Monday, August 29, 2016

2 Saamuveal 13 | 2 சாமுவேல் 13 | 2 Samuel 13

இதற்குப்பின்பு  தாவீதின்  குமாரனாகிய  அப்சலோமுக்குத்  தாமார்  என்னும்  பேருள்ள  சவுந்தரியமுள்ள  ஒரு  சகோதரி  இருந்தாள்;  அவள்மேல்  தாவீதின்  குமாரன்  அம்னோன்  மோகங்கொண்டான்.  (2சாமுவேல்  13:1)

itha’rkuppinbu  thaaveethin  kumaaranaagiya  absaloamukkuth  thaamaar  ennum  pearu'l'la  savunthariyamu'l'la  oru  sagoathari  irunthaa'l;  ava'lmeal  thaaveethin  kumaaran  amnoan  moagangko'ndaan.  (2saamuveal  13:1)

தன்  சகோதரியாகிய  தாமாரினிமித்தம்  ஏக்கங்கொண்டு  வியாதிப்பட்டான்;  அவள்  கன்னியாஸ்திரீயாயிருந்தாள்;  அவளுக்குப்  பொல்லாப்புச்  செய்ய,  அம்னோனுக்கு  வருத்தமாய்க்  கண்டது.  (2சாமுவேல்  13:2)

than  sagoathariyaagiya  thaamaarinimiththam  eakkangko'ndu  viyaathippattaan;  ava'l  kanniyaasthireeyaayirunthaa'l;  ava'lukkup  pollaappuch  seyya,  amnoanukku  varuththamaayk  ka'ndathu.  (2saamuveal  13:2)

அம்னோனுக்குத்  தாவீதுடைய  தமையன்  சிமியாவின்  குமாரனாகிய  யோனதாப்  என்னும்  பேருள்ள  ஒரு  சிநேகிதன்  இருந்தான்;  அந்த  யோனதாப்  மகா  தந்திரவாதி.  (2சாமுவேல்  13:3)

amnoanukkuth  thaaveethudaiya  thamaiyan  simiyaavin  kumaaranaagiya  yoanathaab  ennum  pearu'l'la  oru  sineagithan  irunthaan;  antha  yoanathaab  mahaa  thanthiravaathi.  (2saamuveal  13:3)

அவன்  இவனைப்  பார்த்து:  ராஜகுமாரனாகிய  நீ,  நாளுக்குநாள்  எதினாலே  இப்படி  மெலிந்துபோகிறாய்,  எனக்குச்  சொல்லமாட்டாயா  என்றான்.  அதற்கு  அம்னோன்:  என்  சகோதரன்  அப்சலோமின்  சகோதரியாகிய  தாமாரின்மேல்  நான்  ஆசைவைத்திருக்கிறேன்  என்றான்.  (2சாமுவேல்  13:4)

avan  ivanaip  paarththu:  raajakumaaranaagiya  nee,  naa'lukkunaa'l  ethinaalea  ippadi  melinthupoagi’raay,  enakkuch  sollamaattaayaa  en’raan.  atha’rku  amnoan:  en  sagoatharan  absaloamin  sagoathariyaagiya  thaamaarinmeal  naan  aasaivaiththirukki’rean  en’raan.  (2saamuveal  13:4)

அப்பொழுது  யோனதாப்  அவனைப்பார்த்து:  நீ  வியாதிக்காரனைப்போல  உன்  படுக்கையின்மேல்  படுத்துக்கொள்;  உன்னைப்  பார்க்கிறதற்கு  உன்  தகப்பனார்  வரும்போது,  நீ,  என்  சகோதரியாகிய  தாமார்  வந்து,  எனக்குப்  போஜனம்கொடுத்து,  அவள்  கையினாலே  சாப்பிடும்படிக்கு  நான்  பார்க்க,  என்  கண்களுக்கு  முன்பாகச்  சமைக்கும்படி  தயவுசெய்யவேண்டும்  என்று  சொல்  என்றான்.  (2சாமுவேல்  13:5)

appozhuthu  yoanathaab  avanaippaarththu:  nee  viyaathikkaaranaippoala  un  padukkaiyinmeal  paduththukko'l;  unnaip  paarkki’ratha’rku  un  thagappanaar  varumpoathu,  nee,  en  sagoathariyaagiya  thaamaar  vanthu,  enakkup  poajanamkoduththu,  ava'l  kaiyinaalea  saappidumpadikku  naan  paarkka,  en  ka'nga'lukku  munbaagach  samaikkumpadi  thayavuseyyavea'ndum  en’ru  sol  en’raan.  (2saamuveal  13:5)

அப்படியே  அம்னோன்  வியாதிக்காரன்போல்  படுத்துக்கொண்டு,  ராஜா  தன்னைப்  பார்க்கவந்தபோது,  ராஜாவை  நோக்கி:  என்  சகோதரியாகிய  தாமார்  வந்து  நான்  அவள்  கையினாலே  சாப்பிடும்படிக்கு,  என்  கண்களுக்கு  முன்பாக  இரண்டு  நல்ல  பணியாரங்களைப்  பண்ணும்படி  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்றான்.  (2சாமுவேல்  13:6)

appadiyea  amnoan  viyaathikkaaranpoal  paduththukko'ndu,  raajaa  thannaip  paarkkavanthapoathu,  raajaavai  noakki:  en  sagoathariyaagiya  thaamaar  vanthu  naan  ava'l  kaiyinaalea  saappidumpadikku,  en  ka'nga'lukku  munbaaga  ira'ndu  nalla  pa'niyaarangga'laip  pa'n'numpadi  uththaravu  kodukkavea'ndum  en’raan.  (2saamuveal  13:6)

அப்பொழுது  தாவீது:  வீட்டுக்குத்  தாமாரிடத்தில்  ஆள்  அனுப்பி,  நீ  உன்  சகோதரனாகிய  அம்னோன்  வீட்டுக்குப்  போய்,  அவனுக்குச்  சமையல்  பண்ணிக்கொடு  என்று  சொல்லச்சொன்னான்.  (2சாமுவேல்  13:7)

appozhuthu  thaaveethu:  veettukkuth  thaamaaridaththil  aa'l  anuppi,  nee  un  sagoatharanaagiya  amnoan  veettukkup  poay,  avanukkuch  samaiyal  pa'n'nikkodu  en’ru  sollachsonnaan.  (2saamuveal  13:7)

தாமார்  தன்  சகோதரனாகிய  அம்னோன்  படுத்துக்கொண்டிருக்கிற  வீட்டுக்குப்  போய்,  மாவெடுத்துப்  பிசைந்து,  அவன்  கண்களுக்கு  முன்பாகத்  தட்டி,  பணியாரங்களைச்  சுட்டு,  (2சாமுவேல்  13:8)

thaamaar  than  sagoatharanaagiya  amnoan  paduththukko'ndirukki’ra  veettukkup  poay,  maaveduththup  pisainthu,  avan  ka'nga'lukku  munbaagath  thatti,  pa'niyaarangga'laich  suttu,  (2saamuveal  13:8)

சட்டியை  எடுத்து,  அவனுக்கு  முன்பாக  அவைகளை  வைத்தாள்;  ஆனாலும்  அவன்  சாப்பிடமாட்டேன்  என்றான்;  பின்பு  அம்னோன்:  எல்லாரும்  என்னைவிட்டு  வெளியே  போகட்டும்  என்றான்;  எல்லாரும்  அவனை  விட்டு  வெளியே  போனார்கள்.  (2சாமுவேல்  13:9)

sattiyai  eduththu,  avanukku  munbaaga  avaiga'lai  vaiththaa'l;  aanaalum  avan  saappidamaattean  en’raan;  pinbu  amnoan:  ellaarum  ennaivittu  ve'liyea  poagattum  en’raan;  ellaarum  avanai  vittu  ve'liyea  poanaarga'l.  (2saamuveal  13:9)

அப்பொழுது  அம்னோன்  தாமாரைப்  பார்த்து:  நான்  உன்  கையினாலே  சாப்பிடும்படிக்கு,  அந்தப்  பலகாரத்தை  அறைவீட்டிலே  கொண்டுவா  என்றான்;  அப்படியே  தாமார்  தான்  செய்த  பணியாரங்களை  அறைவீட்டில்  இருக்கிற  தன்  சகோதரனாகிய  அம்னோனிடத்தில்  கொண்டு  போனாள்.  (2சாமுவேல்  13:10)

appozhuthu  amnoan  thaamaaraip  paarththu:  naan  un  kaiyinaalea  saappidumpadikku,  anthap  palagaaraththai  a’raiveettilea  ko'nduvaa  en’raan;  appadiyea  thaamaar  thaan  seytha  pa'niyaarangga'lai  a’raiveettil  irukki’ra  than  sagoatharanaagiya  amnoanidaththil  ko'ndu  poanaa'l.  (2saamuveal  13:10)

அவன்  சாப்பிடும்படிக்கு  அவள்  அவைகளைக்  கிட்ட  கொண்டுவருகையில்,  அவன்  அவளைப்  பிடித்து,  அவளைப்  பார்த்து:  என்  சகோதரியே,  நீ  வந்து  என்னோடே  சயனி  என்றான்.  (2சாமுவேல்  13:11)

avan  saappidumpadikku  ava'l  avaiga'laik  kitta  ko'nduvarugaiyil,  avan  ava'laip  pidiththu,  ava'laip  paarththu:  en  sagoathariyea,  nee  vanthu  ennoadea  sayani  en’raan.  (2saamuveal  13:11)

அதற்கு  அவள்:  வேண்டாம்,  என்  சகோதரனே,  என்னை  அவமானப்படுத்தாதே,  இஸ்ரவேலிலே  இப்படிச்  செய்யத்தகாது;  இப்படிப்பட்ட  மதிகேடான  காரியத்தைச்  செய்யவேண்டாம்.  (2சாமுவேல்  13:12)

atha’rku  ava'l:  vea'ndaam,  en  sagoatharanea,  ennai  avamaanappaduththaathea,  isravealilea  ippadich  seyyaththagaathu;  ippadippatta  mathikeadaana  kaariyaththaich  seyyavea'ndaam.  (2saamuveal  13:12)

நான்  என்  வெட்கத்தோடே  எங்கே  போவேன்?  நீயும்  இஸ்ரவேலிலே  மதிகெட்டவர்களில்  ஒருவனைப்போல  ஆவாய்;  இப்போதும்  நீ  ராஜாவோடே  பேசு,  அவர்  என்னை  உனக்குத்  தராமல்  மறுக்கமாட்டார்  என்றாள்.  (2சாமுவேல்  13:13)

naan  en  vedkaththoadea  enggea  poavean?  neeyum  isravealilea  mathikettavarga'lil  oruvanaippoala  aavaay;  ippoathum  nee  raajaavoadea  peasu,  avar  ennai  unakkuth  tharaamal  ma’rukkamaattaar  en’raa'l.  (2saamuveal  13:13)

அவன்  அவள்  சொல்லைக்  கேட்கமாட்டேன்  என்று  அவளைப்  பலவந்தமாய்ப்  பிடித்து,  அவளோடே  சயனித்து,  அவளைக்  கற்பழித்தான்.  (2சாமுவேல்  13:14)

avan  ava'l  sollaik  keadkamaattean  en’ru  ava'laip  balavanthamaayp  pidiththu,  ava'loadea  sayaniththu,  ava'laik  ka’rpazhiththaan.  (2saamuveal  13:14)

பிற்பாடு  அம்னோன்  அவளை  மிகவும்  வெறுத்தான்;  அவன்  அவளை  விரும்பின  விருப்பத்தைப்  பார்க்கிலும்,  அவளை  வெறுத்த  வெறுப்பு  அதிகமாயிருந்தது.  ஆகையால்:  நீ  எழுந்து  போய்விடு  என்று  அம்னோன்  அவளோடே  சொன்னான்.  (2சாமுவேல்  13:15)

pi’rpaadu  amnoan  ava'lai  migavum  ve’ruththaan;  avan  ava'lai  virumbina  viruppaththaip  paarkkilum,  ava'lai  ve’ruththa  ve’ruppu  athigamaayirunthathu.  aagaiyaal:  nee  ezhunthu  poayvidu  en’ru  amnoan  ava'loadea  sonnaan.  (2saamuveal  13:15)

அப்பொழுது  அவள்:  நீ  எனக்கு  முந்தி  செய்த  அநியாயத்தைப்பார்க்கிலும்,  இப்பொழுது  என்னைத்  துரத்திவிடுகிற  அந்த  அநியாயம்  கொடுமையாயிருக்கிறது  என்றாள்;  ஆனாலும்  அவன்  அவள்  சொல்லைக்  கேட்க  மனதில்லாமல்,  (2சாமுவேல்  13:16)

appozhuthu  ava'l:  nee  enakku  munthi  seytha  aniyaayaththaippaarkkilum,  ippozhuthu  ennaith  thuraththividugi’ra  antha  aniyaayam  kodumaiyaayirukki’rathu  en’raa'l;  aanaalum  avan  ava'l  sollaik  keadka  manathillaamal,  (2saamuveal  13:16)

தன்னிடத்தில்  சேவிக்கிற  தன்  வேலைக்காரனைக்  கூப்பிட்டு:  நீ  இவளை  என்னை  விட்டு  வெளியே  தள்ளி,  கதவைப்  பூட்டு  என்றான்.  (2சாமுவேல்  13:17)

thannidaththil  seavikki’ra  than  vealaikkaaranaik  kooppittu:  nee  iva'lai  ennai  vittu  ve'liyea  tha'l'li,  kathavaip  poottu  en’raan.  (2saamuveal  13:17)

அப்படியே  அவனிடத்தில்  சேவிக்கிறவன்  அவளை  வெளியே  தள்ளி,  கதவைப்  பூட்டினான்;  அவள்  பலவருணமான  வஸ்திரத்தை  உடுத்திக்கொண்டிருந்தாள்;  ராஜகுமாரத்திகளாகிய  கன்னிகைகள்  இப்படிக்கொத்த  சால்வைகளைத்  தரித்துக்கொள்வார்கள்.  (2சாமுவேல்  13:18)

appadiyea  avanidaththil  seavikki’ravan  ava'lai  ve'liyea  tha'l'li,  kathavaip  poottinaan;  ava'l  palavaru'namaana  vasthiraththai  uduththikko'ndirunthaa'l;  raajakumaaraththiga'laagiya  kannigaiga'l  ippadikkoththa  saalvaiga'laith  thariththukko'lvaarga'l.  (2saamuveal  13:18)

அப்பொழுது  தாமார்:  தன்  தலையின்மேல்  சாம்பலை  வாரிப்  போட்டுக்கொண்டு,  தான்  தரித்திருந்த  பலவருணமான  வஸ்திரத்தைக்  கிழித்து,  தன்  கையைத்  தன்  தலையின்மேல்  வைத்து,  சத்தமிட்டு  அழுதுகொண்டுபோனாள்.  (2சாமுவேல்  13:19)

appozhuthu  thaamaar:  than  thalaiyinmeal  saambalai  vaarip  poattukko'ndu,  thaan  thariththiruntha  palavaru'namaana  vasthiraththaik  kizhiththu,  than  kaiyaith  than  thalaiyinmeal  vaiththu,  saththamittu  azhuthuko'ndupoanaa'l.  (2saamuveal  13:19)

அப்பொழுது  அவள்  சகோதரனாகிய  அப்சலோம்  அவளைப்  பார்த்து:  உன்  சகோதரனாகிய  அம்னோன்  உன்னோடிருந்தானோ?  இப்போதும்  என்  சகோதரியே,  நீ  மவுனமாயிரு;  அவன்  உன்னுடைய  சகோதரன்;  இந்தக்  காரியத்தை  உன்  மனதிலே  வைக்காதே  என்றான்;  அப்படியே  தாமார்  தன்  சகோதரனாகிய  அப்சலோமின்  வீட்டில்  தனித்துக்  கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.  (2சாமுவேல்  13:20)

appozhuthu  ava'l  sagoatharanaagiya  absaloam  ava'laip  paarththu:  un  sagoatharanaagiya  amnoan  unnoadirunthaanoa?  ippoathum  en  sagoathariyea,  nee  mavunamaayiru;  avan  unnudaiya  sagoatharan;  inthak  kaariyaththai  un  manathilea  vaikkaathea  en’raan;  appadiyea  thaamaar  than  sagoatharanaagiya  absaloamin  veettil  thaniththuk  kileasappattukko'ndirunthaa'l.  (2saamuveal  13:20)

தாவீதுராஜா  இந்தச்  செய்திகளையெல்லாம்  கேள்விப்பட்டபோது,  வெகுகோபமாயெரிந்தான்.  (2சாமுவேல்  13:21)

thaaveethuraajaa  inthach  seythiga'laiyellaam  kea'lvippattapoathu,  vegukoabamaayerinthaan.  (2saamuveal  13:21)

அப்சலோம்  அம்னோனோடே  நன்மையாகிலும்  தீமையாகிலும்  பேசவில்லை;  தன்  சகோதரியாகிய  தாமாரை  அம்னோன்  கற்பழித்த  காரியத்தினிமித்தம்  அப்சலோம்  அவனைப்  பகைத்தான்.  (2சாமுவேல்  13:22)

absaloam  amnoanoadea  nanmaiyaagilum  theemaiyaagilum  peasavillai;  than  sagoathariyaagiya  thaamaarai  amnoan  ka’rpazhiththa  kaariyaththinimiththam  absaloam  avanaip  pagaiththaan.  (2saamuveal  13:22)

இரண்டு  வருஷம்  சென்றபின்பு,  அப்சலோம்  எப்பிராயீமுக்குச்  சமீபமான  பாலாத்சோரிலே  ஆட்களை  வைத்து,  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிற  வேலையில்  இருந்தான்;  அங்கே  ராஜகுமாரர்  எல்லாரையும்  விருந்துக்கு  அழைத்தான்.  (2சாமுவேல்  13:23)

ira'ndu  varusham  sen’rapinbu,  absaloam  eppiraayeemukkuch  sameebamaana  baalaathsoarilea  aadka'lai  vaiththu,  aaduga'lai  mayirkaththarikki’ra  vealaiyil  irunthaan;  anggea  raajakumaarar  ellaaraiyum  virunthukku  azhaiththaan.  (2saamuveal  13:23)

அவன்  ராஜாவினிடத்தில்  போய்,  ஆட்களை  வைத்து  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிறேன்;  ராஜாவும்  அவருடைய  ஊழியக்காரரும்  உமது  அடியானோடே  வரும்படி  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  (2சாமுவேல்  13:24)

avan  raajaavinidaththil  poay,  aadka'lai  vaiththu  aaduga'lai  mayirkaththarikki’rean;  raajaavum  avarudaiya  oozhiyakkaararum  umathu  adiyaanoadea  varumpadi  vea'ndikko'l'lugi’rean  en’raan.  (2saamuveal  13:24)

ராஜா  அப்சலோமைப்  பார்த்து:  அப்படி  வேண்டாம்,  என்  மகனே;  நாங்கள்  எல்லாரும்  வருவோமாகில்  உனக்கு  வெகு  செலவுண்டாகும்  என்றான்;  அவனை  வருந்திக்கேட்டாலும்,  அவன்  போக  மனதில்லாமல்,  அவனை  ஆசீர்வதித்தான்.  (2சாமுவேல்  13:25)

raajaa  absaloamaip  paarththu:  appadi  vea'ndaam,  en  maganea;  naangga'l  ellaarum  varuvoamaagil  unakku  vegu  selavu'ndaagum  en’raan;  avanai  varunthikkeattaalum,  avan  poaga  manathillaamal,  avanai  aaseervathiththaan.  (2saamuveal  13:25)

அப்பொழுது  அப்சலோம்:  அது  கூடாதிருந்தால்,  என்  சகோதரனாகிய  அம்னோனாவது  எங்களோடே  வரும்படி  அவனுக்கு  உத்தரவு  செய்யும்  என்றான்.  அதற்கு  ராஜா:  அவன்  உன்னோடே  வரவேண்டியது  என்ன  என்றான்.  (2சாமுவேல்  13:26)

appozhuthu  absaloam:  athu  koodaathirunthaal,  en  sagoatharanaagiya  amnoanaavathu  engga'loadea  varumpadi  avanukku  uththaravu  seyyum  en’raan.  atha’rku  raajaa:  avan  unnoadea  varavea'ndiyathu  enna  en’raan.  (2saamuveal  13:26)

அப்சலோம்  பின்னையும்  அவனை  வருந்திக்  கேட்டுக்கொண்டபடியினால்,  அவன்  அம்னோனையும்,  ராஜாவின்  குமாரர்  அனைவரையும்  அவனோடே  போகவிட்டான்.  (2சாமுவேல்  13:27)

absaloam  pinnaiyum  avanai  varunthik  keattukko'ndapadiyinaal,  avan  amnoanaiyum,  raajaavin  kumaarar  anaivaraiyum  avanoadea  poagavittaan.  (2saamuveal  13:27)

அப்சலோம்  தன்  வேலைக்காரரை  நோக்கி:  அம்னோன்  திராட்சரசம்  குடித்துக்  களித்திருக்கும்  சமயத்தை  நன்றாய்ப்  பார்த்திருங்கள்;  அப்பொழுது  நான்:  அம்னோனை  அடியுங்கள்  என்று  சொல்லுவேன்;  உடனே  நீங்கள்  பயப்படாமல்  அவனைக்  கொன்றுபோடுங்கள்;  நான்  அல்லவோ  அதை  உங்களுக்குக்  கட்டளையிடுகிறேன்;  திடன்கொண்டு  தைரியமாயிருங்கள்  என்று  சொல்லியிருந்தான்.  (2சாமுவேல்  13:28)

absaloam  than  vealaikkaararai  noakki:  amnoan  thiraadcharasam  kudiththuk  ka'liththirukkum  samayaththai  nan’raayp  paarththirungga'l;  appozhuthu  naan:  amnoanai  adiyungga'l  en’ru  solluvean;  udanea  neengga'l  bayappadaamal  avanaik  kon’rupoadungga'l;  naan  allavoa  athai  ungga'lukkuk  katta'laiyidugi’rean;  thidanko'ndu  thairiyamaayirungga'l  en’ru  solliyirunthaan.  (2saamuveal  13:28)

அப்சலோம்  கற்பித்தபடியே  அப்சலோமின்  வேலைக்காரர்  அம்னோனுக்குச்  செய்தார்கள்;  அப்பொழுது  ராஜகுமாரர்  எல்லாரும்  எழுந்திருந்து,  அவரவர்  தம்தம்  கோவேறு  கழுதையின்மேல்  ஏறி  ஓடிப்போனார்கள்.  (2சாமுவேல்  13:29)

absaloam  ka’rpiththapadiyea  absaloamin  vealaikkaarar  amnoanukkuch  seythaarga'l;  appozhuthu  raajakumaarar  ellaarum  ezhunthirunthu,  avaravar  thamtham  koavea’ru  kazhuthaiyinmeal  ea’ri  oadippoanaarga'l.  (2saamuveal  13:29)

அவர்கள்  வழியில்  இருக்கிறபோதே,  அப்சலோம்  ராஜகுமாரரையெல்லாம்  அடித்துக்  கொன்றுபோட்டான்,  அவர்களில்  ஒருவரும்  மீந்திருக்க  விடவில்லை  என்கிறதாய்,  தாவீதுக்குச்  செய்தி  வந்தது.  (2சாமுவேல்  13:30)

avarga'l  vazhiyil  irukki’rapoathea,  absaloam  raajakumaararaiyellaam  adiththuk  kon’rupoattaan,  avarga'lil  oruvarum  meenthirukka  vidavillai  engi’rathaay,  thaaveethukkuch  seythi  vanthathu.  (2saamuveal  13:30)

அப்பொழுது  ராஜா  எழுந்திருந்து,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  தரையிலே  விழுந்துகிடந்தான்;  அவன்  ஊழியக்காரர்  எல்லாரும்  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு  நின்றார்கள்.  (2சாமுவேல்  13:31)

appozhuthu  raajaa  ezhunthirunthu,  than  vasthirangga'laik  kizhiththukko'ndu,  tharaiyilea  vizhunthukidanthaan;  avan  oozhiyakkaarar  ellaarum  thangga'l  vasthirangga'laik  kizhiththukko'ndu  nin’raarga'l.  (2saamuveal  13:31)

அப்பொழுது  தாவீதின்  தமையனாகிய  சிமியாவின்  குமாரன்  யோனதாப்  வந்து:  ராஜகுமாரரான  வாலிபரையெல்லாம்  கொன்றுபோட்டார்கள்  என்று  என்  ஆண்டவன்  நினைக்கவேண்டாம்;  அம்னோன்மாத்திரம்  செத்துப்போனான்;  அவன்  தன்  சகோதரியாகிய  தாமாரைக்  கற்பழித்த  நாள்முதற்கொண்டு,  அது  அப்சலோமின்  நெஞ்சில்  இருந்தது.  (2சாமுவேல்  13:32)

appozhuthu  thaaveethin  thamaiyanaagiya  simiyaavin  kumaaran  yoanathaab  vanthu:  raajakumaararaana  vaalibaraiyellaam  kon’rupoattaarga'l  en’ru  en  aa'ndavan  ninaikkavea'ndaam;  amnoanmaaththiram  seththuppoanaan;  avan  than  sagoathariyaagiya  thaamaaraik  ka’rpazhiththa  naa'lmutha’rko'ndu,  athu  absaloamin  negnchil  irunthathu.  (2saamuveal  13:32)

இப்போதும்  ராஜகுமாரர்கள்  எல்லாரும்  செத்தார்கள்  என்கிற  பேச்சை  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தம்முடைய  மனதிலே  வைக்கவேண்டாம்;  அம்னோன்  ஒருவனே  செத்தான்  என்றான்;  அப்சலோம்  ஓடிப்போனான்.  (2சாமுவேல்  13:33)

ippoathum  raajakumaararga'l  ellaarum  seththaarga'l  engi’ra  peachchai  raajaavaagiya  en  aa'ndavan  thammudaiya  manathilea  vaikkavea'ndaam;  amnoan  oruvanea  seththaan  en’raan;  absaloam  oadippoanaan.  (2saamuveal  13:33)

ஜாமக்காரச்  சேவகன்  தன்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  இதோ,  அநேகம்  ஜனங்கள்  தனக்குப்  பின்னாலே  மலை  ஓரமாய்  வருகிறதைக்  கண்டான்.  (2சாமுவேல்  13:34)

jaamakkaarach  seavagan  than  ka'nga'lai  ea’reduththup  paarththapoathu,  ithoa,  aneagam  janangga'l  thanakkup  pinnaalea  malai  oaramaay  varugi’rathaik  ka'ndaan.  (2saamuveal  13:34)

அப்பொழுது  யோனதாப்  ராஜாவைப்  பார்த்து:  இதோ,  ராஜகுமாரர்  வருகிறார்கள்;  உமது  அடியேன்  சொன்னபடியே  ஆயிற்று  என்றான்.  (2சாமுவேல்  13:35)

appozhuthu  yoanathaab  raajaavaip  paarththu:  ithoa,  raajakumaarar  varugi’raarga'l;  umathu  adiyean  sonnapadiyea  aayit’ru  en’raan.  (2saamuveal  13:35)

அவன்  பேசி  முடிந்தபோது,  ராஜகுமாரர்  வந்து,  சத்தமிட்டு  அழுதார்கள்;  ராஜாவும்  அவனுடைய  எல்லா  ஊழியக்காரரும்  மிகவும்  புலம்பி  அழுதார்கள்.  (2சாமுவேல்  13:36)

avan  peasi  mudinthapoathu,  raajakumaarar  vanthu,  saththamittu  azhuthaarga'l;  raajaavum  avanudaiya  ellaa  oozhiyakkaararum  migavum  pulambi  azhuthaarga'l.  (2saamuveal  13:36)

அப்சலோமோ  அம்மியூதின்  குமாரனாகிய  தல்மாய்  என்னும்  கேசூரின்  ராஜாவினிடத்திற்கு  ஓடிப்போனான்.  தாவீது  தினந்தோறும்  தன்  குமாரனுக்காகத்  துக்கித்துக்கொண்டிருந்தான்.  (2சாமுவேல்  13:37)

absaloamoa  ammiyoothin  kumaaranaagiya  thalmaay  ennum  keasoorin  raajaavinidaththi’rku  oadippoanaan.  thaaveethu  thinanthoa’rum  than  kumaaranukkaagath  thukkiththukko'ndirunthaan.  (2saamuveal  13:37)

அப்சலோம்  கேசூருக்கு  ஓடிப்போய்,  அங்கே  மூன்று  வருஷம்  இருந்தான்.  (2சாமுவேல்  13:38)

absaloam  keasoorukku  oadippoay,  anggea  moon’ru  varusham  irunthaan.  (2saamuveal  13:38)

தாவீதுராஜா  அம்னோன்  செத்தபடியினால்,  அவனுக்காகத்  துக்கித்து  ஆறுதல்  அடைந்தபோது  அப்சலோமைப்  பின்தொடரும்  நினைவை  விட்டுவிட்டான்.  (2சாமுவேல்  13:39)

thaaveethuraajaa  amnoan  seththapadiyinaal,  avanukkaagath  thukkiththu  aa’ruthal  adainthapoathu  absaloamaip  pinthodarum  ninaivai  vittuvittaan.  (2saamuveal  13:39)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!