Monday, August 29, 2016

2 Saamuveal 24 | 2 சாமுவேல் 24 | 2 Samuel 24

கர்த்தருடைய  கோபம்  திரும்ப  இஸ்ரவேலின்மேல்  மூண்டது.  இஸ்ரவேல்  யூதா  என்பவர்களை  இலக்கம்  பார்  என்று  அவர்களுக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிறதற்கு  தாவீது  ஏவப்பட்டான்.  (2சாமுவேல்  24:1)

karththarudaiya  koabam  thirumba  isravealinmeal  moo'ndathu.  israveal  yoothaa  enbavarga'lai  ilakkam  paar  en’ru  avarga'lukku  viroathamaaych  sollugi’ratha’rku  thaaveethu  eavappattaan.  (2saamuveal  24:1)

அப்படியே  ராஜா  தன்னோடிருக்கிற  சேனாபதியாகிய  யோவாபைப்  பார்த்து:  ஜனங்களின்  இலக்கத்தை  நான்  அறியும்படிக்கு  நீ  தாண்முதல்  பெயெர்செபாமட்டுமுள்ள  இஸ்ரவேலரின்  கோத்திரமெங்கும்  சுற்றித்திரிந்து  ஜனங்களைத்  தொகையிடுங்கள்  என்றான்.  (2சாமுவேல்  24:2)

appadiyea  raajaa  thannoadirukki’ra  seanaabathiyaagiya  yoavaabaip  paarththu:  janangga'lin  ilakkaththai  naan  a’riyumpadikku  nee  thaa'nmuthal  beyersebaamattumu'l'la  isravealarin  koaththiramenggum  sut’riththirinthu  janangga'laith  thogaiyidungga'l  en’raan.  (2saamuveal  24:2)

அப்பொழுது  யோவாப்  ராஜாவைப்  பார்த்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  கண்கள்  காணும்படி  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  ஜனங்களை  இப்பொழுது  இருக்கிறதைப்பார்க்கிலும்,  நூறுமடங்கு  அதிகமாய்  வர்த்திக்கப்பண்ணுவாராக;  ஆனாலும்  என்  ஆண்டவனாகிய  ராஜா  இந்தக்  காரியத்தை  விரும்புகிறது  என்ன  என்றான்.  (2சாமுவேல்  24:3)

appozhuthu  yoavaab  raajaavaip  paarththu:  raajaavaagiya  en  aa'ndavanudaiya  ka'nga'l  kaa'numpadi  ummudaiya  theavanaagiya  karththar  janangga'lai  ippozhuthu  irukki’rathaippaarkkilum,  noo’rumadanggu  athigamaay  varththikkappa'n'nuvaaraaga;  aanaalum  en  aa'ndavanaagiya  raajaa  inthak  kaariyaththai  virumbugi’rathu  enna  en’raan.  (2saamuveal  24:3)

ஆகிலும்  யோவாபும்  இராணுவத்தலைவரும்  சொன்ன  வார்த்தை  செல்லாதபடிக்கு,  ராஜாவின்  வார்த்தை  பலத்தது;  அப்படியே  இஸ்ரவேல்  ஜனங்களைத்  தொகையிட,  யோவாபும்  இராணுவத்தலைவரும்  ராஜாவைவிட்டுப்  புறப்பட்டுப்போய்,  (2சாமுவேல்  24:4)

aagilum  yoavaabum  iraa'nuvaththalaivarum  sonna  vaarththai  sellaathapadikku,  raajaavin  vaarththai  balaththathu;  appadiyea  israveal  janangga'laith  thogaiyida,  yoavaabum  iraa'nuvaththalaivarum  raajaavaivittup  pu’rappattuppoay,  (2saamuveal  24:4)

யோர்தானைக்  கடந்து,  காத்  என்னும்  ஆறுகளின்  நடுவே  இருக்கிற  பட்டணத்திற்கு  வலதுபுறமான  ஆரோவேரிலும்  யாசேரிடத்திலும்  பாளயமிறங்கி,  (2சாமுவேல்  24:5)

yoarthaanaik  kadanthu,  kaath  ennum  aa’ruga'lin  naduvea  irukki’ra  patta'naththi’rku  valathupu’ramaana  aaroavearilum  yaasearidaththilum  paa'layami’ranggi,  (2saamuveal  24:5)

அங்கேயிருந்து  கீலேயாத்திற்கும்  தாதீம்ஒத்சிக்கும்  போய்,  அங்கேயிருந்து  தாண்யானுக்கும்,  சீதோனின்  சுற்றுப்புறங்களுக்கும்  போய்,  (2சாமுவேல்  24:6)

anggeayirunthu  keeleayaaththi’rkum  thaatheemothsikkum  poay,  anggeayirunthu  thaa'nyaanukkum,  seethoanin  sut’ruppu’rangga'lukkum  poay,  (2saamuveal  24:6)

பிற்பாடு  தீரு  என்னும்  கோட்டைக்கும்  ஏவியர்  கானானியருடைய  சகல  பட்டணங்களுக்கும்  போய்,  அங்கேயிருந்து  யூதாவின்  தென்புறமான  பெயெர்செபாவுக்குப்  போய்,  (2சாமுவேல்  24:7)

pi’rpaadu  theeru  ennum  koattaikkum  eaviyar  kaanaaniyarudaiya  sagala  patta'nangga'lukkum  poay,  anggeayirunthu  yoothaavin  thenpu’ramaana  beyersebaavukkup  poay,  (2saamuveal  24:7)

இப்படித்  தேசமெங்கும்  சுற்றித்திரிந்து,  ஒன்பது  மாதமும்  இருபது  நாளும்  ஆனபிற்பாடு  எருசலேமுக்கு  வந்தார்கள்.  (2சாமுவேல்  24:8)

ippadith  theasamenggum  sut’riththirinthu,  onbathu  maathamum  irubathu  naa'lum  aanapi’rpaadu  erusaleamukku  vanthaarga'l.  (2saamuveal  24:8)

யோவாப்  ஜனத்தை  இலக்கம்பார்த்த  தொகையை  ராஜாவுக்குக்  கொடுத்தான்;  இஸ்ரவேலிலே  பட்டயம்  உருவத்தக்க  யுத்த  சேவகர்  எட்டுலட்சம்பேர்  இருந்தார்கள்;  யூதா  மனுஷர்  ஐந்து  லட்சம்  பேர்  இருந்தார்கள்.  (2சாமுவேல்  24:9)

yoavaab  janaththai  ilakkampaarththa  thogaiyai  raajaavukkuk  koduththaan;  isravealilea  pattayam  uruvaththakka  yuththa  seavagar  ettuladchampear  irunthaarga'l;  yoothaa  manushar  ainthu  ladcham  pear  irunthaarga'l.  (2saamuveal  24:9)

இவ்விதமாய்  ஜனங்களை  எண்ணின  பின்பு,  ராஜாவின்  இருதயம்  அவனை  வாதித்தது;  அப்பொழுது  தாவீது  கர்த்தரை  நோக்கி:  நான்  இப்படிச்  செய்ததினாலே  பெரிய  பாவஞ்செய்தேன்;  இப்போதும்  ஆண்டவரே,  உமது  அடியானின்  அக்கிரமத்தை  நீக்கிவிடும்;  நான்  மகா  புத்தியீனமாய்ச்  செய்தேன்  என்றான்.  (2சாமுவேல்  24:10)

ivvithamaay  janangga'lai  e'n'nina  pinbu,  raajaavin  iruthayam  avanai  vaathiththathu;  appozhuthu  thaaveethu  karththarai  noakki:  naan  ippadich  seythathinaalea  periya  paavagnseythean;  ippoathum  aa'ndavarea,  umathu  adiyaanin  akkiramaththai  neekkividum;  naan  mahaa  buththiyeenamaaych  seythean  en’raan.  (2saamuveal  24:10)

தாவீது  காலமே  எழுந்திருந்தபோது,  தாவீதின்  ஞானதிருஷ்டிக்காரனாகிய  காத்  என்னும்  தீர்க்கதரிசிக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகிச்  சொன்னது:  (2சாமுவேல்  24:11)

thaaveethu  kaalamea  ezhunthirunthapoathu,  thaaveethin  gnaanathirushdikkaaranaagiya  kaath  ennum  theerkkatharisikkuk  karththarudaiya  vaarththai  u'ndaagich  sonnathu:  (2saamuveal  24:11)

நீ  தாவீதினிடத்தில்  போய்,  மூன்று  காரியங்களை  உனக்கு  முன்பாக  வைக்கிறேன்;  அவைகளில்  ஒரு  காரியத்தைத்  தெரிந்துகொள்,  அதை  நான்  உனக்குச்  செய்வேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (2சாமுவேல்  24:12)

nee  thaaveethinidaththil  poay,  moon’ru  kaariyangga'lai  unakku  munbaaga  vaikki’rean;  avaiga'lil  oru  kaariyaththaith  therinthuko'l,  athai  naan  unakkuch  seyvean  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (2saamuveal  24:12)

அப்படியே  காத்  தாவீதினிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  உம்முடைய  தேசத்திலே  ஏழு  வருஷம்  பஞ்சம்  வரவேண்டுமோ?  அல்லது  மூன்றுமாதம்  உம்முடைய  சத்துருக்கள்  உம்மைப்  பின்தொடர,  நீர்  அவர்களுக்கு  முன்பாக  ஓடிப்போகவேண்டுமோ?  அல்லது  உம்முடைய  தேசத்திலே  மூன்றுநாள்  கொள்ளைநோய்  உண்டாகவேண்டுமோ?  இப்போதும்  என்னை  அனுப்பினவருக்கு  நான்  என்ன  மறுஉத்தரவு  கொண்டுபோகவேண்டும்  என்பதை  நீர்  யோசித்துப்பாரும்  என்று  சொன்னான்.  (2சாமுவேல்  24:13)

appadiyea  kaath  thaaveethinidaththil  vanthu,  avanai  noakki:  ummudaiya  theasaththilea  eazhu  varusham  pagncham  varavea'ndumoa?  allathu  moon’rumaatham  ummudaiya  saththurukka'l  ummaip  pinthodara,  neer  avarga'lukku  munbaaga  oadippoagavea'ndumoa?  allathu  ummudaiya  theasaththilea  moon’runaa'l  ko'l'lainoay  u'ndaagavea'ndumoa?  ippoathum  ennai  anuppinavarukku  naan  enna  ma’ruuththaravu  ko'ndupoagavea'ndum  enbathai  neer  yoasiththuppaarum  en’ru  sonnaan.  (2saamuveal  24:13)

அப்பொழுது  தாவீது  காத்தை  நோக்கி:  கொடிய  இடுக்கணில்  அகப்பட்டிருக்கிறேன்;  இப்போது  நாம்  கர்த்தருடைய  கையிலே  விழுவோமாக;  அவருடைய  இரக்கங்கள்  மகா  பெரியது;  மனுஷர்  கையிலே  விழாதிருப்பேனாக  என்றான்.  (2சாமுவேல்  24:14)

appozhuthu  thaaveethu  kaaththai  noakki:  kodiya  idukka'nil  agappattirukki’rean;  ippoathu  naam  karththarudaiya  kaiyilea  vizhuvoamaaga;  avarudaiya  irakkangga'l  mahaa  periyathu;  manushar  kaiyilea  vizhaathiruppeanaaga  en’raan.  (2saamuveal  24:14)

அப்பொழுது  கர்த்தர்  இஸ்ரவேலிலே  அன்று  காலமே  தொடங்கிக்  குறித்தகாலம்வரைக்கும்  கொள்ளைநோயை  வரப்பண்ணினார்;  அதினால்  தாண்முதல்  பெயெர்செபாமட்டுமுள்ள  ஜனங்களில்  எழுபதினாயிரம்பேர்  செத்துப்போனார்கள்.  (2சாமுவேல்  24:15)

appozhuthu  karththar  isravealilea  an’ru  kaalamea  thodanggik  ku’riththakaalamvaraikkum  ko'l'lainoayai  varappa'n'ninaar;  athinaal  thaa'nmuthal  beyersebaamattumu'l'la  janangga'lil  ezhubathinaayirampear  seththuppoanaarga'l.  (2saamuveal  24:15)

தேவதூதன்  எருசலேமை  அழிக்கத்  தன்  கையை  அதின்மேல்  நீட்டினபோது,  கர்த்தர்  அந்தத்  தீங்குக்கு  மனஸ்தாபப்பட்டு,  ஜனங்களைச்  சங்கரிக்கிற  தூதனை  நோக்கி:  போதும்,  இப்போது  உன்  கையை  நிறுத்து  என்றார்;  அந்த  வேளையில்  கர்த்தருடைய  தூதன்  எபூசியனாகிய  அர்வனாவின்  போரடிக்கிற  களத்திற்கு  நேரே  இருந்தான்.  (2சாமுவேல்  24:16)

theavathoothan  erusaleamai  azhikkath  than  kaiyai  athinmeal  neettinapoathu,  karththar  anthath  theenggukku  manasthaabappattu,  janangga'laich  sanggarikki’ra  thoothanai  noakki:  poathum,  ippoathu  un  kaiyai  ni’ruththu  en’raar;  antha  vea'laiyil  karththarudaiya  thoothan  eboosiyanaagiya  arvanaavin  poaradikki’ra  ka'laththi’rku  nearea  irunthaan.  (2saamuveal  24:16)

ஜனத்தை  உபாதிக்கிற  தூதனை  தாவீது  கண்டபோது,  அவன்  கர்த்தரை  நோக்கி:  இதோ,  நான்தான்  பாவஞ்செய்தேன்;  நான்தான்  அக்கிரமம்பண்ணினேன்;  இந்த  ஆடுகள்  என்ன  செய்தது?  உம்முடைய  கை  எனக்கும்  என்  தகப்பன்  வீட்டுக்கும்  விரோதமாயிருப்பதாக  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  (2சாமுவேல்  24:17)

janaththai  ubaathikki’ra  thoothanai  thaaveethu  ka'ndapoathu,  avan  karththarai  noakki:  ithoa,  naanthaan  paavagnseythean;  naanthaan  akkiramampa'n'ninean;  intha  aaduga'l  enna  seythathu?  ummudaiya  kai  enakkum  en  thagappan  veettukkum  viroathamaayiruppathaaga  en’ru  vi'n'nappampa'n'ninaan.  (2saamuveal  24:17)

அன்றையதினம்  காத்  என்பவன்  தாவீதினிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  நீர்  போய்,  எபூசியனாகிய  அர்வனாவின்  களத்திலே  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தை  உண்டாக்கும்  என்றான்.  (2சாமுவேல்  24:18)

an’raiyathinam  kaath  enbavan  thaaveethinidaththil  vanthu,  avanai  noakki:  neer  poay,  eboosiyanaagiya  arvanaavin  ka'laththilea  karththarukku  oru  balipeedaththai  u'ndaakkum  en’raan.  (2saamuveal  24:18)

காத்துடைய  வார்த்தையின்படியே  தாவீது  கர்த்தர்  கற்பித்த  பிரகாரமாகப்  போனான்.  (2சாமுவேல்  24:19)

kaaththudaiya  vaarththaiyinpadiyea  thaaveethu  karththar  ka’rpiththa  piragaaramaagap  poanaan.  (2saamuveal  24:19)

அர்வனா  ஏறிட்டுப்பார்த்து:  ராஜாவும்  அவனுடைய  ஊழியக்காரரும்  தன்னிடத்தில்  வருகிறதைக்கண்டு,  அர்வனா  எதிர்கொண்டுபோய்த்  தரைமட்டும்  குனிந்து  ராஜாவை  வணங்கி,  (2சாமுவேல்  24:20)

arvanaa  ea’rittuppaarththu:  raajaavum  avanudaiya  oozhiyakkaararum  thannidaththil  varugi’rathaikka'ndu,  arvanaa  ethirko'ndupoayth  tharaimattum  kuninthu  raajaavai  va'nanggi,  (2saamuveal  24:20)

ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தமது  அடியானிடத்தில்  வருகிற  காரியம்  என்ன  என்று  கேட்டதற்கு,  தாவீது:  வாதை  ஜனத்தைவிட்டு  நிறுத்தப்படக்  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டும்படிக்கு  இந்தக்  களத்தை  உன்  கையிலே  கொள்ள  வந்தேன்  என்றான்.  (2சாமுவேல்  24:21)

raajaavaagiya  en  aa'ndavan  thamathu  adiyaanidaththil  varugi’ra  kaariyam  enna  en’ru  keattatha’rku,  thaaveethu:  vaathai  janaththaivittu  ni’ruththappadak  karththarukku  oru  balipeedaththaik  kattumpadikku  inthak  ka'laththai  un  kaiyilea  ko'l'la  vanthean  en’raan.  (2saamuveal  24:21)

அர்வனா  தாவீதைப்  பார்த்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  இதை  வாங்கிக்கொண்டு,  தம்முடைய  பார்வைக்கு  நலமானபடி  பலியிடுவாராக;  இதோ,  தகனபலிக்கு  மாடுகளும்  விறகுக்குப்  போரடிக்கிற  உருளைகளும்  மாடுகளின்  நுகத்தடிகளும்  இங்கே  இருக்கிறது  என்று  சொல்லி,  (2சாமுவேல்  24:22)

arvanaa  thaaveethaip  paarththu:  raajaavaagiya  en  aa'ndavan  ithai  vaanggikko'ndu,  thammudaiya  paarvaikku  nalamaanapadi  baliyiduvaaraaga;  ithoa,  thaganabalikku  maaduga'lum  vi’ragukkup  poaradikki’ra  uru'laiga'lum  maaduga'lin  nugaththadiga'lum  inggea  irukki’rathu  en’ru  solli,  (2saamuveal  24:22)

அர்வனா  ராஜயோக்கியமாய்  அவை  எல்லாவற்றையும்  ராஜாவுக்குக்  கொடுத்தபின்பு,  அர்வனா  ராஜாவை  நோக்கி:  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  உம்மிடத்தில்  கிருபையாயிருப்பாராக  என்றான்.  (2சாமுவேல்  24:23)

arvanaa  raajayoakkiyamaay  avai  ellaavat’raiyum  raajaavukkuk  koduththapinbu,  arvanaa  raajaavai  noakki:  ummudaiya  theavanaagiya  karththar  ummidaththil  kirubaiyaayiruppaaraaga  en’raan.  (2saamuveal  24:23)

ராஜா  அர்வனாவைப்  பார்த்து:  அப்படியல்ல;  நான்  இலவசமாய்  வாங்கி,  என்  தேவனாகிய  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தாமல்,  அதை  உன்  கையிலே  விலைக்கிரயமாய்  வாங்குவேன்  என்று  சொல்லி,  தாவீது  அந்தக்  களத்தையும்  மாடுகளையும்  ஐம்பது  சேக்கல்  நிறை  வெள்ளிக்குக்  கொண்டான்.  (2சாமுவேல்  24:24)

raajaa  arvanaavaip  paarththu:  appadiyalla;  naan  ilavasamaay  vaanggi,  en  theavanaagiya  karththarukkuch  sarvaangga  thaganabaliga'laich  seluththaamal,  athai  un  kaiyilea  vilaikkirayamaay  vaangguvean  en’ru  solli,  thaaveethu  anthak  ka'laththaiyum  maaduga'laiyum  aimbathu  seakkal  ni’rai  ve'l'likkuk  ko'ndaan.  (2saamuveal  24:24)

அங்கே  தாவீது  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  செலுத்தினான்;  அப்பொழுது  கர்த்தர்  தேசத்துக்காகச்  செய்யப்பட்ட  வேண்டுதலைக்  கேட்டருளினார்;  இஸ்ரவேலின்மேலிருந்த  அந்த  வாதை  நிறுத்தப்பட்டது.  (2சாமுவேல்  24:25)

anggea  thaaveethu  karththarukku  oru  balipeedaththaik  katti,  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'laiyum  seluththinaan;  appozhuthu  karththar  theasaththukkaagach  seyyappatta  vea'nduthalaik  keattaru'linaar;  isravealinmealiruntha  antha  vaathai  ni’ruththappattathu.  (2saamuveal  24:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!