Monday, August 29, 2016

2 Saamuveal 21 | 2 சாமுவேல் 21 | 2 Samuel 21

தாவீதின்  நாட்களில்  மூன்று  வருஷம்  ஓயாத  பஞ்சம்  உண்டாயிருந்தது;  அப்பொழுது  தாவீது  கர்த்தருடைய  சமுகத்தில்  விசாரித்தான்.  கர்த்தர்:  கிபியோனியரைக்  கொன்றுபோட்ட  சவுலுக்காகவும்,  இரத்தப்பிரியரான  அவன்  வீட்டாருக்காகவும்  இது  உண்டாயிற்று  என்றார்.  (2சாமுவேல்  21:1)

thaaveethin  naadka'lil  moon’ru  varusham  oayaatha  pagncham  u'ndaayirunthathu;  appozhuthu  thaaveethu  karththarudaiya  samugaththil  visaariththaan.  karththar:  kibiyoaniyaraik  kon’rupoatta  savulukkaagavum,  iraththappiriyaraana  avan  veettaarukkaagavum  ithu  u'ndaayit’ru  en’raar.  (2saamuveal  21:1)

அப்பொழுது  ராஜா:  கிபியோனியரை  அழைப்பித்தான்;  கிபியோனியரோ,  இஸ்ரவேல்  புத்திரராயிராமல்  எமோரியரில்  மீதியாயிருந்தவர்கள்;  அவர்களுக்கு  இஸ்ரவேல்  புத்திரர்  ஆணையிட்டிருந்தும்,  சவுல்  இஸ்ரவேல்  புத்திரருக்காகவும்  யூதாவுக்காகவும்  காண்பித்த  வைராக்கியத்தினால்  அவர்களை  வெட்ட  வகைதேடினான்.  (2சாமுவேல்  21:2)

appozhuthu  raajaa:  kibiyoaniyarai  azhaippiththaan;  kibiyoaniyaroa,  israveal  puththiraraayiraamal  emoariyaril  meethiyaayirunthavarga'l;  avarga'lukku  israveal  puththirar  aa'naiyittirunthum,  savul  israveal  puththirarukkaagavum  yoothaavukkaagavum  kaa'nbiththa  vairaakkiyaththinaal  avarga'lai  vetta  vagaitheadinaan.  (2saamuveal  21:2)

ஆகையால்  தாவீது  கிபியோனியரைப்  பார்த்து:  நான்  உங்களுக்குச்  செய்யவேண்டியது  என்ன?  நீங்கள்  கர்த்தருடைய  சுதந்தரத்தை  ஆசீர்வதிக்கும்படிக்கு,  நான்  செய்யவேண்டிய  பிராயச்சித்தம்  என்ன  என்று  கேட்டான்.  (2சாமுவேல்  21:3)

aagaiyaal  thaaveethu  kibiyoaniyaraip  paarththu:  naan  ungga'lukkuch  seyyavea'ndiyathu  enna?  neengga'l  karththarudaiya  suthantharaththai  aaseervathikkumpadikku,  naan  seyyavea'ndiya  piraayachchiththam  enna  en’ru  keattaan.  (2saamuveal  21:3)

அப்பொழுது  கிபியோனியர்  அவனைப்  பார்த்து:  சவுலோடும்  அவன்  வீட்டாரோடும்  எங்களுக்கு  இருக்கிற  காரியத்திற்காக  எங்களுக்கு  வெள்ளியும்  பொன்னும்  தேவையில்லை;  இஸ்ரவேலில்  ஒருவனைக்  கொன்றுபோடவேண்டும்  என்பதும்  எங்கள்  விருப்பம்  அல்ல  என்றார்கள்.  அப்பொழுது  அவன்:  அப்படியானால்,  நான்  உங்களுக்கு  என்ன  செய்யவேண்டும்  என்று  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டான்.  (2சாமுவேல்  21:4)

appozhuthu  kibiyoaniyar  avanaip  paarththu:  savuloadum  avan  veettaaroadum  engga'lukku  irukki’ra  kaariyaththi’rkaaga  engga'lukku  ve'l'liyum  ponnum  theavaiyillai;  isravealil  oruvanaik  kon’rupoadavea'ndum  enbathum  engga'l  viruppam  alla  en’raarga'l.  appozhuthu  avan:  appadiyaanaal,  naan  ungga'lukku  enna  seyyavea'ndum  en’ru  sollugi’reerga'l  en’ru  keattaan.  (2saamuveal  21:4)

அவர்கள்  ராஜாவை  நோக்கி:  நாங்கள்  இஸ்ரவேலின்  எல்லையிலெங்கும்  நிலைக்காதபடிக்கு,  அழிந்துபோக  எவன்  எங்களை  நிர்மூலமாக்கி  எங்களுக்குப்  பொல்லாப்புச்  செய்ய  நினைத்தானோ,  (2சாமுவேல்  21:5)

avarga'l  raajaavai  noakki:  naangga'l  isravealin  ellaiyilenggum  nilaikkaathapadikku,  azhinthupoaga  evan  engga'lai  nirmoolamaakki  engga'lukkup  pollaappuch  seyya  ninaiththaanoa,  (2saamuveal  21:5)

அவன்  குமாரரில்  ஏழுபேர்  கர்த்தர்  தெரிந்துகொண்ட  சவுலின்  ஊராகிய  கிபியாவிலே  நாங்கள்  அவர்களைக்  கர்த்தருக்கென்று  தூக்கிப்போட,  எங்களுக்கு  ஒப்புக்கொடுக்கப்படவேண்டும்  என்றார்கள்.  நான்  அவர்களை  ஒப்புக்கொடுப்பேன்  என்று  ராஜா  சொன்னான்.  (2சாமுவேல்  21:6)

avan  kumaararil  eazhupear  karththar  therinthuko'nda  savulin  ooraagiya  kibiyaavilea  naangga'l  avarga'laik  karththarukken’ru  thookkippoada,  engga'lukku  oppukkodukkappadavea'ndum  en’raarga'l.  naan  avarga'lai  oppukkoduppean  en’ru  raajaa  sonnaan.  (2saamuveal  21:6)

ஆனாலும்  தாவீதும்  சவுலின்  குமாரனாகிய  யோனத்தானும்  கர்த்தரைக்கொண்டு  இட்ட  ஆணையினிமித்தம்,  ராஜா  சவுலின்  குமாரனாகிய  யோனத்தானின்  மகன்  மேவிபோசேத்தைத்  தப்பவிட்டு,  (2சாமுவேல்  21:7)

aanaalum  thaaveethum  savulin  kumaaranaagiya  yoanaththaanum  karththaraikko'ndu  itta  aa'naiyinimiththam,  raajaa  savulin  kumaaranaagiya  yoanaththaanin  magan  meaviboaseaththaith  thappavittu,  (2saamuveal  21:7)

ஆயாவின்  குமாரத்தியாகிய  ரிஸ்பாள்  சவுலுக்குப்  பெற்ற  அவளுடைய  இரண்டு  குமாரராகிய  அர்மோனியையும்  மேவிபோசேத்தையும்,  சவுலின்  குமாரத்தியாகிய  மீகாள்  மேகோலாத்தியனான  பர்சிலாவின்  குமாரனாகிய  ஆதரியேலுக்குப்  பெற்ற  அவளுடைய  ஐந்து  குமாரரையும்  பிடித்து,  (2சாமுவேல்  21:8)

aayaavin  kumaaraththiyaagiya  rispaa'l  savulukkup  pet’ra  ava'ludaiya  ira'ndu  kumaararaagiya  armoaniyaiyum  meaviboaseaththaiyum,  savulin  kumaaraththiyaagiya  meekaa'l  meagoalaaththiyanaana  barsilaavin  kumaaranaagiya  aathariyealukkup  pet’ra  ava'ludaiya  ainthu  kumaararaiyum  pidiththu,  (2saamuveal  21:8)

அவர்களைக்  கிபியோனியர்  கையில்  ஒப்புக்கொடுத்தான்;  அவர்களைக்  கர்த்தருடைய  சமுகத்தில்  மலையின்மேல்  தூக்கிப்போட்டார்கள்;  அப்படியே  அவர்கள்  ஏழுபேரும்  ஒருமிக்க  விழுந்தார்கள்;  வாற்கோதுமை  அறுப்பு  துவக்குகிற  அறுப்புக்காலத்தின்  முந்தினநாட்களிலே  அவர்கள்  கொன்றுபோடப்பட்டார்கள்.  (2சாமுவேல்  21:9)

avarga'laik  kibiyoaniyar  kaiyil  oppukkoduththaan;  avarga'laik  karththarudaiya  samugaththil  malaiyinmeal  thookkippoattaarga'l;  appadiyea  avarga'l  eazhupearum  orumikka  vizhunthaarga'l;  vaa’rkoathumai  a’ruppu  thuvakkugi’ra  a’ruppukkaalaththin  munthinanaadka'lilea  avarga'l  kon’rupoadappattaarga'l.  (2saamuveal  21:9)

அப்பொழுது  ஆயாவின்  குமாரத்தியாகிய  ரிஸ்பாள்  இரட்டுப்புடவையை  எடுத்துக்கொண்டுபோய்,  அதைப்  பாறையின்மேல்  விரித்து,  அறுப்புநாளின்  துவக்கம்  முதற்கொண்டு  வானத்திலிருந்து  அவர்கள்மேல்  மழை  பெய்யுமட்டும்  பகலில்  ஆகாயத்துப்  பறவைகளாகிலும்  இரவில்  காட்டுமிருகங்களாகிலும்  அவர்கள்மேல்  விழவொட்டாதிருந்தாள்.  (2சாமுவேல்  21:10)

appozhuthu  aayaavin  kumaaraththiyaagiya  rispaa'l  irattuppudavaiyai  eduththukko'ndupoay,  athaip  paa’raiyinmeal  viriththu,  a’ruppunaa'lin  thuvakkam  mutha’rko'ndu  vaanaththilirunthu  avarga'lmeal  mazhai  peyyumattum  pagalil  aagaayaththup  pa’ravaiga'laagilum  iravil  kaattumirugangga'laagilum  avarga'lmeal  vizhavottaathirunthaa'l.  (2saamuveal  21:10)

ஆயாவின்  குமாரத்தியாகிய  ரிஸ்பாள்  என்னும்  சவுலின்  மறுமனையாட்டி  செய்தது  தாவீதுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  (2சாமுவேல்  21:11)

aayaavin  kumaaraththiyaagiya  rispaa'l  ennum  savulin  ma’rumanaiyaatti  seythathu  thaaveethukku  a’rivikkappattapoathu,  (2saamuveal  21:11)

தாவீது  போய்,  பெலிஸ்தர்  கில்போவாவிலே  சவுலை  வெட்டினபோது,  பெத்சானின்  வீதியிலே  தூக்கிப்போடப்பட்டதும்,  கீலேயாத்திலுள்ள  யாபேஸ்  பட்டணத்தார்  அங்கே  போய்த்  திருட்டளவாய்க்  கொண்டுவந்ததுமான  சவுலின்  எலும்புகளையும்,  அவன்  குமாரனான  யோனத்தானின்  எலும்புகளையும்,  அவர்களிடத்திலிருந்து  எடுத்து,  (2சாமுவேல்  21:12)

thaaveethu  poay,  pelisthar  kilboavaavilea  savulai  vettinapoathu,  bethsaanin  veethiyilea  thookkippoadappattathum,  keeleayaaththilu'l'la  yaabeas  patta'naththaar  anggea  poayth  thirutta'lavaayk  ko'nduvanthathumaana  savulin  elumbuga'laiyum,  avan  kumaaranaana  yoanaththaanin  elumbuga'laiyum,  avarga'lidaththilirunthu  eduththu,  (2saamuveal  21:12)

அங்கே  இருந்து  அவர்களைக்  கொண்டுவந்து,  தூக்கிப்போடப்பட்டவர்களின்  எலும்புகளையும்  அவைகளோடே  சேர்த்து,  (2சாமுவேல்  21:13)

anggea  irunthu  avarga'laik  ko'nduvanthu,  thookkippoadappattavarga'lin  elumbuga'laiyum  avaiga'loadea  searththu,  (2saamuveal  21:13)

சவுலின்  எலும்புகளையும்  அவன்  குமாரனாகிய  யோனத்தானின்  எலும்புகளையும்,  பென்யமீன்  தேசத்துச்  சேலா  ஊரிலிருக்கிற  அவன்  தகப்பனாகிய  கீசின்  கல்லறையில்  அடக்கம்பண்ணுவித்தான்;  ராஜா  கட்டளையிட்டபடியெல்லாம்  செய்தார்கள்;  அதற்குப்பின்பு  தேவன்  தேசத்திற்காகச்  செய்யப்பட்ட  வேண்டுதலைக்  கேட்டருளினார்.  (2சாமுவேல்  21:14)

savulin  elumbuga'laiyum  avan  kumaaranaagiya  yoanaththaanin  elumbuga'laiyum,  benyameen  theasaththuch  sealaa  oorilirukki’ra  avan  thagappanaagiya  keesin  kalla’raiyil  adakkampa'n'nuviththaan;  raajaa  katta'laiyittapadiyellaam  seythaarga'l;  atha’rkuppinbu  theavan  theasaththi’rkaagach  seyyappatta  vea'nduthalaik  keattaru'linaar.  (2saamuveal  21:14)

பின்பு  பெலிஸ்தர்  இஸ்ரவேலின்மேல்  யுத்தம்செய்தார்கள்;  அப்பொழுது  தாவீதும்  அவனோடேகூட  அவன்  சேவகரும்போய்,  பெலிஸ்தரோடு  யுத்தம்பண்ணினார்கள்;  தாவீது  விடாய்த்துப்போனான்.  (2சாமுவேல்  21:15)

pinbu  pelisthar  isravealinmeal  yuththamseythaarga'l;  appozhuthu  thaaveethum  avanoadeakooda  avan  seavagarumpoay,  pelistharoadu  yuththampa'n'ninaarga'l;  thaaveethu  vidaayththuppoanaan.  (2saamuveal  21:15)

அப்பொழுது  முந்நூறு  சேக்கல்நிறை  வெண்கலமான  ஈட்டியைப்  பிடிக்கிறவனும்,  புதுப்பட்டயத்தை  அரையிலே  கட்டிக்கொண்டவனுமான  இஸ்பிபெனோப்  என்னும்  இராட்சத  புத்திரரில்  ஒருவன்  தாவீதை  வெட்டவேண்டும்  என்று  இருந்தான்.  (2சாமுவேல்  21:16)

appozhuthu  munnoo’ru  seakkalni’rai  ve'ngalamaana  eettiyaip  pidikki’ravanum,  puthuppattayaththai  araiyilea  kattikko'ndavanumaana  isbibenoab  ennum  iraadchatha  puththiraril  oruvan  thaaveethai  vettavea'ndum  en’ru  irunthaan.  (2saamuveal  21:16)

செருயாவின்  குமாரனாகிய  அபிசாய்  ராஜாவுக்கு  உதவியாக  வந்து,  பெலிஸ்தனை  வெட்டிக்  கொன்றுபோட்டான்.  அப்பொழுது  தாவீதின்  மனுஷர்:  இஸ்ரவேலின்  விளக்கு  அணைந்துபோகாதபடிக்கு,  நீர்  இனி  எங்களோடே  யுத்தத்திற்குப்  புறப்படவேண்டாம்  என்று  அவனுக்கு  ஆணையிட்டுச்  சொன்னார்கள்.  (2சாமுவேல்  21:17)

seruyaavin  kumaaranaagiya  abisaay  raajaavukku  uthaviyaaga  vanthu,  pelisthanai  vettik  kon’rupoattaan.  appozhuthu  thaaveethin  manushar:  isravealin  vi'lakku  a'nainthupoagaathapadikku,  neer  ini  engga'loadea  yuththaththi’rkup  pu’rappadavea'ndaam  en’ru  avanukku  aa'naiyittuch  sonnaarga'l.  (2saamuveal  21:17)

அதற்குப்  பின்பு  பெலிஸ்தரோடே  திரும்பவும்  கோபிலே  யுத்தம்  நடந்தது;  ஊசாத்தியனாகிய  சீபேக்காய்  இராட்சத  சந்ததியான  சாப்பை  வெட்டிப்போட்டான்.  (2சாமுவேல்  21:18)

atha’rkup  pinbu  pelistharoadea  thirumbavum  koabilea  yuththam  nadanthathu;  oosaaththiyanaagiya  seebeakkaay  iraadchatha  santhathiyaana  saappai  vettippoattaan.  (2saamuveal  21:18)

பெலிஸ்தரோடு  இன்னும்  வேறொரு  யுத்தம்  கோபிலே  உண்டானபோது,  யாரெயொர்கிமின்  குமாரனாகிய  எல்க்கானான்  என்னும்  பெத்லெகேமியன்  காத்  ஊரானாகிய  கோலியாத்தின்  சகோதரனை  வெட்டினான்;  அவன்  ஈட்டித்  தாங்கானது  நெய்கிறவர்களின்  படைமரம்  அவ்வளவு  பெரிதாயிருந்தது.  (2சாமுவேல்  21:19)

pelistharoadu  innum  vea’roru  yuththam  koabilea  u'ndaanapoathu,  yaareyorkimin  kumaaranaagiya  elkkaanaan  ennum  bethleheamiyan  kaath  ooraanaagiya  koaliyaaththin  sagoatharanai  vettinaan;  avan  eettith  thaanggaanathu  neygi’ravarga'lin  padaimaram  avva'lavu  perithaayirunthathu.  (2saamuveal  21:19)

இன்னும்  ஒரு  யுத்தம்  காத்  ஊரிலே  நடந்தபோது,  அங்கே  நெட்டையனான  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவன்  கைகளில்  அவ்வாறு  விரல்களும்  அவன்  கால்களில்  அவ்வாறு  விரல்களும்,  ஆக  இருபத்து  நான்கு  விரல்களுள்ளவன்;  இவனும்  இராட்சத  பிறவியாயிருந்து,  (2சாமுவேல்  21:20)

innum  oru  yuththam  kaath  oorilea  nadanthapoathu,  anggea  nettaiyanaana  oru  manushan  irunthaan;  avan  kaiga'lil  avvaa’ru  viralga'lum  avan  kaalga'lil  avvaa’ru  viralga'lum,  aaga  irubaththu  naangu  viralga'lu'l'lavan;  ivanum  iraadchatha  pi’raviyaayirunthu,  (2saamuveal  21:20)

இஸ்ரவேலை  நிந்தித்தான்;  தாவீதின்  சகோதரனான  சீமேயாவின்  குமாரனாகிய  யோனத்தான்  அவனை  வெட்டினான்.  (2சாமுவேல்  21:21)

isravealai  ninthiththaan;  thaaveethin  sagoatharanaana  seemeayaavin  kumaaranaagiya  yoanaththaan  avanai  vettinaan.  (2saamuveal  21:21)

இந்த  நாலுபேரும்  காத்தூரிலே  இராட்சதனுக்குப்  பிறந்தவர்கள்;  இவர்கள்  தாவீதின்  கையினாலும்  அவன்  சேவகரின்  கையினாலும்  மடிந்தார்கள்.  (2சாமுவேல்  21:22)

intha  naalupearum  kaaththoorilea  iraadchathanukkup  pi’ranthavarga'l;  ivarga'l  thaaveethin  kaiyinaalum  avan  seavagarin  kaiyinaalum  madinthaarga'l.  (2saamuveal  21:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!