Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 1 | நியாயாதிபதிகள் 1 | Judges 1


யோசுவா  மரித்தபின்  இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தரை  நோக்கி:  கானானியரை  எதிர்த்து  யுத்தம்பண்ணும்படி,  எங்களில்  யார்  முதல்முதல்  எழுந்து  புறப்படவேண்டும்  என்று  கேட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  1:1)

yoasuvaa  mariththapin  israveal  puththirar  karththarai  noakki:  kaanaaniyarai  ethirththu  yuththampa'n'numpadi,  engga'lil  yaar  muthalmuthal  ezhunthu  pu’rappadavea'ndum  en’ru  keattaarga'l.  (niyaayaathibathiga’l  1:1)

அதற்குக்  கர்த்தர்:  யூதா  எழுந்து  புறப்படக்கடவன்;  இதோ,  அந்த  தேசத்தை  அவன்  கையிலே  ஒப்புக்கொடுத்தேன்  என்றார்.  (நியாயாதிபதிகள்  1:2)

atha’rkuk  karththar:  yoothaa  ezhunthu  pu’rappadakkadavan;  ithoa,  antha  theasaththai  avan  kaiyilea  oppukkoduththean  en’raar.  (niyaayaathibathiga’l  1:2)

அப்பொழுது  யூதா  தன்  சகோதரனாகிய  சிமியோனை  நோக்கி:  நாம்  கானானியரோடே  யுத்தம்பண்ண  நீ  என்  சுதந்தரப்  பங்குவீதத்தில்  என்னோடேகூட  எழுந்துவா;  உன்  சுதந்தரப்  பங்கு  வீதத்தில்  நானும்  உன்னோடுகூட  வருவேன்  என்றான்;  அப்படியே  சிமியோன்  அவனோடேகூடப்  போனான்.  (நியாயாதிபதிகள்  1:3)

appozhuthu  yoothaa  than  sagoatharanaagiya  simiyoanai  noakki:  naam  kaanaaniyaroadea  yuththampa'n'na  nee  en  suthantharap  pangguveethaththil  ennoadeakooda  ezhunthuvaa;  un  suthantharap  panggu  veethaththil  naanum  unnoadukooda  varuvean  en’raan;  appadiyea  simiyoan  avanoadeakoodap  poanaan.  (niyaayaathibathiga’l  1:3)

யூதா  எழுந்துபோனபோது,  கர்த்தர்  கானானியரையும்  பெரிசியரையும்  அவர்கள்  கையிலே  ஒப்புக்கொடுத்தார்;  அவர்கள்  பேசேக்கிலே  பதினாயிரம்பேரை  வெட்டினார்கள்.  (நியாயாதிபதிகள்  1:4)

yoothaa  ezhunthupoanapoathu,  karththar  kaanaaniyaraiyum  perisiyaraiyum  avarga'l  kaiyilea  oppukkoduththaar;  avarga'l  beaseakkilea  pathinaayirampearai  vettinaarga'l.  (niyaayaathibathiga’l  1:4)

பேசேக்கிலே  அதோனிபேசேக்கைக்  கண்டு,  அவனோடு  யுத்தம்பண்ணி,  கானானியரையும்  பெரிசியரையும்  வெட்டினார்கள்.  (நியாயாதிபதிகள்  1:5)

beaseakkilea  athoanibeaseakkaik  ka'ndu,  avanoadu  yuththampa'n'ni,  kaanaaniyaraiyum  perisiyaraiyum  vettinaarga'l.  (niyaayaathibathiga’l  1:5)

அதோனிபேசேக்  ஓடிப்போகையில்,  அவனைப்  பின்தொடர்ந்து  பிடித்து,  அவன்  கைகால்களின்  பெருவிரல்களைத்  தறித்துப்போட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  1:6)

athoanibeaseak  oadippoagaiyil,  avanaip  pinthodarnthu  pidiththu,  avan  kaikaalga'lin  peruviralga'laith  tha’riththuppoattaarga'l.  (niyaayaathibathiga’l  1:6)

அப்பொழுது  அதோனிபேசேக்:  எழுபது  ராஜாக்கள்,  கைகால்களின்  பெருவிரல்கள்  தறிக்கப்பட்டவர்களாய்,  என்  மேஜையின்கீழ்  விழுந்ததைப்  பொறுக்கித்  தின்றார்கள்;  நான்  எப்படிச்  செய்தேனோ,  அப்படியே  தேவன்  எனக்கும்  செய்து  சரிக்கட்டினார்  என்றான்.  அவனை  எருசலேமுக்குக்  கொண்டுபோனார்கள்;  அங்கே  அவன்  செத்துப்போனான்.  (நியாயாதிபதிகள்  1:7)

appozhuthu  athoanibeaseak:  ezhubathu  raajaakka'l,  kaikaalga'lin  peruviralga'l  tha’rikkappattavarga'laay,  en  meajaiyinkeezh  vizhunthathaip  po’rukkith  thin’raarga'l;  naan  eppadich  seytheanoa,  appadiyea  theavan  enakkum  seythu  sarikkattinaar  en’raan.  avanai  erusaleamukkuk  ko'ndupoanaarga'l;  anggea  avan  seththuppoanaan.  (niyaayaathibathiga’l  1:7)

யூதாவின்  புத்திரர்  எருசலேமின்மேல்  யுத்தம்பண்ணி,  அதைப்  பிடித்து,  அதிலுள்ளவர்களைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  பட்டணத்தை  அக்கினிக்கு  இரையாக்கிவிட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  1:8)

yoothaavin  puththirar  erusaleaminmeal  yuththampa'n'ni,  athaip  pidiththu,  athilu'l'lavarga'laip  pattayakkarukkinaal  vetti,  patta'naththai  akkinikku  iraiyaakkivittaarga'l.  (niyaayaathibathiga’l  1:8)

பின்பு  யூதாவின்  புத்திரர்  மலைத்தேசத்திலேயும்,  தெற்கேயும்,  பள்ளத்தாக்குகளிலேயும்  குடியிருக்கிற  கானானியரோடு  யுத்தம்பண்ணப்  புறப்பட்டுப்போனார்கள்.  (நியாயாதிபதிகள்  1:9)

pinbu  yoothaavin  puththirar  malaiththeasaththileayum,  the’rkeayum,  pa'l'laththaakkuga'lileayum  kudiyirukki’ra  kaanaaniyaroadu  yuththampa'n'nap  pu’rappattuppoanaarga'l.  (niyaayaathibathiga’l  1:9)

அப்படியே  யூதா  கோத்திரத்தார்  எபிரோனிலே  குடியிருக்கிற  கானானியருக்கு  விரோதமாய்ப்  போய்,  சேசாய்,  அகீமான்,  தல்மாய்  என்பவர்களை  வெட்டிப்போட்டார்கள்.  முற்காலத்தில்  அந்த  எபிரோனுக்குக்  கீரியாத்அர்பா  என்று  பேர்.  (நியாயாதிபதிகள்  1:10)

appadiyea  yoothaa  koaththiraththaar  ebiroanilea  kudiyirukki’ra  kaanaaniyarukku  viroathamaayp  poay,  seasaay,  ageemaan,  thalmaay  enbavarga'lai  vettippoattaarga'l.  mu’rkaalaththil  antha  ebiroanukkuk  keeriyaatharbaa  en’ru  pear.  (niyaayaathibathiga’l  1:10)

அங்கேயிருந்து  தெபீரின்  குடிகளுக்கு  விரோதமாகப்  போனார்கள்;  முற்காலத்தில்  தெபீருக்குக்  கீரியாத்செப்பேர்  என்று  பேர்.  (நியாயாதிபதிகள்  1:11)

anggeayirunthu  thebeerin  kudiga'lukku  viroathamaagap  poanaarga'l;  mu’rkaalaththil  thebeerukkuk  keeriyaathseppear  en’ru  pear.  (niyaayaathibathiga’l  1:11)

அப்பொழுது  காலேப்:  கீரியாத்செப்பேரைச்  சங்காரம்பண்ணிப்  பிடிக்கிறவனுக்கு  என்  குமாரத்தியாகிய  அக்சாளை  விவாகம்பண்ணிக்கொடுப்பேன்  என்றான்.  (நியாயாதிபதிகள்  1:12)

appozhuthu  kaaleab:  keeriyaathseppearaich  sanggaarampa'n'nip  pidikki’ravanukku  en  kumaaraththiyaagiya  aksaa'lai  vivaagampa'n'nikkoduppean  en’raan.  (niyaayaathibathiga’l  1:12)

அப்பொழுது  காலேபுடைய  தம்பியாகிய  கேனாசின்  குமாரன்  ஒத்னியேல்  அதைப்  பிடித்தான்;  ஆகையால்  தன்  குமாரத்தியாகிய  அக்சாளை  அவனுக்கு  விவாகம்பண்ணிக்கொடுத்தான்.  (நியாயாதிபதிகள்  1:13)

appozhuthu  kaaleabudaiya  thambiyaagiya  keanaasin  kumaaran  othniyeal  athaip  pidiththaan;  aagaiyaal  than  kumaaraththiyaagiya  aksaa'lai  avanukku  vivaagampa'n'nikkoduththaan.  (niyaayaathibathiga’l  1:13)

அவள்  புறப்படுகையில்,  என்  தகப்பனிடத்தில்  ஒரு  வயல்வெளியைக்  கேட்கவேண்டும்  என்று  அவனிடத்தில்  உத்தரவு  பெற்றுக்கொண்டு,  கழுதையின்மேலிருந்து  இறங்கினாள்.  காலேப்  அவளை  நோக்கி:  உனக்கு  என்னவேண்டும்  என்றான்.  (நியாயாதிபதிகள்  1:14)

ava'l  pu’rappadugaiyil,  en  thagappanidaththil  oru  vayalve'liyaik  keadkavea'ndum  en’ru  avanidaththil  uththaravu  pet’rukko'ndu,  kazhuthaiyinmealirunthu  i’rangginaa'l.  kaaleab  ava'lai  noakki:  unakku  ennavea'ndum  en’raan.  (niyaayaathibathiga’l  1:14)

அப்பொழுது  அவள்:  எனக்கு  ஒரு  ஆசீர்வாதம்  தரவேண்டும்;  வறட்சியான  நிலத்தை  எனக்குத்  தந்தீர்;  நீர்ப்பாய்ச்சலான  நிலங்களையும்  எனக்குத்  தரவேண்டும்  என்றாள்;  அப்பொழுது  காலேப்  மேற்புறத்திலும்  கீழ்ப்புறத்திலும்  அவளுக்கு  நீர்ப்பாய்ச்சலான  நிலங்களைக்  கொடுத்தான்.  (நியாயாதிபதிகள்  1:15)

appozhuthu  ava'l:  enakku  oru  aaseervaatham  tharavea'ndum;  va’radchiyaana  nilaththai  enakkuth  thantheer;  neerppaaychchalaana  nilangga'laiyum  enakkuth  tharavea'ndum  en’raa'l;  appozhuthu  kaaleab  mea’rpu’raththilum  keezhppu’raththilum  ava'lukku  neerppaaychchalaana  nilangga'laik  koduththaan.  (niyaayaathibathiga’l  1:15)

மோசேயின்  மாமனாகிய  கேனியனின்  புத்திரரும்  யூதாவின்  புத்திரரோடேகூடப்  பேரீச்சமரங்களின்  பட்டணத்திலிருந்து  ஆராத்திற்குத்  தெற்கேயிருக்கிற  யூதாவின்  வனாந்தரத்திற்கு  வந்து,  ஜனங்களோடே  குடியேறினார்கள்.  (நியாயாதிபதிகள்  1:16)

moaseayin  maamanaagiya  keaniyanin  puththirarum  yoothaavin  puththiraroadeakoodap  peareechchamarangga'lin  patta'naththilirunthu  aaraaththi’rkuth  the’rkeayirukki’ra  yoothaavin  vanaantharaththi’rku  vanthu,  janangga'loadea  kudiyea’rinaarga'l.  (niyaayaathibathiga’l  1:16)

யூதா  தன்  சகோதரனாகிய  சிமியோனோடுங்கூடப்  போனான்;  அவர்கள்  சேப்பாத்தில்  குடியிருக்கிற  கானானியரை  முறிய  அடித்து,  அதைச்  சங்காரம்பண்ணி,  அந்தப்  பட்டணத்திற்கு  ஒர்மா  என்று  பேரிட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  1:17)

yoothaa  than  sagoatharanaagiya  simiyoanoadungkoodap  poanaan;  avarga'l  seappaaththil  kudiyirukki’ra  kaanaaniyarai  mu’riya  adiththu,  athaich  sanggaarampa'n'ni,  anthap  patta'naththi’rku  ormaa  en’ru  pearittaarga'l.  (niyaayaathibathiga’l  1:17)

யூதா  காசாவையும்  அதின்  எல்லையையும்,  அஸ்கலோனையும்  அதின்  எல்லையையும்,  எக்ரோனையும்  அதின்  எல்லையையும்  பிடித்தான்.  (நியாயாதிபதிகள்  1:18)

yoothaa  kaasaavaiyum  athin  ellaiyaiyum,  askaloanaiyum  athin  ellaiyaiyum,  ekroanaiyum  athin  ellaiyaiyum  pidiththaan.  (niyaayaathibathiga’l  1:18)

கர்த்தர்  யூதாவோடேகூட  இருந்ததினால்,  மலைத்தேசத்தாரைத்  துரத்திவிட்டார்கள்;  பள்ளத்தாக்கின்  குடிகளுக்கு  இருப்புரதங்கள்  இருந்தபடியினால்,  அவர்களைத்  துரத்தக்கூடாமற்போயிற்று.  (நியாயாதிபதிகள்  1:19)

karththar  yoothaavoadeakooda  irunthathinaal,  malaiththeasaththaaraith  thuraththivittaarga'l;  pa'l'laththaakkin  kudiga'lukku  iruppurathangga'l  irunthapadiyinaal,  avarga'laith  thuraththakkoodaama’rpoayit’ru.  (niyaayaathibathiga’l  1:19)

மோசே  சொன்னபடியே,  எபிரோனைக்  காலேபுக்குக்  கொடுத்தார்கள்;  அவன்  அதிலிருந்த  ஏனாக்கின்  மூன்று  குமாரரையும்  துரத்திவிட்டான்.  (நியாயாதிபதிகள்  1:20)

moasea  sonnapadiyea,  ebiroanaik  kaaleabukkuk  koduththaarga'l;  avan  athiliruntha  eanaakkin  moon’ru  kumaararaiyum  thuraththivittaan.  (niyaayaathibathiga’l  1:20)

பென்யமீன்  புத்திரர்  எருசலேமிலே  குடியிருந்த  எபூசியரையும்  துரத்திவிடவில்லை;  ஆகையால்  எபூசியர்  இந்நாள்மட்டும்  பென்யமீன்  புத்திரரோடேகூட  எருசலேமில்  குடியிருக்கிறார்கள்.  (நியாயாதிபதிகள்  1:21)

benyameen  puththirar  erusaleamilea  kudiyiruntha  eboosiyaraiyum  thuraththividavillai;  aagaiyaal  eboosiyar  innaa'lmattum  benyameen  puththiraroadeakooda  erusaleamil  kudiyirukki’raarga'l.  (niyaayaathibathiga’l  1:21)

யோசேப்பின்  குடும்பத்தாரும்  பெத்தேலுக்கு  விரோதமாய்ப்  போனார்கள்;  கர்த்தர்  அவர்களோடேகூட  இருந்தார்.  (நியாயாதிபதிகள்  1:22)

yoaseappin  kudumbaththaarum  beththealukku  viroathamaayp  poanaarga'l;  karththar  avarga'loadeakooda  irunthaar.  (niyaayaathibathiga’l  1:22)

யோசேப்பின்  புத்திரர்  பெத்தேலை  வேவுபார்க்க  ஆட்களை  அனுப்பினார்கள்;  முன்னே  அந்தப்  பட்டணத்திற்கு  லூஸ்  என்று  பேர்.  (நியாயாதிபதிகள்  1:23)

yoaseappin  puththirar  beththealai  veavupaarkka  aadka'lai  anuppinaarga'l;  munnea  anthap  patta'naththi’rku  loos  en’ru  pear.  (niyaayaathibathiga’l  1:23)

அந்த  வேவுகாரர்  பட்டணத்திலிருந்து  புறப்பட்டுவருகிற  ஒரு  மனுஷனைக்  கண்டு:  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கும்  வழியை  எங்களுக்குக்  காண்பி,  உனக்குத்  தயைசெய்வோம்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  1:24)

antha  veavukaarar  patta'naththilirunthu  pu’rappattuvarugi’ra  oru  manushanaik  ka'ndu:  patta'naththi’rku'l  piraveasikkum  vazhiyai  engga'lukkuk  kaa'nbi,  unakkuth  thayaiseyvoam  en’raarga'l.  (niyaayaathibathiga’l  1:24)

அப்படியே  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கும்  வழியை  அவர்களுக்குக்  காண்பித்தான்;  அப்பொழுது  அவர்கள்  வந்து,  பட்டணத்திலுள்ளவர்களைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  அந்த  மனுஷனையும்  அவன்  குடும்பத்தையும்  விட்டுவிட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  1:25)

appadiyea  patta'naththi’rku'l  piraveasikkum  vazhiyai  avarga'lukkuk  kaa'nbiththaan;  appozhuthu  avarga'l  vanthu,  patta'naththilu'l'lavarga'laip  pattayakkarukkinaal  vetti,  antha  manushanaiyum  avan  kudumbaththaiyum  vittuvittaarga'l.  (niyaayaathibathiga’l  1:25)

அப்பொழுது  அந்த  மனுஷன்  ஏத்தியரின்  தேசத்திற்குப்  போய்,  ஒரு  பட்டணத்தைக்  கட்டி,  அதற்கு  லூஸ்  என்று  பேரிட்டான்;  அதுதான்  இந்நாள்மட்டும்  அதின்  பேர்.  (நியாயாதிபதிகள்  1:26)

appozhuthu  antha  manushan  eaththiyarin  theasaththi’rkup  poay,  oru  patta'naththaik  katti,  atha’rku  loos  en’ru  pearittaan;  athuthaan  innaa'lmattum  athin  pear.  (niyaayaathibathiga’l  1:26)

மனாசே  கோத்திரத்தார்  பெத்செயான்  பட்டணத்தாரையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்,  தானாக்  பட்டணத்தாரையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்,  தோரின்  குடிகளையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்,  இப்லெயாம்  பட்டணத்தாரையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்,  மெகிதோவின்  குடிகளையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்  துரத்திவிடவில்லை;  கானானியர்  அந்த  தேசத்திலேதானே  குடியிருக்கவேண்டும்  என்று  இருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  1:27)

manaasea  koaththiraththaar  bethseyaan  patta'naththaaraiyum  atha’rku  aduththa  oorga'lin  manusharaiyum,  thaanaak  patta'naththaaraiyum  atha’rku  aduththa  oorga'lin  manusharaiyum,  thoarin  kudiga'laiyum  atha’rku  aduththa  oorga'lin  manusharaiyum,  ibleyaam  patta'naththaaraiyum  atha’rku  aduththa  oorga'lin  manusharaiyum,  megithoavin  kudiga'laiyum  atha’rku  aduththa  oorga'lin  manusharaiyum  thuraththividavillai;  kaanaaniyar  antha  theasaththileathaanea  kudiyirukkavea'ndum  en’ru  irunthaarga'l.  (niyaayaathibathiga’l  1:27)

இஸ்ரவேலர்  பலத்தபோது,  கானானியரை  முற்றிலும்  துரத்திவிடாமல்  பகுதி  கட்டப்பண்ணினார்கள்.  (நியாயாதிபதிகள்  1:28)

isravealar  balaththapoathu,  kaanaaniyarai  mut’rilum  thuraththividaamal  paguthi  kattappa'n'ninaarga'l.  (niyaayaathibathiga’l  1:28)

எப்பிராயீம்  கோத்திரத்தார்  கேசேரிலே  குடியிருந்த  கானானியரையும்  துரத்திவிடவில்லை;  ஆகையால்  கானானியர்  கேசேரில்  அவர்கள்  நடுவே  குடியிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  1:29)

eppiraayeem  koaththiraththaar  keasearilea  kudiyiruntha  kaanaaniyaraiyum  thuraththividavillai;  aagaiyaal  kaanaaniyar  keasearil  avarga'l  naduvea  kudiyirunthaarga'l.  (niyaayaathibathiga’l  1:29)

செபுலோன்  கோத்திரத்தார்  கித்ரோனின்  குடிகளையும்,  நாகலோலின்  குடிகளையும்  துரத்திவிடவில்லை,  ஆகையால்  கானானியர்  அவர்கள்  நடுவே  குடியிருந்து,  பகுதிகட்டுகிறவர்களானார்கள்.  (நியாயாதிபதிகள்  1:30)

sebuloan  koaththiraththaar  kithroanin  kudiga'laiyum,  naagaloalin  kudiga'laiyum  thuraththividavillai,  aagaiyaal  kaanaaniyar  avarga'l  naduvea  kudiyirunthu,  paguthikattugi’ravarga'laanaarga'l.  (niyaayaathibathiga’l  1:30)

ஆசேர்  கோத்திரத்தார்  அக்கோவின்  குடிகளையும்,  சீதோனின்  குடிகளையும்,  அக்லாப்,  அக்சீப்,  எல்பா,  ஆப்பீக்,  ரேகோப்  பட்டணங்களின்  குடிகளையும்  துரத்திவிடவில்லை.  (நியாயாதிபதிகள்  1:31)

aasear  koaththiraththaar  akkoavin  kudiga'laiyum,  seethoanin  kudiga'laiyum,  aklaab,  akseeb,  elbaa,  aappeek,  reagoab  patta'nangga'lin  kudiga'laiyum  thuraththividavillai.  (niyaayaathibathiga’l  1:31)

ஆசேரியர்  தேசத்தின்  குடிகளாகிய  கானானியரின்  நடுவே  குடியிருந்தார்கள்;  அவர்களை  அவர்கள்  துரத்திவிடவில்லை.  (நியாயாதிபதிகள்  1:32)

aaseariyar  theasaththin  kudiga'laagiya  kaanaaniyarin  naduvea  kudiyirunthaarga'l;  avarga'lai  avarga'l  thuraththividavillai.  (niyaayaathibathiga’l  1:32)

நப்தலி  கோத்திரத்தார்  பெத்ஷிமேசின்  குடிகளையும்  பெத்தானாத்தின்  குடிகளையும்  துரத்திவிடாமல்,  தேசத்தின்  குடிகளாகிய  கானானியரின்  நடுவே  குடியிருந்தார்கள்;  பெத்ஷிமேஸ்,  பெத்தானாத்  பட்டணங்களின்  குடிகள்  அவர்களுக்குப்  பகுதிகட்டுகிறவர்களானார்கள்.  (நியாயாதிபதிகள்  1:33)

napthali  koaththiraththaar  bethshimeasin  kudiga'laiyum  beththaanaaththin  kudiga'laiyum  thuraththividaamal,  theasaththin  kudiga'laagiya  kaanaaniyarin  naduvea  kudiyirunthaarga'l;  bethshimeas,  beththaanaath  patta'nangga'lin  kudiga'l  avarga'lukkup  paguthikattugi’ravarga'laanaarga'l.  (niyaayaathibathiga’l  1:33)

எமோரியர்  தாண்  புத்திரரைப்  பள்ளத்தாக்கில்  இறங்கவொட்டாமல்,  மலைத்தேசத்திற்குப்  போகும்படி  நெருக்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  1:34)

emoariyar  thaa'n  puththiraraip  pa'l'laththaakkil  i’ranggavottaamal,  malaiththeasaththi’rkup  poagumpadi  nerukkinaarga'l.  (niyaayaathibathiga’l  1:34)

எமோரியர்  ஏரேஸ்  மலைகளிலும்  ஆயலோனிலும்  சால்பீமிலும்  குடியிருக்கவேண்டும்  என்று  இருந்தார்கள்;  ஆனாலும்  யோசேப்பின்  குடும்பத்தாரின்  கை  பலத்தபடியினால்,  அவர்களுக்குப்  பகுதிகட்டுகிறவர்களானார்கள்.  (நியாயாதிபதிகள்  1:35)

emoariyar  eareas  malaiga'lilum  aayaloanilum  saalbeemilum  kudiyirukkavea'ndum  en’ru  irunthaarga'l;  aanaalum  yoaseappin  kudumbaththaarin  kai  balaththapadiyinaal,  avarga'lukkup  paguthikattugi’ravarga'laanaarga'l.  (niyaayaathibathiga’l  1:35)

எமோரியரின்  எல்லை  அக்கராபீமுக்குப்  போகிற  மேடுதொடங்கி  அதற்கு  அப்புறமும்  போயிற்று.  (நியாயாதிபதிகள்  1:36)

emoariyarin  ellai  akkaraabeemukkup  poagi’ra  meaduthodanggi  atha’rku  appu’ramum  poayit’ru.  (niyaayaathibathiga’l  1:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!