Friday, August 26, 2016

2 Saamuveal 4 | 2 சாமுவேல் 4 | 2 Samuel 4

அப்னேர்  எப்ரோனிலே  செத்துப்போனதைச்  சவுலின்  குமாரன்  கேட்டபோது,  அவன்  கைகள்  திடனற்றுப்போயிற்று;  இஸ்ரவேலரெல்லாரும்  கலங்கினார்கள்.  (2சாமுவேல்  4:1)

abnear  ebroanilea  seththuppoanathaich  savulin  kumaaran  keattapoathu,  avan  kaiga'l  thidanat’ruppoayit’ru;  isravealarellaarum  kalangginaarga'l.  (2saamuveal  4:1)

சவுலின்  குமாரனுக்குப்  படைத்தலைவரான  இரண்டுபேர்  இருந்தார்கள்;  ஒருவனுக்குப்  பேர்  பானா,  மற்றவனுக்குப்  பேர்  ரேகாப்;  அவர்கள்  பென்யமீன்  புத்திரரில்  பேரோத்தியனாகிய  ரிம்மோனின்  குமாரர்கள்.  பேரோத்தும்  பென்யமீனுக்கு  அடுத்ததாய்  எண்ணப்பட்டது.  (2சாமுவேல்  4:2)

savulin  kumaaranukkup  padaiththalaivaraana  ira'ndupear  irunthaarga'l;  oruvanukkup  pear  baanaa,  mat’ravanukkup  pear  reakaab;  avarga'l  benyameen  puththiraril  bearoaththiyanaagiya  rimmoanin  kumaararga'l.  bearoaththum  benyameenukku  aduththathaay  e'n'nappattathu.  (2saamuveal  4:2)

பேரோத்தியர்  கித்தாயீமுக்கு  ஓடிப்போய்,  இந்நாள்வரைக்கும்  அங்கே  சஞ்சரிக்கிறார்கள்.  (2சாமுவேல்  4:3)

bearoaththiyar  kiththaayeemukku  oadippoay,  innaa'lvaraikkum  anggea  sagncharikki’raarga'l.  (2saamuveal  4:3)

சவுலின்  குமாரன்  யோனத்தானுக்கு  இரண்டு  காலும்  முடமான  ஒரு  குமாரன்  இருந்தான்;  சவுலும்  யோனத்தானும்  மடிந்த  செய்தி  யெஸ்ரயேலிலிருந்து  வருகிறபோது,  அவன்  ஐந்து  வயதுள்ளவனாயிருந்தான்;  அப்பொழுது  அவனுடைய  தாதி  அவனை  எடுத்துக்கொண்டு  ஓடிப்போனாள்;  அவள்  ஓடிப்போகிற  அவசரத்தில்  அவன்  விழுந்து  முடவனானான்;  அவனுக்கு  மேவிபோசேத்  என்று  பேர்.  (2சாமுவேல்  4:4)

savulin  kumaaran  yoanaththaanukku  ira'ndu  kaalum  mudamaana  oru  kumaaran  irunthaan;  savulum  yoanaththaanum  madintha  seythi  yesrayealilirunthu  varugi’rapoathu,  avan  ainthu  vayathu'l'lavanaayirunthaan;  appozhuthu  avanudaiya  thaathi  avanai  eduththukko'ndu  oadippoanaa'l;  ava'l  oadippoagi’ra  avasaraththil  avan  vizhunthu  mudavanaanaan;  avanukku  meaviboaseath  en’ru  pear.  (2saamuveal  4:4)

பேரோத்தியனான  அந்த  ரிம்மோனின்  குமாரராகிய  ரேகாபும்  பானாவும்  போய்,  இஸ்போசேத்  மத்தியானத்திலே  வெயில்  நேரத்தில்  படுக்கையின்மேல்  சயனித்திருக்கும்போது  அவன்  வீட்டிற்குள்  பிரவேசித்து,  (2சாமுவேல்  4:5)

bearoaththiyanaana  antha  rimmoanin  kumaararaagiya  reakaabum  baanaavum  poay,  isboaseath  maththiyaanaththilea  veyil  nearaththil  padukkaiyinmeal  sayaniththirukkumpoathu  avan  veetti’rku'l  piraveasiththu,  (2saamuveal  4:5)

கோதுமை  வாங்க  வருகிறவர்கள்போல,  நடுவீடுமட்டும்  வந்து,  அவனை  வயிற்றிலே  குத்திப்போட்டார்கள்;  பின்பு  ரேகாபும்  அவன்  சகோதரன்  பானாவும்  தப்பி  ஓடிப்போனார்கள்.  (2சாமுவேல்  4:6)

koathumai  vaangga  varugi’ravarga'lpoala,  naduveedumattum  vanthu,  avanai  vayit’rilea  kuththippoattaarga'l;  pinbu  reakaabum  avan  sagoatharan  baanaavum  thappi  oadippoanaarga'l.  (2saamuveal  4:6)

அவன்  தன்  பள்ளி  அறையிலே  தன்  கட்டிலின்மேல்  படுத்திருக்கும்போது  இவர்கள்  உள்ளே  போய்,  அவனைக்  குத்திக்கொன்றுபோட்டு,  அவன்  தலையை  வெட்டிப்போட்டார்கள்;  பின்பு  அவன்  தலையை  எடுத்துக்கொண்டு,  இராமுழுதும்  அந்தரவெளி  வழியாய்  நடந்து,  (2சாமுவேல்  4:7)

avan  than  pa'l'li  a’raiyilea  than  kattilinmeal  paduththirukkumpoathu  ivarga'l  u'l'lea  poay,  avanaik  kuththikkon’rupoattu,  avan  thalaiyai  vettippoattaarga'l;  pinbu  avan  thalaiyai  eduththukko'ndu,  iraamuzhuthum  antharave'li  vazhiyaay  nadanthu,  (2saamuveal  4:7)

எப்ரோனிலிருக்கிற  தாவீதினிடத்தில்  இஸ்போசேத்தின்  தலையைக்  கொண்டுவந்து,  ராஜாவை  நோக்கி:  இதோ,  உம்முடைய  பிராணனை  வாங்கத்தேடின  உம்முடைய  சத்துருவாயிருந்த  சவுலின்  குமாரனாகிய  இஸ்போசேத்தின்  தலை;  இன்றையதினம்  கர்த்தர்  ராஜாவாகிய  எங்கள்  ஆண்டவனுக்காகச்  சவுலின்  கையிலும்  அவன்  குடும்பத்தாரின்  கையிலும்  பழி  வாங்கினார்  என்றார்கள்.  (2சாமுவேல்  4:8)

ebroanilirukki’ra  thaaveethinidaththil  isboaseaththin  thalaiyaik  ko'nduvanthu,  raajaavai  noakki:  ithoa,  ummudaiya  piraa'nanai  vaanggaththeadina  ummudaiya  saththuruvaayiruntha  savulin  kumaaranaagiya  isboaseaththin  thalai;  in’raiyathinam  karththar  raajaavaagiya  engga'l  aa'ndavanukkaagach  savulin  kaiyilum  avan  kudumbaththaarin  kaiyilum  pazhi  vaangginaar  en’raarga'l.  (2saamuveal  4:8)

ஆனாலும்  தாவீது  பேரோத்தியனான  ரிம்மோனின்  குமாரராகிய  ரேகாபுக்கும்,  அவன்  சகோதரன்  பானாவுக்கும்  பிரதியுத்தரமாக:  என்  ஆத்துமாவை  எல்லா  இக்கட்டுக்கும்  நீங்கலாக்கி  மீட்ட  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  நான்  சொல்லுகிறதைக்  கேளுங்கள்.  (2சாமுவேல்  4:9)

aanaalum  thaaveethu  bearoaththiyanaana  rimmoanin  kumaararaagiya  reakaabukkum,  avan  sagoatharan  baanaavukkum  pirathiyuththaramaaga:  en  aaththumaavai  ellaa  ikkattukkum  neenggalaakki  meetta  karththarudaiya  jeevanaikko'ndu  naan  sollugi’rathaik  kea'lungga'l.  (2saamuveal  4:9)

இதோ,  ஒருவன்  எனக்கு  நற்செய்தி  கொண்டுவருகிறவன்  என்று  எண்ணி,  சவுல்  செத்துப்போனான்  என்று  எனக்கு  அறிவித்து,  தனக்கு  வெகுமானம்  கிடைக்கும்  என்று  நினைத்தபோது,  அவனை  நான்  பிடித்து  சிக்லாகிலே  கொன்றுபோட்டேனே.  (2சாமுவேல்  4:10)

ithoa,  oruvan  enakku  na’rseythi  ko'nduvarugi’ravan  en’ru  e'n'ni,  savul  seththuppoanaan  en’ru  enakku  a’riviththu,  thanakku  vegumaanam  kidaikkum  en’ru  ninaiththapoathu,  avanai  naan  pidiththu  siklaakilea  kon’rupoatteanea.  (2saamuveal  4:10)

தமது  வீட்டிற்குள்  தமது  படுக்கையின்மேல்  படுத்திருந்த  நீதிமானைக்  கொலைசெய்த  பொல்லாத  மனுஷருக்கு  எவ்வளவு  அதிகமாய்  ஆக்கினை  செய்யவேண்டும்?  இப்போதும்  நான்  அவருடைய  இரத்தப்பழியை  உங்கள்  கைகளில்  வாங்கி,  உங்களை  பூமியிலிருந்து  அழித்துப்போடாதிருப்பேனோ  என்று  சொல்லி,  (2சாமுவேல்  4:11)

thamathu  veetti’rku'l  thamathu  padukkaiyinmeal  paduththiruntha  neethimaanaik  kolaiseytha  pollaatha  manusharukku  evva'lavu  athigamaay  aakkinai  seyyavea'ndum?  ippoathum  naan  avarudaiya  iraththappazhiyai  ungga'l  kaiga'lil  vaanggi,  ungga'lai  boomiyilirunthu  azhiththuppoadaathiruppeanoa  en’ru  solli,  (2saamuveal  4:11)

அவர்களைக்  கொன்றுபோடவும்,  அவர்கள்  கைகளையும்  கால்களையும்  தறித்து,  எப்ரோனிலிருக்கிற  குளத்தண்டையிலே  தூக்கிப்போடவும்  தன்  சேவகருக்குக்  கட்டளையிட்டான்.  இஸ்போசேத்தின்  தலையை  எடுத்து,  எப்ரோனிலிருக்கிற  அப்னேரின்  கல்லறையிலே  அடக்கம்பண்ணினார்கள்.  (2சாமுவேல்  4:12)

avarga'laik  kon’rupoadavum,  avarga'l  kaiga'laiyum  kaalga'laiyum  tha’riththu,  ebroanilirukki’ra  ku'laththa'ndaiyilea  thookkippoadavum  than  seavagarukkuk  katta'laiyittaan.  isboaseaththin  thalaiyai  eduththu,  ebroanilirukki’ra  abnearin  kalla’raiyilea  adakkampa'n'ninaarga'l.  (2saamuveal  4:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!