Friday, August 26, 2016

2 Saamuveal 10 | 2 சாமுவேல் 10 | 2 Samuel 10

அதன்பின்பு  அம்மோன்  புத்திரரின்  ராஜா  மரித்துப்போனான்;  அவன்  குமாரனாகிய  ஆனூன்  அவன்  பட்டத்திற்கு  ராஜாவானான்.  (2சாமுவேல்  10:1)

athanpinbu  ammoan  puththirarin  raajaa  mariththuppoanaan;  avan  kumaaranaagiya  aanoon  avan  pattaththi’rku  raajaavaanaan.  (2saamuveal  10:1)

அப்பொழுது  தாவீது:  ஆனூனின்  தகப்பனாகிய  நாகாஸ்  எனக்குத்  தயைசெய்ததுபோல,  அவன்  குமாரனாகிய  இவனுக்கு  நான்  தயைசெய்வேன்  என்று  சொல்லி,  அவன்  தகப்பனுக்காக  அவனுக்கு  ஆறுதல்  சொல்ல,  தன்  ஊழியக்காரரை  அனுப்பினான்;  தாவீதின்  ஊழியக்காரர்  அம்மோன்  புத்திரரின்  தேசத்திலே  வந்தபோது,  (2சாமுவேல்  10:2)

appozhuthu  thaaveethu:  aanoonin  thagappanaagiya  naagaas  enakkuth  thayaiseythathupoala,  avan  kumaaranaagiya  ivanukku  naan  thayaiseyvean  en’ru  solli,  avan  thagappanukkaaga  avanukku  aa’ruthal  solla,  than  oozhiyakkaararai  anuppinaan;  thaaveethin  oozhiyakkaarar  ammoan  puththirarin  theasaththilea  vanthapoathu,  (2saamuveal  10:2)

அம்மோன்  புத்திரரின்  பிரபுக்கள்  தங்கள்  ஆண்டவனாகிய  ஆனூனைப்  பார்த்து:  தாவீது  ஆறுதல்  சொல்லுகிறவர்களை  உம்மிடத்தில்  அனுப்பினது,  உம்முடைய  தகப்பனைக்  கனம்பண்ணுகிறதாய்  உமக்குத்  தோன்றுகிறதோ?  இந்தப்  பட்டணத்தை  ஆராய்ந்து,  உளவுபார்த்து,  அதைக்  கவிழ்த்துப்போட  அல்லவோ  தாவீது  தன்  ஊழியக்காரரை  உம்மிடத்திற்கு  அனுப்பினான்  என்றார்கள்.  (2சாமுவேல்  10:3)

ammoan  puththirarin  pirabukka'l  thangga'l  aa'ndavanaagiya  aanoonaip  paarththu:  thaaveethu  aa’ruthal  sollugi’ravarga'lai  ummidaththil  anuppinathu,  ummudaiya  thagappanaik  kanampa'n'nugi’rathaay  umakkuth  thoan’rugi’rathoa?  inthap  patta'naththai  aaraaynthu,  u'lavupaarththu,  athaik  kavizhththuppoada  allavoa  thaaveethu  than  oozhiyakkaararai  ummidaththi’rku  anuppinaan  en’raarga'l.  (2saamuveal  10:3)

அப்பொழுது  ஆனூன்:  தாவீதின்  ஊழியக்காரரைப்  பிடித்து,  அவர்களுடைய  ஒருபக்கத்துத்  தாடியைச்  சிரைத்து,  அவர்களுடைய  வஸ்திரங்களை  இருப்பிடமட்டும்  வைத்துவிட்டு,  மற்றப்பாதியைக்  கத்தரித்துப்போட்டு,  அவர்களை  அனுப்பிவிட்டான்.  (2சாமுவேல்  10:4)

appozhuthu  aanoon:  thaaveethin  oozhiyakkaararaip  pidiththu,  avarga'ludaiya  orupakkaththuth  thaadiyaich  siraiththu,  avarga'ludaiya  vasthirangga'lai  iruppidamattum  vaiththuvittu,  mat’rappaathiyaik  kaththariththuppoattu,  avarga'lai  anuppivittaan.  (2saamuveal  10:4)

அது  தாவீதுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  ராஜா,  அந்த  மனுஷர்  மிகவும்  வெட்கப்  பட்டபடியினால்,  அவர்களுக்கு  எதிராக  ஆட்களை  அனுப்பி,  உங்கள்  தாடி  வளருமட்டும்  நீங்கள்  எரிகோவிலிருந்து,  பிற்பாடு  வாருங்கள்  என்று  சொல்லச்சொன்னான்.  (2சாமுவேல்  10:5)

athu  thaaveethukku  a’rivikkappattapoathu,  raajaa,  antha  manushar  migavum  vedkap  pattapadiyinaal,  avarga'lukku  ethiraaga  aadka'lai  anuppi,  ungga'l  thaadi  va'larumattum  neengga'l  erigoavilirunthu,  pi’rpaadu  vaarungga'l  en’ru  sollachsonnaan.  (2saamuveal  10:5)

அம்மோன்  புத்திரர்  தாங்கள்  தாவீதுக்கு  அருவருப்பானதைக்  கண்டபோது,  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  பெத்ரேகோப்  தேசத்துச்  சீரியரிலும்,  சோபாவிலிருக்கிற  சீரியரிலும்  இருபதினாயிரம்  காலாட்களையும்,  மாக்காதேசத்து  ராஜாவினிடத்தில்  ஆயிரம்பேரையும்,  இஷ்தோபிலிருக்கிற  பன்னீராயிரம்பேரையும்,  கூலிப்படையாக  அழைப்பித்தார்கள்.  (2சாமுவேல்  10:6)

ammoan  puththirar  thaangga'l  thaaveethukku  aruvaruppaanathaik  ka'ndapoathu,  sthaanaabathiga'lai  anuppi,  bethreakoab  theasaththuch  seeriyarilum,  soabaavilirukki’ra  seeriyarilum  irubathinaayiram  kaalaadka'laiyum,  maakkaatheasaththu  raajaavinidaththil  aayirampearaiyum,  ishthoabilirukki’ra  panneeraayirampearaiyum,  koolippadaiyaaga  azhaippiththaarga'l.  (2saamuveal  10:6)

அதைத்  தாவீது  கேள்விப்பட்டபோது,  யோவாபையும்  பராக்கிரமசாலிகளாகிய  சமஸ்த  இராணுவத்தையும்  அனுப்பினான்.  (2சாமுவேல்  10:7)

athaith  thaaveethu  kea'lvippattapoathu,  yoavaabaiyum  baraakkiramasaaliga'laagiya  samastha  iraa'nuvaththaiyum  anuppinaan.  (2saamuveal  10:7)

அம்மோன்  புத்திரர்  புறப்பட்டு,  ஒலிமுகவாசலண்டையிலே  போர்செய்ய  அணிவகுத்து  நின்றார்கள்;  ஆனாலும்  சோபாவிலும்  ரேகோபிலுமிருந்துவந்த  சீரியரும்,  இஷ்தோபிலும்  மாக்காவிலுமிருந்து  வந்த  மனுஷரும்,  வெளியிலே  பிரத்தியேகமாயிருந்தார்கள்.  (2சாமுவேல்  10:8)

ammoan  puththirar  pu’rappattu,  olimugavaasala'ndaiyilea  poarseyya  a'nivaguththu  nin’raarga'l;  aanaalum  soabaavilum  reagoabilumirunthuvantha  seeriyarum,  ishthoabilum  maakkaavilumirunthu  vantha  manusharum,  ve'liyilea  piraththiyeagamaayirunthaarga'l.  (2saamuveal  10:8)

யோவாபோ  இராணுவங்களின்  படைமுகம்  தனக்கு  முன்னும்  பின்னும்  இருக்கிறதைக்  காண்கையில்,  அவன்  இஸ்ரவேலிலே  தெரிந்துகொள்ளப்பட்ட  எல்லா  இராணுவங்களிலும்  ஒரு  பங்கைப்  பிரித்தெடுத்து,  அதைச்  சீரியருக்கு  எதிராக  அணிவகுத்து  நிறுத்தி,  (2சாமுவேல்  10:9)

yoavaaboa  iraa'nuvangga'lin  padaimugam  thanakku  munnum  pinnum  irukki’rathaik  kaa'ngaiyil,  avan  isravealilea  therinthuko'l'lappatta  ellaa  iraa'nuvangga'lilum  oru  panggaip  piriththeduththu,  athaich  seeriyarukku  ethiraaga  a'nivaguththu  ni’ruththi,  (2saamuveal  10:9)

மற்ற  ஜனத்தை  அம்மோன்  புத்திரருக்கு  எதிராக  அணிவகுத்து  நிறுத்தும்படி  தன்  சகோதரனாகிய  அபிசாயினிடத்தில்  ஒப்புவித்து:  (2சாமுவேல்  10:10)

mat’ra  janaththai  ammoan  puththirarukku  ethiraaga  a'nivaguththu  ni’ruththumpadi  than  sagoatharanaagiya  abisaayinidaththil  oppuviththu:  (2saamuveal  10:10)

சீரியர்  கைமிஞ்சுகிறதாயிருந்தால்  நீ  எனக்கு  உதவிசெய்யவேண்டும்;  அம்மோன்  புத்திரர்  கை  மிஞ்சுகிறதாயிருந்தால்  நான்  உனக்கு  உதவிசெய்ய  வருவேன்.  (2சாமுவேல்  10:11)

seeriyar  kaimignchugi’rathaayirunthaal  nee  enakku  uthaviseyyavea'ndum;  ammoan  puththirar  kai  mignchugi’rathaayirunthaal  naan  unakku  uthaviseyya  varuvean.  (2saamuveal  10:11)

தைரியமாயிரு;  நம்முடைய  ஜனத்திற்காகவும்,  நம்முடைய  தேவனுடைய  பட்டணங்களுக்காகவும்  சவுரியத்தைக்  காட்டுவோம்;  கர்த்தர்  தமது  பார்வைக்கு  நலமானதைச்  செய்வாராக  என்றான்.  (2சாமுவேல்  10:12)

thairiyamaayiru;  nammudaiya  janaththi’rkaagavum,  nammudaiya  theavanudaiya  patta'nangga'lukkaagavum  savuriyaththaik  kaattuvoam;  karththar  thamathu  paarvaikku  nalamaanathaich  seyvaaraaga  en’raan.  (2saamuveal  10:12)

யோவாபும்  அவனோடிருந்த  ஜனமும்  சீரியர்மேல்  யுத்தம்பண்ணக்  கிட்டினார்கள்;  அவர்கள்  அவனுக்கு  முன்பாக  முறிந்தோடினார்கள்.  (2சாமுவேல்  10:13)

yoavaabum  avanoadiruntha  janamum  seeriyarmeal  yuththampa'n'nak  kittinaarga'l;  avarga'l  avanukku  munbaaga  mu’rinthoadinaarga'l.  (2saamuveal  10:13)

சீரியர்  முறிந்தோடுகிறதை  அம்மோன்  புத்திரர்  கண்டபோது,  அவர்களும்  அபிசாயிக்கு  முன்பாக  முறிந்தோடிப்  பட்டணத்திற்குள்  புகுந்தார்கள்;  அப்பொழுது  யோவாப்  அம்மோன்  புத்திரரை  விட்டுத்  திரும்பி  எருசலேமுக்கு  வந்தான்.  (2சாமுவேல்  10:14)

seeriyar  mu’rinthoadugi’rathai  ammoan  puththirar  ka'ndapoathu,  avarga'lum  abisaayikku  munbaaga  mu’rinthoadip  patta'naththi’rku'l  pugunthaarga'l;  appozhuthu  yoavaab  ammoan  puththirarai  vittuth  thirumbi  erusaleamukku  vanthaan.  (2saamuveal  10:14)

தாங்கள்  இஸ்ரவேலுக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்பட்டதைச்  சீரியர்  கண்டபோது,  ஒருமிக்கக்  கூடினார்கள்.  (2சாமுவேல்  10:15)

thaangga'l  isravealukku  munbaaga  mu’riya  adikkappattathaich  seeriyar  ka'ndapoathu,  orumikkak  koodinaarga'l.  (2saamuveal  10:15)

ஆதாரேசர்  நதிக்கு  அப்பாலிருந்த  சீரியரையும்  அழைத்தனுப்பினான்;  அவர்கள்  ஏலாமுக்கு  வந்தார்கள்;  ஆதாரேசருடைய  படைத்தலைவனாகிய  சோபாக்  அவர்களுக்கு  முன்னாலே  சென்றான்.  (2சாமுவேல்  10:16)

aathaareasar  nathikku  appaaliruntha  seeriyaraiyum  azhaiththanuppinaan;  avarga'l  ealaamukku  vanthaarga'l;  aathaareasarudaiya  padaiththalaivanaagiya  soabaak  avarga'lukku  munnaalea  sen’raan.  (2saamuveal  10:16)

அது  தாவீதுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  இஸ்ரவேலையெல்லாம்  கூட்டிக்கொண்டு,  யோர்தானைக்  கடந்து,  ஏலாமுக்குப்  போனான்;  சீரியர்  தாவீதுக்கு  எதிராக  இராணுவங்களை  அணிவகுத்து  நின்றார்கள்;  அவனோடு  யுத்தம்பண்ணுகிறபோது,  (2சாமுவேல்  10:17)

athu  thaaveethukku  a’rivikkappattapoathu,  avan  isravealaiyellaam  koottikko'ndu,  yoarthaanaik  kadanthu,  ealaamukkup  poanaan;  seeriyar  thaaveethukku  ethiraaga  iraa'nuvangga'lai  a'nivaguththu  nin’raarga'l;  avanoadu  yuththampa'n'nugi’rapoathu,  (2saamuveal  10:17)

சீரியர்  இஸ்ரவேலுக்கு  முன்பாக  முறிந்தோடினார்கள்;  தாவீது  சீரியரில்  எழுநூறு  இரதவீரரையும்  நாற்பதினாயிரம்  குதிரைவீரரையும்  கொன்று,  அவர்களுடைய  படைத்தலைவனாகிய  சோபாகையும்  சாகும்படி  வெட்டிப்போட்டான்.  (2சாமுவேல்  10:18)

seeriyar  isravealukku  munbaaga  mu’rinthoadinaarga'l;  thaaveethu  seeriyaril  ezhunoo’ru  irathaveeraraiyum  naa’rpathinaayiram  kuthiraiveeraraiyum  kon’ru,  avarga'ludaiya  padaiththalaivanaagiya  soabaakaiyum  saagumpadi  vettippoattaan.  (2saamuveal  10:18)

அப்பொழுது  ஆதாரேசரைச்  சேவிக்கிற  சகல  ராஜாக்களும்  தாங்கள்  இஸ்ரவேலுக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்பட்டதைக்  கண்டு,  இஸ்ரவேலரோடே  சமாதானம்பண்ணி,  அவர்களைச்  சேவித்தார்கள்.  அப்புறம்  அம்மோன்  புத்திரருக்கு  உதவிசெய்யச்  சீரியர்  பயப்பட்டார்கள்.  (2சாமுவேல்  10:19)

appozhuthu  aathaareasaraich  seavikki’ra  sagala  raajaakka'lum  thaangga'l  isravealukku  munbaaga  mu’riya  adikkappattathaik  ka'ndu,  isravealaroadea  samaathaanampa'n'ni,  avarga'laich  seaviththaarga'l.  appu’ram  ammoan  puththirarukku  uthaviseyyach  seeriyar  bayappattaarga'l.  (2saamuveal  10:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!