Monday, August 29, 2016

2 Saamuveal 11 | 2 சாமுவேல் 11 | 2 Samuel 11

மறுவருஷம்  ராஜாக்கள்  யுத்தத்திற்குப்  புறப்படுங்காலம்  வந்தபோது,  தாவீது  யோவாபையும்,  அவனோடேகூடத்  தன்  சேவகரையும்,  இஸ்ரவேல்  அனைத்தையும்,  அம்மோன்  புத்திரரை  அழிக்கவும்,  ரப்பாவை  முற்றிக்கைபோடவும்  அனுப்பினான்.  தாவீதோ  எருசலேமில்  இருந்துவிட்டான்.  (2சாமுவேல்  11:1)

ma’ruvarusham  raajaakka'l  yuththaththi’rkup  pu’rappadungkaalam  vanthapoathu,  thaaveethu  yoavaabaiyum,  avanoadeakoodath  than  seavagaraiyum,  israveal  anaiththaiyum,  ammoan  puththirarai  azhikkavum,  rabbaavai  mut’rikkaipoadavum  anuppinaan.  thaaveethoa  erusaleamil  irunthuvittaan.  (2saamuveal  11:1)

ஒருநாள்  சாயங்காலத்தில்  தாவீது  தன்  படுக்கையிலிருந்து  எழுந்து,  அரமனை  உப்பரிகையின்மேல்  உலாத்திக்கொண்டிருக்கும்போது,  ஸ்நானம்பண்ணுகிற  ஒரு  ஸ்திரீயை  உப்பரிகையின்மேலிருந்து  கண்டான்;  அந்த  ஸ்திரீ  வெகு  சௌந்தரவதியாயிருந்தாள்.  (2சாமுவேல்  11:2)

orunaa'l  saayanggaalaththil  thaaveethu  than  padukkaiyilirunthu  ezhunthu,  aramanai  upparigaiyinmeal  ulaaththikko'ndirukkumpoathu,  snaanampa'n'nugi’ra  oru  sthireeyai  upparigaiyinmealirunthu  ka'ndaan;  antha  sthiree  vegu  sauntharavathiyaayirunthaa'l.  (2saamuveal  11:2)

அப்பொழுது  தாவீது,  அந்த  ஸ்திரீ  யார்  என்று  விசாரிக்க  ஆள்  அனுப்பினான்;  அவள்  எலியாமின்  குமாரத்தியும்,  ஏத்தியனான  உரியாவின்  மனைவியுமாகிய  பத்சேபாள்  என்றார்கள்.  (2சாமுவேல்  11:3)

appozhuthu  thaaveethu,  antha  sthiree  yaar  en’ru  visaarikka  aa'l  anuppinaan;  ava'l  eliyaamin  kumaaraththiyum,  eaththiyanaana  uriyaavin  manaiviyumaagiya  bathseabaa'l  en’raarga'l.  (2saamuveal  11:3)

அப்பொழுது  தாவீது  ஆள்  அனுப்பி  அவளை  அழைத்துவரச்சொன்னான்;  அவள்  அவனிடத்தில்  வந்தபோது,  அவளோடே  சயனித்தான்;  பிற்பாடு  அவள்  தன்  தீட்டு  நீங்கும்படி  சுத்திகரித்துக்கொண்டு  தன்  வீட்டுக்குப்  போனாள்.  (2சாமுவேல்  11:4)

appozhuthu  thaaveethu  aa'l  anuppi  ava'lai  azhaiththuvarachsonnaan;  ava'l  avanidaththil  vanthapoathu,  ava'loadea  sayaniththaan;  pi’rpaadu  ava'l  than  theettu  neenggumpadi  suththigariththukko'ndu  than  veettukkup  poanaa'l.  (2saamuveal  11:4)

அந்த  ஸ்திரீ  கர்ப்பம்  தரித்து,  தான்  கர்ப்பவதியென்று  தாவீதுக்கு  அறிவிக்கும்படி  ஆள்  அனுப்பினாள்.  (2சாமுவேல்  11:5)

antha  sthiree  karppam  thariththu,  thaan  karppavathiyen’ru  thaaveethukku  a’rivikkumpadi  aa'l  anuppinaa'l.  (2saamuveal  11:5)

அப்பொழுது  தாவீது:  ஏத்தியனாகிய  உரியாவை  என்னிடத்தில்  அனுப்பு  என்று  யோவாபினண்டைக்கு  ஆள்  அனுப்பினான்;  அப்படியே  யோவாப்  உரியாவைத்  தாவீதினிடத்திற்கு  அனுப்பினான்.  (2சாமுவேல்  11:6)

appozhuthu  thaaveethu:  eaththiyanaagiya  uriyaavai  ennidaththil  anuppu  en’ru  yoavaabina'ndaikku  aa'l  anuppinaan;  appadiyea  yoavaab  uriyaavaith  thaaveethinidaththi’rku  anuppinaan.  (2saamuveal  11:6)

உரியா  அவனிடத்தில்  வந்தபோது,  தாவீது  அவனைப்  பார்த்து:  யோவாப்  சுகமாயிருக்கிறானா,  ஜனங்கள்  சுகமாயிருக்கிறார்களா,  யுத்தத்தின்  செய்தி  நற்செய்தியா  என்று  விசாரித்தான்.  (2சாமுவேல்  11:7)

uriyaa  avanidaththil  vanthapoathu,  thaaveethu  avanaip  paarththu:  yoavaab  sugamaayirukki’raanaa,  janangga'l  sugamaayirukki’raarga'laa,  yuththaththin  seythi  na’rseythiyaa  en’ru  visaariththaan.  (2saamuveal  11:7)

பின்பு  தாவீது  உரியாவை  நோக்கி:  நீ  உன்  வீட்டிற்குப்  போய்,  பாதசுத்தி  செய்  என்றான்;  உரியா  ராஜ  அரமனையிலிருந்து  புறப்பட்டபோது,  ராஜாவினிடத்திலிருந்து  உச்சிதமான  பதார்த்தங்கள்  அவன்  பின்னாலே  அனுப்பப்பட்டது.  (2சாமுவேல்  11:8)

pinbu  thaaveethu  uriyaavai  noakki:  nee  un  veetti’rkup  poay,  paathasuththi  sey  en’raan;  uriyaa  raaja  aramanaiyilirunthu  pu’rappattapoathu,  raajaavinidaththilirunthu  uchchithamaana  pathaarththangga'l  avan  pinnaalea  anuppappattathu.  (2saamuveal  11:8)

ஆனாலும்  உரியா  தன்  வீட்டிற்க்குப்போகாமல்,  ராஜ  அரமனையின்  வாசலிலே  தன்  ஆண்டவனுடைய  எல்லாச்  சேவகரோடுங்கூடப்  படுத்துக்கொண்டிருந்தான்.  (2சாமுவேல்  11:9)

aanaalum  uriyaa  than  veetti’rkkuppoagaamal,  raaja  aramanaiyin  vaasalilea  than  aa'ndavanudaiya  ellaach  seavagaroadungkoodap  paduththukko'ndirunthaan.  (2saamuveal  11:9)

உரியா  தன்  வீட்டிற்குப்  போகவில்லையென்று  தாவீதுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  தாவீது  உரியாவை  நோக்கி:  நீ  பயணத்திலிருந்து  வந்தவன்  அல்லவா,  நீ  உன்  வீட்டிற்குப்  போகாதிருக்கிறது  என்ன  என்று  கேட்டான்.  (2சாமுவேல்  11:10)

uriyaa  than  veetti’rkup  poagavillaiyen’ru  thaaveethukku  a’rivikkappattapoathu,  thaaveethu  uriyaavai  noakki:  nee  paya'naththilirunthu  vanthavan  allavaa,  nee  un  veetti’rkup  poagaathirukki’rathu  enna  en’ru  keattaan.  (2saamuveal  11:10)

உரியா  தாவீதை  நோக்கி:  பெட்டியும்  இஸ்ரவேலும்  யூதாவும்  கூடாரங்களிலே  தங்கி,  என்  ஆண்டவனாகிய  யோவாபும்  என்  ஆண்டவனின்  சேவகரும்  வெளியிலே  பாளயமிறங்கியிருக்கையில்,  நான்  புசிக்கிறதற்கும்,  குடிக்கிறதற்கும்,  என்  மனைவியோடே  சயனிக்கிறதற்கும்,  என்  வீட்டுக்குள்  பிரவேசிப்பேனா?  நான்  அப்படிச்  செய்கிறதில்லை  என்று  உம்முடையபேரிலும்  உம்முடைய  ஆத்துமாவின்பேரிலும்  ஆணையிட்டுச்  சொல்லுகிறேன்  என்றான்.  (2சாமுவேல்  11:11)

uriyaa  thaaveethai  noakki:  pettiyum  isravealum  yoothaavum  koodaarangga'lilea  thanggi,  en  aa'ndavanaagiya  yoavaabum  en  aa'ndavanin  seavagarum  ve'liyilea  paa'layami’ranggiyirukkaiyil,  naan  pusikki’ratha’rkum,  kudikki’ratha’rkum,  en  manaiviyoadea  sayanikki’ratha’rkum,  en  veettukku'l  piraveasippeanaa?  naan  appadich  seygi’rathillai  en’ru  ummudaiyapearilum  ummudaiya  aaththumaavinpearilum  aa'naiyittuch  sollugi’rean  en’raan.  (2saamuveal  11:11)

அப்பொழுது  தாவீது  உரியாவை  நோக்கி:  இன்றைக்கும்  நீ  இங்கேயிரு;  நாளைக்கு  உன்னை  அனுப்பிவிடுவேன்  என்றான்;  அப்படியே  உரியா  அன்றும்  மறுநாளும்  எருசலேமில்  இருந்தான்.  (2சாமுவேல்  11:12)

appozhuthu  thaaveethu  uriyaavai  noakki:  in’raikkum  nee  inggeayiru;  naa'laikku  unnai  anuppividuvean  en’raan;  appadiyea  uriyaa  an’rum  ma’runaa'lum  erusaleamil  irunthaan.  (2saamuveal  11:12)

தாவீது  அவனைத்  தனக்கு  முன்பாகப்  புசித்துக்  குடிக்கிறதற்கு  அழைத்து,  அவனை  வெறிக்கப்பண்ணினான்;  ஆனாலும்  அவன்  தன்  வீட்டுக்குப்  போகாமல்,  சாயங்காலத்திலே  தன்  ஆண்டவனின்  சேவகரோடே  தன்  படுக்கையிலே  படுத்துக்கொண்டான்.  (2சாமுவேல்  11:13)

thaaveethu  avanaith  thanakku  munbaagap  pusiththuk  kudikki’ratha’rku  azhaiththu,  avanai  ve’rikkappa'n'ninaan;  aanaalum  avan  than  veettukkup  poagaamal,  saayanggaalaththilea  than  aa'ndavanin  seavagaroadea  than  padukkaiyilea  paduththukko'ndaan.  (2saamuveal  11:13)

காலமே  தாவீது  யோவாபுக்கு  ஒரு  நிருபத்தை  எழுதி,  உரியாவின்  கையில்  கொடுத்து  அனுப்பினான்.  (2சாமுவேல்  11:14)

kaalamea  thaaveethu  yoavaabukku  oru  nirubaththai  ezhuthi,  uriyaavin  kaiyil  koduththu  anuppinaan.  (2saamuveal  11:14)

அந்த  நிருபத்திலே:  மும்முரமாய்  நடக்கிற  போர்முகத்திலே  நீங்கள்  உரியாவை  நிறுத்தி,  அவன்  வெட்டுண்டு  சாகும்படிக்கு,  அவனை  விட்டுப்  பின்வாங்குங்கள்  என்று  எழுதியிருந்தான்.  (2சாமுவேல்  11:15)

antha  nirubaththilea:  mummuramaay  nadakki’ra  poarmugaththilea  neengga'l  uriyaavai  ni’ruththi,  avan  vettu'ndu  saagumpadikku,  avanai  vittup  pinvaanggungga'l  en’ru  ezhuthiyirunthaan.  (2saamuveal  11:15)

அப்படியே  யோவாப்  அந்தப்  பட்டணத்தைச்  சூழக்  காவல்போட்டிருக்கையில்  பராக்கிரமசாலிகள்  இருக்கிறார்கள்  என்று  தான்  அறிந்த  இடத்தில்  உரியாவை  நிறுத்தினான்.  (2சாமுவேல்  11:16)

appadiyea  yoavaab  anthap  patta'naththaich  soozhak  kaavalpoattirukkaiyil  baraakkiramasaaliga'l  irukki’raarga'l  en’ru  thaan  a’rintha  idaththil  uriyaavai  ni’ruththinaan.  (2saamuveal  11:16)

பட்டணத்து  மனுஷர்  புறப்பட்டுவந்து  யோவாபோடே  யுத்தம்பண்ணுகையில்,  தாவீதின்  சேவகராகிய  ஜனத்தில்  சிலர்  பட்டார்கள்;  ஏத்தியனாகிய  உரியாவும்  செத்தான்.  (2சாமுவேல்  11:17)

patta'naththu  manushar  pu’rappattuvanthu  yoavaaboadea  yuththampa'n'nugaiyil,  thaaveethin  seavagaraagiya  janaththil  silar  pattaarga'l;  eaththiyanaagiya  uriyaavum  seththaan.  (2saamuveal  11:17)

அப்பொழுது  யோவாப்  அந்த  யுத்தத்தின்  செய்திகளையெல்லாம்  தாவீதுக்கு  அறிவிக்க  ஆள்  அனுப்பி,  (2சாமுவேல்  11:18)

appozhuthu  yoavaab  antha  yuththaththin  seythiga'laiyellaam  thaaveethukku  a’rivikka  aa'l  anuppi,  (2saamuveal  11:18)

தான்  அனுப்புகிற  ஆளை  நோக்கி:  நீ  யுத்தத்தின்  செய்திகளையெல்லாம்  ராஜாவுக்குச்  சொல்லித்  தீர்ந்தபோது,  (2சாமுவேல்  11:19)

thaan  anuppugi’ra  aa'lai  noakki:  nee  yuththaththin  seythiga'laiyellaam  raajaavukkuch  sollith  theernthapoathu,  (2saamuveal  11:19)

ராஜாவுக்குக்  கோபம்  எழும்பி,  அவர்:  நீங்கள்  பட்டணத்திற்கு  இத்தனை  கிட்டப்போய்  யுத்தம்பண்ணவேண்டியது  என்ன?  அலங்கத்தில்  நின்று  எய்வார்கள்  என்று  உங்களுக்குத்  தெரியாதா?  (2சாமுவேல்  11:20)

raajaavukkuk  koabam  ezhumbi,  avar:  neengga'l  patta'naththi’rku  iththanai  kittappoay  yuththampa'n'navea'ndiyathu  enna?  alanggaththil  nin’ru  eyvaarga'l  en’ru  ungga'lukkuth  theriyaathaa?  (2saamuveal  11:20)

எருப்பேசேத்தின்  குமாரன்  அபிமெலேக்கைக்  கொன்றது  யார்?  தேபேசிலே  ஒரு  பெண்பிள்ளை  அலங்கத்திலிருந்து  ஒரு  ஏந்திரக்கல்லின்  துண்டை  அவன்மேல்  போட்டதினால்  அல்லவோ  அவன்  செத்தான்;  நீங்கள்  அலங்கத்திற்கு  இத்தனை  கிட்டப்போனது  என்ன  என்று  உன்னோடே  சொன்னால்,  அப்பொழுது  நீ,  உம்முடைய  சேவகனாகிய  உரியா  என்னும்  ஏத்தியனும்  செத்தான்  என்று  சொல்  என்றான்.  (2சாமுவேல்  11:21)

erubbeaseaththin  kumaaran  abimeleakkaik  kon’rathu  yaar?  theabeasilea  oru  pe'npi'l'lai  alanggaththilirunthu  oru  eanthirakkallin  thu'ndai  avanmeal  poattathinaal  allavoa  avan  seththaan;  neengga'l  alanggaththi’rku  iththanai  kittappoanathu  enna  en’ru  unnoadea  sonnaal,  appozhuthu  nee,  ummudaiya  seavaganaagiya  uriyaa  ennum  eaththiyanum  seththaan  en’ru  sol  en’raan.  (2saamuveal  11:21)

அந்த  ஆள்  போய்,  உட்பிரவேசித்து,  யோவாப்  தன்னிடத்தில்  சொல்லியனுப்பின  செய்திகளையெல்லாம்  தாவீதுக்கு  அறிவித்து,  (2சாமுவேல்  11:22)

antha  aa'l  poay,  udpiraveasiththu,  yoavaab  thannidaththil  solliyanuppina  seythiga'laiyellaam  thaaveethukku  a’riviththu,  (2saamuveal  11:22)

தாவீதைப்  பார்த்து:  அந்த  மனுஷர்  கைமிஞ்சி,  அவர்கள்  வெளியே  எங்களுக்கு  எதிராகப்  புறப்பட்டு  வந்தபோது,  நாங்கள்  பட்டணவாசல்மட்டும்  அவர்களைத்  துரத்தினோம்.  (2சாமுவேல்  11:23)

thaaveethaip  paarththu:  antha  manushar  kaimignchi,  avarga'l  ve'liyea  engga'lukku  ethiraagap  pu’rappattu  vanthapoathu,  naangga'l  patta'navaasalmattum  avarga'laith  thuraththinoam.  (2saamuveal  11:23)

அப்பொழுது  வில்வீரர்  அலங்கத்திலிருந்து  உம்முடைய  சேவகரின்மேல்  எய்ததினால்,  ராஜாவின்  சேவகரில்  சிலர்  செத்தார்கள்;  உம்முடைய  சேவகனாகிய  உரியா  என்னும்  ஏத்தியனும்  செத்தான்  என்றான்.  (2சாமுவேல்  11:24)

appozhuthu  vilveerar  alanggaththilirunthu  ummudaiya  seavagarinmeal  eythathinaal,  raajaavin  seavagaril  silar  seththaarga'l;  ummudaiya  seavaganaagiya  uriyaa  ennum  eaththiyanum  seththaan  en’raan.  (2saamuveal  11:24)

அப்பொழுது  தாவீது  அந்த  ஆளை  நோக்கி:  நீ  யோவாபினிடத்தில்  போய்,  இந்தக்  காரியத்தைப்பற்றி  விசாரப்படவேண்டாம்;  பட்டயம்  ஒருவேளை  ஒருவனையும்,  ஒருவேளை  வேறொருவனையும்  பட்சிக்கும்;  நீ  யுத்தத்தைப்  பலக்கப்பண்ணி,  பட்டணத்தை  இடித்துப்போடு  என்று  அவனுக்குத்  திடஞ்சொல்  என்றான்.  (2சாமுவேல்  11:25)

appozhuthu  thaaveethu  antha  aa'lai  noakki:  nee  yoavaabinidaththil  poay,  inthak  kaariyaththaippat’ri  visaarappadavea'ndaam;  pattayam  oruvea'lai  oruvanaiyum,  oruvea'lai  vea’roruvanaiyum  padchikkum;  nee  yuththaththaip  balakkappa'n'ni,  patta'naththai  idiththuppoadu  en’ru  avanukkuth  thidagnsol  en’raan.  (2saamuveal  11:25)

தன்  புருஷனாகிய  உரியா  செத்தான்  என்று  அவன்  மனைவி  கேள்விப்பட்டபோது,  அவள்  தன்  நாயகனுக்காக  இழவு  கொண்டாடினாள்.  (2சாமுவேல்  11:26)

than  purushanaagiya  uriyaa  seththaan  en’ru  avan  manaivi  kea'lvippattapoathu,  ava'l  than  naayaganukkaaga  izhavu  ko'ndaadinaa'l.  (2saamuveal  11:26)

துக்கநாள்  சென்றபின்பு,  தாவீது  அவளை  அழைத்தனுப்பி,  தன்  வீட்டிலே  சேர்த்துக்கொண்டான்;  அவள்  அவனுக்கு  மனைவியாகி,  அவனுக்கு  ஒரு  குமாரனைப்  பெற்றாள்.  தாவீது  செய்த  இந்தக்  காரியம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாததாயிருந்தது.  (2சாமுவேல்  11:27)

thukkanaa'l  sen’rapinbu,  thaaveethu  ava'lai  azhaiththanuppi,  than  veettilea  searththukko'ndaan;  ava'l  avanukku  manaiviyaagi,  avanukku  oru  kumaaranaip  pet’raa'l.  thaaveethu  seytha  inthak  kaariyam  karththarin  paarvaikkup  pollaathathaayirunthathu.  (2saamuveal  11:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!