Friday, August 26, 2016

2 Saamuveal 9 | 2 சாமுவேல் 9 | 2 Samuel 9

யோனத்தான்நிமித்தம்  என்னால்  தயவுபெறத்தக்கவன்  எவனாவது  சவுலின்  வீட்டாரில்  இன்னும்  மீதியாயிருக்கிறவன்  உண்டா  என்று  தாவீது  கேட்டான்.  (2சாமுவேல்  9:1)

yoanaththaannimiththam  ennaal  thayavupe’raththakkavan  evanaavathu  savulin  veettaaril  innum  meethiyaayirukki’ravan  u'ndaa  en’ru  thaaveethu  keattaan.  (2saamuveal  9:1)

அப்பொழுது  சவுலின்  வீட்டு  வேலைக்காரனாகிய  சீபா  என்னும்  பேருள்ளவனைத்  தாவீதினிடத்தில்  அழைத்துவந்தார்கள்;  ராஜா  அவனைப்  பார்த்து:  நீதானா  சீபா  என்று  கேட்டான்;  அவன்  அடியேன்தான்  என்றான்.  (2சாமுவேல்  9:2)

appozhuthu  savulin  veettu  vealaikkaaranaagiya  seebaa  ennum  pearu'l'lavanaith  thaaveethinidaththil  azhaiththuvanthaarga'l;  raajaa  avanaip  paarththu:  neethaanaa  seebaa  en’ru  keattaan;  avan  adiyeanthaan  en’raan.  (2saamuveal  9:2)

அப்பொழுது  ராஜா:  தேவன்நிமித்தம்  நான்  சவுலின்  குடும்பத்தாருக்குத்  தயைசெய்யும்படி  அவன்  வீட்டாரில்  யாதொருவன்  இன்னும்  மீதியாய்  இருக்கிறானா  என்று  கேட்டதற்கு,  சீபா  ராஜாவைப்  பார்த்து:  இன்னும்  யோனத்தானுக்கு  இரண்டு  கால்களும்  முடமான  ஒரு  குமாரன்  இருக்கிறான்  என்றான்.  (2சாமுவேல்  9:3)

appozhuthu  raajaa:  theavannimiththam  naan  savulin  kudumbaththaarukkuth  thayaiseyyumpadi  avan  veettaaril  yaathoruvan  innum  meethiyaay  irukki’raanaa  en’ru  keattatha’rku,  seebaa  raajaavaip  paarththu:  innum  yoanaththaanukku  ira'ndu  kaalga'lum  mudamaana  oru  kumaaran  irukki’raan  en’raan.  (2saamuveal  9:3)

அவன்  எங்கே  என்று  ராஜா  கேட்டதற்கு,  சீபா  ராஜாவைப்  பார்த்து:  இதோ,  அவன்  லோதேபாரிலே  அம்மியேலின்  குமாரனாகிய  மாகீரின்  வீட்டில்  இருக்கிறான்  என்றான்.  (2சாமுவேல்  9:4)

avan  enggea  en’ru  raajaa  keattatha’rku,  seebaa  raajaavaip  paarththu:  ithoa,  avan  loatheabaarilea  ammiyealin  kumaaranaagiya  maakeerin  veettil  irukki’raan  en’raan.  (2saamuveal  9:4)

அப்பொழுது  தாவீதுராஜா  அவனை  லோதேபாரிலிருக்கிற  அம்மியேலின்  குமாரனாகிய  மாகீரின்  வீட்டிலிருந்து  அழைப்பித்தான்.  (2சாமுவேல்  9:5)

appozhuthu  thaaveethuraajaa  avanai  loatheabaarilirukki’ra  ammiyealin  kumaaranaagiya  maakeerin  veettilirunthu  azhaippiththaan.  (2saamuveal  9:5)

சவுலின்  குமாரனாகிய  யோனத்தானின்  மகன்  மேவிபோசேத்  தாவீதினிடத்தில்  வந்தபோது,  முகங்குப்புற  விழுந்து  வணங்கினான்;  அப்பொழுது  தாவீது:  மேவிபோசேத்தே  என்றான்;  அவன்:  இதோ,  அடியேன்  என்றான்.  (2சாமுவேல்  9:6)

savulin  kumaaranaagiya  yoanaththaanin  magan  meaviboaseath  thaaveethinidaththil  vanthapoathu,  mugangkuppu’ra  vizhunthu  va'nangginaan;  appozhuthu  thaaveethu:  meaviboaseaththea  en’raan;  avan:  ithoa,  adiyean  en’raan.  (2saamuveal  9:6)

தாவீது  அவனைப்  பார்த்து:  நீ  பயப்படாதே;  உன்  தகப்பனாகிய  யோனத்தான்நிமித்தம்  நான்  நிச்சயமாய்  உனக்குத்  தயைசெய்து,  உன்  தகப்பனாகிய  சவுலின்  நிலங்களையெல்லாம்  உனக்குத்  திரும்பக்  கொடுப்பேன்;  நீ  என்  பந்தியில்  நித்தம்  அப்பம்  புசிப்பாய்  என்றான்.  (2சாமுவேல்  9:7)

thaaveethu  avanaip  paarththu:  nee  bayappadaathea;  un  thagappanaagiya  yoanaththaannimiththam  naan  nichchayamaay  unakkuth  thayaiseythu,  un  thagappanaagiya  savulin  nilangga'laiyellaam  unakkuth  thirumbak  koduppean;  nee  en  panthiyil  niththam  appam  pusippaay  en’raan.  (2saamuveal  9:7)

அப்பொழுது  அவன்  வணங்கி:  செத்த  நாயைப்போலிருக்கிற  என்னை  நீர்  நோக்கிப்பார்க்கிறதற்கு,  உமது  அடியான்  எம்மாத்திரம்  என்றான்.  (2சாமுவேல்  9:8)

appozhuthu  avan  va'nanggi:  seththa  naayaippoalirukki’ra  ennai  neer  noakkippaarkki’ratha’rku,  umathu  adiyaan  emmaaththiram  en’raan.  (2saamuveal  9:8)

ராஜா  சவுலின்  வேலைக்காரனாகிய  சீபாவை  அழைப்பித்து,  அவனை  நோக்கி:  சவுலுக்கும்  அவர்  வீட்டார்  எல்லாருக்கும்  இருந்த  யாவையும்  உன்  எஜமானுடைய  குமாரனுக்குக்  கொடுத்தேன்.  (2சாமுவேல்  9:9)

raajaa  savulin  vealaikkaaranaagiya  seebaavai  azhaippiththu,  avanai  noakki:  savulukkum  avar  veettaar  ellaarukkum  iruntha  yaavaiyum  un  ejamaanudaiya  kumaaranukkuk  koduththean.  (2saamuveal  9:9)

ஆகையால்  நீ  உன்  குமாரரையும்  உன்  வேலைக்காரரையும்  கூட்டிக்கொண்டு,  உன்  எஜமானுடைய  குமாரன்  புசிக்க  அப்பம்  உண்டாயிருக்கும்படி,  அந்த  நிலத்தைப்  பயிரிட்டு,  அதின்  பலனைச்  சேர்ப்பாயாக;  உன்  எஜமானுடைய  குமாரன்  மேவிபோசேத்  நித்தம்  என்  பந்தியிலே  அப்பம்  புசிப்பான்  என்றான்;  சீபாவுக்குப்  பதினைந்து  குமாரரும்  இருபது  வேலைக்காரரும்  இருந்தார்கள்.  (2சாமுவேல்  9:10)

aagaiyaal  nee  un  kumaararaiyum  un  vealaikkaararaiyum  koottikko'ndu,  un  ejamaanudaiya  kumaaran  pusikka  appam  u'ndaayirukkumpadi,  antha  nilaththaip  payirittu,  athin  palanaich  searppaayaaga;  un  ejamaanudaiya  kumaaran  meaviboaseath  niththam  en  panthiyilea  appam  pusippaan  en’raan;  seebaavukkup  pathinainthu  kumaararum  irubathu  vealaikkaararum  irunthaarga'l.  (2saamuveal  9:10)

சீபா,  ராஜாவை  நோக்கி:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தமது  அடியானுக்குக்  கட்டளையிட்டபடியெல்லாம்  உமது  அடியானாகிய  நான்  செய்வேன்  என்றான்.  ராஜகுமாரரில்  ஒருவனைப்போல,  மேவிபோசேத்  என்  பந்தியிலே  அசனம்  பண்ணுவான்  என்று  ராஜா  சொன்னான்.  (2சாமுவேல்  9:11)

seebaa,  raajaavai  noakki:  raajaavaagiya  en  aa'ndavan  thamathu  adiyaanukkuk  katta'laiyittapadiyellaam  umathu  adiyaanaagiya  naan  seyvean  en’raan.  raajakumaararil  oruvanaippoala,  meaviboaseath  en  panthiyilea  asanam  pa'n'nuvaan  en’ru  raajaa  sonnaan.  (2saamuveal  9:11)

மேவிபோசேத்திற்கு  மீகா  என்னும்  பேருள்ள  சிறுவனாகிய  ஒரு  குமாரன்  இருந்தான்,  சீபாவின்  வீட்டிலே  குடியிருந்த  யாவரும்  மேவிபோசேத்திற்கு  வேலைக்காரராயிருந்தார்கள்.  (2சாமுவேல்  9:12)

meaviboaseaththi’rku  meekaa  ennum  pearu'l'la  si’ruvanaagiya  oru  kumaaran  irunthaan,  seebaavin  veettilea  kudiyiruntha  yaavarum  meaviboaseaththi’rku  vealaikkaararaayirunthaarga'l.  (2saamuveal  9:12)

மேவிபோசேத்  ராஜாவின்  பந்தியில்  நித்தம்  அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால்,  எருசலேமிலே  குடியிருந்தான்;  அவனுக்கு  இரண்டு  காலும்  முடமாயிருந்தது.  (2சாமுவேல்  9:13)

meaviboaseath  raajaavin  panthiyil  niththam  asanampa'n'nugi’ravanaayirunthapadiyinaal,  erusaleamilea  kudiyirunthaan;  avanukku  ira'ndu  kaalum  mudamaayirunthathu.  (2saamuveal  9:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!