Saturday, August 20, 2016

1 Saamuveal 9 | 1 சாமுவேல் 9 | 1 Samuel 9


பென்யமீன்  கோத்திரத்தாரில்  கீஸ்  என்னும்  பேருள்ள  மகா  பராக்கிரமசாலியான  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவன்  பென்யமீன்  கோத்திரத்தானாகிய  அபியாவின்  மகனான  பெகோராத்திற்குப்  பிறந்த  சேரோரின்  புத்திரனாகிய  அபீயேலின்  குமாரன்.  (1சாமுவேல்  9:1)

benyameen  koaththiraththaaril  kees  ennum  pearu'l'la  mahaa  baraakkiramasaaliyaana  oru  manushan  irunthaan;  avan  benyameen  koaththiraththaanaagiya  apiyaavin  maganaana  bekoaraaththi’rkup  pi’rantha  searoarin  puththiranaagiya  abeeyealin  kumaaran.  (1saamuveal  9:1)

அவனுக்குச்  சவுல்  என்னும்  பேருள்ள  சவுந்தரியமான  வாலிபனாகிய  ஒரு  குமாரன்  இருந்தான்;  இஸ்ரவேல்  புத்திரரில்  அவனைப்பார்க்கிலும்  சவுந்தரியவான்  இல்லை;  எல்லா  ஜனங்களும்  அவன்  தோளுக்குக்  கீழாயிருக்கத்தக்க  உயரமுள்ளவனாயிருந்தான்.  (1சாமுவேல்  9:2)

avanukkuch  savul  ennum  pearu'l'la  savunthariyamaana  vaalibanaagiya  oru  kumaaran  irunthaan;  israveal  puththiraril  avanaippaarkkilum  savunthariyavaan  illai;  ellaa  janangga'lum  avan  thoa'lukkuk  keezhaayirukkaththakka  uyaramu'l'lavanaayirunthaan.  (1saamuveal  9:2)

சவுலின்  தகப்பனாகிய  கீசுடைய  கழுதைகள்  காணாமற்போயிற்று;  ஆகையால்  கீஸ்  தன்  குமாரனாகிய  சவுலை  நோக்கி:  நீ  வேலைக்காரரில்  ஒருவனைக்  கூட்டிக்கொண்டு,  கழுதைகளைத்  தேட,  புறப்பட்டுப்போ  என்றான்.  (1சாமுவேல்  9:3)

savulin  thagappanaagiya  keesudaiya  kazhuthaiga'l  kaa'naama’rpoayit’ru;  aagaiyaal  kees  than  kumaaranaagiya  savulai  noakki:  nee  vealaikkaararil  oruvanaik  koottikko'ndu,  kazhuthaiga'laith  theada,  pu’rappattuppoa  en’raan.  (1saamuveal  9:3)

அப்படியே  அவன்  எப்பிராயீம்  மலைகளையும்  சலீஷா  நாட்டையும்  கடந்துபோனான்;  அங்கே  அவைகளைக்  காணாமல்  சாலீம்  நாட்டைக்கடந்தார்கள்.  அங்கேயும்  காணவில்லை;  பென்யமீன்  நாட்டை  உருவக்கடந்தும்  அவைகளைக்  காணவில்லை.  (1சாமுவேல்  9:4)

appadiyea  avan  eppiraayeem  malaiga'laiyum  saleeshaa  naattaiyum  kadanthupoanaan;  anggea  avaiga'laik  kaa'naamal  saaleem  naattaikkadanthaarga'l.  anggeayum  kaa'navillai;  benyameen  naattai  uruvakkadanthum  avaiga'laik  kaa'navillai.  (1saamuveal  9:4)

அவர்கள்  சூப்  என்னும்  நாட்டிற்கு  வந்தபோது,  சவுல்  தன்னோடிருந்த  வேலைக்காரனை  நோக்கி:  என்  தகப்பன்,  கழுதைகளின்மேலுள்ள  கவலையை  விட்டு,  நமக்காகக்  கவலைப்படாதபடிக்குத்  திரும்பிப்போவோம்  வா  என்றான்.  (1சாமுவேல்  9:5)

avarga'l  soop  ennum  naatti’rku  vanthapoathu,  savul  thannoadiruntha  vealaikkaaranai  noakki:  en  thagappan,  kazhuthaiga'linmealu'l'la  kavalaiyai  vittu,  namakkaagak  kavalaippadaathapadikkuth  thirumbippoavoam  vaa  en’raan.  (1saamuveal  9:5)

அதற்கு  அவன்:  இதோ,  இந்தப்  பட்டணத்திலே  தேவனுடைய  மனுஷன்  ஒருவர்  இருக்கிறார்;  அவர்  பெரியவர்;  அவர்  சொல்லுகிறதெல்லாம்  தப்பாமல்  நடக்கும்;  அங்கே  போவோம்;  ஒருவேளை  அவர்  நாம்  போகவேண்டிய  நம்முடைய  வழியை  நமக்குத்  தெரிவிப்பார்  என்றான்.  (1சாமுவேல்  9:6)

atha’rku  avan:  ithoa,  inthap  patta'naththilea  theavanudaiya  manushan  oruvar  irukki’raar;  avar  periyavar;  avar  sollugi’rathellaam  thappaamal  nadakkum;  anggea  poavoam;  oruvea'lai  avar  naam  poagavea'ndiya  nammudaiya  vazhiyai  namakkuth  therivippaar  en’raan.  (1saamuveal  9:6)

அப்பொழுது  சவுல்  தன்  வேலைக்காரனைப்  பார்த்து:  நாம்  போனாலும்  அந்த  மனுஷனுக்கு  என்னத்தைக்  கொண்டுபோவோம்;  நம்முடைய  பைகளில்  இருந்த  தின்பண்டங்கள்  செலவழிந்துபோயிற்று;  தேவனுடைய  மனுஷனாகிய  அவருக்குக்  கொண்டு  போகத்தக்க  காணிக்கை  நம்மிடத்தில்  ஒன்றும்  இல்லையே  என்றான்.  (1சாமுவேல்  9:7)

appozhuthu  savul  than  vealaikkaaranaip  paarththu:  naam  poanaalum  antha  manushanukku  ennaththaik  ko'ndupoavoam;  nammudaiya  paiga'lil  iruntha  thinpa'ndangga'l  selavazhinthupoayit’ru;  theavanudaiya  manushanaagiya  avarukkuk  ko'ndu  poagaththakka  kaa'nikkai  nammidaththil  on’rum  illaiyea  en’raan.  (1saamuveal  9:7)

அந்த  வேலைக்காரன்  பின்னும்  சவுலைப்  பார்த்து:  இதோ,  என்  கையில்  இன்னும்  கால்சேக்கல்  வெள்ளியிருக்கிறது;  தேவனுடைய  மனுஷன்  நமக்கு  நம்முடைய  வழியை  அறிவிக்கும்படிக்கு,  அதை  அவருக்குக்  கொடுப்பேன்  என்றான்.  (1சாமுவேல்  9:8)

antha  vealaikkaaran  pinnum  savulaip  paarththu:  ithoa,  en  kaiyil  innum  kaalseakkal  ve'l'liyirukki’rathu;  theavanudaiya  manushan  namakku  nammudaiya  vazhiyai  a’rivikkumpadikku,  athai  avarukkuk  koduppean  en’raan.  (1saamuveal  9:8)

முற்காலத்தில்  இஸ்ரவேலில்  யாதொருவர்  தேவனிடத்தில்  விசாரிக்கப்போனால்,  ஞானதிருஷ்டிக்காரனிடத்திற்குப்  போவோம்  வாருங்கள்  என்பார்கள்;  இந்நாளிலே  தீர்க்கதரிசி  என்னப்படுகிறவன்  முற்காலத்தில்  ஞானதிருஷ்டிக்காரன்  என்னப்படுவான்.  (1சாமுவேல்  9:9)

mu’rkaalaththil  isravealil  yaathoruvar  theavanidaththil  visaarikkappoanaal,  gnaanathirushdikkaaranidaththi’rkup  poavoam  vaarungga'l  enbaarga'l;  innaa'lilea  theerkkatharisi  ennappadugi’ravan  mu’rkaalaththil  gnaanathirushdikkaaran  ennappaduvaan.  (1saamuveal  9:9)

அப்பொழுது  சவுல்  தன்  வேலைக்காரனை  நோக்கி:  நல்லகாரியம்  சொன்னாய்,  போவோம்  வா  என்றான்;  அப்படியே  தேவனுடைய  மனுஷன்  இருந்த  அந்தப்  பட்டணத்திற்குப்  போனார்கள்.  (1சாமுவேல்  9:10)

appozhuthu  savul  than  vealaikkaaranai  noakki:  nallakaariyam  sonnaay,  poavoam  vaa  en’raan;  appadiyea  theavanudaiya  manushan  iruntha  anthap  patta'naththi’rkup  poanaarga'l.  (1saamuveal  9:10)

அவர்கள்  பட்டணத்து  மேட்டின்  வழியாய்  ஏறுகிறபோது,  தண்ணீர்  எடுக்கவந்த  பெண்களைக்  கண்டு:  ஞானதிருஷ்டிக்காரன்  இங்கே  இருக்கிறாரா  என்று  அவர்களைக்  கேட்டார்கள்.  (1சாமுவேல்  9:11)

avarga'l  patta'naththu  meattin  vazhiyaay  ea’rugi’rapoathu,  tha'n'neer  edukkavantha  pe'nga'laik  ka'ndu:  gnaanathirushdikkaaran  inggea  irukki’raaraa  en’ru  avarga'laik  keattaarga'l.  (1saamuveal  9:11)

அதற்கு  அவர்கள்:  இருக்கிறார்;  இதோ,  உங்களுக்கு  எதிரே  இருக்கிறார்;  தீவிரமாய்ப்  போங்கள்;  இன்றைக்கு  ஜனங்கள்  மேடையில்  பலியிடுகிறபடியினால்,  இன்றையதினம்  பட்டணத்திற்கு  வந்தார்.  (1சாமுவேல்  9:12)

atha’rku  avarga'l:  irukki’raar;  ithoa,  ungga'lukku  ethirea  irukki’raar;  theeviramaayp  poangga'l;  in’raikku  janangga'l  meadaiyil  baliyidugi’rapadiyinaal,  in’raiyathinam  patta'naththi’rku  vanthaar.  (1saamuveal  9:12)

நீங்கள்  பட்டணத்திற்குள்  பிரவேசித்தவுடனே,  அவர்  மேடையின்மேல்  போஜனம்  பண்ணப்போகிறதற்கு  முன்னே  அவரைக்  காண்பீர்கள்;  அவர்  வருமட்டும்  ஜனங்கள்  போஜனம்  பண்ணமாட்டார்கள்;  பலியிட்டதை  அவர்  ஆசீர்வதிப்பார்;  பின்பு  அழைக்கப்பட்டவர்கள்  போஜனம்பண்ணுவார்கள்;  உடனே  போங்கள்;  இந்நேரத்திலே  அவரைக்  கண்டுகொள்ளலாம்  என்றார்கள்.  (1சாமுவேல்  9:13)

neengga'l  patta'naththi’rku'l  piraveasiththavudanea,  avar  meadaiyinmeal  poajanam  pa'n'nappoagi’ratha’rku  munnea  avaraik  kaa'nbeerga'l;  avar  varumattum  janangga'l  poajanam  pa'n'namaattaarga'l;  baliyittathai  avar  aaseervathippaar;  pinbu  azhaikkappattavarga'l  poajanampa'n'nuvaarga'l;  udanea  poangga'l;  innearaththilea  avaraik  ka'nduko'l'lalaam  en’raarga'l.  (1saamuveal  9:13)

அவர்கள்  பட்டணத்திற்குப்  போய்,  பட்டணத்தின்  நடுவே  சேர்ந்தபோது,  இதோ,  சாமுவேல்  மேடையின்மேல்  ஏறிப்போகிறதற்காக,  அவர்களுக்கு  எதிரே  புறப்பட்டுவந்தான்.  (1சாமுவேல்  9:14)

avarga'l  patta'naththi’rkup  poay,  patta'naththin  naduvea  searnthapoathu,  ithoa,  saamuveal  meadaiyinmeal  ea’rippoagi’ratha’rkaaga,  avarga'lukku  ethirea  pu’rappattuvanthaan.  (1saamuveal  9:14)

சவுல்  வர  ஒருநாளுக்கு  முன்னே  கர்த்தர்  சாமுவேலின்  காதுகேட்க:  (1சாமுவேல்  9:15)

savul  vara  orunaa'lukku  munnea  karththar  saamuvealin  kaathukeadka:  (1saamuveal  9:15)

நாளை  இந்நேரத்திற்குப்  பென்யமீன்  நாட்டானாகிய  ஒரு  மனுஷனை  உன்னிடத்தில்  அனுப்புவேன்;  அவனை  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்  அதிபதியாக  அபிஷேகம்பண்ணக்கடவாய்;  அவன்  என்  ஜனத்தைப்  பெலிஸ்தரின்  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிப்பான்;  என்  ஜனத்தின்  முறையிடுதல்  என்னிடத்தில்  வந்து  எட்டினபடியினால்,  நான்  அவர்களைக்  கடாட்சித்தேன்  என்று  வெளிப்படுத்தியிருந்தார்.  (1சாமுவேல்  9:16)

naa'lai  innearaththi’rkup  benyameen  naattaanaagiya  oru  manushanai  unnidaththil  anuppuvean;  avanai  en  janamaagiya  isravealinmeal  athibathiyaaga  abisheagampa'n'nakkadavaay;  avan  en  janaththaip  pelistharin  kaikku  neenggalaakki  radchippaan;  en  janaththin  mu’raiyiduthal  ennidaththil  vanthu  ettinapadiyinaal,  naan  avarga'laik  kadaadchiththean  en’ru  ve'lippaduththiyirunthaar.  (1saamuveal  9:16)

சாமுவேல்  சவுலைக்  கண்டபோது,  கர்த்தர்  அவனிடத்தில்:  இதோ,  நான்  உனக்குச்  சொல்லியிருந்த  மனுஷன்  இவனே;  இவன்தான்  என்  ஜனத்தை  ஆளுவான்  என்றார்.  (1சாமுவேல்  9:17)

saamuveal  savulaik  ka'ndapoathu,  karththar  avanidaththil:  ithoa,  naan  unakkuch  solliyiruntha  manushan  ivanea;  ivanthaan  en  janaththai  aa'luvaan  en’raar.  (1saamuveal  9:17)

சவுல்  நடுவாசலிலே  சாமுவேலிடத்தில்  வந்து:  ஞானதிருஷ்டிக்காரன்  வீடு  எங்கே,  சொல்லும்  என்று  கேட்டான்.  (1சாமுவேல்  9:18)

savul  naduvaasalilea  saamuvealidaththil  vanthu:  gnaanathirushdikkaaran  veedu  enggea,  sollum  en’ru  keattaan.  (1saamuveal  9:18)

சாமுவேல்  சவுலுக்குப்  பிரதியுத்தரமாக:  ஞானதிருஷ்டிக்காரன்  நான்தான்;  நீ  எனக்கு  முன்னே  மேடையின்மேல்  ஏறிப்போ;  நீங்கள்  இன்றைக்கு  என்னோடே  போஜனம்பண்ணவேண்டும்;  நாளைக்காலமே  நான்  உன்  இருதயத்தில்  உள்ளது  எல்லாவற்றையும்  உனக்கு  அறிவித்து,  உன்னை  அனுப்பிவிடுவேன்.  (1சாமுவேல்  9:19)

saamuveal  savulukkup  pirathiyuththaramaaga:  gnaanathirushdikkaaran  naanthaan;  nee  enakku  munnea  meadaiyinmeal  ea’rippoa;  neengga'l  in’raikku  ennoadea  poajanampa'n'navea'ndum;  naa'laikkaalamea  naan  un  iruthayaththil  u'l'lathu  ellaavat’raiyum  unakku  a’riviththu,  unnai  anuppividuvean.  (1saamuveal  9:19)

மூன்றுநாளைக்கு  முன்னே  காணாமற்போன  கழுதைகளைப்பற்றிக்  கவலைப்படவேண்டாம்;  அவைகள்  அகப்பட்டது;  இதல்லாமல்  சகல  இஸ்ரவேலின்  அபேட்சையும்  யாரை  நாடுகிறது?  உன்னையும்  உன்  வீட்டார்  அனைவரையும்  அல்லவா?  என்றான்.  (1சாமுவேல்  9:20)

moon’runaa'laikku  munnea  kaa'naama’rpoana  kazhuthaiga'laippat’rik  kavalaippadavea'ndaam;  avaiga'l  agappattathu;  ithallaamal  sagala  isravealin  abeadchaiyum  yaarai  naadugi’rathu?  unnaiyum  un  veettaar  anaivaraiyum  allavaa?  en’raan.  (1saamuveal  9:20)

அப்பொழுது  சவுல்  பிரதியுத்தரமாக:  நான்  இஸ்ரவேல்  கோத்திரங்களிலே  சிறிதான  பென்யமீன்  கோத்திரத்தான்  அல்லவா?  பென்யமீன்  கோத்திரத்துக்  குடும்பங்களிலெல்லாம்  என்  குடும்பம்  அற்பமானது  அல்லவா?  நீர்  இப்படிப்பட்ட  வார்த்தையை  என்னிடத்தில்  சொல்வானேன்  என்றான்.  (1சாமுவேல்  9:21)

appozhuthu  savul  pirathiyuththaramaaga:  naan  israveal  koaththirangga'lilea  si’rithaana  benyameen  koaththiraththaan  allavaa?  benyameen  koaththiraththuk  kudumbangga'lilellaam  en  kudumbam  a’rpamaanathu  allavaa?  neer  ippadippatta  vaarththaiyai  ennidaththil  solvaanean  en’raan.  (1saamuveal  9:21)

சாமுவேல்  சவுலையும்  அவன்  வேலைக்காரனையும்  போஜனசாலைக்குள்  அழைத்துக்கொண்டுபோய்,  அவர்களை  அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே  தலைமையான  இடத்திலே  வைத்தான்;  அழைக்கப்பட்டவர்கள்  ஏறக்குறைய  முப்பதுபேராயிருந்தார்கள்.  (1சாமுவேல்  9:22)

saamuveal  savulaiyum  avan  vealaikkaaranaiyum  poajanasaalaikku'l  azhaiththukko'ndupoay,  avarga'lai  azhaikkappattavarga'lukku'l'lea  thalaimaiyaana  idaththilea  vaiththaan;  azhaikkappattavarga'l  ea’rakku’raiya  muppathupearaayirunthaarga'l.  (1saamuveal  9:22)

பின்பு  சாமுவேல்  சமையற்காரனைப்  பார்த்து:  நான்  உன்  கையிலே  ஒரு  பங்கைக்  கொடுத்துவைத்தேனே,  அதைக்  கொண்டுவந்து  வை  என்றான்.  (1சாமுவேல்  9:23)

pinbu  saamuveal  samaiya’rkaaranaip  paarththu:  naan  un  kaiyilea  oru  panggaik  koduththuvaiththeanea,  athaik  ko'nduvanthu  vai  en’raan.  (1saamuveal  9:23)

அப்பொழுது  சமையற்காரன்,  ஒரு  முன்னந்தொடையையும்,  அதனோடிருந்ததையும்  எடுத்துக்கொண்டுவந்து,  அதை  சவுலுக்குமுன்  வைத்தான்;  அப்பொழுது  சாமுவேல்:  இதோ,  இது  உனக்கென்று  வைக்கப்பட்டது,  இதை  உனக்கு  முன்பாக  வைத்துச்  சாப்பிடு;  நான்  ஜனங்களை  விருந்துக்கு  அழைத்ததுமுதல்,  இதுவரைக்கும்  இது  உனக்காக  வைக்கப்பட்டிருந்தது  என்றான்;  அப்படியே  சவுல்  அன்றையதினம்  சாமுவேலோடே  சாப்பிட்டான்.  (1சாமுவேல்  9:24)

appozhuthu  samaiya’rkaaran,  oru  munnanthodaiyaiyum,  athanoadirunthathaiyum  eduththukko'nduvanthu,  athai  savulukkumun  vaiththaan;  appozhuthu  saamuveal:  ithoa,  ithu  unakken’ru  vaikkappattathu,  ithai  unakku  munbaaga  vaiththuch  saappidu;  naan  janangga'lai  virunthukku  azhaiththathumuthal,  ithuvaraikkum  ithu  unakkaaga  vaikkappattirunthathu  en’raan;  appadiyea  savul  an’raiyathinam  saamuvealoadea  saappittaan.  (1saamuveal  9:24)

அவர்கள்  மேடையிலிருந்து  பட்டணத்திற்கு  இறங்கிவந்தபின்பு,  அவன்  மேல்வீட்டிலே  சவுலோடே  பேசிக்கொண்டிருந்தான்.  (1சாமுவேல்  9:25)

avarga'l  meadaiyilirunthu  patta'naththi’rku  i’ranggivanthapinbu,  avan  mealveettilea  savuloadea  peasikko'ndirunthaan.  (1saamuveal  9:25)

அவர்கள்  அதிகாலமே  கிழக்கு  வெளுக்கிற  நேரத்தில்  எழுந்திருந்தபோது,  சாமுவேல்  சவுலை  மேல்வீட்டின்மேல்  அழைத்து:  நான்  உன்னை  அனுப்பிவிடும்படிக்கு  ஆயத்தப்படு  என்றான்;  சவுல்  ஆயத்தப்பட்டபோது,  அவனும்  சாமுவேலும்  இருவருமாக  வெளியே  புறப்பட்டார்கள்.  (1சாமுவேல்  9:26)

avarga'l  athikaalamea  kizhakku  ve'lukki’ra  nearaththil  ezhunthirunthapoathu,  saamuveal  savulai  mealveettinmeal  azhaiththu:  naan  unnai  anuppividumpadikku  aayaththappadu  en’raan;  savul  aayaththappattapoathu,  avanum  saamuvealum  iruvarumaaga  ve'liyea  pu’rappattaarga'l.  (1saamuveal  9:26)

அவர்கள்  பட்டணத்தின்  கடைசிமட்டும்  இறங்கி  வந்தபோது,  சாமுவேல்  சவுலைப்  பார்த்து:  வேலைக்காரனை  நமக்கு  முன்னே  நடந்துபோகச்  சொல்  என்றான்;  அப்படியே  அவன்  நடந்து  போனான்;  இப்பொழுது  நான்  தேவனுடைய  வார்த்தையை  உனக்குத்  தெரிவிக்கும்படிக்கு,  நீ  சற்றே  தரித்துநில்  என்றான்.  (1சாமுவேல்  9:27)

avarga'l  patta'naththin  kadaisimattum  i’ranggi  vanthapoathu,  saamuveal  savulaip  paarththu:  vealaikkaaranai  namakku  munnea  nadanthupoagach  sol  en’raan;  appadiyea  avan  nadanthu  poanaan;  ippozhuthu  naan  theavanudaiya  vaarththaiyai  unakkuth  therivikkumpadikku,  nee  sat’rea  thariththunil  en’raan.  (1saamuveal  9:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!