Monday, August 29, 2016

2 Saamuveal 22 | 2 சாமுவேல் 22 | 2 Samuel 22

கர்த்தர்  தாவீதை  அவனுடைய  எல்லாச்  சத்துருக்களின்  கைக்கும்,  சவுலின்  கைக்கும்,  நீங்கலாக்கி  விடுவித்தபோது,  அவன்  கர்த்தருக்கு  முன்பாகப்  பாடின  பாட்டு:  (2சாமுவேல்  22:1)

karththar  thaaveethai  avanudaiya  ellaach  saththurukka'lin  kaikkum,  savulin  kaikkum,  neenggalaakki  viduviththapoathu,  avan  karththarukku  munbaagap  paadina  paattu:  (2saamuveal  22:1)

கர்த்தர்  என்  கன்மலையும்,  என்  கோட்டையும்,  என்  ரட்சகருமானவர்.  (2சாமுவேல்  22:2)

karththar  en  kanmalaiyum,  en  koattaiyum,  en  radchagarumaanavar.  (2saamuveal  22:2)

தேவன்  நான்  நம்பியிருக்கிற  துருக்கமும்,  என்  கேடகமும்,  என்  ரட்சணியக்  கொம்பும்,  என்  உயர்ந்த  அடைக்கலமும்,  என்  புகலிடமும்,  என்  ரட்சகருமானவர்;  என்னை  வல்லடிக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கிறவர்  அவரே.  (2சாமுவேல்  22:3)

theavan  naan  nambiyirukki’ra  thurukkamum,  en  keadagamum,  en  radcha'niyak  kombum,  en  uyarntha  adaikkalamum,  en  pugalidamum,  en  radchagarumaanavar;  ennai  valladikku  neenggalaakki  radchikki’ravar  avarea.  (2saamuveal  22:3)

ஸ்துதிக்குப்  பாத்திரராகிய  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  அதனால்  என்  சத்துருக்களுக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கப்படுவேன்.  (2சாமுவேல்  22:4)

sthuthikkup  paaththiraraagiya  karththarai  noakkik  kooppiduvean;  athanaal  en  saththurukka'lukku  neenggalaakki  radchikkappaduvean.  (2saamuveal  22:4)

மரண  அலைகள்  என்னைச்  சூழ்ந்துகொண்டு,  துர்ச்சனப்பிரவாகம்  என்னைப்  பயப்படுத்தினது.  (2சாமுவேல்  22:5)

mara'na  alaiga'l  ennaich  soozhnthuko'ndu,  thurchsanappiravaagam  ennaip  bayappaduththinathu.  (2saamuveal  22:5)

பாதாளக்  கட்டுகள்  என்னைச்  சூழ்ந்துகொண்டது;  மரணக்கண்ணிகள்  என்மேல்  விழுந்தது.  (2சாமுவேல்  22:6)

paathaa'lak  kattuga'l  ennaich  soozhnthuko'ndathu;  mara'nakka'n'niga'l  enmeal  vizhunthathu.  (2saamuveal  22:6)

எனக்கு  உண்டான  நெருக்கத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு,  என்  தேவனை  நோக்கி  அபயமிட்டேன்;  தமது  ஆலயத்திலிருந்து  என்  சத்தத்தைக்  கேட்டார்;  என்  கூப்பிடுதல்  அவர்  செவிகளில்  ஏறிற்று.  (2சாமுவேல்  22:7)

enakku  u'ndaana  nerukkaththilea  karththarai  noakkik  kooppittu,  en  theavanai  noakki  abayamittean;  thamathu  aalayaththilirunthu  en  saththaththaik  keattaar;  en  kooppiduthal  avar  seviga'lil  ea’rit’ru.  (2saamuveal  22:7)

அப்பொழுது  பூமி  அசைந்து  அதிர்ந்தது;  அவர்  கோபங்கொண்டபடியால்  வானத்தின்  அஸ்திபாரங்கள்  குலுங்கி  அசைந்தது.  (2சாமுவேல்  22:8)

appozhuthu  boomi  asainthu  athirnthathu;  avar  koabangko'ndapadiyaal  vaanaththin  asthibaarangga'l  kulunggi  asainthathu.  (2saamuveal  22:8)

அவர்  நாசியிலிருந்து  பட்சிக்கிற  புகை  எழும்பிற்று,  அவர்  வாயிலிருந்து  அக்கினி  புறப்பட்டது,  அதனால்  தழல்  மூண்டது.  (2சாமுவேல்  22:9)

avar  naasiyilirunthu  padchikki’ra  pugai  ezhumbit’ru,  avar  vaayilirunthu  akkini  pu’rappattathu,  athanaal  thazhal  moo'ndathu.  (2saamuveal  22:9)

வானங்களைத்  தாழ்த்தி  இறங்கினார்;  அவர்  பாதங்களின்கீழ்  காரிருள்  இருந்தது.  (2சாமுவேல்  22:10)

vaanangga'laith  thaazhththi  i’rangginaar;  avar  paathangga'linkeezh  kaariru'l  irunthathu.  (2saamuveal  22:10)

கேருபீனின்மேல்  ஏறி  வேகமாய்ச்  சென்றார்.  காற்றின்  செட்டைகளின்மீதில்  தரிசனமானார்.  (2சாமுவேல்  22:11)

kearubeeninmeal  ea’ri  veagamaaych  sen’raar.  kaat’rin  settaiga'linmeethil  tharisanamaanaar.  (2saamuveal  22:11)

ஆகாயத்து  மேகங்களிலே  கூடிய  தண்ணீர்களின்  இருளைத்  தம்மைச்  சுற்றிலும்  இருக்கும்  கூடாரமாக்கினார்.  (2சாமுவேல்  22:12)

aagaayaththu  meagangga'lilea  koodiya  tha'n'neerga'lin  iru'laith  thammaich  sut’rilum  irukkum  koodaaramaakkinaar.  (2saamuveal  22:12)

அவருடைய  சந்நிதிப்  பிரகாசத்தினால்  நெருப்புத்தழலும்  எரிந்தது.  (2சாமுவேல்  22:13)

avarudaiya  sannithip  piragaasaththinaal  neruppuththazhalum  erinthathu.  (2saamuveal  22:13)

கர்த்தர்  வானத்திலிருந்து  குமுறி,  உன்னதமானவர்  தமது  சத்தத்தைத்  தொனிக்கப்பண்ணினார்.  (2சாமுவேல்  22:14)

karththar  vaanaththilirunthu  kumu’ri,  unnathamaanavar  thamathu  saththaththaith  thonikkappa'n'ninaar.  (2saamuveal  22:14)

அவர்  அம்புகளை  எய்து,  அவர்களைச்  சிதற  அடித்து,  மின்னல்களைப்  பிரயோகித்து,  அவர்களைக்  கலங்கப்பண்ணினார்.  (2சாமுவேல்  22:15)

avar  ambuga'lai  eythu,  avarga'laich  sitha’ra  adiththu,  minnalga'laip  pirayoagiththu,  avarga'laik  kalanggappa'n'ninaar.  (2saamuveal  22:15)

கர்த்தருடைய  கண்டிதத்தினாலும்,  அவருடைய  நாசியின்  சுவாசக்  காற்றினாலும்  சமுத்திரத்தின்  மதகுகள்  திறவுண்டு,  பூதலத்தின்  அஸ்திபாரங்கள்  காணப்பட்டது.  (2சாமுவேல்  22:16)

karththarudaiya  ka'ndithaththinaalum,  avarudaiya  naasiyin  suvaasak  kaat’rinaalum  samuththiraththin  mathaguga'l  thi’ravu'ndu,  poothalaththin  asthibaarangga'l  kaa'nappattathu.  (2saamuveal  22:16)

உயரத்திலிருந்து  அவர்  கை  நீட்டி,  என்னைப்  பிடித்து,  ஜலப்பிரவாகத்திலிருக்கிற  என்னைத்  தூக்கிவிட்டார்.  (2சாமுவேல்  22:17)

uyaraththilirunthu  avar  kai  neetti,  ennaip  pidiththu,  jalappiravaagaththilirukki’ra  ennaith  thookkivittaar.  (2saamuveal  22:17)

என்னிலும்  பலவான்களாயிருந்த  என்  பலத்த  சத்துருவுக்கும்  என்  பகைஞருக்கும்  என்னை  விடுவித்தார்.  (2சாமுவேல்  22:18)

ennilum  balavaanga'laayiruntha  en  balaththa  saththuruvukkum  en  pagaignarukkum  ennai  viduviththaar.  (2saamuveal  22:18)

என்  ஆபத்துநாளிலே  எனக்கு  எதிரிட்டு  வந்தார்கள்;  கர்த்தரோ  எனக்கு  ஆதரவாயிருந்தார்.  (2சாமுவேல்  22:19)

en  aabaththunaa'lilea  enakku  ethirittu  vanthaarga'l;  karththaroa  enakku  aatharavaayirunthaar.  (2saamuveal  22:19)

என்மேல்  அவர்  பிரியமாயிருந்தபடியால்,  விசாலமான  இடத்திலே  என்னைக்  கொண்டுவந்து,  என்னைத்  தப்புவித்தார்.  (2சாமுவேல்  22:20)

enmeal  avar  piriyamaayirunthapadiyaal,  visaalamaana  idaththilea  ennaik  ko'nduvanthu,  ennaith  thappuviththaar.  (2saamuveal  22:20)

கர்த்தர்  என்  நீதிக்குத்தக்கதாக  எனக்குப்  பதில்  அளித்தார்;  என்  கைகளின்  சுத்தத்திற்குத்தக்கதாக  எனக்குச்  சரிக்கட்டினார்.  (2சாமுவேல்  22:21)

karththar  en  neethikkuththakkathaaga  enakkup  bathil  a'liththaar;  en  kaiga'lin  suththaththi’rkuththakkathaaga  enakkuch  sarikkattinaar.  (2saamuveal  22:21)

கர்த்தருடைய  வழிகளைக்  காத்துக்கொண்டுவந்தேன்;  நான்  என்  தேவனுக்குத்  துரோகம்பண்ணினதில்லை.  (2சாமுவேல்  22:22)

karththarudaiya  vazhiga'laik  kaaththukko'nduvanthean;  naan  en  theavanukkuth  thuroagampa'n'ninathillai.  (2saamuveal  22:22)

அவருடைய  நியாயங்களையெல்லாம்  எனக்கு  முன்பாக  நிறுத்தினேன்;  நான்  அவருடைய  பிரமாணங்களை  விட்டு  விலகாமல்,  (2சாமுவேல்  22:23)

avarudaiya  niyaayangga'laiyellaam  enakku  munbaaga  ni’ruththinean;  naan  avarudaiya  piramaa'nangga'lai  vittu  vilagaamal,  (2saamuveal  22:23)

அவர்  முன்பாக  மனஉண்மையாயிருந்து,  என்  துர்க்குணத்திற்கு  என்னை  விலக்கிக்  காத்துக்கொண்டேன்.  (2சாமுவேல்  22:24)

avar  munbaaga  manau'nmaiyaayirunthu,  en  thurkku'naththi’rku  ennai  vilakkik  kaaththukko'ndean.  (2saamuveal  22:24)

ஆகையால்  கர்த்தர்  என்  நீதிக்குத்தக்கதாகவும்,  தம்முடைய  கண்களுக்குமுன்  இருக்கிற  என்  சுத்தத்திற்குத்தக்கதாகவும்  எனக்குப்  பலனளித்தார்.  (2சாமுவேல்  22:25)

aagaiyaal  karththar  en  neethikkuththakkathaagavum,  thammudaiya  ka'nga'lukkumun  irukki’ra  en  suththaththi’rkuththakkathaagavum  enakkup  palana'liththaar.  (2saamuveal  22:25)

தயவுள்ளவனுக்கு  நீர்  தயவுள்ளவராகவும்,  உத்தமனுக்கு  நீர்  உத்தமராகவும்,  (2சாமுவேல்  22:26)

thayavu'l'lavanukku  neer  thayavu'l'lavaraagavum,  uththamanukku  neer  uththamaraagavum,  (2saamuveal  22:26)

புனிதனுக்கு  நீர்  புனிதராகவும்,  மாறுபாடானவனுக்கு  நீர்  மாறுபடுகிறவராகவும்  தோன்றுவீர்.  (2சாமுவேல்  22:27)

punithanukku  neer  punitharaagavum,  maa’rupaadaanavanukku  neer  maa’rupadugi’ravaraagavum  thoan’ruveer.  (2saamuveal  22:27)

சிறுமைப்பட்ட  ஜனத்தை  ரட்சிப்பீர்;  மேட்டிமையானவர்களைத்  தாழ்த்த,  உம்முடைய  கண்கள்  அவர்களுக்கு  விரோதமாய்த்  திருப்பப்பட்டிருக்கிறது.  (2சாமுவேல்  22:28)

si’rumaippatta  janaththai  radchippeer;  meattimaiyaanavarga'laith  thaazhththa,  ummudaiya  ka'nga'l  avarga'lukku  viroathamaayth  thiruppappattirukki’rathu.  (2saamuveal  22:28)

கர்த்தராகிய  தேவரீர்  என்  விளக்காயிருக்கிறீர்;  கர்த்தர்  என்  இருளை  வெளிச்சமாக்குகிறவர்.  (2சாமுவேல்  22:29)

karththaraagiya  theavareer  en  vi'lakkaayirukki’reer;  karththar  en  iru'lai  ve'lichchamaakkugi’ravar.  (2saamuveal  22:29)

உம்மாலே  நான்  ஒரு  சேனைக்குள்  பாய்ந்துபோவேன்;  என்  தேவனாலே  ஒரு  மதிலைத்  தாண்டுவேன்.  (2சாமுவேல்  22:30)

ummaalea  naan  oru  seanaikku'l  paaynthupoavean;  en  theavanaalea  oru  mathilaith  thaa'nduvean.  (2saamuveal  22:30)

தேவனுடைய  வழி  உத்தமமானது;  கர்த்தருடைய  வசனம்  புடமிடப்பட்டது;  தம்மை  நம்புகிற  அனைவருக்கும்  அவர்  கேடகமாயிருக்கிறார்.  (2சாமுவேல்  22:31)

theavanudaiya  vazhi  uththamamaanathu;  karththarudaiya  vasanam  pudamidappattathu;  thammai  nambugi’ra  anaivarukkum  avar  keadagamaayirukki’raar.  (2saamuveal  22:31)

கர்த்தரை  அல்லாமல்  தேவன்  யார்?  நம்முடைய  தேவனையன்றி  கன்மலையும்  யார்?  (2சாமுவேல்  22:32)

karththarai  allaamal  theavan  yaar?  nammudaiya  theavanaiyan’ri  kanmalaiyum  yaar?  (2saamuveal  22:32)

தேவன்  எனக்குப்  பலத்த  அரணானவர்;  அவர்  என்  வழியைச்  செவ்வைப்படுத்துகிறவர்.  (2சாமுவேல்  22:33)

theavan  enakkup  balaththa  ara'naanavar;  avar  en  vazhiyaich  sevvaippaduththugi’ravar.  (2saamuveal  22:33)

அவர்  என்  கால்களை  மான்களுடைய  கால்களைப்போலாக்கி,  என்  உயர்தலங்களில்  என்னை  நிறுத்துகிறார்.  (2சாமுவேல்  22:34)

avar  en  kaalga'lai  maanga'ludaiya  kaalga'laippoalaakki,  en  uyarthalangga'lil  ennai  ni’ruththugi’raar.  (2saamuveal  22:34)

வெண்கல  வில்லும்  என்  புயங்களால்  வளையும்படி,  என்  கைகளை  யுத்தத்திற்குப்  பழக்குவிக்கிறார்.  (2சாமுவேல்  22:35)

ve'ngala  villum  en  puyangga'laal  va'laiyumpadi,  en  kaiga'lai  yuththaththi’rkup  pazhakkuvikki’raar.  (2saamuveal  22:35)

உம்முடைய  ரட்சிப்பின்  கேடகத்தையும்  எனக்குத்  தந்தீர்;  உம்முடைய  காருணியம்  என்னைப்  பெரியவனாக்கும்.  (2சாமுவேல்  22:36)

ummudaiya  radchippin  keadagaththaiyum  enakkuth  thantheer;  ummudaiya  kaaru'niyam  ennaip  periyavanaakkum.  (2saamuveal  22:36)

என்  கால்கள்  வழுவாதபடிக்கு  நான்  நடக்கிற  வழியை  அகலமாக்கினீர்.  (2சாமுவேல்  22:37)

en  kaalga'l  vazhuvaathapadikku  naan  nadakki’ra  vazhiyai  agalamaakkineer.  (2saamuveal  22:37)

என்  சத்துருக்களைப்  பின்தொடர்ந்து  அவர்களை  அழிப்பேன்;  அவர்களை  நிர்மூலமாக்கும்வரைக்கும்  திரும்பேன்.  (2சாமுவேல்  22:38)

en  saththurukka'laip  pinthodarnthu  avarga'lai  azhippean;  avarga'lai  nirmoolamaakkumvaraikkum  thirumbean.  (2saamuveal  22:38)

அவர்கள்  எழுந்திருக்கமாட்டாதபடிக்கு  என்  பாதங்களின்  கீழ்  விழுந்தார்கள்;  அவர்களை  முறிய  அடித்து  வெட்டினேன்.  (2சாமுவேல்  22:39)

avarga'l  ezhunthirukkamaattaathapadikku  en  paathangga'lin  keezh  vizhunthaarga'l;  avarga'lai  mu’riya  adiththu  vettinean.  (2saamuveal  22:39)

யுத்தத்திற்கு  நீர்  என்னைப்  பலத்தால்  இடைகட்டி,  என்மேல்  எழும்பினவர்களை  என்கீழ்  மடங்கப்பண்ணினீர்.  (2சாமுவேல்  22:40)

yuththaththi’rku  neer  ennaip  balaththaal  idaikatti,  enmeal  ezhumbinavarga'lai  enkeezh  madanggappa'n'nineer.  (2saamuveal  22:40)

நான்  என்  பகைஞரைச்  சங்கரிக்கும்படியாக,  என்  சத்துருக்களின்  பிடரியை  எனக்கு  ஒப்புக்கொடுத்தீர்.  (2சாமுவேல்  22:41)

naan  en  pagaignaraich  sanggarikkumpadiyaaga,  en  saththurukka'lin  pidariyai  enakku  oppukkoduththeer.  (2saamuveal  22:41)

அவர்கள்  நோக்கிப்  பார்க்கிறார்கள்,  அவர்களை  ரட்சிப்பார்  ஒருவருமில்லை;  கர்த்தரை  நோக்கிப்பார்க்கிறார்கள்,  அவர்களுக்கு  அவர்  உத்தரவு  கொடுக்கிறதில்லை.  (2சாமுவேல்  22:42)

avarga'l  noakkip  paarkki’raarga'l,  avarga'lai  radchippaar  oruvarumillai;  karththarai  noakkippaarkki’raarga'l,  avarga'lukku  avar  uththaravu  kodukki’rathillai.  (2saamuveal  22:42)

அவர்களை  பூமியின்  தூளாக  இடித்து,  தெருக்களின்  சேற்றைப்போல  அவர்களை  மிதித்து  சிதறப்பண்ணுகிறேன்.  (2சாமுவேல்  22:43)

avarga'lai  boomiyin  thoo'laaga  idiththu,  therukka'lin  seat’raippoala  avarga'lai  mithiththu  sitha’rappa'n'nugi’rean.  (2saamuveal  22:43)

என்  ஜனத்தின்  சண்டைகளுக்கு  நீர்  என்னை  விலக்கிவிட்டு,  ஜாதிகளுக்கு  என்னைத்  தலைவனாக  வைக்கிறீர்;  நான்  அறியாத  ஜனங்கள்  என்னைச்  சேவிக்கிறார்கள்.  (2சாமுவேல்  22:44)

en  janaththin  sa'ndaiga'lukku  neer  ennai  vilakkivittu,  jaathiga'lukku  ennaith  thalaivanaaga  vaikki’reer;  naan  a’riyaatha  janangga'l  ennaich  seavikki’raarga'l.  (2saamuveal  22:44)

அந்நியர்  இச்சகம்  பேசி  எனக்கு  அடங்கி,  என்  சத்தத்தைக்  கேட்டவுடனே  எனக்குக்  கீழ்ப்படிகிறார்கள்.  (2சாமுவேல்  22:45)

anniyar  ichchagam  peasi  enakku  adanggi,  en  saththaththaik  keattavudanea  enakkuk  keezhppadigi’raarga'l.  (2saamuveal  22:45)

அந்நியர்  முனைவிழுந்துபோய்,  தங்கள்  அரண்களிலிருந்து  தத்தளிப்பாய்ப்  புறப்படுகிறார்கள்.  (2சாமுவேல்  22:46)

anniyar  munaivizhunthupoay,  thangga'l  ara'nga'lilirunthu  thaththa'lippaayp  pu’rappadugi’raarga'l.  (2saamuveal  22:46)

கர்த்தர்  ஜீவனுள்ளவர்;  என்  கன்மலையானவர்  ஸ்தோத்திரிக்கப்படுவாராக;  என்  ரட்சிப்பின்  கன்மலையாகிய  தேவன்  உயர்ந்திருப்பாராக.  (2சாமுவேல்  22:47)

karththar  jeevanu'l'lavar;  en  kanmalaiyaanavar  sthoaththirikkappaduvaaraaga;  en  radchippin  kanmalaiyaagiya  theavan  uyarnthiruppaaraaga.  (2saamuveal  22:47)

அவர்  எனக்காகப்  பழிக்குப்  பழிவாங்கி,  ஜனங்களை  எனக்குக்  கீழ்ப்படுத்துகிற  தேவனானவர்.  (2சாமுவேல்  22:48)

avar  enakkaagap  pazhikkup  pazhivaanggi,  janangga'lai  enakkuk  keezhppaduththugi’ra  theavanaanavar.  (2saamuveal  22:48)

அவரே  என்  சத்துருக்களுக்கு  என்னை  விலக்கி  விடுவிக்கிறவர்;  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்கள்மேல்  என்னை  உயர்த்திக்  கொடுமையான  மனுஷனுக்கு  என்னைத்  தப்புவிக்கிறீர்.  (2சாமுவேல்  22:49)

avarea  en  saththurukka'lukku  ennai  vilakki  viduvikki’ravar;  enakku  viroathamaay  ezhumbugi’ravarga'lmeal  ennai  uyarththik  kodumaiyaana  manushanukku  ennaith  thappuvikki’reer.  (2saamuveal  22:49)

இதினிமித்தம்  கர்த்தாவே,  ஜாதிகளுக்குள்  உம்மைத்  துதித்து,  உம்முடைய  நாமத்திற்குச்  சங்கீதம்  பாடுவேன்.  (2சாமுவேல்  22:50)

ithinimiththam  karththaavea,  jaathiga'lukku'l  ummaith  thuthiththu,  ummudaiya  naamaththi’rkuch  sanggeetham  paaduvean.  (2saamuveal  22:50)

தாம்  ஏற்படுத்தின  ராஜாவுக்கு  மகத்தான  ரட்சிப்பை  அளித்து,  தாம்  அபிஷேகம்பண்ணின  தாவீதுக்கும்  அவன்  சந்ததிக்கும்  சதாகாலமும்  கிருபை  செய்கிறார்.  (2சாமுவேல்  22:51)

thaam  ea’rpaduththina  raajaavukku  magaththaana  radchippai  a'liththu,  thaam  abisheagampa'n'nina  thaaveethukkum  avan  santhathikkum  sathaakaalamum  kirubai  seygi’raar.  (2saamuveal  22:51)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!