Monday, August 29, 2016

2 Saamuveal 12 | 2 சாமுவேல் 12 | 2 Samuel 12

கர்த்தர்  நாத்தானைத்  தாவீதினிடத்தில்  அனுப்பினார்;  இவன்  அவனிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  ஒரு  பட்டணத்தில்  இரண்டு  மனுஷர்  இருந்தார்கள்,  ஒருவன்  ஐசுவரியவான்,  மற்றவன்  தரித்திரன்.  (2சாமுவேல்  12:1)

karththar  naaththaanaith  thaaveethinidaththil  anuppinaar;  ivan  avanidaththil  vanthu,  avanai  noakki:  oru  patta'naththil  ira'ndu  manushar  irunthaarga'l,  oruvan  aisuvariyavaan,  mat’ravan  thariththiran.  (2saamuveal  12:1)

ஐசுவரியவானுக்கு  ஆடுமாடுகள்  வெகு  திரளாயிருந்தது.  (2சாமுவேல்  12:2)

aisuvariyavaanukku  aadumaaduga'l  vegu  thira'laayirunthathu.  (2saamuveal  12:2)

தரித்திரனுக்கோ  தான்  கொண்டு  வளர்த்த  ஒரே  ஒரு  சின்ன  ஆட்டுக்குட்டியைத்தவிர  வேறொன்றும்  இல்லாதிருந்தது;  அது  அவனோடும்  அவன்  பிள்ளைகளோடுங்கூட  இருந்து  வளர்ந்து,  அவன்  வாயின்  அப்பத்தைத்  தின்று,  அவன்  பாத்திரத்திலே  குடித்து,  அவன்  மடியிலே  படுத்துக்கொண்டு,  அவனுக்கு  ஒரு  மகளைப்போல  இருந்தது.  (2சாமுவேல்  12:3)

thariththiranukkoa  thaan  ko'ndu  va'larththa  orea  oru  sinna  aattukkuttiyaiththavira  vea’ron’rum  illaathirunthathu;  athu  avanoadum  avan  pi'l'laiga'loadungkooda  irunthu  va'larnthu,  avan  vaayin  appaththaith  thin’ru,  avan  paaththiraththilea  kudiththu,  avan  madiyilea  paduththukko'ndu,  avanukku  oru  maga'laippoala  irunthathu.  (2saamuveal  12:3)

அந்த  ஐசுவரியவானிடத்தில்  வழிப்போக்கன்  ஒருவன்  வந்தான்;  அவன்  தன்னிடத்தில்  வந்த  வழிப்போக்கனுக்குச்  சமையல்  பண்ணுவிக்க,  தன்னுடைய  ஆடுமாடுகளில்  ஒன்றைப்  பிடிக்க  மனதில்லாமல்,  அந்தத்  தரித்திரனுடைய  ஆட்டுக்குட்டியைப்  பிடித்து,  அதைத்  தன்னிடத்தில்  வந்த  மனுஷனுக்குச்  சமையல்  பண்ணுவித்தான்  என்றான்.  (2சாமுவேல்  12:4)

antha  aisuvariyavaanidaththil  vazhippoakkan  oruvan  vanthaan;  avan  thannidaththil  vantha  vazhippoakkanukkuch  samaiyal  pa'n'nuvikka,  thannudaiya  aadumaaduga'lil  on’raip  pidikka  manathillaamal,  anthath  thariththiranudaiya  aattukkuttiyaip  pidiththu,  athaith  thannidaththil  vantha  manushanukkuch  samaiyal  pa'n'nuviththaan  en’raan.  (2saamuveal  12:4)

அப்பொழுது  தாவீது:  அந்த  மனுஷன்மேல்  மிகவும்  கோபமூண்டவனாகி,  நாத்தானைப்  பார்த்து:  இந்தக்  காரியத்தைச்  செய்த  மனுஷன்  மரணத்திற்குப்  பாத்திரன்  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  (2சாமுவேல்  12:5)

appozhuthu  thaaveethu:  antha  manushanmeal  migavum  koabamoo'ndavanaagi,  naaththaanaip  paarththu:  inthak  kaariyaththaich  seytha  manushan  mara'naththi’rkup  paaththiran  en’ru  karththarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean.  (2saamuveal  12:5)

அவன்  இரக்கமற்றவனாயிருந்து,  இந்தக்  காரியத்தைச்  செய்தபடியினால்,  அந்த  ஆட்டுக்குட்டிக்காக  நாலத்தனை  திரும்பச்  செலுத்தவேண்டும்  என்றான்.  (2சாமுவேல்  12:6)

avan  irakkamat’ravanaayirunthu,  inthak  kaariyaththaich  seythapadiyinaal,  antha  aattukkuttikkaaga  naalaththanai  thirumbach  seluththavea'ndum  en’raan.  (2saamuveal  12:6)

அப்பொழுது  நாத்தான்  தாவீதை  நோக்கி:  நீயே  அந்த  மனுஷன்;  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  உன்னை  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணி,  உன்னைச்  சவுலின்  கைக்குத்  தப்புவித்து,  (2சாமுவேல்  12:7)

appozhuthu  naaththaan  thaaveethai  noakki:  neeyea  antha  manushan;  isravealin  theavanaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal,  naan  unnai  isravealinmeal  raajaavaaga  abisheagampa'n'ni,  unnaich  savulin  kaikkuth  thappuviththu,  (2saamuveal  12:7)

உன்  ஆண்டவனுடைய  வீட்டை  உனக்குக்  கொடுத்து,  உன்  ஆண்டவனுடைய  ஸ்திரீகளையும்  உன்  மடியிலே  தந்து,  இஸ்ரவேல்  வம்சத்தையும்,  யூதா  வம்சத்தையும்  உனக்குக்  கையளித்தேன்;  இது  போதாதிருந்தால்,  இன்னும்  உனக்கு  வேண்டியதைத்  தருவேன்.  (2சாமுவேல்  12:8)

un  aa'ndavanudaiya  veettai  unakkuk  koduththu,  un  aa'ndavanudaiya  sthireega'laiyum  un  madiyilea  thanthu,  israveal  vamsaththaiyum,  yoothaa  vamsaththaiyum  unakkuk  kaiya'liththean;  ithu  poathaathirunthaal,  innum  unakku  vea'ndiyathaith  tharuvean.  (2saamuveal  12:8)

கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பான  இந்தக்  காரியத்தைச்  செய்து,  அவருடைய  வார்த்தையை  நீ  அசட்டைபண்ணினது  என்ன?  ஏத்தியனாகிய  உரியாவை  நீ  பட்டயத்தால்  மடிவித்து,  அவன்  மனைவியை  உனக்கு  மனைவியாக  எடுத்துக்கொண்டு,  அவனை  அம்மோன்  புத்திரரின்  பட்டயத்தாலே  கொன்றுபோட்டாய்.  (2சாமுவேல்  12:9)

karththarudaiya  paarvaikkup  pollaappaana  inthak  kaariyaththaich  seythu,  avarudaiya  vaarththaiyai  nee  asattaipa'n'ninathu  enna?  eaththiyanaagiya  uriyaavai  nee  pattayaththaal  madiviththu,  avan  manaiviyai  unakku  manaiviyaaga  eduththukko'ndu,  avanai  ammoan  puththirarin  pattayaththaalea  kon’rupoattaay.  (2saamuveal  12:9)

இப்போதும்  நீ  என்னை  அசட்டைபண்ணி,  ஏத்தியனாகிய  உரியாவின்  மனைவியை  உனக்கு  மனைவியாக  எடுத்துக்கொண்டபடியினால்,  பட்டயம்  என்றைக்கும்  உன்  வீட்டைவிட்டு  விலகாதிருக்கும்.  (2சாமுவேல்  12:10)

ippoathum  nee  ennai  asattaipa'n'ni,  eaththiyanaagiya  uriyaavin  manaiviyai  unakku  manaiviyaaga  eduththukko'ndapadiyinaal,  pattayam  en’raikkum  un  veettaivittu  vilagaathirukkum.  (2saamuveal  12:10)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  இதோ,  நான்  உன்  வீட்டிலே  பொல்லாப்பை  உன்மேல்  எழும்பப்பண்ணி,  உன்  கண்கள்  பார்க்க,  உன்  ஸ்திரீகளை  எடுத்து,  உனக்கு  அடுத்தவனுக்குக்  கொடுப்பேன்;  அவன்  இந்தச்  சூரியனுடைய  வெளிச்சத்திலே  உன்  ஸ்திரீகளோடே  சயனிப்பான்.  (2சாமுவேல்  12:11)

karththar  sollugi’rathu  ennaven’raal,  ithoa,  naan  un  veettilea  pollaappai  unmeal  ezhumbappa'n'ni,  un  ka'nga'l  paarkka,  un  sthireega'lai  eduththu,  unakku  aduththavanukkuk  koduppean;  avan  inthach  sooriyanudaiya  ve'lichchaththilea  un  sthireega'loadea  sayanippaan.  (2saamuveal  12:11)

நீ  ஒளிப்பிடத்தில்  அதைச்  செய்தாய்;  நானோ  இந்தக்  காரியத்தை  இஸ்ரவேலர்  எல்லாருக்கு  முன்பாகவும்,  சூரியனுக்கு  முன்பாகவும்  செய்விப்பேன்  என்றார்  என்று  சொன்னான்.  (2சாமுவேல்  12:12)

nee  o'lippidaththil  athaich  seythaay;  naanoa  inthak  kaariyaththai  isravealar  ellaarukku  munbaagavum,  sooriyanukku  munbaagavum  seyvippean  en’raar  en’ru  sonnaan.  (2saamuveal  12:12)

அப்பொழுது  தாவீது  நாத்தானிடத்தில்:  நான்  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தேன்  என்றான்.  நாத்தான்  தாவீதை  நோக்கி:  நீ  சாகாதபடிக்கு,  கர்த்தர்  உன்  பாவம்  நீங்கச்செய்தார்.  (2சாமுவேல்  12:13)

appozhuthu  thaaveethu  naaththaanidaththil:  naan  karththarukku  viroathamaayp  paavagnseythean  en’raan.  naaththaan  thaaveethai  noakki:  nee  saagaathapadikku,  karththar  un  paavam  neenggachseythaar.  (2saamuveal  12:13)

ஆனாலும்  இந்தக்  காரியத்தினாலே  கர்த்தருடைய  சத்துருக்கள்  தூஷிக்க  நீ  காரணமாயிருந்தபடியினால்,  உனக்குப்  பிறந்த  பிள்ளை  நிச்சயமாய்ச்  சாகும்  என்று  சொல்லி,  நாத்தான்  தன்  வீட்டுக்குப்  போய்விட்டான்.  (2சாமுவேல்  12:14)

aanaalum  inthak  kaariyaththinaalea  karththarudaiya  saththurukka'l  thooshikka  nee  kaara'namaayirunthapadiyinaal,  unakkup  pi’rantha  pi'l'lai  nichchayamaaych  saagum  en’ru  solli,  naaththaan  than  veettukkup  poayvittaan.  (2saamuveal  12:14)

அப்பொழுது  கர்த்தர்  உரியாவின்  மனைவி  தாவீதுக்குப்  பெற்ற  ஆண்பிள்ளையை  அடித்தார்;  அது  வியாதிப்பட்டுக்  கேவலமாயிருந்தது.  (2சாமுவேல்  12:15)

appozhuthu  karththar  uriyaavin  manaivi  thaaveethukkup  pet’ra  aa'npi'l'laiyai  adiththaar;  athu  viyaathippattuk  keavalamaayirunthathu.  (2saamuveal  12:15)

அப்பொழுது  தாவீது  அந்தப்  பிள்ளைக்காகத்  தேவனிடத்தில்  பிரார்த்தனைபண்ணி,  உபவாசித்து,  உள்ளே  போய்,  இராமுழுதும்  தரையிலே  கிடந்தான்.  (2சாமுவேல்  12:16)

appozhuthu  thaaveethu  anthap  pi'l'laikkaagath  theavanidaththil  piraarththanaipa'n'ni,  ubavaasiththu,  u'l'lea  poay,  iraamuzhuthum  tharaiyilea  kidanthaan.  (2saamuveal  12:16)

அவனைத்  தரையிலிருந்து  எழுந்திருக்கப்பண்ண,  அவன்  வீட்டிலுள்ள  மூப்பரானவர்கள்  எழுந்து,  அவனண்டையில்  வந்தாலும்,  அவன்  மாட்டேன்  என்று  சொல்லி,  அவர்களோடே  அப்பம்  சாப்பிடாமல்  இருந்தான்.  (2சாமுவேல்  12:17)

avanaith  tharaiyilirunthu  ezhunthirukkappa'n'na,  avan  veettilu'l'la  moopparaanavarga'l  ezhunthu,  avana'ndaiyil  vanthaalum,  avan  maattean  en’ru  solli,  avarga'loadea  appam  saappidaamal  irunthaan.  (2saamuveal  12:17)

ஏழாம்நாளில்,  பிள்ளை  செத்துப்போயிற்று.  பிள்ளை  செத்துப்போயிற்று  என்று  தாவீதின்  ஊழியக்காரர்  அவனுக்கு  அறிவிக்க  ஐயப்பட்டார்கள்:  பிள்ளை  உயிரோடிருக்கையில்,  நாம்  அவரோடே  பேசுகிறபோது,  அவர்  நம்முடைய  சொற்கேட்கவில்லை;  பிள்ளை  செத்துப்போயிற்று  என்று  அவரோடே  எப்படிச்  சொல்லுவோம்?  அதிகமாக  வியாகுலப்படுவாரே  என்று  பேசிக்கொண்டார்கள்.  (2சாமுவேல்  12:18)

eazhaamnaa'lil,  pi'l'lai  seththuppoayit’ru.  pi'l'lai  seththuppoayit’ru  en’ru  thaaveethin  oozhiyakkaarar  avanukku  a’rivikka  aiyappattaarga'l:  pi'l'lai  uyiroadirukkaiyil,  naam  avaroadea  peasugi’rapoathu,  avar  nammudaiya  so’rkeadkavillai;  pi'l'lai  seththuppoayit’ru  en’ru  avaroadea  eppadich  solluvoam?  athigamaaga  viyaagulappaduvaarea  en’ru  peasikko'ndaarga'l.  (2saamuveal  12:18)

தாவீது  தன்  ஊழியக்காரர்  இரகசியமாய்ப்  பேசிக்கொள்ளுகிறதைக்கண்டு,  பிள்ளை  செத்துப்போயிற்று  என்று  அறிந்து,  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  பிள்ளை  செத்துப்போயிற்றோ  என்று  கேட்டான்;  செத்துப்போயிற்று  என்றார்கள்.  (2சாமுவேல்  12:19)

thaaveethu  than  oozhiyakkaarar  iragasiyamaayp  peasikko'l'lugi’rathaikka'ndu,  pi'l'lai  seththuppoayit’ru  en’ru  a’rinthu,  than  oozhiyakkaararai  noakki:  pi'l'lai  seththuppoayit’roa  en’ru  keattaan;  seththuppoayit’ru  en’raarga'l.  (2saamuveal  12:19)

அப்பொழுது  தாவீது  தரையைவிட்டு  எழுந்து,  ஸ்நானம்பண்ணி,  எண்ணெய்  பூசிக்கொண்டு,  தன்  வஸ்திரங்களை  மாற்றி,  கர்த்தருடைய  ஆலயத்தில்  பிரவேசித்து,  பணிந்துகொண்டு,  தன்  வீட்டுக்குவந்து,  போஜனம்  கேட்டான்;  அவன்  முன்னே  அதை  வைத்தபோது  புசித்தான்.  (2சாமுவேல்  12:20)

appozhuthu  thaaveethu  tharaiyaivittu  ezhunthu,  snaanampa'n'ni,  e'n'ney  poosikko'ndu,  than  vasthirangga'lai  maat’ri,  karththarudaiya  aalayaththil  piraveasiththu,  pa'ninthuko'ndu,  than  veettukkuvanthu,  poajanam  keattaan;  avan  munnea  athai  vaiththapoathu  pusiththaan.  (2saamuveal  12:20)

அப்பொழுது  அவன்  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  நீர்  செய்கிற  இந்தக்  காரியம்  என்ன?  பிள்ளை  உயிரோடிருக்கையில்  உபவாசித்து  அழுதீர்;  பிள்ளை  மரித்த  பின்பு,  எழுந்திருந்து  அசனம்பண்ணுகிறீரே  என்றார்கள்.  (2சாமுவேல்  12:21)

appozhuthu  avan  oozhiyakkaarar  avanai  noakki:  neer  seygi’ra  inthak  kaariyam  enna?  pi'l'lai  uyiroadirukkaiyil  ubavaasiththu  azhutheer;  pi'l'lai  mariththa  pinbu,  ezhunthirunthu  asanampa'n'nugi’reerea  en’raarga'l.  (2saamuveal  12:21)

அதற்கு  அவன்:  பிள்ளை  இன்னும்  உயிரோடிருக்கையில்,  பிள்ளை  பிழைக்கும்படிக்குக்  கர்த்தர்  எனக்கு  இரங்குவாரோ,  எப்படியோ,  யாருக்குத்  தெரியும்  என்று  உபவாசித்து  அழுதேன்.  (2சாமுவேல்  12:22)

atha’rku  avan:  pi'l'lai  innum  uyiroadirukkaiyil,  pi'l'lai  pizhaikkumpadikkuk  karththar  enakku  irangguvaaroa,  eppadiyoa,  yaarukkuth  theriyum  en’ru  ubavaasiththu  azhuthean.  (2saamuveal  12:22)

அது  மரித்திருக்கிற  இப்போது  நான்  உபவாசிக்கவேண்டியது  என்ன?  இனி  நான்  அதைத்  திரும்பிவரப்பண்ணக்கூடுமோ?  நான்  அதினிடத்துக்குப்  போவேனே  அல்லாமல்,  அது  என்னிடத்துக்குத்  திரும்பி  வரப்போகிறது  இல்லை  என்றான்.  (2சாமுவேல்  12:23)

athu  mariththirukki’ra  ippoathu  naan  ubavaasikkavea'ndiyathu  enna?  ini  naan  athaith  thirumbivarappa'n'nakkoodumoa?  naan  athinidaththukkup  poaveanea  allaamal,  athu  ennidaththukkuth  thirumbi  varappoagi’rathu  illai  en’raan.  (2saamuveal  12:23)

பின்பு  தாவீது  தன்  மனைவியாகிய  பத்சேபாளுக்கு  ஆறுதல்  சொல்லி,  அவளிடத்தில்  போய்,  அவளோடே  சயனித்தான்;  அவள்  ஒரு  குமாரனைப்  பெற்றாள்;  அவனுக்குச்  சாலொமோன்  என்று  பேரிட்டான்;  அவனிடத்தில்  கர்த்தர்  அன்பாயிருந்தார்.  (2சாமுவேல்  12:24)

pinbu  thaaveethu  than  manaiviyaagiya  bathseabaa'lukku  aa’ruthal  solli,  ava'lidaththil  poay,  ava'loadea  sayaniththaan;  ava'l  oru  kumaaranaip  pet’raa'l;  avanukkuch  saalomoan  en’ru  pearittaan;  avanidaththil  karththar  anbaayirunthaar.  (2saamuveal  12:24)

அவர்  தீர்க்கதரிசியாகிய  நாத்தானை  அனுப்ப,  அவன்  கர்த்தரின்  நிமித்தம்  அவனுக்கு  யெதிதியா  என்று  பேரிட்டான்.  (2சாமுவேல்  12:25)

avar  theerkkatharisiyaagiya  naaththaanai  anuppa,  avan  karththarin  nimiththam  avanukku  yethithiyaa  en’ru  pearittaan.  (2saamuveal  12:25)

அதற்குள்ளே  யோவாப்  அம்மோன்  புத்திரருடைய  ரப்பாபட்டணத்தின்மேல்  யுத்தம்பண்ணி,  ராஜதானியைப்  பிடித்து,  (2சாமுவேல்  12:26)

atha’rku'l'lea  yoavaab  ammoan  puththirarudaiya  rabbaapatta'naththinmeal  yuththampa'n'ni,  raajathaaniyaip  pidiththu,  (2saamuveal  12:26)

தாவீதினிடத்தில்  ஆள்  அனுப்பி,  நான்  ரப்பாவின்மேல்  யுத்தம்பண்ணி,  தண்ணீர்  ஓரமான  பட்டணத்தைப்  பிடித்துக்கொண்டேன்.  (2சாமுவேல்  12:27)

thaaveethinidaththil  aa'l  anuppi,  naan  rabbaavinmeal  yuththampa'n'ni,  tha'n'neer  oaramaana  patta'naththaip  pidiththukko'ndean.  (2saamuveal  12:27)

நான்  பட்டணத்தைப்  பிடிக்கிறதினால்,  என்  பேர்  வழங்காதபடிக்கு,  நீர்  மற்ற  ஜனங்களைக்  கூட்டிக்கொண்டுவந்து,  பட்டணத்தை  முற்றிக்கைபோட்டு,  பிடிக்கவேண்டும்  என்று  சொல்லச்சொன்னான்.  (2சாமுவேல்  12:28)

naan  patta'naththaip  pidikki’rathinaal,  en  pear  vazhanggaathapadikku,  neer  mat’ra  janangga'laik  koottikko'nduvanthu,  patta'naththai  mut’rikkaipoattu,  pidikkavea'ndum  en’ru  sollachsonnaan.  (2saamuveal  12:28)

அப்படியே  தாவீது  ஜனங்களையெல்லாம்  கூட்டிக்கொண்டு,  ரப்பாவுக்குப்போய்,  அதின்மேல்  யுத்தம்பண்ணி,  அதைப்  பிடித்தான்.  (2சாமுவேல்  12:29)

appadiyea  thaaveethu  janangga'laiyellaam  koottikko'ndu,  rabbaavukkuppoay,  athinmeal  yuththampa'n'ni,  athaip  pidiththaan.  (2saamuveal  12:29)

அவர்களுடைய  ராஜாவின்  தலைமேலிருந்த  கிரீடத்தை  எடுத்துக்கொண்டான்;  அது  ஒரு  தாலந்து  நிறைபொன்னும்,  இரத்தினங்கள்  பதித்ததுமாயிருந்தது;  அது  தாவீதினுடைய  தலையில்  வைக்கப்பட்டது;  பட்டணத்திலிருந்து  ஏராளமான  கொள்ளையைக்  கொண்டுபோனான்.  (2சாமுவேல்  12:30)

avarga'ludaiya  raajaavin  thalaimealiruntha  kireedaththai  eduththukko'ndaan;  athu  oru  thaalanthu  ni’raiponnum,  iraththinangga'l  pathiththathumaayirunthathu;  athu  thaaveethinudaiya  thalaiyil  vaikkappattathu;  patta'naththilirunthu  earaa'lamaana  ko'l'laiyaik  ko'ndupoanaan.  (2saamuveal  12:30)

பின்பு  அதிலிருந்த  ஜனங்களை  அவன்  வெளியே  கொண்டுபோய்,  அவர்களை  வாள்களுக்கும்,  இருப்புப்  பாரைகளுக்கும்,  இருப்புக்  கோடரிகளுக்கும்  உட்படுத்தி,  அவர்களைச்  செங்கற்சூளையையும்  கடக்கப்பண்ணினான்;  இப்படி  அம்மோன்  புத்திரரின்  பட்டணங்களுக்கெல்லாம்  செய்து,  தாவீது  எல்லா  ஜனத்தோடுங்கூட  எருசலேமுக்குத்  திரும்பினான்.  (2சாமுவேல்  12:31)

pinbu  athiliruntha  janangga'lai  avan  ve'liyea  ko'ndupoay,  avarga'lai  vaa'lga'lukkum,  iruppup  paaraiga'lukkum,  iruppuk  koadariga'lukkum  udpaduththi,  avarga'laich  sengga’rsoo'laiyaiyum  kadakkappa'n'ninaan;  ippadi  ammoan  puththirarin  patta'nangga'lukkellaam  seythu,  thaaveethu  ellaa  janaththoadungkooda  erusaleamukkuth  thirumbinaan.  (2saamuveal  12:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!