Monday, August 29, 2016

2 Saamuveal 17 | 2 சாமுவேல் 17 | 2 Samuel 17

பின்பு  அகித்தோப்பேல்  அப்சலோமை  நோக்கி:  நான்  பன்னீராயிரம்பேரைத்  தெரிந்துகொண்டு  எழுந்து,  இன்று  இராத்திரி  தாவீதைப்  பின்தொடர்ந்து  போகட்டும்.  (2சாமுவேல்  17:1)

pinbu  agiththoappeal  absaloamai  noakki:  naan  panneeraayirampearaith  therinthuko'ndu  ezhunthu,  in’ru  iraaththiri  thaaveethaip  pinthodarnthu  poagattum.  (2saamuveal  17:1)

அவன்  விடாய்த்தவனும்  கைதளர்ந்தவனுமாயிருக்கையில்,  நான்  அவனிடத்தில்  போய்,  அவனைத்  திடுக்கிடப்பண்ணுவேன்;  அப்பொழுது  அவனோடிருக்கும்  ஜனங்களெல்லாரும்  ஓடிப்போவதினால்,  நான்  ராஜா  ஒருவனைமாத்திரம்  வெட்டி,  (2சாமுவேல்  17:2)

avan  vidaayththavanum  kaitha'larnthavanumaayirukkaiyil,  naan  avanidaththil  poay,  avanaith  thidukkidappa'n'nuvean;  appozhuthu  avanoadirukkum  janangga'lellaarum  oadippoavathinaal,  naan  raajaa  oruvanaimaaththiram  vetti,  (2saamuveal  17:2)

ஜனங்களையெல்லாம்  உம்முடைய  வசமாய்த்  திரும்பப்பண்ணுவேன்,  இப்படிச்செய்ய  நீர்  வகைதேடினால்,  எல்லாரும்  திரும்பினபின்  ஜனங்கள்  சமாதானத்தோடு  இருப்பார்கள்  என்றான்.  (2சாமுவேல்  17:3)

janangga'laiyellaam  ummudaiya  vasamaayth  thirumbappa'n'nuvean,  ippadichseyya  neer  vagaitheadinaal,  ellaarum  thirumbinapin  janangga'l  samaathaanaththoadu  iruppaarga'l  en’raan.  (2saamuveal  17:3)

இந்த  வார்த்தை  அப்சலோமின்  பார்வைக்கும்,  இஸ்ரவேலுடைய  சகல  மூப்பரின்  பார்வைக்கும்  நலமாய்த்  தோன்றினது.  (2சாமுவேல்  17:4)

intha  vaarththai  absaloamin  paarvaikkum,  isravealudaiya  sagala  moopparin  paarvaikkum  nalamaayth  thoan’rinathu.  (2saamuveal  17:4)

ஆகிலும்  அப்சலோம்:  அற்கியனாகிய  ஊசாயைக்  கூப்பிட்டு,  அவன்  வாய்மொழியையும்  கேட்போம்  என்றான்.  (2சாமுவேல்  17:5)

aagilum  absaloam:  a’rkiyanaagiya  oosaayaik  kooppittu,  avan  vaaymozhiyaiyum  keadpoam  en’raan.  (2saamuveal  17:5)

ஊசாய்  அப்சலோமிடத்தில்  வந்தபோது,  அப்சலோம்  அவனைப்  பார்த்து:  இந்தப்பிரகாரமாக  அகித்தோப்பேல்  சொன்னான்;  அவன்  வார்த்தையின்படி  செய்வோமா?  அல்லவென்றால்,  நீ  சொல்  என்றான்.  (2சாமுவேல்  17:6)

oosaay  absaloamidaththil  vanthapoathu,  absaloam  avanaip  paarththu:  inthappiragaaramaaga  agiththoappeal  sonnaan;  avan  vaarththaiyinpadi  seyvoamaa?  allaven’raal,  nee  sol  en’raan.  (2saamuveal  17:6)

அப்பொழுது  ஊசாய்  அப்சலோமை  நோக்கி:  அகித்தோப்பேல்  இந்தவிசை  சொன்ன  ஆலோசனை  நல்லதல்ல  என்றான்.  (2சாமுவேல்  17:7)

appozhuthu  oosaay  absaloamai  noakki:  agiththoappeal  inthavisai  sonna  aaloasanai  nallathalla  en’raan.  (2saamuveal  17:7)

மேலும்  ஊசாய்:  உம்முடைய  தகப்பனும்  அவன்  மனுஷரும்  பலசாலிகள்  என்றும்,  வெளியிலே  குட்டிகளைப்  பறிகொடுத்த  கரடியைப்போல  மனமெரிகிறவர்கள்  என்றும்  நீர்  அறிவீர்;  உம்முடைய  தகப்பன்  யுத்தவீரனுமாயிருக்கிறார்;  அவர்  இராக்காலத்தில்  ஜனங்களோடே  தங்கமாட்டார்.  (2சாமுவேல்  17:8)

mealum  oosaay:  ummudaiya  thagappanum  avan  manusharum  balasaaliga'l  en’rum,  ve'liyilea  kuttiga'laip  pa’rikoduththa  karadiyaippoala  manamerigi’ravarga'l  en’rum  neer  a’riveer;  ummudaiya  thagappan  yuththaveeranumaayirukki’raar;  avar  iraakkaalaththil  janangga'loadea  thanggamaattaar.  (2saamuveal  17:8)

இதோ,  அவர்  இப்பொழுது  ஒரு  கெபியிலாவது,  வேறே  யாதோரிடத்திலாவது  ஒளித்திருப்பார்;  துவக்கத்திலேதானே  நம்முடையவர்களில்  சிலர்  பட்டார்களேயானால்,  அதைக்  கேட்கிற  யாவரும்  அப்சலோமைப்  பின்செல்லுகிற  ஜனங்களில்  சங்காரம்  உண்டாயிற்று  என்பார்கள்.  (2சாமுவேல்  17:9)

ithoa,  avar  ippozhuthu  oru  kebiyilaavathu,  vea’rea  yaathoaridaththilaavathu  o'liththiruppaar;  thuvakkaththileathaanea  nammudaiyavarga'lil  silar  pattaarga'leayaanaal,  athaik  keadki’ra  yaavarum  absaloamaip  pinsellugi’ra  janangga'lil  sanggaaram  u'ndaayit’ru  enbaarga'l.  (2saamuveal  17:9)

அப்பொழுது  சிங்கத்தின்  இருதயத்திற்கொத்த  இருதயமுள்ள  பலவானாயிருக்கிறவனுங்கூட  கலங்கிப்போவான்;  உம்முடைய  தகப்பன்  சவுரியவான்  என்றும்,  அவரோடிருக்கிறவர்கள்  பலசாலிகள்  என்றும்,  இஸ்ரவேலர்  எல்லாரும்  அறிவார்கள்.  (2சாமுவேல்  17:10)

appozhuthu  singgaththin  iruthayaththi’rkoththa  iruthayamu'l'la  balavaanaayirukki’ravanungkooda  kalanggippoavaan;  ummudaiya  thagappan  savuriyavaan  en’rum,  avaroadirukki’ravarga'l  balasaaliga'l  en’rum,  isravealar  ellaarum  a’rivaarga'l.  (2saamuveal  17:10)

ஆதலால்  நான்  சொல்லுகிற  யோசனையாவது,  தாண்முதல்  பெயெர்செபாமட்டும்  இருக்கிற  கடற்கரை  மணலத்தனை  திரட்சியான  இஸ்ரவேலர்  எல்லாரும்  உம்மண்டையில்  கூட்டப்பட்டு,  நீர்தானேகூட  யுத்தத்திற்குப்  போகவேண்டும்.  (2சாமுவேல்  17:11)

aathalaal  naan  sollugi’ra  yoasanaiyaavathu,  thaa'nmuthal  beyersebaamattum  irukki’ra  kada’rkarai  ma'nalaththanai  thiradchiyaana  isravealar  ellaarum  umma'ndaiyil  koottappattu,  neerthaaneakooda  yuththaththi’rkup  poagavea'ndum.  (2saamuveal  17:11)

அப்பொழுது  அவரைக்  கண்டுபிடிக்கிற  எவ்விடத்திலாகிலும்  நாம்  அவரிடத்தில்  போய்,  பனி  பூமியின்மேல்  இறங்குவதுபோல  அவர்மேல்  இறங்குவோம்;  அப்படியே  அவரோடிருக்கிற  எல்லா  மனுஷரிலும்  ஒருவனும்  அவருக்கு  மீந்திருப்பதில்லை.  (2சாமுவேல்  17:12)

appozhuthu  avaraik  ka'ndupidikki’ra  evvidaththilaagilum  naam  avaridaththil  poay,  pani  boomiyinmeal  i’rangguvathupoala  avarmeal  i’rangguvoam;  appadiyea  avaroadirukki’ra  ellaa  manusharilum  oruvanum  avarukku  meenthiruppathillai.  (2saamuveal  17:12)

ஒரு  பட்டணத்திற்குள்  புகுந்தாரேயானால்,  இஸ்ரவேலர்  எல்லாரும்  அந்தப்  பட்டணத்தின்மேல்  கயிறுகளைப்  போட்டு,  அங்கே  ஒரு  பொடிக்கல்லும்  காணப்படாதே  போகுமட்டும்,  அதை  இழுத்து  ஆற்றிலே  போடுவார்கள்  என்றான்.  (2சாமுவேல்  17:13)

oru  patta'naththi’rku'l  pugunthaareayaanaal,  isravealar  ellaarum  anthap  patta'naththinmeal  kayi’ruga'laip  poattu,  anggea  oru  podikkallum  kaa'nappadaathea  poagumattum,  athai  izhuththu  aat’rilea  poaduvaarga'l  en’raan.  (2saamuveal  17:13)

அப்பொழுது  அப்சலோமும்  இஸ்ரவேல்  மனுஷர்  அனைவரும்:  அகித்தோப்பேலின்  ஆலோசனையைப்பார்க்கிலும்  அற்கியனாகிய  ஊசாயின்  ஆலோசனை  நல்லது  என்றார்கள்;  இப்படி  கர்த்தர்  அப்சலோமின்மேல்  பொல்லாப்பை  வரப்பண்ணும்  பொருட்டு,  அகித்தோப்பேலின்  நல்ல  ஆலோசனையை  அபத்தமாக்குகிறதற்குக்  கர்த்தர்  கட்டளையிட்டார்.  (2சாமுவேல்  17:14)

appozhuthu  absaloamum  israveal  manushar  anaivarum:  agiththoappealin  aaloasanaiyaippaarkkilum  a’rkiyanaagiya  oosaayin  aaloasanai  nallathu  en’raarga'l;  ippadi  karththar  absaloaminmeal  pollaappai  varappa'n'num  poruttu,  agiththoappealin  nalla  aaloasanaiyai  abaththamaakkugi’ratha’rkuk  karththar  katta'laiyittaar.  (2saamuveal  17:14)

பின்பு  ஊசாய்,  சாதோக்  அபியத்தார்  என்னும்  ஆசாரியர்களைப்  பார்த்து:  இன்ன  இன்னபடி  அகித்தோப்பேல்  அப்சலோமுக்கும்  இஸ்ரவேலின்  மூப்பருக்கும்  ஆலோசனை  சொன்னான்;  நானோ  இன்ன  இன்னபடி  ஆலோசனை  சொன்னேன்.  (2சாமுவேல்  17:15)

pinbu  oosaay,  saathoak  abiyaththaar  ennum  aasaariyarga'laip  paarththu:  inna  innapadi  agiththoappeal  absaloamukkum  isravealin  moopparukkum  aaloasanai  sonnaan;  naanoa  inna  innapadi  aaloasanai  sonnean.  (2saamuveal  17:15)

இப்பொழுதும்  நீங்கள்  சீக்கிரமாய்த்  தாவீதுக்கு  அறிவிக்கும்படிக்குச்  செய்தி  அனுப்பி:  நீர்  இன்று  இராத்திரி  வனாந்தரத்தின்  வெளிகளிலே  தங்கவேண்டாம்;  ராஜாவும்  அவரோடிருக்கிற  சகல  ஜனங்களும்  விழுங்கப்படாதபடிக்குத்  தாமதம்  இல்லாமல்  அக்கரைப்படவேண்டும்  என்று  சொல்லச்சொல்லுங்கள்  என்றான்.  (2சாமுவேல்  17:16)

ippozhuthum  neengga'l  seekkiramaayth  thaaveethukku  a’rivikkumpadikkuch  seythi  anuppi:  neer  in’ru  iraaththiri  vanaantharaththin  ve'liga'lilea  thanggavea'ndaam;  raajaavum  avaroadirukki’ra  sagala  janangga'lum  vizhunggappadaathapadikkuth  thaamatham  illaamal  akkaraippadavea'ndum  en’ru  sollachsollungga'l  en’raan.  (2saamuveal  17:16)

யோனத்தானும்  அகிமாசும்,  தாங்கள்  நகரத்தில்  பிரவேசிக்கிறதினால்  காணப்படாதபடிக்கு,  என்ரோகேல்  அண்டை  நின்றுகொண்டிருந்தார்கள்;  ஒரு  வேலைக்காரி  போய்,  அதை  அவர்களுக்குச்  சொன்னாள்;  அவர்கள்  தாவீது  ராஜாவுக்கு  அதை  அறிவிக்கப்போனார்கள்.  (2சாமுவேல்  17:17)

yoanaththaanum  agimaasum,  thaangga'l  nagaraththil  piraveasikki’rathinaal  kaa'nappadaathapadikku,  enroakeal  a'ndai  nin’ruko'ndirunthaarga'l;  oru  vealaikkaari  poay,  athai  avarga'lukkuch  sonnaa'l;  avarga'l  thaaveethu  raajaavukku  athai  a’rivikkappoanaarga'l.  (2saamuveal  17:17)

ஒரு  பிள்ளையாண்டான்  அவர்களைக்  கண்டு,  அப்சலோமுக்கு  அறிவித்தான்;  ஆகையால்  அவர்கள்  இருவரும்  சீக்கிரமாய்ப்  போய்,  பகூரிமிலிருக்கிற  ஒரு  மனுஷன்  வீட்டிற்குள்  பிரவேசித்தார்கள்;  அவன்  முற்றத்தில்  ஒரு  கிணறு  இருந்தது;  அதில்  இறங்கினார்கள்.  (2சாமுவேல்  17:18)

oru  pi'l'laiyaa'ndaan  avarga'laik  ka'ndu,  absaloamukku  a’riviththaan;  aagaiyaal  avarga'l  iruvarum  seekkiramaayp  poay,  bagoorimilirukki’ra  oru  manushan  veetti’rku'l  piraveasiththaarga'l;  avan  mut’raththil  oru  ki'na’ru  irunthathu;  athil  i’rangginaarga'l.  (2saamuveal  17:18)

வீட்டுக்காரி  ஒரு  பாயை  எடுத்து,  கிணற்றுவாயின்மேல்  விரித்து,  காரியம்  வெளிப்படாதபடிக்கு,  அதின்மேல்  நொய்யைப்  பரப்பிவைத்தாள்.  (2சாமுவேல்  17:19)

veettukkaari  oru  paayai  eduththu,  ki'nat’ruvaayinmeal  viriththu,  kaariyam  ve'lippadaathapadikku,  athinmeal  noyyaip  parappivaiththaa'l.  (2saamuveal  17:19)

அப்சலோமின்  சேவகர்  அந்த  ஸ்திரீயினிடத்தில்  வீட்டிற்குள்  வந்து:  அகிமாசும்  யோனத்தானும்  எங்கே  என்று  கேட்டார்கள்;  அவர்களுக்கு  அந்த  ஸ்திரீ:  வாய்க்காலுக்கு  அப்பாலே  போய்விட்டார்கள்  என்றாள்;  இவர்கள்  தேடிக்காணாதேபோய்,  எருசலேமுக்குத்  திரும்பினார்கள்.  (2சாமுவேல்  17:20)

absaloamin  seavagar  antha  sthireeyinidaththil  veetti’rku'l  vanthu:  agimaasum  yoanaththaanum  enggea  en’ru  keattaarga'l;  avarga'lukku  antha  sthiree:  vaaykkaalukku  appaalea  poayvittaarga'l  en’raa'l;  ivarga'l  theadikkaa'naatheapoay,  erusaleamukkuth  thirumbinaarga'l.  (2saamuveal  17:20)

இவர்கள்  போனபிற்பாடு,  அவர்கள்  கிணற்றிலிருந்து  ஏறிவந்து,  தாவீதுராஜாவுக்கு  அறிவித்து,  தாவீதை  நோக்கி:  சீக்கிரமாய்  எழுந்து  ஆற்றைக்  கடந்துபோங்கள்;  இன்னபடி  அகித்தோப்பேல்  உங்களுக்கு  விரோதமாய்  ஆலோசனை  சொன்னான்  என்றார்கள்.  (2சாமுவேல்  17:21)

ivarga'l  poanapi’rpaadu,  avarga'l  ki'nat’rilirunthu  ea’rivanthu,  thaaveethuraajaavukku  a’riviththu,  thaaveethai  noakki:  seekkiramaay  ezhunthu  aat’raik  kadanthupoangga'l;  innapadi  agiththoappeal  ungga'lukku  viroathamaay  aaloasanai  sonnaan  en’raarga'l.  (2saamuveal  17:21)

அப்பொழுது  தாவீதும்  அவனோடிருந்த  சகல  ஜனங்களும்  எழுந்து  யோர்தானைக்  கடந்துபோனார்கள்;  பொழுது  விடிகிறதற்குள்ளாக  யோர்தானைக்  கடவாதவன்  ஒருவனும்  இல்லை.  (2சாமுவேல்  17:22)

appozhuthu  thaaveethum  avanoadiruntha  sagala  janangga'lum  ezhunthu  yoarthaanaik  kadanthupoanaarga'l;  pozhuthu  vidigi’ratha’rku'l'laaga  yoarthaanaik  kadavaathavan  oruvanum  illai.  (2saamuveal  17:22)

அகித்தோப்பேல்  தன்  யோசனையின்படி  நடக்கவில்லை  என்று  கண்டபோது,  தன்  கழுதையின்மேல்  சேணம்வைத்து  ஏறி,  தன்  ஊரிலிருக்கிற  தன்  வீட்டுக்குப்  போய்,  தன்  வீட்டுக்காரியங்களை  ஒழுங்குபடுத்தி,  நான்றுகொண்டு  செத்தான்;  அவன்  தகப்பன்  கல்லறையில்  அவனை  அடக்கம்பண்ணினார்கள்.  (2சாமுவேல்  17:23)

agiththoappeal  than  yoasanaiyinpadi  nadakkavillai  en’ru  ka'ndapoathu,  than  kazhuthaiyinmeal  sea'namvaiththu  ea’ri,  than  oorilirukki’ra  than  veettukkup  poay,  than  veettukkaariyangga'lai  ozhunggupaduththi,  naan’ruko'ndu  seththaan;  avan  thagappan  kalla’raiyil  avanai  adakkampa'n'ninaarga'l.  (2saamuveal  17:23)

தாவீது  மக்னாயீமுக்கு  வந்தான்;  அப்சலோமும்  சகல  இஸ்ரவேலரோடுங்கூட  யோர்தானைக்  கடந்தான்.  (2சாமுவேல்  17:24)

thaaveethu  maknaayeemukku  vanthaan;  absaloamum  sagala  isravealaroadungkooda  yoarthaanaik  kadanthaan.  (2saamuveal  17:24)

அப்சலோம்,  யோவாபுக்குப்  பதிலாக  அமாசாவை  இராணுவத்தலைவனாக்கினான்;  இந்த  அமாசா,  நாகாசின்  குமாரத்தியும்  செருயாவின்  சகோதரியும்  யோவாபின்  அத்தையுமாகிய  அபிகாயிலைப்  படைத்த  இஸ்ரவேலனாகிய  எத்திரா  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷனுடைய  குமாரனாயிருந்தான்.  (2சாமுவேல்  17:25)

absaloam,  yoavaabukkup  bathilaaga  amaasaavai  iraa'nuvaththalaivanaakkinaan;  intha  amaasaa,  naagaasin  kumaaraththiyum  seruyaavin  sagoathariyum  yoavaabin  aththaiyumaagiya  abikaayilaip  padaiththa  isravealanaagiya  eththiraa  ennum  pearu'l'la  oru  manushanudaiya  kumaaranaayirunthaan.  (2saamuveal  17:25)

இஸ்ரவேல்  ஜனங்களும்  அப்சலோமும்  கீலேயாத்  தேசத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (2சாமுவேல்  17:26)

israveal  janangga'lum  absaloamum  keeleayaath  theasaththilea  paa'layami’rangginaarga'l.  (2saamuveal  17:26)

தாவீது  மக்னாயீமில்  சேர்ந்தபோது,  அம்மோன்  புத்திரரின்  தேசத்து  ரப்பா  பட்டணத்தானாகிய  சோபி  என்னும்  நாகாசின்  குமாரனும்,  லோதேபார்  ஊரானான  அம்மியேலின்  குமாரன்  மாகீரும்,  ரோகிலிம்  ஊரானும்  கீலேயாத்தியனுமாகிய  பர்சிலாவும்,  (2சாமுவேல்  17:27)

thaaveethu  maknaayeemil  searnthapoathu,  ammoan  puththirarin  theasaththu  rabbaa  patta'naththaanaagiya  soabi  ennum  naagaasin  kumaaranum,  loatheabaar  ooraanaana  ammiyealin  kumaaran  maakeerum,  roagilim  ooraanum  keeleayaaththiyanumaagiya  barsilaavum,  (2saamuveal  17:27)

மெத்தைகளையும்,  கலங்களையும்,  மண்பாண்டங்களையும்,  கோதுமையையும்,  வாற்கோதுமையையும்,  மாவையும்,  வறுத்த  பயற்றையும்,  பெரும்  பயற்றையும்,  சிறு  பயற்றையும்,  வறுத்த  சிறு  பயற்றையும்,  (2சாமுவேல்  17:28)

meththaiga'laiyum,  kalangga'laiyum,  ma'npaa'ndangga'laiyum,  koathumaiyaiyum,  vaa’rkoathumaiyaiyum,  maavaiyum,  va’ruththa  payat’raiyum,  perum  payat’raiyum,  si’ru  payat’raiyum,  va’ruththa  si’ru  payat’raiyum,  (2saamuveal  17:28)

தேனையும்,  வெண்ணெயையும்,  ஆடுகளையும்,  பால்கட்டிகளையும்,  தாவீதுக்கும்  அவனோடிருந்த  ஜனங்களுக்கும்  சாப்பிடுகிறதற்குக்  கொண்டுவந்தார்கள்;  அந்த  ஜனங்கள்  வனாந்தரத்திலே  பசியும்  இளைப்பும்  தவனமுமாயிருப்பார்கள்  என்று  இப்படிச்  செய்தார்கள்.  (2சாமுவேல்  17:29)

theanaiyum,  ve'n'neyaiyum,  aaduga'laiyum,  paalkattiga'laiyum,  thaaveethukkum  avanoadiruntha  janangga'lukkum  saappidugi’ratha’rkuk  ko'nduvanthaarga'l;  antha  janangga'l  vanaantharaththilea  pasiyum  i'laippum  thavanamumaayiruppaarga'l  en’ru  ippadich  seythaarga'l.  (2saamuveal  17:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!