Saturday, August 20, 2016

1 Saamuveal 7 | 1 சாமுவேல் 7 | 1 Samuel 7

அப்படியே  கீரியாத்யாரீமின்  மனுஷர்  வந்து,  கர்த்தருடைய  பெட்டியை  எடுத்து,  மேட்டின்மேலிருக்கிற  அபினதாபின்  வீட்டிலே  கொண்டுவந்து  வைத்து,  கர்த்தருடைய  பெட்டியைக்  காக்கும்படிக்கு,  அவன்  குமாரனாகிய  எலெயாசாரைப்  பரிசுத்தப்படுத்தினார்கள்.  (1சாமுவேல்  7:1)

appadiyea  keeriyaathyaareemin  manushar  vanthu,  karththarudaiya  pettiyai  eduththu,  meattinmealirukki’ra  abinathaabin  veettilea  ko'nduvanthu  vaiththu,  karththarudaiya  pettiyaik  kaakkumpadikku,  avan  kumaaranaagiya  eleyaasaaraip  parisuththappaduththinaarga'l.  (1saamuveal  7:1)

பெட்டி  கீரியாத்யாரீமிலே  அநேகநாள்  தங்கியிருந்தது;  இருபது  வருஷம்  அங்கேயே  இருந்தது;  இஸ்ரவேல்  குடும்பத்தாரெல்லாரும்  கர்த்தரை  நினைத்து,  புலம்பிக்கொண்டிருந்தார்கள்.  (1சாமுவேல்  7:2)

petti  keeriyaathyaareemilea  aneaganaa'l  thanggiyirunthathu;  irubathu  varusham  anggeayea  irunthathu;  israveal  kudumbaththaarellaarum  karththarai  ninaiththu,  pulambikko'ndirunthaarga'l.  (1saamuveal  7:2)

அப்பொழுது  சாமுவேல்  இஸ்ரவேல்  குடும்பத்தார்  யாவரையும்  நோக்கி:  நீங்கள்  உங்கள்  முழு  இருதயத்தோடும்  கர்த்தரிடத்தில்  திரும்புகிறவர்களானால்,  அந்நிய  தேவர்களையும்  அஸ்தரோத்தையும்  உங்கள்  நடுவிலிருந்து  விலக்கி,  உங்கள்  இருதயத்தைக்  கர்த்தருக்கு  நேராக்கி,  அவர்  ஒருவருக்கே  ஆராதனைசெய்யுங்கள்;  அப்பொழுது  அவர்  உங்களைப்  பெலிஸ்தருடைய  கைக்கு  நீங்கலாக்கி  விடுவார்  என்றான்.  (1சாமுவேல்  7:3)

appozhuthu  saamuveal  israveal  kudumbaththaar  yaavaraiyum  noakki:  neengga'l  ungga'l  muzhu  iruthayaththoadum  karththaridaththil  thirumbugi’ravarga'laanaal,  anniya  theavarga'laiyum  astharoaththaiyum  ungga'l  naduvilirunthu  vilakki,  ungga'l  iruthayaththaik  karththarukku  nearaakki,  avar  oruvarukkea  aaraathanaiseyyungga'l;  appozhuthu  avar  ungga'laip  pelistharudaiya  kaikku  neenggalaakki  viduvaar  en’raan.  (1saamuveal  7:3)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரர்  பாகால்களையும்  அஸ்தரோத்தையும்  விலக்கிவிட்டு,  கர்த்தர்  ஒருவருக்கே  ஆராதனைசெய்தார்கள்.  (1சாமுவேல்  7:4)

appozhuthu  israveal  puththirar  baagaalga'laiyum  astharoaththaiyum  vilakkivittu,  karththar  oruvarukkea  aaraathanaiseythaarga'l.  (1saamuveal  7:4)

பின்பு  சாமுவேல்:  நான்  உங்களுக்காகக்  கர்த்தரை  மன்றாடும்படிக்கு,  இஸ்ரவேலர்  எல்லாரையும்  மிஸ்பாவிலே  கூட்டுங்கள்  என்றான்.  (1சாமுவேல்  7:5)

pinbu  saamuveal:  naan  ungga'lukkaagak  karththarai  man’raadumpadikku,  isravealar  ellaaraiyum  mispaavilea  koottungga'l  en’raan.  (1saamuveal  7:5)

அவர்கள்  அப்படியே  மிஸ்பாவிலே  கூடிவந்து  தண்ணீர்  மொண்டு,  கர்த்தருடைய  சந்நிதியில்  ஊற்றி,  அன்றையதினம்  உபவாசம்பண்ணி,  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தோம்  என்று  அங்கே  சொன்னார்கள்;  மிஸ்பாவிலே  சாமுவேல்  இஸ்ரவேல்  புத்திரரை  நியாயம்  விசாரித்துக்கொண்டிருந்தான்.  (1சாமுவேல்  7:6)

avarga'l  appadiyea  mispaavilea  koodivanthu  tha'n'neer  mo'ndu,  karththarudaiya  sannithiyil  oot’ri,  an’raiyathinam  ubavaasampa'n'ni,  karththarukku  viroathamaayp  paavagnseythoam  en’ru  anggea  sonnaarga'l;  mispaavilea  saamuveal  israveal  puththirarai  niyaayam  visaariththukko'ndirunthaan.  (1saamuveal  7:6)

இஸ்ரவேல்  புத்திரர்  மிஸ்பாவிலே  கூடிவந்ததைப்  பெலிஸ்தர்  கேள்விப்பட்டபோது,  பெலிஸ்தரின்  அதிபதிகள்  இஸ்ரவேலுக்கு  விரோதமாக  எதிர்த்து  வந்தார்கள்;  அதை  இஸ்ரவேல்  புத்திரர்  கேட்டு,  பெலிஸ்தரினிமித்தம்  பயப்பட்டு,  (1சாமுவேல்  7:7)

israveal  puththirar  mispaavilea  koodivanthathaip  pelisthar  kea'lvippattapoathu,  pelistharin  athibathiga'l  isravealukku  viroathamaaga  ethirththu  vanthaarga'l;  athai  israveal  puththirar  keattu,  pelistharinimiththam  bayappattu,  (1saamuveal  7:7)

சாமுவேலை  நோக்கி:  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  எங்களைப்  பெலிஸ்தரின்  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கும்படிக்கு,  எங்களுக்காக  அவரை  நோக்கி  ஓயாமல்  வேண்டிக்கொள்ளும்  என்றார்கள்.  (1சாமுவேல்  7:8)

saamuvealai  noakki:  nammudaiya  theavanaagiya  karththar  engga'laip  pelistharin  kaikku  neenggalaakki  radchikkumpadikku,  engga'lukkaaga  avarai  noakki  oayaamal  vea'ndikko'l'lum  en’raarga'l.  (1saamuveal  7:8)

அப்பொழுது  சாமுவேல்  பால்குடிக்கிற  ஒரு  ஆட்டுக்குட்டியைப்  பிடித்து,  அதைக்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்தி,  இஸ்ரவேலுக்காகக்  கர்த்தரை  நோக்கி  வேண்டிக்கொண்டான்;  கர்த்தர்  அவனுக்கு  மறுமொழி  அருளிச்செய்தார்.  (1சாமுவேல்  7:9)

appozhuthu  saamuveal  paalkudikki’ra  oru  aattukkuttiyaip  pidiththu,  athaik  karththarukkuch  sarvaangga  thaganabaliyaagach  seluththi,  isravealukkaagak  karththarai  noakki  vea'ndikko'ndaan;  karththar  avanukku  ma’rumozhi  aru'lichseythaar.  (1saamuveal  7:9)

சாமுவேல்  சர்வாங்க  தகனபலியைச்  செலுத்துகையில்,  பெலிஸ்தர்  இஸ்ரவேலின்மேல்  யுத்தம்பண்ண  நெருங்கினார்கள்;  கர்த்தர்  மகா  பெரிய  இடிமுழக்கங்களைப்  பெலிஸ்தர்மேல்  அந்நாளிலே  முழங்கப்பண்ணி,  அவர்களைக்  கலங்கடித்ததினால்,  அவர்கள்  இஸ்ரவேலுக்கு  முன்பாகப்  பட்டு  விழுந்தார்கள்.  (1சாமுவேல்  7:10)

saamuveal  sarvaangga  thaganabaliyaich  seluththugaiyil,  pelisthar  isravealinmeal  yuththampa'n'na  nerungginaarga'l;  karththar  mahaa  periya  idimuzhakkangga'laip  pelistharmeal  annaa'lilea  muzhanggappa'n'ni,  avarga'laik  kalanggadiththathinaal,  avarga'l  isravealukku  munbaagap  pattu  vizhunthaarga'l.  (1saamuveal  7:10)

அப்பொழுது  இஸ்ரவேலர்  மிஸ்பாவிலிருந்து  பெலிஸ்தரைப்  பின்தொடர்ந்துபோய்,  பெத்காரீம்  பள்ளத்தாக்குமட்டும்  அவர்களை  முறிய  அடித்தார்கள்.  (1சாமுவேல்  7:11)

appozhuthu  isravealar  mispaavilirunthu  pelistharaip  pinthodarnthupoay,  bethkaareem  pa'l'laththaakkumattum  avarga'lai  mu’riya  adiththaarga'l.  (1saamuveal  7:11)

அப்பொழுது  சாமுவேல்  ஒரு  கல்லை  எடுத்து,  மிஸ்பாவுக்கும்  சேணுக்கும்  நடுவாக  நிறுத்தி,  இம்மட்டும்  கர்த்தர்  எங்களுக்கு  உதவிசெய்தார்  என்று  சொல்லி,  அதற்கு  எபெனேசர்  என்று  பேரிட்டான்.  (1சாமுவேல்  7:12)

appozhuthu  saamuveal  oru  kallai  eduththu,  mispaavukkum  sea'nukkum  naduvaaga  ni’ruththi,  immattum  karththar  engga'lukku  uthaviseythaar  en’ru  solli,  atha’rku  ebeneasar  en’ru  pearittaan.  (1saamuveal  7:12)

இந்தப்பிரகாரம்  பெலிஸ்தர்  அப்புறம்  இஸ்ரவேலின்  எல்லையிலே  வராதபடிக்குத்  தாழ்த்தப்பட்டார்கள்;  சாமுவேலின்  நாளெல்லாம்  கர்த்தருடைய  கை  பெலிஸ்தருக்கு  விரோதமாய்  இருந்தது.  (1சாமுவேல்  7:13)

inthappiragaaram  pelisthar  appu’ram  isravealin  ellaiyilea  varaathapadikkuth  thaazhththappattaarga'l;  saamuvealin  naa'lellaam  karththarudaiya  kai  pelistharukku  viroathamaay  irunthathu.  (1saamuveal  7:13)

பெலிஸ்தர்  இஸ்ரவேல்  கையிலிருந்து  பிடித்திருந்த  எக்ரோன்  துவக்கிக்  காத்மட்டுமுள்ள  பட்டணங்களும்  இஸ்ரவேலுக்குத்  திரும்பக்  கிடைத்தது;  அவைகளையும்  அவைகளின்  எல்லைகளையும்  இஸ்ரவேலர்  பெலிஸ்தர்  கையிலே  இராதபடிக்கு,  விடுவித்துக்  கொண்டார்கள்;  இஸ்ரவேலுக்கும்  எமோரியருக்கும்  சமாதானம்  உண்டாயிருந்தது.  (1சாமுவேல்  7:14)

pelisthar  israveal  kaiyilirunthu  pidiththiruntha  ekroan  thuvakkik  kaathmattumu'l'la  patta'nangga'lum  isravealukkuth  thirumbak  kidaiththathu;  avaiga'laiyum  avaiga'lin  ellaiga'laiyum  isravealar  pelisthar  kaiyilea  iraathapadikku,  viduviththuk  ko'ndaarga'l;  isravealukkum  emoariyarukkum  samaathaanam  u'ndaayirunthathu.  (1saamuveal  7:14)

சாமுவேல்  உயிரோடிருந்த  நாளெல்லாம்  இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்தான்.  (1சாமுவேல்  7:15)

saamuveal  uyiroadiruntha  naa'lellaam  isravealai  niyaayam  visaariththaan.  (1saamuveal  7:15)

அவன்  வருஷாவருஷம்  புறப்பட்டு,  பெத்தேலையும்  கில்காலையும்  மிஸ்பாவையும்  சுற்றிப்போய்,  அவ்விடங்களிலெல்லாம்  இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்த  பின்பு,  (1சாமுவேல்  7:16)

avan  varushaavarusham  pu’rappattu,  beththealaiyum  kilgaalaiyum  mispaavaiyum  sut’rippoay,  avvidangga'lilellaam  isravealai  niyaayam  visaariththa  pinbu,  (1saamuveal  7:16)

அவன்  ராமாவுக்குத்  திரும்பிவருவான்,  அவனுடைய  வீடு  அங்கே  இருந்தது;  அங்கே  இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்து,  அவ்விடத்தில்  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டினான்.  (1சாமுவேல்  7:17)

avan  raamaavukkuth  thirumbivaruvaan,  avanudaiya  veedu  anggea  irunthathu;  anggea  isravealai  niyaayam  visaariththu,  avvidaththil  karththarukku  oru  balipeedaththaik  kattinaan.  (1saamuveal  7:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!