Friday, August 26, 2016

2 Saamuveal 6 | 2 சாமுவேல் 6 | 2 Samuel 6

பின்பு  தாவீது  இஸ்ரவேலர்  எல்லாருக்குள்ளும்  தெரிந்துகொள்ளப்பட்ட  முப்பதினாயிரம்பேரைக்  கூட்டி,  (2சாமுவேல்  6:1)

pinbu  thaaveethu  isravealar  ellaarukku'l'lum  therinthuko'l'lappatta  muppathinaayirampearaik  kootti,  (2saamuveal  6:1)

கேருபீன்களின்  நடுவே  வாசமாயிருக்கிற  சேனைகளுடைய  கர்த்தரின்  நாமம்  தொழுதுகொள்ளப்படுகிற  தேவனுடைய  பெட்டியைப்  பாலையூதாவிலிருந்து  கொண்டுவரும்படி,  அவனும்  அவனோடிருந்த  அந்த  ஸ்தலத்தாரும்  எழுந்துபோய்,  (2சாமுவேல்  6:2)

kearubeenga'lin  naduvea  vaasamaayirukki’ra  seanaiga'ludaiya  karththarin  naamam  thozhuthuko'l'lappadugi’ra  theavanudaiya  pettiyaip  baalaiyoothaavilirunthu  ko'nduvarumpadi,  avanum  avanoadiruntha  antha  sthalaththaarum  ezhunthupoay,  (2saamuveal  6:2)

தேவனுடைய  பெட்டியை  ஒரு  புது  இரதத்தின்மேல்  ஏற்றி,  அதைக்  கிபியாவிலிருக்கிற  அபினதாபின்  வீட்டிலிருந்து  கொண்டுவந்தார்கள்;  அபினதாபின்  குமாரராகிய  ஊசாவும்  அகியோவும்  அந்தப்  புது  இரதத்தை  நடத்தினார்கள்.  (2சாமுவேல்  6:3)

theavanudaiya  pettiyai  oru  puthu  irathaththinmeal  eat’ri,  athaik  kibiyaavilirukki’ra  abinathaabin  veettilirunthu  ko'nduvanthaarga'l;  abinathaabin  kumaararaagiya  oosaavum  agiyoavum  anthap  puthu  irathaththai  nadaththinaarga'l.  (2saamuveal  6:3)

அவர்கள்  தேவனுடைய  பெட்டியை  ஏற்றி,  அதைக்  கிபியாவிலிருக்கிற  அபினதாபின்  வீட்டிலிருந்து  நடத்திக்கொண்டு  வருகிறபோது,  அகியோ  பெட்டிக்கு  முன்னாலே  நடந்தான்.  (2சாமுவேல்  6:4)

avarga'l  theavanudaiya  pettiyai  eat’ri,  athaik  kibiyaavilirukki’ra  abinathaabin  veettilirunthu  nadaththikko'ndu  varugi’rapoathu,  agiyoa  pettikku  munnaalea  nadanthaan.  (2saamuveal  6:4)

தாவீதும்  இஸ்ரவேல்  சந்ததியார்  அனைவரும்  தேவதாரு  மரத்தால்  பண்ணப்பட்ட  சகலவித  கீதவாத்தியங்களோடும்,  சுரமண்டலம்  தம்புரு  மேளம்  வீணை  கைத்தாளம்  ஆகிய  இவைகளோடும்,  கர்த்தருக்கு  முன்பாக  ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.  (2சாமுவேல்  6:5)

thaaveethum  israveal  santhathiyaar  anaivarum  theavathaaru  maraththaal  pa'n'nappatta  sagalavitha  keethavaaththiyangga'loadum,  surama'ndalam  thamburu  mea'lam  vee'nai  kaiththaa'lam  aagiya  ivaiga'loadum,  karththarukku  munbaaga  aadippaadikko'ndupoanaarga'l.  (2saamuveal  6:5)

அவர்கள்  நாகோனின்  களம்  இருக்கிற  இடத்துக்கு  வந்தபோது,  மாடுகள்  மிரண்டு  பெட்டியை  அசைத்தபடியினால்,  ஊசா  தேவனுடைய  பெட்டியினிடமாய்த்  தன்  கையை  நீட்டி,  அதைப்  பிடித்தான்.  (2சாமுவேல்  6:6)

avarga'l  naakoanin  ka'lam  irukki’ra  idaththukku  vanthapoathu,  maaduga'l  mira'ndu  pettiyai  asaiththapadiyinaal,  oosaa  theavanudaiya  pettiyinidamaayth  than  kaiyai  neetti,  athaip  pidiththaan.  (2saamuveal  6:6)

அப்பொழுது  கர்த்தருக்கு  ஊசாவின்மேல்  கோபம்  மூண்டது;  அவனுடைய  துணிவினிமித்தம்  தேவன்  அங்கே  அவனை  அடித்தார்;  அவன்  அங்கே  தேவனுடைய  பெட்டியண்டையில்  செத்தான்.  (2சாமுவேல்  6:7)

appozhuthu  karththarukku  oosaavinmeal  koabam  moo'ndathu;  avanudaiya  thu'nivinimiththam  theavan  anggea  avanai  adiththaar;  avan  anggea  theavanudaiya  pettiya'ndaiyil  seththaan.  (2saamuveal  6:7)

அப்பொழுது  கர்த்தர்  ஊசாவை  அடித்ததினிமித்தம்  தாவீது  விசனப்பட்டு,  அந்த  ஸ்தலத்திற்கு  இந்நாள்மட்டும்  வழங்கிவருகிற  பேரேஸ்ஊசா  என்னும்  பேரிட்டான்.  (2சாமுவேல்  6:8)

appozhuthu  karththar  oosaavai  adiththathinimiththam  thaaveethu  visanappattu,  antha  sthalaththi’rku  innaa'lmattum  vazhanggivarugi’ra  peareasoosaa  ennum  pearittaan.  (2saamuveal  6:8)

தாவீது  அன்றையதினம்  கர்த்தருக்குப்  பயந்து,  கர்த்தருடைய  பெட்டி  என்னிடத்தில்  வருவது  எப்படியென்று  சொல்லி,  (2சாமுவேல்  6:9)

thaaveethu  an’raiyathinam  karththarukkup  bayanthu,  karththarudaiya  petti  ennidaththil  varuvathu  eppadiyen’ru  solli,  (2saamuveal  6:9)

அதைத்  தன்னிடத்தில்  தாவீதின்  நகரத்தில்  கொண்டுவர  மனதில்லாமல்,  கித்தியனாகிய  ஓபேத்ஏதோமின்  வீட்டிலே  கொண்டுபோய்  வைத்தான்.  (2சாமுவேல்  6:10)

athaith  thannidaththil  thaaveethin  nagaraththil  ko'nduvara  manathillaamal,  kiththiyanaagiya  oabeatheathoamin  veettilea  ko'ndupoay  vaiththaan.  (2saamuveal  6:10)

கர்த்தருடைய  பெட்டி  கித்தியனாகிய  ஓபேத்ஏதோமின்  வீட்டிலே  மூன்றுமாதம்  இருக்கையில்  கர்த்தர்  ஓபேத்ஏதோமையும்  அவன்  வீட்டார்  அனைவரையும்  ஆசீர்வதித்தார்.  (2சாமுவேல்  6:11)

karththarudaiya  petti  kiththiyanaagiya  oabeatheathoamin  veettilea  moon’rumaatham  irukkaiyil  karththar  oabeatheathoamaiyum  avan  veettaar  anaivaraiyum  aaseervathiththaar.  (2saamuveal  6:11)

தேவனுடைய  பெட்டியினிமித்தம்  கர்த்தர்  ஓபேத்ஏதோமின்  வீட்டையும்,  அவனுக்கு  உண்டான  எல்லாவற்றையும்  ஆசீர்வதித்தார்  என்று  தாவீதுராஜாவுக்கு  அறிவிக்கப்பட்டது;  அப்பொழுது  தாவீது  தேவனுடைய  பெட்டியை  ஓபேத்ஏதோமின்  வீட்டிலிருந்து  தாவீதின்  நகரத்துக்கு  மகிழ்ச்சியுடனே  கொண்டுவந்தான்.  (2சாமுவேல்  6:12)

theavanudaiya  pettiyinimiththam  karththar  oabeatheathoamin  veettaiyum,  avanukku  u'ndaana  ellaavat’raiyum  aaseervathiththaar  en’ru  thaaveethuraajaavukku  a’rivikkappattathu;  appozhuthu  thaaveethu  theavanudaiya  pettiyai  oabeatheathoamin  veettilirunthu  thaaveethin  nagaraththukku  magizhchchiyudanea  ko'nduvanthaan.  (2saamuveal  6:12)

கர்த்தருடைய  பெட்டியைச்  சுமந்துபோகிறவர்கள்  ஆறு  தப்படி  நடந்தபோது,  மாடுகளையும்  கொழுத்த  ஆட்டுக்கடாக்களையும்  பலியிட்டான்.  (2சாமுவேல்  6:13)

karththarudaiya  pettiyaich  sumanthupoagi’ravarga'l  aa’ru  thappadi  nadanthapoathu,  maaduga'laiyum  kozhuththa  aattukkadaakka'laiyum  baliyittaan.  (2saamuveal  6:13)

தாவீது  சணல்நூல்  ஏபோத்தைத்  தரித்துக்கொண்டு,  தன்  முழுப்  பலத்தோடும்  கர்த்தருக்கு  முன்பாக  நடனம்பண்ணினான்.  (2சாமுவேல்  6:14)

thaaveethu  sa'nalnool  eaboaththaith  thariththukko'ndu,  than  muzhup  balaththoadum  karththarukku  munbaaga  nadanampa'n'ninaan.  (2saamuveal  6:14)

அப்படியே  தாவீதும்,  இஸ்ரவேல்  சந்ததியார்  அனைவரும்  கர்த்தருடைய  பெட்டியைக்  கெம்பீர  சத்தத்தோடும்  எக்காள  தொனியோடும்  கொண்டுவந்தார்கள்.  (2சாமுவேல்  6:15)

appadiyea  thaaveethum,  israveal  santhathiyaar  anaivarum  karththarudaiya  pettiyaik  kembeera  saththaththoadum  ekkaa'la  thoniyoadum  ko'nduvanthaarga'l.  (2saamuveal  6:15)

கர்த்தருடைய  பெட்டி  தாவீதின்  நகரத்திற்குள்  பிரவேசிக்கிறபோது,  சவுலின்  குமாரத்தியாகிய  மீகாள்  பலகணிவழியாய்ப்  பார்த்து,  தாவீதுராஜா  கர்த்தருக்கு  முன்பாகக்  குதித்து,  நடனம்பண்ணுகிறதைக்  கண்டு,  தன்  இருதயத்திலே  அவனை  அவமதித்தாள்.  (2சாமுவேல்  6:16)

karththarudaiya  petti  thaaveethin  nagaraththi’rku'l  piraveasikki’rapoathu,  savulin  kumaaraththiyaagiya  meekaa'l  palaga'nivazhiyaayp  paarththu,  thaaveethuraajaa  karththarukku  munbaagak  kuthiththu,  nadanampa'n'nugi’rathaik  ka'ndu,  than  iruthayaththilea  avanai  avamathiththaa'l.  (2saamuveal  6:16)

அவர்கள்  கர்த்தருடைய  பெட்டியை  உள்ளே  கொண்டுவந்து,  அதற்குத்  தாவீது  போட்ட  கூடாரத்திற்குள்  இருக்கிற  அதின்  ஸ்தானத்திலே  அதை  வைத்தபோது,  தாவீது  கர்த்தருடைய  சந்நிதியிலே  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  இட்டான்.  (2சாமுவேல்  6:17)

avarga'l  karththarudaiya  pettiyai  u'l'lea  ko'nduvanthu,  atha’rkuth  thaaveethu  poatta  koodaaraththi’rku'l  irukki’ra  athin  sthaanaththilea  athai  vaiththapoathu,  thaaveethu  karththarudaiya  sannithiyilea  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'laiyum  ittaan.  (2saamuveal  6:17)

தாவீது  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  இட்டபின்பு,  சேனைகளின்  கர்த்தருடைய  நாமத்தினாலே  ஜனங்களை  ஆசீர்வதித்து,  (2சாமுவேல்  6:18)

thaaveethu  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'laiyum  ittapinbu,  seanaiga'lin  karththarudaiya  naamaththinaalea  janangga'lai  aaseervathiththu,  (2saamuveal  6:18)

இஸ்ரவேலின்  திரள்கூட்டமான  ஸ்திரீ  புருஷராகிய  சகல  ஜனங்களுக்கும்,  அவரவருக்கு  ஒவ்வொரு  அப்பத்தையும்,  ஒவ்வொரு  இறைச்சித்துண்டையும்,  ஒவ்வொரு  படி  திராட்சரசத்தையும்  பங்கிட்டான்;  பிற்பாடு  ஜனங்கள்  எல்லாரும்  அவரவர்  தங்கள்  வீட்டிற்குப்  போய்விட்டார்கள்.  (2சாமுவேல்  6:19)

isravealin  thira'lkoottamaana  sthiree  purusharaagiya  sagala  janangga'lukkum,  avaravarukku  ovvoru  appaththaiyum,  ovvoru  i’raichchiththu'ndaiyum,  ovvoru  padi  thiraadcharasaththaiyum  panggittaan;  pi’rpaadu  janangga'l  ellaarum  avaravar  thangga'l  veetti’rkup  poayvittaarga'l.  (2saamuveal  6:19)

தாவீது  தன்  வீட்டாரை  ஆசீர்வதிக்கிறதற்குத்  திரும்பும்போது,  சவுலின்  குமாரத்தியாகிய  மீகாள்  தாவீதுக்கு  எதிர்கொண்டுவந்து,  அற்பமனுஷரில்  ஒருவன்  தன்  வஸ்திரங்களைக்  கழற்றிப்போடுகிறதுபோல,  இன்று  தம்முடைய  ஊழியக்காரருடைய  பெண்களின்  கண்களுக்கு  முன்பாகத்  தம்முடைய  வஸ்திரங்களை  உரிந்துபோட்டிருந்த  இஸ்ரவேலின்  ராஜா  இன்று  எத்தனை  மகிமைப்பட்டிருந்தார்  என்றாள்.  (2சாமுவேல்  6:20)

thaaveethu  than  veettaarai  aaseervathikki’ratha’rkuth  thirumbumpoathu,  savulin  kumaaraththiyaagiya  meekaa'l  thaaveethukku  ethirko'nduvanthu,  a’rpamanusharil  oruvan  than  vasthirangga'laik  kazhat’rippoadugi’rathupoala,  in’ru  thammudaiya  oozhiyakkaararudaiya  pe'nga'lin  ka'nga'lukku  munbaagath  thammudaiya  vasthirangga'lai  urinthupoattiruntha  isravealin  raajaa  in’ru  eththanai  magimaippattirunthaar  en’raa'l.  (2saamuveal  6:20)

அதற்குத்  தாவீது  மீகாளைப்  பார்த்து:  உன்  தகப்பனைப்பார்க்கிலும்,  அவருடைய  எல்லா  வீட்டாரைப்பார்க்கிலும்,  என்னை  இஸ்ரவேலாகிய  கர்த்தருடைய  ஜனத்தின்மேல்  தலைவனாகக்  கட்டளையிடும்படிக்குத்  தெரிந்துகொண்ட  கர்த்தருடைய  சமுகத்திற்கு  முன்பாக  ஆடிப்பாடினேன்.  (2சாமுவேல்  6:21)

atha’rkuth  thaaveethu  meekaa'laip  paarththu:  un  thagappanaippaarkkilum,  avarudaiya  ellaa  veettaaraippaarkkilum,  ennai  isravealaagiya  karththarudaiya  janaththinmeal  thalaivanaagak  katta'laiyidumpadikkuth  therinthuko'nda  karththarudaiya  samugaththi’rku  munbaaga  aadippaadinean.  (2saamuveal  6:21)

இதைப்பார்க்கிலும்  இன்னும்  நான்  நீசனும்  என்  பார்வைக்கு  அற்பனுமாவேன்:  அப்படியே  நீ  சொன்ன  பெண்களுக்குங்கூட  மகிமையாய்  விளங்குவேன்  என்றான்.  (2சாமுவேல்  6:22)

ithaippaarkkilum  innum  naan  neesanum  en  paarvaikku  a’rpanumaavean:  appadiyea  nee  sonna  pe'nga'lukkungkooda  magimaiyaay  vi'langguvean  en’raan.  (2saamuveal  6:22)

அதினால்  சவுலின்  குமாரத்தியாகிய  மீகாளுக்கு  மரணமடையும்  நாள்மட்டும்  பிள்ளை  இல்லாதிருந்தது.  (2சாமுவேல்  6:23)

athinaal  savulin  kumaaraththiyaagiya  meekaa'lukku  mara'namadaiyum  naa'lmattum  pi'l'lai  illaathirunthathu.  (2saamuveal  6:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!