Monday, August 29, 2016

2 Saamuveal 19 | 2 சாமுவேல் 19 | 2 Samuel 19

இதோ,  ராஜா  அப்சலோமுக்காக  அழுது  புலம்புகிறார்  என்று  யோவாபுக்கு  அறிவிக்கப்பட்டது.  (2சாமுவேல்  19:1)

ithoa,  raajaa  absaloamukkaaga  azhuthu  pulambugi’raar  en’ru  yoavaabukku  a’rivikkappattathu.  (2saamuveal  19:1)

ராஜா  தம்முடைய  குமாரனுக்காக  மனம்நொந்திருக்கிறார்  என்று  அன்றையதினம்  ஜனங்கள்  கேள்விப்பட்டார்கள்;  அதினிமித்தம்  அன்றையதினம்  அந்த  ஜெயம்  ஜனத்திற்கெல்லாம்  துக்கமாய்  மாறிற்று.  (2சாமுவேல்  19:2)

raajaa  thammudaiya  kumaaranukkaaga  manamnonthirukki’raar  en’ru  an’raiyathinam  janangga'l  kea'lvippattaarga'l;  athinimiththam  an’raiyathinam  antha  jeyam  janaththi’rkellaam  thukkamaay  maa’rit’ru.  (2saamuveal  19:2)

யுத்தத்தில்  முறிந்தோடுகிறதினால்  வெட்கப்பட்டுத்  திருட்டளவாய்  வருகிறவர்கள்போல,  ஜனங்கள்  அன்றையதினம்  திருட்டளவாய்ப்  பட்டணத்திற்குள்  வந்தார்கள்.  (2சாமுவேல்  19:3)

yuththaththil  mu’rinthoadugi’rathinaal  vedkappattuth  thirutta'lavaay  varugi’ravarga'lpoala,  janangga'l  an’raiyathinam  thirutta'lavaayp  patta'naththi’rku'l  vanthaarga'l.  (2saamuveal  19:3)

ராஜா  தன்  முகத்தை  மூடிக்கொண்டு,  மகா  சத்தமாய்:  என்  மகனாகிய  அப்சலோமே,  அப்சலோமாகிய  என்  மகனே,  என்  மகனே  என்று  அலறிக்கொண்டிருந்தான்.  (2சாமுவேல்  19:4)

raajaa  than  mugaththai  moodikko'ndu,  mahaa  saththamaay:  en  maganaagiya  absaloamea,  absaloamaagiya  en  maganea,  en  maganea  en’ru  ala’rikko'ndirunthaan.  (2saamuveal  19:4)

அப்பொழுது  யோவாப்  வீட்டிற்குள்ளே  ராஜாவினிடத்தில்  போய்:  இன்று  உம்முடைய  ஜீவனையும்,  உம்முடைய  குமாரர்  குமாரத்திகளின்  ஜீவனையும்,  உம்முடைய  மனைவிகளின்  ஜீவனையும்,  உம்முடைய  மறுமனையாட்டிகளின்  ஜீவனையும்  தப்புவித்த  உம்முடைய  ஊழியக்காரர்  எல்லாரின்  முகத்தையும்  வெட்கப்படுத்தினீர்;  இன்று  நீர்  உம்மைப்  பகைக்கிறவர்களைச்  சிநேகித்து,  உம்மைச்  சிநேகிக்கிறவர்களைப்  பகைக்கிறீர்  என்று  விளங்குகிறது.  (2சாமுவேல்  19:5)

appozhuthu  yoavaab  veetti’rku'l'lea  raajaavinidaththil  poay:  in’ru  ummudaiya  jeevanaiyum,  ummudaiya  kumaarar  kumaaraththiga'lin  jeevanaiyum,  ummudaiya  manaiviga'lin  jeevanaiyum,  ummudaiya  ma’rumanaiyaattiga'lin  jeevanaiyum  thappuviththa  ummudaiya  oozhiyakkaarar  ellaarin  mugaththaiyum  vedkappaduththineer;  in’ru  neer  ummaip  pagaikki’ravarga'laich  sineagiththu,  ummaich  sineagikki’ravarga'laip  pagaikki’reer  en’ru  vi'langgugi’rathu.  (2saamuveal  19:5)

அதிபதிகளும்  சேவகரும்  உமக்கு  அற்பமானவர்கள்  என்று  இன்று  விளங்கப்பண்ணுகிறீர்;  அப்சலோம்  உயிரோடிருந்து,  நாங்கள்  அனைவரும்  இன்று  செத்துப்போனால்,  அப்பொழுது  உம்முடைய  பார்வைக்கு  நலமாயிருக்கும்  என்று  இன்று  அறிந்துகொண்டேன்.  (2சாமுவேல்  19:6)

athibathiga'lum  seavagarum  umakku  a’rpamaanavarga'l  en’ru  in’ru  vi'langgappa'n'nugi’reer;  absaloam  uyiroadirunthu,  naangga'l  anaivarum  in’ru  seththuppoanaal,  appozhuthu  ummudaiya  paarvaikku  nalamaayirukkum  en’ru  in’ru  a’rinthuko'ndean.  (2saamuveal  19:6)

இப்போதும்  எழுந்திருந்து  வெளியே  வந்து,  உம்முடைய  ஊழியக்காரரோடே  அன்பாய்ப்  பேசும்;  நீர்  வெளியே  வராதிருந்தால்,  இன்று  இரவு  ஒருவரும்  உம்மோடே  தங்கியிருப்பதில்லை  என்று  கர்த்தர்மேல்  ஆணையிடுகிறேன்;  அப்பொழுது  உம்முடைய  சிறுவயதுமுதல்  இதுவரைக்கும்  உமக்கு  நேரிட்ட  எல்லாத்  தீமையைப்பார்க்கிலும்,  அது  உமக்கு  அதிக  தீமையாயிருக்கும்  என்றான்.  (2சாமுவேல்  19:7)

ippoathum  ezhunthirunthu  ve'liyea  vanthu,  ummudaiya  oozhiyakkaararoadea  anbaayp  peasum;  neer  ve'liyea  varaathirunthaal,  in’ru  iravu  oruvarum  ummoadea  thanggiyiruppathillai  en’ru  karththarmeal  aa'naiyidugi’rean;  appozhuthu  ummudaiya  si’ruvayathumuthal  ithuvaraikkum  umakku  nearitta  ellaath  theemaiyaippaarkkilum,  athu  umakku  athiga  theemaiyaayirukkum  en’raan.  (2saamuveal  19:7)

அப்பொழுது  ராஜா  எழுந்துபோய்,  ஒலிமுகவாசலில்  உட்கார்ந்தான்;  இதோ,  ராஜா  ஒலிமுகவாசலில்  உட்கார்ந்திருக்கிறார்  என்று  சகல  ஜனங்களுக்கும்  அறிவிக்கப்பட்டபோது,  ஜனங்கள்  எல்லாரும்  ராஜாவுக்கு  முன்பாக  வந்தார்கள்;  இஸ்ரவேலரோவெனில்  அவரவர்  தங்கள்  கூடாரங்களுக்கு  ஓடிப்போனார்கள்.  (2சாமுவேல்  19:8)

appozhuthu  raajaa  ezhunthupoay,  olimugavaasalil  udkaarnthaan;  ithoa,  raajaa  olimugavaasalil  udkaarnthirukki’raar  en’ru  sagala  janangga'lukkum  a’rivikkappattapoathu,  janangga'l  ellaarum  raajaavukku  munbaaga  vanthaarga'l;  isravealaroavenil  avaravar  thangga'l  koodaarangga'lukku  oadippoanaarga'l.  (2saamuveal  19:8)

இஸ்ரவேலுடைய  சகல  கோத்திரங்களிலுமுள்ள  சகல  ஜனங்களுக்குள்ளும்  வாக்குவாதம்  உண்டாகி,  அவர்கள்:  ராஜா  நம்முடைய  சத்துருக்களின்  கைக்கு  நம்மை  நீங்கலாக்கிவிட்டார்,  அவர்தானே  பெலிஸ்தரின்  கைக்கு  நம்மைத்  தப்புவித்தார்;  இப்போதோ  அப்சலோமுக்குத்  தப்ப,  தேசத்தைவிட்டு  ஓடிப்போனார்.  (2சாமுவேல்  19:9)

isravealudaiya  sagala  koaththirangga'lilumu'l'la  sagala  janangga'lukku'l'lum  vaakkuvaatham  u'ndaagi,  avarga'l:  raajaa  nammudaiya  saththurukka'lin  kaikku  nammai  neenggalaakkivittaar,  avarthaanea  pelistharin  kaikku  nammaith  thappuviththaar;  ippoathoa  absaloamukkuth  thappa,  theasaththaivittu  oadippoanaar.  (2saamuveal  19:9)

நமக்கு  ராஜாவாக  அபிஷேகம்பண்ணிவைத்த  அப்சலோம்  யுத்தத்திலே  செத்தான்;  இப்போதும்  ராஜாவைத்  திரும்ப  அழைத்து  வராமல்  நீங்கள்  சும்மாயிருப்பானேன்  என்று  சொல்லிக்கொண்டார்கள்.  (2சாமுவேல்  19:10)

namakku  raajaavaaga  abisheagampa'n'nivaiththa  absaloam  yuththaththilea  seththaan;  ippoathum  raajaavaith  thirumba  azhaiththu  varaamal  neengga'l  summaayiruppaanean  en’ru  sollikko'ndaarga'l.  (2saamuveal  19:10)

இப்படி  இஸ்ரவேலர்  எல்லாரும்  பேசிக்கொண்டிருக்கிறது,  ராஜா  இருக்கிற  வீட்டிலே  அவனுக்குக்  கேள்வியானபடியினால்,  தாவீதுராஜா  சாதோக்  அபியத்தார்  என்னும்  ஆசாரியர்களிடத்துக்கு  ஆள்  அனுப்பி,  நீங்கள்  யூதாவின்  மூப்பரோடே  பேசி:  ராஜாவைத்  தம்முடைய  வீட்டுக்குத்  திரும்ப  அழைத்துவர  நீங்கள்  மற்றவர்களுக்குப்  பிந்திப்போவானேன்?  (2சாமுவேல்  19:11)

ippadi  isravealar  ellaarum  peasikko'ndirukki’rathu,  raajaa  irukki’ra  veettilea  avanukkuk  kea'lviyaanapadiyinaal,  thaaveethuraajaa  saathoak  abiyaththaar  ennum  aasaariyarga'lidaththukku  aa'l  anuppi,  neengga'l  yoothaavin  moopparoadea  peasi:  raajaavaith  thammudaiya  veettukkuth  thirumba  azhaiththuvara  neengga'l  mat’ravarga'lukkup  pinthippoavaanean?  (2saamuveal  19:11)

நீங்கள்  என்  சகோதரர்,  நீங்கள்  என்  எலும்பும்  என்  மாம்சமுமானவர்கள்;  ராஜாவைத்  திரும்ப  அழைத்துவர  நீங்கள்  பிந்தினவர்களாயிருப்பானேன்  என்று  சொல்லுங்கள்.  (2சாமுவேல்  19:12)

neengga'l  en  sagoatharar,  neengga'l  en  elumbum  en  maamsamumaanavarga'l;  raajaavaith  thirumba  azhaiththuvara  neengga'l  pinthinavarga'laayiruppaanean  en’ru  sollungga'l.  (2saamuveal  19:12)

நீங்கள்  அமாசாவையும்  நோக்கி:  நீ  என்  எலும்பும்  என்  மாம்சமும்  அல்லவோ?  நீ  யோவாபுக்குப்  பதிலாக  எந்நாளும்  எனக்கு  முன்பாகப்  படைத்தலைவனாயிராவிட்டால்,  தேவன்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்  என்று  சொல்லச்சொன்னான்.  (2சாமுவேல்  19:13)

neengga'l  amaasaavaiyum  noakki:  nee  en  elumbum  en  maamsamum  allavoa?  nee  yoavaabukkup  bathilaaga  ennaa'lum  enakku  munbaagap  padaiththalaivanaayiraavittaal,  theavan  atha’rkuch  sariyaagavum  atha’rku  athigamaagavum  enakkuch  seyyakkadavar  en’ru  sollachsonnaan.  (2saamuveal  19:13)

இப்படியே  யூதாவின்  சகல  மனுஷருடைய  இருதயத்தையும்  ஒரு  மனுஷனுடைய  இருதயத்தைப்போல்  இணங்கப்பண்ணினதினால்,  அவர்கள்  ராஜாவுக்கு:  நீர்  உம்முடைய  எல்லா  ஊழியக்காரரோடும்  திரும்பிவாரும்  என்று  சொல்லி  அனுப்பினார்கள்.  (2சாமுவேல்  19:14)

ippadiyea  yoothaavin  sagala  manusharudaiya  iruthayaththaiyum  oru  manushanudaiya  iruthayaththaippoal  i'nanggappa'n'ninathinaal,  avarga'l  raajaavukku:  neer  ummudaiya  ellaa  oozhiyakkaararoadum  thirumbivaarum  en’ru  solli  anuppinaarga'l.  (2saamuveal  19:14)

ராஜா  திரும்ப  வருகிறதற்கு  யோர்தான்மட்டும்  வந்தபோது,  யூதா  கோத்திரத்தார்  ராஜாவுக்கு  எதிர்கொண்டுபோய்,  ராஜாவை  யோர்தானைக்  கடக்கப்பண்ண  கில்கால்மட்டும்  வந்தார்கள்.  (2சாமுவேல்  19:15)

raajaa  thirumba  varugi’ratha’rku  yoarthaanmattum  vanthapoathu,  yoothaa  koaththiraththaar  raajaavukku  ethirko'ndupoay,  raajaavai  yoarthaanaik  kadakkappa'n'na  kilgaalmattum  vanthaarga'l.  (2saamuveal  19:15)

பகூரிம்  ஊரானான  பென்யமீனனாகிய  கேராவின்  மகன்  சீமேயியும்  தீவிரித்து,  யூதா  மனுஷரோடுங்கூடத்  தாவீது  ராஜாவுக்கு  எதிர்கொண்டுபோனான்.  (2சாமுவேல்  19:16)

bagoorim  ooraanaana  benyameenanaagiya  kearaavin  magan  seemeayiyum  theeviriththu,  yoothaa  manusharoadungkoodath  thaaveethu  raajaavukku  ethirko'ndupoanaan.  (2saamuveal  19:16)

அவனோடே  பென்யமீன்  மனுஷர்  ஆயிரம்பேரும்,  சவுலின்  வீட்டு  வேலைக்காரனாகிய  சீபாவும்,  அவனோடேகூட  அவனுடைய  பதினைந்து  குமாரரும்,  அவனுடைய  இருபது  வேலைக்காரரும்  இருந்தார்கள்;  அவர்கள்  ராஜாவுக்கு  முன்பாக  யோர்தானை  வேகமாய்க்  கடந்துபோனார்கள்.  (2சாமுவேல்  19:17)

avanoadea  benyameen  manushar  aayirampearum,  savulin  veettu  vealaikkaaranaagiya  seebaavum,  avanoadeakooda  avanudaiya  pathinainthu  kumaararum,  avanudaiya  irubathu  vealaikkaararum  irunthaarga'l;  avarga'l  raajaavukku  munbaaga  yoarthaanai  veagamaayk  kadanthupoanaarga'l.  (2saamuveal  19:17)

அவர்கள்  ராஜாவின்  வீட்டாரை  இக்கரைப்படுத்தவும்,  அவன்  விரும்பும்  காரியத்துக்கு  உதவவும்,  ஒரு  படகு  இக்கரையிலே  வந்தது;  அப்பொழுது  கேராவின்  குமாரனாகிய  சீமேயி  யோர்தானைக்  கடக்கப்போகிற  ராஜாவுக்கு  முன்பாகத்  தாழவிழுந்து,  (2சாமுவேல்  19:18)

avarga'l  raajaavin  veettaarai  ikkaraippaduththavum,  avan  virumbum  kaariyaththukku  uthavavum,  oru  padagu  ikkaraiyilea  vanthathu;  appozhuthu  kearaavin  kumaaranaagiya  seemeayi  yoarthaanaik  kadakkappoagi’ra  raajaavukku  munbaagath  thaazhavizhunthu,  (2saamuveal  19:18)

ராஜாவை  நோக்கி:  என்  ஆண்டவன்  என்  அக்கிரமத்தை  என்மேல்  சுமத்தாமலும்,  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  எருசலேமிலிருந்து  புறப்பட்டு  வருகிற  நாளிலே,  உமது  அடியான்  செய்த  துரோகத்தை  ராஜா  நினைக்காமலும்,  தமது  மனதில்  வைக்காமலும்  இருப்பாராக.  (2சாமுவேல்  19:19)

raajaavai  noakki:  en  aa'ndavan  en  akkiramaththai  enmeal  sumaththaamalum,  raajaavaagiya  en  aa'ndavan  erusaleamilirunthu  pu’rappattu  varugi’ra  naa'lilea,  umathu  adiyaan  seytha  thuroagaththai  raajaa  ninaikkaamalum,  thamathu  manathil  vaikkaamalum  iruppaaraaga.  (2saamuveal  19:19)

உமது  அடியானாகிய  நான்  பாவஞ்செய்தேன்  என்று  அறிந்திருக்கிறேன்;  இப்போதும்,  இதோ,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்கு  எதிர்கொண்டுவர,  யோசேப்பு  வீட்டார்  அனைவருக்கும்  நான்  இன்று  முந்திக்கொண்டேன்  என்றான்.  (2சாமுவேல்  19:20)

umathu  adiyaanaagiya  naan  paavagnseythean  en’ru  a’rinthirukki’rean;  ippoathum,  ithoa,  raajaavaagiya  en  aa'ndavanukku  ethirko'nduvara,  yoaseappu  veettaar  anaivarukkum  naan  in’ru  munthikko'ndean  en’raan.  (2saamuveal  19:20)

அப்பொழுது  செருயாவின்  குமாரனாகிய  அபிசாய்  பிரதியுத்தரமாக:  கர்த்தர்  அபிஷேகம்பண்ணினவரைச்  சீமேயி  தூஷித்தபடியினால்,  அவனை  அதற்காகக்  கொல்லவேண்டாமா  என்றான்.  (2சாமுவேல்  19:21)

appozhuthu  seruyaavin  kumaaranaagiya  abisaay  pirathiyuththaramaaga:  karththar  abisheagampa'n'ninavaraich  seemeayi  thooshiththapadiyinaal,  avanai  atha’rkaagak  kollavea'ndaamaa  en’raan.  (2saamuveal  19:21)

அதற்குத்  தாவீது:  செருயாவின்  குமாரரே,  இன்று  நீங்கள்  எனக்குச்  சத்துருக்களாகிறதற்கு,  எனக்கும்  உங்களுக்கும்  என்ன?  இன்று  இஸ்ரவேலில்  ஒருவன்  கொல்லப்படலாமா?  இன்று  நான்  இஸ்ரவேலின்மேல்  ராஜாவானேன்  என்று  எனக்குத்  தெரியாதா  என்று  சொல்லி,  (2சாமுவேல்  19:22)

atha’rkuth  thaaveethu:  seruyaavin  kumaararea,  in’ru  neengga'l  enakkuch  saththurukka'laagi’ratha’rku,  enakkum  ungga'lukkum  enna?  in’ru  isravealil  oruvan  kollappadalaamaa?  in’ru  naan  isravealinmeal  raajaavaanean  en’ru  enakkuth  theriyaathaa  en’ru  solli,  (2saamuveal  19:22)

ராஜா  சீமேயியைப்  பார்த்து:  நீ  சாவதில்லை  என்று  அவனுக்கு  ஆணையிட்டான்.  (2சாமுவேல்  19:23)

raajaa  seemeayiyaip  paarththu:  nee  saavathillai  en’ru  avanukku  aa'naiyittaan.  (2saamuveal  19:23)

சவுலின்  குமாரனாகிய  மேவிபோசேத்தும்  ராஜாவுக்கு  எதிர்கொண்டுவந்தான்;  ராஜா  போனநாள்முதல்,  அவன்  சமாதானத்தோடே  திரும்பிவருகிற  நாள்மட்டும்,  அவன்  தன்  கால்களைச்  சுத்தம்பண்ணவுமில்லை,  தன்  தாடியைச்  சவரம்பண்ணவுமில்லை;  தன்  வஸ்திரங்களை  வெளுக்கவுமில்லை.  (2சாமுவேல்  19:24)

savulin  kumaaranaagiya  meaviboaseaththum  raajaavukku  ethirko'nduvanthaan;  raajaa  poananaa'lmuthal,  avan  samaathaanaththoadea  thirumbivarugi’ra  naa'lmattum,  avan  than  kaalga'laich  suththampa'n'navumillai,  than  thaadiyaich  savarampa'n'navumillai;  than  vasthirangga'lai  ve'lukkavumillai.  (2saamuveal  19:24)

அவன்  எருசலேமிலிருந்து  ராஜாவுக்கு  எதிர்கொண்டு  வருகிறபோது,  ராஜா  அவனைப்  பார்த்து:  மேவிபோசேத்தே,  நீ  என்னோடுகூட  வராமல்போனது  என்ன  என்று  கேட்டான்.  (2சாமுவேல்  19:25)

avan  erusaleamilirunthu  raajaavukku  ethirko'ndu  varugi’rapoathu,  raajaa  avanaip  paarththu:  meaviboaseaththea,  nee  ennoadukooda  varaamalpoanathu  enna  en’ru  keattaan.  (2saamuveal  19:25)

அதற்கு  அவன்:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  என்  வேலைக்காரன்  என்னை  மோசம்போக்கினான்;  உமது  அடியானாகிய  நான்  முடவனானபடியினால்,  ஒரு  கழுதையின்மேல்  சேணம்வைத்து  அதின்மேல்  ஏறி,  ராஜாவோடேகூடப்  போகிறேன்  என்று  அடியேன்  சொன்னேன்.  (2சாமுவேல்  19:26)

atha’rku  avan:  raajaavaagiya  en  aa'ndavanea,  en  vealaikkaaran  ennai  moasampoakkinaan;  umathu  adiyaanaagiya  naan  mudavanaanapadiyinaal,  oru  kazhuthaiyinmeal  sea'namvaiththu  athinmeal  ea’ri,  raajaavoadeakoodap  poagi’rean  en’ru  adiyean  sonnean.  (2saamuveal  19:26)

அவன்  ராஜாவாகிய  என்  ஆண்டவனிடத்தில்  உமது  அடியான்மேல்  வீண்பழி  சொன்னான்;  ராஜாவாகிய  என்  ஆண்டவனோ  தேவனுடைய  தூதனைப்போல  இருக்கிறார்;  உமது  பார்வைக்கு  நலமாய்த்  தோன்றுகிறபடி  செய்யும்.  (2சாமுவேல்  19:27)

avan  raajaavaagiya  en  aa'ndavanidaththil  umathu  adiyaanmeal  vee'npazhi  sonnaan;  raajaavaagiya  en  aa'ndavanoa  theavanudaiya  thoothanaippoala  irukki’raar;  umathu  paarvaikku  nalamaayth  thoan’rugi’rapadi  seyyum.  (2saamuveal  19:27)

ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்கு  முன்பாக  என்  தகப்பன்  வீட்டார்  எல்லாரும்  சாவுக்கு  ஏதுவாயிருந்தார்களே  ஒழிய,  மற்றப்படி  அல்ல;  ஆனாலும்  உமது  பந்தியிலே  சாப்பிடுகிறவர்களோடே  உமது  அடியேனை  வைத்தீர்;  இன்னும்  நான்  ராஜாவிடத்தில்  முறையிட,  இனி  எனக்கு  என்ன  நியாயம்  இருக்கிறது  என்றான்.  (2சாமுவேல்  19:28)

raajaavaagiya  en  aa'ndavanukku  munbaaga  en  thagappan  veettaar  ellaarum  saavukku  eathuvaayirunthaarga'lea  ozhiya,  mat’rappadi  alla;  aanaalum  umathu  panthiyilea  saappidugi’ravarga'loadea  umathu  adiyeanai  vaiththeer;  innum  naan  raajaavidaththil  mu’raiyida,  ini  enakku  enna  niyaayam  irukki’rathu  en’raan.  (2saamuveal  19:28)

அப்பொழுது  ராஜா  அவனைப்  பார்த்து:  உன்  காரியத்தைக்குறித்து  அதிகமாய்ப்  பேசுவானேன்?  நீயும்  சீபாவும்  நிலத்தைப்  பங்கிட்டுக்கொள்ளுங்கள்  என்று  நான்  சொல்லுகிறேன்  என்றான்.  (2சாமுவேல்  19:29)

appozhuthu  raajaa  avanaip  paarththu:  un  kaariyaththaikku’riththu  athigamaayp  peasuvaanean?  neeyum  seebaavum  nilaththaip  panggittukko'l'lungga'l  en’ru  naan  sollugi’rean  en’raan.  (2saamuveal  19:29)

அதற்கு  மேவிபோசேத்  ராஜாவை  நோக்கி:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  சமாதானத்தோடே  தம்முடைய  வீட்டிற்கு  வந்திருக்கும்போது,  அவனே  எல்லாவற்றையும்  எடுத்துக்கொள்ளட்டும்  என்றான்.  (2சாமுவேல்  19:30)

atha’rku  meaviboaseath  raajaavai  noakki:  raajaavaagiya  en  aa'ndavan  samaathaanaththoadea  thammudaiya  veetti’rku  vanthirukkumpoathu,  avanea  ellaavat’raiyum  eduththukko'l'lattum  en’raan.  (2saamuveal  19:30)

கீலேயாத்தியனாகிய  பர்சிலாவும்  ரோகிலிமிலிருந்து  வந்து,  யோர்தான்மட்டும்  ராஜாவை  வழிவிட்டனுப்ப,  அவனோடேகூட  யோர்தானின்  துறைமட்டும்  கடந்துவந்தான்.  (2சாமுவேல்  19:31)

keeleayaaththiyanaagiya  barsilaavum  roagilimilirunthu  vanthu,  yoarthaanmattum  raajaavai  vazhivittanuppa,  avanoadeakooda  yoarthaanin  thu’raimattum  kadanthuvanthaan.  (2saamuveal  19:31)

பர்சிலா  எண்பது  வயதுசென்ற  கிழவனாயிருந்தான்;  ராஜா  மக்னாயீமிலே  தங்கியிருக்குமட்டும்  அவனைப்  பராமரித்து  வந்தான்;  அவன்  மகா  பெரிய  மனுஷனாயிருந்தான்.  (2சாமுவேல்  19:32)

barsilaa  e'nbathu  vayathusen’ra  kizhavanaayirunthaan;  raajaa  maknaayeemilea  thanggiyirukkumattum  avanaip  paraamariththu  vanthaan;  avan  mahaa  periya  manushanaayirunthaan.  (2saamuveal  19:32)

ராஜா  பர்சிலாவை  நோக்கி:  நீ  என்னோடேகூடக்  கடந்துவா,  எருசலேமிலே  உன்னை  என்னிடத்தில்  வைத்துப்  பராமரிப்பேன்  என்றான்.  (2சாமுவேல்  19:33)

raajaa  barsilaavai  noakki:  nee  ennoadeakoodak  kadanthuvaa,  erusaleamilea  unnai  ennidaththil  vaiththup  paraamarippean  en’raan.  (2saamuveal  19:33)

பர்சிலா  ராஜாவைப்  பார்த்து:  நான்  ராஜாவோடேகூட  எருசலேமுக்கு  வர,  நான்  இன்னும்  உயிரோடிருக்கும்  ஆயுசின்  நாட்கள்  எம்மாத்திரம்?  (2சாமுவேல்  19:34)

barsilaa  raajaavaip  paarththu:  naan  raajaavoadeakooda  erusaleamukku  vara,  naan  innum  uyiroadirukkum  aayusin  naadka'l  emmaaththiram?  (2saamuveal  19:34)

இப்பொழுது  நான்  எண்பது  வயதுள்ளவன்;  இனி  நலமானது  இன்னதென்றும்  தீதானது  இன்னதென்றும்  எனக்குத்  தெரியுமோ?  புசிக்கிறதும்  குடிக்கிறதும்  உமது  அடியேனுக்கு  ருசிகரமாயிருக்குமோ?  சங்கீதக்காரர்  சங்கீதக்காரிகளுடைய  சத்தத்தை  இனிக்  கேட்கக்கூடுமோ?  உமது  அடியேனாகிய  நான்  இனி  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்குப்  பாரமாயிருக்கவேண்டியது  என்ன?  (2சாமுவேல்  19:35)

ippozhuthu  naan  e'nbathu  vayathu'l'lavan;  ini  nalamaanathu  innathen’rum  theethaanathu  innathen’rum  enakkuth  theriyumoa?  pusikki’rathum  kudikki’rathum  umathu  adiyeanukku  rusigaramaayirukkumoa?  sanggeethakkaarar  sanggeethakkaariga'ludaiya  saththaththai  inik  keadkakkoodumoa?  umathu  adiyeanaagiya  naan  ini  raajaavaagiya  en  aa'ndavanukkup  baaramaayirukkavea'ndiyathu  enna?  (2saamuveal  19:35)

அடியேன்  கொஞ்சதூரம்  யோர்தான்மட்டும்  ராஜாவோடேகூட  வருவேன்;  அதற்கு  ராஜா  இவ்வளவு  பெரிய  உபகாரத்தை  எனக்குச்  செய்யவேண்டியது  என்ன?  (2சாமுவேல்  19:36)

adiyean  kognchathooram  yoarthaanmattum  raajaavoadeakooda  varuvean;  atha’rku  raajaa  ivva'lavu  periya  ubagaaraththai  enakkuch  seyyavea'ndiyathu  enna?  (2saamuveal  19:36)

நான்  என்  ஊரிலே  மரித்து,  என்  தாய்  தகப்பன்மார்  கல்லறையிலே  அடக்கம்பண்ணப்படும்படிக்கு,  உமது  அடியான்  திரும்பிப்போகட்டும்;  ஆனாலும்,  இதோ,  உமது  அடியானாகிய  கிம்காம்  ராஜாவாகிய  என்  ஆண்டவனோடேகூட  வருவான்;  உம்முடைய  பார்வைக்கு  நலமானபடி  அவனுக்குச்  செய்யும்  என்றான்.  (2சாமுவேல்  19:37)

naan  en  oorilea  mariththu,  en  thaay  thagappanmaar  kalla’raiyilea  adakkampa'n'nappadumpadikku,  umathu  adiyaan  thirumbippoagattum;  aanaalum,  ithoa,  umathu  adiyaanaagiya  kimkaam  raajaavaagiya  en  aa'ndavanoadeakooda  varuvaan;  ummudaiya  paarvaikku  nalamaanapadi  avanukkuch  seyyum  en’raan.  (2saamuveal  19:37)

அப்பொழுது  ராஜா:  கிம்காம்  என்னோடேகூட  வரட்டும்;  உன்  பார்வைக்கு  நலமானபடியே  நான்  அவனுக்கு  நடப்பித்து,  நீ  என்னிடத்தில்  வேண்டிக்கொள்வதையெல்லாம்  நான்  உனக்குச்  செய்வேன்  என்றான்.  (2சாமுவேல்  19:38)

appozhuthu  raajaa:  kimkaam  ennoadeakooda  varattum;  un  paarvaikku  nalamaanapadiyea  naan  avanukku  nadappiththu,  nee  ennidaththil  vea'ndikko'lvathaiyellaam  naan  unakkuch  seyvean  en’raan.  (2saamuveal  19:38)

ஜனங்கள்  எல்லாரும்  யோர்தானைக்  கடந்தபோது,  ராஜா  பர்சிலாவை  முத்தமிட்டு  அவனை  ஆசீர்வதித்து,  தானும்  கடந்துபோனான்;  அவனோ  தன்னிடத்திற்குத்  திரும்பிப்போய்விட்டான்.  (2சாமுவேல்  19:39)

janangga'l  ellaarum  yoarthaanaik  kadanthapoathu,  raajaa  barsilaavai  muththamittu  avanai  aaseervathiththu,  thaanum  kadanthupoanaan;  avanoa  thannidaththi’rkuth  thirumbippoayvittaan.  (2saamuveal  19:39)

ராஜா  கடந்து,  கில்கால்மட்டும்  போனான்;  கிம்காம்  அவனோடேகூடக்  கடந்துவந்தான்;  யூதா  ஜனம்  அனைத்தும்,  இஸ்ரவேலில்  பாதிஜனமும்,  ராஜாவை  இக்கரைப்படுத்தி  வந்தபின்பு,  (2சாமுவேல்  19:40)

raajaa  kadanthu,  kilgaalmattum  poanaan;  kimkaam  avanoadeakoodak  kadanthuvanthaan;  yoothaa  janam  anaiththum,  isravealil  paathijanamum,  raajaavai  ikkaraippaduththi  vanthapinbu,  (2saamuveal  19:40)

இதோ,  இஸ்ரவேல்  மனுஷர்  எல்லாரும்  ராஜாவினிடத்தில்  வந்து,  ராஜாவை  நோக்கி:  எங்கள்  சகோதரராகிய  யூதா  மனுஷர்  திருட்டளவாய்  உம்மை  அழைத்துவந்து,  ராஜாவையும்,  அவர்  வீட்டாரையும்,  அவரோடேகூட  இருக்கிற  தாவீதின்  மனுஷர்  அனைவரையும்,  யோர்தானைக்  கடக்கப்பண்ணினது  என்ன  என்றார்கள்.  (2சாமுவேல்  19:41)

ithoa,  israveal  manushar  ellaarum  raajaavinidaththil  vanthu,  raajaavai  noakki:  engga'l  sagoathararaagiya  yoothaa  manushar  thirutta'lavaay  ummai  azhaiththuvanthu,  raajaavaiyum,  avar  veettaaraiyum,  avaroadeakooda  irukki’ra  thaaveethin  manushar  anaivaraiyum,  yoarthaanaik  kadakkappa'n'ninathu  enna  en’raarga'l.  (2saamuveal  19:41)

அப்பொழுது  யூதா  மனுஷர்  எல்லாரும்  இஸ்ரவேல்  மனுஷருக்குப்  பிரதியுத்தரமாக:  ராஜா  எங்களைச்  சேர்ந்தவரானபடியினால்  இதைச்  செய்தோம்;  இதற்காக  நீங்கள்  கோபிப்பானேன்?  நாங்கள்  ராஜாவின்  கையிலே  ஏதாகிலும்  வாங்கித்  தின்றோமோ?  எங்களுக்கு  வெகுமானம்  கொடுக்கப்பட்டதோ?  என்றார்கள்.  (2சாமுவேல்  19:42)

appozhuthu  yoothaa  manushar  ellaarum  israveal  manusharukkup  pirathiyuththaramaaga:  raajaa  engga'laich  searnthavaraanapadiyinaal  ithaich  seythoam;  itha’rkaaga  neengga'l  koabippaanean?  naangga'l  raajaavin  kaiyilea  eathaagilum  vaanggith  thin’roamoa?  engga'lukku  vegumaanam  kodukkappattathoa?  en’raarga'l.  (2saamuveal  19:42)

இஸ்ரவேல்  மனுஷரோ  யூதா  மனுஷருக்குப்  பிரதியுத்தரமாக:  ராஜாவினிடத்தில்  எங்களுக்குப்  பத்துப்பங்கு  இருக்கிறது;  உங்களைப்பார்க்கிலும்  எங்களுக்குத்  தாவீதினிடத்தில்  அதிக  உரிமை  உண்டு;  பின்னை  ஏன்  எங்களை  அற்பமாய்  எண்ணினீர்கள்;  எங்கள்  ராஜாவைத்  திரும்ப  அழைத்துவரவேண்டும்  என்று  முந்திச்  சொன்னவர்கள்  நாங்கள்  அல்லவா  என்றார்கள்;  ஆனாலும்  இஸ்ரவேல்  மனுஷரின்  பேச்சைப்பார்க்கிலும்  யூதா  மனுஷரின்  பேச்சு  பலத்தது.  (2சாமுவேல்  19:43)

israveal  manusharoa  yoothaa  manusharukkup  pirathiyuththaramaaga:  raajaavinidaththil  engga'lukkup  paththuppanggu  irukki’rathu;  ungga'laippaarkkilum  engga'lukkuth  thaaveethinidaththil  athiga  urimai  u'ndu;  pinnai  ean  engga'lai  a’rpamaay  e'n'nineerga'l;  engga'l  raajaavaith  thirumba  azhaiththuvaravea'ndum  en’ru  munthich  sonnavarga'l  naangga'l  allavaa  en’raarga'l;  aanaalum  israveal  manusharin  peachchaippaarkkilum  yoothaa  manusharin  peachchu  balaththathu.  (2saamuveal  19:43)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!