Friday, August 26, 2016

2 Saamuveal 2 | 2 சாமுவேல் 2 | 2 Samuel 2

பின்பு  தாவீது  கர்த்தரை  நோக்கி:  நான்  யூதாவின்  பட்டணங்கள்  ஒன்றிலே  போய்  இருக்கலாமா  என்று  விசாரித்தான்.  அதற்குக்  கர்த்தர்:  போ  என்றார்;  எவ்விடத்திற்குப்  போகலாம்  என்று  தாவீது  கேட்டதற்கு,  அவர்:  எப்ரோனுக்குப்  போ  என்றார்.  (2சாமுவேல்  2:1)

pinbu  thaaveethu  karththarai  noakki:  naan  yoothaavin  patta'nangga'l  on’rilea  poay  irukkalaamaa  en’ru  visaariththaan.  atha’rkuk  karththar:  poa  en’raar;  evvidaththi’rkup  poagalaam  en’ru  thaaveethu  keattatha’rku,  avar:  ebroanukkup  poa  en’raar.  (2saamuveal  2:1)

அப்படியே  தாவீது  தன்  இரண்டு  மனைவிகளாகிய  யெஸ்ரயேல்  ஊராளான  அகினோவாமோடும்,  நாபாலின்  மனைவியாயிருந்த  கர்மேல்  ஊராளான  அபிகாயிலோடும்கூட  அவ்விடத்திற்குப்  போனான்.  (2சாமுவேல்  2:2)

appadiyea  thaaveethu  than  ira'ndu  manaiviga'laagiya  yesrayeal  ooraa'laana  aginoavaamoadum,  naabaalin  manaiviyaayiruntha  karmeal  ooraa'laana  abikaayiloadumkooda  avvidaththi’rkup  poanaan.  (2saamuveal  2:2)

அன்றியும்  தன்னோடிருந்த  மனுஷரையும்,  அவர்கள்  குடும்பங்களையும்  கூட்டிக்கொண்டுபோனான்;  அவர்கள்  எப்ரோனின்  சுற்றூர்களிலே  குடியேறினார்கள்.  (2சாமுவேல்  2:3)

an’riyum  thannoadiruntha  manusharaiyum,  avarga'l  kudumbangga'laiyum  koottikko'ndupoanaan;  avarga'l  ebroanin  sut’roorga'lilea  kudiyea’rinaarga'l.  (2saamuveal  2:3)

அப்பொழுது  யூதாவின்  மனுஷர்  வந்து,  அங்கே  தாவீதை  யூதா  வம்சத்தாரின்மேல்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்.  கீலேயாத்தேசத்து  யாபேசின்  மனுஷர்  சவுலை  அடக்கம்பண்ணினவர்கள்  என்று  அவர்கள்  தாவீதுக்கு  அறிவித்தபோது,  (2சாமுவேல்  2:4)

appozhuthu  yoothaavin  manushar  vanthu,  anggea  thaaveethai  yoothaa  vamsaththaarinmeal  raajaavaaga  abisheagampa'n'ninaarga'l.  keeleayaaththeasaththu  yaabeasin  manushar  savulai  adakkampa'n'ninavarga'l  en’ru  avarga'l  thaaveethukku  a’riviththapoathu,  (2saamuveal  2:4)

தாவீது  கீலேயாத்தேசத்து  யாபேசின்  மனுஷரிடத்தில்  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  நீங்கள்  உங்கள்  ஆண்டவனாகிய  சவுலுக்கு  இந்தத்  தயவைச்  செய்து,  அவரை  அடக்கம்பண்ணினபடியினாலே,  கர்த்தர்  உங்களை  ஆசீர்வதிப்பாராக.  (2சாமுவேல்  2:5)

thaaveethu  keeleayaaththeasaththu  yaabeasin  manusharidaththil  sthaanaabathiga'lai  anuppi,  neengga'l  ungga'l  aa'ndavanaagiya  savulukku  inthath  thayavaich  seythu,  avarai  adakkampa'n'ninapadiyinaalea,  karththar  ungga'lai  aaseervathippaaraaga.  (2saamuveal  2:5)

கர்த்தர்  உங்களைக்  கிருபையும்  உண்மையுமாய்  நடத்துவாராக;  நீங்கள்  இந்தக்  காரியத்தைச்  செய்தபடியினால்,  நானும்  இந்த  நன்மைக்குத்தக்கதாக  உங்களை  நடத்துவேன்.  (2சாமுவேல்  2:6)

karththar  ungga'laik  kirubaiyum  u'nmaiyumaay  nadaththuvaaraaga;  neengga'l  inthak  kaariyaththaich  seythapadiyinaal,  naanum  intha  nanmaikkuththakkathaaga  ungga'lai  nadaththuvean.  (2saamuveal  2:6)

இப்போதும்  நீங்கள்  உங்கள்  கைகளைத்  திடப்படுத்திக்கொண்டு  நல்ல  சேவகராயிருங்கள்;  உங்கள்  ஆண்டவனாகிய  சவுல்  மரித்தபின்பு,  யூதா  வம்சத்தார்  என்னைத்  தங்கள்மேல்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்  என்று  அவர்களுக்குச்  சொல்லச்சொன்னான்.  (2சாமுவேல்  2:7)

ippoathum  neengga'l  ungga'l  kaiga'laith  thidappaduththikko'ndu  nalla  seavagaraayirungga'l;  ungga'l  aa'ndavanaagiya  savul  mariththapinbu,  yoothaa  vamsaththaar  ennaith  thangga'lmeal  raajaavaaga  abisheagampa'n'ninaarga'l  en’ru  avarga'lukkuch  sollachsonnaan.  (2saamuveal  2:7)

சவுலின்  படைத்தலைவனான  நேரின்  குமாரனாகிய  அப்னேர்  சவுலின்  குமாரனாகிய  இஸ்போசேத்தை  மகனாயீமுக்கு  அழைத்துக்கொண்டுபோய்,  (2சாமுவேல்  2:8)

savulin  padaiththalaivanaana  nearin  kumaaranaagiya  abnear  savulin  kumaaranaagiya  isboaseaththai  maganaayeemukku  azhaiththukko'ndupoay,  (2saamuveal  2:8)

அவனைக்  கீலேயாத்தின்மேலும்,  அஷூரியர்மேலும்,  யெஸ்ரயேலின்மேலும்,  எப்பிராயீமின்மேலும்,  பென்யமீனின்மேலும்,  இஸ்ரவேலனைத்தின்மேலும்  ராஜாவாக்கினான்.  (2சாமுவேல்  2:9)

avanaik  keeleayaaththinmealum,  ashooriyarmealum,  yesrayealinmealum,  eppiraayeeminmealum,  benyameeninmealum,  isravealanaiththinmealum  raajaavaakkinaan.  (2saamuveal  2:9)

சவுலின்  குமாரனாகிய  இஸ்போசேத்  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாகிறபோது,  நாற்பது  வயதாயிருந்தான்;  அவன்  இரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  யூதா  கோத்திரத்தார்மாத்திரம்  தாவீதைப்  பின்பற்றினார்கள்.  (2சாமுவேல்  2:10)

savulin  kumaaranaagiya  isboaseath  isravealinmeal  raajaavaagi’rapoathu,  naa’rpathu  vayathaayirunthaan;  avan  ira'ndu  varusham  raajyabaarampa'n'ninaan;  yoothaa  koaththiraththaarmaaththiram  thaaveethaip  pinpat’rinaarga'l.  (2saamuveal  2:10)

தாவீது  எப்ரோனிலே  யூதா  கோத்திரத்தின்மேல்  ராஜாவாயிருந்த  நாட்களின்  இலக்கம்  ஏழு  வருஷமும்  ஆறு  மாதமுமாம்.  (2சாமுவேல்  2:11)

thaaveethu  ebroanilea  yoothaa  koaththiraththinmeal  raajaavaayiruntha  naadka'lin  ilakkam  eazhu  varushamum  aa’ru  maathamumaam.  (2saamuveal  2:11)

நேரின்  குமாரனாகிய  அப்னேர்  சவுலின்  குமாரனாகிய  இஸ்போசேத்தின்  சேவகரைக்  கூட்டிக்கொண்டு,  மகனாயீமிலிருந்து  கிபியோனுக்குப்  புறப்பட்டுப்போனான்.  (2சாமுவேல்  2:12)

nearin  kumaaranaagiya  abnear  savulin  kumaaranaagiya  isboaseaththin  seavagaraik  koottikko'ndu,  maganaayeemilirunthu  kibiyoanukkup  pu’rappattuppoanaan.  (2saamuveal  2:12)

அப்பொழுது  செருயாவின்  குமாரனாகிய  யோவாபும்  தாவீதின்  சேவகரும்  புறப்பட்டுப்போய்,  கிபியோனின்  குளத்தண்டையில்  ஒருவருக்கொருவர்  எதிர்ப்பட்டு,  குளத்திற்கு  அந்தப்பக்கத்தில்  அவர்களும்,  குளத்திற்கு  இந்தப்பக்கத்தில்  இவர்களும்  இறங்கினார்கள்.  (2சாமுவேல்  2:13)

appozhuthu  seruyaavin  kumaaranaagiya  yoavaabum  thaaveethin  seavagarum  pu’rappattuppoay,  kibiyoanin  ku'laththa'ndaiyil  oruvarukkoruvar  ethirppattu,  ku'laththi’rku  anthappakkaththil  avarga'lum,  ku'laththi’rku  inthappakkaththil  ivarga'lum  i’rangginaarga'l.  (2saamuveal  2:13)

அப்னேர்  யோவாபை  நோக்கி:  வாலிபர்  எழுந்து,  நமக்கு  முன்பாகச்  சிலம்பம்  பண்ணட்டும்  என்றான்.  அதற்கு  யோவாப்:  அவர்கள்  எழுந்து,  அப்படிச்  செய்யட்டும்  என்றான்.  (2சாமுவேல்  2:14)

abnear  yoavaabai  noakki:  vaalibar  ezhunthu,  namakku  munbaagach  silambam  pa'n'nattum  en’raan.  atha’rku  yoavaab:  avarga'l  ezhunthu,  appadich  seyyattum  en’raan.  (2saamuveal  2:14)

அப்பொழுது  சவுலின்  குமாரனாகிய  இஸ்போசேத்தின்  பக்கத்திற்குப்  பென்யமீன்  மனுஷரில்  பன்னிரண்டுபேரும்,  தாவீதுடைய  சேவகரிலே  பன்னிரண்டுபேரும்  எழுந்து  ஒரு  பக்கமாய்ப்  போய்,  (2சாமுவேல்  2:15)

appozhuthu  savulin  kumaaranaagiya  isboaseaththin  pakkaththi’rkup  benyameen  manusharil  pannira'ndupearum,  thaaveethudaiya  seavagarilea  pannira'ndupearum  ezhunthu  oru  pakkamaayp  poay,  (2saamuveal  2:15)

ஒருவர்  தலையை  ஒருவர்  பிடித்து,  ஒருவருடைய  விலாவிலே  ஒருவர்  பட்டயத்தினாலே  குத்தி,  ஒருமிக்க  விழுந்தார்கள்;  அதினாலே  கிபியோனிலிருக்கிற  அந்த  ஸ்தலம்  எல்காத்  அசூரிம்  என்னப்பட்டது.  (2சாமுவேல்  2:16)

oruvar  thalaiyai  oruvar  pidiththu,  oruvarudaiya  vilaavilea  oruvar  pattayaththinaalea  kuththi,  orumikka  vizhunthaarga'l;  athinaalea  kibiyoanilirukki’ra  antha  sthalam  elkaath  asoorim  ennappattathu.  (2saamuveal  2:16)

அன்றையதினம்  மிகவும்  கடினமான  யுத்தமாகி,  அப்னேரும்  இஸ்ரவேல்  மனுஷரும்  தாவீதின்  சேவகரால்  முறிய  அடிக்கப்பட்டார்கள்.  (2சாமுவேல்  2:17)

an’raiyathinam  migavum  kadinamaana  yuththamaagi,  abnearum  israveal  manusharum  thaaveethin  seavagaraal  mu’riya  adikkappattaarga'l.  (2saamuveal  2:17)

அங்கே  செருயாவின்  மூன்று  குமாரராகிய  யோவாபும்  அபிசாயும்  ஆசகேலும்  இருந்தார்கள்;  ஆசகேல்  வெளியிலிருக்கிற  கலைமான்களில்  ஒன்றைப்போல  வேகமாய்  ஓடுகிறவனாயிருந்தான்.  (2சாமுவேல்  2:18)

anggea  seruyaavin  moon’ru  kumaararaagiya  yoavaabum  abisaayum  aasakealum  irunthaarga'l;  aasakeal  ve'liyilirukki’ra  kalaimaanga'lil  on’raippoala  veagamaay  oadugi’ravanaayirunthaan.  (2saamuveal  2:18)

அவன்  அப்னேரைப்  பின்தொடர்ந்து,  வலதுபுறத்திலாகிலும்  இடதுபுறத்திலாகிலும்,  அவனைவிட்டு  விலகாமல்  துரத்திக்கொண்டுபோனான்.  (2சாமுவேல்  2:19)

avan  abnearaip  pinthodarnthu,  valathupu’raththilaagilum  idathupu’raththilaagilum,  avanaivittu  vilagaamal  thuraththikko'ndupoanaan.  (2saamuveal  2:19)

அப்னேர்  திரும்பிப்  பார்த்து:  நீ  ஆசகேல்  அல்லவா  என்றான்.  அவன்:  நான்தான்  என்றான்.  (2சாமுவேல்  2:20)

abnear  thirumbip  paarththu:  nee  aasakeal  allavaa  en’raan.  avan:  naanthaan  en’raan.  (2saamuveal  2:20)

அப்பொழுது  அப்னேர்  அவனை  நோக்கி:  நீ  வலதுபக்கத்திற்காகிலும்  இடதுபக்கத்திற்காகிலும்  விலகி,  வாலிபரில்  ஒருவனைப்  பிடித்து,  அவனை  உரிந்துகொள்  என்றான்;  ஆசகேலோ  விடமாட்டேன்  என்று  தொடர்ந்துபோனான்.  (2சாமுவேல்  2:21)

appozhuthu  abnear  avanai  noakki:  nee  valathupakkaththi’rkaagilum  idathupakkaththi’rkaagilum  vilagi,  vaalibaril  oruvanaip  pidiththu,  avanai  urinthuko'l  en’raan;  aasakealoa  vidamaattean  en’ru  thodarnthupoanaan.  (2saamuveal  2:21)

பின்னும்  அப்னேர்  ஆசகேலை  நோக்கி:  நீ  என்னை  விட்டுப்போ;  நான்  உன்னைத்  தரையோடே  ஏன்  வெட்டவேண்டும்?  பிற்பாடு  உன்  சகோதரனாகிய  யோவாபின்  முகத்திலே  எப்படி  விழிப்பேன்  என்றான்.  (2சாமுவேல்  2:22)

pinnum  abnear  aasakealai  noakki:  nee  ennai  vittuppoa;  naan  unnaith  tharaiyoadea  ean  vettavea'ndum?  pi’rpaadu  un  sagoatharanaagiya  yoavaabin  mugaththilea  eppadi  vizhippean  en’raan.  (2saamuveal  2:22)

ஆனாலும்  அவன்  விலகிப்போகமாட்டேன்  என்றபடியினால்,  அப்னேர்  அவனை  ஈட்டியின்  பின்புற  அலகினால்  அவன்  வயிற்றிலே  குத்தினான்;  ஈட்டி  முதுகிலே  புறப்பட்டது;  அவன்  அங்கேதானே  விழுந்து  செத்தான்;  ஆசகேல்  விழுந்துகிடக்கிற  இடத்திலே  வந்தவர்களெல்லாரும்  தரித்து  நின்றார்கள்.  (2சாமுவேல்  2:23)

aanaalum  avan  vilagippoagamaattean  en’rapadiyinaal,  abnear  avanai  eettiyin  pinpu’ra  alaginaal  avan  vayit’rilea  kuththinaan;  eetti  muthugilea  pu’rappattathu;  avan  anggeathaanea  vizhunthu  seththaan;  aasakeal  vizhunthukidakki’ra  idaththilea  vanthavarga'lellaarum  thariththu  nin’raarga'l.  (2saamuveal  2:23)

யோவாபும்  அபிசாயும்  சூரியன்  அஸ்தமிக்குமட்டும்  அப்னேரைப்  பின்தொடர்ந்தார்கள்;  கிபியோன்  வனாந்தரவழிக்கு  அருகான  கீயாவுக்கு  எதிரே  இருக்கிற  அம்மா  மேடுமட்டும்  வந்தார்கள்.  (2சாமுவேல்  2:24)

yoavaabum  abisaayum  sooriyan  asthamikkumattum  abnearaip  pinthodarnthaarga'l;  kibiyoan  vanaantharavazhikku  arugaana  keeyaavukku  ethirea  irukki’ra  ammaa  meadumattum  vanthaarga'l.  (2saamuveal  2:24)

அப்பொழுது  அப்னேரைப்  பின்சென்ற  பென்யமீன்  புத்திரர்  ஒரே  படையாகக்  கூடி,  ஒரு  மலையின்  உச்சியிலே  நின்றார்கள்.  (2சாமுவேல்  2:25)

appozhuthu  abnearaip  pinsen’ra  benyameen  puththirar  orea  padaiyaagak  koodi,  oru  malaiyin  uchchiyilea  nin’raarga'l.  (2saamuveal  2:25)

அப்பொழுது  அப்னேர்  யோவாபைப்  பார்த்துக்  கூப்பிட்டு,  பட்டயம்  எப்போதும்  சங்காரம்  பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ,  முடிவிலே  கசப்புண்டாகும்  என்று  அறியீரோ,  தங்கள்  சகோதரரை  விட்டுப்  பின்வாங்கும்படிக்கு  எந்தமட்டும்  ஜனங்களுக்குச்  சொல்லாதிருப்பீர்  என்றான்.  (2சாமுவேல்  2:26)

appozhuthu  abnear  yoavaabaip  paarththuk  kooppittu,  pattayam  eppoathum  sanggaaram  pa'n'nikko'ndirukkavea'ndumoa,  mudivilea  kasappu'ndaagum  en’ru  a’riyeeroa,  thangga'l  sagoathararai  vittup  pinvaanggumpadikku  enthamattum  janangga'lukkuch  sollaathiruppeer  en’raan.  (2saamuveal  2:26)

அதற்கு  யோவாப்:  இன்று  காலமே  நீர்  பேசாதிருந்தீரானால்  ஜனங்கள்  அவரவர்  தங்கள்  சகோதரரைப்  பின்தொடராமல்,  அப்போதே  திரும்பிவிடுவார்கள்  என்று  தேவனுடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  (2சாமுவேல்  2:27)

atha’rku  yoavaab:  in’ru  kaalamea  neer  peasaathiruntheeraanaal  janangga'l  avaravar  thangga'l  sagoathararaip  pinthodaraamal,  appoathea  thirumbividuvaarga'l  en’ru  theavanudaiya  jeevanaikko'ndu  sollugi’rean  en’raan.  (2saamuveal  2:27)

யோவாப்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  ஜனங்கள்  எல்லாரும்  இஸ்ரவேலைத்  தொடராமலும்,  யுத்தம்பண்ணாமலும்  நின்றுவிட்டார்கள்.  (2சாமுவேல்  2:28)

yoavaab  ekkaa'lam  oothinaan;  appozhuthu  janangga'l  ellaarum  isravealaith  thodaraamalum,  yuththampa'n'naamalum  nin’ruvittaarga'l.  (2saamuveal  2:28)

அன்று  ராமுழுதும்  அப்னேரும்  அவன்  மனுஷரும்  அந்தரவெளி  வழியாய்ப்  போய்,  யோர்தானைக்  கடந்து,  பித்ரோனை  உருவ  நடந்து  தாண்டி,  மகனாயீமுக்குப்  போனார்கள்.  (2சாமுவேல்  2:29)

an’ru  raamuzhuthum  abnearum  avan  manusharum  antharave'li  vazhiyaayp  poay,  yoarthaanaik  kadanthu,  bithroanai  uruva  nadanthu  thaa'ndi,  maganaayeemukkup  poanaarga'l.  (2saamuveal  2:29)

யோவாப்  அப்னேரைத்  தொடராமல்  ஜனங்களையெல்லாம்  கூடிவரச்செய்தான்;  தாவீதின்  சேவகரில்  பத்தொன்பதுபேரும்  ஆசகேலும்  குறைந்திருந்தார்கள்.  (2சாமுவேல்  2:30)

yoavaab  abnearaith  thodaraamal  janangga'laiyellaam  koodivarachseythaan;  thaaveethin  seavagaril  paththonbathupearum  aasakealum  ku’rainthirunthaarga'l.  (2saamuveal  2:30)

தாவீதின்  சேவகரோ  பென்யமீனரிலும்,  அப்னேரின்  மனுஷரிலும்,  முந்நூற்றறுபதுபேரை  மடங்கடித்தார்கள்.  (2சாமுவேல்  2:31)

thaaveethin  seavagaroa  benyameenarilum,  abnearin  manusharilum,  munnoot’ra’rubathupearai  madanggadiththaarga'l.  (2saamuveal  2:31)

அவர்கள்  ஆசகேலை  எடுத்து,  பெத்லெகேமிலுள்ள  அவனுடைய  தகப்பன்  கல்லறையிலே  அவனை  அடக்கம்பண்ணினார்கள்;  யோவாபும்  அவன்  மனுஷரும்  இராமுழுவதும்  நடந்து,  பொழுது  விடியும்போது  எப்ரோனிலே  சேர்ந்தார்கள்.  (2சாமுவேல்  2:32)

avarga'l  aasakealai  eduththu,  bethleheamilu'l'la  avanudaiya  thagappan  kalla’raiyilea  avanai  adakkampa'n'ninaarga'l;  yoavaabum  avan  manusharum  iraamuzhuvathum  nadanthu,  pozhuthu  vidiyumpoathu  ebroanilea  searnthaarga'l.  (2saamuveal  2:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!