Monday, August 29, 2016

2 Saamuveal 18 | 2 சாமுவேல் 18 | 2 Samuel 18

தாவீது  தன்னோடிருந்த  ஜனங்களை  இலக்கம்  பார்த்து,  அவர்கள்மேல்  ஆயிரத்துக்கு  அதிபதிகளையும்,  நூற்றுக்கு  அதிபதிகளையும்  வைத்து,  (2சாமுவேல்  18:1)

thaaveethu  thannoadiruntha  janangga'lai  ilakkam  paarththu,  avarga'lmeal  aayiraththukku  athibathiga'laiyum,  noot’rukku  athibathiga'laiyum  vaiththu,  (2saamuveal  18:1)

பின்பு  தாவீது  ஜனங்களில்  மூன்றில்  ஒரு  பங்கை  யோவாபின்  வசமாகவும்,  மூன்றில்  ஒரு  பங்கைச்  செருயாவின்  குமாரனும்  யோவாபின்  சகோதரனுமான  அபிசாயின்  வசமாகவும்,  மூன்றில்  ஒரு  பங்கைக்  கித்தியனாகிய  ஈத்தாயின்  வசமாகவும்  அனுப்பி:  நானும்  உங்களோடேகூடப்  புறப்பட்டு  வருவேன்  என்று  ராஜா  ஜனங்களிடத்தில்  சொன்னான்.  (2சாமுவேல்  18:2)

pinbu  thaaveethu  janangga'lil  moon’ril  oru  panggai  yoavaabin  vasamaagavum,  moon’ril  oru  panggaich  seruyaavin  kumaaranum  yoavaabin  sagoatharanumaana  abisaayin  vasamaagavum,  moon’ril  oru  panggaik  kiththiyanaagiya  eeththaayin  vasamaagavum  anuppi:  naanum  ungga'loadeakoodap  pu’rappattu  varuvean  en’ru  raajaa  janangga'lidaththil  sonnaan.  (2saamuveal  18:2)

ஜனங்களோ:  நீர்  புறப்படவேண்டாம்;  நாங்கள்  முறிந்தோடிப்போனாலும்,  அவர்கள்  எங்கள்  காரியத்தை  ஒரு  பொருட்டாக  எண்ணமாட்டார்கள்;  எங்களில்  பாதிப்பேர்  செத்துப்போனாலும்,  எங்கள்  காரியத்தைப்பற்றிக்  கவலைப்படமாட்டார்கள்;  நீரோ,  எங்களில்  பதினாயிரம்பேருக்குச்  சரி;  நீர்  பட்டணத்தில்  இருந்துகொண்டு,  எங்களுக்கு  உதவிசெய்கிறது  எங்களுக்கு  நலமாயிருக்கும்  என்றார்கள்.  (2சாமுவேல்  18:3)

janangga'loa:  neer  pu’rappadavea'ndaam;  naangga'l  mu’rinthoadippoanaalum,  avarga'l  engga'l  kaariyaththai  oru  poruttaaga  e'n'namaattaarga'l;  engga'lil  paathippear  seththuppoanaalum,  engga'l  kaariyaththaippat’rik  kavalaippadamaattaarga'l;  neeroa,  engga'lil  pathinaayirampearukkuch  sari;  neer  patta'naththil  irunthuko'ndu,  engga'lukku  uthaviseygi’rathu  engga'lukku  nalamaayirukkum  en’raarga'l.  (2saamuveal  18:3)

அப்பொழுது  ராஜா  அவர்களைப்  பார்த்து:  உங்களுக்கு  நலமாய்த்  தோன்றுகிறதைச்  செய்வேன்  என்று  சொல்லி,  ராஜா  ஒலிமுகவாசல்  ஓரத்திலே  நின்றான்;  ஜனங்கள்  எல்லாரும்  நூறுநூறாகவும்,  ஆயிரம்  ஆயிரமாகவும்  புறப்பட்டார்கள்.  (2சாமுவேல்  18:4)

appozhuthu  raajaa  avarga'laip  paarththu:  ungga'lukku  nalamaayth  thoan’rugi’rathaich  seyvean  en’ru  solli,  raajaa  olimugavaasal  oaraththilea  nin’raan;  janangga'l  ellaarum  noo’runoo’raagavum,  aayiram  aayiramaagavum  pu’rappattaarga'l.  (2saamuveal  18:4)

ராஜா  யோவாபையும்,  அபிசாயையும்,  ஈத்தாயையும்  நோக்கி:  பிள்ளையாண்டானாகிய  அப்சலோமை  என்னிமித்தம்  மெதுவாய்  நடப்பியுங்கள்  என்று  கட்டளையிட்டான்;  இப்படி  ராஜா  அப்சலோமைக்குறித்து  அதிபதிகளுக்கெல்லாம்  கட்டளையிட்டதை  ஜனங்கள்  எல்லாரும்  கேட்டிருந்தார்கள்.  (2சாமுவேல்  18:5)

raajaa  yoavaabaiyum,  abisaayaiyum,  eeththaayaiyum  noakki:  pi'l'laiyaa'ndaanaagiya  absaloamai  ennimiththam  methuvaay  nadappiyungga'l  en’ru  katta'laiyittaan;  ippadi  raajaa  absaloamaikku’riththu  athibathiga'lukkellaam  katta'laiyittathai  janangga'l  ellaarum  keattirunthaarga'l.  (2saamuveal  18:5)

ஜனங்கள்  வெளியே  இஸ்ரவேலருக்கு  எதிராகப்  புறப்பட்டபிற்பாடு,  எப்பிராயீம்  காட்டிலே  யுத்தம்  நடந்தது.  (2சாமுவேல்  18:6)

janangga'l  ve'liyea  isravealarukku  ethiraagap  pu’rappattapi’rpaadu,  eppiraayeem  kaattilea  yuththam  nadanthathu.  (2saamuveal  18:6)

அங்கே  இஸ்ரவேல்  ஜனங்கள்  தாவீதின்  சேவகருக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்பட்டார்கள்;  அங்கே  அன்றையதினம்  இருபதினாயிரம்பேர்  மடியத்தக்கதாக  பெரிய  சங்காரம்  உண்டாயிற்று.  (2சாமுவேல்  18:7)

anggea  israveal  janangga'l  thaaveethin  seavagarukku  munbaaga  mu’riya  adikkappattaarga'l;  anggea  an’raiyathinam  irubathinaayirampear  madiyaththakkathaaga  periya  sanggaaram  u'ndaayit’ru.  (2saamuveal  18:7)

யுத்தம்  அந்த  தேசம்  எங்கும்  பரந்தது;  அன்றையதினம்  பட்டயம்  பட்சித்த  ஜனங்களைப்பார்க்கிலும்,  காடு  பட்சித்த  ஜனம்  அதிகம்.  (2சாமுவேல்  18:8)

yuththam  antha  theasam  enggum  paranthathu;  an’raiyathinam  pattayam  padchiththa  janangga'laippaarkkilum,  kaadu  padchiththa  janam  athigam.  (2saamuveal  18:8)

அப்சலோம்  தாவீதின்  சேவகருக்கு  எதிர்ப்பட்டான்;  அப்சலோம்  கோவேறு  கழுதையின்மேல்  ஏறிவரும்போது,  அந்தக்  கோவேறுகழுதை  சன்னல்பின்னலான  ஒரு  பெரிய  கர்வாலி  மரத்தின்கீழ்  வந்ததினால்,  அவனுடைய  தலை  கர்வாலிமரத்தில்  மாட்டிக்கொண்டு,  அவன்  வானத்துக்கும்  பூமிக்கும்  நடுவே  தொங்கினான்;  அவன்  ஏறியிருந்த  கோவேறுகழுதை  அப்பாலே  போயிற்று.  (2சாமுவேல்  18:9)

absaloam  thaaveethin  seavagarukku  ethirppattaan;  absaloam  koavea’ru  kazhuthaiyinmeal  ea’rivarumpoathu,  anthak  koavea’rukazhuthai  sannalpinnalaana  oru  periya  karvaali  maraththinkeezh  vanthathinaal,  avanudaiya  thalai  karvaalimaraththil  maattikko'ndu,  avan  vaanaththukkum  boomikkum  naduvea  thongginaan;  avan  ea’riyiruntha  koavea’rukazhuthai  appaalea  poayit’ru.  (2saamuveal  18:9)

அதை  ஒருவன்  கண்டு,  யோவாபுக்கு  அறிவித்து:  இதோ,  அப்சலோமை  ஒரு  கர்வாலிமரத்திலே  தொங்கக்கண்டேன்  என்றான்.  (2சாமுவேல்  18:10)

athai  oruvan  ka'ndu,  yoavaabukku  a’riviththu:  ithoa,  absaloamai  oru  karvaalimaraththilea  thonggakka'ndean  en’raan.  (2saamuveal  18:10)

அப்பொழுது  யோவாப்  தனக்கு  அதை  அறிவித்தவனை  நோக்கி:  நீ  அதைக்  கண்டாயே;  பின்னை  ஏன்  அவனை  அங்கே  வெட்டி,  தரையிலே  தள்ளிப்போடவில்லை?  நான்  உனக்குப்  பத்து  வெள்ளிக்காசையும்  ஒரு  கச்சையையும்  கொடுக்கக்  கடமையுள்ளவனாயிருப்பேனே  என்றான்.  (2சாமுவேல்  18:11)

appozhuthu  yoavaab  thanakku  athai  a’riviththavanai  noakki:  nee  athaik  ka'ndaayea;  pinnai  ean  avanai  anggea  vetti,  tharaiyilea  tha'l'lippoadavillai?  naan  unakkup  paththu  ve'l'likkaasaiyum  oru  kachchaiyaiyum  kodukkak  kadamaiyu'l'lavanaayiruppeanea  en’raan.  (2saamuveal  18:11)

அந்த  மனுஷன்  யோவாபை  நோக்கி:  என்  கைகளில்  ஆயிரம்  வெள்ளிக்காசு  நிறுத்துக்  கொடுக்கப்பட்டாலும்,  நான்  ராஜாவுடைய  குமாரன்மேல்  என்  கையை  நீட்டமாட்டேன்;  பிள்ளையாண்டானாகிய  அப்சலோமை  நீங்கள்  அவரவர்  காப்பாற்றுங்கள்  என்று  ராஜா  உமக்கும்  அபிசாய்க்கும்  ஈத்தாய்க்கும்  எங்கள்  காதுகள்  கேட்கக்  கட்டளையிட்டாரே.  (2சாமுவேல்  18:12)

antha  manushan  yoavaabai  noakki:  en  kaiga'lil  aayiram  ve'l'likkaasu  ni’ruththuk  kodukkappattaalum,  naan  raajaavudaiya  kumaaranmeal  en  kaiyai  neettamaattean;  pi'l'laiyaa'ndaanaagiya  absaloamai  neengga'l  avaravar  kaappaat’rungga'l  en’ru  raajaa  umakkum  abisaaykkum  eeththaaykkum  engga'l  kaathuga'l  keadkak  katta'laiyittaarea.  (2saamuveal  18:12)

ராஜாவுக்கு  ஒரு  காரியமும்  மறைவாயிருக்கமாட்டாது;  ஆதலால்,  நான்  அதைச்  செய்வேனாகில்,  என்  பிராணனுக்கே  விரோதமாகச்  செய்பவனாவேன்,  நீரும்  எனக்கு  விரோதமாயிருப்பீர்  என்றான்.  (2சாமுவேல்  18:13)

raajaavukku  oru  kaariyamum  ma’raivaayirukkamaattaathu;  aathalaal,  naan  athaich  seyveanaagil,  en  piraa'nanukkea  viroathamaagach  seybavanaavean,  neerum  enakku  viroathamaayiruppeer  en’raan.  (2saamuveal  18:13)

ஆதலால்  யோவாப்:  நான்  இப்படி  உன்னோடே  பேசி,  தாமதிக்கமாட்டேன்  என்று  சொல்லி,  தன்  கையிலே  மூன்று  வல்லயங்களை  எடுத்துக்கொண்டு,  அப்சலோம்  இன்னும்  கர்வாலிமரத்தின்  நடுவிலே  உயிரோடே  தொங்குகையில்,  அவைகளை  அவன்  நெஞ்சிலே  குத்தினான்.  (2சாமுவேல்  18:14)

aathalaal  yoavaab:  naan  ippadi  unnoadea  peasi,  thaamathikkamaattean  en’ru  solli,  than  kaiyilea  moon’ru  vallayangga'lai  eduththukko'ndu,  absaloam  innum  karvaalimaraththin  naduvilea  uyiroadea  thonggugaiyil,  avaiga'lai  avan  negnchilea  kuththinaan.  (2saamuveal  18:14)

அப்பொழுது  யோவாபின்  ஆயுததாரிகளாகிய  பத்து  சேவகர்  அப்சலோமைச்  சூழ்ந்து  அவனை  அடித்துக்  கொன்றுபோட்டார்கள்.  (2சாமுவேல்  18:15)

appozhuthu  yoavaabin  aayuthathaariga'laagiya  paththu  seavagar  absaloamaich  soozhnthu  avanai  adiththuk  kon’rupoattaarga'l.  (2saamuveal  18:15)

அப்பொழுது  யோவாப்  எக்காளம்  ஊதி  ஜனங்களை  நிறுத்திப்போட்டபடியினால்,  ஜனங்கள்  இஸ்ரவேலைப்  பின்தொடருகிறதை  விட்டுத்  திரும்பினார்கள்.  (2சாமுவேல்  18:16)

appozhuthu  yoavaab  ekkaa'lam  oothi  janangga'lai  ni’ruththippoattapadiyinaal,  janangga'l  isravealaip  pinthodarugi’rathai  vittuth  thirumbinaarga'l.  (2saamuveal  18:16)

அவர்கள்  அப்சலோமை  எடுத்து,  அவனைக்  காட்டிலுள்ள  ஒரு  பெரிய  குழியிலே  போட்டு,  அவன்மேல்  மகா  பெரிய  கற்குவியலைக்  குவித்தார்கள்;  இஸ்ரவேலர்  எல்லாரும்  அவரவர்  தங்கள்  கூடாரங்களுக்கு  ஓடிப்போனார்கள்.  (2சாமுவேல்  18:17)

avarga'l  absaloamai  eduththu,  avanaik  kaattilu'l'la  oru  periya  kuzhiyilea  poattu,  avanmeal  mahaa  periya  ka’rkuviyalaik  kuviththaarga'l;  isravealar  ellaarum  avaravar  thangga'l  koodaarangga'lukku  oadippoanaarga'l.  (2saamuveal  18:17)

அப்சலோம்  உயிரோடே  இருக்கையில்:  என்  பேரை  நினைக்கப்பண்ணும்படியாக  எனக்குக்  குமாரன்  இல்லை  என்று  சொல்லி,  ராஜாவின்  பள்ளத்தாக்கிலே  தனக்கென்று  ஒரு  தூணை  நிறுத்தி,  அந்தத்  தூணுக்குத்  தன்  பேரைத்  தரித்திருந்தான்;  அது  இந்நாள்வரைக்கும்  அப்சலோமின்  அடையாளம்  என்று  சொல்லப்படும்.  (2சாமுவேல்  18:18)

absaloam  uyiroadea  irukkaiyil:  en  pearai  ninaikkappa'n'numpadiyaaga  enakkuk  kumaaran  illai  en’ru  solli,  raajaavin  pa'l'laththaakkilea  thanakken’ru  oru  thoo'nai  ni’ruththi,  anthath  thoo'nukkuth  than  pearaith  thariththirunthaan;  athu  innaa'lvaraikkum  absaloamin  adaiyaa'lam  en’ru  sollappadum.  (2saamuveal  18:18)

சாதோக்கின்  குமாரனாகிய  அகிமாஸ்:  கர்த்தர்  ராஜாவை  அவர்  சத்துருக்களின்  கைக்கு  நீங்கலாக்கி  நியாயஞ்செய்தார்  என்னும்  செய்தியை  அவருக்குக்  கொண்டுபோக,  நான்  ஓடட்டுமே  என்றான்.  (2சாமுவேல்  18:19)

saathoakkin  kumaaranaagiya  agimaas:  karththar  raajaavai  avar  saththurukka'lin  kaikku  neenggalaakki  niyaayagnseythaar  ennum  seythiyai  avarukkuk  ko'ndupoaga,  naan  oadattumea  en’raan.  (2saamuveal  18:19)

யோவாப்  அவனை  நோக்கி:  இன்றையதினம்  நீ  செய்தியைக்  கொண்டுபோகக்கூடாது;  இன்னொருநாளிலே  நீ  செய்தியைக்  கொண்டுபோகலாம்;  ராஜாவின்  குமாரன்  செத்தபடியினால்,  இன்றைக்கு  நீ  செய்தியைக்  கொண்டுபோகவேண்டாம்  என்று  சொல்லி,  (2சாமுவேல்  18:20)

yoavaab  avanai  noakki:  in’raiyathinam  nee  seythiyaik  ko'ndupoagakkoodaathu;  innorunaa'lilea  nee  seythiyaik  ko'ndupoagalaam;  raajaavin  kumaaran  seththapadiyinaal,  in’raikku  nee  seythiyaik  ko'ndupoagavea'ndaam  en’ru  solli,  (2saamuveal  18:20)

யோவாப்  கூஷியை  நோக்கி:  நீ  போய்  கண்டதை  ராஜாவுக்கு  அறிவி  என்றான்;  கூஷி  யோவாபை  வணங்கி  ஓடினான்.  (2சாமுவேல்  18:21)

yoavaab  kooshiyai  noakki:  nee  poay  ka'ndathai  raajaavukku  a’rivi  en’raan;  kooshi  yoavaabai  va'nanggi  oadinaan.  (2saamuveal  18:21)

சாதோக்கின்  குமாரனாகிய  அகிமாஸ்  இன்னும்  யோவாபை  நோக்கி:  எப்படியானாலும்  கூஷியின்  பிறகாலே  நானும்  ஓடட்டுமே  என்று  திரும்பக்  கேட்டதற்கு,  யோவாப்:  என்  மகனே,  சொல்லும்படி  உனக்கு  நல்ல  செய்தி  இல்லாதிருக்கையில்,  நீ  ஓடவேண்டியது  என்ன  என்றான்.  (2சாமுவேல்  18:22)

saathoakkin  kumaaranaagiya  agimaas  innum  yoavaabai  noakki:  eppadiyaanaalum  kooshiyin  pi’ragaalea  naanum  oadattumea  en’ru  thirumbak  keattatha’rku,  yoavaab:  en  maganea,  sollumpadi  unakku  nalla  seythi  illaathirukkaiyil,  nee  oadavea'ndiyathu  enna  en’raan.  (2saamuveal  18:22)

அதற்கு  அவன்:  எப்படியானாலும்  நான்  ஓடுவேன்  என்றான்;  அப்பொழுது  யோவாப்:  ஓடு  என்றான்;  அப்படியே  அகிமாஸ்  சமனான  பூமிவழியாயோடிக்  கூஷிக்கு  முந்திக்கொண்டான்.  (2சாமுவேல்  18:23)

atha’rku  avan:  eppadiyaanaalum  naan  oaduvean  en’raan;  appozhuthu  yoavaab:  oadu  en’raan;  appadiyea  agimaas  samanaana  boomivazhiyaayoadik  kooshikku  munthikko'ndaan.  (2saamuveal  18:23)

தாவீது  இரண்டு  ஒலிமுகக்  கெவுனி  வாசலுக்கு  நடுவாக  உட்கார்ந்திருந்தான்;  ஜாமங்காக்கிறவன்  அலங்கத்திலிருக்கிற  கெவுனியின்மேல்  நடந்து,  தன்  கண்களை  ஏறெடுத்து,  இதோ,  ஒரு  மனுஷன்  தனியே  ஓடிவருகிறதைக்  கண்டு,  (2சாமுவேல்  18:24)

thaaveethu  ira'ndu  olimugak  kevuni  vaasalukku  naduvaaga  udkaarnthirunthaan;  jaamangkaakki’ravan  alanggaththilirukki’ra  kevuniyinmeal  nadanthu,  than  ka'nga'lai  ea’reduththu,  ithoa,  oru  manushan  thaniyea  oadivarugi’rathaik  ka'ndu,  (2saamuveal  18:24)

கூப்பிட்டு  ராஜாவுக்கு  அறிவித்தான்.  அப்பொழுது  ராஜா:  அவன்  ஒருவனாய்  வந்தால்,  அவன்  வாயிலே  நல்லசெய்தி  இருக்கும்  என்றான்;  அவன்  ஓடி  கிட்டவரும்போது,  (2சாமுவேல்  18:25)

kooppittu  raajaavukku  a’riviththaan.  appozhuthu  raajaa:  avan  oruvanaay  vanthaal,  avan  vaayilea  nallaseythi  irukkum  en’raan;  avan  oadi  kittavarumpoathu,  (2saamuveal  18:25)

ஜாமங்காக்கிறவன்,  வேறொருவன்  ஓடிவருகிறதைக்  கண்டு:  அதோ  பின்னொருவன்  தனியே  ஓடிவருகிறான்  என்று  வாசல்  காக்கிறவனோடே  கூப்பிட்டுச்  சொன்னான்;  அப்பொழுது  ராஜா:  அவனும்  நல்ல  செய்தி  கொண்டுவருகிறவன்  என்றான்.  (2சாமுவேல்  18:26)

jaamangkaakki’ravan,  vea’roruvan  oadivarugi’rathaik  ka'ndu:  athoa  pinnoruvan  thaniyea  oadivarugi’raan  en’ru  vaasal  kaakki’ravanoadea  kooppittuch  sonnaan;  appozhuthu  raajaa:  avanum  nalla  seythi  ko'nduvarugi’ravan  en’raan.  (2saamuveal  18:26)

மேலும்  ஜாமங்காக்கிறவன்:  முந்தினவனுடைய  ஓட்டம்  சாதோக்கின்  குமாரன்  அகிமாசுடைய  ஓட்டம்போலிருக்கிறது  என்று  எனக்குத்  தோன்றுகிறது  என்றான்;  அப்பொழுது  ராஜா:  அவன்  நல்ல  மனுஷன்;  அவன்  நல்ல  செய்தி  சொல்ல  வருகிறான்  என்றான்.  (2சாமுவேல்  18:27)

mealum  jaamangkaakki’ravan:  munthinavanudaiya  oattam  saathoakkin  kumaaran  agimaasudaiya  oattampoalirukki’rathu  en’ru  enakkuth  thoan’rugi’rathu  en’raan;  appozhuthu  raajaa:  avan  nalla  manushan;  avan  nalla  seythi  solla  varugi’raan  en’raan.  (2saamuveal  18:27)

அகிமாஸ்  வந்து  ராஜாவை  நோக்கி:  சமாதானம்  என்று  சொல்லி,  முகங்குப்புற  விழுந்து,  ராஜாவை  வணங்கி,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்கு  விரோதமாய்த்  தங்கள்  கைகளை  எடுத்த  மனுஷரை  ஒப்புக்கொடுத்திருக்கிற  உம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக  என்றான்.  (2சாமுவேல்  18:28)

agimaas  vanthu  raajaavai  noakki:  samaathaanam  en’ru  solli,  mugangkuppu’ra  vizhunthu,  raajaavai  va'nanggi,  raajaavaagiya  en  aa'ndavanukku  viroathamaayth  thangga'l  kaiga'lai  eduththa  manusharai  oppukkoduththirukki’ra  ummudaiya  theavanaagiya  karththarukku  sthoaththiram  u'ndaavathaaga  en’raan.  (2saamuveal  18:28)

அப்பொழுது  ராஜா:  பிள்ளையாண்டானாகிய  அப்சலோம்  சுகமாயிருக்கிறானா  என்று  கேட்டதற்கு,  அகிமாஸ்  யோவாப்  ராஜாவின்  வேலைக்காரனையும்  உம்முடைய  அடியானையும்  அனுப்புகிறபோது,  ஒரு  பெரிய  சந்தடியிருந்தது;  ஆனாலும்  அது  இன்னதென்று  தெரியாது  என்றான்.  (2சாமுவேல்  18:29)

appozhuthu  raajaa:  pi'l'laiyaa'ndaanaagiya  absaloam  sugamaayirukki’raanaa  en’ru  keattatha’rku,  agimaas  yoavaab  raajaavin  vealaikkaaranaiyum  ummudaiya  adiyaanaiyum  anuppugi’rapoathu,  oru  periya  santhadiyirunthathu;  aanaalum  athu  innathen’ru  theriyaathu  en’raan.  (2saamuveal  18:29)

அப்பொழுது  ராஜா:  நீ  அங்கே  போய்  நில்  என்றான்;  அவன்  ஒரு  பக்கத்தில்  போய்  நின்றான்.  (2சாமுவேல்  18:30)

appozhuthu  raajaa:  nee  anggea  poay  nil  en’raan;  avan  oru  pakkaththil  poay  nin’raan.  (2saamuveal  18:30)

இதோ,  கூஷி  வந்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  நற்செய்தி,  இன்று  கர்த்தர்  உமக்கு  விரோதமாயெழும்பின  எல்லாரின்  கைக்கும்  உம்மை  நீங்கலாக்கி  நியாயஞ்செய்தார்  என்றான்.  (2சாமுவேல்  18:31)

ithoa,  kooshi  vanthu:  raajaavaagiya  en  aa'ndavanea,  na’rseythi,  in’ru  karththar  umakku  viroathamaayezhumbina  ellaarin  kaikkum  ummai  neenggalaakki  niyaayagnseythaar  en’raan.  (2saamuveal  18:31)

அப்பொழுது  ராஜா  கூஷியைப்  பார்த்து:  பிள்ளையாண்டானாகிய  அப்சலோம்  சுகமாயிருக்கிறானா  என்று  கேட்டதற்கு,  கூஷி  என்பவன்:  அந்தப்  பிள்ளையாண்டானுக்கு  நடந்ததுபோல,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  சத்துருக்களுக்கும்,  பொல்லாப்புச்  செய்ய  உமக்கு  விரோதமாய்  எழும்புகிற  யாவருக்கும்  நடக்கக்கடவது  என்றான்.  (2சாமுவேல்  18:32)

appozhuthu  raajaa  kooshiyaip  paarththu:  pi'l'laiyaa'ndaanaagiya  absaloam  sugamaayirukki’raanaa  en’ru  keattatha’rku,  kooshi  enbavan:  anthap  pi'l'laiyaa'ndaanukku  nadanthathupoala,  raajaavaagiya  en  aa'ndavanudaiya  saththurukka'lukkum,  pollaappuch  seyya  umakku  viroathamaay  ezhumbugi’ra  yaavarukkum  nadakkakkadavathu  en’raan.  (2saamuveal  18:32)

அப்பொழுது  ராஜா  மிகவும்  கலங்கி,  கெவுனிவாசலின்  மேல்வீட்டிற்குள்  ஏறிப்போய்  அழுதான்;  அவன்  ஏறிப்போகையில்:  என்  மகனாகிய  அப்சலோமே,  என்  மகனே,  என்  மகனாகிய  அப்சலோமே,  நான்  உனக்குப்  பதிலாகச்  செத்தேனானால்  நலமாயிருக்கும்;  அப்சலோமே,  என்  மகனே,  என்  மகனே,  என்று  சொல்லி  அழுதான்.  (2சாமுவேல்  18:33)

appozhuthu  raajaa  migavum  kalanggi,  kevunivaasalin  mealveetti’rku'l  ea’rippoay  azhuthaan;  avan  ea’rippoagaiyil:  en  maganaagiya  absaloamea,  en  maganea,  en  maganaagiya  absaloamea,  naan  unakkup  bathilaagach  seththeanaanaal  nalamaayirukkum;  absaloamea,  en  maganea,  en  maganea,  en’ru  solli  azhuthaan.  (2saamuveal  18:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!