Monday, August 29, 2016

2 Saamuveal 16 | 2 சாமுவேல் 16 | 2 Samuel 16

தாவீது  மலையுச்சியிலிருந்து  சற்றப்புறம்  நடந்துபோனபோது,  இதோ,  மேவிபோசேத்தின்  காரியக்காரனாகிய  சீபா,  பொதிகளைச்  சுமக்கிற  இரண்டு  கழுதைகளை  ஓட்டிக்கொண்டுவந்து,  அவனைச்  சந்தித்தான்;  அவைகளில்  இருநூறு  அப்பங்களும்,  வற்றலான  நூறு  திராட்சப்பழக்குலைகளும்,  வசந்தகாலத்துப்  பலனான  நூறு  குலைகளும்,  ஒரு  துருத்தி  திராட்சரசமும்  இருந்தது.  (2சாமுவேல்  16:1)

thaaveethu  malaiyuchchiyilirunthu  sat’rappu’ram  nadanthupoanapoathu,  ithoa,  meaviboaseaththin  kaariyakkaaranaagiya  seebaa,  pothiga'laich  sumakki’ra  ira'ndu  kazhuthaiga'lai  oattikko'nduvanthu,  avanaich  santhiththaan;  avaiga'lil  irunoo’ru  appangga'lum,  vat’ralaana  noo’ru  thiraadchappazhakkulaiga'lum,  vasanthakaalaththup  palanaana  noo’ru  kulaiga'lum,  oru  thuruththi  thiraadcharasamum  irunthathu.  (2saamuveal  16:1)

ராஜா  சீபாவைப்பார்த்து:  இவைகள்  என்னத்திற்கு  என்று  கேட்டதற்கு,  சீபா:  கழுதைகள்  ராஜாவின்  வீட்டார்  ஏறுகிறதற்கும்,  அப்பங்களும்  பழங்களும்  வாலிபர்  புசிக்கிறதற்கும்,  திராட்சரசம்  வனாந்தரத்தில்  விடாய்த்துப்போனவர்கள்  குடிக்கிறதற்குமே  என்றான்.  (2சாமுவேல்  16:2)

raajaa  seebaavaippaarththu:  ivaiga'l  ennaththi’rku  en’ru  keattatha’rku,  seebaa:  kazhuthaiga'l  raajaavin  veettaar  ea’rugi’ratha’rkum,  appangga'lum  pazhangga'lum  vaalibar  pusikki’ratha’rkum,  thiraadcharasam  vanaantharaththil  vidaayththuppoanavarga'l  kudikki’ratha’rkumea  en’raan.  (2saamuveal  16:2)

அப்பொழுது  ராஜா:  உன்  ஆண்டவனுடைய  குமாரன்  எங்கே  என்று  கேட்டதற்கு,  சீபா  ராஜாவை  நோக்கி:  எருசலேமில்  இருக்கிறான்;  இன்று  இஸ்ரவேல்  வீட்டார்  என்  தகப்பனுடைய  ராஜ்யத்தை  என்  வசமாய்த்  திரும்பப்பண்ணுவார்கள்  என்றான்  என்று  சொன்னான்.  (2சாமுவேல்  16:3)

appozhuthu  raajaa:  un  aa'ndavanudaiya  kumaaran  enggea  en’ru  keattatha’rku,  seebaa  raajaavai  noakki:  erusaleamil  irukki’raan;  in’ru  israveal  veettaar  en  thagappanudaiya  raajyaththai  en  vasamaayth  thirumbappa'n'nuvaarga'l  en’raan  en’ru  sonnaan.  (2saamuveal  16:3)

அப்பொழுது  ராஜா  சீபாவை  நோக்கி:  மேவிபோசேத்திற்கு  உண்டானதெல்லாம்  உன்னுடையதாயிற்று  என்றான்.  அதற்குச்  சீபா:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  உம்முடைய  கண்களில்  எனக்குத்  தயைகிடைக்கவேண்டும்  என்று  நான்  பணிந்து  கேட்டுக்கொள்ளுகிறேன்  என்றான்.  (2சாமுவேல்  16:4)

appozhuthu  raajaa  seebaavai  noakki:  meaviboaseaththi’rku  u'ndaanathellaam  unnudaiyathaayit’ru  en’raan.  atha’rkuch  seebaa:  raajaavaagiya  en  aa'ndavanea,  ummudaiya  ka'nga'lil  enakkuth  thayaikidaikkavea'ndum  en’ru  naan  pa'ninthu  keattukko'l'lugi’rean  en’raan.  (2saamuveal  16:4)

தாவீதுராஜா  பகூரிம்மட்டும்  வந்தபோது,  இதோ,  சவுல்  வீட்டு  வம்சத்தானாயிருக்கிற  கேராவின்  குமாரனாகிய  சீமேயி  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷன்  அங்கேயிருந்து  புறப்பட்டு,  தூஷித்துக்கொண்டே  நடந்துவந்து,  (2சாமுவேல்  16:5)

thaaveethuraajaa  bagoorimmattum  vanthapoathu,  ithoa,  savul  veettu  vamsaththaanaayirukki’ra  kearaavin  kumaaranaagiya  seemeayi  ennum  pearu'l'la  oru  manushan  anggeayirunthu  pu’rappattu,  thooshiththukko'ndea  nadanthuvanthu,  (2saamuveal  16:5)

சகல  ஜனங்களும்,  சகல  பலசாலிகளும்,  தாவீதின்  வலதுபுறமாகவும்  இடதுபுறமாகவும்  நடக்கையில்,  தாவீதின்மேலும்,  தாவீதுராஜாவுடைய  சகல  ஊழியக்காரர்மேலும்  கற்களை  எறிந்தான்.  (2சாமுவேல்  16:6)

sagala  janangga'lum,  sagala  balasaaliga'lum,  thaaveethin  valathupu’ramaagavum  idathupu’ramaagavum  nadakkaiyil,  thaaveethinmealum,  thaaveethuraajaavudaiya  sagala  oozhiyakkaararmealum  ka’rka'lai  e’rinthaan.  (2saamuveal  16:6)

சீமேயி  அவனைத்  தூஷித்து:  இரத்தப்பிரியனே,  பேலியாளின்  மனுஷனே,  தொலைந்துபோ,  தொலைந்துபோ.  (2சாமுவேல்  16:7)

seemeayi  avanaith  thooshiththu:  iraththappiriyanea,  bealiyaa'lin  manushanea,  tholainthupoa,  tholainthupoa.  (2saamuveal  16:7)

சவுலின்  ஸ்தலத்தில்  ராஜாவான  உன்மேல்  கர்த்தர்  சவுல்  வீட்டாரின்  இரத்தப்பழியைத்  திரும்பப்பண்ணினார்;  கர்த்தர்  ராஜ்யபாரத்தை  உன்  குமாரனாகிய  அப்சலோமின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  இப்போதும்  இதோ,  உன்  அக்கிரமத்தில்  அகப்பட்டாய்;  நீ  இரத்தப்பிரியனான  மனுஷன்  என்றான்.  (2சாமுவேல்  16:8)

savulin  sthalaththil  raajaavaana  unmeal  karththar  savul  veettaarin  iraththappazhiyaith  thirumbappa'n'ninaar;  karththar  raajyabaaraththai  un  kumaaranaagiya  absaloamin  kaiyil  oppukkoduththaar;  ippoathum  ithoa,  un  akkiramaththil  agappattaay;  nee  iraththappiriyanaana  manushan  en’raan.  (2saamuveal  16:8)

அப்பொழுது  செருயாவின்  குமாரன்  அபிசாய்  ராஜாவை  நோக்கி:  அந்தச்  செத்தநாய்  ராஜாவாகிய  என்  ஆண்டவனை  தூஷிப்பானேன்?  நான்  போய்  அவன்  தலையை  வாங்கிப்போடட்டுமே  என்றான்.  (2சாமுவேல்  16:9)

appozhuthu  seruyaavin  kumaaran  abisaay  raajaavai  noakki:  anthach  seththanaay  raajaavaagiya  en  aa'ndavanai  thooshippaanean?  naan  poay  avan  thalaiyai  vaanggippoadattumea  en’raan.  (2saamuveal  16:9)

அதற்கு  ராஜா:  செருயாவின்  குமாரரே,  எனக்கும்  உங்களுக்கும்  என்ன?  அவன்  என்னைத்  தூஷிக்கட்டும்;  தாவீதைத்  தூஷிக்கவேண்டும்  என்று  கர்த்தர்  அவனுக்குச்  சொன்னார்;  ஆகையால்  ஏன்  இப்படிச்  செய்கிறாய்  என்று  கேட்கத்தக்கவன்  யார்  என்றான்.  (2சாமுவேல்  16:10)

atha’rku  raajaa:  seruyaavin  kumaararea,  enakkum  ungga'lukkum  enna?  avan  ennaith  thooshikkattum;  thaaveethaith  thooshikkavea'ndum  en’ru  karththar  avanukkuch  sonnaar;  aagaiyaal  ean  ippadich  seygi’raay  en’ru  keadkaththakkavan  yaar  en’raan.  (2saamuveal  16:10)

பின்னும்  தாவீது  அபிசாயையும்  தன்  ஊழியக்காரர்  எல்லாரையும்  பார்த்து:  இதோ,  என்  கர்ப்பப்பிறப்பான  என்  குமாரனே  என்  பிராணனை  வாங்கத்தேடும்போது,  இந்தப்  பென்யமீனன்  எத்தனை  அதிகமாய்ச்  செய்வான்,  அவன்  தூஷிக்கட்டும்;  அப்படிச்  செய்யக்  கர்த்தர்  அவனுக்குக்  கட்டளையிட்டிருக்கிறார்.  (2சாமுவேல்  16:11)

pinnum  thaaveethu  abisaayaiyum  than  oozhiyakkaarar  ellaaraiyum  paarththu:  ithoa,  en  karppappi’rappaana  en  kumaaranea  en  piraa'nanai  vaanggaththeadumpoathu,  inthap  benyameenan  eththanai  athigamaaych  seyvaan,  avan  thooshikkattum;  appadich  seyyak  karththar  avanukkuk  katta'laiyittirukki’raar.  (2saamuveal  16:11)

ஒருவேளை  கர்த்தர்  என்  சிறுமையைப்  பார்த்து,  இந்த  நாளில்  அவன்  நிந்தித்த  நிந்தனைக்குப்  பதிலாக  எனக்கு  நன்மையைச்  சரிக்கட்டுவார்  என்றான்.  (2சாமுவேல்  16:12)

oruvea'lai  karththar  en  si’rumaiyaip  paarththu,  intha  naa'lil  avan  ninthiththa  ninthanaikkup  bathilaaga  enakku  nanmaiyaich  sarikkattuvaar  en’raan.  (2saamuveal  16:12)

அப்படியே  தாவீதும்  அவன்  மனுஷரும்  வழியே  நடந்துபோனார்கள்;  சீமேயியும்  மலையின்  பக்கத்திலே  அவனுக்கு  எதிராக  நடந்து  தூஷித்து,  அவனுக்கு  எதிராகக்  கற்களை  எறிந்து,  மண்ணைத்  தூற்றிக்கொண்டே  வந்தான்.  (2சாமுவேல்  16:13)

appadiyea  thaaveethum  avan  manusharum  vazhiyea  nadanthupoanaarga'l;  seemeayiyum  malaiyin  pakkaththilea  avanukku  ethiraaga  nadanthu  thooshiththu,  avanukku  ethiraagak  ka’rka'lai  e’rinthu,  ma'n'naith  thoot’rikko'ndea  vanthaan.  (2saamuveal  16:13)

ராஜாவும்  அவனோடிருந்த  சகல  ஜனங்களும்  விடாய்த்தவர்களாய்,  தங்குமிடத்திலே  சேர்ந்து,  இளைப்பாறினார்கள்.  (2சாமுவேல்  16:14)

raajaavum  avanoadiruntha  sagala  janangga'lum  vidaayththavarga'laay,  thanggumidaththilea  searnthu,  i'laippaa’rinaarga'l.  (2saamuveal  16:14)

அப்சலோமும்  இஸ்ரவேல்  மனுஷராகிய  சகல  ஜனங்களும்  அவனோடேகூட  அகித்தோப்பேலும்  எருசலேமுக்கு  வந்தார்கள்.  (2சாமுவேல்  16:15)

absaloamum  israveal  manusharaagiya  sagala  janangga'lum  avanoadeakooda  agiththoappealum  erusaleamukku  vanthaarga'l.  (2saamuveal  16:15)

அற்கியனாகிய  ஊசாய்  என்னும்  தாவீதின்  சிநேகிதன்  அப்சலோமிடத்தில்  வந்தபோது,  ஊசாய்  அப்சலோமை  நோக்கி:  ராஜாவே  வாழ்க,  ராஜாவே  வாழ்க  என்றான்.  (2சாமுவேல்  16:16)

a’rkiyanaagiya  oosaay  ennum  thaaveethin  sineagithan  absaloamidaththil  vanthapoathu,  oosaay  absaloamai  noakki:  raajaavea  vaazhga,  raajaavea  vaazhga  en’raan.  (2saamuveal  16:16)

அப்பொழுது  அப்சலோம்  ஊசாயைப்  பார்த்து:  உன்  சிநேகிதன்மேல்  உனக்கு  இருக்கிற  தயை  இதுதானோ?  உன்  சிநேகிதனோடே  நீ  போகாதேபோனது  என்ன  என்று  கேட்டான்.  (2சாமுவேல்  16:17)

appozhuthu  absaloam  oosaayaip  paarththu:  un  sineagithanmeal  unakku  irukki’ra  thayai  ithuthaanoa?  un  sineagithanoadea  nee  poagaatheapoanathu  enna  en’ru  keattaan.  (2saamuveal  16:17)

அதற்கு  ஊசாய்  அப்சலோமை  நோக்கி:  அப்படி  அல்ல,  கர்த்தரும்  இந்த  ஜனங்களும்  இஸ்ரவேல்  மனுஷர்  அனைவரும்  தெரிந்துகொள்ளுகிறவரையே  நான்  சேர்ந்து  அவரோடே  இருப்பேன்.  (2சாமுவேல்  16:18)

atha’rku  oosaay  absaloamai  noakki:  appadi  alla,  karththarum  intha  janangga'lum  israveal  manushar  anaivarum  therinthuko'l'lugi’ravaraiyea  naan  searnthu  avaroadea  iruppean.  (2saamuveal  16:18)

இதுவும்  அல்லாமல்,  நான்  யாரிடத்தில்  சேவிப்பேன்?  அவருடைய  குமாரனிடத்தில்  அல்லவா?  உம்முடைய  தகப்பனிடத்தில்  எப்படிச்  சேவித்தேனோ,  அப்படியே  உம்மிடத்திலும்  சேவிப்பேன்  என்றான்.  (2சாமுவேல்  16:19)

ithuvum  allaamal,  naan  yaaridaththil  seavippean?  avarudaiya  kumaaranidaththil  allavaa?  ummudaiya  thagappanidaththil  eppadich  seaviththeanoa,  appadiyea  ummidaththilum  seavippean  en’raan.  (2saamuveal  16:19)

அப்சலோம்  அகித்தோப்பேலைப்  பார்த்து,  நாங்கள்  செய்யவேண்டியது  இன்னதென்று  ஆலோசனை  சொல்லும்  என்றான்.  (2சாமுவேல்  16:20)

absaloam  agiththoappealaip  paarththu,  naangga'l  seyyavea'ndiyathu  innathen’ru  aaloasanai  sollum  en’raan.  (2saamuveal  16:20)

அப்பொழுது  அகித்தோப்பேல்  அப்சலோமை  நோக்கி:  வீட்டைக்காக்க  உம்முடைய  தகப்பன்  பின்வைத்த  அவருடைய  மறுமனையாட்டிகளிடத்தில்  பிரவேசியும்,  அப்பொழுது  உம்முடைய  தகப்பனுக்கு  நாற்றமாய்ப்போனீர்  என்பதை  இஸ்ரவேலர்  எல்லாரும்  கேள்விப்பட்டு,  உம்மோடிருக்கிற  எல்லாருடைய  கைகளும்  பலக்கும்  என்றான்.  (2சாமுவேல்  16:21)

appozhuthu  agiththoappeal  absaloamai  noakki:  veettaikkaakka  ummudaiya  thagappan  pinvaiththa  avarudaiya  ma’rumanaiyaattiga'lidaththil  piraveasiyum,  appozhuthu  ummudaiya  thagappanukku  naat’ramaayppoaneer  enbathai  isravealar  ellaarum  kea'lvippattu,  ummoadirukki’ra  ellaarudaiya  kaiga'lum  balakkum  en’raan.  (2saamuveal  16:21)

அப்படியே  அப்சலோமுக்கு  உப்பரிகையின்மேல்  ஒரு  கூடாரத்தைப்  போட்டார்கள்;  அங்கே  அப்சலோம்  சகல  இஸ்ரவேலரின்  கண்களுக்கு  முன்பாக,  தன்  தகப்பனுடைய  மறுமனையாட்டிகளிடத்தில்  பிரவேசித்தான்.  (2சாமுவேல்  16:22)

appadiyea  absaloamukku  upparigaiyinmeal  oru  koodaaraththaip  poattaarga'l;  anggea  absaloam  sagala  isravealarin  ka'nga'lukku  munbaaga,  than  thagappanudaiya  ma’rumanaiyaattiga'lidaththil  piraveasiththaan.  (2saamuveal  16:22)

அந்நாட்களில்  அகித்தோப்பேல்  சொல்லும்  ஆலோசனை  தேவனுடைய  வாக்கைப்போல  இருந்தது,  அப்படி  அகித்தோப்பேலின்  ஆலோசனையெல்லாம்  தாவீதுக்கும்  இருந்தது,  அப்சலோமுக்கும்  அப்படியே  இருந்தது.  (2சாமுவேல்  16:23)

annaadka'lil  agiththoappeal  sollum  aaloasanai  theavanudaiya  vaakkaippoala  irunthathu,  appadi  agiththoappealin  aaloasanaiyellaam  thaaveethukkum  irunthathu,  absaloamukkum  appadiyea  irunthathu.  (2saamuveal  16:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!