Friday, August 26, 2016

2 Saamuveal 3 | 2 சாமுவேல் 3 | 2 Samuel 3

சவுலின்  குடும்பத்துக்கும்  தாவீதின்  குடும்பத்துக்கும்  நெடுநாள்  யுத்தம்  நடந்தது;  தாவீது  வரவரப்  பலத்தான்;  சவுலின்  குடும்பத்தாரோ  வரவரப்  பலவீனப்பட்டுப்  போனார்கள்.  (2சாமுவேல்  3:1)

savulin  kudumbaththukkum  thaaveethin  kudumbaththukkum  nedunaa'l  yuththam  nadanthathu;  thaaveethu  varavarap  balaththaan;  savulin  kudumbaththaaroa  varavarap  balaveenappattup  poanaarga'l.  (2saamuveal  3:1)

எப்ரோனிலே  தாவீதுக்குப்  பிறந்த  குமாரர்:  யெஸ்ரயேல்  ஊராளான  அகினோவாமிடத்திலே  பிறந்த  அம்னோன்  அவனுக்கு  முதல்  பிறந்தவன்.  (2சாமுவேல்  3:2)

ebroanilea  thaaveethukkup  pi’rantha  kumaarar:  yesrayeal  ooraa'laana  aginoavaamidaththilea  pi’rantha  amnoan  avanukku  muthal  pi’ranthavan.  (2saamuveal  3:2)

நாபாலின்  மனைவியாயிருந்த  கர்மேல்  ஊராளான  அபிகாயிலிடத்திலே  பிறந்த  கீலேயாப்  அவனுடைய  இரண்டாம்  குமாரன்;  மூன்றாம்  குமாரன்  கேசூரின்  ராஜாவான  தல்மாய்  குமாரத்தியாகிய  மாக்காள்  பெற்ற  அப்சலோம்  என்பவன்.  (2சாமுவேல்  3:3)

naabaalin  manaiviyaayiruntha  karmeal  ooraa'laana  abikaayilidaththilea  pi’rantha  keeleayaab  avanudaiya  ira'ndaam  kumaaran;  moon’raam  kumaaran  keasoorin  raajaavaana  thalmaay  kumaaraththiyaagiya  maakkaa'l  pet’ra  absaloam  enbavan.  (2saamuveal  3:3)

நாலாம்  குமாரன்  ஆகீத்  பெற்ற  அதொனியா  என்பவன்;  ஐந்தாம்  குமாரன்  அபித்தாள்  பெற்ற  செப்பத்தியா  என்பவன்.  (2சாமுவேல்  3:4)

naalaam  kumaaran  aakeeth  pet’ra  athoniyaa  enbavan;  ainthaam  kumaaran  abiththaa'l  pet’ra  seppaththiyaa  enbavan.  (2saamuveal  3:4)

ஆறாம்  குமாரன்  தாவீதின்  மனைவியாகிய  எக்லாளிடத்தில்  பிறந்த  இத்ரேயாம்  என்பவன்;  இவர்கள்  எப்ரோனிலே  தாவீதுக்குப்  பிறந்தவர்கள்.  (2சாமுவேல்  3:5)

aa’raam  kumaaran  thaaveethin  manaiviyaagiya  eklaa'lidaththil  pi’rantha  ithreayaam  enbavan;  ivarga'l  ebroanilea  thaaveethukkup  pi’ranthavarga'l.  (2saamuveal  3:5)

சவுலின்  குடும்பத்துக்கும்  தாவீதின்  குடும்பத்துக்கும்  யுத்தம்  நடந்துவருகிறபோது,  அப்னேர்  சவுலின்  குடும்பத்திலே  பலத்தவனானான்.  (2சாமுவேல்  3:6)

savulin  kudumbaththukkum  thaaveethin  kudumbaththukkum  yuththam  nadanthuvarugi’rapoathu,  abnear  savulin  kudumbaththilea  balaththavanaanaan.  (2saamuveal  3:6)

சவுலுக்கு  ஆயாவின்  குமாரத்தியாகிய  ரிஸ்பாள்  என்னும்  பேருள்ள  ஒரு  மறுமனையாட்டி  இருந்தாள்;  இஸ்போசேத்  அப்னேரை  நோக்கி:  நீ  என்  தகப்பனாருடைய  மறுமனையாட்டியினிடத்தில்  பிரவேசித்தது  என்ன  என்றான்.  (2சாமுவேல்  3:7)

savulukku  aayaavin  kumaaraththiyaagiya  rispaa'l  ennum  pearu'l'la  oru  ma’rumanaiyaatti  irunthaa'l;  isboaseath  abnearai  noakki:  nee  en  thagappanaarudaiya  ma’rumanaiyaattiyinidaththil  piraveasiththathu  enna  en’raan.  (2saamuveal  3:7)

அப்னேர்  இஸ்போசேத்தின்  வார்த்தைகளுக்காக  மிகவும்  கோபங்கொண்டு:  உம்மைத்  தாவீதின்  கையில்  ஒப்புக்கொடாமல்,  இந்நாள்மட்டும்  உம்முடைய  தகப்பனாகிய  சவுலின்  குடும்பத்துக்கும்,  அவருடைய  சகோதரருக்கும்,  சிநேகிதருக்கும்,  தயவுசெய்கிறவனாகிய  என்னை  நீர்  இன்று  ஒரு  ஸ்திரீயினிமித்தம்  குற்றம்பிடிக்கிறதற்கு,  நான்  யூதாவுக்கு  உட்கையான  ஒரு  நாய்த்தலையா?  (2சாமுவேல்  3:8)

abnear  isboaseaththin  vaarththaiga'lukkaaga  migavum  koabangko'ndu:  ummaith  thaaveethin  kaiyil  oppukkodaamal,  innaa'lmattum  ummudaiya  thagappanaagiya  savulin  kudumbaththukkum,  avarudaiya  sagoathararukkum,  sineagitharukkum,  thayavuseygi’ravanaagiya  ennai  neer  in’ru  oru  sthireeyinimiththam  kut’rampidikki’ratha’rku,  naan  yoothaavukku  udkaiyaana  oru  naayththalaiyaa?  (2saamuveal  3:8)

நான்  ராஜ்யபாரத்தைச்  சவுலின்  குடும்பத்தை  விட்டுத்  தாண்டப்பண்ணி,  தாவீதின்  சிங்காசனத்தைத்  தாண்  துவக்கிப்  பெயெர்செபாமட்டுமுள்ள  இஸ்ரவேலின்மேலும்  யூதாவின்மேலும்  நிலைநிறுத்தும்படிக்கு,  (2சாமுவேல்  3:9)

naan  raajyabaaraththaich  savulin  kudumbaththai  vittuth  thaa'ndappa'n'ni,  thaaveethin  singgaasanaththaith  thaa'n  thuvakkip  beyersebaamattumu'l'la  isravealinmealum  yoothaavinmealum  nilaini’ruththumpadikku,  (2saamuveal  3:9)

கர்த்தர்  தாவீதுக்கு  ஆணையிட்டபடியே,  நான்  அவனுக்குச்  செய்யாமற்போனால்,  தேவன்  அப்னேருக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்  என்றான்.  (2சாமுவேல்  3:10)

karththar  thaaveethukku  aa'naiyittapadiyea,  naan  avanukkuch  seyyaama’rpoanaal,  theavan  abnearukku  atha’rkuch  sariyaagavum  atha’rku  athigamaagavum  seyyakkadavar  en’raan.  (2saamuveal  3:10)

அப்பொழுது  அவன்  அப்னேருக்குப்  பயப்பட்டதினால்,  அப்புறம்  ஒரு  மறுமொழியும்  அவனுக்குச்  சொல்லாதிருந்தான்.  (2சாமுவேல்  3:11)

appozhuthu  avan  abnearukkup  bayappattathinaal,  appu’ram  oru  ma’rumozhiyum  avanukkuch  sollaathirunthaan.  (2saamuveal  3:11)

அப்னேர்  தன்  நாமத்தினாலே  தாவீதினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  தேசம்  யாருடையது?  என்னோடு  உடன்படிக்கைபண்ணும்;  இதோ,  இஸ்ரவேலையெல்லாம்  உம்மிடத்தில்  திருப்ப,  என்  கை  உம்மோடிருக்கும்  என்று  சொல்லச்சொன்னான்.  (2சாமுவேல்  3:12)

abnear  than  naamaththinaalea  thaaveethinidaththi’rku  sthaanaabathiga'lai  anuppi:  theasam  yaarudaiyathu?  ennoadu  udanpadikkaipa'n'num;  ithoa,  isravealaiyellaam  ummidaththil  thiruppa,  en  kai  ummoadirukkum  en’ru  sollachsonnaan.  (2saamuveal  3:12)

அதற்குத்  தாவீது:  நல்லது,  உன்னோடே  நான்  உடன்படிக்கைபண்ணுவேன்;  ஆனாலும்  ஒரே  காரியம்  உன்னிடத்தில்  கேட்டுக்கொள்ளுகிறேன்;  அது  என்னவெனில்,  நீ  என்  முகத்தைப்  பார்க்க  வரும்போது,  சவுலின்  குமாரத்தியாகிய  மீகாளை  நீ  அழைத்துவரவேண்டும்;  அதற்குமுன்  நீ  என்  முகத்தைப்  பார்ப்பதில்லை  என்று  சொல்லச்சொல்லி,  (2சாமுவேல்  3:13)

atha’rkuth  thaaveethu:  nallathu,  unnoadea  naan  udanpadikkaipa'n'nuvean;  aanaalum  orea  kaariyam  unnidaththil  keattukko'l'lugi’rean;  athu  ennavenil,  nee  en  mugaththaip  paarkka  varumpoathu,  savulin  kumaaraththiyaagiya  meekaa'lai  nee  azhaiththuvaravea'ndum;  atha’rkumun  nee  en  mugaththaip  paarppathillai  en’ru  sollachsolli,  (2saamuveal  3:13)

அவன்  சவுலின்  குமாரனாகிய  இஸ்போசேத்தினிடத்திற்கும்  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நான்  பெலிஸ்தருடைய  நூறு  நுனித்தோல்களைப்  பரிசமாகக்  கொடுத்து,  விவாகம்பண்ணின  என்  மனைவியாகிய  மீகாளை  அனுப்பிவிடும்  என்று  சொல்லச்சொன்னான்.  (2சாமுவேல்  3:14)

avan  savulin  kumaaranaagiya  isboaseaththinidaththi’rkum  sthaanaabathiga'lai  anuppi:  naan  pelistharudaiya  noo’ru  nuniththoalga'laip  parisamaagak  koduththu,  vivaagampa'n'nina  en  manaiviyaagiya  meekaa'lai  anuppividum  en’ru  sollachsonnaan.  (2saamuveal  3:14)

அப்பொழுது,  இஸ்போசேத்  அவளை  லாயீசின்  குமாரனாகிய  பல்த்தியேல்  என்னும்  புருஷனிடத்திலிருந்து  அழைத்துவர  ஆட்களை  அனுப்பினான்.  (2சாமுவேல்  3:15)

appozhuthu,  isboaseath  ava'lai  laayeesin  kumaaranaagiya  palththiyeal  ennum  purushanidaththilirunthu  azhaiththuvara  aadka'lai  anuppinaan.  (2saamuveal  3:15)

அவள்  புருஷன்  பகூரீம்மட்டும்  அவள்  பிறகாலே  அழுதுகொண்டுவந்தான்.  அப்னேர்  அவனை  நோக்கி:  நீ  திரும்பிப்போ  என்றான்;  அவன்  திரும்பிப்போய்விட்டான்.  (2சாமுவேல்  3:16)

ava'l  purushan  bagooreemmattum  ava'l  pi’ragaalea  azhuthuko'nduvanthaan.  abnear  avanai  noakki:  nee  thirumbippoa  en’raan;  avan  thirumbippoayvittaan.  (2saamuveal  3:16)

அப்னேர்  இஸ்ரவேலின்  மூப்பரோடே  பேசி:  தாவீதை  உங்கள்மேல்  ராஜாவாக  வைக்கும்படிக்கு  நீங்கள்  அநேகநாளாய்த்  தேடினீர்களே.  (2சாமுவேல்  3:17)

abnear  isravealin  moopparoadea  peasi:  thaaveethai  ungga'lmeal  raajaavaaga  vaikkumpadikku  neengga'l  aneaganaa'laayth  theadineerga'lea.  (2saamuveal  3:17)

இப்போதும்  அப்படிச்  செய்யுங்கள்;  என்  தாசனாகிய  தாவீதின்  கையினால்,  என்  ஜனமாகிய  இஸ்ரவேலைப்  பெலிஸ்தரின்  கைக்கும்,  அவர்களுடைய  எல்லாச்  சத்துருக்களின்  கைக்கும்  நீங்கலாக்கி  ரட்சிப்பேன்  என்று  கர்த்தர்  தாவீதைக்குறித்துச்  சொல்லியிருக்கிறாரே  என்றான்.  (2சாமுவேல்  3:18)

ippoathum  appadich  seyyungga'l;  en  thaasanaagiya  thaaveethin  kaiyinaal,  en  janamaagiya  isravealaip  pelistharin  kaikkum,  avarga'ludaiya  ellaach  saththurukka'lin  kaikkum  neenggalaakki  radchippean  en’ru  karththar  thaaveethaikku’riththuch  solliyirukki’raarea  en’raan.  (2saamuveal  3:18)

இந்தப்பிரகாரமாக  அப்னேர்  பென்யமீன்  மனுஷர்  காதுகள்  கேட்கப்  பேசினான்;  பின்பு  அப்னேர்  இஸ்ரவேலர்  பார்வைக்கும்,  பென்யமீனுடைய  எல்லாக்  குடும்பத்தாரின்  பார்வைக்கும்,  சம்மதியானதையெல்லாம்  எப்ரோனிலே  தாவீதின்  காதுகள்  கேட்கப்  பேசுகிறதற்குப்  போனான்.  (2சாமுவேல்  3:19)

inthappiragaaramaaga  abnear  benyameen  manushar  kaathuga'l  keadkap  peasinaan;  pinbu  abnear  isravealar  paarvaikkum,  benyameenudaiya  ellaak  kudumbaththaarin  paarvaikkum,  sammathiyaanathaiyellaam  ebroanilea  thaaveethin  kaathuga'l  keadkap  peasugi’ratha’rkup  poanaan.  (2saamuveal  3:19)

அப்னேரும்,  அவனோடேகூட  இருபதுபேரும்  எப்ரோனிலிருக்கிற  தாவீதினிடத்தில்  வந்தபோது,  தாவீது  அப்னேருக்கும்,  அவனோடே  வந்த  மனுஷருக்கும்  விருந்துசெய்தான்.  (2சாமுவேல்  3:20)

abnearum,  avanoadeakooda  irubathupearum  ebroanilirukki’ra  thaaveethinidaththil  vanthapoathu,  thaaveethu  abnearukkum,  avanoadea  vantha  manusharukkum  virunthuseythaan.  (2saamuveal  3:20)

பின்பு  அப்னேர்  தாவீதை  நோக்கி:  நான்  எழுந்துபோய்,  இஸ்ரவேலரை  எல்லாம்  உம்மோடே  உடன்படிக்கைபண்ணும்படிக்கு,  ராஜாவாகிய  என்  ஆண்டவனிடத்தில்  சேர்த்துக்கொண்டு  வருகிறேன்;  அதினாலே  உம்முடைய  ஆத்துமா  அரசாள  விரும்புகிற  இடமெல்லாம்  அரசாளுவீர்  என்றான்;  அப்படியே  தாவீது  அப்னேரை  அனுப்பிவிட்டான்;  அவன்  சமாதானத்தோடே  போனான்.  (2சாமுவேல்  3:21)

pinbu  abnear  thaaveethai  noakki:  naan  ezhunthupoay,  isravealarai  ellaam  ummoadea  udanpadikkaipa'n'numpadikku,  raajaavaagiya  en  aa'ndavanidaththil  searththukko'ndu  varugi’rean;  athinaalea  ummudaiya  aaththumaa  arasaa'la  virumbugi’ra  idamellaam  arasaa'luveer  en’raan;  appadiyea  thaaveethu  abnearai  anuppivittaan;  avan  samaathaanaththoadea  poanaan.  (2saamuveal  3:21)

தாவீதின்  சேவகரும்  யோவாபும்  அநேகம்  பொருட்களைக்  கொள்ளையிட்டு,  தண்டிலிருந்து  கொண்டுவந்தார்கள்;  அப்பொழுது  அப்னேர்  எப்ரோனில்  தாவீதினிடத்தில்  இல்லை;  அவனை  அனுப்பிவிட்டான்;  அவன்  சமாதானத்தோடே  போய்விட்டான்.  (2சாமுவேல்  3:22)

thaaveethin  seavagarum  yoavaabum  aneagam  porudka'laik  ko'l'laiyittu,  tha'ndilirunthu  ko'nduvanthaarga'l;  appozhuthu  abnear  ebroanil  thaaveethinidaththil  illai;  avanai  anuppivittaan;  avan  samaathaanaththoadea  poayvittaan.  (2saamuveal  3:22)

யோவாபும்  அவனோடிருந்த  எல்லாச்  சேனையும்  வந்தபோது,  நேரின்  குமாரனாகிய  அப்னேர்  ராஜாவினிடத்தில்  வந்தான்  என்றும்,  அவர்  அவனைச்  சமாதானமாய்ப்போக  அனுப்பிவிட்டார்  என்றும்,  யோவாபுக்கு  அறிவித்தார்கள்.  (2சாமுவேல்  3:23)

yoavaabum  avanoadiruntha  ellaach  seanaiyum  vanthapoathu,  nearin  kumaaranaagiya  abnear  raajaavinidaththil  vanthaan  en’rum,  avar  avanaich  samaathaanamaayppoaga  anuppivittaar  en’rum,  yoavaabukku  a’riviththaarga'l.  (2saamuveal  3:23)

அப்பொழுது  யோவாப்  ராஜாவண்டையில்  பிரவேசித்து:  என்ன  செய்தீர்?  இதோ,  அப்னேர்  உம்மிடத்தில்  வந்தானே,  நீர்  அவனைப்  போகவிட்டது  என்ன?  (2சாமுவேல்  3:24)

appozhuthu  yoavaab  raajaava'ndaiyil  piraveasiththu:  enna  seytheer?  ithoa,  abnear  ummidaththil  vanthaanea,  neer  avanaip  poagavittathu  enna?  (2saamuveal  3:24)

நேரின்  குமாரனாகிய  அப்னேரை  அறிவீரே;  அவன்  உம்மை  மோசம்போக்கவும்,  உம்முடைய  போக்குவரத்தை  அறியவும்,  நீர்  செய்கிறதையெல்லாம்  ஆராயவும்  வந்தான்  என்று  சொன்னான்.  (2சாமுவேல்  3:25)

nearin  kumaaranaagiya  abnearai  a’riveerea;  avan  ummai  moasampoakkavum,  ummudaiya  poakkuvaraththai  a’riyavum,  neer  seygi’rathaiyellaam  aaraayavum  vanthaan  en’ru  sonnaan.  (2saamuveal  3:25)

யோவாப்  தாவீதை  விட்டுப்  புறப்பட்டவுடனே,  அவன்  அப்னேரைத்  தாவீதுக்குத்  தெரியாமல்  கூட்டிக்கொண்டு  வரும்படி  ஆட்களை  அனுப்பினான்;  அவர்கள்  சீரா  என்னும்  துரவுமட்டும்போய்  அவனை  அழைத்துக்கொண்டு  வந்தார்கள்.  (2சாமுவேல்  3:26)

yoavaab  thaaveethai  vittup  pu’rappattavudanea,  avan  abnearaith  thaaveethukkuth  theriyaamal  koottikko'ndu  varumpadi  aadka'lai  anuppinaan;  avarga'l  seeraa  ennum  thuravumattumpoay  avanai  azhaiththukko'ndu  vanthaarga'l.  (2saamuveal  3:26)

அப்னேர்  எப்ரோனுக்குத்  திரும்பி  வருகிறபோது,  யோவாப்  அவனோடே  இரகசியமாய்ப்  பேசப்போகிறவன்போல,  அவனை  ஒலிமுகவாசலின்  நடுவே  ஒரு  பக்கமாய்  அழைத்துப்போய்,  தன்  தம்பி  ஆசகேலுடைய  இரத்தப்பழியை  வாங்க,  அங்கே  அவனை  வயிற்றிலே  குத்திக்கொன்றுபோட்டான்.  (2சாமுவேல்  3:27)

abnear  ebroanukkuth  thirumbi  varugi’rapoathu,  yoavaab  avanoadea  iragasiyamaayp  peasappoagi’ravanpoala,  avanai  olimugavaasalin  naduvea  oru  pakkamaay  azhaiththuppoay,  than  thambi  aasakealudaiya  iraththappazhiyai  vaangga,  anggea  avanai  vayit’rilea  kuththikkon’rupoattaan.  (2saamuveal  3:27)

தாவீது  அதைக்  கேட்டபோது:  நேரின்  குமாரனாகிய  அப்னேரின்  இரத்தத்திற்காக,  என்மேலும்  என்  ராஜ்யத்தின்மேலும்  கர்த்தருக்கு  முன்பாக  என்றைக்கும்  பழியில்லை.  (2சாமுவேல்  3:28)

thaaveethu  athaik  keattapoathu:  nearin  kumaaranaagiya  abnearin  iraththaththi’rkaaga,  enmealum  en  raajyaththinmealum  karththarukku  munbaaga  en’raikkum  pazhiyillai.  (2saamuveal  3:28)

அது  யோவாபுடைய  தலையின்மேலும்,  அவன்  தகப்பன்  குடும்பத்தின்மேலும்  சுமந்திருப்பதாக;  யோவாபின்  வீட்டாரிலே  பிரமியக்காரனும்,  குஷ்டரோகியும்,  கோல்  ஊன்றி  நடக்கிறவனும்,  பட்டயத்தால்  விழுகிறவனும்,  அப்பம்  குறைச்சலுள்ளவனும்,  ஒருக்காலும்  ஒழிந்துபோவதில்லை  என்றான்.  (2சாமுவேல்  3:29)

athu  yoavaabudaiya  thalaiyinmealum,  avan  thagappan  kudumbaththinmealum  sumanthiruppathaaga;  yoavaabin  veettaarilea  piramiyakkaaranum,  kushdaroagiyum,  koal  oon’ri  nadakki’ravanum,  pattayaththaal  vizhugi’ravanum,  appam  ku’raichchalu'l'lavanum,  orukkaalum  ozhinthupoavathillai  en’raan.  (2saamuveal  3:29)

அப்னேர்  கிபியோனில்  நடந்த  யுத்தத்திலே  தங்கள்  தம்பியாகிய  ஆசகேலைக்  கொன்றதினிமித்தம்  யோவாபும்  அவன்  சகோதரனாகிய  அபிசாயும்  அவனைச்  சங்காரம்பண்ணினார்கள்.  (2சாமுவேல்  3:30)

abnear  kibiyoanil  nadantha  yuththaththilea  thangga'l  thambiyaagiya  aasakealaik  kon’rathinimiththam  yoavaabum  avan  sagoatharanaagiya  abisaayum  avanaich  sanggaarampa'n'ninaarga'l.  (2saamuveal  3:30)

தாவீது  யோவாபையும்,  அவனோடிருந்த  சகல  ஜனங்களையும்  பார்த்து:  நீங்கள்  உங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  இரட்டுடுத்தி,  அப்னேருக்கு  முன்னாக  நடந்து  துக்கங்கொண்டாடுங்கள்  என்று  சொல்லி,  தாவீதுராஜா  தானும்  பாடைக்குப்  பின்சென்றான்.  (2சாமுவேல்  3:31)

thaaveethu  yoavaabaiyum,  avanoadiruntha  sagala  janangga'laiyum  paarththu:  neengga'l  ungga'l  vasthirangga'laik  kizhiththukko'ndu,  irattuduththi,  abnearukku  munnaaga  nadanthu  thukkangko'ndaadungga'l  en’ru  solli,  thaaveethuraajaa  thaanum  paadaikkup  pinsen’raan.  (2saamuveal  3:31)

அவர்கள்  அப்னேரை  எப்ரோனிலே  அடக்கம்பண்ணுகையில்,  ராஜா  அப்னேரின்  கல்லறையண்டையிலே  சத்தமிட்டு  அழுதான்;  சகல  ஜனங்களும்  அழுதார்கள்.  (2சாமுவேல்  3:32)

avarga'l  abnearai  ebroanilea  adakkampa'n'nugaiyil,  raajaa  abnearin  kalla’raiya'ndaiyilea  saththamittu  azhuthaan;  sagala  janangga'lum  azhuthaarga'l.  (2saamuveal  3:32)

ராஜா  அப்னேருக்காகப்  புலம்பி:  மதிகெட்டவன்  சாகிறதுபோல,  அப்னேர்  செத்துப்போனானோ?  (2சாமுவேல்  3:33)

raajaa  abnearukkaagap  pulambi:  mathikettavan  saagi’rathupoala,  abnear  seththuppoanaanoa?  (2saamuveal  3:33)

உன்  கைகள்  கட்டப்படவும்  இல்லை;  உன்  கால்களில்  விலங்கு  போடப்படவும்  இல்லை;  துஷ்டர்  கையில்  மடிகிறதுபோல  மடிந்தாயே  என்றான்;  அப்பொழுது  ஜனங்களெல்லாரும்  பின்னும்  அதிகமாய்  அவனுக்காக  அழுதார்கள்.  (2சாமுவேல்  3:34)

un  kaiga'l  kattappadavum  illai;  un  kaalga'lil  vilanggu  poadappadavum  illai;  thushdar  kaiyil  madigi’rathupoala  madinthaayea  en’raan;  appozhuthu  janangga'lellaarum  pinnum  athigamaay  avanukkaaga  azhuthaarga'l.  (2saamuveal  3:34)

பொழுது  இன்னும்  இருக்கையில்,  ஜனங்கள்  எல்லாரும்  வந்து:  அப்பம்  புசியும்  என்று  தாவீதுக்குச்  சொன்னபோது,  தாவீது:  சூரியன்  அஸ்தமிக்கிறதற்கு  முன்னே  நான்  அப்பத்தையாகிலும்  வேறெதையாகிலும்  ருசிபார்த்தால்,  தேவன்  எனக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்  என்று  ஆணையிட்டுச்  சொன்னான்.  (2சாமுவேல்  3:35)

pozhuthu  innum  irukkaiyil,  janangga'l  ellaarum  vanthu:  appam  pusiyum  en’ru  thaaveethukkuch  sonnapoathu,  thaaveethu:  sooriyan  asthamikki’ratha’rku  munnea  naan  appaththaiyaagilum  vea’rethaiyaagilum  rusipaarththaal,  theavan  enakku  atha’rkuch  sariyaagavum  atha’rku  athigamaagavum  seyyakkadavar  en’ru  aa'naiyittuch  sonnaan.  (2saamuveal  3:35)

ஜனங்கள்  எல்லாரும்  அதைக்  கவனித்தார்கள்,  அது  அவர்கள்  பார்வைக்கு  நன்றாயிருந்தது;  அப்படியே  ராஜா  செய்ததெல்லாம்  சகல  ஜனங்களுக்கும்  நலமாய்த்  தோன்றினது.  (2சாமுவேல்  3:36)

janangga'l  ellaarum  athaik  kavaniththaarga'l,  athu  avarga'l  paarvaikku  nan’raayirunthathu;  appadiyea  raajaa  seythathellaam  sagala  janangga'lukkum  nalamaayth  thoan’rinathu.  (2saamuveal  3:36)

நேரின்  குமாரனாகிய  அப்னேரைக்  கொன்றுபோட்டது  ராஜாவினால்  உண்டானதல்லவென்று  அந்நாளிலே  சகல  ஜனங்களும்,  இஸ்ரவேலர்  அனைவரும்  அறிந்துகொண்டார்கள்.  (2சாமுவேல்  3:37)

nearin  kumaaranaagiya  abnearaik  kon’rupoattathu  raajaavinaal  u'ndaanathallaven’ru  annaa'lilea  sagala  janangga'lum,  isravealar  anaivarum  a’rinthuko'ndaarga'l.  (2saamuveal  3:37)

ராஜா  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  இன்றையதினம்  இஸ்ரவேலில்  பிரபுவும்  பெரிய  மனுஷனுமாகிய  ஒருவன்  விழுந்தான்  என்று  அறியீர்களா?  (2சாமுவேல்  3:38)

raajaa  than  oozhiyakkaararai  noakki:  in’raiyathinam  isravealil  pirabuvum  periya  manushanumaagiya  oruvan  vizhunthaan  en’ru  a’riyeerga'laa?  (2saamuveal  3:38)

நான்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணப்பட்டவனாயிருந்தபோதிலும்,  நான்  இன்னும்  பலவீனன்;  செருயாவின்  குமாரராகிய  இந்த  மனுஷர்  என்  பலத்துக்கு  மிஞ்சினவர்களாயிருக்கிறார்கள்,  அந்தப்  பொல்லாப்பைச்  செய்தவனுக்குக்  கர்த்தர்  அவன்  பொல்லாப்புக்குத்தக்கதாய்ச்  சரிக்கட்டுவாராக  என்றான்.  (2சாமுவேல்  3:39)

naan  raajaavaaga  abisheagampa'n'nappattavanaayirunthapoathilum,  naan  innum  balaveenan;  seruyaavin  kumaararaagiya  intha  manushar  en  balaththukku  mignchinavarga'laayirukki’raarga'l,  anthap  pollaappaich  seythavanukkuk  karththar  avan  pollaappukkuththakkathaaych  sarikkattuvaaraaga  en’raan.  (2saamuveal  3:39)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!