Saturday, August 20, 2016

1 Saamuveal 8 | 1 சாமுவேல் 8 | 1 Samuel 8

சாமுவேல்  முதிர்வயதானபோது,  தன்  குமாரரை  இஸ்ரவேலின்மேல்  நியாயாதிபதிகளாக  வைத்தான்.  (1சாமுவேல்  8:1)

saamuveal  muthirvayathaanapoathu,  than  kumaararai  isravealinmeal  niyaayaathibathiga'laaga  vaiththaan.  (1saamuveal  8:1)

அவனுடைய  மூத்தகுமாரனுக்குப்  பெயர்  யோவேல்,  இளையவனுக்குப்  பெயர்  அபியா;  அவர்கள்  பெயெர்செபாவிலே  நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.  (1சாமுவேல்  8:2)

avanudaiya  mooththakumaaranukkup  peyar  yoaveal,  i'laiyavanukkup  peyar  abiyaa;  avarga'l  beyersebaavilea  niyaayaathibathiga'laayirunthaarga'l.  (1saamuveal  8:2)

ஆனாலும்  அவனுடைய  குமாரர்  அவன்  வழிகளில்  நடவாமல்,  பொருளாசைக்குச்  சாய்ந்து,  பரிதானம்  வாங்கி,  நியாயத்தைப்  புரட்டினார்கள்.  (1சாமுவேல்  8:3)

aanaalum  avanudaiya  kumaarar  avan  vazhiga'lil  nadavaamal,  poru'laasaikkuch  saaynthu,  parithaanam  vaanggi,  niyaayaththaip  purattinaarga'l.  (1saamuveal  8:3)

அப்பொழுது  இஸ்ரவேலின்  மூப்பர்  எல்லாரும்  கூட்டங்கூடி,  ராமாவிலிருந்த  சாமுவேலினிடத்தில்  வந்து:  (1சாமுவேல்  8:4)

appozhuthu  isravealin  mooppar  ellaarum  koottangkoodi,  raamaaviliruntha  saamuvealinidaththil  vanthu:  (1saamuveal  8:4)

இதோ,  நீர்  முதிர்வயதுள்ளவரானீர்;  உம்முடைய  குமாரர்  உம்முடைய  வழிகளில்  நடக்கிறதில்லை;  ஆகையால்  சகல  ஜாதிகளுக்குள்ளும்  இருக்கிறபடி,  எங்களை  நியாயம்  விசாரிக்கிறதற்கு,  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தவேண்டும்  என்றார்கள்.  (1சாமுவேல்  8:5)

ithoa,  neer  muthirvayathu'l'lavaraaneer;  ummudaiya  kumaarar  ummudaiya  vazhiga'lil  nadakki’rathillai;  aagaiyaal  sagala  jaathiga'lukku'l'lum  irukki’rapadi,  engga'lai  niyaayam  visaarikki’ratha’rku,  oru  raajaavai  ea’rpaduththavea'ndum  en’raarga'l.  (1saamuveal  8:5)

எங்களை  நியாயம்  விசாரிக்க  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தும்  என்று  அவர்கள்  சொன்ன  வார்த்தை  சாமுவேலுக்குத்  தகாததாய்க்  காணப்பட்டது;  ஆகையால்  சாமுவேல்  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினான்.  (1சாமுவேல்  8:6)

engga'lai  niyaayam  visaarikka  oru  raajaavai  ea’rpaduththum  en’ru  avarga'l  sonna  vaarththai  saamuvealukkuth  thagaathathaayk  kaa'nappattathu;  aagaiyaal  saamuveal  karththarai  noakki  vi'n'nappampa'n'ninaan.  (1saamuveal  8:6)

அப்பொழுது  கர்த்தர்  சாமுவேலை  நோக்கி:  ஜனங்கள்  உன்னிடத்தில்  சொல்வதெல்லாவற்றிலும்  அவர்கள்  சொல்லைக்  கேள்;  அவர்கள்  உன்னைத்  தள்ளவில்லை,  நான்  அவர்களை  ஆளாதபடிக்கு,  என்னைத்தான்  தள்ளினார்கள்.  (1சாமுவேல்  8:7)

appozhuthu  karththar  saamuvealai  noakki:  janangga'l  unnidaththil  solvathellaavat’rilum  avarga'l  sollaik  kea'l;  avarga'l  unnaith  tha'l'lavillai,  naan  avarga'lai  aa'laathapadikku,  ennaiththaan  tha'l'linaarga'l.  (1saamuveal  8:7)

நான்  அவர்களை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணின  நாள்முதல்  இந்நாள்மட்டும்  அவர்கள்  என்னைவிட்டு,  வேறே  தேவர்களைச்  சேவித்துவந்த  தங்கள்  எல்லாச்  செய்கைகளின்படியும்  செய்ததுபோல,  அவர்கள்  உனக்கும்  செய்கிறார்கள்.  (1சாமுவேல்  8:8)

naan  avarga'lai  egipthilirunthu  pu’rappadappa'n'nina  naa'lmuthal  innaa'lmattum  avarga'l  ennaivittu,  vea’rea  theavarga'laich  seaviththuvantha  thangga'l  ellaach  seygaiga'linpadiyum  seythathupoala,  avarga'l  unakkum  seygi’raarga'l.  (1saamuveal  8:8)

இப்போதும்  அவர்கள்  சொல்லைக்  கேள்;  ஆனாலும்  உன்  அபிப்பிராயத்தைக்  காட்டும்படி  அவர்களை  ஆளும்  ராஜாவின்  காரியம்  இன்னது  என்று  அவர்களுக்குத்  திடசாட்சியாய்த்  தெரியப்படுத்து  என்றார்.  (1சாமுவேல்  8:9)

ippoathum  avarga'l  sollaik  kea'l;  aanaalum  un  abippiraayaththaik  kaattumpadi  avarga'lai  aa'lum  raajaavin  kaariyam  innathu  en’ru  avarga'lukkuth  thidasaadchiyaayth  theriyappaduththu  en’raar.  (1saamuveal  8:9)

அப்பொழுது  சாமுவேல்,  ஒரு  ராஜா  வேண்டும்  என்று  தன்னிடத்தில்  கேட்ட  ஜனங்களுக்குக்  கர்த்தருடைய  வார்த்தைகளையெல்லாம்  சொல்லி:  (1சாமுவேல்  8:10)

appozhuthu  saamuveal,  oru  raajaa  vea'ndum  en’ru  thannidaththil  keatta  janangga'lukkuk  karththarudaiya  vaarththaiga'laiyellaam  solli:  (1saamuveal  8:10)

உங்களை  ஆளும்  ராஜாவின்  காரியம்  என்னவென்றால்,  தன்  ரதத்திற்குமுன்  ஓடும்படி  அவன்  உங்கள்  குமாரரை  எடுத்து,  தன்  ரதசாரதிகளாகவும்  தன்  குதிரைவீரராகவும்  வைத்துக்கொள்ளுவான்.  (1சாமுவேல்  8:11)

ungga'lai  aa'lum  raajaavin  kaariyam  ennaven’raal,  than  rathaththi’rkumun  oadumpadi  avan  ungga'l  kumaararai  eduththu,  than  rathasaarathiga'laagavum  than  kuthiraiveeraraagavum  vaiththukko'l'luvaan.  (1saamuveal  8:11)

ஆயிரம்பேருக்கும்  ஐம்பதுபேருக்கும்  தலைவராகவும்,  தன்  நிலத்தை  உழுகிறவர்களாகவும்,  தன்  விளைச்சலை  அறுக்கிறவர்களாகவும்,  தன்  யுத்தஆயுதங்களையும்  தன்  ரதங்களின்  பணிமுட்டுகளையும்  பண்ணுகிறவர்களாகவும்,  அவர்களை  வைத்துக்கொள்ளுவான்.  (1சாமுவேல்  8:12)

aayirampearukkum  aimbathupearukkum  thalaivaraagavum,  than  nilaththai  uzhugi’ravarga'laagavum,  than  vi'laichchalai  a’rukki’ravarga'laagavum,  than  yuththaaayuthangga'laiyum  than  rathangga'lin  pa'nimuttuga'laiyum  pa'n'nugi’ravarga'laagavum,  avarga'lai  vaiththukko'l'luvaan.  (1saamuveal  8:12)

உங்கள்  குமாரத்திகளைப்  பரிமளதைலம்  செய்கிறவர்களாகவும்,  சமையல்  பண்ணுகிறவர்களாகவும்,  அப்பம்  சுடுகிறவர்களாகவும்  வைத்துக்கொள்ளுவான்.  (1சாமுவேல்  8:13)

ungga'l  kumaaraththiga'laip  parima'lathailam  seygi’ravarga'laagavum,  samaiyal  pa'n'nugi’ravarga'laagavum,  appam  sudugi’ravarga'laagavum  vaiththukko'l'luvaan.  (1saamuveal  8:13)

உங்கள்  வயல்களிலும்,  உங்கள்  திராட்சத்தோட்டங்களிலும்,  உங்கள்  ஒலிவத்தோப்புகளிலும்,  நல்லவைகளை  எடுத்துக்கொண்டு,  தன்  ஊழியக்காரருக்குக்  கொடுப்பான்.  (1சாமுவேல்  8:14)

ungga'l  vayalga'lilum,  ungga'l  thiraadchaththoattangga'lilum,  ungga'l  olivaththoappuga'lilum,  nallavaiga'lai  eduththukko'ndu,  than  oozhiyakkaararukkuk  koduppaan.  (1saamuveal  8:14)

உங்கள்  தானியத்திலும்  உங்கள்  திராட்சப்பலனிலும்  தசமபாகம்  வாங்கி,  தன்  பிரதானிகளுக்கும்  தன்  சேவகர்களுக்கும்  கொடுப்பான்.  (1சாமுவேல்  8:15)

ungga'l  thaaniyaththilum  ungga'l  thiraadchappalanilum  thasamapaagam  vaanggi,  than  pirathaaniga'lukkum  than  seavagarga'lukkum  koduppaan.  (1saamuveal  8:15)

உங்கள்  வேலைக்காரரையும்,  உங்கள்  வேலைக்காரிகளையும்,  உங்களில்  திறமையான  வாலிபரையும்,  உங்கள்  கழுதைகளையும்  எடுத்து  தன்னுடைய  வேலைக்கு  வைத்துக்கொள்ளுவான்.  (1சாமுவேல்  8:16)

ungga'l  vealaikkaararaiyum,  ungga'l  vealaikkaariga'laiyum,  ungga'lil  thi’ramaiyaana  vaalibaraiyum,  ungga'l  kazhuthaiga'laiyum  eduththu  thannudaiya  vealaikku  vaiththukko'l'luvaan.  (1saamuveal  8:16)

உங்கள்  ஆடுகளிலே  பத்தில்  ஒன்று  எடுத்துக்கொள்ளுவான்;  நீங்கள்  அவனுக்கு  வேலையாட்களாவீர்கள்.  (1சாமுவேல்  8:17)

ungga'l  aaduga'lilea  paththil  on’ru  eduththukko'l'luvaan;  neengga'l  avanukku  vealaiyaadka'laaveerga'l.  (1saamuveal  8:17)

நீங்கள்  தெரிந்துகொண்ட  உங்கள்  ராஜாவினிமித்தம்  அந்நாளிலே  முறையிடுவீர்கள்;  ஆனாலும்  கர்த்தர்  அந்நாளிலே  உங்களுக்குச்  செவிகொடுக்கமாட்டார்  என்றான்.  (1சாமுவேல்  8:18)

neengga'l  therinthuko'nda  ungga'l  raajaavinimiththam  annaa'lilea  mu’raiyiduveerga'l;  aanaalum  karththar  annaa'lilea  ungga'lukkuch  sevikodukkamaattaar  en’raan.  (1saamuveal  8:18)

ஜனங்கள்  சாமுவேலின்  சொல்லைக்  கேட்க  மனதில்லாமல்:  அப்படியல்ல,  எங்களுக்கு  ஒரு  ராஜா  இருக்கத்தான்  வேண்டும்.  (1சாமுவேல்  8:19)

janangga'l  saamuvealin  sollaik  keadka  manathillaamal:  appadiyalla,  engga'lukku  oru  raajaa  irukkaththaan  vea'ndum.  (1saamuveal  8:19)

சகல  ஜாதிகளையும்போல  நாங்களும்  இருப்போம்;  எங்கள்  ராஜா  எங்களை  நியாயம்  விசாரித்து,  எங்களுக்கு  முன்பாகப்  புறப்பட்டு,  எங்கள்  யுத்தங்களை  நடத்தவேண்டும்  என்றார்கள்.  (1சாமுவேல்  8:20)

sagala  jaathiga'laiyumpoala  naangga'lum  iruppoam;  engga'l  raajaa  engga'lai  niyaayam  visaariththu,  engga'lukku  munbaagap  pu’rappattu,  engga'l  yuththangga'lai  nadaththavea'ndum  en’raarga'l.  (1saamuveal  8:20)

சாமுவேல்  ஜனங்களின்  வார்த்தைகளையெல்லாம்  கேட்டு,  அவைகளைக்  கர்த்தரிடத்தில்  தெரியப்படுத்தினான்.  (1சாமுவேல்  8:21)

saamuveal  janangga'lin  vaarththaiga'laiyellaam  keattu,  avaiga'laik  karththaridaththil  theriyappaduththinaan.  (1saamuveal  8:21)

கர்த்தர்  சாமுவேலை  நோக்கி:  நீ  அவர்கள்  சொல்லைக்  கேட்டு,  அவர்களை  ஆள  ஒரு  ராஜாவை  ஏற்படுத்து  என்றார்;  அப்பொழுது  சாமுவேல்  இஸ்ரவேல்  ஜனங்களைப்  பார்த்து:  அவரவர்  தங்கள்  ஊர்களுக்குப்  போகலாம்  என்றான்.  (1சாமுவேல்  8:22)

karththar  saamuvealai  noakki:  nee  avarga'l  sollaik  keattu,  avarga'lai  aa'la  oru  raajaavai  ea’rpaduththu  en’raar;  appozhuthu  saamuveal  israveal  janangga'laip  paarththu:  avaravar  thangga'l  oorga'lukkup  poagalaam  en’raan.  (1saamuveal  8:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!