்  ஸ்தானத்திற்குக்  கடந்துபோக  இடங்கொடு  என்று  சொல்லச்சொன்னார்கள்.  (நியாயாதிபதிகள்  11:19)

appozhuthu  isravealar  esboanil  aa'lugi’ra  seegoan  ennum  emoariyarin  raajaavinidaththi’rku  sthaanaabathiga'lai  anuppi:  naangga'l  un  theasaththu  vazhiyaay  engga'l  sthaanaththi’rkuk  kadanthupoaga  idangkodu  en’ru  sollachsonnaarga'l.  (niyaayaathibathiga’l  11:19)

சீகோன்  இஸ்ரவேலரை  நம்பாததினால்,  தன்  எல்லையைக்  கடந்துபோகிறதற்கு  இடங்கொடாமல்  தன்  ஜனங்களையெல்லாம்  கூட்டி,  யாகாசிலே  பாளயமிறங்கி,  இஸ்ரவேலரோடே  யுத்தம்பண்ணினான்.  (நியாயாதிபதிகள்  11:20)

seegoan  isravealarai  nambaathathinaal,  than  ellaiyaik  kadanthupoagi’ratha’rku  idangkodaamal  than  janangga'laiyellaam  kootti,  yaagaasilea  paa'layami’ranggi,  isravealaroadea  yuththampa'n'ninaan.  (niyaayaathibathiga’l  11:20)

அப்பொழுது  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சீகோனையும்  அவனுடைய  எல்லா  ஜனங்களையும்  இஸ்ரவேலரின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அவர்களை  முறிய  அடித்தார்கள்;  அப்படியே  இஸ்ரவேலர்  அந்த  தேசத்திலே  குடியிருந்த  எமோரியரின்  சீமையையெல்லாம்  பிடித்து,  அர்னோன்  துவக்கி,  (நியாயாதிபதிகள்  11:21)

appozhuthu  isravealin  theavanaagiya  karththar  seegoanaiyum  avanudaiya  ellaa  janangga'laiyum  isravealarin  kaiyil  oppukkoduththaar;  avarga'lai  mu’riya  adiththaarga'l;  appadiyea  isravealar  antha  theasaththilea  kudiyiruntha  emoariyarin  seemaiyaiyellaam  pidiththu,  arnoan  thuvakki,  (niyaayaathibathiga’l  11:21)

யாபோக்மட்டும்,  வனாந்தரம்துவக்கி  யோர்தான்மட்டும்  இருக்கிற  எமோரியரின்  எல்லையையெல்லாம்  சுதந்தரமாய்க்  கட்டிக்கொண்டார்கள்.  (நியாயாதிபதிகள்  11:22)

yaaboakmattum,  vanaantharamthuvakki  yoarthaanmattum  irukki’ra  emoariyarin  ellaiyaiyellaam  suthantharamaayk  kattikko'ndaarga'l.  (niyaayaathibathiga’l  11:22)

இப்படி  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  எமோரியரைத்  தம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  முன்பாகத்  துரத்தியிருக்க,  நீர்  அந்த  தேசத்தைக்  கட்டிக்கொள்ளத்தகுமா?  (நியாயாதிபதிகள்  11:23)

ippadi  isravealin  theavanaagiya  karththar  emoariyaraith  thammudaiya  janamaagiya  isravealukku  munbaagath  thuraththiyirukka,  neer  antha  theasaththaik  kattikko'l'laththagumaa?  (niyaayaathibathiga’l  11:23)

உம்முடைய  தேவனாகிய  காமோஸ்  உமக்கு  முன்பாகத்  துரத்துகிறவர்களின்  தேசத்தை  நீர்  கட்டிக்கொள்ளமாட்டீரோ?  அப்படியே  எங்கள்  தேவனாகிய  கர்த்தர்  எங்களுக்கு  முன்பாகத்  துரத்துகிறவர்களின்  தேசத்தையெல்லாம்  நாங்களும்  கட்டிக்கொள்ளுகிறோம்.  (நியாயாதிபதிகள்  11:24)

ummudaiya  theavanaagiya  kaamoas  umakku  munbaagath  thuraththugi’ravarga'lin  theasaththai  neer  kattikko'l'lamaatteeroa?  appadiyea  engga'l  theavanaagiya  karththar  engga'lukku  munbaagath  thuraththugi’ravarga'lin  theasaththaiyellaam  naangga'lum  kattikko'l'lugi’roam.  (niyaayaathibathiga’l  11:24)

மேலும்  சிப்போரின்  குமாரனாகிய  பாலாக்  என்னும்  மோவாபின்  ராஜாவைப்பார்க்கிலும்  உமக்கு  அதிக  நியாயம்  உண்டோ?  அவன்  இஸ்ரவேலோடே  எப்போதாகிலும்  வழக்காடினானா?  எப்போதாகிலும்  அவர்களுக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணினானா?  (நியாயாதிபதிகள்  11:25)

mealum  sippoarin  kumaaranaagiya  baalaak  ennum  moavaabin  raajaavaippaarkkilum  umakku  athiga  niyaayam  u'ndoa?  avan  isravealoadea  eppoathaagilum  vazhakkaadinaanaa?  eppoathaagilum  avarga'lukku  viroathamaaga  yuththampa'n'ninaanaa?  (niyaayaathibathiga’l  11:25)

இஸ்ரவேலர்  எஸ்போனிலும்  அதின்  கிராமங்களிலும்,  ஆரோவேரிலும்  அதின்  கிராமங்களிலும்,  அர்னோன்  நதியருகான  எல்லா  ஊர்களிலும்,  முந்நூறு  வருஷம்  குடியிருக்கையில்,  இவ்வளவுகாலமாய்  நீங்கள்  அதைத்  திருப்பிக்கொள்ளாதே  போனதென்ன?  (நியாயாதிபதிகள்  11:26)

isravealar  esboanilum  athin  kiraamangga'lilum,  aaroavearilum  athin  kiraamangga'lilum,  arnoan  nathiyarugaana  ellaa  oorga'lilum,  munnoo’ru  varusham  kudiyirukkaiyil,  ivva'lavukaalamaay  neengga'l  athaith  thiruppikko'l'laathea  poanathenna?  (niyaayaathibathiga’l  11:26)

நான்  உமக்கு  விரோதமாய்க்  குற்றம்  செய்யவில்லை;  நீர்  எனக்கு  விரோதமாய்  யுத்தம்பண்ணுகிறதினால்  நீர்தான்  எனக்கு  அநியாயம்  செய்கிறீர்;  நியாயாதிபதியாகிய  கர்த்தர்  இன்று  இஸ்ரவேல்  புத்திரருக்கும்  அம்மோன்  புத்திரருக்கும்  நடுநின்று  நியாயம்  தீர்க்கக்கடவர்  என்று  சொல்லி  அனுப்பினான்.  (நியாயாதிபதிகள்  11:27)

naan  umakku  viroathamaayk  kut’ram  seyyavillai;  neer  enakku  viroathamaay  yuththampa'n'nugi’rathinaal  neerthaan  enakku  aniyaayam  seygi’reer;  niyaayaathibathiyaagiya  karththar  in’ru  israveal  puththirarukkum  ammoan  puththirarukkum  nadunin’ru  niyaayam  theerkkakkadavar  en’ru  solli  anuppinaan.  (niyaayaathibathiga’l  11:27)

ஆனாலும்  அம்மோன்  புத்திரரின்  ராஜா  தனக்கு  யெப்தா  சொல்லியனுப்பின  வார்த்தைகளுக்குச்  செவிகொடாதே  போனான்.  (நியாயாதிபதிகள்  11:28)

aanaalum  ammoan  puththirarin  raajaa  thanakku  yepthaa  solliyanuppina  vaarththaiga'lukkuch  sevikodaathea  poanaan.  (niyaayaathibathiga’l  11:28)

அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  யெப்தாவின்மேல்  இறங்கினார்;  அவன்  கீலேயாத்தையும்  மனாசே  நாட்டையும்  கடந்துபோய்,  கீலேயாத்திலிருக்கிற  மிஸ்பாவுக்கு  வந்து,  அங்கேயிருந்து  அம்மோன்  புத்திரருக்கு  விரோதமாகப்  போனான்.  (நியாயாதிபதிகள்  11:29)

appozhuthu  karththarudaiya  aavi  yepthaavinmeal  i’rangginaar;  avan  keeleayaaththaiyum  manaasea  naattaiyum  kadanthupoay,  keeleayaaththilirukki’ra  mispaavukku  vanthu,  anggeayirunthu  ammoan  puththirarukku  viroathamaagap  poanaan.  (niyaayaathibathiga’l  11:29)

அப்பொழுது  யெப்தா  கர்த்தருக்கு  ஒரு  பொருத்தனையைப்  பண்ணி:  தேவரீர்  அம்மோன்  புத்திரரை  என்  கையில்  ஒப்புக்கொடுக்கவே  ஒப்புக்கொடுத்தால்,  (நியாயாதிபதிகள்  11:30)

appozhuthu  yepthaa  karththarukku  oru  poruththanaiyaip  pa'n'ni:  theavareer  ammoan  puththirarai  en  kaiyil  oppukkodukkavea  oppukkoduththaal,  (niyaayaathibathiga’l  11:30)

நான்  அம்மோன்  புத்திரரிடத்திலிருந்து  சமாதானத்தோடே  திரும்பிவரும்போது,  என்  வீட்டு  வாசற்படியிலிருந்து  எனக்கு  எதிர்கொண்டு  வருவது  எதுவோ  அது  கர்த்தருக்கு  உரியதாகும்,  அதைச்  சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்துவேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  11:31)

naan  ammoan  puththiraridaththilirunthu  samaathaanaththoadea  thirumbivarumpoathu,  en  veettu  vaasa’rpadiyilirunthu  enakku  ethirko'ndu  varuvathu  ethuvoa  athu  karththarukku  uriyathaagum,  athaich  sarvaangga  thaganabaliyaagach  seluththuvean  en’raan.  (niyaayaathibathiga’l  11:31)

யெப்தா  அம்மோன்  புத்திரரின்மேல்  யுத்தம்பண்ண,  அவர்களுக்கு  விரோதமாய்ப்  புறப்பட்டுப்போனான்;  கர்த்தர்  அவர்களை  அவன்  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  (நியாயாதிபதிகள்  11:32)

yepthaa  ammoan  puththirarinmeal  yuththampa'n'na,  avarga'lukku  viroathamaayp  pu’rappattuppoanaan;  karththar  avarga'lai  avan  kaiyil  oppukkoduththaar.  (niyaayaathibathiga’l  11:32)

அவன்  அவர்களை  ஆரோவேர்  துவக்கி  மின்னித்திற்குப்  போகுமட்டும்,  திராட்சத்தோட்டத்து  நிலங்கள்வரைக்கும்,  மகா  சங்காரமாய்  முறிய  அடித்து,  இருபது  பட்டணங்களைப்  பிடித்தான்;  இப்படி  அம்மோன்  புத்திரர்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாகத்  தாழ்த்தப்பட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  11:33)

avan  avarga'lai  aaroavear  thuvakki  minniththi’rkup  poagumattum,  thiraadchaththoattaththu  nilangga'lvaraikkum,  mahaa  sanggaaramaay  mu’riya  adiththu,  irubathu  patta'nangga'laip  pidiththaan;  ippadi  ammoan  puththirar  israveal  puththirarukku  munbaagath  thaazhththappattaarga'l.  (niyaayaathibathiga’l  11:33)

யெப்தா  மிஸ்பாவிலிருக்கிற  தன்  வீட்டுக்கு  வருகிறபோது,  இதோ,  அவன்  குமாரத்தி  தம்புரு  வாசித்து  நடனஞ்செய்து,  அவனுக்கு  எதிர்கொண்டு  வந்தாள்;  அவள்  அவனுக்கு  ஒரே  பிள்ளையானவள்;  அவளையல்லாமல்  அவனுக்குக்  குமாரனும்  இல்லை  குமாரத்தியும்  இல்லை.  (நியாயாதிபதிகள்  11:34)

yepthaa  mispaavilirukki’ra  than  veettukku  varugi’rapoathu,  ithoa,  avan  kumaaraththi  thamburu  vaasiththu  nadanagnseythu,  avanukku  ethirko'ndu  vanthaa'l;  ava'l  avanukku  orea  pi'l'laiyaanava'l;  ava'laiyallaamal  avanukkuk  kumaaranum  illai  kumaaraththiyum  illai.  (niyaayaathibathiga’l  11:34)

அவன்  அவளைக்  கண்டவுடனே  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு:  ஐயோ!  என்  மகளே,  என்னை  மிகவும்  மனமடியவும்  கலங்கவும்  பண்ணுகிறாய்;  நான்  கர்த்தரை  நோக்கி  என்  வாயைத்  திறந்து  சொல்லிவிட்டேன்;  அதை  நான்  மாற்றக்கூடாது  என்றான்.  (நியாயாதிபதிகள்  11:35)

avan  ava'laik  ka'ndavudanea  than  vasthirangga'laik  kizhiththukko'ndu:  aiyoa!  en  maga'lea,  ennai  migavum  manamadiyavum  kalanggavum  pa'n'nugi’raay;  naan  karththarai  noakki  en  vaayaith  thi’ranthu  sollivittean;  athai  naan  maat’rakkoodaathu  en’raan.  (niyaayaathibathiga’l  11:35)

அப்பொழுது  அவள்:  என்  தகப்பனே,  நீர்  கர்த்தரை  நோக்கி  உம்முடைய  வாயைத்  திறந்து  பேசினீரல்லவோ?  அம்மோன்  புத்திரராகிய  உம்முடைய  சத்துருக்களுக்கு  நீதியைச்  சரிக்கட்டும்  ஜெயத்தைக்  கர்த்தர்  உமக்குக்  கட்டளையிட்டபடியினால்,  உம்முடைய  வாயிலிருந்து  புறப்பட்டபடியே  எனக்குச்  செய்யும்  என்றாள்.  (நியாயாதிபதிகள்  11:36)

appozhuthu  ava'l:  en  thagappanea,  neer  karththarai  noakki  ummudaiya  vaayaith  thi’ranthu  peasineerallavoa?  ammoan  puththiraraagiya  ummudaiya  saththurukka'lukku  neethiyaich  sarikkattum  jeyaththaik  karththar  umakkuk  katta'laiyittapadiyinaal,  ummudaiya  vaayilirunthu  pu’rappattapadiyea  enakkuch  seyyum  en’raa'l.  (niyaayaathibathiga’l  11:36)

பின்னும்  அவள்  தன்  தகப்பனை  நோக்கி:  நீர்  எனக்கு  ஒரு  காரியம்  செய்யவேண்டும்;  நான்  மலைகளின்மேல்  போய்த்  திரிந்து,  நானும்  என்  தோழிமார்களும்  என்  கன்னிமையினிமித்தம்  துக்கங்கொண்டாட,  எனக்கு  இரண்டுமாதம்  தவணைகொடும்  என்றாள்.  (நியாயாதிபதிகள்  11:37)

pinnum  ava'l  than  thagappanai  noakki:  neer  enakku  oru  kaariyam  seyyavea'ndum;  naan  malaiga'linmeal  poayth  thirinthu,  naanum  en  thoazhimaarga'lum  en  kannimaiyinimiththam  thukkangko'ndaada,  enakku  ira'ndumaatham  thava'naikodum  en’raa'l.  (niyaayaathibathiga’l  11:37)

அதற்கு  அவன்:  போய்வா  என்று  அவளை  இரண்டு  மாதத்திற்கு  அனுப்பிவிட்டான்;  அவள்  தன்  தோழிமார்களோடும்  கூடப்போய்,  தன்  கன்னிமையினிமித்தம்  மலைகளின்மேல்  துக்கங்கொண்டாடி,  (நியாயாதிபதிகள்  11:38)

atha’rku  avan:  poayvaa  en’ru  ava'lai  ira'ndu  maathaththi’rku  anuppivittaan;  ava'l  than  thoazhimaarga'loadum  koodappoay,  than  kannimaiyinimiththam  malaiga'linmeal  thukkangko'ndaadi,  (niyaayaathibathiga’l  11:38)

இரண்டுமாதம்  முடிந்தபின்பு,  தன்  தகப்பனிடத்திற்குத்  திரும்பிவந்தாள்;  அப்பொழுது  அவன்  பண்ணியிருந்த  தன்  பொருத்தனையின்படி  அவளுக்குச்  செய்தான்;  அவள்  புருஷனை  அறியாதிருந்தாள்.  (நியாயாதிபதிகள்  11:39)

ira'ndumaatham  mudinthapinbu,  than  thagappanidaththi’rkuth  thirumbivanthaa'l;  appozhuthu  avan  pa'n'niyiruntha  than  poruththanaiyinpadi  ava'lukkuch  seythaan;  ava'l  purushanai  a’riyaathirunthaa'l.  (niyaayaathibathiga’l  11:39)

இதினிமித்தம்  இஸ்ரவேலின்  குமாரத்திகள்  வருஷந்தோறும்  போய்,  நாலு  நாள்  கீலேயாத்தியனான  யெப்தாவின்  குமாரத்தியைக்குறித்துப்  புலம்புவது  இஸ்ரவேலிலே  வழக்கமாயிற்று.  (நியாயாதிபதிகள்  11:40)

ithinimiththam  isravealin  kumaaraththiga'l  varushanthoa’rum  poay,  naalu  naa'l  keeleayaaththiyanaana  yepthaavin  kumaaraththiyaikku’riththup  pulambuvathu  isravealilea  vazhakkamaayit’ru.  (niyaayaathibathiga’l  11:40)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!