Friday, August 26, 2016

2 Saamuveal 7 | 2 சாமுவேல் 7 | 2 Samuel 7

கர்த்தர்  ராஜாவைச்  சுற்றிலும்  இருந்த  அவனுடைய  எல்லாச்  சத்துருக்களுக்கும்  அவனை  நீங்கலாக்கி,  இளைப்பாறப்பண்ணினபோது,  அவன்  தன்  வீட்டிலே  வாசமாயிருக்கையில்,  (2சாமுவேல்  7:1)

karththar  raajaavaich  sut’rilum  iruntha  avanudaiya  ellaach  saththurukka'lukkum  avanai  neenggalaakki,  i'laippaa’rappa'n'ninapoathu,  avan  than  veettilea  vaasamaayirukkaiyil,  (2saamuveal  7:1)

ராஜா  தீர்க்கதரிசியாகிய  நாத்தானை  நோக்கி:  பாரும்,  கேதுருமரங்களால்  செய்யப்பட்ட  வீட்டிலே  நான்  வாசம்பண்ணும்போது,  தேவனுடைய  பெட்டி  திரைகளின்  நடுவே  வாசமாயிருக்கிறதே  என்றான்.  (2சாமுவேல்  7:2)

raajaa  theerkkatharisiyaagiya  naaththaanai  noakki:  paarum,  keathurumarangga'laal  seyyappatta  veettilea  naan  vaasampa'n'numpoathu,  theavanudaiya  petti  thiraiga'lin  naduvea  vaasamaayirukki’rathea  en’raan.  (2saamuveal  7:2)

அப்பொழுது  நாத்தான்  ராஜாவை  நோக்கி:  நீர்  போய்  உம்முடைய  இருதயத்தில்  உள்ளபடியெல்லாம்  செய்யும்;  கர்த்தர்  உம்மோடு  இருக்கிறாரே  என்றான்.  (2சாமுவேல்  7:3)

appozhuthu  naaththaan  raajaavai  noakki:  neer  poay  ummudaiya  iruthayaththil  u'l'lapadiyellaam  seyyum;  karththar  ummoadu  irukki’raarea  en’raan.  (2saamuveal  7:3)

அன்று  ராத்திரியிலே  கர்த்தருடைய  வார்த்தை  நாத்தானுக்கு  உண்டாகி,  அவர்:  (2சாமுவேல்  7:4)

an’ru  raaththiriyilea  karththarudaiya  vaarththai  naaththaanukku  u'ndaagi,  avar:  (2saamuveal  7:4)

நீ  போய்  என்  தாசனாகிய  தாவீதை  நோக்கி:  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  வாசமாயிருக்கத்தக்க  ஆலயத்தை  நீ  எனக்குக்  கட்டுவாயோ?  (2சாமுவேல்  7:5)

nee  poay  en  thaasanaagiya  thaaveethai  noakki:  karththar  sollugi’rathu  ennaven’raal,  naan  vaasamaayirukkaththakka  aalayaththai  nee  enakkuk  kattuvaayoa?  (2saamuveal  7:5)

நான்  இஸ்ரவேல்  புத்திரரை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணின  நாள்முதற்கொண்டு  இந்நாள்வரைக்கும்,  நான்  ஒரு  ஆலயத்திலே  வாசம்பண்ணாமல்,  கூடாரத்திலும்  வாசஸ்தலத்திலும்  உலாவினேன்.  (2சாமுவேல்  7:6)

naan  israveal  puththirarai  egipthilirunthu  pu’rappadappa'n'nina  naa'lmutha’rko'ndu  innaa'lvaraikkum,  naan  oru  aalayaththilea  vaasampa'n'naamal,  koodaaraththilum  vaasasthalaththilum  ulaavinean.  (2saamuveal  7:6)

நான்  இஸ்ரவேலாகிய  என்  ஜனத்தை  மேய்க்கும்படி  கட்டளையிட்ட  இஸ்ரவேல்  கோத்திரங்களில்  ஒரு  கோத்திரத்தையாவது  நோக்கி:  நீங்கள்  எனக்குக்  கேதுருமரத்தால்  செய்யப்பட்ட  ஆலயத்தைக்  கட்டாதிருக்கிறது  என்ன  என்று  நான்  இஸ்ரவேல்  புத்திரருக்குள்  உலாவிவந்த  எவ்விடத்திலாவது  யாதொரு  வார்த்தையைச்  சொன்னதுண்டோ?  (2சாமுவேல்  7:7)

naan  isravealaagiya  en  janaththai  meaykkumpadi  katta'laiyitta  israveal  koaththirangga'lil  oru  koaththiraththaiyaavathu  noakki:  neengga'l  enakkuk  keathurumaraththaal  seyyappatta  aalayaththaik  kattaathirukki’rathu  enna  en’ru  naan  israveal  puththirarukku'l  ulaavivantha  evvidaththilaavathu  yaathoru  vaarththaiyaich  sonnathu'ndoa?  (2saamuveal  7:7)

இப்போதும்  நீ  என்  தாசனாகிய  தாவீதை  நோக்கி:  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நீ  இஸ்ரவேல்  என்கிற  என்  ஜனங்களுக்கு  அதிபதியாயிருக்கும்படி,  ஆடுகளின்  பின்னே  நடந்த  உன்னை  நான்  ஆட்டுமந்தையை  விட்டு  எடுத்து,  (2சாமுவேல்  7:8)

ippoathum  nee  en  thaasanaagiya  thaaveethai  noakki:  seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal,  nee  israveal  engi’ra  en  janangga'lukku  athibathiyaayirukkumpadi,  aaduga'lin  pinnea  nadantha  unnai  naan  aattumanthaiyai  vittu  eduththu,  (2saamuveal  7:8)

நீ  போன  எவ்விடத்திலும்  உன்னோடே  இருந்து,  உன்  சத்துருக்களையெல்லாம்  உனக்கு  முன்பாக  நிர்மூலமாக்கி,  பூமியிலிருக்கிற  பெரியோர்களின்  நாமத்திற்கு  ஒத்த  பெரிய  நாமத்தை  உனக்கு  உண்டாக்கினேன்.  (2சாமுவேல்  7:9)

nee  poana  evvidaththilum  unnoadea  irunthu,  un  saththurukka'laiyellaam  unakku  munbaaga  nirmoolamaakki,  boomiyilirukki’ra  periyoarga'lin  naamaththi’rku  oththa  periya  naamaththai  unakku  u'ndaakkinean.  (2saamuveal  7:9)

நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  ஒரு  இடத்தை  ஏற்படுத்தி,  அவர்கள்  தங்கள்  ஸ்தானத்திலே  குடியிருக்கவும்,  இனி  அவர்கள்  அலையாமலும்,  முன்போலும்,  நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்  நியாயாதிபதிகளைக்  கட்டளையிட்ட  நாள்வரையில்  நடந்ததுபோலும்,  நியாயக்கேட்டின்  மக்களால்  இனிச்  சிறுமைப்படாமலும்  இருக்கும்படி  அவர்களை  நாட்டினேன்.  (2சாமுவேல்  7:10)

naan  en  janamaagiya  isravealukku  oru  idaththai  ea’rpaduththi,  avarga'l  thangga'l  sthaanaththilea  kudiyirukkavum,  ini  avarga'l  alaiyaamalum,  munpoalum,  naan  en  janamaagiya  isravealinmeal  niyaayaathibathiga'laik  katta'laiyitta  naa'lvaraiyil  nadanthathupoalum,  niyaayakkeattin  makka'laal  inich  si’rumaippadaamalum  irukkumpadi  avarga'lai  naattinean.  (2saamuveal  7:10)

உன்னுடைய  எல்லாச்  சத்துருக்களுக்கும்  உன்னை  நீங்கலாக்கி,  இளைப்பாறவும்  பண்ணினேன்;  இப்போதும்  கர்த்தர்  உனக்கு  வீட்டை  உண்டுபண்ணுவார்  என்பதைக்  கர்த்தர்  உனக்கு  அறிவிக்கிறார்.  (2சாமுவேல்  7:11)

unnudaiya  ellaach  saththurukka'lukkum  unnai  neenggalaakki,  i'laippaa’ravum  pa'n'ninean;  ippoathum  karththar  unakku  veettai  u'ndupa'n'nuvaar  enbathaik  karththar  unakku  a’rivikki’raar.  (2saamuveal  7:11)

உன்  நாட்கள்  நிறைவேறி,  நீ  உன்  பிதாக்களோடே  நித்திரைபண்ணும்போது,  நான்  உனக்குப்பின்பு  உன்  கர்ப்பப்பிறப்பாகிய  உன்  சந்ததியை  எழும்பப்பண்ணி,  அவன்  ராஜ்யத்தை  நிலைப்படுத்துவேன்.  (2சாமுவேல்  7:12)

un  naadka'l  ni’raivea’ri,  nee  un  pithaakka'loadea  niththiraipa'n'numpoathu,  naan  unakkuppinbu  un  karppappi’rappaagiya  un  santhathiyai  ezhumbappa'n'ni,  avan  raajyaththai  nilaippaduththuvean.  (2saamuveal  7:12)

அவன்  என்  நாமத்திற்கென்று  ஒரு  ஆலயத்தைக்  கட்டுவான்;  அவன்  ராஜ்யபாரத்தின்  சிங்காசனத்தை  என்றைக்கும்  நிலைக்கப்பண்ணுவேன்.  (2சாமுவேல்  7:13)

avan  en  naamaththi’rken’ru  oru  aalayaththaik  kattuvaan;  avan  raajyabaaraththin  singgaasanaththai  en’raikkum  nilaikkappa'n'nuvean.  (2saamuveal  7:13)

நான்  அவனுக்குப்  பிதாவாயிருப்பேன்,  அவன்  எனக்குக்  குமாரனாயிருப்பான்;  அவன்  அக்கிரமம்  செய்தால்,  நான்  அவனை  மனுஷருடைய  மிலாற்றினாலும்  மனுபுத்திரருடைய  அடிகளினாலும்  தண்டிப்பேன்.  (2சாமுவேல்  7:14)

naan  avanukkup  pithaavaayiruppean,  avan  enakkuk  kumaaranaayiruppaan;  avan  akkiramam  seythaal,  naan  avanai  manusharudaiya  milaat’rinaalum  manupuththirarudaiya  adiga'linaalum  tha'ndippean.  (2saamuveal  7:14)

உனக்கு  முன்பாக  நான்  தள்ளிவிட்ட  சவுலிடத்திலிருந்து  என்  கிருபையை  விலக்கினதுபோல  அவனைவிட்டு  விலக்கமாட்டேன்.  (2சாமுவேல்  7:15)

unakku  munbaaga  naan  tha'l'livitta  savulidaththilirunthu  en  kirubaiyai  vilakkinathupoala  avanaivittu  vilakkamaattean.  (2saamuveal  7:15)

உன்  வீடும்,  உன்  ராஜ்யமும்,  என்றென்றைக்கும்  உனக்கு  முன்பாக  ஸ்திரப்பட்டிருக்கும்;  உன்  ராஜாசனம்  என்றென்றைக்கும்  நிலைபெற்றிருக்கும்  என்கிறார்  என்று  சொல்லச்சொன்னார்.  (2சாமுவேல்  7:16)

un  veedum,  un  raajyamum,  en’ren’raikkum  unakku  munbaaga  sthirappattirukkum;  un  raajaasanam  en’ren’raikkum  nilaipet’rirukkum  engi’raar  en’ru  sollachsonnaar.  (2saamuveal  7:16)

நாத்தான்  இந்த  எல்லா  வார்த்தைகளின்படியும்,  இந்த  எல்லாத்  தரிசனத்தின்படியும்,  தாவீதுக்குச்  சொன்னான்.  (2சாமுவேல்  7:17)

naaththaan  intha  ellaa  vaarththaiga'linpadiyum,  intha  ellaath  tharisanaththinpadiyum,  thaaveethukkuch  sonnaan.  (2saamuveal  7:17)

அப்பொழுது  தாவீதுராஜா  உட்பிரவேசித்து,  கர்த்தருடைய  சமுகத்திலிருந்து:  கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  என்னை  இதுவரைக்கும்  கொண்டுவந்ததற்கு,  நான்  எம்மாத்திரம்?  என்  வீடும்  எம்மாத்திரம்?  (2சாமுவேல்  7:18)

appozhuthu  thaaveethuraajaa  udpiraveasiththu,  karththarudaiya  samugaththilirunthu:  karththaraagiya  aa'ndavarea,  theavareer  ennai  ithuvaraikkum  ko'nduvanthatha’rku,  naan  emmaaththiram?  en  veedum  emmaaththiram?  (2saamuveal  7:18)

கர்த்தராகிய  ஆண்டவரே,  இது  இன்னும்  உம்முடைய  பார்வைக்குக்  கொஞ்ச  காரியமாயிருக்கிறது  என்று  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  தேவரீர்  உம்முடைய  அடியானுடைய  வீட்டைக்குறித்து,  வெகுதூரமாயிருக்கும்  காலத்துச்செய்தியை  மனுஷர்  முறைமையாய்ச்  சொன்னீரே.  (2சாமுவேல்  7:19)

karththaraagiya  aa'ndavarea,  ithu  innum  ummudaiya  paarvaikkuk  kogncha  kaariyamaayirukki’rathu  en’ru  karththaraagiya  aa'ndavaraayirukki’ra  theavareer  ummudaiya  adiyaanudaiya  veettaikku’riththu,  veguthooramaayirukkum  kaalaththuchseythiyai  manushar  mu’raimaiyaaych  sonneerea.  (2saamuveal  7:19)

இனி  தாவீது  உம்மிடத்தில்  சொல்லவேண்டியது  என்ன?  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நீர்  உமது  அடியானை  அறிவீர்.  (2சாமுவேல்  7:20)

ini  thaaveethu  ummidaththil  sollavea'ndiyathu  enna?  karththaraagiya  aa'ndavaraayirukki’ra  neer  umathu  adiyaanai  a’riveer.  (2saamuveal  7:20)

உம்முடைய  வாக்குத்தத்தத்தினிமித்தமும்,  உம்முடைய  சித்தத்தின்படியேயும்,  இந்தப்  பெரிய  காரியங்களையெல்லாம்  உமது  அடியானுக்கு  அறிவிக்கும்படிக்குத்  தயவு  செய்தீர்.  (2சாமுவேல்  7:21)

ummudaiya  vaakkuththaththaththinimiththamum,  ummudaiya  siththaththinpadiyeayum,  inthap  periya  kaariyangga'laiyellaam  umathu  adiyaanukku  a’rivikkumpadikkuth  thayavu  seytheer.  (2saamuveal  7:21)

ஆகையால்  தேவனாகிய  கர்த்தரே,  நீர்  பெரியவர்  என்று  விளங்குகிறது;  நாங்கள்  எங்கள்  காதுகளாலே  கேட்ட  சகல  காரியங்களின்படியும்,  தேவரீருக்கு  நிகரானவர்  இல்லை;  உம்மைத்தவிர  வேறே  தேவனும்  இல்லை.  (2சாமுவேல்  7:22)

aagaiyaal  theavanaagiya  karththarea,  neer  periyavar  en’ru  vi'langgugi’rathu;  naangga'l  engga'l  kaathuga'laalea  keatta  sagala  kaariyangga'linpadiyum,  theavareerukku  nigaraanavar  illai;  ummaiththavira  vea’rea  theavanum  illai.  (2saamuveal  7:22)

உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  நிகரான  ஜனமும்  உண்டோ?  பூலோகத்து  ஜாதிகளில்  இந்த  ஒரே  ஜாதியைத்  தேவன்  தமக்கு  ஜனமாக  மீட்கிறதற்கும்,  தமக்குக்  கீர்த்தி  விளங்கப்பண்ணுகிறதற்கும்  ஏற்பட்டாரே;  தேவரீர்  எகிப்திலிருந்து  மீட்டுக்கொண்டுவந்த  உம்முடைய  ஜனத்திற்குமுன்பாகப்  பயங்கரமான  பெரிய  காரியங்களை  நடத்தி,  உம்முடைய  தேசத்திற்கும்,  அதிலிருந்த  ஜாதிகளுக்கும்,  அவர்கள்  தேவர்களுக்கும்,  உமது  மகிமையை  விளங்கச்செய்து,  (2சாமுவேல்  7:23)

ummudaiya  janamaagiya  isravealukku  nigaraana  janamum  u'ndoa?  booloagaththu  jaathiga'lil  intha  orea  jaathiyaith  theavan  thamakku  janamaaga  meedki’ratha’rkum,  thamakkuk  keerththi  vi'langgappa'n'nugi’ratha’rkum  ea’rpattaarea;  theavareer  egipthilirunthu  meettukko'nduvantha  ummudaiya  janaththi’rkumunbaagap  bayanggaramaana  periya  kaariyangga'lai  nadaththi,  ummudaiya  theasaththi’rkum,  athiliruntha  jaathiga'lukkum,  avarga'l  theavarga'lukkum,  umathu  magimaiyai  vi'langgachseythu,  (2saamuveal  7:23)

உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலர்  என்றைக்கும்  உம்முடைய  ஜனமாயிருப்பதற்கு,  அவர்களைத்  திடப்படுத்தி,  கர்த்தராகிய  நீர்தாமே  அவர்களுக்குத்  தேவனானீர்.  (2சாமுவேல்  7:24)

ummudaiya  janamaagiya  isravealar  en’raikkum  ummudaiya  janamaayiruppatha’rku,  avarga'laith  thidappaduththi,  karththaraagiya  neerthaamea  avarga'lukkuth  theavanaaneer.  (2saamuveal  7:24)

இப்போதும்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  உமது  அடியானையும்  அவன்  வீட்டையும்  குறித்துச்  சொன்ன  வார்த்தையை  என்றென்றைக்கும்  நிலைவரப்படுத்த,  தேவரீர்  சொன்னபடியே  செய்தருளும்.  (2சாமுவேல்  7:25)

ippoathum  theavanaagiya  karththaavea,  neer  umathu  adiyaanaiyum  avan  veettaiyum  ku’riththuch  sonna  vaarththaiyai  en’ren’raikkum  nilaivarappaduththa,  theavareer  sonnapadiyea  seytharu'lum.  (2saamuveal  7:25)

அப்படியே  சேனைகளின்  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்  தேவனானவர்  என்று  சொல்லி,  உம்முடைய  நாமம்  என்றென்றைக்கும்  மகிமைப்படுவதாக;  உமது  அடியானாகிய  தாவீதின்  வீடு  உமக்கு  முன்பாக  நிலைநிற்பதாக.  (2சாமுவேல்  7:26)

appadiyea  seanaiga'lin  karththar  isravealinmeal  theavanaanavar  en’ru  solli,  ummudaiya  naamam  en’ren’raikkum  magimaippaduvathaaga;  umathu  adiyaanaagiya  thaaveethin  veedu  umakku  munbaaga  nilaini’rpathaaga.  (2saamuveal  7:26)

உனக்கு  வீடுகட்டுவேன்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தராயிருக்கிற  நீர்  உமது  அடியானின்  செவிக்கு  வெளிப்படுத்தினீர்:  ஆகையால்  உம்மை  நோக்கி  இந்த  விண்ணப்பத்தைச்  செய்ய  உமது  அடியானுக்கு  மனத்தைரியம்  கிடைத்தது.  (2சாமுவேல்  7:27)

unakku  veedukattuvean  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththaraayirukki’ra  neer  umathu  adiyaanin  sevikku  ve'lippaduththineer:  aagaiyaal  ummai  noakki  intha  vi'n'nappaththaich  seyya  umathu  adiyaanukku  manaththairiyam  kidaiththathu.  (2saamuveal  7:27)

இப்போதும்  கர்த்தராகிய  ஆண்டவரே,  நீரே  தேவன்;  உம்முடைய  வார்த்தைகள்  சத்தியம்;  தேவரீர்  உமது  அடியானுக்கு  இந்த  நல்விசேஷங்களை  வாக்குத்தத்தம்பண்ணினீர்.  (2சாமுவேல்  7:28)

ippoathum  karththaraagiya  aa'ndavarea,  neerea  theavan;  ummudaiya  vaarththaiga'l  saththiyam;  theavareer  umathu  adiyaanukku  intha  nalviseashangga'lai  vaakkuththaththampa'n'nineer.  (2saamuveal  7:28)

இப்போதும்  உமது  அடியானின்  வீடு  என்றைக்கும்  உமக்கு  முன்பாக  இருக்கும்படி  அதை  ஆசீர்வதித்தருளும்;  கர்த்தரான  ஆண்டவராகிய  தேவரீர்  அதைச்  சொன்னீர்,  உம்முடைய  ஆசீர்வாதத்தினாலே  உமது  அடியானின்  வீடு  என்றைக்கும்  ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக  என்றான்.  (2சாமுவேல்  7:29)

ippoathum  umathu  adiyaanin  veedu  en’raikkum  umakku  munbaaga  irukkumpadi  athai  aaseervathiththaru'lum;  karththaraana  aa'ndavaraagiya  theavareer  athaich  sonneer,  ummudaiya  aaseervaathaththinaalea  umathu  adiyaanin  veedu  en’raikkum  aaseervathikkappattiruppathaaga  en’raan.  (2saamuveal  7:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!