Saturday, August 20, 2016

1 Saamuveal 5 | 1 சாமுவேல் 5 | 1 Samuel 5

பெலிஸ்தர்  தேவனுடைய  பெட்டியைப்  பிடித்து,  அதை  எபெனேசரிலிருந்து  அஸ்தோத்திற்குக்  கொண்டுபோனார்கள்.  (1சாமுவேல்  5:1)

pelisthar  theavanudaiya  pettiyaip  pidiththu,  athai  ebeneasarilirunthu  asthoaththi’rkuk  ko'ndupoanaarga'l.  (1saamuveal  5:1)

பெலிஸ்தர்  தேவனுடைய  பெட்டியைப்  பிடித்து,  தாகோனின்  கோவிலிலே  கொண்டுவந்து,  தாகோனண்டையிலே  வைத்தார்கள்.  (1சாமுவேல்  5:2)

pelisthar  theavanudaiya  pettiyaip  pidiththu,  thaagoanin  koavililea  ko'nduvanthu,  thaagoana'ndaiyilea  vaiththaarga'l.  (1saamuveal  5:2)

அஸ்தோத்  ஊரார்  மறுநாள்  காலமே  எழுந்திருந்து  வந்தபோது,  இதோ,  தாகோன்  கர்த்தருடைய  பெட்டிக்கு  முன்பாகத்  தரையிலே  முகங்குப்புற  விழுந்துகிடந்தது;  அப்பொழுது  அவர்கள்  தாகோனை  எடுத்து,  அதை  அதின்  ஸ்தானத்திலே  திரும்பவும்  நிறுத்தினார்கள்.  (1சாமுவேல்  5:3)

asthoath  ooraar  ma’runaa'l  kaalamea  ezhunthirunthu  vanthapoathu,  ithoa,  thaagoan  karththarudaiya  pettikku  munbaagath  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthukidanthathu;  appozhuthu  avarga'l  thaagoanai  eduththu,  athai  athin  sthaanaththilea  thirumbavum  ni’ruththinaarga'l.  (1saamuveal  5:3)

அவர்கள்  மறுநாள்  காலமே  எழுந்திருந்து  வந்தபோது,  இதோ,  தாகோன்  கர்த்தருடைய  பெட்டிக்கு  முன்பாகத்  தரையிலே  முகங்குப்புற  விழுந்துகிடந்ததுமல்லாமல்,  தாகோனின்  தலையும்  அதின்  இரண்டு  கைகளும்  வாசற்படியின்மேல்  உடைபட்டுக்  கிடந்தது;  தாகோனுக்கு  உடல்மாத்திரம்  மீதியாயிருந்தது.  (1சாமுவேல்  5:4)

avarga'l  ma’runaa'l  kaalamea  ezhunthirunthu  vanthapoathu,  ithoa,  thaagoan  karththarudaiya  pettikku  munbaagath  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthukidanthathumallaamal,  thaagoanin  thalaiyum  athin  ira'ndu  kaiga'lum  vaasa’rpadiyinmeal  udaipattuk  kidanthathu;  thaagoanukku  udalmaaththiram  meethiyaayirunthathu.  (1saamuveal  5:4)

ஆதலால்  இந்நாள்வரைக்கும்  தாகோனின்  பூஜாசாரிகளும்  தாகோனின்  கோவிலுக்குள்  பிரவேசிக்கிற  யாவரும்  அஸ்தோத்திலிருக்கிற  தாகோனுடைய  வாசற்படியை  மிதிக்கிறதில்லை.  (1சாமுவேல்  5:5)

aathalaal  innaa'lvaraikkum  thaagoanin  poojaasaariga'lum  thaagoanin  koavilukku'l  piraveasikki’ra  yaavarum  asthoaththilirukki’ra  thaagoanudaiya  vaasa’rpadiyai  mithikki’rathillai.  (1saamuveal  5:5)

அஸ்தோத்  ஊராரைப்  பாழாக்கும்படிக்கு  கர்த்தருடைய  கை  அவர்கள்மேல்  பாரமாயிருந்தது;  அவர்  அஸ்தோத்தின்  ஜனங்களையும்,  அதின்  எல்லைகளுக்குள்  இருக்கிறவர்களையும்  மூலவியாதியினால்  வாதித்தார்.  (1சாமுவேல்  5:6)

asthoath  ooraaraip  paazhaakkumpadikku  karththarudaiya  kai  avarga'lmeal  baaramaayirunthathu;  avar  asthoaththin  janangga'laiyum,  athin  ellaiga'lukku'l  irukki’ravarga'laiyum  moolaviyaathiyinaal  vaathiththaar.  (1saamuveal  5:6)

இப்படி  நடந்ததை  அஸ்தோத்தின்  ஜனங்கள்  கண்டபோது:  இஸ்ரவேலின்  தேவனுடைய  கை  நமதுமேலும்,  நம்முடைய  தேவனாகிய  தாகோனின்மேலும்  கடினமாயிருக்கிறபடியால்,  அவருடைய  பெட்டி  நம்மிடத்தில்  இருக்கலாகாது  என்று  சொல்லி;  (1சாமுவேல்  5:7)

ippadi  nadanthathai  asthoaththin  janangga'l  ka'ndapoathu:  isravealin  theavanudaiya  kai  namathumealum,  nammudaiya  theavanaagiya  thaagoaninmealum  kadinamaayirukki’rapadiyaal,  avarudaiya  petti  nammidaththil  irukkalaagaathu  en’ru  solli;  (1saamuveal  5:7)

பெலிஸ்தரின்  அதிபதிகளையெல்லாம்  அழைப்பித்து,  தங்களண்டையிலே  கூடிவரச்  செய்து:  இஸ்ரவேலின்  தேவனுடைய  பெட்டியை  நாம்  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டார்கள்.  அவர்கள்:  இஸ்ரவேலின்  தேவனுடைய  பெட்டியை  காத்பட்டணமட்டும்  எடுத்துச்  சுற்றிக்கொண்டு  போகவேண்டும்  என்றார்கள்;  அப்படியே  இஸ்ரவேலின்  தேவனுடைய  பெட்டியை  எடுத்துச்  சுற்றிக்கொண்டுபோனார்கள்.  (1சாமுவேல்  5:8)

pelistharin  athibathiga'laiyellaam  azhaippiththu,  thangga'la'ndaiyilea  koodivarach  seythu:  isravealin  theavanudaiya  pettiyai  naam  enna  seyyavea'ndum  en’ru  keattaarga'l.  avarga'l:  isravealin  theavanudaiya  pettiyai  kaathpatta'namattum  eduththuch  sut’rikko'ndu  poagavea'ndum  en’raarga'l;  appadiyea  isravealin  theavanudaiya  pettiyai  eduththuch  sut’rikko'ndupoanaarga'l.  (1saamuveal  5:8)

அதை  எடுத்துச்  சுற்றிக்கொண்டு  போனபின்பு,  கர்த்தருடைய  கை  அந்தப்  பட்டணத்தின்மேல்  மகா  உக்கிரமாக  இறங்கிற்று;  அந்தப்  பட்டணத்தின்  மனுஷருக்குள்,  சிறியவர்துவக்கிப்  பெரியவர்மட்டும்,  மூலவியாதியை  உண்டாக்கி,  அவர்களை  வாதித்தார்.  (1சாமுவேல்  5:9)

athai  eduththuch  sut’rikko'ndu  poanapinbu,  karththarudaiya  kai  anthap  patta'naththinmeal  mahaa  ukkiramaaga  i’ranggit’ru;  anthap  patta'naththin  manusharukku'l,  si’riyavarthuvakkip  periyavarmattum,  moolaviyaathiyai  u'ndaakki,  avarga'lai  vaathiththaar.  (1saamuveal  5:9)

அதினால்  அவர்கள்  தேவனுடைய  பெட்டியை  எக்ரோனுக்கு  அனுப்பினார்கள்;  தேவனுடைய  பெட்டி  எக்ரோனுக்கு  வருகிறபோது,  எக்ரோன்  ஊரார்:  எங்களையும்  எங்கள்  ஜனங்களையும்  கொன்றுபோட,  இஸ்ரவேலின்  தேவனுடைய  பெட்டியை  எடுத்து,  எங்களண்டைக்குச்  சுற்றிக்கொண்டு  வந்தார்கள்  என்று  கூக்குரலிட்டார்கள்.  (1சாமுவேல்  5:10)

athinaal  avarga'l  theavanudaiya  pettiyai  ekroanukku  anuppinaarga'l;  theavanudaiya  petti  ekroanukku  varugi’rapoathu,  ekroan  ooraar:  engga'laiyum  engga'l  janangga'laiyum  kon’rupoada,  isravealin  theavanudaiya  pettiyai  eduththu,  engga'la'ndaikkuch  sut’rikko'ndu  vanthaarga'l  en’ru  kookkuralittaarga'l.  (1saamuveal  5:10)

அவர்கள்  பெலிஸ்தரின்  அதிபதிகளையெல்லாம்  கூடிவரும்படி  அழைத்து:  இஸ்ரவேலின்  தேவன்  எங்களையும்  எங்கள்  ஜனங்களையும்  கொன்றுபோடாதபடிக்கு,  அவருடைய  பெட்டியை  அதின்  ஸ்தானத்திற்குத்  திரும்ப  அனுப்பிவிடுங்கள்  என்றார்கள்;  அந்தப்  பட்டணமெங்கும்  சாவு  மும்முரமாயிருந்தது;  தேவனுடைய  கை  அங்கே  மகா  பாரமாயிருந்தது.  (1சாமுவேல்  5:11)

avarga'l  pelistharin  athibathiga'laiyellaam  koodivarumpadi  azhaiththu:  isravealin  theavan  engga'laiyum  engga'l  janangga'laiyum  kon’rupoadaathapadikku,  avarudaiya  pettiyai  athin  sthaanaththi’rkuth  thirumba  anuppividungga'l  en’raarga'l;  anthap  patta'namenggum  saavu  mummuramaayirunthathu;  theavanudaiya  kai  anggea  mahaa  baaramaayirunthathu.  (1saamuveal  5:11)

செத்துப்போகாதிருந்தவர்கள்  மூலவியாதியினால்  வாதிக்கப்பட்டதினால்,  அந்தப்  பட்டணத்தின்  கூக்குரல்  வானபரியந்தம்  எழும்பிற்று.  (1சாமுவேல்  5:12)

seththuppoagaathirunthavarga'l  moolaviyaathiyinaal  vaathikkappattathinaal,  anthap  patta'naththin  kookkural  vaanapariyantham  ezhumbit’ru.  (1saamuveal  5:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!